இனிப்பு என்ற சுவை நாக்கில் படும்பொழுது சுவை மொட்டுக்கள் அதை மண் பிராணசக்தியாக மாற்றி உடல் முழுவதும் அனுப்புகின்றன. மண் பிராணசக்தி மூலமாக இயங்கும் உறுப்புகள் இரைப்பை, மண்ணீரல், உதடுகள். இனிப்புக்கும் கவலைக்கும் சம்பந்தம் உண்டு.
நமது உதடும் மண்ணீரலும் ஒரே மாதிரியான வடிவத்தில் இருக்கும். உதட்டில் ஏதாவது புண் ஏற்பட்டால் அதற்குக் காரணம் வயிற்றில் புண் இருப்பது. வயிற்றில் ஏற்படும் உபாதைகளுக்கு உதட்டிலே அறிகுறி தெரியும். எனவே, உதட்டில் வரும் நோய்களுக்கு உதட்டில் மருந்து தடவுவதால் குணம் பெற முடியாது. வயிற்றைச் சுத்தப்படுத்துவதால் மட்டுமே தீர்வு காண முடியும்.
கவலைக்கும் மண் பிராணனுக்கும் சம்பந்தம் உண்டு. சிலர் மனதில் கவலை வந்தால் சாப்பிட மாட்டார்கள். பசிக்கவில்லை என்று கூறுவார்கள். ஆனால், உடன் இருப்பவர்கள் "நீ ஒன்றுமே சாப்பிடாமல் இருக்கிறாய். சாப்பிடு, சாப்பிடு" என்று வற்புறுத்தி உணவைக் கொடுப்பார்கள். கவலை என்ற உணர்ச்சி உடலில் மண் சம்பந்தப்பட்ட பிராண சக்தியை அதிகமாக ஈர்த்துக் கொள்வதால் ஜீரணத்திற்கான சுரப்பிகள் சுரப்பதில்லை. அதனால் பசி எடுப்பதில்லை. இப்படிக் கவலையாக இருக்கும்பொழுது உணவைச் சாப்பிட்டால் வயிறு அதிகமாகக் கஷ்டப்பட்டு, கவலை அதிகமாகும். எனவே, கவலை வந்தால் வயிற்றுக்கு உணவு கொடுக்காதீர்கள்! எப்பொழுது பசிக்கிறதோ அப்பொழுது மட்டுமே சாப்பிடுங்கள்! எப்பொழுது பசி என்ற உணர்ச்சி இருக்கிறதோ அப்பொழுது கவலை இருக்கவே இருக்காது. கவலையும் பசியும் எதிரிகள்.
நாம் அனைவரும் குடும்பம், வியாபாரம், பணம், புகழ் போன்ற பல விஷயங்களைப் பற்றி எப்பொழுதும் கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். இதற்குக் காரணம் வயிற்றை ஒழுங்காக வைத்துக் கொள்ளாததுதான். வயிற்றை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் எவருக்கும் எந்த விஷயத்திற்கும் கவலை வராது.
சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் எவருக்கும் பயம் என்கிற உணர்ச்சி வராது. கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் நபருக்குக் கோபம் வராது. ஞானிகள், முனிவர்கள் ஆகியோருக்குக் கோபம், பதற்றம், பயம், கவலை ஆகியவை வருவதில்லை. ஏனென்றால், அவர்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறார்கள்.
இனிப்பு சாப்பிட்டே சர்க்கரை நோயைக் குணப்படுத்தலாம்!
நம் மனம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நேரடியாக மனதைக் கட்டுப்படுத்துவதை விட, உடலை ஆரோக்கியமாக்கிக் கொள்வது மூலம் மனதை சுலபமாக அமைதிப்படுத்தலாம்.
இதுவரை நம் வாழ்வில் நடந்த கசப்பான விஷயங்களை அப்படியே விட்டுவிட்டு இனிமேல் உடலை ஆரோக்கியமாக வைப்பது மூலமாகப் புதிய கவலை, கோபம், பயம் இல்லாமல் வாழலாம். பழைய விஷயங்களை அழித்தும் நாம் மனரீதியாக ஆரோக்கியமாக வாழ முடியும்.
சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சாப்பிடக் கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பலர் பல வருடங்களாக இனிப்பு சாப்பிடாமல் இருக்கிறீர்களே, உங்கள் சர்க்கரை நோய் குணமாகி விட்டதா?
எத்தனை வருடகாலம் இனிப்பு சாப்பிடாமல் இருந்தால் சர்க்கரை நோய் குணமாகும் என்று உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள்!
இப்படிப் பல வருடங்களாக இனிப்பு சாப்பிடாமல் இருந்தும் உங்கள் நோய் குணமாகவில்லையே, பிறகு ஏன் இந்த விஷயத்தைக் கடைப்பிடிக்கிறீர்கள்?
இனிப்பு என்ற சுவை நாக்கில் பட்டவுடன் நாக்கு அதை மண் பிராண சக்தியாக மாற்றுகிறது. மண் பிராண சக்தி வயிற்றுக்கு சக்தி கொடுத்து அதை வேலை செய்ய வைக்கிறது. எனவே நீங்கள் இட்லி, சப்பாத்தி போன்ற உணவுகள் சாப்பிட்டு ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இனிப்பு சாப்பிட்டால் இனிப்பு இரைப்பையை வேலை செய்ய வைத்து நீங்கள் சாப்பிட்ட உணவுகளில் உள்ள சர்க்கரையை இரத்தத்தில் கலக்கச் செய்கிறது. இனிப்பு இரைப்பையை வேலை செய்ய வைக்கும், அவ்வளவுதான். இனிப்பு நேரடியாகச் சர்க்கரையாக மாறாது! நாம் சாப்பிட்ட பொருளில் உள்ள சர்க்கரை மட்டுமே இரத்தத்தில் கலக்கும்.
சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சாப்பிடாமல் இருப்பதால் நாம் சாப்பிடுகிற இட்லி, சாப்பாடு, சப்பாத்தியில் உள்ள சர்க்கரையை இரைப்பை ஜீரணம் செய்யாமல் கழிவாக அனுப்பி விடுகிறது. இனிப்பு சாப்பிட்டால்தான் இரைப்பை வேலை செய்யும். இரைப்பை வேலை செய்தால்தான் உணவில் உள்ள சர்க்கரை இரத்தத்தில் கலக்கும். இரத்தத்தில் சர்க்கரை கலந்தால்தான் நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் உணவு கிடைக்கும்.
உணவை எப்படிச் சாப்பிட வேண்டும் என்று தெரியாமல் அரைகுறையாக ஜீரணம் செய்து சாப்பிடுவதால் இனிப்பு சாப்பிட்டவுடன் சர்க்கரை கெட்ட சர்க்கரையாக மாறி இரத்தத்தில் கலக்கிறது. இந்தக் கெட்ட சர்க்கரைக்கு இனிசுலின் கிடைக்காது. அந்த நிலையைத்தான் சர்க்கரை நோய் அன்று அழைக்கிறார்கள்.
நாம் சாப்பிடுவதே இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டுவதற்குதான். அனைத்து உணவுகளிலும் சர்க்கரை உள்ளது. சர்க்கரை உள்ள பொருட்களை ஆசை தீரச் சாப்பிடுங்கள்! இதனால் உடலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால், வெள்ளைச் சர்க்கரையை மட்டும் குறைத்துக்கொள்ளுங்கள்! ஏனென்றால், அதில் சல்பர் என்ற கொடிய விஷம் உள்ளது. மற்றபடி நாட்டுச் சர்க்கரை, வெல்லம், பஞ்சாமிர்தம், தேன், பலாப்பழம் என அனைத்து வகை இனிப்புகளையும் நீங்கள் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
உங்கள் நாக்கு எவ்வளவு இனிப்பைக் கேட்கிறதோ அவ்வளவு தயவு செய்து சாப்பிடுங்கள்! முதலில் இனிப்பு ஒரு துண்டு சாப்பிடுங்கள்! உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? பரவாயில்லை, இரண்டாவது துண்டும் சாப்பிடுங்கள்! பிடித்திருக்கிறதா? பரவாயில்லை, மூன்றாவது முறையும் சாப்பிடுங்கள்! மூன்றாவது முறை இனிப்பைச் சாப்பிடும்பொழுது திகட்டல் ஏற்பட்டால் அதன் பிறகு சாப்பிடக் கூடாது! திகட்டிய பிறகு இனிப்புச் சாப்பிடும்பொழுது அது உடலுக்கு நோயை ஏற்படுத்தும். எவ்வளவு இனிப்புச் சாப்பிட்டால் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்குமோ அவ்வளவு இனிப்பைச் சாப்பிடலாம். ஏனென்றால் நாக்குதான் டாக்டர்! சுவைதான் மருந்து! இனிப்பு என்ற மருந்தை நமது நாக்கு என்ற டாக்டர் கேட்கும்பொழுது கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும்! இப்படி இனிப்புச் சாப்பிடாமல் இருந்தால் உடலுக்கு நோய் வரும்!
இப்படி, இனிப்புக்கும் மண் பிராணனுக்கும் இரைப்பை, மண்ணீரல், உதடுகள், கவலை ஆகியவற்றுக்கும் சம்பந்தம் உள்ளது என்பதைப் புரிந்து கொண்ட மருத்துவரால் மட்டுமே இந்த உறுப்புகள் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்த முடியும்.
நன்றி - பாஸ்கர்
சர்க்கரை நோய் என்று முத்திரை குதப்பட்டோர் அவசியம் பின்பற்ற வேண்டிய வாழ்க்கைமுறை:
- பசிக்கும்போது மட்டும் நமக்கு பிடித்த உணவை நிதானமாக உண்ண வேண்டும். பசி இல்லாதபோது உண்ணக்கூடாது. அதேநேரத்தில் நமக்கு பிடிக்காத உணவை தவிர்க்க வேண்டும்.
- நாம் டீ, காப்பி, செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் நம் எலும்புகள் எளிதில் வலுவிழந்துவிடும் (Osteoporosis, Low Bone Mineral Density), எலும்புத் தேய்மானம், சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக கற்கள், தலை முடி உதிர்தல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். அதற்கு மாற்றாக நீர் சத்து உள்ள பானங்கள் (மோர், இளநீர், பதநீர், எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு, பழச்சாறு (பிரெஷ் ஜூஸ்) போன்றவற்றில் பிடித்தவற்றை பருகலாம். அதில் உள்ள சுவையை நாக்கு உறிந்த பின் சுவை இல்லாத நீரை தான் விழுங்க வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள சத்துக்களை நம் உடம்பால் முழுமையாக ஜீரணிக்க முடியும்.
- தாகம் இல்லாமல் தண்ணீர் குடிக்கக் கூடாது. அதேபோல் தாகம் எடுக்கும்போது உடனே தேவையான அளவு தண்ணீரை நிதானமாக வாய்வைத்துக் குடிக்க வேண்டும். நீரை அன்னாந்து குடிக்கக்கூடாது (அப்படி குடிக்கும்போது தேவையை விட பலமடங்கு நீரை குடிக்க நேரிடுவதால் நமது சிறுநீரகம் பாதிக்கப்படும்).
- இரவு விரைவாக (9 மணிக்கு) தூங்க சென்றுவிட வேண்டும். தூங்கும் இடம் நல்ல இயற்கை காற்றோட்டம் உள்ள இடமாக இருத்தல் வேண்டும்.
- இயற்கை காற்றோட்டம் இல்லாத இடத்தில் தூங்கும்போது, இரசாயண கொசுவிரட்டிகள் இருக்கும் இடத்தில் தூங்கும்போது, நாம் சுவாசிக்கும் காற்றையே மறுபடியும் மறுபடியும் சுவாசிக்கும் சுழலில் (பூட்டிய அறையில், தலையை போர்த்திக்கொண்டு தூங்குவது) தூங்கும்போது விஷக்காற்று நமது உடலில் பரவி சிறுநீரகக் கற்கள், சிறுநீரக செயலிழப்பு, கர்ப்பையில் தொந்தரவுகள், விதைப்பையில் தொந்தரவுகள், ஆண்மை மற்றும் பெண்மை இழப்பு, மலட்டுத்தன்மை, மூட்டு வலிகள், உடல் சோர்வு,... போன்ற பல இன்னல்களை உருவாக்கும்.
மேலும் சர்க்கரை நோய் என்று முத்திரை குதப்பட்டோர் அதிலிருந்து விடுபட விரும்புவோர் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்ககளை கீழ்க்கண்ட முகவரியில் காணலாம்...
நம் வாழ்வியல் முறையால் ஏற்படும் உடல் உபாதைகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தரமான தீர்வை தர இயலாது. நாம் நமது தினசரி வாழ்வியல்முறையில் ஆரோக்கியத்தை தொலைத்துவிட்டு மருத்துவமனையில் தேடினால் எப்படி கிடைக்கும். நம் உடலின் இயக்கத்தை புரிந்துக்கொண்டு அதற்குப் போதிய ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே ஆரோக்கியமான வாழ்க்கை சாத்தியப்படும். இதை மக்களுக்கு புரியவைத்து மருந்துக்களின்றி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.
நீங்கள் எதை தேடுகிறீர்களோ அதுவே கிடைக்கும். எனவே மருத்துவத்தை தேடுவதை விட்டுவிட்டு ஆரோக்கியத்தை தேடுங்கள். நம் உடலில் ஏற்படும் உபத்திரவத்திற்கான அடிப்படை காரணத்தை ஆராந்து அதனை சரிசெய்தால் மட்டுமே நிரந்திர தீர்வு கிடைக்கும்.
நம் உடலின் இயக்கம் பற்றிய அடிப்படை புரிதல் நமக்கு ஏற்பட்டுவிட்டால் நமக்கு எந்த மருத்துவரது உதவியும் தேவைப்படாது. அத்தகைய புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்பதே “நாமே மருத்துவர் நமக்கு ஏன் மருத்துவர்?” Telegram குழுவின் நோக்கம். உங்களுக்கு ஆரோக்கியம் தொடர்பான தேடல் இருந்தால் இந்தக் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்..
https://telegram.me/OurBodyItselfaDoctor
குறிப்பு:
ஆங்கிலமருந்துக்கள், டீ, காப்பி, கஞ்சா, புகை, மது, புகையிலை, பாக்கு, மூக்குப்பொடி போன்ற போதை பழக்கத்தை விடுவதற்கு தயாராக உள்ளவர்கள் மட்டும் இந்த Telegram குழுவில் இணைந்துக் கொள்ளுங்கள்.
பொறுமையாக இருப்பவர்கள், நேர்மையாக வாழ்பவர்கள், அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாதவர்கள் மற்றும் மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புபவர்கள் இந்த Telegram குழுவிற்கு வரவேற்க்கப்படுகிறார்கள்.
24 மணி நேரமும் உங்கள் சந்தேகங்களை இந்த Telegram குழுவில் கேட்கலாம். குழுவில் உங்கள் சந்தேகங்களை கேட்க தயக்கமாக இருக்கும்பட்சத்தில் தனிப்பட்ட முறையில் என்னிடம் கேட்கலாம். எனது தொடர்பு எண் அந்தக் குழுவில் கிடைக்கும்.
சுயநலமாக சிந்திப்போர் மற்றும் மருந்துக்களால் மட்டுமே வியாதிகளை குணப்படுத்த முடியும் என எண்ணுபவர்கள் என்னை தொடர்புகொண்டு உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இதுவரை நான் எழுதிய / வெளியிட்ட அனைத்து இ-புத்தகங்களை பதிவிறக்கம் செய்துகொள்ள இந்த Google Drive லிங்கிற்கு செல்லவும் https://goo.gl/GBKHAb
இப்படிக்கு,
விழிப்புணர்வு வினீத்
கற்போம் கற்பிப்போம்!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
No comments:
Post a Comment