முடி உதிர்தல், இளநரை சரியாக....


முடி உதிர்தல், இளநரை சரியாக....


இளநரை சரியாக....




  • கரிசலாங்கண்ணி இலையை (200 கிராம்) மையா அரைச்சி, அதோட அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி பதத்துக்கு வந்ததும் இறக்கி வச்சிரணும். வழக்கமா தலைக்கு எண்ணெய் தேய்க்கிற மாதிரி அதை தேய்ச்சிட்டு வந்தா....முடி உதிர்றது, இளநரை எல்லாம் சரியாகும்.
  • கரிசலாங்கண்ணி சூரணத்தை கால் ஸ்பூன் எடுத்து, தேன் சேர்த்து சாப்பிட்டாலும் நரை விழுற பிரச்னை சரியாகும்.
  • மருதாணி இலை 300 கிராம், நல்லெண்ணெய் 1 1/2 லிட்டர், பசும்பால் 700 மில்லி சேர்த்து பதமா காய்ச்சி, தலைக்கு தேய்ச்சிட்டு வந்தா...கூந்தல் நல்லா வளரும். அதோட நரை விழுறதையும் தடுக்கும்.
  • நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும்.
  • ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து தூள் செய்து ,செம்பருத்தி பூவை தூள் செய்து இரண்டையும் சம அளவு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் முடி கருமையாகும்.
  • நெல்லிக்காய் பவுடராக்கி எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் முடி கருமையாகும் .
  • கசகசா , அதிமதுரம் சமபங்கு யடுத்து பால் கலந்து அரை மணி நேரம் கழித்து குளித்தால் "முடி கருமையாகும் "
  • அதிமதுரம் தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் கலந்து 1 மணி நேரம் கழித்து குளித்தால் முடி கருமையாகும்,மெதுவாகவும் ஆகும்.
  • கறிவேப்பில்லை அரைத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் முடிகருமையாகும்.
  • வரம் ஒரு முறை கீரை சாபிட்டால் முடி நன்றாக வளரும்.
  • தினமும் கட்டாயம் தலைக்கு தேங்காய் எண்ணெய் , ஆலீவ் ஆயிலை தலைக்கு தேய்த்து மசாஜ் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
  • தேங்காய்ப் பால் தேய்த்து குளித்தல் முடி கருமையாகும்,மெதுவாகவும் ஆகும்.


முடி உதிர்தல் சரியாக....



  • வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த நீரை ஒரு பாத்திரத்தில் மூடி வைத்து விட வேண்டும். காற்று போகாத அளவிற்கு மூடி போட்டு மூடி வைக்க வேண்டும் . பின் ஒரு நாள் கழித்து . தலை குளித்தால் தலையில் பேன் ஒளியும் ,முடி உதிர்வதை நிறுத்தலாம்.
  • வெந்தயம் சிறப்பான குணம் வாய்ந்தது . இதை நீரில்ஊரவைத்து.மறு நாள் அரைத்து தலையில் வைத்திருந்து குளித்தால்.உடல் சுடு குறையும். முடி நன்றாக வளரும். ஆனால் அதிக குளிர்ச்சி சிலரது உடலுக்கு ஒத்துக்கொள்ளது. ஆஸ்துமா , ஜலதோஷம் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
  • வாரத்தில் ஒரு முறையனும் எண்ணெய் குளியல் மிகவும் அவசியம். தினமும் சுத்தமான தேங்காய் எண்ணெய் தலை பகுதி முழுவதும் முடியின் வேர் பகுதியில் மிதமாக தேய்துகொடுகவும். இதனால் இரத்த ஓட்டம் சிராக அமையும்.முடியும் நன்றாக வளரும் .

For More Info Contact:

No comments:

Post a Comment