Showing posts with label நல்ல தூக்கம் நல்ல வாழ்க்கை. Show all posts
Showing posts with label நல்ல தூக்கம் நல்ல வாழ்க்கை. Show all posts

நல்ல தூக்கம் நல்ல வாழ்க்கை (ஆடியோ தொடர்)


தூக்கம் முக்கியம்னு நம்ம எல்லாருக்குமே தெரியும்,  ஆனா அந்த தூக்கம் வந்தாதானேன்னு நம்மள பல பேர் நினைப்போம். நிம்மதியான தூக்கம் நிம்மதியான சிந்தனைகளை தரும். அது நம்ம வாழ்க்கையை நிம்மதியான பாதையை நோக்கி செயல்பட வைக்கும். அப்படிப்பட்ட தூக்கத்தை அடைய இந்த ஆடியோ புக்ல பல டிப்ஸ் சொல்லப்பட்ட இருக்கு. முழுவதையும் கேளுங்க.



ரு மனிதனோட அடிப்படைத் தேவையில் மிக முக்கியமான ஒன்று தூக்கம். படுத்ததுமே தூக்கம் வர்றதெல்லாம் ஒரு வரம்னு சொல்ற அளவுக்கு தற்போதைய உலகம் மாறிவிட்டது. ஏன்னா இப்ப பாதி பேரோட பெரிய பிரச்சனையே தூக்கமா தான் இருக்கு. தூக்கத்துக்கு பின்னால இருக்குற ரகசியத்தைப் பற்றி தெரிஞ்சுக்கிட்டீங்கன்னா கண்டிப்பா அத நீங்க ஃபாலோ பண்ணுவீங்க. உதாரணத்துக்கு நாள் ஃபுல்லா ரொம்ப டயர்டாகிற அளவிற்கு வேலை பார்த்தாலும் தூங்கி எழுந்ததுக்கு அப்புறம் ரொம்ப புத்துணர்ச்சியா இருக்குற மாதிரி நாம் பீல் பண்ணுவோம். டயர்டா இருந்தா நமக்கு ஆட்டோமேட்டிக்கா நமக்கு தூக்கம் நல்லா வரும். தூங்கி எந்திரிச்சா ஒரு புது உற்சாகம் கிடைக்குது. இதுக்கு பின்னால இருக்குற அறிவியலைப் பத்தி கண்டிப்பா நாம தெரிஞ்சுக்கணும். அப்ப தான் நம்ம உடலும் மனசும் தூங்குறப்ப என்ன மாதிரி நிலைக்கு போகுதுங்கறத புரிஞ்சுக்க முடியும். அப்படி நாம புரிஞ்சுக்கிறப்ப நம்மளுடைய நல்வாழ்க்கைக்கும் செயல்பாட்டிற்கும் தூக்கம் எவ்வளவு அவசியம் என்பதை நாம் உணர்வுபூர்வமா உணர முடியும்.

உங்க தூக்கத்தோட தரத்தை மேம்படுத்துவதற்கு பல வழிகள் இருக்கு. நிலையான தூக்க அட்டவனையை உருவாக்குவதில் ஆரம்பித்து இருந்து உங்க வாழ்க்கையில் அன்றாட வழக்கமா கொண்டு வர வரைக்கும் உங்க அன்றாட வாழ்க்கையில ஈஸியா நுழையக்கூடிய சில உதவி குறிப்ப இப்ப நாம பார்க்கலாம்.

முதல்ல தூங்குறதுக்கு தகுந்த சூழலை உருவாக்கணும். சில பேருக்கு கொஞ்சம் சத்தம் கேட்டா கூட தூக்கமே வராது. சில பேருக்கு வெளிச்சம் இருந்தால் தூக்கம் வராது. இன்னும் சில பேருக்கு இருட்டா இருந்தா தூக்கம் வராது. அதனால முதல்ல உங்களுக்கு என்ன மாதிரியான இடம் இருந்தா தூங்க முடியும் அப்படிங்கிறத தெரிஞ்சுக்கனும். அப்பத்தான் உங்க தூக்கத்தை கெடுக்கிற விஷயங்கள எப்படி சமாளிக்கிறது என்பதை உங்களால் தெரிஞ்சுக்க முடியும். அதிலும் குறிப்பாக தூங்க போறதுக்கு முன்னாடி மனச எப்படி லேசா வச்சிக்கிறது அப்படின்னு தெரிஞ்சிக்க முடியும். ஏன்னா சும்மா கண்ண மூடிட்டு படுத்து இருந்தா மட்டும் அது தூங்குறதோட சேராது இல்லையா? ரிலாக்ஸா இருக்குறப்ப மட்டும் தான் நம்மளால நிம்மதியா தூங்க முடியும்.

அடுத்து மனசு ரிலாக்ஸா இருக்குறப்ப உங்க உடம்பும் ரொம்ப சுறுசுறுப்பாக இருக்கும். காலையில் புத்துணர்ச்சியா இருக்குறத தாண்டி நல்லா ரெஸ்ட் எடுக்கிறப்ப நம்ம மனசும் உடம்பும் ஆரோக்கியமாக பீல் பண்ணும். குறிப்பா நம்ம அறிவாற்றல் சிறப்பா இருக்கும். அதாவது தெளிவா யோசிக்க முடியும். ரொம்ப தெளிவா பேச முடியும். தூக்கம் இல்லாதப்ப உங்களோட நினைவாற்றல் ரொம்ப ரொம்ப கம்மியா இருக்கும். அதுவே நல்ல தூக்கம் உங்க நினைவாற்றலை பலப்படுத்தும். உங்களுடைய கற்பனை திறனையும் அதிகப்படுத்தலாம். நம்ம மனச கட்டுப்பாட்டுக்குள்ள வச்சுக்க வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம். ஏன்னா நம்ம வாழ்க்கையில பல நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு சில தப்பான முடிவுகள நாம எடுத்துவிடுகிறோம் இல்லையா? இது எல்லாத்துக்கும் கூட தூக்கம் ஒரு காரணமா இருக்கு. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாறதுக்கும் தூக்கம் வரும் முக்கியமான காரணம்.

உதாரணத்துக்கு மருந்து சாப்பிட்டு தூங்குனா தான் அது ஒழுங்கா வேலை செய்யும். அதனால்தான் மாத்திரை சாப்பிட்டால் குறைந்தது 2 மணி நேரமாவது தூங்கணும்னு டாக்டர் சொல்றாங்க. நம்முடைய ஒட்டு மொத்த ஆயுளையும் நிர்ணயிக்கிற சக்தி தூக்கத்துக்கு இருக்கு. அடுத்து நம்ம ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்வுக்கும் தூக்கம் எவ்வளவு முக்கியம் என்பதை பார்க்கலாம். ஏன்னா தூக்கம் என்பது நமது செயலற்ற நிலை மட்டும் கிடையாது. நம்மளோட ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் முக்கியமான செயல்பாடு உடைய ஒரு செயல்முறை. ரொம்ப நாளா தூங்காம இருக்க இருகிறதோட விளைவா நாள்பட்ட நோய்கள் வர வாய்ப்பு இருக்கு. குறிப்பா அறிவாற்றல் குறைபாடு மனநல கோளாறு மாதிரியான சில விஷயங்கள் கூட வர வாய்ப்பு இருக்கு. போதுமான தூக்கம் இல்லாம இருந்தா என்னெல்லாம் ஆகும்னு தெரிஞ்சுகிட்டா தான் நமக்கு தூக்கத்தை விட அவசியம் இன்னும் ஆழமா புரியும்.

இப்ப பல பேர் தூங்குறதே கிடையாது. அதுலயும் இப்ப வீட்டுக்கு ஒருத்தர் விடிய விடிய ஸ்மார்ட் போன பாத்துட்டு தூங்காம தான் இருக்காங்க. யாரும் சரியா தூங்குறதே இல்லை. ஒரு மனுஷனுக்கு குறைந்தது ஆறிலிருந்து எட்டு மணி நேரம் தூங்குறது நம்ம எல்லாருக்குமே தெரியும். அப்படி நீங்க தூங்காதப்ப உங்க மூளையிலிருந்து இதயம் வரைக்கும் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பிருக்கு. சரியா தூங்கலைன்னா உங்களால புதுசா ஒரு விஷயத்தை கத்துக்கவே முடியாது. ஏன்னா கவனம் இல்லாம நம்மளால எதையுமே கத்துக்க முடியாது. ஒரு நாள் முழுக்க நீங்க தூங்கலைன்னா உங்க மூளை தூக்கத்துக்காக மட்டும் தான் போராடும் ஏங்கும். அப்படி இருக்குறப்ப நீங்க  ஏதாவது செய்ய முயற்சி பண்ணாலும் அதில உங்களால முழு மனசா செயல்பட முடியாது. தூக்கத்துக்கு பின்னாடி உடல் ரீதியான மாற்றங்கள் மட்டுமல்ல மன ரீதியான மாற்றங்களும் இருக்கு.

எல்லாருக்கும் ஒரு ஸ்லீப்பிங் பேட்டர்ன் இருக்கும் இல்லையா அது என்னன்னு தெரிஞ்சுக்கணும். ஏன்னா எல்லாராலையும் நைட் 9 மணிக்கு படுத்து காலைல நாலு மணிக்கு எந்திரிக்க முடியாது. சில பேருக்கு வேலை முடியறதுக்கு நைட்டு பத்து மணி ஆகும். சிலருக்கு நைட்டு தான் வேலையேஇருக்கும். உங்க வாழ்க்கையில என்ன மாதிரியான வளக்கத்தை பாலோ பண்றீங்க அப்படிங்கறதை நீங்க முதல்ல பாக்கணும். அதுவே உங்களுக்கு போதுமானதாக இருக்கா? இல்ல அந்த வழக்கத்தை இன்னும் கொஞ்சம் மாத்தணுமான்னு முதல்ல உங்கள நீங்களே கேட்டுக்கோங்க. அது சரியா இல்லைன்னு தோணுச்சுன்னா கண்டிப்பா அத மாத்த ட்ரை பண்ணனும்.

இன்னும் தூக்கத்தை பத்தி நிறைய விளக்கமா அடுத்த எபிசோட்ல மிஸ் பண்ணாம கேளுங்க.



தூக்கத்தோட தரத்தை அதிகப்படுத்த வேண்டுமென்றால் முதலில் தூங்குவதுக்கு ஏற்ற மாதிரியான சூழலை நாம் உருவாக்க வேண்டும். அதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டுமென்று இப்போது பார்க்கலாம். நம் மனது எப்போதுமே நாம் பார்ப்பதை, நம்மை சுற்றி இருக்குற விஷயங்களை வைத்துதான் முதலில் யோசிக்கும். உதாரணத்திற்கு நீங்கள் ரொம்ப ஆரோக்கியமாக இருந்தாலும் மருத்துவமனைக்குள் செல்லும்போது ஒருவித பயம் தானாகவே உருவாகும். அது பயம்ன்னு கிடையாது அங்கு இருக்கிற சூழல் உங்கள் மனதை கையாள ஆரம்பிக்கும். இன்னும் எளிமையாக சொல்லவேண்டுமென்றால் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் உங்கள் கூடவே இருக்கும் ஒருவர் சோகமாக இருந்தாரென்றால் தானாகவே நீங்களும் சோகமாக மாறிடுவிடுவீர்கள். அப்படித்தான் நம் பெட்ரூமும், தூங்குவதற்கு ஒரு நல்ல சூழலில் இருக்க வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம். 


பெட்ரூமில் ஜன்னல்

குறிப்பாக பெட்ரூமில் ஜன்னல் இருக்க வேண்டியது ரொம்ப ரொம்ப அவசியமான ஒன்று. ஏனென்றால் வெளிக்காற்று உள்ளே வரும்போதுதான் உள்ள இருக்கும் இறுக்கம் கொஞ்சம் குறையும். முடிந்த அளவிக்கு உங்கள் பெட்ரூமை உங்களுக்கு பிடித்த மாதிரி வைத்துக்கொள்வது நல்லது. உங்களுக்கு பிடித்த கலரில் பெயின்ட் பண்ணுறதுல ஆரம்பித்து மனதிற்கு அமைதியை கொடுக்கின்ற வார்த்தைகளை, படங்களை அங்கு வைக்கலாம். குறிப்பாக உங்கள் மனதை தொந்தரவு செய்கிற எந்தவொரு விஷயத்தையும் உங்கள் பெட்ரூமில் வைக்காதீர்கள். எவ்வளவு மன அழுத்தத்தோடு உங்கள் வீட்டிற்கு வந்தாலும் பெட்ரூமிற்குள் நுழைந்தவுடன் உங்கள் மனது ஓய்வாக உணரவேண்டும். அதுக்கு பெட்ரூமில் உள்ள பொருட்களை எல்லாம் கண்ட இடத்தில் தூக்கி போடக்கூடாது. எது எது எந்த இடத்தில் இருக்குமோ அது அது அந்த இடத்தில் வைக்கிற பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். 


மெத்தை தலையணை

இரவு நன்றாக தூங்க வேண்டுமென்றால் உங்கள் மெத்தை தலையணை எல்லாம் வசதியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் நம் உடம்பிக்கு என்ன தேவையென்று பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். இன்னும் சில பேருக்கு தரையில் படுத்தால் தான் தூக்கமே வரும். சில பேருக்கு மெத்தை எல்லாம் மென்மையானதாக சுத்தமாக இருக்க வேண்டும். சூடாக இருக்க கூடாது. இப்படி எல்லாம் எதிர்பார்ப்பார்கள். குறிப்பாக நம் தலையணையை  கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால் ரொம்ப பெரிய தலையணையை பயன்படுத்தினால் சிலருக்கு கழுத்து வலி ஏற்படும். சிலருக்கு முதுகு வலி ஏற்படுவதற்கு கூட வாய்ப்பு இருக்கு. அதனால் நம் உடலிற்கு தேவையான ஒரு படுக்கை அமைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.


சுத்தம்

அடுத்து சுத்தம். சுத்தம்கறது ஒரு முக்கியமான விஷயம். சுத்தம் அப்படிங்கிறதிலேயே வெளிச்சம் காற்றோட்டம் வெப்பநிலை இவை எல்லாமே வந்துவிடும். சிலர் வீட்டை குப்பை மாதிரி வைத்திருப்பார்கள். அவர்கள் அதிலேயே படுத்தும் பழகி இருப்பார்கள். ஆனால் அதெல்லாம் அவர்களது தூக்கத்தை ரொம்ப தொந்தரவு செய்யும். தூங்குறதால அவர்களுக்கு அது தெரியாது அவ்வளவுதான். மற்றபடி சுத்தமில்லாத இடத்தில் தூங்குகிறபோது நாம் சுத்தம் இல்லாத காற்றை சுவாசிக்கிற நிலைக்கு தள்ளப்படுவோம். என்னதான் தூங்கிட்டு இருந்தாலும் அங்க நாம் சுவாசித்து கொண்டுதானே இருப்போம். அதனால் பெட்ரூம் சுத்தமாக இருக்க வேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம்.


இரைச்சல்

அடுத்து இரைச்சல் இல்லாமல் பார்த்துக்கனும். அதாவது டிவி பாத்துகிட்டே தூங்குறது பாட்டு கேட்டுட்டு தூங்குறது இதெல்லாம் சில பேருக்கு பழக்கமா இருக்கும். இனிமையான இசையை  கேட்டுக்கொண்டே தூங்குவது நல்ல விஷயம் தான் ஆனால் டிவி பாத்துக்கொண்டே தூங்குவது ரொம்ப தப்பு. நீங்கள் தூங்கினாலும் வெளியில் இருந்து கேட்கிற சதம் உங்கள் மூளைய விழிப்புடனே வைத்திருக்கும். அதனால் உங்கள் மூளைக்கு போதிய ஓய்வெடுப்பதற்கான நேரம் கிடைக்காமல் போய்விடும். தேவையில்லாத சிந்தனை, கனவு இதெல்லாம் வருவதற்கான வாய்ப்பு அதிகம். 


வெப்பநிலை

அடுத்தது ரூமோட வெப்பநிலை நார்மலாக இருக்க வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம். ரொம்ப குளிரா இருந்தாலும் நம் தூக்கத்தைக் கெடுக்கும். ரொம்ப வெப்பமா இருந்தாலும் நம்ம தூக்கத்தை பாதிக்கும். 


அரோமா தெரப்பி

தூங்குறதுக்கு சில தெரப்பி எல்லாம் உள்ளது. அதை கூட நாம் முயற்சிக்கலாம். உதாரணத்திற்கு அரோமா தெரபி போன்ற சில விஷயங்களை நாம் தூங்குவதற்கு முன்னால முயற்சி பண்ணலாம். அரோமா தெரப்பிக்கும் தூக்கத்துக்கும் என்ன சம்பந்தம்? அப்படிங்கறத பாக்குறதுக்கு முன்னாடி அரோமா தெரப்பினா என்ன என்பதை பார்த்துவிடலாம். நல்ல வாசனை பிடிக்காதவங்கன்னு யாருமே இருக்க மாட்டாங்க. அதுலயும் சில வாசனையை நுகரும்போதே நம் மனது சேர்ந்து அமைதியாகும் அல்லவா? அதுலயும் நமக்கு பிடித்த வாசனையை சுவாசிக்கிறபோது நாம் வேற ஒரு உலகத்துக்கே போயிட்டு வர்ற மாதிரி இருக்கும். அப்படி சில அற்புதமான வாசனைகளை ஸ்பிரே மூலமாக கூட தூங்குறதுக்கு முன்னாடி சுவாசிக்கலாம். இப்ப கேண்டில் மாதிரி கூட வந்திருக்கு. அந்த மாதிரி நல்ல வாசனையை சுவாசிக்கிறப்ப உங்களுக்கு நிம்மதியான தூக்கம் வரும். அது மட்டும் இல்லாமல் இதெல்லாம் உங்களுடைய மன உளைச்சல் மன அழுத்தத்தை குறைக்கும்னு அறிவியல் பூர்வமா நிரூபித்திருக்கிறார்கள். எனவே உங்கள் பெட்ரூம் வாசனையாக இருக்கிறதும் அவசியமான ஒன்று. அதேநேரம் சில பேருக்கு அதிக வாசனை தலைவலியை உண்டாக்கிவிடும். சில பேருக்கு சில ஸ்மெல் அலர்ஜியைக் கொடுக்கும். அதனால உங்களுக்கு ஏற்ற மாதிரியான வாசனை திரவியத்தை உபயோகிக்க வேண்டியது மிக மிக முக்கியமான ஒன்று.


எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள்

அடுத்து நாம பார்க்கப் போற பாயிண்ட் ரொம்ப முக்கியமான விஷயம். நிறைய பேர் பின்பற்றாத விஷயம் இதுதான். பெட்ரூம்ல எலக்ட்ரானிக்ஸ் சாதனத்திற்கு அனுமதியே கொடுக்கக் கூடாது. டிவி, ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லட் இது மாதிரி எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அது உங்கள் தூக்கத்தை கண்டிப்பா கெடுக்கும். குறைந்தது தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னாடி அவற்றையெல்லாம் நம்மை விட்டு தள்ளி வைத்துவிட வேண்டும். இதை நாம் யாரும் செய்வதே கிடையாது. மொபைல்ல மூஞ்சிக்கு நேரா வச்சுட்டு தான் பெட்ரூமிற்கே வருவோம். அப்படியே படம் பார்த்துட்டு தூங்குவோம். ஆனால் இதெல்லாம் ரொம்ப தப்பான விஷயம். ஏனென்றால் இந்த எலக்ட்ரானிக் பொருளை பார்ப்பதால் அதன் தாக்கம் நம்மிடம் குறைந்தது இரண்டு மணி நேரமாவது இருக்கும். அந்த இரண்டு மணி நேரம் நிச்சயமாக உங்களால் நிம்மதியாக தூங்க முடியாது. கண்ணை மூடி இருக்கிற மாதிரி தெரிஞ்சாலும் உங்க ஆள் மனசு தூங்காமல் விழித்துக்கொண்டுதான் இருக்கும். அதனால் கண் சம்பந்தமாக பிரச்சனைகள் வருவதற்கும் அதிகமான வாய்ப்பிருக்கு. தூங்குவதற்காக இவ்வளவு பண்ணனுமான்னு நீங்கள் கேட்கலாம். கண்டிப்பாக தூங்வதற்கு இதையெல்லாம் பண்ணித்தான் ஆக வேண்டும். 

இன்னும் தூக்கத்தை பத்தி மாதிரி நிறைய விஷயங்களை விளக்கமா அடுத்த எபிசோட்ல மிஸ் பண்ணாம கேளுங்க.




தொடரும்...


"கழிவின் தேக்கம் வியாதி; கழிவின் வெளியேற்றம் குணம்"

நோயின்றி ஆரோக்கியமாக வாழ புரிந்துகொண்டு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!



கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!