கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

கண் நோய்களுக்கான இயற்கை வைத்திய சிகிச்சை முறைகளைப் பார்ப்போம்.
சத்துக் குறைவால் ஏற்படும் கண் நோய்கள் நீங்க:
சுத்தமான கேரட் கால் கிலோ எடுத்துச் சாறு பிழியவும். கொத்தமல்லி இலைச்சாறு 10 மில்லி, தேங்காய் அரை மூடி, ஏலக்காய் 2, தேவையான அளவு சுத்தமான பனங்கற்கண்டு எடுத்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலைச்சாறு, கேரட்சாறு, தேங்காய் துருவியது, பனங்கற்கண்டு இவற்றுடன் இரண்டு டம்ளர் (400 மில்லி சுத்தமான தண்ணீர்) கலந்து ஏலக்காயை பொடி செய்து சேர்த்து காலை - மாலை இருவேளையும் காப்பி, தேநீருக்கு பதிலாக அன்றாடம் குடித்து வரலாம். இதை தினமும் புதிதாக தயாரித்துக் கொள்ள வேண்டும்.
பப்பாளி பழம் 4 துண்டு, தேங்காய் பால் அல்லது சோயா பால் ஒரு டம்ளர் (200 மில்லி) தேவையான அளவு கற்கண்டு, ஏலக்காய் 2 பொடி செய்து போட்டுக் கலக்கி தினமும் காலை, மாலை இரு வேளை சாப்பிடலாம்.
புதிய பேரிச்சம் பழம் கொட்டை நீக்கியது 5, இரண்டு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, ஒரு ஸ்பூன் சுத்தமான தேன் இவற்றை ஒரு டம்ளர் சுத்தமான தண்ணீரில் கலந்து காலை, மாலை இருவேளை சாப்பிடலாம். இவை கண்களில் ஏற்படும் பார்வை குறைபாட்டை தவிர்க்கவும், கண்களுக்கு ரத்த ஓட்டத்தை சீராக வைத்து, பார்வைக்கு பாதுகாப்பிற்கு வழிவகுக்கும். மற்றும் வாரம் ஒரு முறை கருவேப்பிலை துவையல், பொன்னாங்கன்னிக் கீரை ஆகியவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ள நல்ல பயனளிக்கும்.
கண் வலிக்கு:
புளியம்பூவை அல்லது மல்லிகைப் பூவை அரைத்து கண்களைச்சுற்றி கனமாகப் பற்றுப் போட்டு வர வேண்டும். அல்லது கண்களில் ரோஸ் வாட்டர், பன்னீர் தினமும் காலை, மாலை இருவேளையும் சொட்டு மருந்தாக பாவித்தல் சிறந்தது. தொடர்ந்து தினமும் புதியதாக பற்றுப் போட்டுக் கொண்டாலோ அல்லது சொட்டு மருந்தாக உபயோகிக்க கண்வலி நீங்கும்.
தாமரைப் பூவை கண்களில் வைத்துக் கட்டி வர, கண் வலி நீங்கும்.
சோற்றுக் கற்றாழை மடலை மட்டும் தனியாக எடுத்து, அதை நெருப்பில் வாட்டி, சுத்தமான துணியில் வைத்து கண்களில் மூன்று துளி அன்றாடம் காலை, மாலை விட்டு வர கண் வலி குணமாகும்.
நாமக் கட்டியை சுத்தமான தண்ணீரில் உரைத்து இரவில் படுக்கப்போகும் முன்பு கண்களைச் சுற்றிலும் வளையம் போல் போட இரண்டு அல்லது மூன்று நாட்களில் கண்வலி நீங்கும்.
சம்பங்கி பூவை எடுத்து அதன் இலைகளை மட்டும் நன்றாக அரைத்து இரவு படுக்கப் போகும் முன்பு கண்ணைச் சுற்றி கனமாகப் பற்றுப் போட்டு சுத்தமான துணியைக் கொண்டு கட்டிவிட வேண்டும். மூன்று நாட்கள் தொடர்ந்து கட்டி வர கண் வலி நீங்கும்.
கோவை இலையைக் கொண்டுவந்து வாறு எடுத்து, காலை, மாலை கண் வலி உள்ள கண்களில் 2 துளி மட்டும் விட்டு வந்தால் மூன்று நாட்களில் குணம் தெரியும்.
நாள்பட்ட கண் வலிக்கு கண்களில் சதை வளர்ச்சிக்கு:
முருங்கைக் கீரையை மட்டும் வதக்கி கண்ணுக்கு இரவில் கட்டி வர, சதை வளர்தல் குறையும்.
அருகம்புல்லை ஒரு கைப்பிடியளவு எடுத்து சுத்தம் செய்து சிறிது சோயாபால் விட்டு அல்லது தாய்ப்பால் விட்டு நசுக்கி, சுத்தமான துணியில் வைத்து கண்களில் விட்டு வர, கண்களில் சதை வளர்தல் குறையும். தினமும் புதிதாய் தயாரித்து உபயோகிக்க வேண்டும்.
நேத்திரப் பூண்டு இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நல்லெண்ணெய் 50 மில்லியில் போட்டு கடும் வெய்யிலில் 10 நாட்கள் வைத்து எடுத்து பின்னர் எண்ணெய் மட்டும் மூன்று துளிகள் சொட்டு சொட்டாகப் பிழிய கண்களில் ஏற்படும் சதை வளர்ச்சி குறையும்.
கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி, வல்லாரை, துளசி, வேப்பிலை, வில்வம் ஆகியவற்றை சம அளவு எடுத்து நக்கு பொடி செய்து காலை, மாலை,இரளவு என மூன்று வேளை தொடர்ந்து சாப்பிடலாம்.
கண்ணில் பூ விழுந்தவர்களுக்கு:
நந்தியாவட்டைப் பூவைத் தனியாக எடுத்து சாறு பிழிந்து, சுத்தமான துணியில் வைத்து கண்களில் பிழிய வேண்டும். தொடர்ந்து செய்து வர குணமாகும்.
கண்பார்வை தெளிவடைய:
பப்பாளிப் பழம் இரண்டு துண்டுகள், பேரிச்சம் பழம் நான்கு, செர்ரி பழம் பத்து, அன்னாசி பழம் இரண்டு துண்டுகள், ஆப்பிள், திராட்சை 50 கிராம், வாழைப்பழம், மாம்பழம், இரண்டு ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு டம்ளர் தேங்காய் பால் அல்லது சோயா பாலில் கலந்து சேர்த்து கலக்கி தேவையான அளவு தேன் அல்லது கற்கண்டு சேர்த்து அன்றாடம் இரவு படுக்கப் போகும் முன் சாப்பிட்டு நல்ல பலன் அளிக்கும்.
அருகம்புல் சாறு 50 மில்லி எடுத்து அத்துடன் ஒரு இளநீரை கலந்து தேவையான அளவு தேன் சேர்த்து காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல குணம் தெரியும்.
பொதுவாக கல்லீரலுக்கும் கண்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆகையினால் கல்லீரல் நோய் வராமல் பாதுகாக்க வேண்டும். அதற்கு கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி கீரையைத் தினமும் சாப்பிட வேண்டும். தினமும் 200 கிராம் திராட்சை சாப்பிட்டு வரலாம். கொழுப்பு உணவுகள், மசாலா உணவுகள், மாமிச உணவு வகைகள் ஆகியவற்றை கூடிய வரையில் தவிர்ப்பதோ அல்லது குறைத்துக் கொள்வதோ சிறந்ததாகும். பொதுவாக இரவு படுக்கப் போகும் முன்பு, இரு கண்களையும் குளிர் நீரால் கழுவி, சுத்தப்படுத்திக் கொள்வதன் மூலம் கண்களுக்குக் குளிர்ச்சியும், ஒருவித புத்துணர்ச்சியும் கிடைத்து, கண்களின் உட்புறத்திலுள்ள நரம்புகளுக்குச் சக்தி கிடைத்து தூய்மைப்படுத்தி கண்களைப் பாதுகாக்கிறது.

9 comments: