நாம் எப்போது நமது நோய்களில் இருந்து விடுபட போகிறோம்?


நோய்கள் என்றால் என்ன?

நமது உடலில் தேங்கும் கழிவுகள் மற்றும் கிருமிகளை நமது உடலே அழித்துவிடும் அல்லது வெளியேற்றிவிடும். இந்த செயல்முறையின்போது (Process) நமது உடலில் ஏற்படும் அசௌகரியங்களை (Inconvenience) நாம் நோய்கள் என்கிறோம்.

எதனால் சுவாசப் பாதையில் நோய்கள் ஏற்படுகின்றன?

நமது சுவாசப் பாதையில் இருக்கின்ற தூசிகளை / கிருமிகளை தும்மல் மூலமாக நமது உடல் வெளியேற்றும். அச் செயல்முறை நிகழும்போது நமக்கு அசௌகரியமாக இருக்கும் என்பது உண்மையே. அவ்வாறு வெளியேற்றினால் தான் நமது சுவாசப் பாதையை நமது உடலால் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும். இதன்மூலம் நமது உடலுக்கு பிராணவாயு கிடைப்பதில் எந்த தங்கு தடையும் இருக்காது.

இவற்றை நாம் வியாதி என புரிந்துக் கொள்ளும்போது ஏதாவது மருந்துக்களை உட்கொண்டு தும்மலை உண்டுபண்ணும் சுரப்பியை வேலை செய்ய விடாமல் தடுத்துவிடுகிறோம். இவ்வாறு தடுக்கும்போது நிறைய தூசிகள் / கிருமிகள் நம் சுவாசப்பாதையில் தங்கிவிடுகிறது.

இந்த சூழ்நிலையில் நமது உடலில் சைனஸ் (Sinus) என்னும் சுரப்பி, நிணநீர் (Lympathic Fluid) மூலம் நமது சுவாசப்பாதையில் தேங்கிய கழிவுகள் மற்றும் கிருமிகளை வெளியேற்றும் வேலையில் ஈடுபடும். இந்த செயல்முறையின் போதுதான் நமக்கு மூக்கு ஒழுகுதல் (Running Nose) ஏற்படும். இதையும் வியாதி என புரிந்துகொள்ளும் நாம் அவற்றை தடுக்க மருந்துக்களை உட்கொள்கிறோம். இதனால் தான் மூக்கடைப்பு ஏற்பட்டு கழிவுகள் மற்றும் கிருமிகளை வெளியேற்ற சுரந்த நிணநீர் (Lympathic Fluid) நமது முகத்திற்குள் தேங்குகிறது. 

இவற்றை தான் நமது உடல் கண்ணீர் மூலமும் வெளியேற்றும். இந்த நீரை தான் பலர் கண்களில் நீர் தானாகவே வடிகிறது என கூறுவார்கள். பல காலமாக தேங்கிய இந்த நீரானது திட வடிவமாக (Solid) மாறுகிறது. இதை தான் நாம் சைனஸ் கட்டிகள் Sinusitis (Sinus Infection) என்று அழைக்கிறோம். இந்த கட்டிகளை கரைக்க / எரிக்க நமது உடலானது காய்ச்சல் செயல்முறையை நிகழ்த்தும். நாம் காய்ச்சலையும் வியாதி எனக் கருதி அதை தடுக்கவும் மருந்துக்களை உட்கொள்கிறோம் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

நமது சுவாசப்பாதையில் தேங்கிய கழிவுகளை நிணநீர் (Lympathic Fluid) மூலம் வெளியேற்ற முடியாதபோது நமது உடல் சளியின் (Mucus) மூலம் வெளியேற்ற முயற்சி செய்யும். இந்த சளியானது நமது நுரையீரல் மற்றும் சுவாசப்பாதையில் உள்ள கழிவுகளை அதனோடு சேர்த்துக் கொண்டு நமது மூக்கின் மூலம் வெளியேறிவிடும். இந்த சளியையும் நாம் வியாதி எனக் கருதி மருந்துக்களை உட்கொண்டு தடுத்துவிடுகிறோம். அந்த மருந்துகள் சளியை கட்டியாக மாற்றி நமது தொண்டையில் படியச்செய்யும். அவ்வாறு படியும் கழிவுகள் தான் நமக்கு வறட்டு இருமல் மற்றும் குறட்டை ஏற்பட அடிப்படை காரணங்கள்.

வறட்டு இருமலுக்கு நாம் சிரப் (Syrup) வடிவில் மருந்துக்களை உட்கொள்ளுவோம். அப்போது நமது தொண்டையில் படிந்த காய்ந்த சளியானது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து நமது நுரையீரலில் (Lungs) படிந்துவிடும். இவ்வாறு நமது நுரையீரலின் சிற்றறைகள் அடைபடும்போது நமது உடலுக்கு தேவையான காற்றோட்டம் தடைபடும். இந்த நிலையை தான் மூச்சிறைப்பு (Short Breath / Wheezing) என்று அழைக்கிறோம். இதுவே பெருவாரியான சிற்றறைகளில் அடைபடும்போது நமது உடலுக்கு தேவையான காற்றோட்டம் மிக குறைந்த அளவே இருக்கும். அப்போது இந்த மூச்சிறைப்பு அடிக்கடி ஏற்படும். இந்த நிலையை தான் ஆஸ்துமா (Asthma) என்கிறோம்.

பொதுவாக நாம் ஓடும்போது நம் உடலுக்கு நிறைய பிராணவாயு தேவைப்படும். அப்போது நாம் சுவாசம் முழுமையாக இல்லாமல் வேகமாக இருக்கும். இந்த நிலையில் குறைவான நேரத்தில் அதிக மூச்சுக் காற்றை சுவாசிப்போம் அது தான் மூச்சிறைப்பு. நாம் அமர்ந்துகொண்டு இருக்கும்போது உடலுக்கு அதிகமாக காற்றோட்டம் தேவைப்படும் நேரங்களில் குறைவான சிற்றலைகள் மட்டுமே திறந்திருக்கும் பட்சத்தில் இத்தகையதொரு நிகழ்வு ஏற்படும். பெரும்பகுதியான சிற்றலைகள் கழிவுகளால் மூடப்பட்டதே இதற்கு அடிப்படை காரணம். இதை தான் கழிவுகளின் தேக்கம் வியாதி; கழிவுகளின் வெளியேற்றம் குணம் என்று கூறுகிறோம்.

இப்போதும் ஒருவருக்கு ஏன் ஆஸ்துமா (Asthma) நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அறியாமல் ஸ்டீராய்டு (Steroid) மருந்துக்களை கொண்டு இன்ஹேலர் (Inhaler) மற்றும் நேபுளேசர் (Nebulizer) வடிவில் தற்காலிக நிவாரணம் பெறுகிறோம். பல காலமாக தேங்கிய இத்தகைய கழிவுகள் திட வடிவம் (Solid State) பெறுகிறது. இப்போதும் காய்ச்சல் மூலம் இவற்றை கரைக்க நமது உடலானது முயற்சி செய்யும், நாம் இந்த முறையும் காய்ச்சலை வியாதி எனக் கருதி மருத்துக்கள் உட்கொண்டு அவற்றை தடுத்துவிடுகிறோம். பின்னர் தேங்கிய திடக் கழிவுகளுக்கு காசநோய் (T.B Tuberculosis) என பெயர் சூட்டுகிறோம்.

ஸ்டீராய்டு (Steroid) பற்றிய பாதிப்புக்களை தெரிந்துகொள்ள கீழே உள்ள பதிவு உபயோகமாக இருக்கும். https://goo.gl/KrvPk5

இதற்கும் நாம் மருந்துக்களை உட்கொள்கிறோம். அந்த திடக் கழிவுகளை கரைக்க முயற்சி மேற்கொள்ளும்போது வலி ஏற்படும். நமது நுரையீரலில் வலி ஏற்படுகிறது என்று பரிசோதனை மேற்கொள்வோம். அப்போது பயாஸ்பி (Biospy) எடுத்து புற்றுநோயா (Cancer) என சோதிப்பார்கள். Biospy என்றால் அந்த திடக்கழிவில் இருந்து மாதிரி (Sample) எடுப்பார்கள். அந்த மாதிரியில் ரத்த ஓட்டம் இருக்கிறதா என சரிபார்ப்பார்கள். கழிவின் தேக்கத்தில் எங்கு இருந்து ரத்த ஓட்டம் வரும்? எனவே இதை புற்றுநோய் கட்டி என்று கூறிவிடுவர். இது தான் நுரையீரல் புற்றுநோய் (Lungs Cancer) என்று அழைகப்படுகிறது.

எனவே நமது உடலின் அடிப்படை இயக்கத்தை புரிந்துகொள்வதே ஆரோக்கிய வாழ்வின் அடித்தளம்!

"நம் கையில் இருக்கும் ஒரு பொருளை உலகில் வேறு எங்கு தேடினாலும் கிடைக்காது" ஏனென்றால் அந்த பொருள் இருக்கும் இடத்தை விட்டுவிட்டு இல்லாத இடத்தில் தேடுகிறோம். இவ்வாறாக இன்றையதினத்தில் நாம் நமது ஆரோக்கியத்தை மருத்துவமனைகளில் தேடுகிறோம்.

நம் சுவாச பாதையில் தேங்கும் கழிவுகளை நம் உடம்பானது எவ்வாறு வெளியேற்றும்?

* தும்மல்

* மூக்கு ஒழுகுதல்

* சளி  

* இருமல் மூலமாக வெளியேற்றும்.

இவற்றை நாம் வியாதி என கருதி அதை தடுக்க முயற்சிக்கும்போது இந்த கழிவுகள் தேங்கி இருக்கும் இடத்திலே அதன் அடர்த்தி அதிகமாகி நமது உடலால் கட்டியாக்கப்படும். பிறகு நமது உடலின் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும்போது காய்ச்சல் என்கிற செயல்முறையின் மூலம் வெப்பத்தை அதிகப்படுத்தி அந்தக் கட்டிகளை மற்றும் நமது உடலில் தேங்கிய இதர கழிவுகளையும் எரித்துவிடும்.

காய்ச்சலை ஏற்படுத்த போதுமான சக்தி இல்லாதபோது நமது உடலின் எஞ்சிய சக்தியை கொண்டு கழிவுகளை வெளியேற்ற முயற்சிக்கும்போது அந்த இடத்தில் வலி ஏற்படும். சிலநேரம் நமது எதிர்ப்பு சக்தி போதுமான அளவில் இல்லையென்றால் நமது உடலின் இயக்க சக்தி தேவைப்படும். அப்போதுதான் தலைவலி ஏற்படும். தலைவலி ஏற்பட்டால் நம்மால் எந்த வேலையும் செய்ய இயலாமல் ஓய்வு எடுப்போம். அதற்குதான் தலைவலி ஏற்படுகிறது.

யாரெல்லாம் தலைவலி வந்தால் மருந்துகளின்றி ஓய்வு எடுக்கிறார்களோ அவர்களுக்கு ஒருபோதும் புற்றுநோய் வருவதில்லை. 

யாரெல்லாம் காய்ச்சலுக்கு மருந்துகளின்றியும் மற்றும் பசிக்கவில்லை என உணவின்றியும் ஓய்வு மட்டுமே எடுக்கிறார்களோ அவர்களுக்கு Typoid, Jaundice, Chicken Guniya, Coma (விபத்துக்களால் ஏற்ப்படும் Coma அல்ல), புற்றுநோய் (Cancer), ரத்த புற்றுநோய் (Blood Cancer) போன்ற தொந்தரவுகள் ஏற்படுவதில்லை. 

இவ்வாறு நமது உடலின் கழிவு வெளியேற்றத்துக்கு நாமே தடையாக இருந்துவிட்டு வியாதிகள் பெருகிவிட்டது என கூறுகிறோம்.


என்னென்ன ரூபங்களில் நம் சுவாசப் பாதையில் கழிவுகள் தேங்குகின்றன என்பதை பார்ப்போம்:

காரணம் #1 

ஜன்னல் மற்றும் கதவுகள் பூட்டப்பட்ட அறையில் தூங்கும்போது.

நாம் சில காரணங்களுக்காக ஜன்னல்களை பூட்டிக் கொண்டு தூங்குகிறோம். அப்படி காற்று புக முடியாத சூழ்நிலையில் தூங்கும்போது நாம் ஒருமுறை சுவாசித்த மூச்சுக் காற்றையே மறுபடியும் மறுபடியும் சுவாசிக்க ஆரம்பித்து விடுவோம். சுத்தமான காற்றை சுவாசிக்காமல் இத்தகைய காற்றை சுவாசிக்கும்போது அவை நமது உடலில் நச்சுக்கலாக தேங்கும்.

பொதுவாக நாம் எப்போது ஜன்னல்கள் மற்றும் கதவை பூட்டிக்கொண்டு தூங்குகிறோம்?

குளிசாதனம் A/C உபயோகப் படுத்தும்போது மற்றும் கொசுவிரட்டிகளை உபயோகப் படுத்தும்போதும் தான்.

அதற்கான தீர்வு:

# குளிர்சாதனத்தை பயன்படுத்தினாலும் ஜன்னல்களை திறந்துவைகும் பட்சத்தில் பிராணவாயு (Oxygen) கிடைப்பதில் தடை இருக்காது.

# கொசுக்களால் தொந்தரவுகள் ஏற்படுமானால் காற்று வரக்கூடிய கொசுவலைகளை ஜன்னல்களில் மாட்டிக்கொள்ளலாம். அதையும் மீறி வரும் கொசுக்களை மின்சாதன கொசு மட்டையை (Electrical Musquito Bat) உபயோகப்படுத்தி அழித்துவிடலாம்.


காரணம் #2 

தலையை போர்த்திக்கொண்டு தூங்கும்போது.

நாம் தலையை போர்த்திக்கொண்டு தூங்கும்போது ஒருமுறை சுவாசித்த காற்றையே மீண்டும் மீண்டும் சுவாசிக்கும் சூழல் ஏற்படும். அவ்வாறு சுவாசிப்பதும் உடலில் பலவித பாதிப்புக்களை (தீராத சளி, தொடர் தும்மல், வலிப்பு, சிறுநீரக கல் போன்ற பல தொந்தரவுகளை) ஏற்படுத்தும்.

அதற்கான தீர்வு:

# தலையை மட்டும் மூடாமல் கழுத்துவரை போர்வையை போர்த்திக்கொண்டு தூங்கலாம்.

# மின்விசிறியை அணைத்துவிட்டு இயற்கை காற்றோட்டம் உள்ள இடத்தில் தூங்கலாம்.


காரணம் #3 

காற்றோட்டமே இல்லாத இடத்தில் தூங்கும்போது.

நாம் உயிர் வாழ அடிப்படை தேவைகளில் முதன்மை வகிப்பது காற்று தான். 

அதற்கான தீர்வு:

# எந்த ஒரு வீட்டில் மின்சாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் காற்ற்றோட்டமும் வெளிச்சமும் தடையின்றி கிடைக்கிறதோ அந்த வீடு தான் நாம் வாழ தகுதியான இடம் என்று அர்த்தம். ஆகவே அத்தகையதொரு வீட்டை குடியிருக்க தேர்ந்தெடுங்கள்.

# துர்நாற்றம் இருக்கும் இடத்தில் வீடு அமைந்திருந்தால் தாமதிக்காமல் வேறு இடத்திற்கு குடியிருப்பை மாற்றிவிடுங்கள்.

இத்தகைய எளிய தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் கொசுக்கடியின்றி காற்றோட்டத்துடன் கூடிய நிம்மதியான தூக்கத்தை பெறமுடியும். 

இதனால் சுவாசம் தொடர்பான வியாதிகளையும் (Wheezing, Asthma, Sinusitis,...) சிறுநீரகம் தொடர்பான வியாதிகளையும் (மூட்டுவலி, கர்ப்பை தொந்தரவுகள், Rheumatoid Arthritis, Kidney Failure, Kidney Stones,..) தடுக்கும் வாய்புகள் அதிகம்.
இந்த பதிவை புரிந்துகொள்ள நம் உடல் சக்தியை பெரும் முறையையும் அவற்றை எவ்வாறு பராமரிக்கின்றது என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்.

உடல் சக்தியை பெரும் வழிகளாவன:
  • நாம் உண்ணும் உணவின் மூலமும், 
  • சுவாசிக்கும் காற்றின் மூலமும், 
  • குடிக்கும் நீரின் மூலமும், 
  • எடுக்கும் ஓய்வின் மூலமும், 
  • உடல் உழைப்பின் மூலமும் 

பெறப்படும் சக்தியானது மூன்று பிரிவுகளாகப் பிரிந்து நம் உடலை பராமரிக்கிறது. அவை


1. இயக்க சக்தி (Functional Energy)

2. ஜீரண சக்தி (Digestive Energy)

3. நோய் எதிர்ப்பு சக்தி (Immunity)

பொதுவாக இந்த சக்திகள் நமது உடலில் சரிசமமாக இருக்கும். நம் உடலின் தேவைக்கேற்ப ஒரு சக்தியானது மற்றொரு சக்தியை தற்காலிகமாக பெற்றுக்கொள்ளும்.

உதாரணமாக நாம் தேவைக்கு அதிகமாக உணவை உட்கொண்டோமானால் அதை ஜீரணிக்க தேவையான சக்தி இல்லாத பட்சத்தில் நம் இயக்க சக்தியையும் எதிர்ப்பு சக்தியையும் நமது ஜீரண சக்தியானது தற்காலிகமாக பெற்றுக்கொள்ளும். 

எனவே யாரெல்லாம் உணவை உண்டவுடன் உறங்கி விடுகிறார்களோ அவர்கள் உண்ட உணவு முழுமையாக ஜீரணமாகிவிடும். நன்கு ஜீரணமான உணவை நம் உடல் வீணாக்காமல் தன்னுள் சேமித்து வைத்துக்கொள்ளும். அதனால் தான் நாம் உடல் பருமனாக இருப்பவர்களை பார்த்து "நல்லா திண்ணுட்டு திண்ணுட்டு தூங்குனா ஏன் குண்டாக மாட்டாய்" என்று நம்மை அறியாமலே வேடிக்கையாக கூறுவோம்.

இந்த செயல்முறை Process முடிவு பெற்ற பின் பழையபடி இயக்க சக்தியும் எதிர்ப்பு சக்தியும் இயல்புநிலைக்கு திரும்பி அதனதன் வேலையை செய்ய ஆரம்பித்துவிடும்.

Cancer புற்றுநோய் வியாபாரங்கள்

இன்றைய தினத்தில் Cancer புற்றுநோயை மையமாக வைத்து பல வித வியாபாரங்கள் நடைபெற்று வருகிறது. ஏன் பயப்படுகிறோம்? எதற்கு பயப்படுகிறோம்? என்று கூட தெரியாமல் பயப்படுகிறோம். இதில் மருத்துவர்களும் விதிவிலக்கல்ல. 

புற்றுநோய் விஷயத்தில் "பழி ஒரு இடம் பாவம் ஒரு இடம்" என்னும் வாக்கியம் பொருந்தும். 

கேட்கிறவன் கேனப்பயலா இருந்தா கேப்பையில நெல் விளையும்னு கூட சொல்லுவானுக.... 


கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்: 

# விவசாயதின்போது தெளிக்கும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயன உரங்கள் புற்றுநோயை உருவாக்குமென்றால் அதை உண்ணும் அனைவருக்கும் தானே புற்றுநோயின் பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்?

# Refined Oil ல் கலப்படமாக கலக்கப்படுகின்ற Liquid Paraffin என்னும் Petrolium Biproduct இருப்பதால் புற்றுநோய் உருவாகிறது என்றால் செக்கில் ஆட்டிய எண்ணை உபயோகப்படுத்தாத அனைவருக்குமே புற்றுநோயின் பாதிப்புகள் ஏற்பட்டிருக்க வேண்டும்?

# கலப்பட பால் குடிப்பதால் தான் புற்றுநோய் உருவாகிறது என்றால் அதை குடிக்கும் அனைவருக்குமே அல்லவா புற்றுநோயின் பாதிப்புகள் ஏற்பட்டிருக்க வேண்டும்?

# இன்னும் மைதா மாவு, பரோட்டா என்று புற்றுநோயின் காரணங்களாக பலவற்றை நாம் குறிப்பிடுகின்றோம். இவற்றை தினமும் உண்டு புற்றுநோயின் பாதிப்புகள் ஏதும் இல்லாமல் வாழும் மக்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்?

# வெள்ளை சர்கரை (ஜீனி) உபயோகித்தால் புற்றுநோய் ஏற்படும் என்றால் இன்று உலகில் உள்ள அனைவரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கவேண்டுமே? ஏனென்றால் நேரடியாகவோ மறைமுகமாகவோ நாம் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் வெள்ளை சர்க்கரை உட்கொண்டுதான் இருக்கிறோம்.

# வெள்ளையா இருக்கிற பால், அரிசி, ஜீனி போன்றவற்றை உபயோகித்தால் புற்றுநோய் வந்துவிடும் என பயமுறுத்துபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதைக் கேட்டுவிட்டு வெள்ளை பொருட்கள் உணவில் சேர்கிறதில்லை என பெருமையாக கூறுபவர்களும் உண்டு. 
இவற்றை நாம் சிந்தித்துபார்த்தாலே நம்மை சுற்றி பல வித வணிகங்களை புரிந்துகொள்ள முடியும். 

குறிப்பு: 

நான் ரசாயன மருந்துக்களை, Refined Oil, கலப்பட பால், ஜீனி, பால், மைதா மாவு போன்றவற்றை ஆதரிக்கவில்லை. இவை யாவும் புற்றுநோய் கட்டிகள் ஏற்பட நேரடிக் காரணம் இல்லை என்பதை உணர்த்தவே முயற்சிக்கிறேன். 

இந்த லட்சணத்தில் சில பிரபல புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்தில் ரத்த புற்றுநோய்க்கு இலவச மருந்து கொடுக்கிறார்கள் என்று காலம்காலமாக நம்மில் பலர் ஏன்? எதற்கு? என்று சிந்திக்காமல் SMS, Whatsapp, Facebook மூலமாகவும் விளம்பர படுத்துகிறோம். ஒரு மருந்து ஆராய்ச்சி நிலையில் இருக்கும்போது சோதனை செய்ய மனித எலிகள் தேவை. அதற்குதான் இவ்வாறு வதந்திகளை கிளப்புகின்றனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் நம் உடலில் ஏற்படும் தொந்தரவுகளின் அடிப்படை காரணம் (தவறான வாழ்க்கைமுறை) தெரியாமல் அவற்றை குணப்படுத்த முடியாது என நமது அரசாங்கம் சட்டம் கூட இயற்றியுள்ளது. மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940 (Drugs and Cosmetics Act, 1940) https://goo.gl/RG6zwU

அந்த பட்டியலில் புற்றுநோயும் மற்றும் இரத்தப் புற்றுநோயும் அடக்கம். இனியாவது சிந்தித்து செயல்படுங்கள் மக்களே.

Cancer புற்றுநோய் கட்டி எவ்வாறு ஏற்படுகிறது?

நம் உடலில் நீண்ட நாட்களாக தேங்கும் கழிவுகளே திட வடிவம் பெறுகிறது. இந்த கழிவை வெளியேற்ற நம் உடல் முயற்சி செய்யும்போது வலி ஏற்படும். இதை தான் பரிசோதனை செய்துவிட்டு Cancer புற்றுநோய் கட்டி என்று அழைக்கிறோம். எனவே கழிவின் தேக்கம் வியாதி கழிவின் வெளியேற்றம் குணம் என்பதை புரிந்துகொண்டு நம் உடலின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து ஆரோக்கியமாக வாழுங்கள்.


நம் உடலில் கழிவுகள் தேங்காமல் பார்த்துக்கொள்ளும் வழிமுறைகள்:

1. பசியை உணர்ந்து உணவருந்த வேண்டும். அந்த நேரத்தில் எந்த உணவு பிடிக்கிறதோ அல்லது எந்த உணவை உண்ண வேண்டும் என தோன்றுகிறதோ அதை மட்டும் உண்ணவேண்டும். பிடித்த உணவே நமக்கு மருந்தாகும். அதேநேரத்தில் நமக்கு பிடிக்காத உணவு கழிவாக மாறும்.

2. தாகம் எடுக்கும்போது மட்டும் தேவையான அளவு நீரை அருந்த வேண்டும். நீரை அன்னாக்க குடிக்க கூடாது. அப்படி குடித்தால் நமது தேவையை விட பலமடங்கு அருந்திவிடுவோம். அவை நீர் கழிவுகளாக மாறிவிடும்.

3. ஆங்கில மருந்துக்கள், பால் கலந்த டீ மற்றும் காப்பி, புகை பிடிப்பது, தண்ணியடிப்பது, பாக்கு போடுவது போன்றவை போதை வஸ்துக்களே. அவை நம் உடலின் பராமரிப்பு சக்தியை புத்துணர்ச்சிக்காக பயன்படுத்திவிடும். இதனால் நம் உடலில் தேங்கிய கழிவுகளை வெளியேற்ற போதிய பராமரிப்பு சக்தி இல்லாமல் போய்விடும். உடலை பலகீனப் படுத்தும். எலும்பு, கல்லீரல், சிறுநீரகம் போன்ற பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.

4. நாம் இருக்கும் இடத்தில் சுத்தமான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். பூட்டிய அறையில் இருக்கும்போதும், கொசுவிரட்டிகளை பயன்படுத்தும்போதும், ரசாயன ஊதுபத்திகளை பயன்படுத்தும் போதும், தலையை போர்த்திக்கொண்டு உறங்கும்போதும் நாம் அசுத்த காற்றை சுவாசிக்கும்போதும் கெட்ட காற்றை சுவாசிக்க நேரிடும். இவ்வாறு சுவாசிக்கும் காற்றானது கழிவுகளாக நமது நுரையீரலில் தேங்கிவிடும். இவற்றை தான் நம் உடல் தும்மல், சளி, இருமல், மூக்கின் நீர் மூலமும், கண்ணீர் மூலமும், காய்ச்சல் மூலமும் வெளியேற்றும். இதற்கு போதிய சக்தி இல்லாதபோது நம் உடல் நமக்கு தலைவலியை ஏற்படுத்தும் அப்போதுதான் நாம் ஓய்வு எடுப்போம் அப்போது நமது இயக்கசக்தியும் பராமரிப்பு சக்தியாக மாற்றப்படும்.  

5. நம் உடல் கேட்கும்போது ஓய்வையும் உறக்கத்தையும் கொடுக்கவேண்டும். நமக்கு அசதியாக இருக்கிறது தூக்கம் வருகிறது என்றால் நம் உடலின் பராமரிப்பு வேலை நடைபெறுகிறது அதற்கு போதிய சக்தி இல்லை எனவே நமது இயக்க சக்தி தேவைபடுகிறது என்று அர்த்தம். உதாரணமாக நம் உண்ட உணவு சரியாக ஜீரணம் ஆகவில்லை என்றால் அந்த உணவில் இருந்து கெட்ட கொழுப்பு (LDL) அதாவது சரியாக ஜீரணம் ஆகாத அடர்த்தி குறைவான கொழுப்பு உருவாகும். அவை நம் இரத்த குழாய்களில் படியும். அதை தான் மாரடைப்பு Heart Attack மற்றும் பக்கவாதம் Paralysis என கூறுகிறோம். இதை தவிர்க்கவே அசதி ஏற்படும். அப்போது ஓய்வெடுக்கும் பட்சத்தில் நம் உடலில் பித்த நீர் சுரந்து அந்த கெட்ட கொழுப்பை இலவசமாகவே கரைத்துவிடும்.

6. நம் உடலின் கழிவுகள் பலரூபங்களில் வெளியேறும். அவற்றில் ஒன்று தான் வியர்வை. பெரும்பாலான மக்கள் வியர்வை என்கிற ஒன்றை வரவிடுவதே இல்லை. எனது சொந்த அனுபவத்தில் இந்த வியர்வையை வைத்தே முதுகு பகுதிகளில் எற்படும் வலிகளை சரி செய்திருக்கிறேன். மின்விசிறியை அணைத்துவிட்டு கட்டிலில் படுத்தாலே நன்றாக வியர்வை வரும். அப்போது அந்த பகுதியில் தேங்கிய கழிவுகள் வியர்வையின் மூலம் வெளியேறிவிடும். அதன் பின் அங்கு வலி இருக்காது. காய்ச்சலின்போது மருந்துக்களின்றி ஓய்வு எடுக்கும்போது இந்த கழிவுகளை உடல் வெப்பத்தின் மூலம் வெளியேற்றிவிடும். எனவே வியர்வை மற்றும் காய்ச்சலை அனுமதியுங்கள். 


மக்கள் மத்தியில் கேன்சர் பற்றிய குழப்பத்தை போக்கி உண்மையான விழிப்புணர்வை ஏற்படுத்த "கேன்சர் என்பது நோயா? கட்டியா?" என்னும் தலைப்பில் தெளிவாக விளக்கியுள்ளேன்.


எந்த விஷயம் வணிக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் லாபத்தைத் தருமோ, அந்தக் கருத்துக்கள் மட்டுமே மக்களுக்கு பரப்பப்படுகிறது. அதனால், உண்மை என்பது எப்போதும் மறைமுகமாகத்தான் இருந்து கொண்டிருக்கும்.
இன்று பரவலாக மாரடைப்பு பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் யாரும் மாரடைப்பிற்கான உண்மையான காரணத்தை சுட்டிக்காட்டுவதில்லை. இதுவே நமக்கு மாரடைப்பை பற்றிய தெளிவு ஏற்படாமல் போனதற்கு முக்கிய காரணமாகிவிட்டது. 


முதலில் ஏன் மாரடைப்பு ஏற்படுகிறது என்பதற்கான பொதுவான காரணத்தை தெரிந்துகொள்ளுங்கள்.

காரணம் #1 

நம் உண்ணும் உணவு சரியாக ஜீரணம் ஆகாதபோது அதிலிருந்து உற்பத்தியாகும் கொழுப்பானது அடர்த்தி குறைவானதாக இருக்கும். அதை தான் LDL - Low Density Lipoprotein என்று குறிப்பிடுகிறார்கள். அவை நம் ரத்த குழாயில் எளிதில் படியக்கூடிய தன்மையுடையது. பொதுவாக இந்தக் கொழுப்புகள் தான் ரத்தக்குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும். 

எனவே தான் நாம் கொழுப்பு என்கிற வார்த்தையை கேட்டாலே பயப்படுகிறோம். இந்த பயத்தைத்தான் மருத்துவத்தை வியாபாரமாக செய்பவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். 

காரணம் #2 

நம் ரத்தக் குழாய்களில் தேங்கும் கழிவுகள் ரத்தத்துடன் வினைபுரிந்து உறைந்து ரத்தக் கட்டிகளாக மாறி ரத்தக்குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும். எனவே கொழுப்பு மட்டும்தான் மாரடைப்பை ஏற்படுத்தும் என்றில்லை ரத்தக்கட்டும் ஏற்படுத்தும். சாமர்த்தியமாக கொழுப்பை தவிர்க்கும் நாம் ரத்த உறைவை எவ்வாறு தவிர்க்கப்போகிறோம்?


முதலில் நம் உடம்பில் கொழுப்பின் அவசியத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்

நம் உடலின் அத்தியாவசிய தேவையான வைட்டமின்களில் தண்ணீரில் கரைபவை, கொழுப்பில் கரையக்கூடியவை என்று இரு வகை உண்டு. 

# இதில் வைட்டமின் A, D, E, K இவை கொழுப்பில் மட்டுமே கரையக்கூடியவை.

# வைட்டமின் C, B, ஃபோலிக் அமிலம், நியாசின், பிரிடாக்சின், கோபாலமின் எனப்படும் பி12 இவை தண்ணீரில் கரையக்கூடியதாகும்.

நம் உடலால் வைட்டமின்களை சேமித்து வைத்துக்கொள்ள முடியாது. எனவே தினமும் இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம் ஆகும். நாம் கொழுப்பை தவிர்ப்பதால் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் A, D, E, K போன்றவை கிடைக்காமல் போய்விடும்.


வைட்டமின் A யின் பயன்கள்:

இவை கண் பார்வைக்கும் எலும்புகளின் வளர்ச்சிக்கும் இன்றியமையாதது. உடலின் வெள்ளை அணுக்கள் உற்பத்திக்கும் உதவுவதால், உடலின் எதிர்ப்பு சக்திக்கும் அவசியம். அதேபோல மியுக்கஸ் (சளி) படலம் சேர்ந்திருப்பதற்கு இவ்வைட்டமின் அத்தியாவசியமானது. இத்தகைய திசுப்படலம் இல்லை எனில் நுண்ணுயிர் கிருமிகள் உள்ளே நுழைந்து மேலும் பல நோய்கள் ஏற்பட வழிவகுக்கும். 

வைட்டமின் A குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

வைட்டமின் D யின் பயன்கள்:

வைட்டமின் D யின் முக்கியமான உடலியல் செயல்பாடு, இரத்ததில் உள்ள கால்சியம் பாஸ்பரஸ் அளவை சீராக்கி வைப்பது மட்டுமே ஆகும். கால்சியம் அதிகரிக்க உடல் எலும்புகள் பற்கள் வலுவானதாக மாறுகின்றன. மேலும் இதர வைட்டமின்கள், என்சைம்கள், ஹார்மோன்கள் செயல் பட கிரியாஊக்கியாக கால்சியம் செயல் பட , எலும்புகளில் தனிமங்கள் சேர வைட்டமின் Dஅவசியம் ஆகும்.

வைட்டமின் `டி' இல்லாவிட்டால் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் `டி' போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும்.

வைட்டமின் E யின் பயன்கள்:

தசைகளை வலுவாக்க, எதிர்ப்பு சக்தியைக் கூட்ட, இனப்பெருக்கத்திற்கு, இளமையை தக்க வைக்க உதவுகிறது. உண்மையில் வைட்டமின் ஈ இல்லா விட்டால் வைட்டமின் Aயும் Cயும் உடலில் அழிந்துவிடும். இந்த இரு வைட்டமின்களையும் பாதுகாப்பதுதான் ஈ-யின் முக்கிய வேலை. 

வைட்டமின் ஈ குறைந்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை, சோம்பேறித்தனம், பலவீனம், கவனக்குறைவு ஆகிய பிரச்னைகள் ஏற்படும்.

வைட்டமின் K யின் பயன்கள்:

இவை தக்க சமயத்தில் ரத்தத்தை உறைய வைக்க.
வைட்டமின் `K' குறைந்தால் விபத்து மற்றும் பிரசவ நேரத்தில் அதிகப்படியான ரத்தம் வெளியேறக்கூடிய ஆபத்து ஏற்படும்.

மொத்தத்தில் நம் மீது கொழுப்பை பற்றிய பயத்தை ஏற்படுத்தினால் நாம் அவற்றை தவிர்த்துவிடுவோம். அப்படி தவிர்க்கும் பட்சத்தில் வைட்டமின் எ, டி, ஈ, கே கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். அப்படி சிக்கல் ஏற்பட்டால் கண்பார்வை, பற்கள், எலும்புகள், ரத்தம் உறைதல், குழந்தைப்பேறு போன்றவற்றிலும் பாதிப்புகள் ஏற்படும். நோய் எதிர்ப்புசக்தியும் வலுவிழந்து நுண்ணுயிர் கிருமிகளால் மேலும் பல நோய்கள் ஏற்பட வழிவகுக்கும்.


பின் எவ்வாறு தான் மாரடைப்பு வராமல் தடுப்பது?

முதலில் உடலின் அடிப்படையை புரிந்துக்கொள்ள வேண்டும். பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது முன்னோர்கள் எவ்வாறு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்கிற ரகசியத்தை அறிந்துகொண்டு நாமும் அவற்றை பின்பற்றினால் போதும். 

1. உணவின் செரிமானம்

நம் முன்னோர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் உடலுழைப்பு அதிகமாக இருந்தது. எனவே அவர்கள் பசியுடனே உணவை உண்ண நேர்ந்தது. அவ்வாறு உண்ணும் உணவானது எளிதில் ஜீரணம் ஆகி உடலுக்கு சக்தியை கொடுத்தது. ஆனால் இன்றோ உடலுழைப்பு குறைவாக இருப்பதால் நமக்கு பசி அதிகம் எடுப்பதில்லை. ஆனாலும் நாம் மருத்துவ வியாபாரிகளின் அறிவுரையை பின்பற்றி கடிகார நேரத்தை பின்பற்றி உணவுகளை உட்கொள்கிறோம். 

பொதுவாக பசியெடுக்கும்போது நம் உடலில் ஜீரண சுரப்பிகள் செரிமானத்திற்கு தேவையான Enzymesநொதிகள் மற்றும் Acidsஅமிலங்களை சுரந்து தயார் நிலையில் இருக்கும். அப்போது உட்கொள்ளும் உணவுகள் முழுமையாக ஜீரணமாகும். அத்தகைய சமயத்தில் தான் தனமான அடர்த்தி அதிகமான கொழுப்பு (HDL - High Density Lipoprotein) உருவாகும்.

அதே நேரத்தில் பசி எடுக்காமல் உண்ணும் உணவை ஜீரணிக்க நம் உடலில் போதிய Enzymesநொதிகள் மற்றும் Acidsஅமிலங்களை சுரந்திருக்காது. அப்போது நாம் உட்கொள்ளும் உணவானது சரியாக ஜீரணமாகாமல் அடர்த்தி குறைவான கொழுப்பை (LDL - Low Density Lipoprotein) உற்பத்திபண்ணும். இவை நம் ரத்த குழாயில் எளிதில் படியக்கூடிய தன்மையுடையது. பொதுவாக இந்தக் கொழுப்புகள் தான் ரத்தக்குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும். 

2. தூங்கும் நேரம்

பொதுவாக ஒரு பழக்கத்தை 21 நாட்கள் பின்பற்றினாலே அது நம் தினசரி பழக்கமாகிவிடும் என்பதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். உதாரணமாக 21 நாட்கள் தொடர்ந்து காலையில் 5 மணிக்கு அலாரம் வைத்து எழுந்தால் 22ஆம் நாள் முதல் அலாரம் இல்லாமலே முழிப்பு வந்துவிடும். அன்று முதல் காலையில் முழிப்பது ஒரு பழக்கமாகவே ஆகிவிடும்.

21 நாட்கள் பழக்கத்துக்கே இப்படியென்றால் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இரவில் விரைவாக தூங்கி பழகி இருக்கிறோம். அப்படி தூங்கும் பழக்கத்தால் நம் உடலானது தன் தினசரி பராமரிப்பு வேலையை எந்த தங்குதடையுமின்றி செய்துவந்தது. குறிப்பாக பல காலமாக இரவு 11 மணியளவில் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருக்கிறோம். அந்த நேரத்தில் நம் உடலில் பித்தநீர அதிகளவில் சுரந்து அதன் பராமரிப்பு வேலையில் ஈடுபடும். அந்த பித்தநீரானது நம் ரத்த குழாய்களில் சென்று அங்கு படிந்திருக்கும் LDL கொழுப்புக்களையும் ரத்தக்கட்டுகளையும் கரைத்துவிடும். 

அதே நேரத்தில் நாம் விழித்திருந்தோமானால் இந்த பித்தநீர் சுரப்பதில் சிக்கல் ஏற்படும். இன்று யாரெல்லாம் தாமதமாக தூங்க செல்கிறோமோ அவர்களுக்குக்கெல்லாம் மாரடைப்பு, பக்கவாதம், மூலம், உடலில் பல இடங்களில் வலிகள், கொழுப்புக் கட்டிகள், மன அழுத்தம், அதிகப்படியான கோபம், உடல் சோர்வு, அதிகப்படியான தூக்கம் போன்ற பலவித தொந்தரவுகள் ஏற்படுகின்றது.

3. பிடித்த உணவை உட்கொள்ளுதல்

நம் முன்னோர்கள் எப்போதும் உணவுகளை கண்டு அஞ்சியதில்லை. அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தனர். சரித்திரத்தை புரட்டிப்பார்த்தால் பஞ்ச காலங்களில் உணவு கிடைக்காமல் தான் இறந்திருக்கின்றனர். தங்கள் வருமானத்திற்கு ஏற்ப கிடைத்த உணவுகளை தான் உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். 

ஆனால் நாமோ நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ தொலைக்காட்சியில், பத்திரிக்கைகளில் நல்லது என்று விளம்பரப்படுத்தும் அனைத்தையும் வாங்கி உண்ணுகிறோம். உண்மையில் நமக்கு என்ன உணவு தேவையோ அதை நம் உடலே உணர்வுகள் மூலம் உணர்த்தும். உதாரணமாக குளிர்காலங்களில் காரமான உணவை சூடாக உண்ண விரும்புகிறோம். அதே நேரத்தில் வெயில் காலங்களில் குளிர்ச்சியான காரம் குறைவான உணவுகளை உண்ண விரும்புகிறோம்.

நமது உடலுக்கு தேவையான சுவையை உண்ணும்போது அதன் சுவை நன்றாக இருக்கும். நம் உடலுக்கு தேவையான அளவு உண்டதும் திகட்டுதல் உணர்வை ஏற்படுத்தும். தேவையற்றதை உண்டால் வெறுப்பாகவும், சுவயற்றதாகவும், குமட்டலயும் நம் உடலே ஏற்படுத்தி உண்ணுவதை தடை செய்யும்.

இதன் காரணமாகத்தான் சர்க்கரை நோய் என்று முத்திரை குத்தப்பட்டோர் தங்களுக்கு தேவைப்படும் இனிப்பு சுவையை விரும்புகிறார்கள். மாரடைப்பு உள்ளவர்கள் கொழுப்பு சத்து உள்ள உணவுகளை அதிகம் விரும்புகிறார்கள். அந்த உணவுகளே அவர்கள் உடலில் ஏற்பட்ட தொந்தரவிற்கான நிரந்தர தீர்வைத் தரும்.

நமக்கு பிடித்தமான உணவுகளை உண்ணும்போது அவையே மருந்துக்களாக மாறி நமது பிணிகளை களைகின்றது. 

பால் கலந்த டீ மற்றும் காப்பியை அருந்திவிட்டு பிடித்ததை தான் உண்கிறேன் என்று கூறக் கூடாது. டீ மற்றும் காப்பி போன்றவைகள் உணவுகள் அல்ல போதை வஸ்துக்கள். அதனால் தான் பால் அருந்துவதை சத்து என்று கூறும் நாம் டீ சத்து காப்பி சத்து என்று கூறுவதில்லை. இத்தகைய போதை பொருட்களை அருந்தினால் உடலுக்கு உற்சாகத்தை தரும் எனவே தான் இவற்றை உற்சாக பானம் என்று அழைக்கிறோம்.

எனவே பசிக்கும்போது உங்களுக்கு பிடித்த உணவுகளை (பழங்கள், காய்கறிகள், கீரைகள், தானியங்கள், இரசாயனம் கலக்காத உணவுகளை,...) உட்கொண்டு, இரவு சீக்கிரம் (9 மணிக்குள்) தூங்கச் சென்று மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை தவிர்த்து ஆரோக்கியமாக வாழுங்கள்.

மருத்துவம் என்றால் என்ன?

 நமது உடலில் ஏற்படும் தொந்தரவுகளுக்கான உண்மையான காரணத்தை ஆராயாமல் உடலில் ஏற்படும் அறிகுறிகளை வைத்து தாங்கள் கற்றுக்கொண்ட மருத்துவமுறை மூலம் சிகிச்சையளித்து  தற்காலிக நிவாரணத்தை கொடுப்பது மருத்துவம்.


ஆரோக்கியம் என்றால் என்ன?

 நமது உடலின் தேவைகளை உணர்வுகள் மூலம் வெளிப்படுத்தும். அதனை சரியாக புரிந்துகொண்டு நிறைவேற்றுவதே ஆரோக்கியம். நமது உடலில் ஏற்படும் பிரச்சினைக்கான உண்மையான காரணத்தை ஆராய்ந்து அதனை சரிசெய்து நிரந்தரமான தீர்வை பெறுவது ஆரோக்கியம்.

நாம் அன்பாக இருந்தால் செல்லப்பிராணிகளிடம் இருந்தும் சகமனிதர்களிடம் இருந்தும் ஆற்றலை பெறமுடியும்.

 # நீங்கள் ஆரோக்கியமாக வாழ விரும்பினால் இன்று முதல் உங்களுக்கு பிடித்தமான உணவுகளை மட்டும் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.# நாம் வசிக்கும் இடங்களில் சுத்தமான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கொசு தொந்தரவு இருக்கும் பட்சத்தில் ரசாயன கொசுவிரட்டிகள் பயன்படுத்தாமல் காற்று வந்துபோகக்கூடிய கொசு வலைகளை பயன்படுத்தி ஜன்னல்களை திறந்து வைத்து தூங்க வேண்டும். ஏனென்றால் நம் உடலில் ஏற்படும் பல இன்னல்களுக்கு அடிப்படை காரணமே அசுத்த காற்று நிறைந்த இடத்தில் வசிப்பது தான்.  

# பசியை உணர்ந்து, பசி ஏற்படும் போதுதான் சாப்பிடவேண்டும். பசி இல்லாத போது நேரத்தைப் பார்த்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

# பசிக்கிற அளவிற்குத் தகுந்தவாறு உண்ணுகிற உணவின் அளவை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரே மாதிரியான பசி எப்போதும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

# மனதிற்கு பிடித்த உணவுகளை மட்டும் ரசித்து ருசித்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். 

# டீ மற்றும் காப்பி போன்றவை உணவல்ல போதைப்பொருள் என்பதை நினைவில் கொண்டு அதனை தவிர்த்திடுங்கள். (இதுபற்றி இந்த https://youtu.be/TkvkJozBpQc முகவரியில்  “டீ காப்பி நமக்கு தேவைதானா?” என்னும் தலைப்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.)

# உடல் கேட்கும் ஓய்விற்கும் தூக்கத்திற்க்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம். இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரைக்கும் தூங்க வேண்டிய அவசியமான நேரமாகும். இந்த நேரத்தில் தான் உடலில் எதிர்ப்பு சக்தி நோயெதிர்ப்பு வேலையை முழு வீச்சில் மேற்கொள்கிறது.

# இரவில் தூங்குவதற்கு பதிலாக பகலில் தூங்கி கணக்கை சரிசெய்து கொள்ள முடியாது. ஏனென்றால் உடலின் நச்சுத்தன்மையை அகற்றும் வேலையும், ஒவ்வொரு உள்ளுறுப்பையும் சீரமைக்கும் வேலையும், ஒவ்வொரு உயிரணுவும் வளர்ச்சியடையும் வேலையும் இரவுகளில்தான் முழுமையாக நடைபெறுகின்றன. எனவே இரவு நேரத்தில் தூங்குவது ஆரோக்கியத்தின் அடிப்படைத் தேவை.
நாம் எப்பொழுது நிம்மதியாக வாழ்கிறோமோ அப்பொழுது நமது உடல் தன்னைத்தானே பராமரித்துக் கொள்வதில் எந்தவித தடையும் ஏற்படுவதில்லை. நாம் எப்பொழுது நிம்மதி இல்லாமல் வாழ்கிறோமோ அப்போது உடல் தன்னைத்தானே வருத்திக்கொள்கிறது. கவலை, மனவருத்தம், பயம், கோபம், விரக்தி போன்ற எண்ணங்கள் நமது உடலின் பராமரிப்பு சக்தியை தீர்த்துவிடுகிறது. 

எனவே நிம்மதியாக வாழ்வதற்காக நேரங்களை ஒதுக்குவோம். பலர் பணத்திற்காக புகழுக்காக, பதவிக்காக, கெளரவத்திற்க்காக தங்கள் நிம்மதியை இழக்கிறார்கள். ஆனால் நிம்மதிக்காக பணம், புகழ், அந்தஸ்து என்று எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஏனென்றால் நம்முடைய ஆரோக்கியம், நிம்மதி இதைவிடப் பெரிதல்லவா? 

# அன்பான பேச்சுக்களை கேட்கும்போதும், 

# பிடித்தமான உணவுகளை உண்ணும்போதும், 

# பிடித்தமான இசை மற்றும் பாடல்களை கேட்கும்போதும்,  

# பிடித்தமான நகைச்சுவை மற்றும் திரைப்படங்களை பார்க்கும்போதும்,

# பிடித்தமான இடங்களுக்கு சுற்றுலா செல்லும்போதும், 

# பிடித்தமானவர்களிடம் நேரத்தை செலவிடும்போதும்,

# பிடித்தமான பொழுதுபோக்கில் ஈடுபடும்போதும், 

# நல்லதை பார்க்கும்போது, கேட்கும்போதும், சிந்திக்கும்போதும்,

# அடுத்தவர்களுக்கு உதவும்போதும், 

# நேர்மையாக வாழும்போதும்,

# சுயநலமில்லாத வாழ்க்கை வாழும்போதும்,

... நமது மனது சந்தோஷப்படுகிறது. அவ்வாறு மகிழ்ச்சியாக இருந்தால் நமது உடலின் பராமரிப்பு வேலையும் தடையில்லாமல் நடைபெறும் மேலும் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

 நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!


ஆரோக்கியமாக வாழ விரும்பினால் மருத்துவத்தை தேடுவதை விட்டுவிட்டு ஆரோக்கியத்தை தேடுங்கள். இன்று முதல் உங்களுக்கு பிடித்தமான உணவுகளை மட்டும் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். 

நம் தவறான வாழ்க்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தரமான தீர்வை தர இயலாது. மருந்துக்களையோ மருத்துவரையோ தேடுவதற்கு பதில் வியாதிக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்வதே சிறப்பானதாகும்.

நல்லதை சொல்ல வேண்டியது எனது கடமை. அதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் உரிமை. என்னிடம் மருந்துக்களை எதிர்பார்க்காதீர்கள் ஆரோக்கியத்தை மட்டும் எதிர்பாருங்கள். ஆரோக்கியமாக வாழ வழிகாட்டி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காகவே இந்த முகநூல் பக்கம் மற்றும் குழுவினை உருவாக்கியுள்ளேன்.


மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:

http://reghahealthcare.blogspot.in

https://www.facebook.com/ReghaHealthCare

https://www.facebook.com/groups/reghahealthcare

https://www.facebook.com/groups/811220052306876


முக்கிய குறிப்பு:

இரவு 9 மணி முதல் காலை வரை தூக்கம் தடைபடாமல் இருக்க எனது தொடர்பு எண்களை Silent Mode இற்கு மாற்றிவிடுவேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அந்த நேரத்தில் நீங்களும் தூங்கச் சென்று உங்களது ஆரோக்கியத்தையும் உறுதிசெய்து கொள்ளுங்கள்.

ஆங்கில மருந்துக்கள், டீ, காப்பி, கஞ்சா உட்கொள்ளுதல், புகை பிடித்தல், மது அருந்துதல், புகையிலை, பாக்கு, மூக்குப்பொடி போன்ற போதை பழக்கத்தை விடுவதற்கு தயாராக உள்ளவர்கள் என்னை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம். 

மேலும் பொறுமையாக இருப்பவர்கள், நேர்மையாக வாழ்பவர்கள், அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாதவர்கள் மற்றும் மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் மட்டும் இந்த எண்கள் +919840980224, +919750956398 மற்றும் vineeth3d@gmail.com க்கு தொடர்பு கொள்ளவும்.

சுயநலமாக சிந்திப்போர் மற்றும் மருந்துக்களால் மட்டுமே வியாதிகளை குணப்படுத்த முடியும் என எண்ணுபவர்கள் என்னை தொடர்புகொண்டு உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நடக்கும் என்கிற உண்மையை உணர்ந்த காரணத்தால் தான் நல்ல விஷயங்களை அதிகம் பகிர்கிறேன். எனவே நல்லதே கேளுங்கள் நல்லதே நினையுங்கள் நல்லதே பேசுங்கள் நல்லதே செய்யுங்கள் நல்லதே நடக்கும். அதற்கு எனது வாழ்கையே சாட்சி. 

 "நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?"  Youtube Channel முகவரி
 "நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!"  Youtube Channel முகவரி

 "நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" Telegram குழுவின் முகவரி
 "நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்" Telegram குழுவின் முகவரி


No comments:

Post a Comment