Showing posts with label தூக்கம். Show all posts
Showing posts with label தூக்கம். Show all posts

நல்ல தூக்கம் நல்ல வாழ்க்கை (ஆடியோ தொடர்)


தூக்கம் முக்கியம்னு நம்ம எல்லாருக்குமே தெரியும்,  ஆனா அந்த தூக்கம் வந்தாதானேன்னு நம்மள பல பேர் நினைப்போம். நிம்மதியான தூக்கம் நிம்மதியான சிந்தனைகளை தரும். அது நம்ம வாழ்க்கையை நிம்மதியான பாதையை நோக்கி செயல்பட வைக்கும். அப்படிப்பட்ட தூக்கத்தை அடைய இந்த ஆடியோ புக்ல பல டிப்ஸ் சொல்லப்பட்ட இருக்கு. முழுவதையும் கேளுங்க.



ரு மனிதனோட அடிப்படைத் தேவையில் மிக முக்கியமான ஒன்று தூக்கம். படுத்ததுமே தூக்கம் வர்றதெல்லாம் ஒரு வரம்னு சொல்ற அளவுக்கு தற்போதைய உலகம் மாறிவிட்டது. ஏன்னா இப்ப பாதி பேரோட பெரிய பிரச்சனையே தூக்கமா தான் இருக்கு. தூக்கத்துக்கு பின்னால இருக்குற ரகசியத்தைப் பற்றி தெரிஞ்சுக்கிட்டீங்கன்னா கண்டிப்பா அத நீங்க ஃபாலோ பண்ணுவீங்க. உதாரணத்துக்கு நாள் ஃபுல்லா ரொம்ப டயர்டாகிற அளவிற்கு வேலை பார்த்தாலும் தூங்கி எழுந்ததுக்கு அப்புறம் ரொம்ப புத்துணர்ச்சியா இருக்குற மாதிரி நாம் பீல் பண்ணுவோம். டயர்டா இருந்தா நமக்கு ஆட்டோமேட்டிக்கா நமக்கு தூக்கம் நல்லா வரும். தூங்கி எந்திரிச்சா ஒரு புது உற்சாகம் கிடைக்குது. இதுக்கு பின்னால இருக்குற அறிவியலைப் பத்தி கண்டிப்பா நாம தெரிஞ்சுக்கணும். அப்ப தான் நம்ம உடலும் மனசும் தூங்குறப்ப என்ன மாதிரி நிலைக்கு போகுதுங்கறத புரிஞ்சுக்க முடியும். அப்படி நாம புரிஞ்சுக்கிறப்ப நம்மளுடைய நல்வாழ்க்கைக்கும் செயல்பாட்டிற்கும் தூக்கம் எவ்வளவு அவசியம் என்பதை நாம் உணர்வுபூர்வமா உணர முடியும்.

உங்க தூக்கத்தோட தரத்தை மேம்படுத்துவதற்கு பல வழிகள் இருக்கு. நிலையான தூக்க அட்டவனையை உருவாக்குவதில் ஆரம்பித்து இருந்து உங்க வாழ்க்கையில் அன்றாட வழக்கமா கொண்டு வர வரைக்கும் உங்க அன்றாட வாழ்க்கையில ஈஸியா நுழையக்கூடிய சில உதவி குறிப்ப இப்ப நாம பார்க்கலாம்.

முதல்ல தூங்குறதுக்கு தகுந்த சூழலை உருவாக்கணும். சில பேருக்கு கொஞ்சம் சத்தம் கேட்டா கூட தூக்கமே வராது. சில பேருக்கு வெளிச்சம் இருந்தால் தூக்கம் வராது. இன்னும் சில பேருக்கு இருட்டா இருந்தா தூக்கம் வராது. அதனால முதல்ல உங்களுக்கு என்ன மாதிரியான இடம் இருந்தா தூங்க முடியும் அப்படிங்கிறத தெரிஞ்சுக்கனும். அப்பத்தான் உங்க தூக்கத்தை கெடுக்கிற விஷயங்கள எப்படி சமாளிக்கிறது என்பதை உங்களால் தெரிஞ்சுக்க முடியும். அதிலும் குறிப்பாக தூங்க போறதுக்கு முன்னாடி மனச எப்படி லேசா வச்சிக்கிறது அப்படின்னு தெரிஞ்சிக்க முடியும். ஏன்னா சும்மா கண்ண மூடிட்டு படுத்து இருந்தா மட்டும் அது தூங்குறதோட சேராது இல்லையா? ரிலாக்ஸா இருக்குறப்ப மட்டும் தான் நம்மளால நிம்மதியா தூங்க முடியும்.

அடுத்து மனசு ரிலாக்ஸா இருக்குறப்ப உங்க உடம்பும் ரொம்ப சுறுசுறுப்பாக இருக்கும். காலையில் புத்துணர்ச்சியா இருக்குறத தாண்டி நல்லா ரெஸ்ட் எடுக்கிறப்ப நம்ம மனசும் உடம்பும் ஆரோக்கியமாக பீல் பண்ணும். குறிப்பா நம்ம அறிவாற்றல் சிறப்பா இருக்கும். அதாவது தெளிவா யோசிக்க முடியும். ரொம்ப தெளிவா பேச முடியும். தூக்கம் இல்லாதப்ப உங்களோட நினைவாற்றல் ரொம்ப ரொம்ப கம்மியா இருக்கும். அதுவே நல்ல தூக்கம் உங்க நினைவாற்றலை பலப்படுத்தும். உங்களுடைய கற்பனை திறனையும் அதிகப்படுத்தலாம். நம்ம மனச கட்டுப்பாட்டுக்குள்ள வச்சுக்க வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம். ஏன்னா நம்ம வாழ்க்கையில பல நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு சில தப்பான முடிவுகள நாம எடுத்துவிடுகிறோம் இல்லையா? இது எல்லாத்துக்கும் கூட தூக்கம் ஒரு காரணமா இருக்கு. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாறதுக்கும் தூக்கம் வரும் முக்கியமான காரணம்.

உதாரணத்துக்கு மருந்து சாப்பிட்டு தூங்குனா தான் அது ஒழுங்கா வேலை செய்யும். அதனால்தான் மாத்திரை சாப்பிட்டால் குறைந்தது 2 மணி நேரமாவது தூங்கணும்னு டாக்டர் சொல்றாங்க. நம்முடைய ஒட்டு மொத்த ஆயுளையும் நிர்ணயிக்கிற சக்தி தூக்கத்துக்கு இருக்கு. அடுத்து நம்ம ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்வுக்கும் தூக்கம் எவ்வளவு முக்கியம் என்பதை பார்க்கலாம். ஏன்னா தூக்கம் என்பது நமது செயலற்ற நிலை மட்டும் கிடையாது. நம்மளோட ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் முக்கியமான செயல்பாடு உடைய ஒரு செயல்முறை. ரொம்ப நாளா தூங்காம இருக்க இருகிறதோட விளைவா நாள்பட்ட நோய்கள் வர வாய்ப்பு இருக்கு. குறிப்பா அறிவாற்றல் குறைபாடு மனநல கோளாறு மாதிரியான சில விஷயங்கள் கூட வர வாய்ப்பு இருக்கு. போதுமான தூக்கம் இல்லாம இருந்தா என்னெல்லாம் ஆகும்னு தெரிஞ்சுகிட்டா தான் நமக்கு தூக்கத்தை விட அவசியம் இன்னும் ஆழமா புரியும்.

இப்ப பல பேர் தூங்குறதே கிடையாது. அதுலயும் இப்ப வீட்டுக்கு ஒருத்தர் விடிய விடிய ஸ்மார்ட் போன பாத்துட்டு தூங்காம தான் இருக்காங்க. யாரும் சரியா தூங்குறதே இல்லை. ஒரு மனுஷனுக்கு குறைந்தது ஆறிலிருந்து எட்டு மணி நேரம் தூங்குறது நம்ம எல்லாருக்குமே தெரியும். அப்படி நீங்க தூங்காதப்ப உங்க மூளையிலிருந்து இதயம் வரைக்கும் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பிருக்கு. சரியா தூங்கலைன்னா உங்களால புதுசா ஒரு விஷயத்தை கத்துக்கவே முடியாது. ஏன்னா கவனம் இல்லாம நம்மளால எதையுமே கத்துக்க முடியாது. ஒரு நாள் முழுக்க நீங்க தூங்கலைன்னா உங்க மூளை தூக்கத்துக்காக மட்டும் தான் போராடும் ஏங்கும். அப்படி இருக்குறப்ப நீங்க  ஏதாவது செய்ய முயற்சி பண்ணாலும் அதில உங்களால முழு மனசா செயல்பட முடியாது. தூக்கத்துக்கு பின்னாடி உடல் ரீதியான மாற்றங்கள் மட்டுமல்ல மன ரீதியான மாற்றங்களும் இருக்கு.

எல்லாருக்கும் ஒரு ஸ்லீப்பிங் பேட்டர்ன் இருக்கும் இல்லையா அது என்னன்னு தெரிஞ்சுக்கணும். ஏன்னா எல்லாராலையும் நைட் 9 மணிக்கு படுத்து காலைல நாலு மணிக்கு எந்திரிக்க முடியாது. சில பேருக்கு வேலை முடியறதுக்கு நைட்டு பத்து மணி ஆகும். சிலருக்கு நைட்டு தான் வேலையேஇருக்கும். உங்க வாழ்க்கையில என்ன மாதிரியான வளக்கத்தை பாலோ பண்றீங்க அப்படிங்கறதை நீங்க முதல்ல பாக்கணும். அதுவே உங்களுக்கு போதுமானதாக இருக்கா? இல்ல அந்த வழக்கத்தை இன்னும் கொஞ்சம் மாத்தணுமான்னு முதல்ல உங்கள நீங்களே கேட்டுக்கோங்க. அது சரியா இல்லைன்னு தோணுச்சுன்னா கண்டிப்பா அத மாத்த ட்ரை பண்ணனும்.

இன்னும் தூக்கத்தை பத்தி நிறைய விளக்கமா அடுத்த எபிசோட்ல மிஸ் பண்ணாம கேளுங்க.



தூக்கத்தோட தரத்தை அதிகப்படுத்த வேண்டுமென்றால் முதலில் தூங்குவதுக்கு ஏற்ற மாதிரியான சூழலை நாம் உருவாக்க வேண்டும். அதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டுமென்று இப்போது பார்க்கலாம். நம் மனது எப்போதுமே நாம் பார்ப்பதை, நம்மை சுற்றி இருக்குற விஷயங்களை வைத்துதான் முதலில் யோசிக்கும். உதாரணத்திற்கு நீங்கள் ரொம்ப ஆரோக்கியமாக இருந்தாலும் மருத்துவமனைக்குள் செல்லும்போது ஒருவித பயம் தானாகவே உருவாகும். அது பயம்ன்னு கிடையாது அங்கு இருக்கிற சூழல் உங்கள் மனதை கையாள ஆரம்பிக்கும். இன்னும் எளிமையாக சொல்லவேண்டுமென்றால் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் உங்கள் கூடவே இருக்கும் ஒருவர் சோகமாக இருந்தாரென்றால் தானாகவே நீங்களும் சோகமாக மாறிடுவிடுவீர்கள். அப்படித்தான் நம் பெட்ரூமும், தூங்குவதற்கு ஒரு நல்ல சூழலில் இருக்க வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம். 


பெட்ரூமில் ஜன்னல்

குறிப்பாக பெட்ரூமில் ஜன்னல் இருக்க வேண்டியது ரொம்ப ரொம்ப அவசியமான ஒன்று. ஏனென்றால் வெளிக்காற்று உள்ளே வரும்போதுதான் உள்ள இருக்கும் இறுக்கம் கொஞ்சம் குறையும். முடிந்த அளவிக்கு உங்கள் பெட்ரூமை உங்களுக்கு பிடித்த மாதிரி வைத்துக்கொள்வது நல்லது. உங்களுக்கு பிடித்த கலரில் பெயின்ட் பண்ணுறதுல ஆரம்பித்து மனதிற்கு அமைதியை கொடுக்கின்ற வார்த்தைகளை, படங்களை அங்கு வைக்கலாம். குறிப்பாக உங்கள் மனதை தொந்தரவு செய்கிற எந்தவொரு விஷயத்தையும் உங்கள் பெட்ரூமில் வைக்காதீர்கள். எவ்வளவு மன அழுத்தத்தோடு உங்கள் வீட்டிற்கு வந்தாலும் பெட்ரூமிற்குள் நுழைந்தவுடன் உங்கள் மனது ஓய்வாக உணரவேண்டும். அதுக்கு பெட்ரூமில் உள்ள பொருட்களை எல்லாம் கண்ட இடத்தில் தூக்கி போடக்கூடாது. எது எது எந்த இடத்தில் இருக்குமோ அது அது அந்த இடத்தில் வைக்கிற பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். 


மெத்தை தலையணை

இரவு நன்றாக தூங்க வேண்டுமென்றால் உங்கள் மெத்தை தலையணை எல்லாம் வசதியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் நம் உடம்பிக்கு என்ன தேவையென்று பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். இன்னும் சில பேருக்கு தரையில் படுத்தால் தான் தூக்கமே வரும். சில பேருக்கு மெத்தை எல்லாம் மென்மையானதாக சுத்தமாக இருக்க வேண்டும். சூடாக இருக்க கூடாது. இப்படி எல்லாம் எதிர்பார்ப்பார்கள். குறிப்பாக நம் தலையணையை  கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால் ரொம்ப பெரிய தலையணையை பயன்படுத்தினால் சிலருக்கு கழுத்து வலி ஏற்படும். சிலருக்கு முதுகு வலி ஏற்படுவதற்கு கூட வாய்ப்பு இருக்கு. அதனால் நம் உடலிற்கு தேவையான ஒரு படுக்கை அமைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.


சுத்தம்

அடுத்து சுத்தம். சுத்தம்கறது ஒரு முக்கியமான விஷயம். சுத்தம் அப்படிங்கிறதிலேயே வெளிச்சம் காற்றோட்டம் வெப்பநிலை இவை எல்லாமே வந்துவிடும். சிலர் வீட்டை குப்பை மாதிரி வைத்திருப்பார்கள். அவர்கள் அதிலேயே படுத்தும் பழகி இருப்பார்கள். ஆனால் அதெல்லாம் அவர்களது தூக்கத்தை ரொம்ப தொந்தரவு செய்யும். தூங்குறதால அவர்களுக்கு அது தெரியாது அவ்வளவுதான். மற்றபடி சுத்தமில்லாத இடத்தில் தூங்குகிறபோது நாம் சுத்தம் இல்லாத காற்றை சுவாசிக்கிற நிலைக்கு தள்ளப்படுவோம். என்னதான் தூங்கிட்டு இருந்தாலும் அங்க நாம் சுவாசித்து கொண்டுதானே இருப்போம். அதனால் பெட்ரூம் சுத்தமாக இருக்க வேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம்.


இரைச்சல்

அடுத்து இரைச்சல் இல்லாமல் பார்த்துக்கனும். அதாவது டிவி பாத்துகிட்டே தூங்குறது பாட்டு கேட்டுட்டு தூங்குறது இதெல்லாம் சில பேருக்கு பழக்கமா இருக்கும். இனிமையான இசையை  கேட்டுக்கொண்டே தூங்குவது நல்ல விஷயம் தான் ஆனால் டிவி பாத்துக்கொண்டே தூங்குவது ரொம்ப தப்பு. நீங்கள் தூங்கினாலும் வெளியில் இருந்து கேட்கிற சதம் உங்கள் மூளைய விழிப்புடனே வைத்திருக்கும். அதனால் உங்கள் மூளைக்கு போதிய ஓய்வெடுப்பதற்கான நேரம் கிடைக்காமல் போய்விடும். தேவையில்லாத சிந்தனை, கனவு இதெல்லாம் வருவதற்கான வாய்ப்பு அதிகம். 


வெப்பநிலை

அடுத்தது ரூமோட வெப்பநிலை நார்மலாக இருக்க வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம். ரொம்ப குளிரா இருந்தாலும் நம் தூக்கத்தைக் கெடுக்கும். ரொம்ப வெப்பமா இருந்தாலும் நம்ம தூக்கத்தை பாதிக்கும். 


அரோமா தெரப்பி

தூங்குறதுக்கு சில தெரப்பி எல்லாம் உள்ளது. அதை கூட நாம் முயற்சிக்கலாம். உதாரணத்திற்கு அரோமா தெரபி போன்ற சில விஷயங்களை நாம் தூங்குவதற்கு முன்னால முயற்சி பண்ணலாம். அரோமா தெரப்பிக்கும் தூக்கத்துக்கும் என்ன சம்பந்தம்? அப்படிங்கறத பாக்குறதுக்கு முன்னாடி அரோமா தெரப்பினா என்ன என்பதை பார்த்துவிடலாம். நல்ல வாசனை பிடிக்காதவங்கன்னு யாருமே இருக்க மாட்டாங்க. அதுலயும் சில வாசனையை நுகரும்போதே நம் மனது சேர்ந்து அமைதியாகும் அல்லவா? அதுலயும் நமக்கு பிடித்த வாசனையை சுவாசிக்கிறபோது நாம் வேற ஒரு உலகத்துக்கே போயிட்டு வர்ற மாதிரி இருக்கும். அப்படி சில அற்புதமான வாசனைகளை ஸ்பிரே மூலமாக கூட தூங்குறதுக்கு முன்னாடி சுவாசிக்கலாம். இப்ப கேண்டில் மாதிரி கூட வந்திருக்கு. அந்த மாதிரி நல்ல வாசனையை சுவாசிக்கிறப்ப உங்களுக்கு நிம்மதியான தூக்கம் வரும். அது மட்டும் இல்லாமல் இதெல்லாம் உங்களுடைய மன உளைச்சல் மன அழுத்தத்தை குறைக்கும்னு அறிவியல் பூர்வமா நிரூபித்திருக்கிறார்கள். எனவே உங்கள் பெட்ரூம் வாசனையாக இருக்கிறதும் அவசியமான ஒன்று. அதேநேரம் சில பேருக்கு அதிக வாசனை தலைவலியை உண்டாக்கிவிடும். சில பேருக்கு சில ஸ்மெல் அலர்ஜியைக் கொடுக்கும். அதனால உங்களுக்கு ஏற்ற மாதிரியான வாசனை திரவியத்தை உபயோகிக்க வேண்டியது மிக மிக முக்கியமான ஒன்று.


எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள்

அடுத்து நாம பார்க்கப் போற பாயிண்ட் ரொம்ப முக்கியமான விஷயம். நிறைய பேர் பின்பற்றாத விஷயம் இதுதான். பெட்ரூம்ல எலக்ட்ரானிக்ஸ் சாதனத்திற்கு அனுமதியே கொடுக்கக் கூடாது. டிவி, ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லட் இது மாதிரி எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அது உங்கள் தூக்கத்தை கண்டிப்பா கெடுக்கும். குறைந்தது தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னாடி அவற்றையெல்லாம் நம்மை விட்டு தள்ளி வைத்துவிட வேண்டும். இதை நாம் யாரும் செய்வதே கிடையாது. மொபைல்ல மூஞ்சிக்கு நேரா வச்சுட்டு தான் பெட்ரூமிற்கே வருவோம். அப்படியே படம் பார்த்துட்டு தூங்குவோம். ஆனால் இதெல்லாம் ரொம்ப தப்பான விஷயம். ஏனென்றால் இந்த எலக்ட்ரானிக் பொருளை பார்ப்பதால் அதன் தாக்கம் நம்மிடம் குறைந்தது இரண்டு மணி நேரமாவது இருக்கும். அந்த இரண்டு மணி நேரம் நிச்சயமாக உங்களால் நிம்மதியாக தூங்க முடியாது. கண்ணை மூடி இருக்கிற மாதிரி தெரிஞ்சாலும் உங்க ஆள் மனசு தூங்காமல் விழித்துக்கொண்டுதான் இருக்கும். அதனால் கண் சம்பந்தமாக பிரச்சனைகள் வருவதற்கும் அதிகமான வாய்ப்பிருக்கு. தூங்குவதற்காக இவ்வளவு பண்ணனுமான்னு நீங்கள் கேட்கலாம். கண்டிப்பாக தூங்வதற்கு இதையெல்லாம் பண்ணித்தான் ஆக வேண்டும். 

இன்னும் தூக்கத்தை பத்தி மாதிரி நிறைய விஷயங்களை விளக்கமா அடுத்த எபிசோட்ல மிஸ் பண்ணாம கேளுங்க.





தூங்குவதற்கு தகுந்த மாதிரியான ஒரு சூழ்நிலையை உருவாக்கினாலும் கூட பலரால் சீக்கிரமாக தூங்க முடிவதில்லை. என்ன செய்தாலும் நான் தூங்குவதற்கு 12 மணிக்கு மேலாகிறது என்று பலர் கேட்கலாம். ஏனென்றால் பலர் எத்தனை மணிக்கு தூங்கச் சென்றாலும் தாமதமாகத்தான் தூக்கம் வருகின்றது என்று கூறுகிறார்கள். அவர்களுக்கான சில டிப்ஸ் இந்த அத்தியாயத்தில் பார்க்கலாம். 

நீங்கள் சீக்கிரமாக தூங்குவதற்கு என்ன பண்ணனும், அதற்கு என்னவெல்லாம் தொழில்நுட்பம் இருக்கிறதென்பதை இந்த அத்தியாயத்தில் பார்க்கலாம். சில பேருக்கு தூக்கத்தில் இருந்தால் கூட சுற்றி நடக்கின்ற விஷயங்கள் அவர்கள் கவனத்தில் இருந்து கொண்டே இருக்கும். ஒரு சின்ன அசைவுகூட அவர்களை தூங்க விடாமல் தொந்தரவு பண்ணும். அவர்கலெல்லாம் தூக்கத்திற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். சுவாச பயிற்சி தியானம் போன்றவை அவர்களது தூக்கத்துக்கு உதவியாக இருக்கும். அதனால் தூங்குவதற்கு முன் இந்த மாதிரி தியானம் பண்ணுவதால் அவர்களது உடம்பும் சரி மனதும் சரி ரொம்ப அமைதியா உணரும். பொதுவாகவே நாம் குழப்பமாக இருக்கும்போது தூக்கமே வராது. அதுலயும் யார் மேலயாவது கோபம் வெறுப்பு இப்படி ஏதாவது இருந்தால் சுத்தமா தூக்கமே வராது. அந்த மாதிரி நேரத்தில் நாம் தியானம் யோகா போன்றவற்றை பண்ணும்போது நமது மனது அமைதியாகிவிடும். அதன்பிறகு நம்மால் நிம்மதியாக தூங்க முடியும். 


கோபத்தை கட்டுப்படுத்துவதும் தூங்குவதற்கு அவசியமான ஒன்று!

நீங்கள் அடிக்கடி கோபப்படுவீர்களென்றால் அது உங்கள் நிம்மதியான தூக்கத்தை கெடுக்கும். எனவே கோபத்தை எப்படி நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஏதோ ஒரு விஷயம் உங்கள் மனதில் ரொம்ப நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறதென்றால் அதை உடனே சரி பண்ணிட்டு தூங்குங்கள். என்ன செய்தாலும் இப்போதைக்கு அந்த பிரச்சனை தீராதென்றால் உங்கள் மனதிக்கு முதலில் புரிய வையுங்கள். நாம் யோசிப்பதால் ஒரு விஷயம் நடக்காதென்றால் அதை கொஞ்சம் தள்ளி வைக்கலாமல்லவா... ஏனென்றால் அமைதியாக படுத்து தூங்கினால் தான் தெளிவான ஒரு மனநிலை நமக்கு உருவாகும். 


எல்லாமே நம்மிடம் தான் உள்ளது!

நாம் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக நாம் மகிழ்ச்சியாகத்தான் இருப்போம். அதனால முடிந்தவரை எல்லாவற்றையும் நேர்மறையாக எதிர்கொள்வது ரொம்ப ரொம்ப நல்லது. அவ்வாறு நீங்கள் இருக்கும்போது உங்கள் மனதும் பதற்றப்படாமல் இருக்கும். சில பேரு எதற்கெடுத்தாலும் ரொம்ப பதற்றப்படுவார்கள், ரொம்ப கோவப்படுவார்கள். ஒரு சின்ன விஷயத்தை கூட ரொம்ப பெரிதாக்குவார்கள். அப்படியெல்லாம் நீங்கள் இருந்தீர்களென்றால் கண்டிப்பாக அந்த குணத்த மாற்றிக்கொள்ள வேண்டியது உங்களது பொறுப்பு. நடந்து முடிந்த ஒரு விஷயத்தை நினைத்து நினைத்து கவலைப்படுவதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. ஏனென்றால் அது நடந்து முடிந்து விட்டது. என்ன செய்தாலும் அது நடக்காதது போல் நம்மால் மாற்ற முடியாது. இதை மட்டும் மனதில் நன்றாக பதிவு செய்துகொண்டால் உங்களால் எப்போதும் நிம்மதியாக இருக்க முடியும். 

இரவில் ஸ்மார்ட்போனை தள்ளி வைத்து விட்டாலே தானாகவே தூக்கம் வர ஆரம்பித்துவிடும் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.


ரொம்ப முக்கியமான விஷயம் சாப்பாடு!

இரவு நேரத்தில் சில உணவுகளை சாப்பிடவே கூடாது. அதே மாதிரி சாப்பிட்ட உடனே படுக்கவும் கூடாது. உங்கள் இரவு சாப்பாட்டுக்கும் தூக்கத்துக்கும் இடையில குறைந்தது ஒரு மணி நேரமாவது இடைவேளை இருக்க வேண்டும். அதிகமான எண்ணெய் உணவுகளை இரவு நேரத்தில் சாப்பிடுவதை குறைத்துக்கொள்ள வேண்டும். கீரையை இரவு நேரத்தில் தவிர்ப்பது ரொம்ப நல்லது. எப்பவுமே காலையில் சாப்பிட வேண்டும். மதியம் கொஞ்சம் அளவா சாப்பிடணும். இரவு எளிதில் ஜீரணிக்கக்கூடிய ணவை உட்கொள்வது நல்லது. அதிலும் மெக்னீசியம் அதிகம் உள்ள பொருட்களை இரவு எடுத்துக்கொள்வது தூக்கத்துக்கு ரொம்ப நல்லது. இரவு சாப்பாட்டில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமான ஒன்று. அதேபோல் பகலில் தூங்குவதைவிட இரவு தூங்குவதுதான் நல்லது. பகலில் தூங்கும் பழக்கத்தை குறைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் பகலில் தூங்கிவிட்டால் இரவு கண்டிப்பாக தூக்கம் வராது.


தூங்குறதுக்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கணும்!

எப்பவுமே இந்த நேரம் உங்களுக்கு தூக்கம் வந்தாலும் தூக்கம் வரவில்லை என்றாலும் தூங்குவதற்காக ஒரு நிலையான நேரத்தை ஒதுக்கிவிட்டால் தானாகவே அந்த நேரம் வந்தவுடன் உங்களுக்கு தூக்கம் வர ஆரம்பித்துவிடும். ஆரோக்கியத்துக்கு பிரச்சினை வராத மாதிரி ஒரு நேரத்தை தூங்குவதற்கு ஒதுக்கிக் கொள்ளுங்கள். இதை ஆரம்பத்துல செய்வதற்கு கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். அதை நீங்கள் வாடிக்கையாக பின்பற்றும்போது நமக்கு பழகிவிடும். தூக்கத்தை எப்பவுமே எதற்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது. என்றைக்காவது ஒரு நாள் தூங்காமல் வேலை பார்த்தால் தப்பில்லை. அதற்காக தினமும் அப்படி பண்ணா ரொம்ப பெரிய தப்பு. ஏனென்றால் தற்போது ஏற்படுகிற பல நோய்க்கு காரணமே சரியாக தூங்காமல் இருப்பதுதான். தூக்கமே வரவில்லை என்றால் கூட இது ஓய்வெடுப்பதற்கான நேரம் என்று ஒதுக்கிக்கொள்ளுங்கள். தூங்காமல் படுத்திருந்தால் கூட சில சமயம் நன்றாக இருக்கும்.


வெறுமைநிலை!

வெறுமைநிலை தூக்கத்திற்கு பெரிய எதிரி என்று கூட சொல்லலாம். காரணமே இல்லாமல் கவலையாக இருப்பது. ஏதாவதொன்று நம் மனதை போட்டு குழப்பி கொண்டே இருக்கும். அதற்கு சரியான காரணம் நமக்கு தெரியாது. அதற்கான காரணம் நாம் எது மேலையும் ஒரு பிடிப்பு இல்லாமல் இருப்பது. இன்னைக்கான நாள்ல நீங்க உருப்படியா எதுவுமே செய்யலன்னா இந்த பிரச்சனை வரும். எனவே எந்த நாளையும் வீணாக்காமல் முடிந்த வரைக்கும் ஏதாவது ஒரு புது விஷயத்தை கற்றுக்கொள்வதை வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். ஏதோ ஒரு விஷயத்தை சாதித்துவிட்டோம் என்று நாம் உணர்ந்தால் அது கூட நமக்கு ஒரு நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கும். இரவு தூங்கச் செல்லும் முன் பேய் படம் பார்க்கிறது ஆக்சன் படம் பாக்குறது இப்படியெல்லாம் பார்பதற்கு பதிலாக புத்தகங்களை படிப்பது, குடும்பமாக உட்கார்ந்து பேசுவது போன்ற சில நல்ல பழக்க வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம். 

எண்ணம் போல் தான் வாழ்க்கை என்று நாம் கேள்விப்பட்டிருக்கோம். எனவே நல்ல சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இன்னும் நமக்கு தெரியாத பல விஷயங்கள் தெரிந்துகொள்ள அடுத்தடுத்த அத்தியாயங்களை பாருங்கள் கேளுங்கள்.




தொடரும்...


"கழிவின் தேக்கம் வியாதி; கழிவின் வெளியேற்றம் குணம்"

நோயின்றி ஆரோக்கியமாக வாழ புரிந்துகொண்டு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!



கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!


டுவா தூக்கம் (ஆழ்ந்த தூக்கம்)

டுவா தூக்கம் (ஆழ்ந்த தூக்கம்)


 டுவா என்றால் மலாய் மொழியில் (மலேசியாவில் உள்ள வழக்கு மொழியில்) இரண்டு என்று அர்த்தம். சாதாரணமாக நாம் ஒரு தூக்கம் மட்டுமே தூங்குகிறோம். இது இரட்டை தூக்கம் (Double Sleep). இது ஆழ்ந்த தூக்கத்தை குறிக்கும். இந்த ஆழ்ந்த தூக்கத்தின் மூலமாக நமது உடலில் அனைத்து நோய்களையும் குணப்படுத்தலாம். இதை வெறும் தூக்கம் என்று மட்டும் எண்ணிவிடாதீர்கள். இது ஒரு வகையான சிகிச்சை.

 நமது உடலில் மூன்று விஷயங்கள் உள்ளன.

    • உடல் - உடல் பற்றி நமக்கு நமக்கு ஏற்கனவே தெரியும்.
    • மனம் - மனம் என்பது கோபம், டென்ஷன், பயம், பிடித்திருகிறது, பிடிக்கவில்லை போன்ற விஷயங்களை ஆராய்ச்சி செய்வது.
    • புத்தி - புத்தி என்பது நல்லது, கெட்டது, சரி, தவறு என்று முடிவெடுத்து அந்த விஷயங்களை யோசிப்பதற்கு புத்தி என்று பெயர்.

 இவ்வாறு நம்மிடம் மூன்று விஷயங்கள் உள்ளன. உடலுக்கு நோய் என்றால் என்ன என்று தெரியாது. நமது உடல், உடலிலுள்ள அனைத்து செல்களும் 24 மணிநேரமும் நம் உடலிலுள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் வேலையை மட்டுமே சித்து கொண்டிருக்கின்றன.

 நமது புத்தியில் தான் நோய் இருக்கிறது. இந்த புத்தி மனதை கெடுத்து மாசுப்பட்ட மனம் உடலுக்குள் சென்று நோய்களை ஏற்படுத்துகிறது. எனவே நாம் நம்மை ஒரு நோயாளி என்று எண்ணும் போது அந்த நோய் பெரிதாகிறது. இதுவே நம்மை ஒரு ஆரோக்கியமான நபர் என்று என்னும்போது ஆரோக்கியம் பெரிதாகிறது. நம்மை பற்றி நாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோமா அது உடலில் நடைபெறுகிறது.

 உதாரணமாக ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு ஒருவர் தனித்தனியாகக் காரை ஓட்டிக்கொண்டு பயணம் செய்ய வேண்டும். அவர் காரை ஓட்டத் துவங்குவதற்கு முன்பே ‘500 கிலோ மீட்டர் 8 மணி நேரம் தொடர்ந்து காரை ஓட்டினால் நான் அந்த ஊருக்கு சென்ற உடன் களைப்படைந்து விடுவேன்’ என்றோ, நான் உடல் பலவீனப்பட்டு விடுவேன் என்றோ முதலிலேயே எண்ணினால் அப்படியே நடக்கும். அதாவது முதலிலேயே கற்பனை செய்து, முதலிலேயே முடிவெடுத்து தன் உடல் பலவீனமாகிவிடும் என்று புத்தியில் எண்ணுவதால் பிறகு அதன்படியே உடல் களைப்படைந்து விடுகிறது.

 நான் எப்போதும் என் புத்தியை உடலில் வேலை செய்யவே விடமாட்டேன். நான் அவ்வாறு கார் ஓட்டும் பொழுது அப்படி நினைத்துக்கூட பார்க்க மாட்டேன். அதனால் இரவு முழுவதும் கார் ஓட்டி முடித்த பிறகும் களைப்படைவதில்லை. ஆரோக்கியமாக இருப்பதற்கு வாய்ப்பாக உள்ளது. இது நமக்கு தெரியாது. எப்பொழுது நம் புத்தியை நிறுத்துகிறோமோ அப்பொழுது நமது உடலிலுள்ள நோய்கள் குணமாகிவிடும்.

 நான் கடந்த 7 வருடங்களாக தினமும் காலை 10 மணிமுதல் மாலி 6 மணிவரை ஒவ்வொரு ஊராக சென்று மைக்கில் பேசி வருகிறேன். அனால் பொதுவாக ஆசிரியர்கள், சொற்பொழிவாளர்கள், பேச்சாளர்கள், சில சாமியார்கள் 1 மணிநேரம் அல்லது 2 மணிநேரம் பேசிமுடித்த உடன் சோர்வு ஏற்ப்பட்டுவிடுகிறது. களைப்படைந்து விடுகிறார்கள். அவர்கள் நான் ஒரு மணிநேரம் பேசினேன் இரண்டு மணிநேரம் பேசினேன், மிகவும் களைப்படைந்துவிட்டேன் என்று கூறுகிறார்கள்.

 அப்படி இருக்கும்போது என்னால் எப்படி தினமும் 7,8 மணிநேரம் தொடர்ந்து பேசமுடிகிறது என்றால் நான் புத்தியில் மணிநேரம் பேசினால் களைப்படைந்து விடுவேன் என்ற எண்ணத்தை வைத்துக்கொள்வது கிடையாது.

 ஆனால் அதற்காக நான் களைப்படைய மாட்டேன் என்று அர்த்தம் கிடையாது. ஒரு வேலை திடீரென்று களைப்படையலாம். உடல் களைப்படையும் பொழுது அது உடலின் வேலை, உடலாகவே களைப்படையும் பொது அது ஓய்வு எடுத்துக்கொள்ளும் என்று எண்ணுவேன். ஆனால் நானாகவே என் உடல் களைப்படைந்து விடும் என்று முன்னரே முடிவு செய்ய மாட்டேன். எனவே தயவுசெய்து ஒரு விஷயத்தைப் புரிந்தது கொள்ளுங்கள். ஒரு மனிதனின் புத்தியை நிறுத்தி வைத்துவிட்டால் அந்த வினாடி முதலே உடலிலுள்ள நோய்கள் குணமடைய தொடங்குகின்றன. இதுதான் உண்மை.

 மறைமலை அடிகளார் இதை அரிதுயில் என்று கூறுகிறார். எப்பொழுது ஒரு மனிதன் அரிதுயில் அதாவது தன்னை மறந்து இந்த சிந்தனையும் இன்றி தூங்குகின்றானோ அவன் குணமடைய ஆரம்பிக்கிறான். நாம் தினமும் தூங்குகிறோம். ஆனால் நோய் இருக்கிறது. ஏன்னென்றால் உண்மையில் நாம் தூங்கவே இல்லை. இதை எப்படிக் கண்டுப்பிடிப்பது?

 தூங்கச்செல்லும்போது இரவு கடைசியாக எதைப்பற்றி யோசித்துத் கொண்டு தூங்கினோமோ அந்த விஷயத்தை காலை விழித்தவுடன் நாம் யோசித்த்தோம் என்றால் நமது புத்தி உடலில் வேலை செய்திருக்கிறது என்று அர்த்தம்.

 சில நேரங்களில் காலை எழுந்திருக்கும் பொழுது நாம் யார்? எங்கிருக்கிறோம்? நம் பெயர் என்ன? என்ன வேலை செய்துக்கொண்டிருக்கிறோம்? என்று எல்லாம் மறந்த நிலையில் எழுந்திருப்போம். இந்த மாதிரி எப்பொழுது எழுந்த்திருக்கிறோமோ அதுதான் உண்மையான ஆழ்ந்த தூக்கம்.

 சில குழந்தைகள் அந்த தூக்கத்தை தூங்குகின்றன. குழந்தைகள் எழுத்த உடன் அப்படியே அமர்ந்து இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அது சுறுசுறுப்படையும். அந்த மாதிரியான குழந்தைகள் ஆழ்நிலை தூக்கத்திற்கு சென்று வந்திருக்கின்றன என்று அர்த்தம்.

 சில குழந்தைகள் எழுத்த உடன் வேகமாக செயல்படும். அந்த குழந்தைகள் ஆழ்நிலை தூகன் கொள்ளவில்லை என்று அர்த்தம். இது பெரியவர்களுக்கும் பொருந்தும்.

இந்த அரிதுயில் என்ற (டுவா தூக்கம்) ஆழ்நிலைத் தூக்கத்திற்கு பலவிதமான வழிமுறைகள் உள்ளன. ஆனால் இருப்பதிலேயே உலகத்தில் மிகவும் சுலபமான ஒரு வலி முறையை நாம் கற்றுக்கொள்ள போகிறோம்.

 இந்த ஆழ்நிலைத் தூக்கத்திற்கு நாம் எப்படி எல்லா வேண்டும் என்றால் இதற்கு இருவர் தேவை. அதாவது ஒரே ஒருவர் மட்டுமே தனியாக இருக்கும் பொது அவரது புத்தி உடலுக்குள் வேலை செய்துக் கொண்டே இருக்கும். இரு உயிர்கள் எப்பொழுது ஒன்று சேர்கிறதோ அதாவது இரு உயிர்கள் என்பது இரண்டு நபர்களின் நுண்ணுடல் (சூட்சும உடம்பு) காந்த சக்தி (Aura) ஒன்று சேர்கிறதோ அப்பொழுது இருவரது புத்தியும் நிறுத்தப்படுகிறது. இது தான் இரகசியம். எனவே இந்த சிகிச்சைக்கு இருவர் தேவை.

 டுவா தூக்கம் தூங்க எண்ணுபவர்கள் அமைதியான சூழ்நிலையில் தரையில் ஒரு விரிப்பின் மீது அல்லது கட்டிலில் மல்லாந்த நிலையில் படுத்துக்கொள்ள வேண்டும். கால்கள் நீட்டியிருக்க வேண்டும். பின்னக்கூடாது. இரண்டு கைகளையும் தனித்தனியே பின்னாமல் தளர்வாக வைக்க வேண்டும். கண்களை மூடிக்கொள்ள வேண்டும். அவர் அமைதியாக படுத்திருக்க வேண்டும். சிகிச்சை அளிப்பவர் அவர் தலைக்கு மேலே ஒரு அடி தள்ளி அமைதியாக அமர்ந்துக் கொள்ள வேண்டும். அவர் தரையில் படுத்திருந்தால் தலைக்கு அருகில் அமர்ந்துக்கொள்ளலாம். சிகிச்சை பெறுபவர் கட்டிலில் படுத்திருந்தால் சிகிச்சை அளிப்பவர் நாற்காலியில் அமர்ந்துக்கொள்ளலாம்.

 சிகிச்சை அளிப்பவர் அமைதியாக அமர்ந்துக்கொண்டு இரண்டு கைகளிலும் உள்ள பாத்து விரல்களையும் அதன் நுனிப்பகுதியைக் கொண்டு சிகிச்சை பெறுபவரின் தலையில் அழுத்தம் கொடுக்க வேண்டும். அண்ணல் உலங்கை தலையில் படக்கூடாது. அதிகமாக அழுத்தக் கூடாது. அதற்காக பட்டும் படாமலும் வைக்கக் கூடாது. சிகிச்சை பெறுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பவரின் பத்து விரல்களும் தம் தலையில் அழுத்தம் கொடுக்கின்றன என்ற உணர்வு இருக்குமாறு அழுத்தம் தர வேண்டும். ஒரு தேங்காயை கையில் பிடிக்கும் பொது எப்படி பத்து இடங்களில் பத்து விரல்களும் படியுமோ அதைப்போல சிகிச்சை பெறுபவரின் தலையில் பத்து இடங்களில் தன்னுடைய பத்து விரல்களால் அழுத்தம் தர வேண்டும். சிகிச்சை கொடுப்பவர் இந்த முயற்சியையும் செய்ய வேண்டாம். அதாவது பிராண சக்தியை பிரபஞ்சத்திலிருந்து தன கைகளின் மூலமாக வாங்கி அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நினைத்து செயல்பட வேண்டியதில்லை. அவருக்கு பிராணக் ஹீலிங் தெரிந்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. தியானம் செய்தால் நல்லது. பிராணக் ஹீலிங் தெரிந்தால் அதை செயல்படுத்தினால் நல்லது. அண்ணல் தேவையில்லை. சும்மா உட்காந்திருந்தால் போதுமானது.இந்த சிகிச்சையை கொடுப்பவர் சும்மா உட்காந்திருக்க வேண்டும். தேவைப்பட்டால் அவர் காத்து ஒலி வாங்கி (EAR PHONE) மூலம் பாடல் கேட்டுக் கொள்ளலாம். அது அவர் மனதிற்கு பிடித்த அமைதியான, மென்மையான பாடலாக இருக்க வேண்டும். அந்த அறையில் தொலைக்காட்சி இயங்கிக்கொண்டிருக்க கூடாது. அலைபேசி சப்தம் எழுப்பாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த ஒரு சப்தமும் கேட்காமல் இருந்தால் மிகவும் நல்லது. முடிந்தவரை அழைப்புமணி (CALLING BELL), ஒலிப்பான் (HORN) போன்ற சப்தங்கள் எதுவும் இல்லாமல் அந்த அரை அமைதியாக இருந்தால் இந்த சிகிச்சையின் பலன் அதிகமாக கிடைக்கும். ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை சிகிச்சை கொடுப்பவர் கைவிரல்களை சற்று நகர்த்தி வேறு இடத்தில் அழுத்தம் கொடுக்கலாம். தலைபகுதிக்குள் மட்டுமே அந்த மாற்றம் இருக்கவேண்டும். முன்தலை, உச்சந்தலை, பின்தலை காதுகளுக்கு அருகில் உள்ள பகுதி ஆகிய இடங்களில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை மாற்றி அழுத்தம் கொடுத்துவர வேண்டும். ஏனென்றால் நமது மூளையில் இந்த இடங்களில் தொடுகின்றோமோ அந்தந்த இடம் சம்பந்தப்பட்ட இடங்கள் தூங்க ஆரம்பிக்கின்றன. தலையில் உள்ள அனைத்து இடங்களையும், தொட்டுவிட்டால் உடலில்; உள்ள அனைத்து உறுப்புகளும் தூங்கி தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளும். சிகிச்சை அளிப்பவர் கைகளில் வலி ஏற்பட்டால் ஒரு கையின் ஐந்து விரல்களை மட்டும் தலயில் வைத்துக்கொண்டு மற்றொரு கையின் ஐந்து விரல்களுக்கு ஓய்வு அளித்த்க்கொள்ளலாம்.இப்படி முதல் முறை சிகிச்சை கொடுக்கும் பொது குறைந்தது 4 மணிநேரம் தலையில் விரல்களால் அழுத்தம் தரவேண்டும்.

 நீங்கள் யாருக்காவது இந்த சிகிச்சையை செய்து பாருங்கள் முதல் அரைமணி நேரத்திலேயே உங்களால் சிகிச்சை அளிக்கப்படும் நபர் இதுவரை இல்லாத அளவுக்கு அரை மணிநேரம் சென்றவுடன் வித்தியாசமான முறையில் அதிக அளவில் குறட்டை விட்டு தன்னை மறந்து தூங்கிவிடுவார். படுத்திருப்பவருக்கு நான் யார்? இந்த ஊர்? போன்ற எதுவுமே தெரியாது. ஒருவேளை 4 மணி நேரத்திற்குப் பிகு முக்கியமான வேலை இருக்கிறது அல்லது விமான நிலையம் செல்லவேண்டும் என்ற நிலை இருந்தால் கூட அனைத்தையும் மறந்து அவர் தூங்கிவிடுவார்.அவர் அவ்வாறு தூங்குவதை நாம் உணர முடியும் என்றாலும் நாம் விரல்களால் அழுத்தம் கொடுப்பதை தொடர்ந்து செய்ய வேண்டும். எவ்வளவு நேரம் அழுத்தம் கொடுக்கிறோமோ அவ்வளவு ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்வார். எனவே முதல்முறை இந்தப் பயிற்சி சியும் பொது தயவுசெய்து குறைந்தது 4 மணி நேரத்திற்கு கைகளால் அழுத்தம் தர வேண்டும். அதற்கு தகுந்தார்போல் சிகிச்சை பெற்றுக் கொள்பவர் தேவைக்கு தகுந்தார் போல் உணவருந்திவிட்டு, தாகம் இருப்பின் புதிய அளவு நீர் அருந்திவிட்டு, இயற்க்கை உபாதைகளை நிறைவு செய்து விட்டு இந்த சிகிச்சையில் பங்கேற்க வேண்டும். சிகிச்சை அளிப்பவரும் அப்படியே. உனக்கு, நீர் போன்றவற்றை போதுமான அளவு எடுத்துக்கொண்டு புற வேலைகளை நிறைவு செய்து விட்டு பின் 4 மணிநேரம் அவருக்கு சிகிச்சை அளிக்க தயாராக வேண்டும். ஏனென்றால் ஒரு மணிநேரம் கழித்து சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வோ, மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வோ, பசி உணர்வோ ஏற்படும் பொழுது ஆழ்ந்த தூக்கத்திலிருந்து வெளியே வர வேண்டியகதாகிவிடும். எனவே சிகிச்சை தருபவர் சிகிச்சை பெற்று கொள்பவர் இருவருமே இதை கவனத்தில் கொள்ள வேண்டும். மற்றொரு முக்கியமான விஷயம், சிகிச்சை அளிப்பவர் இரண்டு மூன்று மூன்று நாட்கள் தூக்கமின்றி இருக்கும் நிலையிலோ, உடல் நிலை பாதிக்கப் பட்ட நிலையிலோ சிகிச்சை அளிக்கக் கூடாது. பெண்கள் மாதவிடாய் சமயத்தில் சிகிச்சை அளிக்க கூடாது. ஆனால் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். மிகவும் நோய்வாய்பட்டவர்கள் சிகிச்சை அளிக்க கூடாது. ஆனால் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

 வீட்டில் மிகபெரிய சோகமான நிகழ்ச்சி. நெருங்கிய உறவுகள் யாரேனும் தவறியிருக்கலாம். அத்தகைய சோகமான சூழ்நிலையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். சிகிச்சை அளிக்கக்கூடாது.

 சிகிச்சை அளிப்பவர் இளநீர், தண்ணீர், பழச்சாரு போன்றவற்றை அருகில் வைத்துக் கொண்டு தேவைப்பட்டால் பயன்படுத்திக்கொள்ளலாம்.சிகிச்சை பெற்றுக்கொள்பவருக்கு இது தேவைப்படாது. ஏனெனில் ஆழ்நிலைத் தூக்கத்திற்கு சென்று விடுவதால் அவருக்கு இது தேவைப்படாது.

 வாசியோகம் தெரிந்தவர்கள், பிராணாயாமம் தெரிந்தவர்கள் சிகிச்சை அளிக்கும் போது வாசியோகம் அல்லது பிராணாயாமம் சிதுக்கொண்டே சிகிச்சை அளிக்கும் போது மெகா அற்புதமான பலன் கிடைக்கும். பிராண ஹீலின் தெரிந்தவர்கள் பிராண சக்தியை தன் உடல் மூலமாக பெற்று தை சிகிச்சை பெறுபவரின் உடலில் அனுப்பும் போது நல்ல பயன் கிடைக்கும். தெரியாதவர்கள் அதைப்பற்றி கவலை பட வேண்டாம். சும்மா அழுத்தம் கொடுத்தால் போதுமானது. இப்படி செய்தால் அரைமணி நேரத்திற்கு பிறகு சிகிச்சை பெறுபவர் தூங்கிவிடுவார். சிகிச்சை அளிப்பவர் அமைதியாக் அமர்ந்து 4 மணி நேரம் சிகிச்சை கொடுத்தபின் மெதுவாக கையை எடுத்துவிட்டு தாங்களும் உறங்க செல்லவோ அல்லது வேறு வேளைகளிலோ ஈடுபடலாம். தூங்கிக்கொண்டு இருப்பார் அதற்கு பின் பல மணிநேரம் கழித்துதான் எழுவார். இதுவே தொடர்ந்து 48 மணிநேரம் தொடர்ந்து சிகிச்சை அகிக்கும் பட்சத்தில் 48 மணிநேரம் தூக்கத்தில் தான் இருப்பார். ஆனால் அப்படி சியைக் கூடாது. ஏனென்றால் 8 மணிநேரம் அல்லது 10 மணிநேரத்திற்குப் பிறகு உடலுக்கு தாகம், உணவு தேவை ஆகியவை ஏற்படும். மலம் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும். இந்த விஷவங்காலி சியாமல் அவருக்கு சிகிச்சை அளிக்க கூடாது. பலன் குறைந்து விடும். அதிகபட்சம் 10 மணிநேரம் முதல் 12 மணிநேரம் வரை சிகிச்சை அளித்தால் போதும். கைகளை எடுத்தவுடன் ஒருசிலர் அரைமணிநேரத்தில் எழுந்து விடுவார்கள், ஒருசிலர் 10 மணிநேரம் கூட தூங்குவார்கள். விட்டுவிடுங்கள். அது ஒவ்வொருவரின் உடலின் தேவையை பொறுத்தது. சிகிச்சையை குறைந்தபட்சம் 4 மணிநேரம் கொடுக்க வேண்டும். அடுத்தநாள் 4 மணிநேரம் சிகிச்சை அளித்தால் மிகவும் நல்லது. இல்லையென்றால் 1 மணிநேரம் சிகிச்சை அளிக்கலாம். குறைந்தது 1 மணிநேரம் சிகிச்சை அளிப்பதே பலன் அளிக்கும். யாராவது மிகபெரிய நோய் உள்ளவர்கள், உலக வைத்தியத்தால் குணப்படுத்த முடியாது என்று முடிவு செய்யப்பட வியாதிகள் அனைத்தும் இந்த முறையில் குணமடையலாம்.

 தினசரி 4 மணிநேரம் இதற்காக ஒதுக்கினால் போதும். ஒருவரை வேலைக்கு அமர்த்திக்கொண்டு இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம். தினசரி மற்ற நேரங்களில் TV, ஏதேனும் ஒன்றை பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்த வண்ணம் இருப்பதை போல் ஒருவரை வேலைக்கு சேர்த்துக்கொள்ளலாம்.

 குணப்படுத்த முடியாத வியாதி என்று கூறி அதற்கு பல இலட்சம் அல்லது கோடி ரூபாய் செலவு செய்து மருத்துவம் பார்ப்பதை விட இந்த மாதிரி ஒருவரை சிகிச்சைக்கு மாத சம்பளத்திற்கு நியமித்துக் கொள்வது நல்ல பயன் அளிக்கும். ஒருவருக்கு வேலை கொடுத்த மதிரும் ஆயிற்று. நம் வியாதி குணமடைந்த மாதிரியும் ஆயிற்று.

 வீட்டில் ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி இந்த சிகிச்சையை கொடுத்துக்கொள்ளலாம். ஒருவர் தலையில் இன்னொருவர் கைவைக்கும்போது இரண்டு பேருடைய ஆராக்களும் ஒன்று சேர்க்கிறது. இரண்டு உயிரும் கலக்கிறது. ஈருயிர் சேர்ந்து ஆழ்நிலைத் தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. இதற்குப் பெயர் டுவா தூக்கம்.

 இந்த சிகிச்சையை மலேசியாவில் உள்ள முத்தம்மாள் என்கிற பெண்ணுக்கு அவரது தாத்தா கற்றுக்கொடுத்திருகிறார். அவர் ஒரு மலேசியா வாழ் தமிழர். இந்த சிகிச்சை அப்பொழுது யாருமே கண்டுக்கொள்ளவில்லை. இதுவரை யாருமே பயிற்சி செய்யவில்லை. ஆனால் இப்போது அவர் எனக்கு கற்றுக்கொடுத்தார். நான் எனக்கும் மற்றவர்க்கும் இதை செயல்படுத்தி பார்த்தேன். மிகவும் அற்புதமாக இருக்கிறது. அதனால் தற்போது இதைப்பற்றி எல்லா வகுப்புகளிலும் பேசிக்கொண்டு இருக்கிறேன். இந்த ஒரே ஒரு சிகிச்சை மட்டும் தெரிந்துக்கொண்டால் மனது உலகை ஆரோக்கியப்படுத்தி விடலாம். இதைதான் கட்டிப்பிடி வைத்தியம் என்று கூறினார்களோ என்னவோ? வசூல் ராஜா M.B.B.S திரைப்படத்தில் கட்டிப்பிடி வைத்தியம் என்று இருக்கிறது.



 இப்பொழுது யோசித்துப் பார்கிறேன், குழந்தைக்கு நோய் வந்தால் மடியில் படுக்க வைத்து அதன் தலையை தடவி கொடுக்கிறோம். இன்னொருவர் அருகில் இருந்தால் போதும். ஒருவருக்கு நோய் வந்தால் மற்றொருவர் அருகில் ஆதரவாக இருந்தாலே போதும் என்பது உண்மை. அனால் இப்பொழுது அனைவரும் அனாதைகளாக சுற்றிக் கொண்டிருக்கிறோம். இன்றைய நாகரீக வாழ்கையில் பெரும்பாலானோர் கூட்டு கும்பமாக இல்லை. ஏன் கணவன் மனைவிகூட வாரம் ஒரு நாள் மாதம் ஒரு நாள் சந்தித்துக் கொள்கிறார்கள். வேலை அல்லது தொழில்ரீதியான காரணங்களால் தனித்தனியே வாழ்கின்றனர். இதனால் இந்த தனிமையான வாழ்க்கை முறையே அவர்களுக்கு நோயைக் கொண்டுவருகிறது. எப்பொழுதும் இருவர் ஒன்று சேர்ந்து வாழும் போது நம் மனதுக்கும் பிடித்தவர்கள் உடன் இருக்கும்போது மனது நோய்கள் குணமடைகிறது. பல கணவன் மனைவிமார்கள் இருவரும் ஒன்று சேர்ந்து இருக்கும் போது அன்பாக அமைதியாக ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்கள். குழந்தைகள் பெற்றோர்களை கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்குவதைப் பார்த்திருக்கிறோம். அந்த குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் டுவா தூக்கம் அங்கே நடைபெறுகிறது. எனவே இனி தினமும் டுவா தூக்கம் கொள்வோம். நமது உடலிலுள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்தி ஆனந்தமாக ஆரோக்கியமாக வாழ்வோம். எனவே இதை யார் யாருக்கு வேண்டுமானாலும் செய்யலாம். எனவே இனிமேல் யாருடைய நோயையாவது குணப்படுத்த வேண்டும் என்று எண்ணினால் எதைபற்றியும் கவலைபடாமல் உங்களுக்கு எந்தவித வர்மா புள்ளியோ, பிராண ஹீலிங்க்கோ, முத்ரா, ரெய்க்கி, நியுரோ தெரபி போன்ற எதுவும் தெரிந்திரிக்க வேண்டிய அவசியம் இல்லை. யார் மீது உணகளுக்கு அக்கறை இருக்கிறதோ, அவர்களை படுக்க வைத்து அவர்கள் தலையில் 10 மணிநேரம் கையை வையுங்கள். அவர்கள் ஆரோக்கியம் அடைவார்கள். இந்த முறையை நான் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் தங்கள் கையைக் கொண்டு இந்த சிகிச்சையை அளிக்கலாம். இதற்க்கு நான் தேவை இல்லை. எனவே இதை புரிந்துக்கொண்டு மற்றவர்கல்லும் கற்றுக்கொடுங்கள். மற்றவர்களையும் தெளிவுப்படுத்துங்கள்.

 ஒரு விஷயம் பாருங்கள்! இதை கற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு சொல்லிகொடுக்க ஒரு அரைமணி நேரம் ஆகுமா? உங்கள் உறவினர்கள் நண்பர்கள் என அனைவருக்கும் சொல்லிதாருங்கள். கேட்கிறார்களோ, இல்லையோ உங்களுக்கு தெரிந்த இந்த சிகிச்சையை மற்றவர்கல்லும் சொல்லி கொடுங்கள். ஒருவேளை இந்த சிகிச்சையை அவர்கள் பயன்படுத்தி நன்மை அடைந்தால் உங்களை தேடி வந்து உங்களை வாழ்த்திவிட்டு செல்வார்கள் பாருங்கள். அந்த சந்தோஷத்திற்கு ஈடு இணையே கிடையாது.

 நாம் பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம், என்று இல்லாமல் எல்லோருக்கும் நன்மை அளிக்கும் விதமாக ஏதாவது செயல் புரிய வேண்டும். இப்பொழுது முதல் ஒரு சங்கல்ப்பம் எடுத்துக் கொள்ளுங்கள் இந்த சிகிச்சையை எனது நண்பர்கள், உறவினர்கள், எனக்கு தெறிந்த மற்ற எல்லோருக்கும் கற்றுக்கொடுப்பேன். பேருந்து பயணம் அல்லது வழிப்பயணம் செய்யும் போதோ எதுவாக இருந்தாலும் நான் சந்திக்கும் நபர்களுக்கு ஒரு அரைமணிநேரம் இதைப்பற்றி சொல்லிக்கொடுப்பேன். இதன் மூலமாக எனக்கு புண்ணியம் கிடைகிறது என்று எண்ணி கொள்வேன். இந்த டுவா தூக்கம் மூலமாக, அரிதுயில் மூலமாக ஆழ்நிலைத் தூக்கம் மூலமாக நம் உடலில் உள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.

நன்றி - ஹீலர் பாஸ்கர்