18. ஆகாயம் / மரம் என்னும் பஞ்சபூதம் மூலம் நோயறிதல்!




கோபம், எரிச்சல், மன அழுத்தம், நரம்பு மண்டலம் மற்றும் கல்லீரலில் ஏற்படும் பிரச்சினைகள், பசியின்மை, பலகீனமான செரிமானம், தூக்கமின்மை, அதிக தூக்கம், பித்தப்பை கல், அதிக உடல் எடை, கண்களில் ஏற்படும் பிரச்சினைகள் பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணமே ஆகாயம் / மரம் என்னும் பஞ்சபூதத்தின் பலகீனம்தான்.


மருத்துவ பரிசோதனைகள் நமது உடலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிப்பதில்லை என்கிற உண்மையை கூட பலர் தெரிந்துவைத்திருக்கவில்லை என்பது ஒரு வருத்தமான செய்தி தான். இத்தகைய பரிசோதனைகள் மருந்து வியாபாரத்தை தான் ஊக்குவிக்கிறதே தவிர ஆரோக்கியத்தை அல்ல.


மேலும் காப்பி டீ போன்ற உற்சாக பானங்களை அருந்துவதால் ஆகாயம் / மரம், நீர் மற்றும் நிலம் போன்ற பஞ்சபூதங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை இந்த பதிவில் விளக்கியுள்ளேன். இந்த வீடியோ பதிவு உங்களுக்கு ஒரு தெளிவைத்தரும் என நம்புகிறேன்.


மருத்துவம் என்றால் என்ன?

நமது உடலில் ஏற்படும் தொந்தரவுகளுக்கான உண்மையான காரணத்தை ஆராயாமல் உடலில் ஏற்படும் அறிகுறிகளை வைத்து தாங்கள் கற்றுக்கொண்ட மருத்துவமுறை மூலம் சிகிச்சையளித்து  தற்காலிக நிவாரணத்தை கொடுப்பது மருத்துவம்.

ஆரோக்கியம் என்றால் என்ன?

நமது உடலின் தேவைகளை உணர்வுகள் மூலம் வெளிப்படுத்தும். அதனை சரியாக புரிந்துகொண்டு நிறைவேற்றுவதே ஆரோக்கியம். நமது உடலில் ஏற்படும் பிரச்சினைக்கான உண்மையான காரணத்தை ஆராய்ந்து அதனை சரிசெய்து நிரந்தரமான தீர்வை பெறுவது ஆரோக்கியம்.


 # நீங்கள் ஆரோக்கியமாக வாழ விரும்பினால் இன்று முதல் உங்களுக்கு பிடித்தமான உணவுகளை மட்டும் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.




# நாம் வசிக்கும் இடங்களில் சுத்தமான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கொசு தொந்தரவு இருக்கும் பட்சத்தில் ரசாயன கொசுவிரட்டிகள் பயன்படுத்தாமல் காற்று வந்துபோகக்கூடிய கொசு வலைகளை பயன்படுத்தி ஜன்னல்களை திறந்து வைத்து தூங்க வேண்டும். ஏனென்றால் நம் உடலில் ஏற்படும் பல இன்னல்களுக்கு அடிப்படை காரணமே அசுத்த காற்று நிறைந்த இடத்தில் வசிப்பது தான்.  

# பசியை உணர்ந்து, பசி ஏற்படும் போதுதான் சாப்பிடவேண்டும். பசி இல்லாத போது நேரத்தைப் பார்த்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

# பசிக்கிற அளவிற்குத் தகுந்தவாறு உண்ணுகிற உணவின் அளவை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரே மாதிரியான பசி எப்போதும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

# மனதிற்கு பிடித்த உணவுகளை மட்டும் ரசித்து ருசித்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். 

# டீ மற்றும் காப்பி போன்றவை உணவல்ல போதைப்பொருள் என்பதை நினைவில் கொண்டு அதனை தவிர்த்திடுங்கள். (இதுபற்றி இந்த https://youtu.be/TkvkJozBpQc முகவரியில்  “டீ காப்பி நமக்கு தேவைதானா?” என்னும் தலைப்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.)

# உடல் கேட்கும் ஓய்விற்கும் தூக்கத்திற்க்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம். இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரைக்கும் தூங்க வேண்டிய அவசியமான நேரமாகும். இந்த நேரத்தில் தான் உடலில் எதிர்ப்பு சக்தி நோயெதிர்ப்பு வேலையை முழு வீச்சில் மேற்கொள்கிறது.

# இரவில் தூங்குவதற்கு பதிலாக பகலில் தூங்கி கணக்கை சரிசெய்து கொள்ள முடியாது. ஏனென்றால் உடலின் நச்சுத்தன்மையை அகற்றும் வேலையும், ஒவ்வொரு உள்ளுறுப்பையும் சீரமைக்கும் வேலையும், ஒவ்வொரு உயிரணுவும் வளர்ச்சியடையும் வேலையும் இரவுகளில்தான் முழுமையாக நடைபெறுகின்றன. எனவே இரவு நேரத்தில் தூங்குவது ஆரோக்கியத்தின் அடிப்படைத் தேவை.



நாம் எப்பொழுது நிம்மதியாக வாழ்கிறோமோ அப்பொழுது நமது உடல் தன்னைத்தானே பராமரித்துக் கொள்வதில் எந்தவித தடையும் ஏற்படுவதில்லை. நாம் எப்பொழுது நிம்மதி இல்லாமல் வாழ்கிறோமோ அப்போது உடல் தன்னைத்தானே வருத்திக்கொள்கிறது. கவலை, மனவருத்தம், பயம், கோபம், விரக்தி போன்ற எண்ணங்கள் நமது உடலின் பராமரிப்பு சக்தியை தீர்த்துவிடுகிறது. 

எனவே நிம்மதியாக வாழ்வதற்காக நேரங்களை ஒதுக்குவோம். பலர் பணத்திற்காக புகழுக்காக, பதவிக்காக, கெளரவத்திற்க்காக தங்கள் நிம்மதியை இழக்கிறார்கள். ஆனால் நிம்மதிக்காக பணம், புகழ், அந்தஸ்து என்று எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஏனென்றால் நம்முடைய ஆரோக்கியம், நிம்மதி இதைவிடப் பெரிதல்லவா? 

# அன்பான பேச்சுக்களை கேட்கும்போதும், 

# பிடித்தமான உணவுகளை உண்ணும்போதும், 

# பிடித்தமான இசை மற்றும் பாடல்களை கேட்கும்போதும்,  

# பிடித்தமான நகைச்சுவை மற்றும் திரைப்படங்களை பார்க்கும்போதும்,

# பிடித்தமான இடங்களுக்கு சுற்றுலா செல்லும்போதும், 

# பிடித்தமானவர்களிடம் நேரத்தை செலவிடும்போதும்,

# பிடித்தமான பொழுதுபோக்கில் ஈடுபடும்போதும், 

# நல்லதை பார்க்கும்போது, கேட்கும்போதும், சிந்திக்கும்போதும்,

# அடுத்தவர்களுக்கு உதவும்போதும், 

# நேர்மையாக வாழும்போதும்,

# சுயநலமில்லாத வாழ்க்கை வாழும்போதும்,

... நமது மனது சந்தோஷப்படுகிறது. அவ்வாறு மகிழ்ச்சியாக இருந்தால் நமது உடலின் பராமரிப்பு வேலையும் தடையில்லாமல் நடைபெறும் மேலும் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.


 நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!


ஆரோக்கியமாக வாழ விரும்பினால் மருத்துவத்தை தேடுவதை விட்டுவிட்டு ஆரோக்கியத்தை தேடுங்கள். இன்று முதல் உங்களுக்கு பிடித்தமான உணவுகளை மட்டும் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். 

நம் தவறான வாழ்க்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தரமான தீர்வை தர இயலாது. மருந்துக்களையோ மருத்துவரையோ தேடுவதற்கு பதில் வியாதிக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்வதே சிறப்பானதாகும்.

நல்லதை சொல்ல வேண்டியது எனது கடமை. அதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் உரிமை. என்னிடம் மருந்துக்களை எதிர்பார்க்காதீர்கள் ஆரோக்கியத்தை மட்டும் எதிர்பாருங்கள். ஆரோக்கியமாக வாழ வழிகாட்டி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காகவே இந்த முகநூல் பக்கம் மற்றும் குழுவினை உருவாக்கியுள்ளேன்.


மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:

http://reghahealthcare.blogspot.in

https://www.facebook.com/ReghaHealthCare

https://www.facebook.com/groups/reghahealthcare

https://www.facebook.com/groups/811220052306876


முக்கிய குறிப்பு:

இரவு 9 மணி முதல் காலை வரை தூக்கம் தடைபடாமல் இருக்க எனது தொடர்பு எண்களை Silent Mode இற்கு மாற்றிவிடுவேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அந்த நேரத்தில் நீங்களும் தூங்கச் சென்று உங்களது ஆரோக்கியத்தையும் உறுதிசெய்து கொள்ளுங்கள்.

ஆங்கில மருந்துக்கள், டீ, காப்பி, கஞ்சா உட்கொள்ளுதல், புகை பிடித்தல், மது அருந்துதல், புகையிலை, பாக்கு, மூக்குப்பொடி போன்ற போதை பழக்கத்தை விடுவதற்கு தயாராக உள்ளவர்கள் என்னை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம். 

மேலும் பொறுமையாக இருப்பவர்கள், நேர்மையாக வாழ்பவர்கள், அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாதவர்கள் மற்றும் மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் மட்டும் இந்த எண்கள் +919840980224, +919750956398 மற்றும் vineeth3d@gmail.com க்கு தொடர்பு கொள்ளவும்.

சுயநலமாக சிந்திப்போர் மற்றும் மருந்துக்களால் மட்டுமே வியாதிகளை குணப்படுத்த முடியும் என எண்ணுபவர்கள் என்னை தொடர்புகொண்டு உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நடக்கும் என்கிற உண்மையை உணர்ந்த காரணத்தால் தான் நல்ல விஷயங்களை அதிகம் பகிர்கிறேன். எனவே நல்லதே கேளுங்கள் நல்லதே நினையுங்கள் நல்லதே பேசுங்கள் நல்லதே செய்யுங்கள் நல்லதே நடக்கும். அதற்கு எனது வாழ்கையே சாட்சி. 

 "நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?"  Youtube Channel முகவரி
 "நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!"  Youtube Channel முகவரி

 "நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" Telegram குழுவின் முகவரி
 "நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்" Telegram குழுவின் முகவரி

8 comments:

  1. 6639E5EED4TimothyAA42D65D62December 29, 2024 at 9:54 PM

    C15D6A07B9
    takipçi fiyat

    ReplyDelete
  2. BackUp Maker Professional Crack backup precise file preparations or else several power account moreover folder during the wildest speed. It similarly blaze restore your fashioned spinal in exclusive click.
    BackUp Maker Professional Crack

    ReplyDelete
  3. OpenVPN Crack appears to be influential procedure software that permits you to like a improved webpage propose. The whole thing now proposals a diversity of practical confidential system substitute to defend individual consumer data.
    OpenVPN Crack

    ReplyDelete