Showing posts with label அகத்தின் அழகு நகத்தில் தெரியும். Show all posts
Showing posts with label அகத்தின் அழகு நகத்தில் தெரியும். Show all posts

அகத்தின் அழகு நகத்தில் தெரியும்

நகத்தினுடைய நிறம், வடிவம், நயம் இவற்றை வைத்து நம் ஆரோக்கியத்தையே கணிக்க முடியும் என்கிறார்கள். அனுபவம் உள்ள மருத்துவர்கள் நகத்தைப் பார்த்தே ‘இன்ன நோய்’ என்று சொல்லிவிடுவார்கள்.
நுண்மையான, நரம்பு கூட்டமைப்பிலான நமது விரல் நுனிகளை ஊறுபடாத வண்ணம் காப்பது நகங்களே. நாம் நுட்பமான பொருட்களை கையாளவும், நமது தொடு உணர்வுக்கும் நகம் பெரிதும் உதவுகிறது. நம் உடம்பிலுள்ள ரோமத்தில் போலவே நகத்திலும், ‘புரோட்டீன் _ கெராட்டீன்’ என்ற ரசாயனப் பொருள் காணப்படுகிறது.நகங்கள் முளைக்கும்போது மிருதுவான செல் (cell) களால் உருவாகிறது. பிற்பாடு வளரும்போது கடினத்தன்மை அடைகிறது. நகத்தின் அடிப்புறம் உள்ள சருமத்தின் புற அடுக்கு க்யுடிகிள் (cuticle)எனப்படும். இது அழுக்கு, நுண்ணியக் கிருமிகள் போன்றவை உள்ளே ஊடுருவாமல் தடுத்துவைக்கிறது. நகத்தின் அடியில் உள்ள சருமத்தில் ரத்தம் அதிகமாய் ‘சப்ளை’ ஆவதாலும், தந்துகிகளாலும் இது இளஞ்சிவப்பு நிறத்தைக் கொண்டிருக்கும்.
நகத்தின் நீரகத்தன்மை 10% என்பதால் எலும்புகளை, பற்களைப் போலவே இதுவும் ஒரு கடினத் திசு ஆகும்.இதன் வளர்ச்சி வாரத்திற்கு 0.5_1.2 மி.மீயாக இருக்கும். நகம் கோடையில் விரைவாக வளரும். பகலைவிட இரவில் கூடுதல் வளர்ச்சி கொண்டிருக்கிறது. நீங்கள் வலது கைப்பழக்கம் உடையவராயின் இடது கை நகத்தைவிட வலதுகை நகம் துரிதமாய் வளரும். நகத்தின் இயல்பான வளர்ச்சிக்கு சத்துள்ள உணவு தேவை. போஷாக்கின்மை அதன் வளர்ச்சியை தாமதப்படுத்தும். ‘ப்யூலைன்’ (Beauline) என்று சொல்லக்கூடிய பள்ளங்கள் நகத்தின் குறுக்கு வசத்தில் விழும் சத்தின்மை காரணமாக அது முறிவுத்தன்மை அடையவும், சீவலாய் உதிரவும் வாய்ப்பு உண்டு.பெண்கள் உபயோகிக்கிற நகப்பூச்சு நகங்களை மேலும் கடினப்படுத்திவிடும். ஆனால் ‘பாலிஷ் ரிமூவர்’ உபயோகிப்பதால் நகங்கள் முறிந்து போகவும் கூடும்.
சத்துக் குறைவான நகங்கள் மஞ்சள் நிறம் அடையும். நீரிழிவு, இருதய நோய் உள்ளவர்களின் நகங்கள் மஞ்சலாக இருக்கும். முற்றிய ‘கேஸ்’களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நகப் படுகை (Nail Bed) நீலமாக மாறும்.சிலருடைய நகங்கள் இயல்புக்கு மாறான தோற்றம் கொண்டிருக்கும். அவை நோய்களின் அறிகுறியை மருத்துவருக்கு புலப்படுத்தும்.
1. க்ளப்பிங் (Clubbing): நகங்கள் மேற்புறத்தில் அதீத வளைவுடன், விரல் நுனியில் சுருண்டும் காணப்பட்டால் அவை அல்ஸர், டி.பி.எம் பிஸிமா போன்ற நோய்களின் வரவைக் குறிப்பதாகும்.
2. ப்ளு_மூன்ஸ் (Blue Moones): நகத்தின் அடிப்புறம் நீலமாக காணப்பட்டால் அது கால், விரல், பாத இசிவு மற்றும் இருதய நோய் குறித்தும் எச்சரிப்பதாகும். சில நேரங்களில் கீல் வாதங்களுக்கும் இந்த அறிகுறி பொருந்தும். 3. ‘ஸ்பூன் நெய்ல்ஸ்’ (Spoon Nails): தட்டையாக அல்லது கரண்டி போல் தோற்றமளிக்கும் நகங்கள். இரும்புச் சத்து குறைவில் வரும். அனீமியா, தைராய்டு கோளாறு மற்றும் சிபிலிஸ் நோய் தொடர்புகளைச் சுட்டும்.4. ‘ப்யூ’ஸ் லைன்கள் (Beau’s Lines): கடுமையான நோய் அல்லது சத்துப் பற்றாக்குறை காரணமாக நகத்தின் படுக்கை வாட்டில் பள்ளக்கோடுகள் விழும். தட்டம்மை (விமீணீsறீமீs), புட்டாலம்மை (விuனீஜீs) போன்றவற்றால் நகத்தின் வளர்ச்சி தற்காலிகமாக பாதிக்கப்படும்.
5. ‘டெர்ரி’ஸ் (Terry’s): நகத்தின் அடிப்புற சருமம் ஒரேயடியாக வெளுத்துப் போகலாம். அது ஈரலில் வரும் ‘சிவீக்ஷீக்ஷீலீஷீsவீs’ஐ குறிக்கும்.
6. ‘லிண்ட்ஸே’ (Lindsay): நகத்தின் முனைப் பக்க பாதி இளஞ்சிவப்பு அல்லது பழுப்பாக இருக்கும். க்யூடிகிள் சார்ந்த பாதியும் வெண்மையாய் காணப்படும். இது நாள்பட்ட சிறுநீரகக் கோளாறின் அறிகுறியாகும்.7. ‘எல்லோ_நெய்ல் ஸிண்ட்ரம்’ (Yellow Nail Syndrome): நக வளர்ச்சி குன்றி கடினமாகும். மஞ்சள் அல்லது பசுமஞ்சள் நிறம் காணும். இது சுவாசக் கோளாறு பற்றிய அறிகுறி.8. ‘ஸ்ப்ளிண்டர் ஹெமரேஜஸ்’ (Splinter Haemorrhages): ரேகை மாதிரி ஓடும் செந்நிறக் கீற்றுகள் தந்துகிகளில் ஏற்படும் இரத்தக் கசிவையும் ப்ளட்_ப்ரஷ்ஷரையும் ‘Psoriasis’ என்கிற சரும நோயையும் பற்றி நமக்கு எச்சரிப்பதாகும்.
9. ‘பிட்டிங்_இன்_ரோஸ்’ (PitinginRows): நகம் முழுக்க விழும் குழிகள் சீக்கிரமே முடி உதிருவதற்கான ‘சிக்னல்’. ஸோ… உங்கள் நகங்களை ஊன்றி கவனியுங்கள். அவை அதையே சொல்ல முயல்கின்றன.
நகப் பராமரிப்பு: நலம் தரும் சுத்திகரிப்பு! ‘வீக்’கான நகங்கள் என்றாலே சுலபத்தில் முறிந்து போகிற (Brittle) நகங்கள் என்றுதான் நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உரிதல், கிழிதல், பிளவுபடுதல் என்பன நகத்தின் தன்மைகள். சுற்றுப்புறச் சூழலில் காணப்படும் வறட்சி, குளுமை காரணமாக நகம் தன்னுடைய ஈரத்தன்மை இழக்கும். இதனாலும் முறிவுத்தன்மை மோசமாகும். இந்த இழப்பை ஈடுகட்ட, படுக்கப்போகும் போது சற்று வெதுவெதுப்பான நீரில் நகத்தை, ஒரு 15 நிமிடங்கள் முழுவதுமாய் நனைத்துக் கொள்ளலாம். பிறகு ‘மாய்சரைஸர்’ பயன்படுத்தலாம். நமது கேசத்தைப் போலவே நகங்களும் பரம்பரையை ஒட்டியே அமைகின்றன. ஸ்ட்ராங்கான சோப், டிடர்ஜன்ட் வகைகளைத் தவிர்க்க வேண்டும். அடிக்கடி கைகழுவிக் கொண்டிருக்கக் கூடாது. அதனால், ‘நெய்ல்_ப்ளேட்’டுகள் சுருங்கிப் போகும் அல்லது விரிந்துவிடும்.
நாம் முதுமை அடையும்போது நகங்கள் மெலிந்து, உடையக் கூடியதாகிவிடும். நடுத்தர வயதினரின் நகங்கள் வளர்ச்சி குன்றும், ஆனைவிட பெண்Êணுக்கு …. வருஷங்கள் முன்னதாகவே நகமாற்றம் ஏற்பட்டு விடுகிறது. நகத்தினால் எதையும் சுரண்டவோ, கீறவோ கூடாது.சில பெண்கள் போலி நகங்கள் (காஸ்மெடிக் ஸ்டோரில் விற்கப்படும் Acrylic Nails) பொருத்திக் கொள்வார்கள். நீண்ட உபயோகத்தில் அவை ஒரிஜினல் நகங்கள் பாழடிந்துவிடும்.நக வளர்ச்சிக்கு என்று தனியாக சிகிச்சை எதுவும் இல்லை. ஆனால் தினமும் ‘மைனாக்ஸிடில்’ (Minoxidill) – கேச வளர்ச்சிக்கு உபயோகிப்பது_பூசினால் ஆரோக்கியமான நகத்தைப் பெறமுடியும் என்கிறது அமெரிக்க கொலம்பியா மருத்துவமனையின் ஆராய்ச்சி மையம்.