டெங்கு காய்ச்சலை கண்டு அஞ்சத் தேவையில்லை!

இந்த பதிவை நண்பர்களிடம் Pdf file ஆக பகிர்ந்துகொள்ள Printable Format https://goo.gl/8F57eg

டெங்கு காய்ச்சலை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் காய்ச்சல் என்றால் என்ன என்று பார்ப்போம்.
மனித உடல் பல லட்சம் கோடிக்கணக்கான செல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. 37.2 Trillion செல்கள் என சொல்லப்படுகிறது. ஒவ்வொறு செல்லும் உணவு அருந்தி, சக்தியை கொடுத்து, கழிவுகளை வெளியேற்றுகிறது.
இது தொடர்ந்து நடைபெற்று வரும், நமது தவறான உணவு மற்றும் வாழ்கைமுறை காரணமாக செல்களின் கழிவுகளை வெளியேற்றும் பணியில் சுணக்கம் ஏற்படுகிறது. எனவே கழிவுகள் ஆங்காங்கே தேங்கிவிடுகிறது.
சரி இப்பொழுது குழந்தைகளின் பால் புட்டியை எந்த தண்ணீரில் கழுவுவீர்கள்? சுடு தண்ணீரில் தானே. ஏன்? அழுக்குகள் நீங்கும், கிருமிகள் அழியும்.
சரி சிலர் தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கிறார்கள். ஏன்? கிருமிகள் அழியும். கொதிக்கவைத்து குடிப்பது தவறு தான் அதனுள் இப்பொழுது செல்ல வேண்டாம்.
தண்ணீரை சூடு செய்யும் போது அதில் சில பொருட்கள் நகர்வதை நீங்கள் பார்க்கலாம். சூடு ஆகும் போது நீரின் Molecules அனைத்தும் நகரத்துவங்கும்.
உணவுப் பொருட்களை சூடு செய்யும் போது அதில் இருந்து மணம் வெளிப்படுவதை நீங்கள் அறிவீர்கள். உணவில் உள்ள மணத்தை சூடு நகர்த்தி வெளி கொணர்ந்தது.
நமது நாட்டில் உள்ள பூக்களுக்கு மணம் உண்டு, காரணம் வெப்ப மண்டல நாடு. சூடு பூவின் மணத்தை நகர்த்தி வெளி கொணர்ந்தது.
ஊட்டி போன்ற குளிர் பிரதேச பகுதிகளில் உள்ள பூக்களுக்கு மணம் உண்டா? என நீங்களே பரிசோதித்து பாருங்கள். பூ அழகாக இருக்கும் மணம் இருக்காது.
வயதான முதியவர் இறந்துவிட்டார் கையை தொட்டு பார்த்தால் ஐஸ் போல் உள்ளது. அசைவுகள் இல்லை. உயிருடன் இருந்த போது சூடு இருந்தது, அசைவு இருந்தது.
சுடாக இல்லாவிட்டால் இரத்தத்தில் வேகம் இல்லை என்ற பாடல் வரிகளையும் நினைவுப்படுத்துகிறேன். இது போல் இன்னும் பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
இதில் இருந்து என்ன தெரிகிறது. சூடு ஒரு பொருளை நகர்த்தும் என தெரிகிறது. சூடு இருந்தால் Movement இருக்கும் என தெரிகிறது. இது இயற்கை விதி. சூடு தான் சக்தி (Energy).
உடல் தனக்கு தேவையான பொருளை ஒரு போதும் வெளியேற்றாது. அதேப்போல் தனக்கு தேவை இல்லாத பொருளையும் உள்ளே வைத்திருக்காது.
இப்பொழுது நமது உடலில் கழிவுகள் தேங்கி உள்ளனவா. அதற்கு வருவோம். ஒரு பொருளை நகர்த்த என்ன வேண்டும்? வெப்பம்.
சரி இப்பொழுது உடலில் கழிவுகள் அதிகம் தேங்கிவிட்டது. உடல் என்ன செய்யும்? நீ எக்கேடோ கெட்டு நாசமாய் போ என விட்டுவிடுமா? அல்ல.
உடல் நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள மாவுச்சத்தை (Glucose) அதிகம் எரித்து வெப்பத்தை உருவாக்கும். இந்த வெப்பம் என்ன செய்யும்?
தேங்கி உள்ள கழிவுகளை நகர்த்தி நகர்த்தி இரத்த ஓட்டத்தில் கலக்கச்செய்யும். பின் இந்த கழிவுகள் அனைத்தும் தரம் பிரிக்கப்படும்.
எந்த எந்த கழிவுகளை எந்த வழியாக வெளியேற்றினால் உடலுக்கு தீங்கு நேராது என்று உடல் முடிவு செய்து அதன் வழியாக கழிவுகளை வெளியேற்றிவிடும்.

  •   மூக்கின் வழி சளியாகவும்.
  •   பொருங்குடலின் வழி திடக்கழிவாகவும்.
  •   தோலின் வழி வியர்வையாகவும்.
  •    சிறுநீர்பை வழி சிறுநீராகவும்.

உடல் பாதுகாப்பான முறையில் கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றி விடுகிறது.
இதைத்தான்னய்யா காய்ச்சல் என்கிறோம். நமது தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறை காரணமாக தேங்கிய கழிவுகளை உடல் வெப்பத்தை உருவாக்கி வெளியேற்றும் செயலே காய்ச்சல்.
உலகிலேயே மிகச்சிறந்த நண்பன் யார் தெரியுமா? உங்கள் உடல் தான். நீங்கள் அவனுக்கு கோடி முறை கெடுதல் செய்தாலும் கோடியை தாண்டி உங்களுக்கு நல்லது மட்டுமே செய்வானய்யா. கெடுதலை நினைக்க கூட அவனுக்கு தெரியாது.
அப்பேர்பட்ட இயற்கையின் அற்புதப்படைப்பான, இந்த உடல் வெப்பத்தை உண்டாக்கி கழிவுகளை வெளியேற்றும் போது பலர் என்ன செய்கிறார்கள்?
ஊசி போட்டு மாத்திரை எடுக்கிறார்கள்.
இந்த மருந்து என்ன செய்கிறது?
கழிவுகளை வெளியேற்ற உடல் சிரமப்பட்டு உருவாக்கிய வெப்பத்தை குறைத்து விடுகிறது.
முதல் முறையாக நீங்கள் செய்த கெடுதலால் உங்கள் நண்பனான உடல் கலங்குகிறான். அவன் தான் உங்கள் நண்பன் ஆயிற்றே விடுவானா. மீண்டும் வெப்பத்தை உருவாக்க முயற்சிப்பான். தொடர்ந்து நீங்கள் ஆங்கில சிகிச்சை எடுத்து. வெப்பத்தை குறைத்து விடுவீர்கள்.
வெப்பம் குறைந்ததால் Movement இருக்காது. Movement இல்லாததால் கழிவுகள் வெளியேறாமல் உடலிலேயே தங்கிவிடுகிறது. மீண்டும் மீண்டும் காய்ச்சலை ஏற்படுத்தி கழிவுகளை வெளியேற்ற முயற்சிப்பான்.
நீங்களும் தொடர்ந்து சிகிச்சை எடுத்து கழிவுகளை அடக்கி வைத்துவிடுவீர்கள். இப்படி தொடர்ந்து பல வருடங்களாக தேங்கிய கழிவுகள் பல்வேறு நோய்களாக உருவெடுக்கிறது.
அமெரிக்கா ஐரோப்பா போன்ற பல தேசங்களில் காய்சலுக்கு மருத்துவர்கள் வைத்தியம் பார்பதில்லை என உங்களுக்கு தெரியுமா?
காய்சலுக்காக வைத்தியம் பார்க்க சென்றால் திட்டி அனுப்பி ஓய்வெடுக்கச் சொல்வார்கள்.
இங்கு உள்ள நிலமையோ தலைகீழ் சொல்லவே வேண்டாம். ரோட்டில் நடந்து செல்பவனை வழி மறித்து ஊசி போடும் நாடு இது.
உடல் தன்னுள் தேங்கிய கழிவுகளை வெளியேற்றும் செயலே காய்ச்சல். இந்த உடல் சுத்திகரிப்பு வேலை நடக்கும் போது அமைதியாக ஓய்வு எடுத்தாலே சில நாட்களில் காய்ச்சல் தானாக சரியாகும்.
ஒரு இடத்தில் குப்பை உள்ளது, அங்கு என்ன இருக்கும்?
பூச்சி, புழுக்கள்.
நாய் அடிபட்டு ரோட்டில் இறந்துள்ளது. அதன் உடலில் என்ன இருக்கும்?
புழுக்கள்.
தானியங்களை காற்று கூட புகாத புட்டியில் அடைத்து வைத்துவிட்டோம். சிறிது நாள் கழித்து திறந்து பார்த்தால் அதில் என்ன இருக்கும்?
வண்டுகள், பூச்சிகள், புழுக்கள்.
குப்பை மற்றும் நாய் மீது இருந்த புழு பூச்சிகள் சிறிது நேரத்திற்கு முன்பு அங்கு இல்லை.
இந்த புழு பூச்சிகள் எங்கிருந்து வந்தது?
பக்கத்து ஊரில் இருந்து பேருந்தில் ஏறி வந்ததா?
காற்று கூட புகாத புட்டியில் அடைத்து வைக்கப்பட்ட தானியத்தில் புழு, வண்டுகள் எங்கிருந்து வந்தது?
சிந்தியுங்கள்.
"இயற்கை விதி என்னவென்றால் எங்கு உணவு உள்ளதோ,
அங்கு உயிர்கள் படைக்கப்படும்."
புழு, பூச்சி, வண்டு எல்லாம் எங்கிருந்தும் வரவில்லை. அந்த இடத்திலேயே உற்பத்தி ஆனது என தெரிந்து கொண்டோம்.
ஒரு ஏக்கரில் வொண்டைக்காய் செடி பயிரிடப்பட்டுள்ளது. ஒரு செடியில் அதை உண்ணும் பூச்சி வந்து விட்டது. அந்த பூச்சி பக்கத்து செடியில் உட்கார்ந்து இது நமது உணவுதானா என முகர்ந்து பார்க்கும்.
அடுத்தடுத்த செடியில் பரிசோதித்து. தனது உணவு தான் நிறைய உள்ளது என தெரிந்துகொண்ட உடனே தனது இனத்தை வேகமாக பெருக்க ஆரப்பித்துவிடும்.
 ஒவ்வொறு உயிரினமும் தன்னை இப்பூவுலகில் நிலை நிறுத்திக்கொள்ள இறைவன் கொடுத்த அறிவு இது.
மனிதனும் அப்படித்தானே, எனது பொருளாதாரத்திற்கு இரண்டு குழந்தைகள் போதும் என நிறுத்திக்கொள்கிறானே.
அடுத்த இயற்கை விதி உணவின் அளவை பொருத்து உயிரினங்கள் பெருகும்.

இயற்கை விதி இரண்டு !
    1. உணவு உள்ள இடத்தில் உயிரினங்கள் படைக்கப்படும்.
    2. உணவின் அளவிற்கு ஏற்ப உயிரினங்கள் பெருகும்.

சரி, புழு பூச்சிகளுக்கு, அந்த குப்பை என்னவாகிறது?
உணவு.
பூழுவிற்கு, நாய் என்னவாகிறது?
உணவு.
வண்டிற்கு, தானியம் என்னவாகிறது?
உணவு.
இந்த இயற்கை விதிகளை அப்படியே உடலுக்குள் பொருத்துங்கள்.
நமது தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறை காரணமாக உடலில் கழிவுகள் தேங்குகிறது. இந்த கழிவுகள் கிருமிகள் என சொல்லப்படும் நுண்ணுயிர்களுக்கு உணவாகிறது.
"கழிவு, கிருமிகளுக்கு என்னவாகிறது?
உணவு."
கிருமிகளின் உணவாகிய கழிவுகளை நீங்கள் சேர்த்து வைத்ததால் அதை உண்டு அழிக்க கிருமிகள் அங்கு இயற்கையால் படைக்கப்பட்டு விட்டது. இப்பொழுது உணவு (கழிவு) உள்ள இடத்தில் உயிர்கள் (கிருமிகள்) படைக்கப்பட்டு விட்டதா?
ஆம்.
எப்படி வெண்டை செடியில் உள்ள பூச்சி, அதிக உணவை கண்டு தனது இனத்தை பெருக்கியதோ அதேப்போல், நுண்ணுயிர்கள் அதிக உணவை (கழிவு) கண்டு தனது இனத்தை பெருக்கும்.
இப்பொழுது நீங்கள் இரத்த பரிசோதனை செய்து பார்த்தால் கிருமிகளின் எண்ணிக்கை அதிகமாக காட்டும். அதுதான் அதிக உணவை கண்டு தனது இனத்தை பெருக்கிவிட்டதே.
உணவு இல்லை என்றால் மனிதன் என்ன ஆவான்?
இறந்து விடுவான் அல்லவா, அது போல் தான் உணவுகளாகிய கழிவுகள் தீர்ந்த பின் கிருமிகள் அழிந்துவிடும்.
இதை புரிந்துகொள்ளாமல் தான் காய்ச்சலுக்கு டெங்கு காய்ச்சல், சிக்கன் குனியா காய்ச்சல், பன்றிக்காய்ச்சல்,... என்று பெயர் சூட்டி நம்மை பயமுறுத்துகிறது இன்றைய மருத்துவ உலகம்.
இயற்கை விதி எப்படி உள்ளும் வெளியும் பொருந்துகிறது என்று பாருங்கள்.
இதை தான்
அண்டத்தில் உள்ளதே பிண்டம்
பிண்டத்தில் உள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்று தான்
அறிந்து தான் பார்க்கும் போதே.
என்று சித்தர் பாடல் நமக்கு உணர்த்துகிறது.
அனைத்து குற்றமும் நம்முள்ளே வைத்துக்கொண்டு அப்பாவி கொசுவின் மீது பழி போடுகிறோமே. கொசுவை வைத்தும், கண்ணுக்கு தெரியாத கிருமியை வைத்தும் எத்தனை எந்தனை வியாபாரங்கள்.
இவர்களின் நோக்கம். நாங்கள் சொல்வதை சாப்பிடு, நாங்கள் சொல்வதை படி, எங்களுக்கு வேலை செய், எங்கள் பொருட்களை பயன்படுத்து, எங்கள் மருத்துவம் பார், எங்களுக்கு சம்பாதித்து கொடுத்து விரைவில் செத்துப்போ என்பதே.
இந்த உலக வல்லாதிக்க தீய சக்தியை அழிக்க நன்மக்கள் நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.
இவர்களின் கொட்டத்தை அடக்க ஒரே வழி, நமது முன்னோர்கள் நமக்கு அழகாய் வடிவமைத்துக் கொடுத்த அன்பும், அறமும், பன்பும் செரிந்த தற்சார்பு வாழ்க்கை முறைக்கு திருப்புவது மட்டுமே.
கழிவுகளை உடலில் தேக்கியது யார் குற்றம்? காய்ச்சல் வருவது வெளியில் உள்ள கொசுவால் அல்ல உங்கள் உடலில் உள்ள குப்பையால் தான் என இப்பொழுது தெரிகிறதா? புரிகிறதா?
உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா யாருக்கு நோய் எதிர்பு சக்தி அதிகமாக உள்ளதோ அவர்களுக்குத்தான் காய்ச்சல் வரும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் காய்ச்சல் வர வாய்ப்பே இல்லை.
கொசுக்களினாலோ, கிருமிகளினாலோ நோய் வருவது உண்மையாக இருந்தால் என்றைக்கோ மனித இனம் உரு தெரியாமல் அழிந்து போயிருக்கும்.
உண்மை என்னவென்றால் கிருமிகள், பல்லுயிர்கள் உயிருடன் இருந்தால் தான் நாம் இந்த உலகில் உயிருடன் வாழ முடியும்.
    ·       பால் தயிராவது கிருமியால் தான்.
    ·       மாவு புளிப்பது கிருமியால் தான்.
    ·       சோறு நீராகாரமாவது கிருமியால் தான்.
    ·       பல பண்நாட்டு உணவுகள் பக்குவமடைவது கிருமியால் தான்.
    ·       குப்பை மட்குவது கிருமியால் தான்.
    ·       மண் வளமாவது கிருமியால் தான்.
    ·       உண்ட உணவு செரிப்பதே கிருமியால் தான்.
    ·       ஏன் முதன் முதலில் உயிர் உருவானதே இந்த கருமியால் தான்.
உண்மை இப்படி இருக்க. கிருமியினால் நோய் வரும் என்பது அண்டப்புளுகு. நவீன மருத்துவம் தனது வியாபாரத்தை பெருக்கவே இந்த புளுகு புளுகுகிறது.
உலக வல்லாதிக்க தீய சக்திகள் சுயமாக சிந்திக்கத் தெரியாத மருத்துவர்களை வைத்து அரசுகளை கைக்குள் போட்டுக்கொண்டு ஒன்றும் இல்லாத இந்த கொசுவை வைத்தும், கிருமிகளை வைத்தும் மிகப்பெரும் வியாபார வேட்டையில் ஈடுபடுவது மட்டும் அல்லாமல் மக்களையும் அழித்து வருகிறது.
நாம் நமது உடலை பற்றி தெரிந்துகொள்ளாவிட்டால் இப்படித்தான் தொடர்ந்து நமது தலையில் மிளகாய் அரைப்பார்கள்.
நாம் கற்க வேண்டிய முதல் கல்வி உடலை பற்றிய கல்வியாக இருக்க வேண்டும். பள்ளிகளில் இதை தனிப்பாடமாகவே கொண்டு வர வேண்டும்.
இயற்கையின் அற்புதப்படைப்பான இப்பூவுடலின் பேராற்றலை புரிந்து கொள்ளாமல், உலக வல்லாதிக்க தீய சக்திகளுக்கு நமது அறிவை பலி கொடுத்தது நம் குற்றமே.
அழிக்க வேண்டியது கொசுவையா? அல்லது நமது தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறையையா? என நீங்களே முடிவு செய்யுங்கள்.
நல் உள்ளம் படைத்தோர் இந்த கட்டுரையை உலக மக்களுக்கு கொண்டு செல்வீர்கள் என நம்புகிறேன்.


மேலும் காய்ச்சல் தொடர்பான பதிவுகளை காண

காய்ச்சலை கண்டு அஞ்சத் தேவையில்லை! 
நண்பர்களிடம் Pdf file ஆக பகிர்ந்துகொள்ள Printable Format https://goo.gl/3cLYUZ

இந்த பதிவை விளம்பரங்கள் ஏதுமின்றி இணையத்தளத்தில் காண இங்கு செல்லவும் http://reghahealthcare.blogspot.in/2017/07/blog-post_12.html


காய்ச்சல், பேதி, வாந்தி, சளி மற்றும் மூச்சுத் திணறலைப் புரிந்துகொள்ளுங்கள்!
நண்பர்களிடம் Pdf file ஆக பகிர்ந்துகொள்ள Printable Format https://goo.gl/2EcdEF

இந்த பதிவை விளம்பரங்கள் ஏதுமின்றி இணையத்தளத்தில் காண இங்கு செல்லவும் http://reghahealthcare.blogspot.in/2017/10/blog-post.html


எல்லா வகை வியாதிகளில் இருந்தும் நம்மைக் காப்பாற்றும் எதிர்ப்பு சக்தியை சரியாக வைத்துக் கொள்வது எப்படி?

நாம் வசிக்கும் இடங்களில் சுத்தமான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கொசு தொந்தரவு இருக்கும் பட்சத்தில் ரசாயன கொசுவிரட்டிகள் பயன்படுத்தாமல் காற்று வந்துபோகக்கூடிய கொசு வலைகளை பயன்படுத்தி ஜன்னல்களை திறந்து வைத்து தூங்க வேண்டும். ஏனென்றால் நம் உடலில் ஏற்படும் பல இன்னல்களுக்கு அடிப்படை காரணமே அசுத்த காற்று நிறைந்த இடத்தில் வசிப்பது தான். 

பசியை உணர்ந்து, பசி ஏற்படும் போதுதான் சாப்பிடவேண்டும். பசி இல்லாத போது நேரத்தைப் பார்த்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

பசிக்கிற அளவிற்குத் தகுந்தவாறு உண்ணுகிற உணவின் அளவை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரே மாதிரியான பசி எப்போதும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

மனதிற்கு பிடித்த உணவுகளை மட்டும் ரசித்து ருசித்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

டீ மற்றும் காப்பி போன்றவை உணவல்ல போதைப்பொருள் என்பதை நினைவில் கொண்டு அதனை தவிர்த்திடுங்கள். (இதுபற்றி இந்த https://youtu.be/TkvkJozBpQc முகவரியில்  “டீ காப்பி நமக்கு தேவைதானா?” என்னும் தலைப்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.)

உடல் கேட்கும் ஓய்விற்கும் தூக்கத்திற்க்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம். இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரைக்கும் தூங்க வேண்டிய அவசியமான நேரமாகும். இந்த நேரத்தில் தான் உடலில் எதிர்ப்பு சக்தி நோயெதிர்ப்பு வேலையை முழு வீச்சில் மேற்கொள்கிறது.

இரவில் தூங்குவதற்கு பதிலாக பகலில் தூங்கி கணக்கை சரிசெய்து கொள்ள முடியாது. ஏனென்றால் உடலின் நச்சுத்தன்மையை அகற்றும் வேலையும், ஒவ்வொரு உள்ளுறுப்பையும் சீரமைக்கும் வேலையும், ஒவ்வொரு உயிரணுவும் வளர்ச்சியடையும் வேலையும் இரவுகளில்தான் முழுமையாக நடைபெறுகின்றன. எனவே இரவு நேரத்தில் தூங்குவது ஆரோக்கியத்தின் அடிப்படைத் தேவை.

  
மனதுக்கும் உடலுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது

நாம் எப்பொழுது நிம்மதியாக வாழ்கிறோமோ அப்பொழுது நமது உடல் தன்னைத்தானே பராமரித்துக் கொள்வதில் எந்தவித தடையும் ஏற்படுவதில்லை. நாம் எப்பொழுது நிம்மதி இல்லாமல் வாழ்கிறோமோ அப்போது உடல் தன்னைத்தானே வருத்திக்கொள்கிறது. கவலை, மனவருத்தம், பயம், கோபம், விரக்தி போன்ற எண்ணங்கள் நமது உடலின் பராமரிப்பு சக்தியை தீர்த்துவிடுகிறது. எனவே நிம்மதியாக வாழ்வதற்காக நேரங்களை ஒதுக்குவோம். பலர் பணத்திற்காக புகழுக்காக, பதவிக்காக, கெளரவத்திற்க்காக தங்கள் நிம்மதியை இழக்கிறார்கள். ஆனால் நிம்மதிக்காக பணம், புகழ், அந்தஸ்து என்று எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஏனென்றால் நம்முடைய ஆரோக்கியம், நிம்மதி இதைவிடப் பெரிதல்லவா

அன்பான பேச்சுக்களை கேட்கும்போதும்,

பிடித்தமான உணவுகளை உண்ணும்போதும்,

பிடித்தமான இசை மற்றும் பாடல்களை கேட்கும்போதும்,

பிடித்தமான நகைச்சுவை மற்றும் திரைப்படங்களை பார்க்கும்போதும், 

 பிடித்தமான இடங்களுக்கு சுற்றுலா செல்லும்போதும்,

பிடித்தமானவர்களிடம் நேரத்தை செலவிடும்போதும்,

பிடித்தமான பொழுதுபோக்கில் ஈடுபடும்போதும், 

நல்லதை பார்க்கும்போது, கேட்கும்போதும், சிந்திக்கும்போதும்,  

அடுத்தவர்களுக்கு உதவும்போதும்,

நேர்மையாக வாழும்போதும்,

 சுயநலமில்லாத வாழ்க்கை வாழும்போதும்,

... நமது மனது சந்தோஷப்படுகிறது. அவ்வாறு மகிழ்ச்சியாக இருந்தால் நமது உடலின் பராமரிப்பு வேலையும் தடையில்லாமல் நடைபெறும் மேலும் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

பணமே பிரதானம் என எண்ணுபவர்கள் தங்கள் தினசரி வாழ்க்கை முறையில் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ள முயற்சிப்பதில்லை. அவர்கள் ஆரோக்கியத்தை விலை கொடுத்து வாங்க முடியும் எனக் கருதுகின்றனர். உண்மையில் நோய் பற்றிய பயத்தையும், கிருமிகளைப் பற்றிய பயத்தையும், செயற்கையாக உருவாக்கிய நோய்களான நீரிழிவு (சர்க்கரை), ரத்த அழுத்தம், தைராய்டு... போன்றவற்றை மட்டுமே பெற முடியும். பணத்தால் ஆரோக்கியத்தை வாங்க முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

உணவே மருந்து; வாழ்க்கைமுறையே தீர்வு!

ஆரோக்கியமாக வாழ விரும்பினால் மருத்துவத்தை தேடுவதை விட்டுவிட்டு ஆரோக்கியத்தை தேடுங்கள். இன்று முதல் உங்களுக்கு பிடித்தமான உணவுகளை மட்டும் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

நம் தவறான வாழ்க்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தரமான தீர்வை தர இயலாது. மருந்துக்களையோ மருத்துவரையோ தேடுவதற்கு பதில் வியாதிக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்வதே சிறப்பானதாகும்.

நல்லதை சொல்ல வேண்டியது எனது கடமை. அதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் உரிமை. என்னிடம் மருந்துக்களை எதிர்பார்க்காதீர்கள் ஆரோக்கியத்தை மட்டும் எதிர்பாருங்கள். ஆரோக்கியமாக வாழ வழிகாட்டி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காகவே இந்த முகநூல் பக்கம் மற்றும் குழுவினை உருவாக்கியுள்ளேன்.


மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:







முக்கிய குறிப்பு:

இரவு 9 மணி முதல் காலை வரை தூக்கம் தடைபடாமல் இருக்க எனது தொடர்பு எண்களை Silent Mode இற்கு மாற்றிவிடுவேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அந்த நேரத்தில் நீங்களும் தூங்கச் சென்று உங்களது ஆரோக்கியத்தையும் உறுதிசெய்து கொள்ளுங்கள்.

ஆங்கில மருந்துக்கள், டீ, காப்பி, கஞ்சா உட்கொள்ளுதல், புகை பிடித்தல், மது அருந்துதல், புகையிலை, பாக்கு, மூக்குப்பொடி போன்ற போதை பழக்கத்தை விடுவதற்கு தயாராக உள்ளவர்கள் என்னை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம். மேலும் பொறுமையாக இருப்பவர்கள், நேர்மையாக வாழ்பவர்கள், அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாதவர்கள் மற்றும் மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் மட்டும் இந்த எண்கள் +919840980224, +919750956398 மற்றும் vineeth3d@gmail.com க்கு தொடர்பு கொள்ளவும்.

சுயநலமாக சிந்திப்போர் மற்றும் மருந்துக்களால் மட்டுமே வியாதிகளை குணப்படுத்த முடியும் என எண்ணுபவர்கள் என்னை தொடர்புகொண்டு உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இதுவரை நான் எழுதிய / வெளியிட்ட அனைத்து கட்டுரைகளின் தொகுப்பைக் காண மற்றும் பதிவிறக்கம் செய்துகொள்ள இந்த Google Drive லிங்கிற்கு செல்லவும் https://goo.gl/GBKHAb

நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நடக்கும் என்கிற உண்மையை உணர்ந்த காரணத்தால் தான் நல்ல விஷயங்களை அதிகம் பகிர்கிறேன். எனவே நல்லதே கேளுங்கள் நல்லதே நினையுங்கள் நல்லதே பேசுங்கள் நல்லதே செய்யுங்கள் நல்லதே நடக்கும். அதற்கு எனது வாழ்கையே சாட்சி.


"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?"
Youtube Channel முகவரி https://goo.gl/xsH2SJ

"நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!"
Youtube Channel முகவரி https://goo.gl/Rvr1vT

"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" 
Telegram குழுவின் முகவரி https://telegram.me/OurBodyItselfaDoctor

"நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்" 
Telegram குழுவின் முகவரி https://telegram.me/LetUsThinkPositive


நமது உடலின் அடிப்படையை கற்றுக்கொண்டு மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ்வோம். ஆரோக்கியமாக வாழ நம் உடலின் அடிப்படையை புரிந்து கொண்டு அதற்கு போதிய ஒத்துழைப்பு கொடுத்தாலே போதும். இதனை புரிந்து கொள்ளாமல் இருப்பதால் தான் நாம் தேவையில்லாமல் வியாதிகள் மற்றும் கிருமிகள் பற்றி பயந்து கொண்டு இருக்கிறோம்.

ஆரோக்கியம் என்பது உடல், மனம் மற்றும் தினசரி பழக்கவழக்கங்களில் தான் அடங்கி உள்ளது. இதனை புரிந்துக்கொள்ளாததால் தான் நாம் பல மருத்துவ வியாபாரிகளிடம் சிக்கித் தவிக்கிறோம்.

இப்படிக்கு,
விழிப்புணர்வு வினீத்

No comments:

Post a Comment