மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940 (Drugs and Cosmetics Act, 1940)



என்ன காரணத்தால் ஒரு வியாதி வந்தது என்று முழுமையாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடிப்பதற்கு முன்னால் மருந்துகளை கொடுத்தோ பத்தியம் இருக்கச் சொல்லியோ அந்த வியாதியை குணப்படுத்த முடியாது. நம் உடலில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் நமது தவறான வாழ்க்கைமுறை தான் காரணம் என்பதே ஆராய்ச்சியின் முடிவாகும். எனவே நமது வாழ்க்கை முறையில் சில எளிய மாற்றங்களை கொண்டுவருவதன் மூலமாகவே இத்தகைய நோய்களை / உபத்திரவங்களை  நிரந்தரமாக குணப்படுத்த முடியும்.

அப்படி மருந்தே கண்டுபிடிக்காத வியாதிகளுக்கு ஆங்கில மருந்து கொடுத்தாலோ பத்தியம் இருக்கச் சொன்னாலோ நோயாளிக்கு அந்த வியாதி மென்மேலும் தீவிரமடையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அப்படி கொடுக்கப்படும் ஆங்கில மருந்துகளால் பலவிதமான பக்கவிளைவுகளும் எதிர்மறை விளைவுகளும், சில நேரங்களில் மரணங்களும் கூட அந்த நோயாளிக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

நோயால் வாடும் மக்களின் நன்மைக்காக, அவர்கள் உயிர்களும், உடமைகளும் காக்கப்பட வேண்டும் என்பதற்காக நமது அரசாங்கம், ஆங்கில மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத நோய்கள் மொத்தம் 51 என்று மேற்சொன்ன சட்டத்தில் "ஷெட்யூல் - J" எனும் பிரிவின் கீழ் இன்னும் முழுமையாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கப்படாத வியாதிகளைப் பட்டியலிட்டுள்ளது. இந்த 51 வியாதிகளையும் ஆங்கில மருத்துவர்கள் எவரும் தங்கள் மருந்துகளால், குணப்படுத்த முடியும் என்றோ, குணப்படுத்திக் காட்டுகிறேன் என்றோ கூறுவது சட்டப்படி குற்றமாகும் என்று எச்சரிக்கிறது.

இந்த சட்டத்தின் முக்கியத்துவம் கருதி இதன் நகலை யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்யும் வகையில் நம் இந்திய அரசாங்கம் வழிவகுத்துள்ளது. இந்த சட்ட நகலை பதிவிறக்கம் செய்யது பார்க்க கீழே கொடுத்துள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://www.cdsco.nic.in/writereaddata/drugs&cosmeticact.pdf

or 
visit http://www.cdsco.nic.in/forms/contentpage1.aspx?lid=1888

அல்லது google.com இல் "Drugs and Cosmetics Act, 1940" என்று தேடவும். அதில் முதல் முடிவே அந்த நகலாகதான் இருக்கும். அதை பதிவிறக்கம் செய்து "Schedule J" என்று தேடினால் கிடைக்கும்.

"Search Drugs & Cosmetic Act 1940 in google.com

First result will this pdf file and Search for 
"Schedule J" you will find the list.

அல்லது தொடந்து இந்த பதிவை வாசிக்கவும். அனைவரின் நலன் கருதி நோய்களின் பெயர் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. 


Rule 106
Diseases which a drug may not purport to prevent or cure.  

(1) No drug may purport or claim to prevent or cure or may convey to the intending user thereof any idea that it may prevent or cure one or more of the diseases or ailments specified in Schedule J.

(2) No drug may purport or claim to procure or assist to procure, or may convey to the intending user thereof any idea that it may procure or assist to procure, miscarriage in women.
[ * * *  Omitted as per G.O.I. Notification No. GSR 462(E) dt 22.6.1982.]


Schedule J
Diseases and ailments (by whatever name described) which a drug may not purport to prevent or cure or make claims to prevent or cure.

ஷெட்யூல் J-யில் வரையறுக்கப்பட்டுள்ள 51 நோய்களில் விவரம் வருமாறு.


1. AIDS
  எய்ட்ஸ்

2. Angina Pectoris (Chest Pain)
    நெஞ்சுவலி

3. Appendicitis
   ‘அப்பெண்டிஸைட்டிஸ் என்னும் குடல் வால் நோய்

4. Arteriosclerosis (Block in Heart vessels)
    இருதய இரத்தக் குழாய்களில் அடைப்பு

5. Baldness
    தலை வழுக்கை

6. Blindness
    கண்பார்வையற்ற நிலை

7. Bronchial Asthma
   ஆஸ்துமா

8. Cancer and Benign tumour (Cysts to Cancer tumors in body)
    உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக புற்றுநோய் வரை

9. Cataract
    கண்புரை

10. Change in colour of the hair and growth of new hair (Hair growth and grey hair removal)
     தலைமுடி வளர, நரையை அகற்ற

11. Change of Foetal sex by drugs (Changing the foetus to male or female)
     கருவில் வளரும் குழந்தையை ஆணாகவோ, பெண்ணாகவோ மாற்றுவோம் என்று கூறுவது.

12. Congenital malformations
     பிறவிக் கோளாறுகள்

13. Deafness
     காது கேளாமை

14. Diabetes (Sugar Complaint)
     நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்)

15. Diseases and disorders of uterus. (All diseases related to uterus)
     கர்ப்பப்பை சம்பந்தமான அனைத்துக் கோளாறுகள்

16. Epileptic -fits and psychiatric disorders (Epilepsy and all mental diseases) 
   வலிப்பு நோய் - மன நோய்கள் அனைத்தும்

17. Encephalitis (Brain Fever)
   மூளைக்காய்ச்சல்.

18. Fairness of the skin (Changing the black skin to fair Colour)
   உடல் நிறம் கருப்பாக இருப்பினும் சிகப்பாக்குதல்.

19. Form, Structure of breast (Development of breast)
   மார்பக வளர்ச்சிக்கு

20. Gangrene
   புரையோடிய புண்

21. Genetic disorders (DNA related diseases)
   மரபணு நோய்கள்

22. Glaucoma (Eye disease)
   க்ளாகோமா எனும் கண்வலி நோய்

23. Goitre (Thyroid)
   கழுத்து (தைராய்டு) வீக்கம்

24. Hernia
   ஹெர்னியா எனும் குடலிறக்க நோய்

25. High/low Blood Pressure (Hypo and hyper blood pressure)
     அதிக மற்றும் குறைவான இரத்த அழுத்தம்

26. Hydrocele
     விரை வீக்கம்

27. Insanity (Madness)
     பைத்தியம்

28. Increase in brain capacity and improvement of memory (Absent-mindedness and improving it)
     ஞாபக மறதி, ஞாபக சக்தியை அபிவிருத்தி செய்ய.

29. Improvement in height of children/adults (To raise the height of children)
      குழந்தையின் உயரத்தைக் கூட்ட.

30. Improvement in size and shape of the sexual organ and in duration of sexual Performance (Prolong the size and stamina of penis)
     ஆண் உறுப்பு வளர்ச்சி, வீரியம்.

31. Improvement in the strength of the natural teeth (Treatment for protecting the teeth by calcium    drugs)
   பற்களை உறுதிப்படுத்த என்று, கால்ஷியம் மருந்துகள் மூலமாக வைத்தியம் பார்ப்பது.

32. Improvement in vision (Common eye diseases long sight, short sight)
     சாதாரணமாக ஏற்படும் கண்பார்வைக் குறைபாடுகள் கிட்டப்பார்வை, தூரப்பார்வை.

33. Jaundice/Hepatitis/Liver disorders (Yellow fever, hepatitis and all diseases related to liver)
      மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய் (ஹெபடைட்டிஸ்), மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும்

34. Leukaemia (Blood cancer)
      இரத்தப் புற்றுநேரய்.

35. Leucoderma 
     வெண் குஷ்டம்

36. Maintenance or improvement of the capacity of the human being for sexual pleasure. (Increasing stamina while intercourse)
      உடலுறவில் வீரியம் அதிகப்படுத்துதல்.

37. Mental retardation, subnormalities and growth (Less brain development)
     மூளை வளர்ச்சிக்குறைவு.

38. Myocardial infarction (Heart attack)
     மாரடைப்பு நோய்

39. Obesity (Obese to slim)
      குண்டான உடம்பு மெலிய

40. Paralysis
      பக்க வாதம்

41. Parkinsonism (Neurotic diseases – sympathetic)
     உடம்பு முழுவதும் நரம்பு நடுக்க நோய்

42. Piles and Fistulae (Piles and haemorrhoid)
     மூல நோய் மற்றும் பவுத்திரம்

43. Power to rejuvenate (Regaining youthfulness)
     வாலிப சக்தியை மீட்க

44. Premature ageing (Elderly appearance in youth)
      குறைந்த வயதில் முதிர்ச்சியடைந்த தோற்றம்

45. Premature greying of hair (Grey hairs in youth)
     குறைந்த வயதில் தலை நரை

46. Rheumatic Heart Diseases
     ரூமாட்டிக் இருதய நோய்

47. Sexual Impotence, Premature ejaculation and spermatorrhoea (Male impotency fast semen     discharge)
     ஆண்மைக்குறைவு, விரைவில் ஸ்கலிதம்

48. Spondylitis (Cervical and pains of lumbar spondylosis)
     கழுத்து வலி மற்றும் முதுகுத் தண்டில் ஏற்படும் அனைத்து வலிகளும்

49. Stammering
     திக்குவாய்

50. Stones in gall-bladder, kidney, bladder (Kidneys, Gall bladder and Urinary bladder stones)
     சிறுநீரகக் கற்கள், பித்தப்பை கற்கள், சிறுநீர்ப்பை கற்கள்

51. Varicose Veins 

     காலில் இரத்த நாளங்கள் வீக்கம் அடைந்து புடைத்துக் காணப்படுதல்.

Subs by GOI Notification No. G.S.R. 21(E) dt 11.1.1996.

Ref.
The Drugs And Cosmetics Act, 1940 And The Drugs And Cosmetics Rules, 1945 as corrected up to the 30th April, 2003 (Page No. 444 under Schedule J)


இந்தப் பட்டியலில் உள்ள நோய்களுக்கு ஸ்பெஷலிஸ்டுகள் (சிறப்பு மருத்துவர்கள்) என்று கூற கூடாது. காரணம் ஸ்பெஷலிஸ்டுகள் என்ற அடைமொழி ஆங்கில மருந்துக்களை கொண்டு அந்த வியாதியை குணப்படுத்த முடியும் என்ற எண்ணத்தை (மாயையை) படித்த / படிக்காத பாமர மக்களிடம் உருவாக்கும். எனவே மருத்துவமனைகளில் காணப்படும் போர்டுகளில் உள்ள இந்த அடைமொழிகளை கண்டு யாரும் ஏமார்ந்து விடாதீர்கள்.



# நாம் வசிக்கும் இடங்களில் சுத்தமான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கொசு தொந்தரவு இருக்கும் பட்சத்தில் ரசாயன கொசுவிரட்டிகள் பயன்படுத்தாமல் காற்று வந்துபோகக்கூடிய கொசு வலைகளை பயன்படுத்தி ஜன்னல்களை திறந்து வைத்து தூங்க வேண்டும். ஏனென்றால் நம் உடலில் ஏற்படும் பல இன்னல்களுக்கு அடிப்படை காரணமே அசுத்த காற்று நிறைந்த இடத்தில் வசிப்பது தான்.  

# பசியை உணர்ந்து, பசி ஏற்படும் போதுதான் சாப்பிடவேண்டும். பசி இல்லாத போது நேரத்தைப் பார்த்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

# பசிக்கிற அளவிற்குத் தகுந்தவாறு உண்ணுகிற உணவின் அளவை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரே மாதிரியான பசி எப்போதும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

# மனதிற்கு பிடித்த உணவுகளை மட்டும் ரசித்து ருசித்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். 

# டீ மற்றும் காப்பி போன்றவை உணவல்ல போதைப்பொருள் என்பதை நினைவில் கொண்டு அதனை தவிர்த்திடுங்கள். (இதுபற்றி இந்த https://youtu.be/TkvkJozBpQc முகவரியில்  “டீ காப்பி நமக்கு தேவைதானா?” என்னும் தலைப்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.)

# உடல் கேட்கும் ஓய்விற்கும் தூக்கத்திற்க்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம். இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரைக்கும் தூங்க வேண்டிய அவசியமான நேரமாகும். இந்த நேரத்தில் தான் உடலில் எதிர்ப்பு சக்தி நோயெதிர்ப்பு வேலையை முழு வீச்சில் மேற்கொள்கிறது.

# இரவில் தூங்குவதற்கு பதிலாக பகலில் தூங்கி கணக்கை சரிசெய்து கொள்ள முடியாது. ஏனென்றால் உடலின் நச்சுத்தன்மையை அகற்றும் வேலையும், ஒவ்வொரு உள்ளுறுப்பையும் சீரமைக்கும் வேலையும், ஒவ்வொரு உயிரணுவும் வளர்ச்சியடையும் வேலையும் இரவுகளில்தான் முழுமையாக நடைபெறுகின்றன. எனவே இரவு நேரத்தில் தூங்குவது ஆரோக்கியத்தின் அடிப்படைத் தேவை.



நாம் எப்பொழுது நிம்மதியாக வாழ்கிறோமோ அப்பொழுது நமது உடல் தன்னைத்தானே பராமரித்துக் கொள்வதில் எந்தவித தடையும் ஏற்படுவதில்லை. நாம் எப்பொழுது நிம்மதி இல்லாமல் வாழ்கிறோமோ அப்போது உடல் தன்னைத்தானே வருத்திக்கொள்கிறது. கவலை, மனவருத்தம், பயம், கோபம், விரக்தி போன்ற எண்ணங்கள் நமது உடலின் பராமரிப்பு சக்தியை தீர்த்துவிடுகிறது. 

எனவே நிம்மதியாக வாழ்வதற்காக நேரங்களை ஒதுக்குவோம். பலர் பணத்திற்காக புகழுக்காக, பதவிக்காக, கெளரவத்திற்க்காக தங்கள் நிம்மதியை இழக்கிறார்கள். ஆனால் நிம்மதிக்காக பணம், புகழ், அந்தஸ்து என்று எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஏனென்றால் நம்முடைய ஆரோக்கியம், நிம்மதி இதைவிடப் பெரிதல்லவா? 

# அன்பான பேச்சுக்களை கேட்கும்போதும், 

# பிடித்தமான உணவுகளை உண்ணும்போதும், 

# பிடித்தமான இசை மற்றும் பாடல்களை கேட்கும்போதும்,  

# பிடித்தமான நகைச்சுவை மற்றும் திரைப்படங்களை பார்க்கும்போதும்,

# பிடித்தமான இடங்களுக்கு சுற்றுலா செல்லும்போதும், 

# பிடித்தமானவர்களிடம் நேரத்தை செலவிடும்போதும்,

# பிடித்தமான பொழுதுபோக்கில் ஈடுபடும்போதும், 

# நல்லதை பார்க்கும்போது, கேட்கும்போதும், சிந்திக்கும்போதும்,

# அடுத்தவர்களுக்கு உதவும்போதும், 

# நேர்மையாக வாழும்போதும்,

# சுயநலமில்லாத வாழ்க்கை வாழும்போதும்,

... நமது மனது சந்தோஷப்படுகிறது. அவ்வாறு மகிழ்ச்சியாக இருந்தால் நமது உடலின் பராமரிப்பு வேலையும் தடையில்லாமல் நடைபெறும் மேலும் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

பணமே பிரதானம் என எண்ணுபவர்கள் தங்கள் தினசரி வாழ்க்கை முறையில் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ள முயற்சிப்பதில்லை. அவர்கள் ஆரோக்கியத்தை விலை கொடுத்து வாங்க முடியும் எனக் கருதுகின்றனர். உண்மையில் நோய் பற்றிய பயத்தையும், கிருமிகளைப் பற்றிய பயத்தையும், செயற்கையாக உருவாக்கிய நோய்களான நீரிழிவு (சர்க்கரை), ரத்த அழுத்தம், தைராய்டு... போன்றவற்றை மட்டுமே பெற முடியும். பணத்தால் ஆரோக்கியத்தை வாங்க முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.


ஆரோக்கியமாக வாழ விரும்பினால் மருத்துவத்தை தேடுவதை விட்டுவிட்டு ஆரோக்கியத்தை தேடுங்கள். இன்று முதல் உங்களுக்கு பிடித்தமான உணவுகளை மட்டும் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். 

நம் தவறான வாழ்க்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தரமான தீர்வை தர இயலாது. மருந்துக்களையோ மருத்துவரையோ தேடுவதற்கு பதில் வியாதிக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்வதே சிறப்பானதாகும்.

நல்லதை சொல்ல வேண்டியது எனது கடமை. அதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் உரிமை. என்னிடம் மருந்துக்களை எதிர்பார்க்காதீர்கள் ஆரோக்கியத்தை மட்டும் எதிர்பாருங்கள். ஆரோக்கியமாக வாழ வழிகாட்டி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காகவே இந்த முகநூல் பக்கம் மற்றும் குழுவினை உருவாக்கியுள்ளேன்.


மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:

http://reghahealthcare.blogspot.in

https://www.facebook.com/ReghaHealthCare

https://www.facebook.com/groups/reghahealthcare

https://www.facebook.com/groups/811220052306876


முக்கிய குறிப்பு:

இரவு 9 மணி முதல் காலை வரை தூக்கம் தடைபடாமல் இருக்க எனது தொடர்பு எண்களை Silent Mode இற்கு மாற்றிவிடுவேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அந்த நேரத்தில் நீங்களும் தூங்கச் சென்று உங்களது ஆரோக்கியத்தையும் உறுதிசெய்து கொள்ளுங்கள்.

ஆங்கில மருந்துக்கள், டீ, காப்பி, கஞ்சா உட்கொள்ளுதல், புகை பிடித்தல், மது அருந்துதல், புகையிலை, பாக்கு, மூக்குப்பொடி போன்ற போதை பழக்கத்தை விடுவதற்கு தயாராக உள்ளவர்கள் என்னை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம். 

மேலும் பொறுமையாக இருப்பவர்கள், நேர்மையாக வாழ்பவர்கள், அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாதவர்கள் மற்றும் மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் மட்டும் இந்த எண்கள் +919840980224, +919750956398 மற்றும் vineeth3d@gmail.com க்கு தொடர்பு கொள்ளவும்.

சுயநலமாக சிந்திப்போர் மற்றும் மருந்துக்களால் மட்டுமே வியாதிகளை குணப்படுத்த முடியும் என எண்ணுபவர்கள் என்னை தொடர்புகொண்டு உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இதுவரை நான் எழுதிய / வெளியிட்ட அனைத்து கட்டுரைகளின் தொகுப்பைக் காண மற்றும் பதிவிறக்கம் செய்துகொள்ள இந்த Google Drive லிங்கிற்கு செல்லவும் https://goo.gl/GBKHAb

நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நடக்கும் என்கிற உண்மையை உணர்ந்த காரணத்தால் தான் நல்ல விஷயங்களை அதிகம் பகிர்கிறேன். எனவே நல்லதே கேளுங்கள் நல்லதே நினையுங்கள் நல்லதே பேசுங்கள் நல்லதே செய்யுங்கள் நல்லதே நடக்கும். அதற்கு எனது வாழ்கையே சாட்சி. 

"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" 
Youtube Channel முகவரி https://goo.gl/xsH2SJ

"நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!" 
Youtube Channel முகவரி https://goo.gl/Rvr1vT


"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" 
Telegram குழுவின் முகவரி
 https://telegram.me/OurBodyItselfaDoctor

"நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்" 
Telegram குழுவின் முகவரி
 https://telegram.me/LetUsThinkPositive

நமது உடலின் அடிப்படையை கற்றுக்கொண்டு மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ்வோம். ஆரோக்கியமாக வாழ நம் உடலின் அடிப்படையை புரிந்து கொண்டு அதற்கு போதிய ஒத்துழைப்பு கொடுத்தாலே போதும். இதனை புரிந்து கொள்ளாமல் இருப்பதால் தான் நாம் தேவையில்லாமல் வியாதிகள் மற்றும் கிருமிகள் பற்றி பயந்து கொண்டு இருக்கிறோம். 

ஆரோக்கியம் என்பது உடல், மனம் மற்றும் தினசரி பழக்கவழக்கங்களில் தான் அடங்கி உள்ளது. இதனை புரிந்துக்கொள்ளாததால் தான் நாம் பல மருத்துவ வியாபாரிகளிடம் சிக்கித் தவிக்கிறோம்.

இப்படிக்கு,
விழிப்புணர்வு வினீத்

17 comments:

  1. நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?: மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940 (Drugs And Cosmetics Act, 1940) >>>>> Download Now

    >>>>> Download Full

    நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?: மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940 (Drugs And Cosmetics Act, 1940) >>>>> Download LINK

    >>>>> Download Now

    நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?: மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940 (Drugs And Cosmetics Act, 1940) >>>>> Download Full

    >>>>> Download LINK

    ReplyDelete