இரத்ததானம் செய்வது உடலுக்கு மிகவும் நல்லது என்றால், மருத்துவத்துறையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மற்ற ஊழியர்கள் எவரும் அவ்வளவாக இரத்ததானம் செய்வதில்லையே ஏன்?
சாதாரண மக்கள் இரத்ததானம் செய்தார்கள் என்று மருத்துவர்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்குவது போல, தாங்களும் இரத்ததானம் செய்ததாக செய்யாமலேயே எத்தனை பாராட்டுப் பத்திரங்களை வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். ஆனால், எந்த மருத்துவராவது தானும் ஒரு சாதாரண மனிதருக்கு இரத்ததானம் செய்தேன் என்பதற்கு அச்சாதாரண மனிதரின் சான்று ஒன்றையாவது காட்ட முடியுமா?
பெட்ரோலில் இயங்கும் மோட்டார் வாகன இயந்திரத்தின் அதிமுக்கிய பாகங்களை பெட்ரோல் கொண்டுதான் கழுவ முடியும் என்பது போல தொண்ணூறு சதவிகித தான இரத்தம் விபத்தில் சிக்குபவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது வெளி உபயோகத்திற்காகத்தான் தேவைப்படுகிறது.
மனிதர்கள் எல்லோருமே விபத்தில் சிக்குவதில்லை. அப்படி ஆங்காங்கே சிக்குபவர்களைக் காக்க, ஆங்காங்கே மருத்துவதுறையில் பணிபுரியும் ஊழியர்களின் இரத்ததானமே போதுமானதே!
இதனைச் செய்யாமல் ஏன் மக்களிடம் இரத்ததானம் செய்ய முன்வாருங்கள் என்று கெஞ்சி கூத்தாடுகிறார்கள்?
இத்தனைக்கும் தானமாக பெறப்பட்ட இரத்தமானது முப்பது நாட்களுக்குள் உபயோகப்படுத்தவில்லை என்றால் கெட்டுவிடும்.
கோடி கோடியாக செலவு செய்தாலும் உற்பத்தி செய்ய முடியாத இரத்தத்தைச் சாதாரண மனிதர்கள் தானாக மனம் இரங்கி மற்ற மனித உயிரைக் காக்க வேண்டும் என்ற நன்னோக்கில் தானமாக தரும் போது, உயிரைக் காப்பதையே பிரதான நோக்கமாக கொண்ட மருத்துவர்களும், மருத்துவமனைகளும் தானமாக கொடுக்கப்பட்ட இரத்தத்தைப் பரிசோதனை செய்தோம் என்று லட்சம் லட்சமாக சிகிச்சைக் கட்டணத்திற்கு உள்ளேயே அல்பத்தனமான ஆயிரக்கணக்கான ரூபாய்களைக் கட்டணமாக நோயாளிகளிடம் வசூலிப்பது ஏன்?
சிலர் தங்களின் சுப தினங்களில் ரத்ததானம் செய்வதைக் கடமையாக கொண்டுள்ளனர். அத்தோடு பல தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் அவ்வப்போது ஆங்காங்கே முகாம் நடத்தி இரத்தம் சேகரிகத்தும் கொடுக்கிறார்கள். ஆனால், ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது என்றால், ஒன்றுக்கு இரண்டாக அல்லது மூன்று யூனிட்டாக அவரின் உற்றார், உறவினர், நண்பர்கள் என கட்டாயமாக இரத்ததானம் செய்த பிறகுதான், இரத்த வங்கிகளுடைய மருத்துவமனைகள் பரிசோதனைகள் முடிந்து நிலுவையாக உள்ள தங்களின் கையிருப்பு இரத்தத்தையே எடுத்து உபயோகப்படுத்துகிறார்கள்.
ஒருவேளை இரத்த கொடையாளிகளே விபத்தில் சிக்க நேரிட்டாலும் இதே நிலைதான். இரத்த கொடையாளரிடமே இரத்தகொடையளிக்க எவரையாவது அழைத்து வரும்படி கட்டாயப்படுத்துவது கொடுமையிலும் கொடுமையல்லவா?
அப்படியானால், "யாருக்காவது பயன்படும் என்ற நல்ல நோக்கில் கொடையாளிகள் கொடுத்த இரத்தம் எங்கே போகிறது?"
இரத்த சேமிப்பு வங்கிகள் இது குறித்த கணக்குகளை மக்களின் பார்வைக்கு அல்லது தானக் கொடையாளர்களின் பார்வைக்கு கொண்டு சென்றது உண்டா?
இரத்ததான முகாம்கள் மூலம் உங்களிடம் இருந்து பெறப்பட்ட இரத்தம் இன்னாரின் பயன்பாட்டுக்காக உபயோகப் படுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவலை கொடையாளருக்கும், இன்னாருடைய இரத்தம்தான் உங்களுக்கு உபயோகப்படுத்தப்பட்டு உள்ளது என்ற தகவலை பயனடைந்தவருக்கும் தெரிவிக்க வேண்டியது மருத்துவத்துறையின் கடமையல்லவா?
இவைகளை சம்பந்தப்பட்ட இருவரும் தெரிந்து கொள்வது எந்த வகையில் நியாயமற்றது? ஆனாலும், மருத்துவத்துறை இதுவரை செய்தது இல்லை. இனியும் செய்யப்போவது இல்லை. ஏன் தெரியுமா?
நிச்சயமாக இதில் ஏதோ தில்லுமுல்லுகள் நடைபெறுகிறது. ஆனால், இப்படியொரு சந்தேகம் இரத்த தானம் செய்யும் எவருக்குமே தோன்றாதது ஏன்?
ஒருவேளை, எங்காவது அபூர்வமாக தில்லுமுல்லுகள் நடக்கும்; அதற்கு ஏன் நாம் அலட்டிக்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் இருந்தால் அதுவும் நிச்சயமாக தவறு. ஏனெனில், இரத்த தானம் பெறும் எல்லா நிலையங்களிலுமே இத்தகைய தில்லுமுல்லுகள் நடக்கின்றன என்பதே என் குற்றச்சாற்று!
நாம் தானமாக கொடுக்கும் சுமார் 400 மில்லி இரத்தம் சில நாட்களிலேயே நம் உடல் தானாகவே சுரந்து கொள்ளும் என்று கூறப்படுகின்றது.
அதெப்படி சுமார் 400 மில்லி இரத்தம் சில நாட்களிலேயே, ஊட்டச்சத்து இல்லாமல் தானாகவே ஊற கிடைக்கும்?
மருத்துவர்கள் உண்ணும் உணவைவிட சராசரி மனிதர்களாகிய நாம் தரமானதொரு உணவை உண்ணுவிடப் போவதில்லை. உண்மை இப்படியிருக்க, மருத்துவர்கள் இரத்ததானம் செய்யாததன் மூலம் அவர்களின் உடல் நலத்தில் அக்கறை இல்லாமலும், மக்களின் உடல் நலத்தில் மிகுந்த அக்கறையோடும் இருக்கிறார்கள் என சொல்ல முடியுமா?
இரத்ததானத்தால் உடல் புத்துணர்ச்சி அடைகிறது என்பதும் முதல் நோக்கிலேயே ஏற்கத்தக்கது அல்ல. அதாவது, ஒரு லிட்டர் பாலில் ஒரு சொட்டு விஷம் கலந்தாலும் பால் முழுவதும் விஷம்தானே? இல்லையில்லை, பாலோடு சேர்ந்த விஷம் ஊட்டச்சத்து மிக்க பாலாகி விட்டது என சொல்ல முடியுமா?
இதேபோல, புதிதாக உற்பத்தியாகும் சுமார் அரை லிட்டர் புது இரத்தம் ஏற்கனவே உடலில் அசுத்தமாக உள்ள ஐந்தரை லிட்டர் இரத்தத்தோடு சேர்ந்து அவைகளையும் புது இரத்தமாக்கி விடுகிறது என்பது எவ்வளவு புத்திசாலித்தனமான கட்டுக்கதை.
அது சரி, புது இரத்தம் சுரந்துதான் புத்துணர்ச்சி தருகிறது என்றால், இரத்ததானம் செய்பவர்கள் எல்லாம் புத்துணர்ச்சி இல்லாதவர்களா?
அவர்களின் இரத்தம் அசுத்தமானதா? அசுத்தமான இரத்தத்தை எதற்கு தானமாக எடுத்து ஆபத்தில் உள்ளவர்களின் உயிரை காப்பாற்ற வேண்டும்? எப்படி காப்பாற்ற முடியும்?
இதனால், நமக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதும் சரியல்ல. 400 மில்லி இரத்த இழப்பால் நமக்கு பாதிப்பு இல்லை என்பது உண்மையானால், விபத்தில் சிக்குபவர்கள் அதே அளவிற்கு இரத்தம் சிந்தும்போது ஏன் சுய நினைவை இழந்து மயக்கமடைகிறார்கள்?
நாம் கொடுக்கும் 400 மில்லி இரத்தத்தால் நம் உடலுக்குப் பாதிப்பு இல்லை என்பது உண்மையானால், விபத்தில் சிக்குபவர்கள் அல்லாதோருக்குச் செய்யப்படும் அறுவை சிகிச்சைக்காக தேவைப்படும் இரத்தத்தை அந்நோயாளியிடமே எடுத்துக் கொள்ளலாமே!
எனவே, 400 மில்லி இரத்தம் நம் உடலிலிருந்து இழப்பது நிச்சயமாக நம் உடலுக்குக் கெடுதியானதே. எப்படி?
இரத்தம் கொடுக்கும் ஒரு சிலருக்கு உடனடியாக மயக்கம் வரும் என்பதை மருத்துவத்துறையே வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறது. ஆனால், மயக்கம் உடலுக்கு மிகவும் நல்லது என்று எந்த மருத்துவமும் சொல்வதில்லையே!
உண்மை இப்படி வெட்ட வெளிச்சமாக இருக்கும்போது, மயக்கமடைந்தவரிடம் இருந்து பெறப்பட்ட தான இரத்தத்தை அவருக்கே திரும்ப செலுத்தி விடுவதுதானே தானத்தின் நியாயம். ஆனால், அப்படி ஒருபோதும் செய்வதில்லையே!
மயக்கம் ஏற்பட்டால் உடனே காலைத்தூக்கி பிடிக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். இரத்ததானம் செய்யும் இடத்தில் மயக்கம் வந்தால் காலைத்தூக்கிப்பிடித்து தற்காலிகமாக காப்பாற்றி விடுவார்கள் என்றே வைத்துக் கொள்வோம். இதற்காகத்தான் சுமார் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை அங்கேயே 200 மில்லி குளிர்ச்சியான செயற்கை பானம் மற்றும் ஒரு பாக்கெட் பிஸ்கெட்டை உண்ண வைத்து படுக்க வைத்திருக்கிறார்கள்.
ஒருவேளை இவ்வெற்று சம்பிரதாய சடங்குக்கு முடிந்து அவ்விடத்தை விட்டு சென்ற பின் ஒருவர் மயக்கம் போட்டால், அவர் இரத்ததானம் கொடுத்ததால்தான் மயக்கம் போட்டார் என்பதையும், அவரைக்காப்பாற்ற காலைத் தூக்கி பிடிக்க வேண்டும் என்பதும் யாருக்கு தெரியும். இல்லை அவரேதான் முன்னெச்சரிக்கையாகவோ சொல்லி வைக்க முடியுமா அல்லது மயக்கத்தின் ஊடே எழுந்து சொல்ல முடியுமா?
தானம் செய்தவரை டாஸ்மாக்கில் தண்ணியடித்து விட்டுதான் விழுந்து கிடக்கிறான் பார் என்றல்லவா போவோர் வருவோர் நினைப்பார்கள். திட்டி தீர்ப்பார்கள்.
கை, கால்களுக்கு இரத்த ஓட்டம் கிடைக்கவில்லை என்றால் மரத்துப்போய் குத்தும், குடையும் என்பதை நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்நாளில் பல முறை அனுபவபூர்வமாகவே உணர்ந்து இருக்கிறோம் அல்லவா?
இரத்த ஓட்டத்தை சரி செய்து மரத்துப் போனதை திரும்பவும் சாதாரண நிலைக்கு கொண்டுவர அத்தருணத்தில் வலியால் என்ன பாடுபடுகிறோம். அம்முயற்சி துவங்கிய பின்னர் குறைந்தது ஐந்து நிமிடங்கள் வரை ஆகிறதுதானே! கை, கால் மரப்புக்கே இப்படிப்பட்ட விளைவு என்றால், மூளைக்கு இரத்த ஓட்டம் தடைப்பட்டால் நிலைமை என்னவாகும் என்பதை ஏன் மருத்துவர்களின் மூளையைப் போல் புத்திசாலித்தனமாக சிந்தித்து செயல்பட நமது மூளை மட்டும் ஏன் மறுக்கிறது?
இரத்ததானம் செய்தவர் மயக்கம் போட்டு விழுந்து கிடப்பதை, தண்ணியடித்து விட்டுதான் விழுந்து கிடக்கிறார். போதை தெளிந்ததும் எழுந்து விடுவார் என்ற தெளிந்த சிந்தனையில் மக்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை என்றால், புண்ணியம் தேடி இரத்ததானம் கொடுத்தவர் புகலிடம் தேடி சாவை சந்திக்க வேண்டியிருக்கும். அல்ல அல்ல. இப்படி நிச்சயமாக நடந்திருக்கும். சாலையில் சென்றவர் சுருண்டு விழுந்து செத்தார் என்ற செய்தியை படித்திருக்கிறோம் அல்லவா? அச்சாவுகள் இந்தவகையைச் சார்ந்தது அல்ல என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது? இப்படி சாவை சந்தித்தவர்களின் புள்ளி விபரங்கள் யாருக்கு தெரியும்!
இதுபோன்றதொரு நிலமையை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரத்ததானம் கொடுப்பவர் தக்க பாதுகாவலர்களோடு வர வேண்டும் என மருத்துவத்துறை இன்று வரையிலும் கூட அறிவுறுத்தியது இல்லை. இப்படி அறிவுறுத்தினால் யார் இரத்ததானம் செய்ய முன்வருவார்கள்? என்ற அடிப்படை காரணம் இதில் இல்லாமலும் இல்லை.
இரத்ததானம் செய்தவரின் உடல் நிலையைப் பொறுத்து சோர்வு ஏற்படும். இது எப்படிப்பட்ட பலம் கொண்டவராக இருந்தாலும் நிச்சயம் என்பதை நானே உணர்வுப்பூர்வமாக உணர்ந்துள்ளேன். ஆனாலும், உடனே மயக்கம் அடையாத இரத்ததான கொடையாளர்கள் தங்களின் சோர்வுக்கும், உடல் ஒத்துழையாமைக்கும் தானம்தான் காரணம் என்பதை எண்ணிக்கூட பார்க்க முடியாது.
நம்மால் தானம் கொடுக்கப்பட்ட 400 மில்லி இரத்தம் மீண்டும் புதிதாக சாதாரணமாக உண்ணும் உணவில் உற்பத்தியாகாது. அதற்காக இரும்புச் சத்து மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை பல மாதங்கள் தொடர்ந்து உண்ண வேண்டியிருக்கிறது. கட்டாய ஓய்வும் எடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால், இதனையெல்லாம் புண்ணியம்தேடி சர்வ சாதாரணமாக இரத்ததானம் செய்பவர்கள் கணித்து விட முடியாது. உடல் தங்களது பணிகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், ஓய்வு கொடுத்து விடுவார்களே ஒழிய, இரத்ததானம்தான் காரணமாக இருக்குமோ என அறியக்கூட முற்படுவதில்லை.
மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கு இச்சாதக பாதக விளைவுகளை கணிக்கும் திறன் இருப்பதாலும், உடலுக்கு தேவையில்லாத செலவுடன் கட்டாய ஓய்வளித்து வருமானத்தை இழக்க விரும்பாததாலுமே இரத்ததானம் செய்வதில்லை.
கடந்த 2007 ஆம் ஆண்டில் சகோதரி ஒருத்தி விபத்தில் சிக்கி நான் இரத்ததானம் செய்த வகையில் இதில் குறிப்பிட்டுள்ளபடியான தில்லுமுல்லுகளை உணர்ந்து ராமச்சந்திரா மருத்துவமனை இயக்குனருக்கு சட்டப்படியான அறிவிப்பை அனுப்பினேன்.
அதற்கு அம்மருத்துவ அறிவாளிகள் கேட்ட கேள்விகள் எதற்கும் நியாயமான பதிலை சொல்ல முடியாமல், மடத்தனமாக இரத்தம் மரத்தில் காய்க்காது என்பன போன்ற உணர்ச்சியூட்டும் வசனங்களையே திரும்பத்திரும்ப பதிலாக தந்தனர். அவளின் தொடர் சிகிச்சையை காரணம் காட்டி, அவளே என்னிடம் மன்றாடியதால் வழக்கு தொடுக்க இயலாமல் போய் விட்டது. இதுபோன்ற தொடர் சிகிச்சை காரணங்கள்தான் இதில் நடக்கும் தில்லுமுல்லுகளை வெளிக்கொணர தடையாய் இருக்கிறது.
மொத்தத்தில், இரத்ததானம் உடலுக்கு நல்லது என்றால், முதலில் அதை மருத்துவர்களுக்கு கட்டாயமாக்க வேண்டும். உனக்கேன் அவர்கள் மீது அவ்வளவு அக்கறை என்று சந்தேக கண்ணோட்டத்தோடோ அல்லது வேண்டா வெறுப்பாகவோ பார்க்காதீர்கள்.
ஏனெனில், அவர்கள் உடல் நலத்தோடு இருந்தால்தானே நாமும் உடல் நலத்தோடு இருக்க முடியும்! அதுவரை, மருத்துவர்கள் உண்டு கொழுப்பதற்கு உணர்ச்சி வயப்பட்டோ அல்லது புண்ணியம் தேடியோ தேவையில்லாமல் இரத்ததானம் செய்வதை தவிர்ப்போம்.
மாறாக, வி(ஆ)பத்தில் சிக்கும் உற்றார், உறவினர், நண்பர்களின் தேவைக்கு ஏற்ப இரத்ததானம் செய்து புண்ணியம் தேடிக் கொள்வதோடு, தானத்திற்கு பின் நமது உடல் நலனில் தகுந்த அக்கரை கொள்வோம். நமக்காக அடுத்தவர் தானம் செய்வதை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்போம். மருந்தில்லா மகிழ்ச்சி வாழ்வு வாழ்வோம்.
கட்டுரை தொகுப்பு : சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா
ரத்ததானம் குறித்து நான் பகிர்ந்துகொண்ட ஆடியோ பதிவுகள் உங்களுக்கு மேலும் தெளிவைத் தரும் என நம்புகிறேன். அவற்றை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
Part 1. https://goo.gl/iWUnBq
Part 2. https://goo.gl/psvj3i
இந்த பதிவை நகல் எடுக்க Printable format அதாவது PDF ஆக பதிவிறக்கம் செய்துகொள்ள இந்த முகவரிக்கு செல்லவும் https://goo.gl/bD3ECw
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
தெளிவுரை: எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.
“எப்போதும் நம்மிடம் இருக்கும் ஒரு பொருளை வேறு எந்த இடத்தில் தேடினாலும் கிடைக்காது”. நமது உடலும் மனதும் சேர்ந்ததுதான் ஆரோக்கியம். அப்படிப்பட்ட ஆரோக்கியத்தை நம்மிடமே வைத்துக்கொண்டு அதை வெளியில் தேடினால் எப்படி கிடைக்கும்?
உடலின் அடிப்படை இயக்கத்தை புரிந்துகொள்ள "நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" என்னும் தலைப்பில் இதுவரை நான் பகிர்ந்து கொண்ட அனைத்து ஆடியோ / வீடியோ பதிவுகளையும் பாருங்கள். அவற்றை பதிவிறக்கம் செய்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு செல்லுங்கள்.
இந்த Telegram Channel https://t.me/OurBodyitselfaDoctorVideos
அல்லது
இந்த Google Drive லிங்கிற்கு செல்லவும் https://goo.gl/GBKHAb
அவற்றை பார்வையிட
"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" என்னும் Youtube Channel முகவரிக்கு செல்லுங்கள் https://goo.gl/xsH2SJ
அல்லது
இந்த முகநூல் பக்கத்திற்கு செல்லுங்கள்
நிச்சயம் இவை உங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
நாம் எப்பொழுது நிம்மதியாக வாழ்கிறோமோ அப்பொழுது நமது உடல் தன்னைத்தானே பராமரித்துக் கொள்வதில் எந்தவித தடையும் ஏற்படுவதில்லை. நாம் எப்பொழுது நிம்மதி இல்லாமல் வாழ்கிறோமோ அப்போது உடல் தன்னைத்தானே வருத்திக்கொள்கிறது. கவலை, மனவருத்தம், பயம், கோபம், விரக்தி போன்ற எண்ணங்கள் நமது உடலின் பராமரிப்பு சக்தியை தீர்த்துவிடுகிறது. எனவே நிம்மதியாக வாழ்வதற்காக நேரங்களை ஒதுக்குவோம். பலர் பணத்திற்காக புகழுக்காக, பதவிக்காக, கெளரவத்திற்க்காக தங்கள் நிம்மதியை இழக்கிறார்கள். ஆனால் நிம்மதிக்காக பணம், புகழ், அந்தஸ்து என்று எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஏனென்றால் நம்முடைய ஆரோக்கியம், நிம்மதி இதைவிடப் பெரிதல்லவா?
# அன்பான பேச்சுக்களை கேட்கும்போதும்,
# பிடித்தமான உணவுகளை உண்ணும்போதும்,
# பிடித்தமான இசை மற்றும் பாடல்களை கேட்கும்போதும்,
# பிடித்தமான நகைச்சுவை மற்றும் திரைப்படங்களை பார்க்கும்போதும்,
# பிடித்தமான இடங்களுக்கு சுற்றுலா செல்லும்போதும்,
# பிடித்தமானவர்களிடம் நேரத்தை செலவிடும்போதும்,
# பிடித்தமான பொழுதுபோக்கில் ஈடுபடும்போதும்,
# நல்லதை பார்க்கும்போது, கேட்கும்போதும், சிந்திக்கும்போதும்,
# அடுத்தவர்களுக்கு உதவும்போதும்,
# நேர்மையாக வாழும்போதும்,
# சுயநலமில்லாத வாழ்க்கை வாழும்போதும்,
... நமது மனது சந்தோஷப்படுகிறது. அவ்வாறு மகிழ்ச்சியாக இருந்தால் நமது உடலின் பராமரிப்பு வேலையும் தடையில்லாமல் நடைபெறும் மேலும் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
பணமே பிரதானம் என எண்ணுபவர்கள் தங்கள் தினசரி வாழ்க்கை முறையில் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ள முயற்சிப்பதில்லை. அவர்கள் ஆரோக்கியத்தை விலை கொடுத்து வாங்க முடியும் எனக் கருதுகின்றனர். உண்மையில் நோய் பற்றிய பயத்தையும், கிருமிகளைப் பற்றிய பயத்தையும், செயற்கையாக உருவாக்கிய நோய்களான நீரிழிவு (சர்க்கரை), ரத்த அழுத்தம், தைராய்டு... போன்றவற்றை மட்டுமே பெற முடியும். பணத்தால் ஆரோக்கியத்தை வாங்க முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
# நாம் வசிக்கும் இடங்களில் சுத்தமான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கொசு தொந்தரவு இருக்கும் பட்சத்தில் ரசாயன கொசுவிரட்டிகள் பயன்படுத்தாமல் காற்று வந்துபோகக்கூடிய கொசு வலைகளை பயன்படுத்தி ஜன்னல்களை திறந்து வைத்து தூங்க வேண்டும். ஏனென்றால் நம் உடலில் ஏற்படும் பல இன்னல்களுக்கு அடிப்படை காரணமே அசுத்த காற்று நிறைந்த இடத்தில் வசிப்பது தான்.
# பசியை உணர்ந்து, பசி ஏற்படும் போதுதான் சாப்பிடவேண்டும். பசி இல்லாத போது நேரத்தைப் பார்த்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
# பசிக்கிற அளவிற்குத் தகுந்தவாறு உண்ணுகிற உணவின் அளவை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரே மாதிரியான பசி எப்போதும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
# மனதிற்கு பிடித்த உணவுகளை மட்டும் ரசித்து ருசித்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
# டீ மற்றும் காப்பி போன்றவை உணவல்ல போதைப்பொருள் என்பதை நினைவில் கொண்டு அதனை தவிர்த்திடுங்கள். (இதுபற்றி இந்த https://youtu.be/TkvkJozBpQc முகவரியில் “டீ காப்பி நமக்கு தேவைதானா?” என்னும் தலைப்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.)
# உடல் கேட்கும் ஓய்விற்கும் தூக்கத்திற்க்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம். இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரைக்கும் தூங்க வேண்டிய அவசியமான நேரமாகும். இந்த நேரத்தில் தான் உடலில் எதிர்ப்பு சக்தி நோயெதிர்ப்பு வேலையை முழு வீச்சில் மேற்கொள்கிறது.
# இரவில் தூங்குவதற்கு பதிலாக பகலில் தூங்கி கணக்கை சரிசெய்து கொள்ள முடியாது. ஏனென்றால் உடலின் நச்சுத்தன்மையை அகற்றும் வேலையும், ஒவ்வொரு உள்ளுறுப்பையும் சீரமைக்கும் வேலையும், ஒவ்வொரு உயிரணுவும் வளர்ச்சியடையும் வேலையும் இரவுகளில்தான் முழுமையாக நடைபெறுகின்றன. எனவே இரவு நேரத்தில் தூங்குவது ஆரோக்கியத்தின் அடிப்படைத் தேவை.
முக்கிய குறிப்பு:
ஆங்கில மருந்துக்கள், டீ, காப்பி, கஞ்சா உட்கொள்ளுதல், புகை பிடித்தல், மது அருந்துதல், புகையிலை, பாக்கு, மூக்குப்பொடி போன்ற போதை பழக்கத்தை விடுவதற்கு தயாராக உள்ளவர்கள், பொறுமையாக இருப்பவர்கள், நேர்மையாக வாழ்பவர்கள், அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாதவர்கள் மற்றும் மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் மட்டும் இந்த "நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.
Telegram குழுவின் முகவரி https://telegram.me/OurBodyItselfaDoctor
சுயநலமாக சிந்திப்போர் மற்றும் மருந்துக்களால் மட்டுமே வியாதிகளை குணப்படுத்த முடியும் என எண்ணுபவர்கள் என்னை தொடர்புகொண்டு உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
விழிப்புணர்வு வினீத்
No comments:
Post a Comment