Showing posts with label நீரிழிவு. Show all posts
Showing posts with label நீரிழிவு. Show all posts

உண்மையில் சர்க்கரை வியாதி என ஒன்று உள்ளதா?





    இந்த பதிவை நண்பர்களிடம் Pdf file அதாவது Printable Format ஆக பகிர்ந்துகொள்ள https://goo.gl/tXLu1q


    முதலில் நம் உடல் எதனால் உருவானது என்று பார்போம்.

    நமது உடல் பல லட்சம் கோடிக்கனக்கான செல்களால் ஆனது. ஒவ்வொறு செல்களுக்கும் அறிவு இருக்கிறது. இதன் முக்கிய வேலை நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உட்கிரகித்து, கழிவுகளை வெளியேற்றவது. உட்கிரகித்தல், வெளியேற்றுதல் இதன் முக்கிய வேலை.

    உதாரணத்திற்கு ஒரு மண் பொம்மையை காட்டி, தலையை சுட்டிக்காட்டி இது என்ன என்று கேட்டால், தலை என்பீர்கள். கால்களை சுட்டிக்காட்டி இது என்ன என்று கேட்டால், கால் என்பீர்கள். இந்த இரண்டு பகுதியையும் கையால் நசுக்கி பொடித்தால் அங்கு என்ன இருக்கும்?…… எண்ணில் அடங்கா சிறு, சிறு மண் துகள்கள் மட்டுமே இருக்கும் அல்லவா.

    இது போல் தான் நம் உடலும் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பல கோடிக்கணக்கான செல்களால் ஆனது.

    இப்பொழுது உடல் எப்படி இயங்குகிறது என்று பார்ப்போம்.

    பொதுவாக ஒரு பொருள் இயங்க வேண்டும் என்றால் என்ன வேண்டும்? ஏதாவது ஒரு எரிபொருள் வேண்டும்.

    உதாரணத்திற்கு, வாகனங்கள் இயங்க வேண்டும் என்றால்? பெட்ரோல் என்கிற எரிப்பொருள் வேண்டும். 

    மின் சாதனம் இயங்க வேண்டும் என்றால்? மின்சாரம் வேண்டும்.

    இது போல் நமது உடல் இயங்க வேண்டும் என்றால் என்ன வேண்டும்? நமது உடலுக்கு எது எரிபொருள்?  உணவு.

    சரி அந்த உணவு செரிமானத்தின் கடைசியில் என்னவாக மாறுகிறது? நாம் உண்ணும் மாவுச்சத்துக்கள் தேவையான அளவு சர்க்கரையாக மாறுகிறது, மீதம் உள்ளவை புரதமாகவோ, கொழுப்பாகவோ மாற்றப்படுகிறது. சர்க்கரை என்பது நாம் பயன்படுத்தும் இனிப்பல்ல இது ஒரு சத்துப்பொருள்.

    நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் இந்த சர்க்கரை எனும் சத்துப்பொருளை செல்கள் உட்கிரகித்து, எரித்து வெப்ப சக்தி வழங்குகிறது. இந்த வெப்ப சக்தியால் தான் நாம் இயங்குகிறோம்.

    நாம் இயங்குவதற்கு என்ன வேண்டும்? சர்க்கரை எனும் சத்துப்பொருள் வேணுமுங்க.

    ஒரு பெரியவர் படுத்த படுக்கையாக இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் உடலை தொட்டுப்பார்த்தால் எப்படி இருக்கும்? உடல் சூடாக இருக்கும். 

    அடுத்தநாள் இயற்கை எயதி விட்டார், இப்பொழுது உடலை தொட்டுப்பார்த்தால் எப்படி இருக்கும்? உடல் ஐஸ் போல் இருக்கும்.

    உயிரோடு இருக்கும் போது உடலில் என்ன இருந்தது? வெப்பம் இருந்தது. 

    உயிர் இல்லாத போது உடலில் என்ன இல்லை? வெப்பம் இல்லை.

    இப்பொழுது சொல்லுங்க உயிரோடு இருக்க வேண்டும் என்றால் என்ன வேண்டும்? வெப்பம் வேணுமுங்கோ. 

    வெப்பம் சக்தி எப்படி நமக்கு கிடைக்கிறது? உணவில் உள்ள சர்க்கரை Glucose (மாவுச்சத்து) செல்களால் எரிக்கப்பட்டு வெப்ப சத்தி கிடைக்குதுங்க.

    இப்ப சொல்லுங்க, நாம உயிரோட இருக்கனும்னா என்ன வேண்டும்? சர்க்கரை வேணும்ங்க.


நாம் உயிரோடு இருக்க தேவைப்படும் ஒரு அத்தியாவசியமான சர்க்கரை என்னும் சத்துப்பொருளால் நமக்கு நோய் ஏற்படுமா?
    பாருங்கள் மக்களே. நாம் உயிரோடு இருக்க தேவைப்படும் ஒரு அத்தியாவசியமான சர்க்கரை என்னும் சத்துப்பொருளால் நமக்கு நோய் ஏற்படுகிறது என்கிறார்களே, இதை கேட்கவே வேடிக்கையாக இருக்கிறது.

    இது வரைக்கும் உடல் எதனால் ஆனது., எப்படி இயங்குகிறதென்று பார்தோம். இப்பொழுது செரிமானத்தை பற்றி பார்போம்.

    நாம் உண்ணும் உணவு வாயில் உமிழ் நீருடன் கலந்தவுடன் செரிமானம் ஆக துவங்கிவிடுகிறது, பின் வயிற்றில் அமிலத்துடன் கலந்து செரிக்கப்பட்டு, சிறுகுடலுக்கு செல்கிறது இங்கு பித்தப்பையில் இருந்து வரும் பித்த நீரால் செரிக்கப்படுகிறது. பின் இந்த செரிக்கப்பட்ட உணவுக்கூழில் உள்ள சத்துக்கள் சிறுகுடலின் கடைசிப் பகுதியில் இரத்ததில் கலக்கிறது. பின் கழிவுகள் பொருங்குடலுக்கு சென்று வெளியேற்றப்படுகிறது.

    வாய், வயிறு, சிறுகுடலில் செரிமானம் சரியாக நடந்தால், இரத்தத்தில் கலந்த சத்துப்பொருட்கள் தரமான சத்துப்பொருட்களாக இருக்கும். செரிமானம் சரி இல்லை என்றால். சத்துப்பொருட்கள் தரமற்றவையாக இருக்கும்.

    பொதுவாகவே நமது உடலுக்கு நன்மையை ஏற்றுக்கொள்ளும் திறனும். தீமையை வெளியேற்றும் திறனும் இயல்பாவே இருக்கிறது.

    எப்படி என்று கேட்கிறீர்களா? இதோ செயல் முறை விளக்கம். 

    இப்பொழுது நீங்கள் பசியோடு இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நான் உங்களுக்கு மிகவும் பிடித்த உணவை உங்கள் கண் முன்னே கொண்டு வந்து காட்டிச் செல்கிறேன். 

    இப்பொழுது வாயில் என்ன மாற்றம் நிகழும்?வாயில் எச்சில் ஊரும் இல்லையா? சரி. அதே உணவை உங்கள் கண் முன்னே கீழே போட்டு மிதித்துவிட்டேன், அதை அப்படியே தட்டில் எடுத்து வைத்து மீண்டும் உங்கள் அருகில் கொண்டு வந்து காட்டிச்செல்கிறேன். 

    இப்பொழுது எப்படி இருக்கும்? உமிழ் நீர் சுரக்குமா? சுரக்காது, கொமட்டீட்டு தான் வரும்.

    இவ்வளவுதாங்க விடையமே. நல்லதிற்கு நமது உடல் உமிழ் நீர் சுரந்து ஏற்றுக்கொள்கிறது. கெட்டதற்கு உமிழ் நீர் சுரக்காமல் ஏற்க மறுக்கிறது.

    நமது உடலில் பல சுரபு உறுப்புகள் இருக்கின்றன. உமிழ் நீர் சுரபிகள், தைய்ராய்டு, தைமஸ், கணையம் போன்ற பல சுரப்புறுப்புக்கள் இருக்கிறது.

    இதே போல் தான் கணையமும். இரத்தத்தில் இருக்கும் நல்ல சர்க்கரைக்கு இன்சுலின் சுரக்கிறது கெட்ட சர்க்கரைக்கு இன்சுலின் சுரப்பதில்லை.

எது நல்ல சர்க்கரை? 
    செரிமானம் சரியாக இருந்தால் இரத்தத்தில் கலக்கும் சத்துப்பொருள் தரமானதாக இருக்கும். அது நல்ல சர்க்கரை.

எது கெட்டது சர்க்கரை?
    செரிமானம் சரி இல்லை என்றால் இரத்தத்தில் கலக்கும் சத்துப்பொருள் தரமற்றவையாக இருக்கும். அது கெட்ட சர்க்கரை.

    தரமான சர்க்கரையை, நல்ல சர்க்கரை என்றும். தரம் குறைந்த சர்க்கரை கெட்ட சர்க்கரை, என்றும் வைத்துக்கொள்வோம்.

    நமது உடல் என்ன செய்யும் என்று செயல் விளக்கத்தோடு பார்தோம். நல்லதை ஏற்றுக்கொள்கிறது, கெட்டதை வெளியேற்றுகிறது. அதே போல்தான் நல்ல சர்க்கரை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கெட்ட சர்க்கரை சிறுநீரகம் மூலம் வெளியேற்றப்படுகிறது. 

    சரி நாம் இப்பொழுது உண்கிறோம். என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.

    உணவு வாயில் போட்டவுடன் உமிழ் நீர் கலந்து செரிமானம் வேலை ஆரம்பமாகிறது. பின் உணவு வயிற்றுக்கு செல்கிறது இங்கு அமிலம் மற்றும் பல செரிமான நீர்களுடன் கலந்து செரிமானம் ஆகிறது. பின் சிறுகுடலுக்கு சென்று பித்த நீர் கலந்து செரிமானம் ஆகிறது. சிறுகுடல் இறுதியில் சத்துப்பொருட்கள் இரத்தத்தில் கலக்கிறது.

    நீங்கள் உண்ட உணவு அறைகுறையாக செரிமானம் ஆகி உள்ளது என்று வைத்துக்கொள்வோம். எனவே பாதி தரமான சத்துப்பொருளும், பாதி தரம் குறைந்த சத்துப் பொருளும் கிடைக்கிறது. இவை அனைத்தும் இரத்தத்தில் கலந்தாச்சு.

    உதாரணத்திற்கு 100 சர்க்கரை கிடைத்துள்ளது என்று வைத்துக்கொள்வோம். இதில் 50 நல்ல சர்க்கரை, 50 கெட்ட சர்க்கரை. இது அனைத்தும் இரத்தில் ஒடிக்கொண்டிருக்கிறது. கணையம் அருகே வரும் போது. கணையம் ஒவ்வொறு சர்க்கரையாக பரிசோதனை செய்து பார்க்கும். இவை தரமானதா, தரமற்றதா. உடலுக்கு நன்மை செய்யக்கூடியதா, தீமை செய்யக்கூடியதா என்று பரிசோதித்து, நல்ல சர்க்கரைக்கு மட்டும் இன்சுலின் வழங்கும், ஒரு கெட்ட சர்க்கரைக்கும் கூட இன்சுலின் வழங்காது.

    நாம் முன்னே செயல் விளக்கத்தோடு பார்த்தோம் அல்லவா. உடல் நல்ல உணவிற்கு உழிழ் நீர் சுரந்தது, கெட்ட உணவிற்கு சுரக்கவில்லை. இதேதான் இங்கேயும் நடக்கிறது.

    தற்போது இன்சுலினுடன் 50 சர்க்கரையும், இன்சுலின் இல்லாமல் 50 சர்க்கரையும் இரத்தத்தில் ஒடிக்கொண்டிருக்கிறது. செல்கள் இன்சுலின் உள்ள சர்க்கரைக்கு மட்டுமே கதவை திறக்கும். இந்த 50 நல்ல சர்க்கரையும் செல்களுக்குள்ளே போய்விடும். பின் இது எரிக்கப்பட்டு வெப்ப சத்தி நமக்கு கிடைக்கிறது. இந்த சத்தி மூலமே நாம் இயங்குகிறோம். 

    இன்சுலின் இல்லாத சர்க்கரையை சிறுநீரகம் கண்டறிந்து சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடுகிறது. உடலே நல்லதை, கெட்டதை கண்டறிந்து என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துவிட்டது. நாம் இப்பொழுது ஆரோக்கியமாக இருப்போம்.

    நீங்கள் செய்யும் வேலைக்கு 30 சர்க்கரை போதும் என்று வைத்துக்கொள்வோம். மீதம் உள்ள 20 நல்ல சர்க்கரையை உடல் என்ன செய்யும்? உதாரணத்திற்கு நமக்கு தேவையைவிட பணம் அதிகம் இருந்தால் என்ன செய்வோம், சேமித்து வைப்போம் அல்லவா. அது போல் தான் உடல் தேவைக்கு அதிகமாக இருக்கும் சர்க்கரையை கூட்டு சர்க்கரையாக (Glycogen) செரிவூட்டி கல்லீரல், தசைநார்களில் சேமித்து வைத்துக்கொள்கிறது.

    இந்த சேமிக்கப்பட்ட சர்க்கரை எப்போது எதற்கு பயன்படுகிறது? நாம் செய்யும் வேலைக்கு நல்ல சர்க்கரை போதவில்லை என்றால் லேசாக கிறுகிறுப்பு ஏற்பட்டு கண்கள் இருட்டடையும் போது இந்த சேமிக்கப்பட்ட சர்க்கரை இரத்தத்தில் கொட்டப்படுகிறது. நமக்கு ஏதாவது காயம் எற்பட்டால், அந்த காயத்திற்கு அருகில் இருக்கும் தசைநார்களில் சேமிக்கப்பட்ட சர்க்கரை அங்கு இருக்கும் செல்களை புதுப்பித்து காயத்தை ஆற்ற பயன்படுத்தபடுகிறது. நமக்கு எங்காவது விபத்து ஏற்பட்டு ரோட்டில் கிடந்தால், உறுப்புகள் சீராக இயங்குவதற்காக சேமிக்கப்பட்ட சர்க்கரை இரத்தத்தில் கொட்டப்பட்டு நமது உயிரை காக்க பயன்படுகிறது.

    நாம் எப்படி நமக்கு பணம் இல்லாத போது சேமித்த பணத்தை பயன்படுத்துகிறோமோ. அது போல் நமது உடல் ஆபத்து காலங்களில் சேமிக்கப்பட்ட சர்க்கரையை பயன்படுத்துகிறது.

    இப்ப சொல்லுங்க மனிதனுக்கு எது உண்மையான சொத்து? பணம் காசு வீடு, வாகனமா? நிச்சயம் கிடையாது. நாம் சேமித்த சர்க்கரையே நமக்கு உண்மையான சொத்து.

    எவர் வந்தாலும் வராவிட்டாலும். எது இருந்தாலும் இல்லாவிட்டாலும். இறுதியில், இந்த சர்க்கரையே உங்கள் கூட இருந்து உயிரை காக்கும். நாம் எதற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.


    செரிமான கோளாறால் ஏற்படும் பிரச்சனைக்கு எவன் சர்க்கரை நோய் என்று பெயர் வைத்தான்? இது மனிதன் தோன்றிய காலம் முதல் நடந்து வரும் இயற்கை நிகழ்வு.

    இந்த மாவுச்சத்து பொருளுக்கு எவன் சர்க்கரை என்று பெயர் வைத்தான் என்று தெரியவில்லை. இது நம்மை குழப்புவதற்காக சூழ்ச்சி செய்து வைக்கப்பட்டுள்ளது. 

    நாம் உண்ணும் சர்க்கரைக்கும் (இனிப்பு) இந்த சர்க்கரை நோய் என்று சொல்லப்படும் நீரிழிவு பிரச்சனைக்கும் துளி கூட சம்மந்தம் கிடையாது.

    சர்க்கரை என்பது ஒரு சுவை. அவர்கள் கூறும் சர்க்கரை Glucose (மாவுச்சத்து) என்பது ஒரு சத்து பொருள்.

    மனிதனுக்கு செரிமானம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் இனிப்பு சுவை மிக மிக அவசியமானது. இனிப்பு சுவையால் மட்டுமே உங்கள் வயிற்றிற்கும், மண்ணீரலுக்கும் சக்தி வழங்க முடியும்.

    • இலை போட்டு முதலில் இனிப்பு வைத்தவன் எல்லாம் முட்டாள்.
    • வீட்டு தின்னையில் வழிப்போக்கர்களுக்கு ஒரு மூடி தேங்காயும் ஒரு உருண்டை கருப்பட்டி வைத்தவன் எல்லாம் முட்டாள்.
    • விழா காலங்களில் இனிப்பு பண்டம் செய்து உண்டவன் எல்லாம் முட்டாள்.
    • இனிப்பை சாப்பிடக்கூடாது என்று சொல்லும் ஆங்கில மருத்துவர்கள் அறிவாளிகள்?

எதற்கு இலையில் முதலில் இனிப்பை வைத்தார்கள்?

    இனிப்பை முதலில் உண்ண வேண்டும். இனிப்பு சுவை நாக்கில் பட்டவுடன் மின்காந்த அலையாக மாறி நேரடியாக வயிற்றிற்கும், மண்ணீரலுக்கும் சக்தியை வழங்குகிறது. பின் நாம் என்ன சாப்பிட்டாலும் அது நன்கு செரிமானம் ஆகி நல்ல சத்துக்களாக இரத்தத்தில் கலக்கிறது. 

    ஆனால் உங்கள் மருத்துவர் இனிப்பு சாப்பிடக்கூடாது என்று சொல்லுவார். இனிப்பு சாப்பிடாவிட்டால் வயிறு, இதற்கு சக்தி வழங்கும் மண்ணீரலுக்கு சத்தி கிடைக்காது. 

    இப்பொழுது உணவு உண்டால் செரிமானம் எப்படி இருக்கும்? அறைகுறையாக. கிடைக்கும் சத்துப்பொருட்கள் பெரும்பாலும் கெட்ட சத்துப்பொருளாகவே இருக்கும். இவைகளை உடல் என்ன செய்யும் சிறுநீர் மூலம் வெளியேற்றிவிடும். நாம் எப்படி இருப்போம் சோர்வுடன் நோயாளியாகவே இருப்போம்.

    நம்மை நோயாளியாக்கி சாகடிப்பதற்காக இவர்கள் செய்த முதல் தந்திரம். மாவுச்சத்திற்கு சர்க்கரை என்று பெயர் வைத்தது, இனிப்பு சாப்பிடக்கூடாது என்று சொன்னது. இனிப்பை சாப்பிடக்கூடாது என்று சொல்லி நமது செரிமானத்தை கெடுத்து விட்டார்கள்.

    உங்களுக்கு அதிக தாகம், சோர்வு, அதிக பசி போன்றவை ஏற்படுகிறது. இவை அனைத்திற்கும் என்ன காரணம்? அரைகுறை செரிமானத்தால் இரத்தத்தில் கலந்த கெட்ட சத்துப்பொருட்கள் வெளியேறுவதே காரணம். 

  அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?செரிமானம் சரியாக என்ன வழிவகையோ அதை செய்ய வேண்டும். செரிமானத்தை சரி செய்தால் மேலே குறிப்பிட்ட அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.

    ஆனால் நீங்கள் என்ன செய்வீர்கள், உங்கள் அருகில் உள்ள மேதாவி உனக்கு சர்க்கரை நோய் இருக்கக்கூடும் போய் பரிசோதித்துக்கொள் என்பார். நீங்களும் பரிசேதனை செய்து பார்க்க போவீர்கள். அங்கு எவன் எப்பொழுது மாட்டுவன் எப்படியெல்லாம் அவன் தலையில் மிளகாய் அரைக்கலாம் என்று 5 வருடம் படித்துவிட்டு வெள்ளை கோர்ட்டு போட்டு கழுத்தில் பாசக்கயிறை மாட்டிக்கொண்டு ஒரு பூதம் உட்காந்திருக்கும். 

    உங்கள் இரத்தத்தை பரிசோதனை செய்து பார்த்து, உங்களுக்கு சர்க்கரை அதிகம் உள்ளது. நீங்கள் சர்க்கரை நோயின் ஆரம்பகட்டத்தில் உள்ளீர்கள் என்பார்கள். இதில் என்ன பரிதாபமான விடையம் என்றால். நல்ல மற்றும் கெட்ட சர்க்கரை இரண்டிற்கும் இவர்களுக்கு வித்தியாசம் தெரியாது, இரண்டுமே சேர்த்துதான் இவர்களால் சொல்ல முடியும்.

    • அந்த சர்க்கரை நல்ல சர்க்கரையா, கெட்ட சர்க்கரையா? 
    • கணையம் பரிசோதித்து இன்சுலின் வழங்கப்பட்டு விட்டதா இல்லையா? 
    • சர்க்கரை செல்களுக்குள் சென்று எரிக்கப்பட்டுவிட்டதா?
    • சிறுநீரகத்தால் கெட்ட சர்க்கரை கண்டரிந்து வெளியேற்றப்பட்டு விட்டதா அல்லது வேலை நடந்து கொண்டிருக்கிறதா?
    • அதிக நல்ல சர்க்கரை தசைநார்களில் சேமிக்கப்பட்டுவிட்டதா, இல்லை சேமிப்பு வேலை நடந்து வருகிறதா? 

    நீங்கள் செய்யும் வேலைக்கு சர்க்கரை போதுமானதா இல்லையா என்று எதுவும் அந்த அப்பாவி Robotic மருத்துவர்களுக்கு தெரியாது. இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அளவுகளை பார்த்து மாத்திரை கொடுப்பது மட்டுமே.

    நல்ல சர்க்கரைக்கும், கெட்ட சர்க்கரைக்கும் இயந்திரங்களுக்கு வித்தியாசம் தெரியாது. இரண்டிற்கும் ஒரே Chemical formula வைத்தான் காட்டும், Glucose – C6H12O6. 

    இதோ ஓர் உதாரணம்

    அடிக்கரும்பு எப்படி இருக்கும்? நன்கு இனிப்பு சுவை உடையதாக இருக்கும். 

    சரி நுனிக் கரும்பு எப்படி இருக்கும்? இனிப்பு குறைவாக சல்லென்று இருக்கும். 

    இந்த அடிக்கரும்பையும், நுனிக்கரும்பையும் ஒரு Lab ல் கொடுத்து பரிசோதனை செய்யது பாருங்கள் Sucrose – C12H22O11 என்று ஒரே Chemical formula வைதான் காட்டும். எப்படி நமக்கு சுவையில் வித்தியாசம் தெரிந்து இயந்திரத்திற்கு தெரியவில்லையோ, அதேப்போல்தான் தரமான சர்க்கரைக்கும் (நல்ல சர்க்கரை) மற்றும் தரமற்ற சர்க்கரைக்கும் (கெட்ட சர்க்கரை) உடலுக்கு வித்தியாசம் தொரியும், இயந்திரங்களுக்கு தெரியாது.

    இப்பொழுது புரிகிறதா ஏன் ஆங்கில மருத்துவத்திற்கு நல்ல மற்றும் கெட்ட சர்க்கரைக்கு வித்தியாசம் தெரியவில்லை என்று. இவர்கள் தன் சொந்த மூலையை விட மனிதன் உருவாக்கிய இயந்திரத்தை மட்டுமே நம்புவார்கள்.

    சரி, இப்பொழுது நீங்கள் சர்க்கரை நோயாளி என்று முத்திரை குத்தப்பட்டுவிட்டார்கள். மாத்திரை எழுதி கொடுத்துவிட்டார்கள்.

    இவர் எந்த அளவை வைத்து உங்களை சர்க்கரை நோயாளி என்று முடிவு செய்தார்?

    யார் அளவை நிர்ணயம் செய்தது? 

    இந்த சர்க்கரை மாத்திரை எதற்கு கண்டுபிடிக்கப்பட்து?

    உண்மையில் ஆரோக்கியத்திற்கு அளவு ஏதும் உண்டா? என்று பார்ப்போம்.

    ஆங்கில மருத்துவம் அறுவைசிகிச்சை செய்யத்துவங்கும் காலகட்டத்தில், இரத்த போக்கு அதிகம் ஏற்பட்டு உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சையின் போது ஒரு மாத்திரை கொடுக்கப்பட்டு அறுவைசிகிச்சை செய்துபார்த்தார்கள். இது அவர்களுக்கு வெற்றியாக அமைந்து. 

அறுவை சிகிச்சையின் போது மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த இந்த மாத்திரையை எப்படி உலகம் முழுவதும் வியாபாரம் செய்து கோடிகோடியாய் பணம் சம்பாதிப்பது என்று இரவு பகலாக ஆங்கில மருத்துவ உலகம், மருந்து மாத்திரை பெருநிறுவனங்கள் இணைந்து ஆலோசனை செய்து ஒரு முடிவிற்கு வந்தார்கள். 

    அந்த முடிவு என்ன? சர்க்கரைக்கு அவர்களே ஒரு அளவை நிர்ணயித்து, இதற்கு மேல் சென்றாலும் நோய், கீழ் சென்றாலும் நோய் என்று பொய் பிரச்சாரம் செய்வதென முடிவெடுத்தார்கள்.


    உண்மையில் ஆரோக்கியத்திற்கு அளவு ஏதும் உண்டா? சர்க்கரை இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.

    இதுவரை நமது உடல், நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரை, அதிகப்படியான நல்ல சர்க்கரைகளை எப்படி கையாள்கிறது என்று பார்தோம். 

    இதன்படி உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் மாட்டுவர்கள். இவர்களிடம் மாத்திரை விற்பனை செய்து கோடி கோடியாய் சம்பாதிக்கலாம் என்பதே இவர்களின் நோக்கம். ஆரம்ப காலத்தில் இவர்கள் முடிவு செய்த சர்க்கரைக்கான அளவு 40, 60 என இருந்தது பின் ஒவ்வொறு 20 வருடங்களுக்கு பிறகு, இது தவறு, இது தான் சரி என்று மாற்றிவிடுவார்கள். பின்னர் 80, 100, 120, 140 என மாற்றம் அடைந்துள்ளது. 

    இவர்கள் முன்னே சொன்ன அளவு எல்லாம் பொய்யா, இதற்கு மாத்திரை சாப்பிட்டு மாண்டவர்கள் எல்லாம் முட்டாளா? பதில் யாரிடமும் இல்லை. இந்த வியாபாரிகள் விரித்த வலையில் தான் நீங்கள் இப்போது சிக்கி உள்ளீர்கள்.

    உண்மை என்னவென்றால் சர்க்கரை இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. சர்க்கரையை பரிசோதித்து பார்பதே மிகப்பெரிய முட்டாள்தனம்.

    ஒரு மினிதன், அவர் வாழும் பகுதி, அவர்கள் பண்பாடு, கலாச்சாரம், அவர் செய்யும் வேலை (உடல் உழைப்பு), மன நிலை, உணவு, சுற்றுச்சூழல், நீர், செரிமாண மண்டலத்தின் சக்தி, பிராண சக்தி இவைகளை பொருத்து சர்க்கரையின் அளவு ஒவ்வொருவருக்கும் மாறிக்கொண்டே இருப்பது தான் இயற்கை.

    உண்மை இப்படி இருக்கும் போது, எதன் அடிப்படையில் உலகம் முழுவதும் அனைத்து மனிதர்களுக்கும், இவர்களால் ஒரே அளவை நிர்ணயம் செய்ய முடிகிறது.

    இதை வைத்தே தெரியவில்லையா? இவர்களின் நோக்கம் உலக மக்களை நோயாளிகளாக்கி, அவர்களின் செவ்வம் மற்றும் ஆரோக்கியத்தை சுரண்டும் பாவச்செயல்களை செய்கிறார்கள் என்று.

    நீங்கள் என்ன செய்தீர்கள், மாத்திரை டப்பாவை வாங்கி வீட்டிற்கு வந்துவிட்டீர்கள். இப்பொழுது உணவெடுக்கிறீர்கள். செரிமானம் அறைகுரையாக இருக்கிறது. இதனால் 70 கெட்ட சர்க்கரையும், 30 நல்ல சர்க்கரையும் இரத்தத்தில் கலக்கிறது என்ற வைத்துக்கொள்வோம். உடல் என்ன செய்யும் 70 கெட்ட சர்க்கரையை கண்டரிந்து சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். 30 நல்ல சர்க்கரை செல்களுக்குள் சென்றுவிடும்.

    இப்பொழுது மாத்திரை சாப்பிடுகிறீர்கள். இது என்ன செய்யும் நேரடியாக கணையத்திடம் சண்டையிட்டு 70 கெட்ட சர்க்கரைக்கும் இன்சுலின் வாங்கி கொடுக்கும் கொடூர செயலை செய்யும், இந்த 70 கெட்ட சர்க்கரையும் இன்சுலினுடன் இரத்தத்தில் சுற்றிக்கொண்டிருக்கும். செல்கள் இன்சுலின் இருப்பதால் கதவை திறந்து ஏற்றுக்கொள்ளும். இந்த கெட்ட சர்க்கரையை செல்களால் சரியாக எரிக்கப்பட்டு வெப்ப சக்தியாக மாற்ற முடியாது. எனவே முதல் முதலில் உங்கள் செல்களில் கழிவு தங்குகிறது.

    உதாரணத்திற்கு நல்ல சர்க்கரையை வெயிலில் நன்கு காய்ந்த விறகாக கற்பனை செய்துகொள்ளுங்கள். கெட்ட சர்க்கரையை காயாத ஈர விறகாக கற்பனை செய்துகொள்ளுங்கள். செல்களை அடுப்புகளாக கற்பனை செய்துகொள்ளுங்கள்.

    அடுப்பின் வேலை என்ன? விறகை எரித்து வெப்ப சக்தி வழங்குவது.

    செல்களின் முக்கிய வேலை என்ன? சர்க்கரையை எரித்து வெப்ப சக்தி வழங்குவது. 

    நன்கு காய்ந்த விறகை அடுப்பில் எரித்தால் அங்கு என்ன மிச்சம் இருக்கும்? சிறிது சாம்பல் மட்டுமே. வெப்ப சக்தியும் முழுமையாக கிடைத்துவிடும். 

    ஈர விறகை எரித்தால் என்ன நடக்கும்? சரியாக எரியாமல் புகைந்து புகைந்து விறகு அடுப்பில் தங்கிவிடும். சரியாக வெப்ப சக்தியும் கிடைக்காது. இது போல் தான் நம் செல்களும் கெட்ட சர்க்கரையை முழுமையாக எரிக்க முடியாமல் கழிவு செல்களில் தங்கிவிடுகிறது.

    உலகத்தில் உள்ள அனைத்து நோய்களுக்கும் ஒரே காரணம்தான். அது என்ன? இயற்கை விதிமீறல் செயல்களால் கழிவுகள் நமக்குள் தங்குவதே காரணம். 

    கழிவு தேக்கம் நோய். கழிவு நீக்கம் குணம்.

    உடல் சரியாக கெட்ட சர்க்கரையை கண்டரிந்து சிறுநீர் மூலம் வெளியேற்றிய தரமற்ற சர்க்கரையை நாம் சொந்த செலவில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு செல்களுக்குள்ளையே செலுத்துவதுதான் உங்கள் அறிவியலின் உச்சகட்ட அற்புத செயல்.

    சாக்கடைக்கு செல்ல வேண்டிய ஒரு தேவையற்ற பொருளை, நாம் செல்களுக்குளே செலுத்துவதால் கழிவுகள் செல்களில் தங்கி அந்த செல் பாதிக்கிறது. இத தொடர்ந்து நடக்கும் போது. அந்து உறுப்பு பாதிக்கிப்படுகிறது. உறுப்புகள் பாதிக்கப்பட்டால் அதன் வேலையை சரியாக செய்ய முடியாது. இதனால் மேலும் கழிவுகள் உள்ளேயே தங்க, சொல்லிலடங்கா துயரங்களுக்கு ஆளாகுகிறோம்.

    இப்பொழுது தெரிகிறதா சர்க்கரை நோய் வந்தால் ஏன் எல்லா நோய்களும் வருகிறதென்று. சர்க்கரை நோய் என்னும் நீரிழிவு பிரச்சனை வந்தால் எந்த நோயும் வராது. இதற்கு மாத்திரை அல்லது இன்சுலின் ஊசி போடுவதின் மூலமே அனைத்து நோய்களும் வருகிறது.

    சாதாரணமாக உள்ள செரிமானப்பிரச்சனையை சரி செய்திருந்தால் உங்கள் அனைத்து பிரச்சனையும் சரியாகியிருக்கும் அதைவிட்டுவிட்டு, பன்னாட்டு வியாபாரிகளின் கொடிய விசப் பொருட்களை துளி கூட சிந்திக்காமல், அப்படியே நாம் ஏற்றுக்கொண்டதால் உணர்ச்சியற்ற நோய் பிண்டங்களாக காட்சியளிக்கிறோம்.


    சர்க்கரை நோயாளி என்று முத்திரை குத்தப்பட்டவர்கள் கவனத்திற்கு! இனி இந்த செரிமானப் பிரச்சனையை யாரும் நோய் என்று சொல் வேண்டாம். தேவையில்லாத, கெட்ட சத்து பொருட்கள் அனைத்தும் சிறுநீர் முலமே வெளியேறும், சர்க்கரை மட்டும் அல்ல. 

    • சாப்பிடும் பொழுது கவலை எல்லாம் மறந்து உணவின் மேல் முழுகவனமும் செலுத்தி சாப்பிட வேண்டும். கவலைக்கு உண்டான காரணங்களை சரி செய்ய முயற்சிக்க வேண்டும்.
    • அவசரமாக பரலோகம் போக டிக்கட் எடுக்க விரும்புபவர்கள் தாராளமாக அவசரமாக சாப்பிடலாம்.
    • “நொறுங்கத்தின்றால் நூறு ஆயுசு”, பசி எடுத்தால் மட்டுமே உணவெடுக்க வேண்டும். ஒரு முறை நன்கு சிந்தித்து பாருங்கள் நாம் எதற்காக இவ்வளவு பாடுபடுகிறோம் என்று, இறுதியில் சாப்பிடுவதற்காகவே என்று உணர்வீர்கள். அதை இப்பவே உணர்ந்து பொறுமையாக சாப்பிடலாமே.
    • நம் நலனுக்காக நம் உடலை இவ்வளவு பாடுபடுத்துகிறோம், ஏன் உடல் நலனுக்காக நாம் 1/2 மணி நேரம் ஒதுக்கி பொறுமையாக சாப்பிடக்கூடாது.
    • சாப்பிடும் பொழுது உலகத்தையே மறந்துவிட வேண்டும். சாப்பிடும் போது உணவை பார்த்து நமது முழு கவனமும் உணவின் மேல் செலுத்தி மென்று ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும்.
    • பச்சை தண்ணீரில் குளிப்பது. வாரம் இரண்டு நாள் எண்ணெய் குளியல். நீர் காய்கனிகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

    இனி நாம் யாரும் பன்னாட்டு வியாபாரிகளின், உயிரை குடிக்கும் இரசாயண மாத்திரைகளையும் இன்சுலின்களையும் எடுக்க மாட்டோம் என்று உறுதி எடுப்போம். மழுங்கி கிடக்கும் நமது முளையை சற்று பயன்படுத்தி சிந்திக்க துவங்குவோம்.

    பன்னாட்டு கொலைகார வியாபாரிகளின், கொடூர விசத்தன்மை உள்ள பொருட்களை வாங்கிக்கொள்ளும் சந்தையாக உங்கள் உடலை மாற்றிவிடாதீர்கள்.

    “உள்ளமே பெருங்கோவில் ஊநுடலே ஆலையமாம்” ஆலையத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.


இந்த பதிவை நண்பர்களிடம் Pdf file அதாவது Printable Format ஆக பகிர்ந்துகொள்ள https://goo.gl/tXLu1q



    • நாம் வசிக்கும் இடங்களில் சுத்தமான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கொசு தொந்தரவு இருக்கும் பட்சத்தில் ரசாயன கொசுவிரட்டிகள் பயன்படுத்தாமல் காற்று வந்துபோகக்கூடிய கொசு வலைகளை பயன்படுத்தி ஜன்னல்களை திறந்து வைத்து தூங்க வேண்டும். ஏனென்றால் நம் உடலில் ஏற்படும் பல இன்னல்களுக்கு அடிப்படை காரணமே அசுத்த காற்று நிறைந்த இடத்தில் வசிப்பது தான்.  
    • பசியை உணர்ந்து, பசி ஏற்படும் போதுதான் சாப்பிடவேண்டும். பசி இல்லாத போது நேரத்தைப் பார்த்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
    • பசிக்கிற அளவிற்குத் தகுந்தவாறு உண்ணுகிற உணவின் அளவை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரே மாதிரியான பசி எப்போதும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
    • மனதிற்கு பிடித்த உணவுகளை மட்டும் ரசித்து ருசித்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். 
    • உடல் கேட்கும் ஓய்விற்கும் தூக்கத்திற்க்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம். இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரைக்கும் தூங்க வேண்டிய அவசியமான நேரமாகும். இந்த நேரத்தில் தான் உடலில் எதிர்ப்பு சக்தி நோயெதிர்ப்பு வேலையை முழு வீச்சில் மேற்கொள்கிறது.
    • இரவில் தூங்குவதற்கு பதிலாக பகலில் தூங்கி கணக்கை சரிசெய்து கொள்ள முடியாது. ஏனென்றால் உடலின் நச்சுத்தன்மையை அகற்றும் வேலையும், ஒவ்வொரு உள்ளுறுப்பையும் சீரமைக்கும் வேலையும், ஒவ்வொரு உயிரணுவும் வளர்ச்சியடையும் வேலையும் இரவுகளில்தான் முழுமையாக நடைபெறுகின்றன. எனவே இரவு நேரத்தில் தூங்குவது ஆரோக்கியத்தின் அடிப்படைத் தேவை.
    • டீ மற்றும் காப்பி போன்றவை உணவல்ல போதைப்பொருள் என்பதை நினைவில் கொண்டு அதனை தவிர்த்திடுங்கள். (இதுபற்றி இந்த “டீ காப்பி நமக்கு தேவைதானா?” என்னும் தலைப்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.)





    நாம் எப்பொழுது நிம்மதியாக வாழ்கிறோமோ அப்பொழுது நமது உடல் தன்னைத்தானே பராமரித்துக் கொள்வதில் எந்தவித தடையும் ஏற்படுவதில்லை. நாம் எப்பொழுது நிம்மதி இல்லாமல் வாழ்கிறோமோ அப்போது உடல் தன்னைத்தானே வருத்திக்கொள்கிறது. கவலை, மனவருத்தம், பயம், கோபம், விரக்தி போன்ற எண்ணங்கள் நமது உடலின் பராமரிப்பு சக்தியை தீர்த்துவிடுகிறது. 

    எனவே நிம்மதியாக வாழ்வதற்காக நேரங்களை ஒதுக்குவோம். பலர் பணத்திற்காக புகழுக்காக, பதவிக்காக, கெளரவத்திற்க்காக தங்கள் நிம்மதியை இழக்கிறார்கள். ஆனால் நிம்மதிக்காக பணம், புகழ், அந்தஸ்து என்று எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஏனென்றால் நம்முடைய ஆரோக்கியம், நிம்மதி இதைவிடப் பெரிதல்லவா? 

    • அன்பான பேச்சுக்களை கேட்கும்போதும், 
    • பிடித்தமான உணவுகளை உண்ணும்போதும், 
    • பிடித்தமான இசை மற்றும் பாடல்களை கேட்கும்போதும்,  
    • பிடித்தமான நகைச்சுவை மற்றும் திரைப்படங்களை பார்க்கும்போதும்,
    • பிடித்தமான இடங்களுக்கு சுற்றுலா செல்லும்போதும், 
    • பிடித்தமானவர்களிடம் நேரத்தை செலவிடும்போதும்,
    • பிடித்தமான பொழுதுபோக்கில் ஈடுபடும்போதும், 
    • நல்லதை பார்க்கும்போது, கேட்கும்போதும், சிந்திக்கும்போதும்,
    • அடுத்தவர்களுக்கு உதவும்போதும், 
    • நேர்மையாக வாழும்போதும்,
    • சுயநலமில்லாத வாழ்க்கை வாழும்போதும்,

    ... நமது மனது சந்தோஷப்படுகிறது. அவ்வாறு மகிழ்ச்சியாக இருந்தால் நமது உடலின் பராமரிப்பு வேலையும் தடையில்லாமல் நடைபெறும் மேலும் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

    பணமே பிரதானம் என எண்ணுபவர்கள் தங்கள் தினசரி வாழ்க்கை முறையில் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ள முயற்சிப்பதில்லை. அவர்கள் ஆரோக்கியத்தை விலை கொடுத்து வாங்க முடியும் எனக் கருதுகின்றனர். உண்மையில் நோய் பற்றிய பயத்தையும், கிருமிகளைப் பற்றிய பயத்தையும், செயற்கையாக உருவாக்கிய நோய்களான நீரிழிவு (சர்க்கரை), ரத்த அழுத்தம், தைராய்டு... போன்றவற்றை மட்டுமே பெற முடியும். பணத்தால் ஆரோக்கியத்தை வாங்க முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.




    ரோக்கியமாக வாழ விரும்பினால் மருத்துவத்தை தேடுவதை விட்டுவிட்டு ஆரோக்கியத்தை தேடுங்கள். இன்று முதல் உங்களுக்கு பிடித்தமான உணவுகளை மட்டும் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். 

    நம் தவறான வாழ்க்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தரமான தீர்வை தர இயலாது. மருந்துக்களையோ மருத்துவரையோ தேடுவதற்கு பதில் வியாதிக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்வதே சிறப்பானதாகும்.

    நல்லதை சொல்ல வேண்டியது எனது கடமை. அதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் உரிமை. என்னிடம் மருந்துக்களை எதிர்பார்க்காதீர்கள் ஆரோக்கியத்தை மட்டும் எதிர்பாருங்கள். ஆரோக்கியமாக வாழ வழிகாட்டி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காகவே இந்த முகநூல் பக்கம் மற்றும் குழுவினை உருவாக்கியுள்ளேன்.


மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:






முக்கிய குறிப்பு:

    இரவு 9 மணி முதல் காலை வரை தூக்கம் தடைபடாமல் இருக்க எனது தொடர்பு எண்களை Silent Mode இற்கு மாற்றிவிடுவேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அந்த நேரத்தில் நீங்களும் தூங்கச் சென்று உங்களது ஆரோக்கியத்தையும் உறுதிசெய்து கொள்ளுங்கள்.

    ஆங்கில மருந்துக்கள், டீ, காப்பி, கஞ்சா உட்கொள்ளுதல், புகை பிடித்தல், மது அருந்துதல், புகையிலை, பாக்கு, மூக்குப்பொடி போன்ற போதை பழக்கத்தை விடுவதற்கு தயாராக உள்ளவர்கள் என்னை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம். 

    மேலும் பொறுமையாக இருப்பவர்கள், நேர்மையாக வாழ்பவர்கள், அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாதவர்கள் மற்றும் மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் மட்டும் இந்த எண்கள் +91 98409 80224, +91 97509 56398 மற்றும் vineeth3d@gmail.com க்கு தொடர்பு கொள்ளவும்.

    சுயநலமாக சிந்திப்போர் மற்றும் மருந்துக்களால் மட்டுமே வியாதிகளை குணப்படுத்த முடியும் என எண்ணுபவர்கள் என்னை தொடர்புகொண்டு உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இதுவரை நான் எழுதிய / வெளியிட்ட அனைத்து கட்டுரைகளின் தொகுப்பைக் காண மற்றும் பதிவிறக்கம் செய்துகொள்ள இந்த Google Drive லிங்கிற்கு செல்லவும் https://goo.gl/GBKHAb

    நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நடக்கும் என்கிற உண்மையை உணர்ந்த காரணத்தால் தான் நல்ல விஷயங்களை அதிகம் பகிர்கிறேன். எனவே நல்லதே கேளுங்கள் நல்லதே நினையுங்கள் நல்லதே பேசுங்கள் நல்லதே செய்யுங்கள் நல்லதே நடக்கும். அதற்கு எனது வாழ்கையே சாட்சி. 

"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" 
Youtube Channel முகவரி https://goo.gl/xsH2SJ

"நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!" 
Youtube Channel முகவரி https://goo.gl/Rvr1vT


"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" 
Telegram குழுவின் முகவரி

"நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்" 
Telegram குழுவின் முகவரி

    நமது உடலின் அடிப்படையை கற்றுக்கொண்டு மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ்வோம். ஆரோக்கியமாக வாழ நம் உடலின் அடிப்படையை புரிந்து கொண்டு அதற்கு போதிய ஒத்துழைப்பு கொடுத்தாலே போதும். இதனை புரிந்து கொள்ளாமல் இருப்பதால் தான் நாம் தேவையில்லாமல் வியாதிகள் மற்றும் கிருமிகள் பற்றி பயந்து கொண்டு இருக்கிறோம். 

    ஆரோக்கியம் என்பது உடல், மனம் மற்றும் தினசரி பழக்கவழக்கங்களில் தான் அடங்கி உள்ளது. இதனை புரிந்துக்கொள்ளாததால் தான் நாம் பல மருத்துவ வியாபாரிகளிடம் சிக்கித் தவிக்கிறோம்.

இப்படிக்கு,
விழிப்புணர்வு வினீத்

நலம் நலமறிய ஆவல் - 08. ஸ்வீட் எடு, கொண்டாடு!

 

   



முன் கதைச் சுருக்கம்


    ருமுறை நானும் என் எழுத்தாள நண்பர்களும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது என் நண்பரும் எழுத்தாளருமான ஒருவர் – இப்போது அவர் ஒரு பிரபல பத்திரிகையின் ஆசிரியர் – தனது டயபடிஸ் பிரச்னை பற்றிப் பேசினார். சர்க்கரை நோயை குணப்படுத்த முடியாது; ஆனால், கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க முடியும் என்று சொன்னார். அவருடைய எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக, சிறுகதைகள். ஆனால், அதற்காக அவர் சொல்லும் ஒரு தவறான கருத்தையும் நான் ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்ன?

அப்படியெல்லாம் இல்லை நண்பரே. டயபடிஸ் நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியும் என்று நான் சொன்னேன்.

உளறியது வேறு கிரகத்தில் இருந்து வந்திறங்கிய ஈ.டி. அல்லது பி.கே. என்பதைப்போல, என்னை அனைவரும் பார்த்தனர். நான் சொன்னதை யாரும் காதில்கூட போட்டுக் கொள்ளக்கூட விரும்பவில்லை என்பது அவர்களுடைய பேச்சிலிருந்து எனக்குப் புரிந்தது. பலருக்கு மத்தியில் வித்தியாசமாகத் தெரிய வேண்டும் என்பதற்காக படுமுட்டாள்தனமான, விஞ்ஞானத்துக்கு எதிரான கருத்தைச் சொன்ன அயோக்கியனாக நான் அவர்களுக்குப் பட்டிருக்கலாம். எனக்கு வருத்தமாக இருந்தது. நான் ஏளனமாகப் பார்க்கப்பட்டுவிட்டேன் என்பதற்காக அல்ல; அவர்களுக்கு என்னால் உதவ முடியவில்லையே என்பதற்காக.

அந்த நிகழ்ச்சி நடந்து பல மாதங்கள் அல்லது சில ஆண்டுகள் கழித்து, அந்த நண்பரே என்னிடம் அலைபேசியில் பேசினார். நான் அன்று சொன்ன நம்ப முடியாத செய்தி பற்றி மீண்டும் கேட்டார். நான் புது உற்சாகத்துடன் அவருடன் அவ்விஷயம் பற்றி எனக்கு அப்போது தெரிந்த உண்மைகளைச் சொன்னேன். குறிப்பிட்ட வகை மூச்சுப் பயிற்சியை அவருக்கு சொல்லிக்கொடுத்தேன். குறிப்பிட்ட இடம், குறிப்பிட்ட நேரத்தில் செய்ய வேண்டும் என்றும் சொன்னேன். அவரும் கேட்டுக்கொண்டார்.

கொஞ்ச காலம் கழித்து மீண்டும் அலைபேசியில் பேசினார். நான் சொன்னதுபோலவே செய்ததாகவும், பிரம்ம முகூர்த்தத்தில், தன் வீட்டின் ஒரு குறிப்பிட்ட அறையில் மூச்சுப்பயிற்சி தொடர்ந்து சில மாதங்கள் செய்ததாகவும், இப்போது ‘சுகர் லெவல்’ கடந்த பல ஆண்டுகளில் இருந்ததைவிட பல மடங்கு குறைந்திருப்பதாகவும், கிட்டத்தட்ட நார்மல் நிலைக்கு வந்துவிட்டதாகவும், ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருப்பதாகக் கூறினார். இப்போது அவர் இயற்கை உணவுக்கு மாறிக்கொண்டிருக்கிறார். எனக்கும் அவர் சொன்னது பற்றி ரொம்ப சந்தோஷம். என்னாலும் ஒருவருக்கு உதவ முடிந்திருக்கிறது!


நிற்க, பிரம்ம முகூர்த்தம் என்பது அதிகாலை மூன்றிலிருந்து நான்கு அல்லது நாலரை மணிவரை என்று வைத்துக்கொள்ளலாம். நண்பர் அந்த நேரத்தில் பயிற்சி செய்தது மிகமுக்கியமானது. அது ரொம்ப நல்லது. வாழ்க்கையில் பெருவெற்றி பெற்று சாதனை படைத்த பலர், பிரம்ம முகூர்த்தத்தில் விழித்துக் கொள்பவர்களாகவே இருந்துள்ளனர். ஆனால், நம்மில் பலருக்கு சாந்தி முகூர்த்தம்தான் தெரியும்! அதையும் பிரம்ம முகூர்த்தத்தில் வைத்துக்கொள்வது சிறப்பு என்று உபரியாக ஒரு ஆலோசனை சொல்லலாம் என்று நினைக்கிறேன்!


அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு லைஃப்பாய் சோப்பு போடாமலே, ஆரோக்கிய வாழ்வினைக் காப்பது பற்றி நானும் இன்னும் நிறைய தெரிந்துகொண்டேன். அதில் ஒன்றுதான் டயபடிஸ், சுகர், சர்க்கரை நோய் என்றெல்லாம் உலகையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் பிசாசு பற்றியது. இதைப்பற்றி நான் சொல்லப்போகும் உண்மைகளை எண்ணி நீங்கள் புருவம் உயர்த்தலாம். ஆனால், ஏற்றுக்கொள்வீர்களா என்பது சந்தேகமே. ஏனெனில், அவ்வளவு தூரம் இந்திய மனத்தில் சர்க்கரை நோய் பற்றிய பயமும், அதை குணப்படுத்தவே முடியாது என்ற அ-விஞ்ஞானபூர்வமான, வணிகமயமான கருத்தும் ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது.

இல்லை, அதை குணப்படுத்தலாம், அதுவும் ஸ்வீட் சாப்பிட்டே என்று நான் சொன்னால், என் கட்டுரைகளைப் படிப்பதை நீங்கள் இத்துடன் நிறுத்திக் கொண்டுவிடலாம். அல்லது இந்தப் பைத்தியம் எழுதும் விஷயங்களையெல்லாம் காதில் போட்டுக்கொள்ள வேண்டாம் என்று உண்மையான அக்கறையுடன் உங்கள் நண்பர்கள், உறவினர்களிடத்தில் சொல்லிவைக்கலாம். நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், உங்கள் மனத்தில் தப்பான கருத்தை விதைப்பது எளிது. நான் சொல்வதை உறுதி செய்ய ஒரு உதாரணம் தருகிறேன்.

ஒருமுறை, சொல்வேந்தர் சுகி. சிவம் அவர்கள் பேசும்போது, நான் எழுதிய ‘இந்த விநாடி’ என்ற புத்தகத்தில் உள்ள ஒரு விஷயம் பற்றி கொஞ்சம் விரிவாகப் பேசினார். மனத்தின் வலிமை பற்றிய செய்தி அது. ரத்தம், யூரியா, நைட்ரஜன் ஆகியவற்றின் அளவு ஹெரால்டு என்பவரின் உடலில் 90 விழுக்காடு இருந்தபோதும், எப்படி அவர் நாற்பது ஆண்டுகளாக ஒரு மருந்து மாத்திரையும் எடுத்துக்கொள்ளாமல் சந்தோஷமாக, டாக்டர்களால் எச்சரிக்கப்பட்ட பிரச்னைகளில் ஒன்றுகூட வராமல் ஆரோக்கியமாக இருந்தார் என்ற உண்மைக் கதை அது. டாக்டர் தீபக் சோப்ரா தனது Unconditional Life என்ற நூலில் விவரிக்கும் அவரது அனுபவம் அது.
அதைச் சொல்லி முடித்த சுகி. சிவம் அவர்கள், ‘அதற்காக சுகர் நோயாளிகளெல்லாம் ஸ்வீட் சாப்பிடலாம் என்று நான் சொல்லமாட்டேன். அப்படிச் சொன்னால், அது அயோக்கியத்தனமான யோசனையாகிவிடும்’ என்று சொன்னார்.

ஆனால், உண்மை என்னவெனில், சர்க்கரை நோயாளிகளுக்குத்தான் ஸ்வீட்டான உணவுப் பண்டங்களின் அவசியம் அதிகம் உள்ளது! ஸ்வீட் எடு, கொண்டாடு என்று அவர்கள்தான் இருக்க வேண்டும்! இது காலம் காலமாக நாம் நம்பிவந்திருக்கும் ‘விஞ்ஞானப்பூர்வமான’ கருத்துக்கு எதிரானதாகவும், அபாயகரமானதாகவும் தோன்றலாம். ஆனால், உண்மையில் அப்படியெல்லாம் இல்லை. எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்.

டயபடிஸ் என்றால் என்ன?


குளுக்கோஸ் எனப்படும் சர்க்கரைப் பொருளை / சுகரை உடலுக்குத் தேவைப்படும் சக்தியாக உடலால் மாற்ற முடியாத குறைபாடுதான் டயபடிஸ். இதற்கு மருத்துவ உலகம், ‘டயபடிஸ் மெலிட்டஸ்’ என்று பெயர் வைத்துள்ளது. கொஞ்சம் நீளமாகவும், புரியாத மாதிரியும் பெயர் வைத்தால்தான் பயம் ஏற்படுத்த ஏதுவாக இருக்கும் என்பது மருத்துவ உலகுக்கு நன்றாகவே தெரியும்.

குளுக்கோஸ்தான் நமது உடலுக்குத் தேவைப்படும் எரிபொருளைத் தரும் மிக முக்கியமான மூலப்பொருளாகும். உண்ட உணவு செரித்த பிறகு ஃபேட், புரோட்டீன், கார்போஹைட்ரேட் போன்ற சமாசாரங்கள் உடலால் பிரித்தெடுக்கப்படுகின்றன. அவற்றில், கார்போஹைட்ரேட்தான் குளுக்கோஸாக மாறுகிறது. பின், ரத்தத்தில் அந்த குளுக்கோஸ் கலக்கிறது. அதிலிருந்து நமக்குத் தேவையான ஆற்றலை நம் உயிரணுக்கள் உருவாக்கிக்கொள்கின்றன.

குளுக்கோஸை உயிரணுக்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில், ஒரு நிபந்தனை உண்டு. வெளிநாட்டுக்குப் போக பாஸ்போர்ட் தேவைப்படுவதைப்போல, ‘செல்’லுக்குள் குளுக்கோஸ் ‘செல்ல’வேண்டுமெனில், அந்த குளுக்கோஸில் ‘இன்சுலின்’ என்ற ஒரு பொருள் இருக்க வேண்டும். இன்சுலின் இல்லாவிட்டால், அந்த குளுக்கோஸுக்கு செல்களுக்கு உள்ளே அனுமதி கிடைக்காது!

இன்சுலின் என்பது குளுக்கோஸுக்கு உள்ளேயே இருக்கும் பொருளல்ல. அதை, இன்னொருவரிடம் இருந்து குளுக்கோஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த இன்னொருவரும் நமது உடலுக்கு உள்ளேயேதான் இருக்கிறார். அவர் பெயர் ‘பேங்கிரியாஸ்’ (Pancreas) எனப்படும் கணையம்! அவர்தான், குளுக்கோஸுக்கு இன்சுலின் சப்ளை செய்ய வேண்டும். அவர் ஏன் இன்சுலின் கொடுக்க மறுத்தார் என்பதைப் பிறகு பார்க்கலாம்.


உடலுக்குத் தேவையான அளவு இன்சுலினை கணையம் சுரக்காவிட்டால் உண்டாகும் பிரச்னையை முதல் வகை நீரிழிவு நோய் (Type 1 Diabetes Mellitus) என்றும்,

குறையுள்ள இன்சுலினை சுரந்தாலோ அல்லது சுரந்த இன்சுலினை உடல் / உயிரணுக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தாலோ (Insulin Resistance) இரண்டாம் வகை நீரிழிவு நோய் (Type 2 Diabetes Melllitus) என்றும் சொல்கிறர்கள்.

முதல் வகை நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான இன்சுலினை உடலில் சுரக்காததால், வெளியிலிருந்து இன்சுலினை ஊசிகள் மூலம் ஏற்றுகிறார்கள். அப்படிச் செய்வது ரொம்பத் தவறானது ஏன்?

ஆரோக்கியத்தின் பாலபாடம்

இயற்கையாகவே உடல் உருவாக்கிக்கொள்ளும் எதற்கும் இணையான ஒன்றை வெளியிலிருந்து, மானிட தயாரிப்பின் மூலம் ஈடுகட்டவே முடியாது என்பதுதான் ஆரோக்கியத்தின் அடிப்படை. டியூப்ளிகேட் பொருளுக்கு ஐ.எஸ்.ஐ. முத்திரை குத்தி விநியோகத்துக்கு அனுப்புவது மாதிரியான செயல் அது. உதாரணமாக, நம் உணவில் கால்சியம், இரும்புச் சத்து, புரோட்டீன், விட்டமின், கார்போஹைட்ரேட் போன்ற சத்துகள் உள்ளன. ஆனால் கால்சியம், புரோட்டீன், விட்டமின் மாத்திரைகளெல்லாம் மருந்துக் கடைகளில் கிடைக்கத்தானே செய்கின்றன? உணவுக்குப் பதிலாக தேவையான சத்துகளை மாத்திரைகளாக நேரடியாக ஏன் நாம் சாப்பிடக்கூடாது? சமைக்கின்ற வேலையும் நேரமும் மிச்சமாகும் அல்லவா?

நாம் அப்படிச் செய்வதில்லை. செய்யவும் முடியாது. செய்தால் செத்துவிடுவோம்! உணவிலிருந்து உடல் உருவாக்கும் கால்சியம் வேறு, மனிதர்களால் வெளிலிருந்து உருவாக்கிக் கொடுக்கப்படும் கால்சியம் வேறு. பாலில் உள்ள கால்சியம் வேறு, மாத்திரைகளில் உள்ள கால்சியம் வேறு. மீனில் உள்ள புரோட்டீன் வேறு, மாத்திரைகளில் உள்ள புரோட்டீன் வேறு. முன்னது அமிர்தம்; பின்னது விஷம். (அதாவது வேதிப்பொருள்).

"உண்மையில் விட்டமின் மாத்திரைகளால் உடலிற்கு எந்தப் பலனும் இல்லை!" பதிவை பார்க்க விரும்பினால் இந்த 👇 முகவரிக்குச் செல்லுங்கள்.  


இயற்கையானதை மட்டுமே உடல் ஏற்றுக்கொள்ளும். இதுதான் ஆரோக்கியத்தின் பாலபாடம். இதை தயவுசெய்து நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எல்லா நோய்களுக்குமான தீர்வு இங்கே உள்ளது. நினைவில் வையுங்கள்.

  • தேவையான அளவு இன்சுலினை கணையம் ஏன் சுரக்கவில்லை?
  • சுரக்கப்பட்ட இன்சுலினும் ஏன் குறைகள் கொண்டதாக உள்ளது?

இந்த இரண்டு மிக முக்கியமான கேள்விகளுக்கான பதிலை நாம் இப்போது தெரிந்துகொள்ள வேண்டாம். இன்னும் கொஞ்ச தூரம் போகவேண்டி உள்ளது. வாருங்கள் போகலாம்.

கதாநாயகன் இன்சுலின்

உடம்பில், குறிப்பாக ரத்தத்தில், அளவுக்கு அதிகமான குளுக்கோஸ் / சுகர் இருப்பது தெரிந்தால், அது டயபடிஸ் நோய் வந்துவிட்டதற்கான அறிகுறி என்று கூறுகிறார்கள். மேலே சொன்னதற்கும் இதற்கும் வித்தியாசமில்லை. ஒரே உண்மையை வேறுவேறுவிதமாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். எப்படி?

உடலுக்குத் தேவையான, சரியான, அதாவது இன்சுலினுடன் கூடிய குளுக்கோஸ் இருந்தால் மட்டுமே அதை ஏற்றுக்கொண்டு தன்னுள்ளே உயிரணு அனுமதிக்கும். இதற்கு ‘குளுக்கோஸ் மெடபாலிஸம்’ (Glucose Metabiolism) என்று பெயர்.

ஆனால், உயிரணுக்களுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டவர்கள் என்ன செய்வார்கள்? ரத்தத்துக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருப்பார்கள் அல்லவா? அப்போது உங்கள் ரத்தத்தைப் பரிசோதித்தால் எத்தனை பேர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்ற கணக்கு தெரியும்! உதாரணமாக 200 பேர் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் சுகர் லெவல் ரொம்ப ‘ஹை’யாக உள்ளது என்று சொல்லிவிடுவார்கள்!

அப்படி ‘ஹை’யாக உள்ள குளுக்கோஸெல்லாம் இன்சுலின் கிடைக்காமல் ரத்த ஓட்டத்துடன் ‘ஹாய்’யாக சுற்றிக் கொண்டிருக்கும் ஓசிக்கிராக்கிகள்! அவர்கள் எதற்கும் பிரயோஜனம் இல்லாதவர்கள். உடலுக்குத் தேவையான சக்தியை அவர்களால் தரமுடியாது. உயிரில்லாத உடல்கள். இன்சுலின் இல்லாத குளுக்கோஸ் பிணங்கள். ரத்தப் பரிசோதனையில் அந்தப் பிணங்களின் எண்ணிக்கையைப் பார்த்து பயந்து சொன்ன ரிப்போர்ட்தான், ‘ஐயையோ, உங்களுக்கு ஹை சுகர் வந்துவிட்டது’ என்ற அரற்றல்!

அளவுக்கு அதிகமான குளுக்கோஸ் இருப்பது சுகர் நோய்க்கான அறிகுறி என்று சொன்னதன் தொடர்பு இப்போது புரிகிறதா? அதோடு, சர்க்கரை நோயின் கதாநாயகன் யார் என்று தெரிகிறதா? அவர்தான் இன்சுலின். அவர் இல்லாவிட்டால் படம் ஓடவே ஓடாது!

சர்க்கரை நோய் வந்துவிட்டதற்கான அறிகுறிகள் என்று சொல்லப்படுபவை:

  • கண்பார்வை மங்குதல்
  • திடீரென்று எடை குறைதல்
  • அடிக்கடி சிறுநீர் கழித்தல்
  • அடிக்கடி தாகமெடுத்தல்
  • அடிக்கடி பசித்தல்
  • உடலில் ஏற்படும் காயங்கள் குணமாக நீண்ட நாள் ஆதல்
  • ஆண்குறி விறைத்தலில் பிரச்னைகள்
  • மிகவும் களைப்பாக உணர்தல்
  • கைகளிலோ பாதங்களிலோ உணர்ச்சியற்றுப் போதல். மேலும், தொட்டால் ஊசிகளால் குத்தியதுபோல் உணர்தல் அல்லது எரிச்சல்… இன்னபிற.

இப்படிப் பல அறிகுறிகளைச் சொல்லி நம்மைப் பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள். பத்து பேரில் ஒன்பது பேருக்கு மேலே சொல்லப்பட்டவற்றில் ஒரு நான்கைந்தாவது அவ்வப்போது இருக்கத்தான் செய்யும்!

உதாரணமாக, எனக்கு அடிக்கடி ‘ஒன்னுக்குவரும் (மழைக்காலத்தில்)! அடிக்கடி வியர்க்கும், தாகமெடுக்கும் (வெய்யில் காலத்தில்)! அடிக்கடி பசிக்கும் (எல்லாக் காலத்திலும்)! உடலில் எங்காவது எனக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தால், அது நிற்க பல மணி நேரங்களாகும் (ஆஸ்பிரின் என்றப்ளட் தின்னர்’ சனியனை (மாத்திரையை) தினமும் போட்டுக் கொண்டிருந்ததனால்)!

ஆனால், இறையருளால் எனக்கு சீக்கிரமே அறிவு வந்துவிட்டது! ஆஸ்பிரினைத் தூக்கிக் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டேன். கொஞ்ச நாளைக்கு முன்பு, கதவிடுக்கில் என் சுண்டுவிரல் மாட்டி நசுங்கி மூன்று இடங்களில் ஓடிய ரத்தம் ஐந்தே நிமிடங்களில் நின்றுவிட்டது. காரணம், ஆஸ்பிரினை நிறுத்தியதுதான். ஆனால், ஆஸ்பிரின் போட்டுக் கொண்டிருந்த காலத்தில், ஒருநாள் உதட்டில் அடிபட்டு ஓடிய ரத்தம் அரை நாளுக்குப் பிறகும் கொஞ்சம் கொஞ்சமாக ஓடிக்கொண்டே இருந்தது!

ரத்தப் பரிசோதனை அல்லது சிறுநீர்ப் பரிசோதனை மூலம்தான் உங்களுக்கு சுகர் இருக்கிறதா இல்லையா என்று தெரிந்துகொள்ள முடியும் என்று சொல்கிறார்கள். சுகர் வியாதி வந்துவிட்டால் கண் பார்வை போய்விடலாம், சிறுநீரகம் செயலிழந்து போகலாம், உடலில் கால், கை என எந்தப் பகுதியில் வேண்டுமென்றாலும் ரத்த ஓட்டம் செல்ல முடியாமல் தடைபட்டு அந்தப் பகுதியையே வெட்டி எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம், நீங்கள் இறந்துகூட போகலாம் என்று டயபடிஸ் பற்றி ஏகப்பட்ட ‘லாம்’ அச்சங்கள் நிலவுகின்றன.

சொல்வதெல்லாம் உண்மை என்று சொல்ல முடியாது. சொல்வதெல்லாம் பொய், பொய்யைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். இனிப்பு வியாதி பற்றி சொல்லப்படும் பல கசப்பான விஷயங்களையும், அவற்றில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்றும் பார்க்கத்தானே போகிறோம்?

முதல் வகை சர்க்கரை நோய் ஏன் வருகிறது என்று ஆங்கில மருத்துவம் சொல்வதை மீண்டும் நினைவில் கொள்வோமா?

நம் எதிர்ப்பு சக்தியானது நம்முடைய கணையத்தின் பீட்டா செல்களைக் கொன்றுவிடுகிறது. ஒரு ஆண்டுக்குள் இன்சுலின் சுரப்பதை உடல் நிறுத்திவிடும். அதன் காரணமாக, இன்சுலின் சுரப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துபோகிறது அல்லது இல்லாமலே போகிறது.

நம்முடைய எதிர்ப்பு சக்தியே ஏன் இப்படிச் செய்கிறது? இதற்கான காரணங்கள் என்ன? மற்றும் இதற்கான தீர்வு பற்றி ஆங்கில மருத்துவம் என்னதான் சொல்கிறது?

இந்தப் பிரச்னை பரம்பரை காரணமாக, சுற்றுப்புறச் சூழல் மாசுபட்டதன் காரணமாக, இன்ஃபெக்‌ஷனால், மன அழுத்தம் காரணமாகவெல்லாம் இது வரலாம் என்பதுதான் அதன் கணிப்பு.

உயிர் வாழ வேண்டுமெனில், ஊசி மூலமாக இன்சுலினை உடலுக்குள் செலுத்தியாக வேண்டும். அமெரிக்காவில் சராசரியாக, கிட்டத்தட்ட ஏழு லட்சம் பேர் முதல் வகை சர்க்கரை நோயாலும், 1.5 கோடி பேர் இரண்டாம் வகை சர்க்கரை நோயாலும் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஒரு தகவலையும் சொல்லி நம்மை மேலும் பயமுறுத்துகிறது அது.

இரண்டாம் வகை சர்க்கரை நோய், கல்லீரலிலும் தசைகளிலும் ஏற்படும் இன்சுலின் எதிர்ப்பால் உண்டாகிறது என்றும், உணவுப்பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்வதன் மூலமும், உடற்பயிற்சி போன்ற உடல் உழைப்பு சார்ந்த செயல்பாடுகள் மூலமும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றும் கூறுகிறது.

இறைவனால் நமக்கு அருளப்பட்ட நம் உடலின் எதிர்ப்பு சக்தி நமக்கே தீமை செய்யுமா? அபத்தமாக இல்லையா? நம் உடல் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? 

இதுபோன்ற சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் ஆங்கில மருத்துவ ‘விஞ்ஞான’த்திடம் பதில் இல்லை. உங்கள் பரம்பரையில் யாருக்காவது டயபட்டிஸ் இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம் (Polygenic) என்ற மொன்னையான யூகத்தை மட்டுமே அவர்களால் வைக்க முடிகிறது.

சர்க்கரை நோயைக் குணப்படுத்தவே முடியாது என்றும்; தடுக்கலாம், கட்டுப்படுத்தலாம் என்றும் மட்டுமே ஆங்கில மருத்துவம் நினைக்கிறது. அப்படிப்பட்ட கருத்தை மட்டுமே விஞ்ஞானப்பூர்வமான உண்மையென்பதாக உலகம் முழுவதும் நம்பவைத்துக் கொண்டு கொழுத்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் உண்மையில் சர்க்கரை நோயை முழுமையாகக் குணப்படுத்தலாம். எந்த மருந்து மாத்திரையும் இல்லாமல்! நீங்கள் சர்க்கரை நோய்க்கு மருந்து மாத்திரைகள், இன்சுலின் இன்ஜெக்‌ஷன்கள் போட்டுக்கொண்டிருக்கும் வரையில் – அதாவது, வாழ்நாள் பூராவும் – நாம் சர்க்கரை நோயாளியாகவே இருந்து சாக நேரிடும். எல்லோருக்கும் இறப்பு ஒருநாள் வந்தே தீரும். அதுவரை ஏன் நாம் ஆரோக்கியமானவராக இருந்துவிட்டுப் போகக்கூடாது? இந்த அக்கறையின் அடிப்படையில்தான், ‘நலம் நலமறிய ஆவல்’ என்ற இந்தத் தொடரை நான் எழுதி வருகிறேன்.

உண்மையான காரணத்தைப் பார்ப்பதற்கு முன், டயபட்டிஸ் பற்றிய பொய்கள் என்னென்ன என்று கொஞ்சம் பார்த்துவிடலாமா?

பொய் 1 - இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை நோய் தீவிரமாகும்.


இனிப்புச் சத்துள்ள உணவுப் பண்டங்களைச் சாப்பிடுவதனால் எந்த வகை சர்க்கரை நோயும் வருவதில்லை என்பதுதான் உண்மை. ‘சின்ன வயசிலேருந்தே ஐஸ் க்ரீம்னா எனக்கு உயிர்’ என்று சொல்பவரா நீங்கள்? இப்போதும் சந்தோஷமாக அப்படியே சொல்லிச் சாப்பிடலாம். அது உங்கள் உயிருக்கு உலை வைக்காது. ஆனால், நிறைய ஸ்வீட் ஐட்டங்களை சாப்பிட்டுக்கொண்டே இருந்தால், சுரக்கும் இன்சுலினை உடலால் ஒழுங்காகப் பயன்படுத்த முடியாமல் போவதற்கு வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் நியூயார்க் நகரத்தின் டாக்டர் ஜெரால்டு பெர்ன்ஸ்டீனும் (Dr Gerald Bernstein M.D.) ரிவா க்ரீன்பெர்க்கும்.


ரிவா க்ரீன்பெர்க் 50 Diabetes Myths That Can Ruin Your Life and the 50 Diabetes Truths That Can Save It என்ற நூலின் ஆசிரியரும் நியூயார்க்கில் உள்ள நீரிழிவு நோய் ஆலோசகருமாவார். உடல் உழைப்பை அதிகரிப்பதன் மூலமும், உடல் எடைகூடி குண்டாகாமால் இருப்பதன் மூலமும் ‘இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்’ ஏற்படாமல் தடுக்கலாம். இது முக்கியமாக இரண்டாம் வகை டயபட்டிஸ் நோயாளிகளுக்கான ஆலோசனை என்றும் கூறுகிறார் டாக்டர் ஜெரால்டு. அதிக எடை, வேலை எதுவும் செய்யாமல் உட்கார்ந்துகொண்டே இருத்தல், 45 வயதுக்கு மேல் இருத்தல் – இந்த மூன்றும் இரண்டாம் வகை டயபட்டிஸ் ஏற்படக் காரணங்கள் என்றும் பயமுறுத்துகிறார் டாக்டர் ஜெரால்டு.

ஆனால், சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு இனிப்பான உணவு வகைகள் மட்டுமல்ல, எந்த உணவு வகையையும் சாப்பிட எந்தத் தடையும் இல்லை என்கிறார் மேலே சொன்ன ரிவா. இவர் 43 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, அதைப்பற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்து மேலே சொன்ன நூலை எழுதியவர். Hallelujah, there are no forbidden foods! (எல்லாப் புகழும் இறைவனுக்கே, சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு தடுக்கப்பட்ட உணவென்று எதுவும் இல்லை!) என்று சந்தோஷமாகச் சொல்கிறார் ரிவா.

நாம் சாப்பிடும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டினால்தான் நம் ரத்தத்தில் க்ளுக்கோஸ் சேருகிறது. அதுதான் க்ளுக்கோஸின் அளவை நிர்ணயிக்கிறது, மற்றபடி, கார்போஹைட்ரேட் உள்ள உணவு வகைகளால் பாதிப்பு ஏற்படுவதில்லை என்றும் அவர் சொல்கிறார். (அப்படியானால், குறைவாக உண்டால் க்ளுக்கோஸ் அதிகமாகச் சேர்ந்துவிடாமல் கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்பது அவரது உட்குறிப்பு. ஆங்கில மருத்துவத்தின் குறியீடாகத்தான் நான் டாக்டர் ஜெரால்டையோ ரிவாயையோ குறிப்பிடுகிறேன். அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல).

ரிவா சொல்வதை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. டயபட்டிஸ் பற்றி அவர் உடைக்கும் 50 இட்டுக்கட்டுகளில், ஒரு சிலதைத் தவிர மீதியை நாம் பொருட்படுத்த வேண்டியதே இல்லை. ஏனெனில், அவையெல்லாம் நாம் டயபட்டிஸ் நோயாளிகளாக இருந்துகொண்டே சந்தோஷமாகவும், வேறு பெரிய பிரச்னைகள் வராமலும், டயபட்டிஸைக் கட்டுப்பாட்டுக்குள்ளும் வைத்துக்கொள்வது எப்படி என்பது பற்றித்தான் உள்ளது. டயபட்டிஸ் என்பது முற்றிலுமாகக் குணப்படுத்த முடிகின்ற ஒரு நோய்தான் என்ற தெளிவோடோ அறிவோடோ அந்த நூல் எழுதப்படவில்லை.

அதற்குக் காரணம், அவர் ஓர் அமெரிக்கர். அலோபதி தவிர வேறு எதுவும் தெரியாதவர். அவர் சொல்வதில் உள்ள நிஜங்களை மட்டும் நாம் கருத்தில் கொள்ளலாம். அதிலும், இந்தியர்களுக்குப் பொருந்தாத பல விஷயங்களை அவர் சொல்கிறார். உதாரணமாக, ஆல்கஹால் அருந்துவதால் சுகர் அளவு குறையும் என்கிறார்! டாஸ்மாக்கில் அலைமோதும் குடிமகன்களுக்கு வேண்டுமானால் அந்த அமெரிக்கக் ‘குடி’மகள் ரியா சொல்வது பிடிக்கலாம்!

ரியாவும் அவரைப் போன்ற மேற்கத்திய ஸ்பெஷலிஸ்ட்டுகளும் எப்படியெல்லாம் தவறு செய்கிறார்கள் என்று பின்னர் பார்க்கலாம். உதாரணமாக, எல்லா உணவுப் பொருள்களிலும் சுகர், ஸ்டார்ச் (மாவுச்சத்து) என்ற இரண்டு பிரதான சத்துப் பொருள்கள் உள்ளன. குறிப்பாக, சோற்றில் / அரிசியில் இருப்பது ஸ்டார்ச். ஸ்டார்ச்சில் அதிகமான கார்போஹைட்ரேட் உள்ளது. கார்போஹைட்ரேட்தான் ரத்தத்தில் சுகரின் அளவை அதிகரிக்கிறது என்ற விஷயத்தை ஏற்றுக்கொண்டால், சர்க்கரை நோய் வந்துவிடும் என்ற அச்சத்தில் தமிழ்நாட்டில் யாருமே சோறு உண்ண முடியாது!

பொய் 2 - உடல் எடை அதிகமாக இருந்தால் டயபட்டிஸ் வரும்.


எத்தனையோ ஒல்லிக்குச்சிகளுக்கு சர்க்கரை வியாதி வந்துள்ளது. குண்டாக இருப்பவர்களுக்கும் வந்துள்ளது. தவறான உணவுப் பழக்கங்களும், வாழ்க்கைமுறையும் எவருக்கு இருந்தாலும் இது வரும். சர்க்கரை வியாதி வரக்கூடிய அளவுக்கு நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்து வைத்திருந்தீர்கள் என்றால், நீங்கள் எப்படி இருந்தாலும் அது வரும். இவன் ஒல்லிப்பிச்சான், அவள் குண்டுப்பூசணிக்காய் என்றெல்லாம் சர்க்கரை நோய் ‘ஜாதி’ பார்ப்பதே இல்லை! சொல்லப்போனால், இரண்டாம் நிலை டயபட்டிஸால் பாதிக்கப்பட்ட ஜப்பானியர்களில் பெரும்பாலானவர்கள் ஒல்லிக்குச்சியானவர்கள் என்கிறது ஒரு ஆராய்ச்சி!

அமெரிக்காவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட்ஸ் ஆஃப் ஹெல்த்-தின் அறிக்கைகூட, குண்டாக இருப்பவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேருக்குத்தான் டயபட்டிஸ் வந்துள்ளதாகவும், அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 20 சதவீதத்தினர் நார்மல் எடை உள்ளவர்களே என்றும் கூறியது!

குண்டாக இருப்பவர்களுக்கு வெளிக்கொழுப்பு, ஒல்லியாக இருப்பவர்களுக்கு உள்கொழுப்பு என்று சொல்கிறது இன்னொரு ஆராய்ச்சி! ஒல்லியாக இருப்பது ஆரோக்கியத்தின் அடையாளம் என்று சொல்லிவிட முடியாது. உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் மட்டும் எடை கூடாமல் பார்த்துக்கொண்டாலும், உள்ளுறுப்புகளில் கொழுப்பு சேர்வதைத் தடுக்க முடியாது, ‘ஆக்டிவ்’ ஆக இருக்க வேண்டும், உடலுழைப்பு வேண்டும். அப்போதுதான், முக்கிய உள்ளுறுப்புகளின் மீது கொழுப்பு படியாது என்று எச்சரிக்கிறார்கள்!

1994-ல், பெல் என்ற டாக்டர் தலைமையினாலான குழு ஒரு பரிசோதனை செய்தது. 800 ஒல்லிக்குச்சிகளுக்கு MRI ஸ்கேன் எடுத்துப் பார்த்தார்கள். அதன்மூலமாக ஒரு கொழுப்பு வரைபடத்தை உருவாக்கினார்கள்! அதன் முடிவில், உடல் உழைப்பு எதுவும் இல்லாமல் ‘டயட்டிங்’ செய்ததன் மூலம் மட்டுமே ‘ஸ்லிம்’ ஆக, (பழைய) சிம்ரன் மாதிரி இருந்தவர்களின் முக்கிய உள்ளுறுப்புகளில் கொழுப்பு போய் தங்கிக் கொண்டிருந்ததைக் கண்டுபிடித்தார்கள். அடடா, நம்மை நிம்மதியாக இருக்கவிடமாட்டார்கள் போலுள்ளதே!

இந்த ஆராய்ச்சியில் கொஞ்சம் உண்மை இருக்கத்தான் செய்கிறது. உடல் உழைப்பு இல்லாமல், சும்மா சாப்பாட்டில் மட்டும் கட்டுப்பாடு செய்துகொள்கிறேன் என்று சொல்பவர்களுக்கு உடலில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உயிர் உள்ள உடல் என்றால், அதன் அடையாளமே அசைவுதானே! அதை மறுக்க முடியுமா?

ஆனாலும், இரண்டாம் நிலை சர்க்கரை வியாதிக்கு முக்கியக் காரணம் உடல் பருமன் (Obesity) என்று திரும்பத் திரும்பச் சொல்லிச் சொல்லி, அந்த எதிர்மறையான தூண்டுரை (Negative Suggestion) நம் மனத்தில் போய் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொள்வதால் வரும் பிரச்னைகள்தான் அதிகம். மனத்தின் ஆற்றலைப் பற்றி ஏற்கெனவே பார்த்தோம். மருத்துவ உலகம் கொழுக்கக் கொழுக்க பிழைத்துக் கொண்டிருப்பதற்குக் காரணமே எதிர்மறைத் தூண்டுரைகள்தான் என்றால், அது மிகையே அல்ல.

இந்தத் தூண்டுரைகளை நாம் மதிக்கவில்லையென்றால், நாம் நிச்சயம் நன்றாகத்தான் இருப்போம். பழுதுபட்டுப் போனால், கெட்டுப்போன பகுதியை நீக்கிவிட்டு, புதிய பகுதியை மாட்டிக்கொண்டு செயல்பட நம் உடல் ஒரு கருவியோ இயந்திரமோ அல்ல. அது இறைவன் கொடுத்த உயிர் உலவும் ஓர் அழகான ஏற்பாடு. நம் உடலுக்கு எல்லா அறிவும் உள்ளது. அதை நம்பிச் செயல்பட்டாலே போதும்.

ருந்து நிறுவனங்களும், மருத்துவமனைகளும் செய்வதெல்லாம் Marketing of Fear என்றே நான் சொல்வேன். அதற்குப் பலியாகாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு நம்மிடம்தான் உள்ளது. நம் ஆரோக்கியத்துக்கு எதிர்மறையாக எது சொல்லப்பட்டாலும், அதை மனத்திலிருந்து தூக்கி எறிந்துவிடும் அளவுக்கு நமக்கு அறிவிருந்தால் போதுமானது.

பொய் 3 – குடும்பத்தில் பலருக்கும் சுகர் இருக்கிறது. அதனால் எனக்கும் நிச்சயம் வரும்.

குடும்பத்தில் பெற்றோருக்கு, சகோதர, சகோதரிகளுக்கு சுகர் இருந்தால் நமக்கும் சுகர் நிச்சயம் வரும் என்றுதான் பெரும்பாலோர் நினைக்கிறார்கள். அப்படி வந்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. நம் எண்ணங்கள் நம் டி.என்.ஏ.யின் அமைப்பையே மாற்றவல்லது என்று நிரூபிக்கிறார் உயிரணு உயிரியல் டாக்டரான ப்ரூஸ் லிப்டன். நம்பிக்கை எதுவும் செய்யும் என்பதை The Biologoy of Belief என்ற அவரது நூல் எப்படி நிரூபித்தது என்பதை ஏற்கெனவே பார்த்தோம்.

கூட்டு மன ஆற்றல் (Archetypal Force)


இதையே வேறு மாதிரியாகச் சொல்வதானால், இது ஒரு ‘ஆர்க்கிடைப்பல் ஃபோர்ஸ்’ (Archetypal Force). ஆழ்மன உளவியலின்படி, ஒரு தனி மனிதனோ, ஒரு குடும்பமோ, ஒரு தெருவோ, ஒரு சமுதாயமோ, ஒரு ஊரோ, ஒரு இனமோ எதை உண்மை என்று தீவிரமாக நம்புகிறதோ, அது அவர்களைப் பொறுத்தவரை உண்மையாகவே ஆகிவிடும்.

உளவியலாளர் கார்ல் கஸ்டவ் யங் (Carl Gustav Jung), தனது நூல்களில் இதுபற்றி விரிவாக எழுதியுள்ளார். ஆப்பிரிக்கப் பழங்குடியினரிடையே அவர் செய்த ஆராய்ச்சிகளை வைத்து அதை நிரூபிக்கிறார்.

ஒரு குறிப்பிட்ட பழங்குடியினர், மழையில்லாதபோது மழையை வரவழைப்பதற்காகக் கூட்டமாகச் சுற்றி நின்று, ஈட்டிகளை வைத்து பூமியில் யோனி வடிவத்தில் கோடுகளை, வட்டங்களையெல்லாம் போட்டுக்கொண்டு, ஏதேதோ ஒலிகளை எழுப்பிய வண்ணம் அந்த வட்டத்தைச் சுற்றி நடனமாடுகின்றனர். மழை வரும் வாய்ப்பு சத்தியமாகக் கிடையாது என்றே யங் நம்புகிறார். ஆனால் அவர்கள் அப்படிச் செய்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம் மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது! இப்படி ஒரு முறை அல்ல, ஏகப்பட்ட முறைகள்! வியந்துபோன யங், அது எப்படி சாத்தியாமனது என்று ஆராய்கிறார். அவர் கண்டுபிடித்த முடிவு இதுதான்.

அவர்கள் வட்ட வடிவத்தில் நின்றுகொண்டதோ, ஈட்டிகளைக் கைகளில் வைத்துக் கொண்டிருந்ததோ, யோனி மாதிரி பூமியில் வரைந்ததோ, ஏதேதோ சத்தமிட்டுக் கொண்டே நடனமாடியதோ மழை வந்ததற்கான காரணம் அல்ல. ஆனால், அப்படிச் செய்தபோதெல்லாம், அவர்கள் அத்தனை பேருடைய மனநிலையும் ஒரே மாதிரியாக இருந்ததுதான் மழை வரக் காரணம். அந்த மனநிலையை நாமும் வரவழைத்துக் கொண்டால், அவர்கள் செய்த எதையும் செய்யாமலே மழை நிச்சயம் வரும் என்று அவர் முடிக்கிறார்.


The Archetypes and the Collective Unconscious என்ற மிக முக்கியமான நூலில் இது பற்றி அவர் விளக்குறார். இந்த உலகத்துக்கு Unconscious பற்றி அறிமுகப்படுத்தியவரும் அவரே என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஆர்க்கிடைப்பல் ஃபோர்ஸ்’ என்பதும் அதுதான். குழு மனம், சமுதாய மன ஆற்றல், கூட்டுமன ஆற்றல் என்றும் அதைச் சொல்லலாம்.

பத்து பேர் சேர்ந்து எதை உறுதியாக நம்புகிறார்களோ, அது அவர்களைப் பொறுத்தவரை உண்மையாகிவிடும். இதுதான் ‘ஆர்க்கிடைப்பல் ஃபோர்ஸ்’. நம் சமுதாயத்தில் இது வேலை செய்வதெல்லாம் எதிர்மறையாகத்தான். நல்ல தேதி, நல்ல நாள், நல்ல நட்சத்திரம், வாஸ்து – இப்படியான சமாசாரங்கள் சிலருக்கு அல்லது பலருக்கு உண்மையாவதற்குக் காரணம், ஆர்க்கிடைப்பல் ஃபோர்ஸ்தான்.

ஆர்க்கிடைப்பை உடைக்க முடியுமா?

முடியும். நிச்சயமாக முடியும். கூட்டுமன ஆற்றலைவிட அதிக சக்திவாய்ந்த ஆற்றல் கொடுத்தால் அது உடைந்துவிடும். அதை இன்னொரு குழு செய்யலாம், அல்லது உறுதியான மனமுள்ள தனி மனிதரும் செய்யலாம். ஞானிகளெல்லாம் ஆர்க்கிடைப்பை உடைத்தவர்கள்தான். இதை ஞானிகள்தான் செய்ய முடியும் என்பதல்ல. சாதாரண மனிதர்களாலும் செய்ய முடியும். உதாரணமாக, நானே செய்துள்ளேன்.

என் குடும்பத்தில் பலருக்கு ‘ஹைட்ரோசீல்’ பிரச்னை இருந்தது. எனக்கும் நிச்சயம் வருமென்று குடும்பத்தினர் நினைத்தார்கள். ஆனால், நான் நாகூரில் வாழ்ந்த அப்துல் வஹ்ஹாப் ஹஸ்ரத் என்ற ஞானியின் மாணவனாக எட்டாண்டு காலம் பயிற்சி எடுத்துப் பண்பட்டுவிட்டதால், என்னால் அந்த ‘ஆர்க்கிடைப்’பை எளிதாக உடைக்க முடிந்தது. இது உங்களாலும் முடியும். மன உறுதிதான் முக்கியம்.

இன்னொரு உதாரணம். நான் வீடு கட்டியபோது, குறிப்பிட்ட இடத்தில் சமையலறையை வைக்கச் சொன்னேன். ஆனால், வாஸ்து சாஸ்திரப்படி அந்த இடம் ஏதோ வாயுமூலையாம், அக்னி மூலையல்லவாம். அங்கே சமையலறை அமைந்தால், கணவன் மனைவி இடையே பிரச்னைகள் வரும் என்று என் மேஸ்திரி எனக்கு அறிவுரை சொன்னார். ‘இது என் வீடு, என் இஷ்டப்படி கட்டுங்கள். நீங்கள் சமையலறையை இங்கே வைக்காவிட்டால்தான் பிரச்னை வரும். ஆனால் எனக்கல்ல, உங்களுக்கு’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டேன். இன்றுவரை சமையலறையால் எந்தப் பிரச்னையும் வரவில்லை! சமைத்த உணவின் பொருட்டு சில சங்கடங்கள் வந்துள்ளன! ஆனால் அது வாஸ்து பிரச்னையல்ல, சமையல் செய்யப்பட்ட வஸ்து பிடிக்காததால் வந்த பிரச்னை!

குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சுகர் இருந்தால், நமக்கும் சுகர் வரும் என்ற நம்பிக்கை ஆர்க்கிடைப்பல் ஃபோர்ஸின் வேலையாகும். ஒரு விதை மாதிரி உள்ளே கிடக்கும் சாத்தியக்கூறு அது. அதை நாம் நம்பும்போது, விதைக்கு வேண்டிய தண்ணீர்விட்ட மாதிரி ஆகிவிடும். வேகமாக விதை வளர்ந்து மரமாகவும் ஆகிவிடும்!

சர்க்கரை வியாதி விஷயத்தில் இதுதான் நடக்கிறது. எனவே, குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இந்த வியாதி இருந்தால், அது உங்களுக்கும் வர வேண்டும் என்ற அவசியமில்லை. அந்த விதைக்கு நீங்கள் தண்ணீர் ஊற்றி வளர்க்காமல் இருக்க முடிவு செய்தால் போதும். குடும்பத்தில் சுகர் இருந்தால் நமக்கும் வரும் என்ற பொய்யை, கட்டுக்கதையை, இல்பொருள் கற்பனையை நிச்சயம் உடைத்துவிடலாம்.

பொய்கள் இன்னும் நிறைய உள்ளன. பார்க்கலாம்…


பொய் 4 – கண் குருடாதல், மாரடைப்பு, உறுப்பை வெட்டி எடுத்தல் போன்றவற்றுக்கு சர்க்கரை வியாதிதான் முக்கியக் காரணம்.

சர்க்கரை வியாதி வந்துவிட்டால், அதன் தொடர்ச்சியாக பல சிக்கல்கள் நிச்சயம் ஏற்படும். அதைத் தவிர்க்க முடியாது என்றே பலரும் நம்புகின்றனர். குறிப்பாக, மெத்தப் படித்தவர்கள்! சர்க்கரை வியாதி முறையாகக் கட்டுப்படுத்தப்பட்டால், மேலே சொன்ன சிக்கல்கள் நிச்சயம் வராது. ஆனால், சரியாகக் கவனிக்காமல் விடப்பட்ட சர்க்கரை வியாதிக்காரரர்களுக்கு இந்தச் சிக்கல்கள் வரும் வாய்ப்பு உண்டு என்கிறார் ரிவா.

ரிவா சொல்வது ஓரளவுக்கு உண்மைதான். ஏன், ஓரளவுக்கு? ஏனென்றால், எந்த நோயாக இருந்தாலும், நாம் அதை சரியாகக் கவனிக்காவிட்டால், அதன் விளைவுகள் அதிகரிக்கத்தானே செய்யும்? கண் பார்வை பாதிக்கப்படுதல், ரத்த ஓட்டம் நடைபெறாத பகுதியை, உதாரணமாக கால், கை விரல்களை வெட்டி எடுத்தல் போன்றவை நிகழ்ந்துகொண்டுதான் உள்ளன. என் சின்னாப்பாவுக்குக் கால் பெருவிரல், ரத்த ஓட்டமின்மையால் வெட்டி எடுக்கப்பட்டது. என் துறைத் தலைவராக இருந்த ஒருவருக்குக் கண் பார்வை போனது. ஆனால், என் சின்னாப்பாவின் பெருவிரல் வெட்டப்பட்டதற்கும், துறைத் தலைவரின் பார்வை போனதற்கும் சர்க்கரை வியாதிதான் காரணம் என்று டாக்டர்கள் கூறினர். அதுதான் உண்மையா? தெரியாது. அவர்களுக்கு சர்க்கரை வியாதி இருந்தது. சில ஆண்டுகள் கழித்து ஒருவருக்கு விரல் வெட்டி எடுக்கப்பட்டது, இன்னொருவருக்குப் பார்வை போனது.

இப்படியெல்லாம் ஒருவருக்கு ஆனால் நமக்கு பயம் வராதா என்ன? வரலாம். ஆனால், அச்சப்படுவதால் எந்தப் பிரச்னையும் தீராது. அச்சம், பிரச்னையை அதிகரிக்கவே செய்யும். ஆனால், மன ஆற்றல் எல்லா வியாதிகளையும் தீர்க்கவல்லது. சர்க்கரை வியாதிக்காரர் ஒருவருக்கு நம்பிக்கை நிகழ்த்திய ஒரு அற்புதம் பற்றி ரிவா தனது நூலில் கூறுகிறார்.

வார்ம் ஃபீட் தொழில்நுட்பம்


டயபட்டிஸ் இருந்த ஒருவருக்கு கால் பகுதியில் ரத்த ஓட்டம் சரியாகச் செல்லாததால், அவரது இரண்டு கால் பெருவிரல்களையும் வெட்டி எடுத்துவிடலாம் என்று டாக்டர்கள் முடிவு செய்தனர். அறுவை சிகிச்சைக்குச் சில நாட்களுக்கு முன்பு காலில் ஏற்பட்ட பயங்கர வலியின் காரணமாக, டாக்டரைப் பார்க்க அந்த நோயாளி வந்தார். அவருக்கு ரிலாக்சேஷன் செய்யச் சொல்லிக்கொடுத்த அந்த டாக்டர், ‘வார்ம் ஃபீட்’ (Warm Feet) என்ற ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பார்த்தார்.

அது என்ன தொழில்நுட்பம்? ஒன்றுமில்லை, நோயாளியின் உடலில் எந்தப் பகுதியில் உஷ்ணம் குறைவாக உள்ளதோ அந்தப் பகுதிக்குத் தேவையான உஷ்ணத்தைச் செலுத்து என்று தன் மனத்துக்கு உத்தரவு கொடுத்து, நோயாளியின் உடலின் அந்தக் குறிப்பிட்ட பகுதியில் அவரது எண்ணத்தை ஒருமித்து நிற்கவைத்து, மன ஆற்றல் மூலம் உஷ்ணத்தை அங்கே அனுப்புவது. அதாவது, தேவையான உஷ்ணம் அந்தப் பகுதிக்குப் பாய்வதாக டாக்டர் கற்பனை செய்வது! ஆமாம், கற்பனைதான். கற்பனை என்பது திரைபோடப்பட்ட உண்மையாகும். கற்பனை செய்யும்போது திரையை நீக்கிவிட்டுக் கற்பனை செய்யவேண்டும் என்று என் குருநாதர் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது!

அப்படி டாக்டர் செய்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம், நோயாளியின் உடலில் தேவையான உஷ்ணம் பரவியது. வலியும் நின்றுபோனது. நோயாளிக்கு ரத்த ஓட்டமும் தடையின்றிப் பாய ஆரம்பித்தது. ஆபரேஷன் கேன்ஸலானது! டயபட்டிஸ் மற்றும் பாதங்களுக்கான ஸ்பெஷலிஸ்ட் பிர்கிட்டா ரைஸ் என்பவர் இந்நிகழ்ச்சியை தன்னிடம் கூறியதாக ரிவா கூறுகிறார்.

கண் குருடாதல், மாரடைப்பு, உறுப்பை வெட்டி எடுத்தல் போன்றவற்றுக்கு காரணம் சர்க்கரை நோய் அல்ல. மாறாக, அதைக் கட்டுப்படுத்துகிறேன் என்ற பெயரில் கொடுக்கப்படும் ஆங்கில மருத்துவத்தால் சிபாரிசு செய்யப்பட்டு கொடுக்கப்படும் மருந்து மாத்திரைகள் மற்றும் இன்சுலின் ஊசிகள்தான் என்றால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை.

சரி, இனி சர்க்கரை நோய் என்று சொல்லி பயமுறுத்தப்படும் பிரச்னையின் பின்னால் உள்ள உண்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம். இதுவரை, அந்த நோய் பற்றி ஆங்கில மருத்துவத்தின் பார்வையில் சொல்லப்பட்டவற்றை சுருக்கமாக மீண்டும் பார்த்துவிடலாம்.

சர்க்கரை நோய், நீரிழிவு நோய், டயபட்டிஸ் மெலீட்டஸ் என்றெல்லாம் சொல்லப்படும் நோயானது, ஒரு பயங்கரமான நோயாகும். அதில் டைப் 1, டைப் 2, கெஸ்டேஷனல் டயபட்டிஸ் என்றெல்லாம் உண்டு. இந்த நோய் முற்றினால் அது உயிருக்கே ஆபத்தாக முடியலாம். இதன் கடுமையின் காரணமாக, கண் பார்வை போகலாம், கை, கால் விரல்கள் போன்ற உறுப்புகளில் ரத்த ஓட்டம் நடைபெறாமல், அந்த உறுப்புகளை வெட்டி எடுக்க நேரிடலாம், சிறுநீரகங்கள் பாதிக்கப்படலாம், செயலிழக்கலாம், இதய அடைப்பு ஏற்பட்டு இறக்கலாம், இன்னும் என்னென்னவோ நடக்கலாம். சுருக்கமாகச் சொன்னால், ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால் அது பாண்டோரா பெட்டியைத் திறந்த மாதிரி. எல்லா நோய்களும் ஒவ்வொன்றாக வந்து கடைசியில் உயிரைக் குடித்துவிடும்.

ஆனால், ஆங்கில மருந்து மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டால், இன்சுலின் ஊசிகள் போட்டுக் கொண்டிருந்தால், உடற்பயிற்சிகள் செய்து உடல் குண்டாகாமால் பார்த்துக்கொண்டால், உணவில் கட்டுப்பாடு இருந்து கொண்டே இருந்தால், வாழும் நாளெல்லாம் சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கலாம். ஆனால் இதைத் தடுக்கவோ, குணப்படுத்தவோ முடியாது.

உலகம் முழுவதும் ஆங்கில மருத்துவத்தின் பார்வை, அணுகுமுறை மற்றும் செயல்பாடு இதுதான். உலக மக்களில் பெரும்பாலோர் இதைத்தான் நம்புகிறார்கள். ஒரு நம்பிக்கை வெல்லும், ஒரு நம்பிக்கை கொல்லும் என்பதை நாம் அறிவோம். சர்க்கரை நோய் பற்றிய நம் நம்பிக்கை, ஆங்கில மருத்துவ உலகம் இந்த உலகுக்குக் கொடுத்திருக்கும் கொல்லும் நம்பிக்கையாகும்.

ஆங்கில மருத்துவம் எப்படி, எந்த அளவுக்குத் தவறானது என்பதற்கு, ஒரு நோயாளியின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தை பார்க்கலாம். பிரபலமான ஒரு ஆங்கில மருத்துவர் எழுதிய நூலிலிலிருந்து எடுத்து இதை நான் மேற்கோள் காட்டுகிறேன். இதோ அந்த நோயாளி எழுதிய கடிதம்.

‘‘எனக்கு 58 வயதாகிறது. முப்பது ஆண்டுகளாக எனக்கு டயபட்டிஸ் இருக்கிறது என்று கண்டுபிடித்தார்கள். டெஸ்ட்டுகள் அனைத்தையும் முடித்து, இறுதியாக மருந்துகளை எழுதிக்கொடுத்த டாக்டர்கள், ‘இந்த நீரிழிவு மாத்திரைகளை நாள் தவறாமல் உட்கொண்டு வர வேண்டும். தவறினால் உயிருக்கு ஆபத்து’ என்று அறிவுரை கூறினார்கள். ஆகவே, தொடர்ச்சியாக மருந்துகளை உட்கொண்டு வந்தேன்.

மாதங்கள் செல்லச் செல்ல, மாத்திரைகளையும் மீறி, எனது டயபட்டிஸ் அதிகமாகியது. ஆரம்பத்தில், மாத்திரைகளின் அளவை அதிகரித்தார்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஓரளவுக்குக் கட்டுப்பட்டது. அடுத்த ஓரிரு மாதங்களில் மீண்டும் சர்க்கரையின் அளவு அதிகமாகியது.

நான் முறையாகச் சாப்பிடவில்லை என்று கூறி, கடுமையான பத்தியத்தை என் மீது கட்டாயமாக்கினார்கள். நானும் என் உடல் நலத்தின் மீது அக்கறைகொண்டு, என்னுடைய நீரிழிவு சிறப்பு மருத்துவர் என்ன அறிவுரை கூறினாரோ, அதன்படி கடுமையான பத்தியத்தை மேற்கொண்டேன்.

ஒருநாள்கூட என் பசிக்குரிய ஆகாரத்தை என் வயிற்றுக்கு நான் கொடுக்கவில்லை. எப்போதும் அரைகுறை உணவுடனும், எந்த நேரத்திலும் பசியுடனும், பட்டினியுடனும்தான் என் வாழ்க்கையை நடத்தி வந்தேன்.

‘‘இவ்வாறாக, பத்துப் பதினைந்து ஆண்டுகள் கழிந்தன. ஆனாலும், டயபட்டிஸ் குறையவே இல்லை. மாத்திரைகள் மாற்றப்பட்டன. ஒன்றுக்கு மேல் பல மருந்துகள் சேர்க்கப்பட்டன. தொந்தரவுக்கு மேல் தொந்தரவுகள், என் உடலின் பல பாகங்களிலும் தோன்ற ஆரம்பித்தன.

பசி குறைய ஆரம்பித்தது. வயிற்றில் புண்கள் ஏற்பட்டன. அவ்வப்போது மார்பின் கனமும், படபடப்பும், இரவு நேரங்களில் தூக்கமின்மையும், கைகால்களில் வலியும், மதமதப்பும் தோன்றி என்னைப் பாடாய்ப்படுத்தின. ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே மருந்துகளைக் கொடுத்தார்கள். என் நிலை முன்பைவிட மோசமாகியது. இப்போது, மருந்து மாத்திரைகள் போதாதென்று கூறி, இன்சுலின் ஊசியைப் பரிந்துரை செய்தார்கள்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பாக இன்சுலின் ஊசி போட ஆரம்பித்தேன். நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர் கூறிய அத்தனை அறிவுரைகளையும் உடல் நலம் காத்துக் கொள்ளவேண்டி இதுநாள்வரையிலும் கருத்துடன் பேணி வந்தேன்.

உடற்பயிற்சி செய்யச் சொன்னார்கள். பத்தியத்தையும் அதிகப்படுத்தினார்கள். இவ்விரண்டும் என்னை மிகவும் சோர்வுக்குள்ளாக்கியதால், ‘மிகவும் பலவீனமாக உணர்கிறேன்’ என்று டாக்டரிடம் சொன்னபோது, ‘நீங்கள் கண்டிப்பாக பத்தியத்தையும் விடக்கூடாது, உடற்பயிற்சியையும் விடக்கூடாது. இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வதையும் விட்டுவிடக்கூடாது. தொடர்ச்சியாக அதைப் போட்டுவர வேண்டும். தொடர்ச்சியாக ‘செக்அப்’புக்கும் வர வேண்டும். ஏனென்றால், உங்களை அறியாமல் டயபட்டிஸ் அதிகமாகும்போது, இன்சுலின் மருந்துகளை மாற்றவும் நேரிடலாம். அதிகப்படுத்த வேண்டியும் ஆகலாம்’ என்று கூறினார்.

ஆகவே, டாக்டர்கள் அறிவுரைப்படியே என் வாழ்க்கையை வெகு சிரமத்துக்கு இடையே வாழ்ந்துகொண்டிருந்தேன். ஐந்து ஆண்டுகள் இவ்விதம் கழிந்தன. என் இடது காலில் ஒரு புண் ஏற்பட்டது. உடனே டாக்டரிடம் காண்பித்தேன். மாத்திரைகள் எழுதிக்கொடுத்தார். புண் ஆறவில்லை. மேலும் பெரிதாக ஆரம்பித்தது. ‘டயபட்டிஸ் நோயின் தீவிரத்தினால் இப்படி ஆகியிருக்கிறது. காலை வெட்டிவிட வேண்டும். இல்லையென்றால் உயிர் போய்விடும்‘ என்று பயமுறுத்தினார்கள்.

நான் அவர்களிடம் கேட்டேன். ‘எனக்கு டயபட்டிஸ் வந்து கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாகின்றன. நோய் ஆரம்பித்ததில் இருந்து உங்களிடம்தான் காட்டிக்கொண்டிருக்கிறேன். மருந்து மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும், இல்லையென்றால் உயிர் போய்விடும் என்று அன்றும் சொன்னீர்கள். பின்பு மாத்திரைகளை அதிகப்படுத்தி உணவில் பத்தியத்தையும் தீவிரப்படுத்தச் சொன்னீர்கள். ‘எனக்கு அதிகமாக பசிக்கிறது’ என்று சொன்னபோது, ‘அப்படியெல்லாம் சாப்பிடக்கூடாது, டயபட்டிஸ் முற்றிவிடும், உயிர் போகலாம்’ என்று சொன்னீர்கள். அந்தக் கடுமையான பசியையும் தாங்கிக்கொண்டேன்.

அப்படியும் என் டயபட்டிஸ் குறையாமல் இருக்கவே, நான் உங்களிடம் அதுபற்றிக் கேட்டபோது, ‘டயபட்டிஸ் நோயை கட்டுப்பாட்டில் மட்டும்தான் வைக்கமுடியும். குணப்படுத்த முடியாது’ என்று சொன்னீர்கள்.

என்னுடைய டயபட்டிஸ் கட்டுப்பாட்டில்கூட இல்லையே என்று கேட்டபோது, நான் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டுமென்றும், அப்போதுதான் சர்க்கரை குறையும் என்றும் கூறினீர்கள். கடுமையான பத்தியத்தினால் ஏற்பட்ட சோர்வையும் மீறி நான் உடற்பயிற்சிகளைச் செய்தேன்.

பின்னரும் நோய் அதிகமானது. அந்த நிலையில்தான் காலில் புண் ஏற்பட்டது. அப்போது இன்சுலின் ஊசியை அதிகப்படுத்தி, புண்ணுக்கான மருந்துகளையும் கொடுத்தீர்கள். பத்தியத்தை மேலும் அதிகப்படுத்தினீர்கள். ஏறக்குறைய நான் இறக்கும் நிலைக்கு வந்துவிட்டேன். இப்போது என் இடது காலை வெட்டாவிட்டால் நான் இறந்துவிடுவேன் என்று சொல்கிறீர்கள்.

நான் இப்போது உங்களிடம் தெளிவாகக் கேட்கிறேன். என்னைக் குணப்படுத்த முடியுமா முடியாதா?

இந்த நோய் இப்படித்தான் முடியும். வேறு வழியில்லை. காலை வெட்டிவிட்டால் இன்னும் கொஞ்ச நாளைக்கு வாழலாம். அவ்வளவுதான் சொல்லமுடியும் என்று கூறினார்.

என் இடது காலும் வெட்டப்பட்டது. என்னுடைய நிலை முன்னேறவே இல்லை. கடுமையான பத்தியம், பலவீனம், ஒரு கால் இழப்பு – இவற்றின் காரணமாக ஒரு மாதத்துக்கு முன்பாக நான் கீழே விழுந்துவிட்டேன். டாக்டரிடம் சொன்னபோது வலி மாத்திரைகளைத்தான் எழுதிக்கொடுத்தார்.

வலி மாத்திரைகளைச் சாப்பிட ஆரம்பித்த இரண்டு நாட்களில் எனக்கு சிறுநீர் பிரிவதில் கோளாறு ஏற்பட்டது. சிறுநீர் போவது குறைந்துபோனது. கால்கள், கைகள், முகம் யாவும் வீங்கிவிட்டது. வயிறும் பானைபோல் உப்பிவிட்டது.

நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர் என்னைப் பரிசோதித்துவிட்டு, என் சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்துவிட்டதாகச் சொன்னார்! ‘டயபட்டிஸுக்காக இன்சுலின், மருந்து மாத்திரைகள் எடுக்கும்போதும் இது தவிர்க்க முடியாதுதான். யாருக்கு எந்த நேரத்தில் சிறுநீரகங்கள் பழுதாகும் என்று சொல்லமுடியாது. ஆனால் நிச்சயம் பழுதாகும். உங்களுக்கு இதயமும் மிகவும் பலவீனமாக இருக்கிறது. அதுவும் எந்த நேரமும் செயலிழந்துபோகலாம். எனவே ஒரு கார்டியாலஜிஸ்ட் உங்களைப் பரிசோதிக்க வேண்டும். அதுமட்டுமல்ல, உடனடியாக உங்களுக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டும். இன்றே நீங்கள் அட்மிட் ஆக வேண்டும்’ என்று அவர் கூறியபோது, உயிர் போய்விடும், உயிர் போய்விடும் என்று பயமுறுத்தியே கொல்கின்றனரே என்று ஆங்கில மருத்துவத்தையே வெறுத்தேன். உங்களுடைய வைத்தியமே வேண்டாம் என்று வீட்டுக்கு வந்துவிட்டேன்.

மூன்று மாதங்களாகிவிட்டன. மருந்து, மாத்திரைகள், ஊசிகள் அனைத்தையும் முழுமையாக விட்டுவிட்டேன். சிறுநீர் பிரிந்து கொண்டிருக்கிறது. கால்களில் வீக்கமும், வயிறு உப்புசமும் இன்னும் குறையவில்லை.

ஆனாலும் இந்த மூன்று மாதங்களும் வைத்தியத்தில் இருந்தபோது எந்த நிலையில் இருந்தேனோ, அதைவிட உடல் நிலையிலும், மனநிலையிலும் நிச்சயமாகத் தேறி இருக்கிறேன். மருந்து, மாத்திரை, ஊசிகளின் பக்கவிளைவுகளிலிருந்து விடுபட்டுவிட்டதன் காரணமாகவே நான் தேறியிருக்கிறேன் என்று கருதுகிறேன். ஏனென்றால், இப்போதெல்லாம் குமட்டல், வாய்க்கசப்பு ஏதும் இல்லை. உணவைப் பார்த்தாலே வெறுப்பு என்ற நிலை மாறி, உணவை விரும்பி, ருசித்து சாப்பிட்டு வருகிறேன். என் உடல் நிலை மோசமாகிக் கொண்டிருந்தாலும், என மனநிலை ஆரோக்கியமானதாகவே இப்போது இருக்கிறது’’ என்று அவர் கடிதத்தை முடிக்கிறார் (பக்கம் 84 - 88)!






இந்தக் கடிதம் ஒரு சாம்பிள்தான். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆங்கில மருத்துவத்தால் இன்னும் நிறைய (தீமைகளைச்) செய்யமுடியும்! இதைப் படிக்கும் சர்க்கரை நோயாளிகள் தங்கள் அனுபவத்தை இக்கடிதத்தில் சொல்லப்பட்டவற்றோடு நிச்சயம் பொருத்திப் பார்க்க முடியும்.

ஆங்கில மருத்துவராக வாழ்வைத் தொடங்கி, பின்னர் அதை வெறுத்து ஒதுக்கி, அதற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி, இந்திய அக்குபங்சர் மருத்துவத்தின் தந்தை என்ற புகழ்ப்பெயருக்கு உரியவருமான டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மானின் BP, டயாபடிஸ் நோயாளிகளே, உங்கள் நலனுக்காக என்ற நூலில் இருந்துதான் இக்கடிதம் எடுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

நோயாளியின் பெயரையும், அவருக்கு மருத்துவம் பார்த்த பிரபல மருத்துவமனையின் பெயரையும், டாக்டர் பெயரையும்கூட ஃபஸ்லுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார். தனி மனித எதிர்ப்போ, தனியொரு மருத்துவமனை மீதான எதிர்ப்போ நமக்குக் கிடையாது. ஆனால், உலகெங்கும் புகழ்பெற்ற ஆங்கில மருத்துவத் துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்த அனுபவங்கள் நிச்சயம் உதவும்.

ஆங்கில மருத்துவத்தை ‘சமூக துரோக மருத்துவம்’ என்றும், ‘குற்றவாளி மருத்துவம்’ என்றும் டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் வர்ணிக்கிறார். ரௌத்ரம் பழகு என்று பாரதி சொன்னதுபோல, அவருடைய கோபத்தில் ஒரு நேர்மையும் சமுதாய அக்கறையும் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக உண்மையும், அதைச் சொல்லும் துணிச்சலும் இருக்கிறது. அவரைப்போலவே உலகப் புகழ்பெற்ற பல ஆங்கில மருத்துவர்களும் சமீபமாக ஆங்கில மருத்துவத்துக்கு எதிராகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

அவர்கள் சொல்வது இருக்கட்டும். டயபட்டிஸ் பற்றி ஆங்கில மருத்துவம் சொல்பவையெல்லாம் அறியாமையில் விளைந்த பொய்களே என்பதை இதுவரை புரிந்து கொண்டிருப்பீர்கள். உண்மையில், டயபட்டிஸ் என்பது என்ன மாதிரியான நோய், அது ஏன் ஏற்படுகிறது, எப்படி ஏற்படுகிறது, கணையம், மண்ணீரல், சிறுநீரகங்கள், வயிறு ஆகியவற்றுக்கும், உணவு ஜீரணமாவதற்கும் டயபட்டிஸுக்கும் உள்ள தொடர்பு என்ன, இது எப்படி ஒரு நோயே அல்ல, அல்லது இது வந்துவிட்டதாக நிச்சயமாகத் தெரிந்தால் என்ன செய்ய வேண்டும், இது வராமலே தடுப்பது எப்படி, வந்தால் நிரந்தரமாகவும் பரிபூரணமாகவும் குணப்படுத்துவது எப்படி என்பதையெல்லாம் இனி பார்க்கலாம்.


டயாபட்டிஸ் எனப்படும் சர்க்கரை நோய் பற்றிய பொய்களையும், அதுபற்றி ஆங்கில மருத்துவம் என்ன சொல்கிறது, அம்மருத்துவத்தை ஏற்றுக்கொண்டு செயல்படும் சில சிந்திக்கத் தெரிந்தவர்களும் அதை நம்பி எந்த அளவுக்கு தம் வாழ்முறையை மாற்றிக் கொள்கிறார்கள், அதனால் எப்படி மேலும் மேலும் சிக்கல்கள் உருவாகின்றன என்றெல்லாம் இதுவரை பார்த்தோம். இனி, சர்க்கரை நோய் பற்றிய உண்மைகளைப் பார்க்கலாம்.

இதுவரை, சர்க்கரை நோய் பற்றி அலோபதி சொன்ன வரையறைகளை மறந்துவிடலாம். சர்க்கரை நோய் பற்றி மனத்தில் எவ்வித கசப்பான கருத்துகளும் இல்லாமல், புதிதாக, குளித்துவிட்டு வந்தமாதிரி ‘ஃப்ரெஷ்’ ஆக, இந்த நோய் பற்றிப் பார்க்க இருக்கிறோம், எவ்வித அச்சமும் இன்றி.

ஏனெனில், அச்சம்தான் எல்லாக் கேடுகளுக்கும் தாய் என்பதை நாம் இதுவரை தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். இனியாவது திறந்த மனத்துடன் நான் சொல்ல வருவதை கவனமாகக் கேட்டு அதுபற்றி சிந்தியுங்கள், ஆராயுங்கள், நான் சொல்வதெல்லாம் உண்மையா என்று கண்டுபிடியுங்கள். அதன்பிறகு, நீங்கள் கண்டுகொண்ட உண்மைகளுக்குத் தக்கபடி செயலாற்றுங்கள்.

டயாபட்டிஸ் என்ற பிரச்னை எப்படி உருவாகிறது?

டயாபட்டிஸ் எனப்படும் சர்க்கரை நோய் ஏற்பட்டுவிட்டால், அதையொட்டிய சிக்கல்களாக பசியின்மை, அசதி, மயக்கம், ரத்த நாளங்கள் சேதமடைதல், ரத்த ஓட்டம் தடைபடுதல், புண்கள் ஏற்படுதல், கண் பார்வை பாதிக்கப்படுதல், மாரடைப்பு வருதல் போன்றவை ஏற்படலாம். ஏன், திடீர் மரணம்கூட வரலாம் என்று சொல்லப்படுகிறது.

ஆனால், இவ்வளவு பிரச்னைகளுக்கும் காரணம், உண்மையில் டயாபட்டிஸ் அல்ல. ஆங்கில மருத்துவத்தின் சிபாரிசின் பேரில், டயாபட்டிஸுக்காக எடுத்துக்கொள்ளப்படும் மருந்து மாத்திரைகள் மற்றும் இன்சுலின் போன்ற ஊசிகள்தான் காரணம்!

அதிர்ச்சியூட்டினாலும் உண்மை இதுதான். டயாபட்டிஸ் என்று கண்டுபிடிக்கப்படும் அலோபதியின் டயக்னோசிஸும் அதன்பிறகு கட்டாயமாக்கப்படும் மருந்து மாத்திரைகளும், உணவுக் கட்டுப்பாடுகளும்தான், எல்லா சனியன்களையும் ஒட்டுமொத்தமாக ஊர்வலமாக நம் உடலுக்குள் அழைத்து வருகின்றன!

ஒருவருக்கு டயாபட்டிஸ் வந்துவிட்டால் எல்லா நோய்களும் வந்துவிடும் என்பது உண்மையானால், டயாபட்டிஸ் போய்விட்டால் எல்லா நோய்களும் போய்விடுமல்லவா என்று கேட்கிறார் ஹீலர் பாஸ்கர். அப்படியானால், வந்துவிட்ட சர்க்கரை நோயைப் போக்குவது எப்படி? சர்க்கரை நோயே வராமல் பாதுகாத்துக்கொள்வது எப்படி? இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரிய வேண்டுமெனில், உண்மையில் சர்க்கரை நோய் எப்படி உருவாகிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

நாம் சாப்பிடும் முறை தவறாக இருக்குமானால், சாப்பிட்ட உணவு முறையாக ஜீரணம் ஆகாமல், இறுதியில் உருவாகும் தரம் குறைந்த க்ளுக்கோஸ், உயிரணுக்களுக்குள் செல்ல முடியாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும். இதுவே சர்க்கரை நோய் என்று அறியப்படுகிறது என்கிறார் ஹீலர் பாஸ்கர். அதாவது, சர்க்கரை நோய் உருவாக அவர் சொல்லும் காரணம், முறைப்படி உண்ணாததால் உண்டாகும் ஜீரணக் கோளாறு; அதன் விளைவான தரம் குறைந்த க்ளுக்கோஸ்.

நம்முடைய ஜீரண உறுப்புகளான வயிறு, மண்ணீரல், கல்லீரல், பித்தப்பை, சிறுகுடல், பெருங்குடல் ஆகிய உறுப்புகளிலும் அவற்றின் இயக்கத்திலும் பாதிப்பு ஏற்படுவதால் சர்க்கரை நோய் உருவாகிறது என்கிறார் டாக்டர் ஃபசுலுர் ரஹ்மான்.

இரண்டு பேருமே, ஒரே உண்மையைத்தான் அவரவர் பாணியில் கூறுகின்றனர், கொஞ்சம் வித்தியாசமாக. டாக்டர் ஃபசுலுர் ரஹ்மானின் பள்ளியில் உருவானவர்கள்தான் ஹீலர் பாஸ்கர், ஹீலர் உமர் ஃபாரூக் போன்றவர்கள் மற்றும் ஹீலர்கள் என்பவர்கள். 

நாம் சாப்பிடும் முறையே சரியில்லை என்றால் ஜீரணம் எப்படி ஒழுங்காக இருக்கும்? எனவே, சர்க்கரை நோயை நம் தவறான வாழ்முறையும், உணவுப் பழக்கவழக்கங்களும்தான் உருவாக்குகின்றன என்று சொல்லலாம். அதன்விளைவாக, நம்முடைய ஜீரண உறுப்புகள் பாதிப்படையலாம். எனவே, இரண்டு பேர் சொல்வதும் ஒன்றுதான். ஹீலர் பாஸ்கர் சொல்வதை நோயின் ஆரம்பகட்ட நிலையாகவும், டாக்டர் ஃபசுலுர் ரஹ்மான் சொல்வதை தீவிர நிலை, அல்லது அடுத்தடுத்த நிலையென்றும் புரிந்துகொள்ளலாம்.

பொதுவாக, டயாபட்டிஸ் வந்துவிட்டது என்று ஆங்கில மருத்துவம் எப்படிக் கண்டுபிடிக்கிறது? சிறுநீர்ப் பரிசோதனை மூலமாக. சிறுநீரில் க்ளுக்கோஸ் எனப்படும் சர்க்கரை இருப்பதைக் கண்டுபிடித்து, அதன்காரணமாக ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டது என்று கூறுகிறது அலோபதி.


இப்படியாக, ஒருவருக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது என்று அலோபதி கூறுமானால், தன் சிறுநீரகங்களுக்கு அந்த மனிதர் நன்றி சொல்ல வேண்டும்! ஏனெனில், உடலில் இருந்து வெளியேறும் எல்லாமே உடலுக்குத் தேவைப்படாத கழிவுதான். சிறுநீர், மலம், வியர்வை, வாந்தி, பேதி, சீழ், பொடுகு, அழுக்கு என எது வெளியேறினாலும், எல்லாமே வெளியேற வேண்டிய கழிவுகளாகும். கழிவுகள் உடம்புக்குள்ளேயே தங்கி இருந்தாலோ, தேங்கி இருந்தாலோதான் பிரச்னை. அப்படியானால், வெளியேறிய க்ளுக்கோஸும் கழிவுதான்.

ஒரு கழிவு வெளியேறுவது நோயா அல்லது உடம்புக்குள்ளேயே தங்கி இருப்பது நோயா? சிறுநீரில் சர்க்கரை இருக்குமானால், நோய் வெளியாகிவிட்டது அல்லது வெளியாகிக் கொண்டிருக்கிறது என்று சொல்ல வேண்டுமா அல்லது நோய் வந்துவிட்டது என்று சொல்ல வேண்டுமா? ஒரு பயங்கரமான நோய் வந்துவிட்டது என்று சொல்கிறது ஆங்கில மருத்துவம்! வெளியேறும் கழிவை நோயாக நினைத்து அதற்கு வைத்தியம் செய்வதால்தான் எல்லாப் பிரச்னைகளும் உருவாகின்றன.

சரி, அப்படியானால் சிறுநீர் வழியாக ஏன் சர்க்கரை வெளியேறியது? இதைப் புரிந்துகொள்ள, நம் வயிற்றுக்குள் என்ன நடக்கிறது என்று கொஞ்சம் பார்க்கவேண்டி உள்ளது. எனவே, உடலுக்குள் ஒரு உள்நோக்கிய பயணம் போகலாமா? வாருங்கள்.

என்ன நடக்கிறது?

காலையில் டிவி பார்த்துக் கொண்டே மூன்று இட்லிகளை விழுங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம். முக்கியமான செய்தி. எலக்க்ஷன் ரிசல்ட். நாம் எதிர்பார்த்த கட்சி படுதோல்வியடைந்து, டெபாசிட் கிடைக்காமல் நம் நட்சத்திர வேட்பாளர் தோற்றுவிடுகிறார் என்று செய்தி சொல்கிறது. அல்லது இன்னும் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் விளையாடிய அணியின் கேப்டன், நம் ஆதர்ஷ நாயகன், மட்டையை சுழற்றி வீசுகிறான். ஆனால், எதிரணியில் இருக்கும் ஒரு சாதாரண விளையாட்டு வீரர் கபாலென்று ‘கேட்ச்’ பிடித்து நம் நாயகனை ‘அவுட்’ ஆக்கி அவர் நாயகனாகிவிடுகிறார்!

‘அடச்சே, எல்லாம் போச்சுடா’ என்று வாயைப்பிளந்து அங்கலாய்த்தபடி இட்லியை விழுங்குகிறோம். ம்ஹும், நாம் விழுங்கவில்லை. பழக்கதோஷத்தின் காரணமாக வாய்க்குள் போட்ட துண்டு, அதுவாகவே விழுங்கப்படுகிறது. எதிரில் அமர்ந்து கொண்டிருக்கும் சகோதரனிடமோ, நண்பனிடமோ கட்சியின் அல்லது அணியின் தோல்வி பற்றி இட்லியை விழுங்கிக்கொண்டே அங்கலாய்க்கிறோம்.

இப்படியாகத்தான் நாம் சாப்பிடுகிறோம் என்றால், உள்ளே சென்ற உணவு என்னாகும் என்ற கேள்விக்குப் பதில்தான் டயாபட்டிஸ்! எப்படி என்கிறீர்களா? சொல்லத்தானே போகிறேன்.

உணவு முறையாகச் செரிக்க வேண்டும் என்றால், அது முதலில் வாயில் செரிக்கப்பட வேண்டும் என்கிறார் ஹீலர் பாஸ்கர். உணவை வாயில் போட்டுவிட்டால், வாயைத் திறக்கக்கூடாது. உணவை மென்றுகொண்டே இருக்க வேண்டும். அது கூழாகி, உமிழ் நீருடன் உறவாடிக் கலந்து, கரைந்து வயிற்றுக்குப் போக வேண்டும். வாயைத் திறந்துகொண்டும், பேசிக்கொண்டும் சாப்பிட்டால் என்னாகும்?

வாயைத் திறந்தால் வாய்க்குள் காற்று புகும். காற்று புகுந்தால், சுரக்க வேண்டிய உமிழ் நீர் சரியான அளவில் சுரக்காது. எனவே, வாய்க்குள் உணவு சரியாக அரைக்கப்படாது. அதாவது, முதல் செரிமானம் முறையாக நடைபெறாது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா? அது, சாப்பாட்டு விஷயத்தில்தான் ரொம்பச் சரி போலும்! வாயிலேயே முறையாக உண்ணப்படாத உணவு, வயிற்றிலும் முறையாகச் செரிக்கப்படாது.

நீங்கள் சாப்பிடும்போது அடிக்கடி தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா? இந்தப் பழக்கமும் முறையற்ற ஜீரணத்துக்கு வழி வகுக்கும், எப்படி? வயிற்றில் உணவுப் பொருள்களைப் பிரித்து, உடைத்து, கரைத்து, கூழாக்கிச் செரிக்க உதவுவது ஹைட்ரோகுளோரிக் ஆஸிட் என்று சொல்லப்படும் அமிலமாகும். நீங்கள் சாப்பிடும்போது தண்ணீரை குடித்துக் கொண்டே இருந்தால், அந்த அமிலம் நீர்த்துப்போய், அதன் வீரியம் குறையும். அதனால் வயிற்றுக்குள்ளும் ஜீரணம் முறையாக நடக்காது.

ஹீலர் பாஸ்கர் சொல்வதை உறுதிப்படுத்தும் வகையில், டாக்டர் ஃபசுலுர் ரஹ்மான் இப்படிச் சொல்கிறார்...

நாம் உணவு உட்கொள்ளும் முறைகளில் உள்ள கோளாறுகளின் காரணமாக, அல்லது மன உளைச்சல்களின் காரணமாக, அல்லது போதுமான இளைப்பாறுதலின்மையின் காரணமாக, அல்லது சமையலில் சேர்க்கப்படும் பொருள்களின் காரணமாக அஜீரணம் ஏற்படுகிறது (BP, டயாபட்டிஸ் நோயாளிகளே, உங்கள் நலனுக்காக, பக்கம் 95).

சரி, இதனால் என்னாகும்?

இட்லி, தோசை, இடியாப்பம், உப்புமா, சப்பாத்தி, பரோட்டா, பிரெட், பர்கர், பீட்ஸா, ஆம்பூர் பிரியாணி, தயிர் சாதம், நெய் சோறு, நாகூர் அஞ்சு கறி சோறு, புனே மட்டன் ராரா, பேர்ணாம்பட்டு பீஃப் பிரியாணி, சிக்கன், கே.எஃப்.சி. உணவு வகைகள், சுத்த சைவ உணவு – இப்படி நீங்கள் சாப்பிடும் உணவு எப்படிப்பட்டதாக இருந்தாலும், உண்டபின் அது செரித்து, அதன் உயிர்ச்சத்துகளெல்லாம் உடலால் உறிஞ்சப்பட்டு, கடைசியில் எல்லாம் க்ளுக்கோஸ் என்னும் சர்க்கரைப் பொருளாக மாற்றப்படும். இந்த க்ளுக்கோஸ்தான் நம் உடலில் இருக்கும் கோடிக்கணக்கான ‘செல்’களால் பயன்படுத்தப்படுகிறது.

இந்த க்ளுக்கோஸ் தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். நாம் பேசிக்கொண்டும், மனத்தை வேறு எதிலாவது வைத்துக்கொண்டும், கிரிக்கெட் தோல்விக்காக உச்சுக் கொட்டிக்கொண்டும், கட்சியின் தோல்விக்காக மனம் வருந்திக் கொண்டும், கடன்காரன் வந்து கேட்பானே என்று கவலைப்பட்டுக் கொண்டும் – இப்படி ஏகப்பட்ட ‘டும், டும்’களை மனத்தில் போட்டுக்கொண்டு சாப்பிடுவோமானால், அவசர அவசரமாக சாப்பிடுவோமானால், கவலையுடன் சாப்பிடுவோமானால், டென்ஷனுடன் சாப்பிடுவோமானால், மனத்தில் ஒரு துக்கத்தை வைத்துக்கொண்டு சாப்பிடுவோமானால்… சுருக்கமாகச் சொன்னால், சாப்பிடும்போது சாப்பாட்டைத் தவிர வேறு எதிலாவது நம் சிந்தனை இருக்குமானால், அந்த உணவு சரியாகச் செரிக்கப்படாமல்தான் போகும். சரியாகச் செரிக்கப்படாமல் போன உணவின் மூலம் கிடைக்கும் க்ளுக்கோஸ் தரம் குறைந்த க்ளுக்கோஸாகத்தான் இருக்கும்.

சரி, அதனால் என்ன? இந்த க்ளுக்கோஸ்தான் ரத்தத்தில் கலந்து பின்னர் ரத்தத்தில் இருந்து உயிரணுக்களுக்குள் செல்ல வேண்டும். ஆனால், உயிரணுக்களுக்குள் க்ளுக்கோஸ் செல்ல வேண்டுமெனில், அந்த க்ளுக்கோஸுக்கு இன்சுலின் வேண்டும் என்று ஏற்கெனவே கொஞ்சம் பார்த்தோம். இன்சுலின் இல்லாத க்ளுக்கோஸை உடல் நிராகரித்துவிடும். 

இதுபற்றி டாக்டர் ஃபசுலுர் ரஹ்மான் இப்படிக் குறிப்பிடுகிறார்...

‘‘நாம் உணவு உட்கொண்டபின், நமக்குத் தேவையான க்ளுக்கோஸ் ரத்தத்தில் கலக்கிறது. இந்த க்ளுக்கோஸின் தரம் திருப்திகரமாக இருப்பின், பான்க்ரியாஸ் (கணையம்) இயற்கையாகவே நன்கு பரிசீலனை செய்த பிறகு, அந்த க்ளுக்கோஸ் உடலுக்குப் பொருத்தமானதாக அமைந்திருக்கும் பட்சத்தில், தன்னுடைய சுரப்பு நீரான இன்சுலினைச் சுரக்கிறது. இவ்வாறு சுரக்கப்பட்ட இன்சுலின், உடலில் எந்த எந்த உறுப்புகளில், பகுதிகளில், திசுக்களில், செல் அணுக்களில் க்ளுக்கோஸ் தேவைப்படுகிறதோ, அந்த அனைத்து இடங்களையும் முன்னதாக அடைந்து, அவற்றினுள் க்ளுக்கோஸ் செல்ல வழிவகுக்கிறது. பின்னர், க்ளுக்கோஸானது செல் அணுக்களில் எரிக்கப்பட்டு, இயக்க சக்தியானது வெளிப்படுத்தப்படுகிறது. இதுவே உடலின் ஆரோக்கியமான நிலை” என்கிறார் டாக்டர் ஃபசுலுர் ரஹ்மான் (மருந்துகளால் வரும் நோய்கள், பக்கம் 52).

க்ளுக்கோஸ் தரம் குறைந்ததாக இருக்குமானால், கணையம் அதைப் பரிசீலித்து நிராகரித்துவிடுகிறது. இன்சுலினையும் சுரப்பதில்லை. இன்சுலின் கிடைக்காமல், உயிரணுக்களுக்குள் செல்ல முடியாமல் அநாதைகளாகிவிட்ட க்ளுக்கோஸ்கள், ரத்தத்திலேயே சுற்றிக்கொண்டிருக்கும். இவை, உடலுக்குத் தேவையற்ற கழிவுகள். இவற்றை ‘கெட்ட சர்க்கரை’ என்றும், இன்சுலின் கொடுக்கப்பட்ட க்ளுக்கோஸை ‘நல்ல சர்க்கரை’ என்றும் எளிமையாக வகைப்படுத்துகிறார் ஹீலர் பாஸ்கர்.


எல்லா கெட்டவர்களும் கழிவுகள். நம் உடலுக்குத் தேவையற்றவர்கள். நம் உடலுக்குத் தீங்கு இழைப்பவர்கள். எனவே, அவர்களை நம் சிறுநீரகம் ரத்தத்திலிருந்து பிரித்தெடுத்து, கழிவாக சிறுநீர் வழியாக வெளியேற்றும் வேலையைச் செய்கிறது. நமது சிறுநீரகங்கள் (Kidneys) செய்யும் அந்த மகத்தான சேவைக்குத்தான் டயாபட்டிஸ் என்று பேர் வைத்திருக்கிறது ஆங்கில மருத்துவம்

டயாபட்டிஸ் எப்படி உருவாகிறது என்று இப்போது புரிகிறதா? 

இயற்கை நமக்கு செய்திருக்கும் நோய்த் தடுப்புச் சேவைக்கு நோய் என்று பெயர் வைத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து மீண்டும் அக்கழிவுகளை உடலுக்குள் திணிக்கும் வேலையைத்தான் ஆங்கில மருத்துவம் தொடர்ந்து செய்துகொண்டிருப்பதாக அடித்துக் கூறுகிறார் டாக்டர் ஃபசுலுர் ரஹ்மான்.


நொறுங்கத் தின்பதா, நொறுக்கித் தின்பதா?

உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும் என்று சொல்லப்படுவதில், இன்னும் கொஞ்சம் தெளிவு நமக்குத் தேவைப்படுகிறது. மென்று உண்ண வேண்டும் என்றால், உணவை வாய்க்குள் போட்டு வாயை மூடிக்கொண்டு எத்தனை முறை மெல்ல வேண்டும் என்று ஒரு நண்பர் கேட்டார்.

அப்படியெல்லாம் கணக்கு ஒன்றும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால், மெல்லுவது நம் வேலையல்ல. அது பற்களின் வேலை. அந்த வேலையை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். குஷ்பு இட்லி மல்லிகைப் பூவாட்டம் இருந்தால், இரண்டு மூன்று முறை மென்றுவிட்டு வாய் அதை விழுங்கிக்கொள்ளும். ஆனால், எடுத்து அடித்தால் மண்டையை உடைத்துவிடலாம் என்ற அளவுக்கு இட்லி உறுதியாக இருக்குமானால் எத்தனை முறை மெல்ல வேண்டும் என்பதையும் பற்களே கணக்கு போட்டுக்கொள்ளும்! நாம் செய்ய வேண்டிய வேலையெல்லாம், சாப்பிடும்போது நம் கவனத்தை உணவின் மீது, சாப்பிடும் காரியத்தின் மீது வைக்க வேண்டியதுதான். சுருக்கமாகச் சொன்னால், சாப்பிடுவதை கவனமாக, ஒரு தியானம் போலச் செய்ய வேண்டும்.

நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது முதுமொழி. நொறுக்கித் தின்றால் நூறு வயது என்று முதுமொழி இல்லை. நொறுக்கித் தின்பது வேறு, நொறுங்கத் தின்பது வேறு! நொறுக்குவது நம் வேலை. நொறுங்குவது அதன் வேலை. அதன் வேலையை நாம் செய்யவேண்டியதில்லை. வாய்க்குள் போடுவது மட்டும்தான் நம் வேலை. மற்றதை வாய் பார்த்துக்கொள்ளும். நாம் அப்போது யார் வாயையும் பார்த்துக் கொண்டிருக்காமல், கவனத்தை உண்ணும் காரியத்தில் வைத்தால் போதும் என்கிறார் ஹீலர் உமர்!

உமர் சொல்வது மிகவும் முக்கியமானது. எதிலும் ஒரு தெளிவு வேண்டும். சரியாகச் சாப்பிடுகிறேன் என்று நினைத்துக் கொண்டு பற்களைச் சித்திரவதை செய்து பல்வலி, வாய்வலிகளை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. சுருக்கமாகச் சொன்னால், உடல் செய்ய வேண்டிய காரியத்தையெல்லாம் உடலிடமே விட்டுவிட வேண்டும். நாம் அதில் தலையிடக்கூடாது. கவனம் வைப்பதென்பது உடல் செய்யும் காரியமல்ல. அது நாமாகச் செய்ய வேண்டும். அதை மட்டும் நாம் செய்தால் போதுமானது. ஆனால், இங்கேதான் நம்மில் பெரும்பாலோர் கோட்டை விட்டுவிடுகிறோம். உணவு வகைகள் உங்கள் உடலுக்கு ஏற்றதாகவும் சரியானதாகவும் இருந்தாலும், அதைக் கவனமில்லாமல் சாப்பிட்டீர்கள் என்றாலும் பிரச்னை வருவது நிச்சயம்.  

டயாபட்டிஸ் பற்றி எல்லாவற்றையும் இன்னும் சொல்லிவிடவில்லை. இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கிறது. க்ளுக்கோஸின் வேலை, தரம், தரக்குறைவு, அதன் விளைவு பற்றியெல்லாம் கொஞ்சம் பார்த்தோம். செறிவூட்டப்பட்ட க்ளுக்கோஸான க்ளைக்கோஜன் பற்றியும், அதை வெளியேற்ற அட்ரீனலின் என்ற ஹார்மோன் செய்யும் சேவை பற்றியும் அறிந்துகொள்ள இருக்கிறோம். அதற்குள் டயாபட்டிஸ் பற்றி டாக்டர் ஃபசுலுர் ரஹ்மான் கூறும் சில முக்கியமான கருத்துகளை இங்கே பார்த்துவிடலாம்:

  • டயாபட்டிஸ், உயர் ரத்த அழுத்தம் ஆகியவை அபாயகரமான நோய்களாகும்… என்றெல்லாம் அநியாயமான பொய்களைக் கூறிவருகிறது ஆங்கில மருத்துவம்.
  • இந்த மருத்துவத்துக்கு, இவ்விரண்டு நோய்களுக்கும் காரணமும் தெரியாது, குணப்படுத்தவும் தெரியாது.
  • டயாபட்டிஸ் என்ற நீரிழிவு நோய், ஆங்கில மருத்துவம் கண்டுபிடித்த ஒரு நோயாகும். (நாகூர் ரூமி: அதாவது, கற்பனையாக உருவாக்கிய நோய் என்ற அர்த்தத்தில்).
  • நீரிழிவு நோய்க்காகக் கொடுக்கப்படும் (அலோபதி) மருந்து மாத்திரைகள் அனைத்தும் கணையத்தை அடித்து வேலை வாங்குவதற்குச் சமமாகும்.
  • ஆங்கில மருத்துவம் கொடுக்கும் எந்த ஒரு மருந்தினாலும், மாத்திரைகளாலும் எந்த ஒரு நீரிழிவு நோயாளியும் ஒருபோதும் குணமடைந்ததில்லை (நாகூர் ரூமி: எவ்வளவு உண்மை)!
  • ஆங்கில மருத்துவம் கொடுக்கும் இன்சுலின் வெறும் ஜடப்பொருளாகும். அந்த இன்சுலினுக்கு நல்ல சர்க்கரை, தீய சர்க்கரையைப் பிரித்தறியத் தெரியாது. ஆகவே, இவ்விரண்டு சர்க்கரையின் மீதும் தான்தோன்றித்தனமாகச் செயலாற்றுகிறது. பெரும்பாலும், கெட்ட சர்க்கரையை உடலுக்குள் செலுத்திவிடுகிறது.

இன்னும் சர்க்கரை கொஞ்சம் இருக்கிறது, பார்க்கலாம்.

    ந்தப் பகுதிக்குள் செல்வதற்கு முன் இதுவரை சொன்னதை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வது நல்லது. அதோடு டயாபடீஸ் எனப்படும் பிரச்னைக்கு அலோபதி வைத்தியம் செய்துகொள்வதால் ஏற்படும் தீய விளைவுகளைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்க வேண்டியதும் அவசியமாகிறது.

திரும்பத்திரும்ப சொல்லப்படும் பொய்கள்

  • டயாபடீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோய் என்பது ஒரு பயங்கரமான நோய்.
  • இது வந்தால் குணப்படுத்தவே முடியாது.
  • உணவுக் கட்டுப்பாடு, மருந்து மாத்திரைகள், இன்சுலின் ஊசிகள் மூலம் இதை வாழ்நாள் முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
  • இதன் உப விளைவுகளாக ஏற்படும் அசதி, மயக்கம், உயர் ரத்த அழுத்தம், உடல் உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் நடைபெறாமல் விரல்கள், கை, கால் போன்றவற்றை வெட்டி எடுத்தல், கண்பார்வை இழத்தல், மாரடைப்பு முதலான பிரச்னைகள் வருவதைத் தடுக்க முடியாது.
  • வாழ்நாள் முழுவதும் டயாபடீஸ் நோயாளியாக இருந்துதான் ஆக வேண்டும்.

சொல்லப்படாத உண்மைகள்

  • ஆங்கில மருத்துவம் தனது தவறான நோயறிதல்களில் (Wrong Diagnosis) ஒன்றுக்கு வைத்த பெயர்தான் டயாபடீஸ் என்ற பெயரில் செய்யப்படும் அச்சுறுத்தலாகும்.
  • தரம் குறைந்த, எதற்குமே பயனற்ற க்ளுக்கோஸை சிறுநீரகம் வெளியேற்றுகிறது. சிறுநீர்ப் பரிசோதனை மூலம் இது கண்டறியப்பட்டு, அந்தக் கழிவு வெளியேற்றம் ஆங்கில மருத்துவத்தால் நோயாகப் புரிந்துகொள்ளப்பட்டு, மருந்து, மாத்திரைகள், ஊசிகள் மூலம் அது கட்டுப்படுத்தப்பட முயற்சி எடுக்கப்படுகிறது.
  • எதற்கும் உபயோகமற்ற கழிவு என்பதால் உடலால் வெளியேற்றப்பட்ட தரமற்ற க்ளுக்கோஸை மீண்டும் உடலின் கோடிக்கணக்கான செல்களுக்குள் வலுக்கட்டாயமாகத் திணிக்கிறது அலோபதி மருத்துவ வைத்தியம். முக்கியமாக, இன்சுலின் ஊசிகள் மூலம்.
  • வைத்தியம் என்ற பெயரில் ஆங்கில மருத்துவத்தால் செய்யப்படும் ஒவ்வொரு காரியமும் உடலின் ‘ஒவ்வொரு பாகத்தையும், உறுப்பையும், செல் அணுவையும் விஷத்தன்மைக்கு உள்ளாக்குகிறது’.
  • விஷத்தன்மை கொண்ட க்ளுக்கோஸ் உடலில் ஒவ்வொரு உயிரணுக்குள்ளும் ஊடுறுவும்போது ‘கெட்ட சக்தியை வெளிப்படுத்துகிறது’.
  • இதனால் பசியின்மை ஏற்படுகிறது. ‘லிவர்’ எனப்படும் கல்லீரல் செயலிழப்பதால் ஏற்படும் விளைவே பசியின்மையாகும். இதனால் திடீர் அசதி ஏற்பட்டு, மயக்க நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம்.
  • கல்லீரல் அசதியுறும்போது உடலின் ஒவ்வொரு உயிரணுவும் அசதியுறும். இந்த நிலையில் ஹீலர் பாஸ்கர் மிகச்சரியாக வர்ணித்த ‘கெட்ட க்ளுக்கோஸ்’ ஏற்கெனவே ஒவ்வொரு உயிரணுவுக்குள்ளும் திணிக்கப்பட்டிருப்பதால், உறுப்புகள் அனைத்தும் பாழாகத் தொடங்கும்.
  • இன்சுலின் போட்டுக்கொண்டதால் ரத்த நாளங்களுக்குள்ளும் கெட்ட க்ளுக்கோஸ் திணிக்கப்பட்டிருப்பதன் காரணமாக, ரத்த நாளங்கள் சேதமடைந்து, வீக்கமும், அயர்ச்சியும், ஏற்பட்டு, எந்த நேரத்திலும் பிளவு கண்டு நாளங்கள் வெடித்துவிடலாம்.
  • ‘ரத்த நாளங்களில் அடைப்பையும், ரத்த ஓட்டத்தில் தடையையும் ஏற்படுத்திவிடலாம்’. இதனால்தான், ஆங்கில மருத்துவத்தை ‘சின்சிய’ராகவும் ‘சீரியஸாக’வும் எடுத்துக்கொண்ட பலர், சில ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் விரல்களை, கை, கால்களை இழக்க நேரிடுகிறது.
  • ரத்த ஓட்டத்தில் ஏற்படும் தடையின் காரணமாக கை, கால்களில் மதமதப்பும், எரிச்சலும், புண்களும் ஏற்படும். ரத்த நாளங்களில் ஏற்படும் வெடிப்பால் கண் பார்வை போகலாம்.
  • மூட்டுகள், முதுகுத் தண்டுவடம் ஆகியவற்றில் தேய்வு ஏற்பட்டு, இடுப்புக்குக் கீழே கால்கள் செயலிழக்கும் அபாயமும் உண்டு.
  • கை, கால் உணர்விழப்பு, பக்கவாதம், மாரடைப்பு, திடீர் இறப்பு – இப்படி எதுவேண்டுமானாலும் இதனால் நடக்கலாம்.

இவைகளெல்லாம் டயாபடீஸ் என்ற பிரச்னைக்குத் தொடர்ந்து அலோபதி முறையில் வைத்தியம் பார்ப்பதால் ஏற்படும் பக்க விளைவுகளாகும்! ஆங்கில மருத்துத்தை ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் இவ்விதமான பக்க விளைவுகள் ஏற்படுவது நிச்சயம். இவை உண்மையில் பக்க விளைவுகள் அல்ல, ‘பக்கா’ விளைவுகள் என்கிறார் ஹீலர் உமர்! சந்தம் விளையாடும் சொற்களில் சத்தியமும் சேர்ந்து சிரிக்கிறது!

"அடிப்படையான ஜீரண உறுப்புகளில் எந்த உறுப்பு பாதிப்படைந்தாலும், அவற்றின் கூட்டான ஜீரணத்தின் தரம் குறைந்துவிடுகிறது. அதன் விளைவாகக் கிடைக்கப்பெறும் க்ளுக்கோஸும் தரம் குறைந்தே ரத்த ஓட்டத்தில் கலக்கிறது. உடலானது தரம் குறைந்த க்ளுக்கோஸை நிராகரிக்கிறது. நாம் மிகத்தெளிவாக நம் மனத்தில் நிலைநிறுத்த வேண்டிய விஷயங்கள் இரண்டுதான்
  1. தரம் மிக்க க்ளுக்கோஸ் உடலால் உபயோகப்படுத்தப்படுகிறது. சிறுநீரகம் ஒருபோதும் அதை வெளியேற்றாது.
  2. தரம் குறைந்த க்ளுக்கோஸ் உடலால் நிராகரிக்கப்படுகிறது. அது உடலிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட வேண்டிய கழிவுப் பொருளாகும்.
Insulin, Sulfonylureas, Biguanides (Glibenclamide, Met, Formin) போன்ற ஆங்கில மருந்துகள், கழிவுப்பொருளான க்ளுக்கோஸைத்தான் உடலுக்குள் செலுத்த முயற்சிக்கின்றன’’.

சுருக்கமாகப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், தரம் வாய்ந்த க்ளுக்கோஸ் கிடைத்தால் உடல் ஏற்றுக்கொள்ளும். தரமான க்ளுக்கோஸ் முறையான ஜீரணத்தின் மூலமே கிடைக்கும். அப்போதுதான் கணையம், இன்சுலின் ஹார்மோனைச் சுரக்கும். ஜீரண உறுப்புகளின் பாதிப்பின் காரணமாக, அல்லது முறையற்ற ஜீரணத்தின் காரணமாக தரமற்ற, கெட்ட க்ளுக்கோஸ் உருவாகும்போது, அதை உயிரணுக்களுக்குள் செல்ல அனுமதிக்கும் ‘பாஸ்போர்ட்’டான இன்சுலினை கணையம் சுரக்காது! ‘பாஸ்போர்ட்’ இல்லாமல் ‘செல்’ நாடுகளுக்குள் செல்ல முடியாமல் அகதிகளாகச் சுற்றிக்கொண்டிருக்கும் கெட்டவர்கள்தான் சிறுநீர் மூலமாக வெளியேற்றப்படுகிறார்கள்!

நல்லதும் கெட்டதும்

நாம் மேலே விளங்கிக்கொண்ட நல்ல க்ளுக்கோஸ், கெட்ட க்ளுக்கோஸ் என்ற வாதத்தை ஆங்கில மருத்துவம் ஏற்றுக்கொள்வதில்லை. அதற்கு அது சொல்லும் காரணம், இரண்டு க்ளுக்கோஸ்களுமே ஒரே மாதிரியான ரசாயனப் பொருள்களால் ஆனவைதான். எல்லா க்ளுக்கோஸின் கெமிக்கல் அமைப்பும் C6H12O6 என்பதுதான். அதாவது, ஆறு மடங்கு கார்பன், பன்னிரண்டு மடங்கு ஹைட்ரஜன், ஆறு மடங்கு ஆக்ஸிஜன். தண்ணீருக்கு H2O என்பதுபோல. எனவே, இதில் நல்லது கெட்டது என்பது எங்கிருந்து வருகிறது என்று கேட்கிறது ஆங்கில மருத்துவம்.

இது சரியான வாதமல்ல. எல்லா மனிதர்களுக்கும் கூடத்தான் இரண்டு கண்கள், ஒரு மூக்கு, அதற்குள் இரண்டு ஓட்டைகள், இரண்டு கைகள், இரண்டு கால்கள், பத்து விரல்கள் என ஒரே மாதிரியான அமைப்பு உள்ளது. எல்லா மனிதர்களுமே கோடிக்கணக்கான உயிரணுக்களால் ஆனவர்கள்தான். அதற்காக நானும் நீங்களும் ஒன்றுதான் என்று சொல்லிவிட முடியுமா? நான் முட்டாளாகவும் நீங்கள் அறிவாளியாகவும் இருக்கும் சாத்தியம் உண்டா இல்லையா? ஒபாமாவும் ஒசாமாவும் ஒன்றாகிவிடுவார்களா? சென்னை சரசாவெல்லாம் அன்னை தெரஸாவாகிவிட முடியுமா?

சரி, மனிதர்கள் வேண்டாம். வெறும் தண்ணீரை எடுத்துக்கொள்வோமே. மண்பானைத் தண்ணீர், மழைத் தண்ணீர், சாக்கடைத் தண்ணீர், கடல் நீர், வியர்வை நீர், குடிநீர், வடிநீர், முனிசிபாலிடி குழாய்த் தண்ணீர், பாழாய்ப்போன உயிரற்ற பிஸ்லரி நீர், ஜம்ஜம் புனித நீர் – இவையெல்லாம் ஒன்றா? புனித கங்கை நீரும் கூவம் நீரும் ஒன்றா? எல்லாமே ‘ஹெச்.ட்டூ.ஓ.’-தான் என்ற வாதம் சரியா? நிச்சயமாக இல்லை என்பது நம் அனைவருக்குமே தெரியும். கொல்பவனும் நானே, கொல்லப்படுபவனும் நானே என்று கீதையில் கிருஷ்ணன் சொல்வதைப்போல, நாம் இங்கே பேசமுடியாது. அது வேறு, இது வேறு. ஒரு பெண் வாந்தி எடுத்தால் கர்ப்பமாகி இருக்கிறாளோ என்று சந்தேகப்படலாம். ஆனால் ஒரு ஆண் வாந்தி எடுத்தால் அப்படி சந்தேகப்பட முடியாது

ஒரு செயல் எப்படிப்பட்டது, அதனைச் செய்பவர் யார், அது ஏற்படுத்தும் விளைவுகள் என்னென்ன – என்பதையெல்லாம் வைத்துத்தான் ஒரு விஷயம் நல்லதா கெட்டதா, அந்த செயலைச் செய்பவர் உயர்ந்தவரா மோசமானவரா, தகுதி உள்ளவரா இல்லாதவரா என்றெல்லாம் முடிவுக்கு வரமுடியும். அம்பாசிடர் காரில் வருபவர்களெல்லாம் அப்துல் கலாம்தான் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது அல்லவா! எனவே, நம் உடலில் சுற்றிக் கொண்டிருக்கும் க்ளுக்கோஸ் நம் உடல் நலனில் ஏற்படுத்தும் தாக்கத்தை வைத்துத்தான் அது நல்லதா கெட்டதா என்பதை கணிக்க முடியும் என்று டாக்டர் ஃபசுலுர் ரஹ்மானும் உறுதி செய்கிறார்.

டயாபடீஸ் என்ற மிக முக்கியப் பிரச்னை பற்றி எழுதிக்கொண்டிருப்பதால், அது தொடர்பான சில உண்மைகளை திரும்பத்திரும்பச் சொல்லி நினைவில் வைத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. எனவே, கூறியது கூறலை தவிர்க்க முடியவில்லை. இப்போது ஒரு மிகமிக முக்கியமான விஷயத்தை அறிந்துகொள்ளலாம்.

அட்ரீனலினும் க்ளைக்கோஜனும்

வயிறு, சிறுகுடல் போன்ற ஜீரண உறுப்புகளின் பலவீனம் காரணமாக அஜீரணம் உண்டாகி, அதன் விளைவாக தரம் குறைந்த க்ளுக்கோஸ் ரத்தத்தில் கலக்கிறது. அது விஷத்தன்மை கொண்டது என்பதால், உடலுக்கு ஊறுவிளைவிக்கும் என்பதால், சிறுநீரகங்கள் அவற்றை நீர்த்திவலைகளாக மாற்றி சிறுநீராக வெளியேற்றுகிறது. இப்படி அது செய்யவில்லை என்றால், அந்தக் கெட்ட க்ளுக்கோஸ் வயிறு, சிறுகுடல் ஆகியவற்றிலிருந்து எரிவாயுவாக வெளியாகும். அதன் விளைவாக நெஞ்சுக்கரிப்பு, உணவுப்பாதையில், வயிற்றில், குடல்களிலெல்லாம் புண்கள் ஏற்படும்.

ஜீரணமானது கல்லீரலிலும் நடைபெறுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையை கல்லீரல்தான் வெகுவாக ஜீரணிக்கிறது. மேலே சொன்ன விளைவுகளையெல்லாம் ஏற்படுத்தவல்ல கெட்ட க்ளுக்கோஸையும், ரத்தத்தில் கலந்துள்ள விஷத்தன்மைகளையும் தன்னுள் கல்லீரல் கிரஹித்துக் கொள்கிறது. இப்படிக் கல்லீரல் அதை கிரஹிக்க வேண்டுமானால் அதற்கு இன்சுலினின் உதவி வேண்டும்.

இன்சுலின் உதவியுடன் படுதீவிரமாக அந்தக் கெட்ட க்ளுக்கோஸையும் மற்ற உணவுப் பொருள்களையும்கூட ஜீரணித்து, அதிலுள்ள விஷத்தன்மையை நீக்கி, வீரியம்மிக்க, சக்தி வாய்ந்த நல்ல க்ளுக்கோஸாக மாற்றுகிறது கல்லீரல்! இது ஆங்கில மருத்துவம் அறியாத உண்மையாகும் என்கிறார் டாக்டர் ஃபசுலுர் ரஹ்மான்.

கல்லீரலிலிலிருந்து வெளிப்படுத்தப்படும் க்ளுக்கோஸானது தூய்மைப்படுத்தப்பட்ட, செறிவூட்டப்பட்ட க்ளுக்கோஸாகும். அது நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட சக்தியுமாகும். நமக்கு எந்த நோய் ஏற்பட்டாலும், உடனே கல்லீரலில் இருந்து இந்தச் ‘சக்திமான்’ வெளியே அனுப்பப்பட்டு நம்மைக் காப்பார். இந்தச் சக்திமான் பெரும்பாலும் கல்லீரலில்தான் சேமிக்கப்படுவார் என்றாலும், தசை நார்களிலும் இவர் பதுக்கி வைக்கப்படுவார்! இவரது பெயர் க்ளைக்கோஜன்!


தேவைக்கு அதிகமான பணத்தை அலமாரியிலோ வங்கிக் கணக்கிலோ வைத்திருந்து, தேவைப்படும்போது எடுத்து நாம் செலவு செய்வோமல்லவா? அதைப்போல, இந்தக் க்ளைக்கோஜனும் உடலுக்கு எப்போதெல்லாம் தரமான க்ளுக்கோஸ் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் ‘சப்ளை’ செய்யப்படும் என்கிறார் ஹீலர் பாஸ்கர்.

இரண்டு வகையான எரிசக்தியைப் பற்றி நாம் இதுவரை தெரிந்துகொண்டிருக்கிறோம்.
  1. க்ளுக்கோஸ்
  2. க்ளைக்கோஜன்
கல்லீரலுக்குள்ளிருந்து இந்தக் க்ளைக்கோஜன் என்ற சக்திமான் நம் உடலுக்குள் செல்ல வேறுவிதமான ‘பாஸ்போர்ட்’ தேவைப்படுகிறது. அதன் பெயர்தான் அட்ரீனலின் என்ற ஹார்மோன். சிறுநீரகங்களுக்கு மேல், ஷேக் அப்துல்லாவின் தொப்பி மாதிரி அமைந்திருக்கும் உறுப்புதான் அட்ரீனல் என்ற சுரப்பியாகும். அட்ரீனலில் சுரக்கும் ஹார்மோன்தான் அட்ரீனலின்.
கல்லீரலுக்குள் தரமற்ற கெட்ட க்ளுக்கோஸ் செல்லவேண்டுமானால், தேவைப்படுவது இன்சுலின். தரம் கூட்டப்பட்டு செறிவூட்டப்பட்ட க்ளைக்கோஜன் உடலுக்குள் செல்ல வேண்டுமானால், தேவைப்படுவது அட்ரீனலின். அடடா, உடலின் அமைப்பைவிட அற்புதம் இந்த உலகில் இருக்க முடியுமா?!

அட்ரீனலின் சுரக்க ஆரம்பித்ததுமே, கணையம் இன்சுலினைச் சுரப்பதை நிறுத்திவிடும்! இன்சுலின் சுரப்பைக் குறைக்க வேண்டுமா, அல்லது முழுமையாக நிறுத்த வேண்டுமா என்ற முடிவை கல்லீரல் எடுக்கிறது! எந்த அளவுக்குக் கல்லீரலிலிருந்து க்ளைக்கோஜன் உடலுக்குள் பாய வேண்டுமோ அந்த அளவுக்கு, இன்சுலின் சுரப்பதிலிருந்து கணையத்தைக் கல்லீரல் தடுத்துவிடுகிறது அல்லது குறைத்துவிடுகிறது. எனவே, எந்த நேரத்திலும் உடலின் தேவைக்கேற்ப இன்சுலினும் அட்ரீனலினும் மாறி மாறி சுரந்து, தேவைக்கேற்ப அளவில் கூடுவதும் குறைவதுமாக இருந்துகொண்டே இருக்கும்.

சுரக்கப்பட்ட இன்சுலின், அட்ரீனலினைவிட வீரியத்துடன் உடலுக்குள் சுற்றிவருமானால், ரத்தத்திலிருந்து கெட்ட க்ளுக்கோஸ் அதிகமாகக் கல்லீரலுக்குள் செலுத்தப்படும். மாறாக, அட்ரீனலின் அளவு அதிகமாகி, ரத்தத்தில் இன்சுலினின் அளவு குறையும்போது, கல்லீரலிலிருந்து க்ளைக்கோஜன் வெளிப்படுத்தப்பட்டு, உடல் உறுப்புகளின் இயக்கத்துக்கு உதவியாக ரத்தத்தில் கலக்கும். இது உள்ளே இருந்தால் அது வெளியேயும், இது வெளியே இருந்தால் அது உள்ளேயும் என மாறி மாறி நம் உடலின் ஆரோக்கியத்துக்கு எந்தக் குறைவும் வராமல், இன்சுலின் - அட்ரீனலின் ஆகிய இரண்டு கதாநாயகர்களும் பார்த்துக்கொள்வார்கள்.

அட்ரீனலின் சுரப்பதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், ரத்தம் சுத்தமாகும், இதயத்தின் இயக்கமும் துரிதமடையும். ரத்த ஓட்டம் முறையாக, தேவையான அனைத்து உடல் உறுப்புகளுக்கும் செல்வதற்கு ஏதுவாக, ரத்த நாளங்களை அட்ரீனலின் சுருக்குகிறது. ரத்த நாளங்கள் சுருங்குமானால் ரத்த அழுத்தம் அதிகமாகும். அதாவது, ‘ஹை பிளட் ப்ரஷர்’ ஏற்படும். இந்த உயர் ரத்த அழுத்தமானது, ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் அவனுடைய ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமானது என்றும், அதைக் குறைக்க முயல்வது ஆங்கில மருத்துவம் கற்றுக்கொடுத்த “அசம்பாவிதம்” என்றும் கூறுகிறார் டாக்டர் ஃபசுலுர் ரஹ்மான்.

அவர் மட்டுமல்ல, டாக்டர் பி.எம். ஹெக்டே இதுபற்றி அடிக்கடி பேசியிருக்கிறார். மகாத்மா காந்தியின் ரத்த அழுத்தம் எப்போதுமே 200/140 ஆக இருந்ததாம்! ஆனால், காந்தி ‘நார்ம’லாகத்தான் இருந்தார். அவர் சுடப்பட்டிருக்காவிட்டால், நூறு வயதைத் தாண்டி அவர் வாழ்ந்திருக்கக்கூடும். அவரது ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்த டாக்டருக்குதான் பி.பி. எகிறியதாகக் கூறி சிரிக்கிறார் டாக்டர் ஹெக்டே!

நம் உடல் உறுப்பு ஏதாவது பாதிக்கப்படும்போது, பலவீனப்படும்போது, நோய்வாய்ப்படும்போது, கல்லீரலிலிருந்து க்ளைக்கோஜன் வெளியேற்றப்படுகிறது. நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட இந்தக் க்ளைக்கோஜன் சம்பந்தப்பட்ட உடல் உறுப்புக்குக்குச் சென்று அதற்கு மிகுந்த சக்தியளிக்கிறது. நோய் நீங்க வழிவகுக்கிறது. எனவே, கல்லீரலும் அதில் உருவாக்கப்படும் க்ளைக்கோஜனும், அதை கல்லீரலிலிருந்து வெளியேற்றுவதற்காகச் சுரக்கும் அட்ரீனலின் என்ற ஹார்மோனும் நம் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமானவை.

அட்ரீனலின் சுரந்திருக்கும்போது இன்சுலின் சுரப்பது குறையும் அல்லது நிறுத்தப்படும் என்று ஏற்கெனவே பார்த்தோம். ஐயையோ, இன்சுலின் சுரக்கவே இல்லை / இன்சுலின் சுரப்பு மிகவும் குறைவாக உள்ளது என்று பயமுறுத்தி, அந்த ஆரோக்கிய நிலையை நீரிழிவு நோய் என அடையாளப்படுத்தும் அபாயம்தான், அலோபதி மருத்துவமனைகளில் அன்றாடம் நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

நீங்கள் உண்மையிலேயே நீரிழிவு நோயாளியாக இருக்கும்பட்சத்தில், உங்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் தரமான க்ளுக்கோஸ்தான் என்பது இதுவரை புரிந்திருக்கும். தரமான க்ளுக்கோஸ் இல்லாதபட்சத்தில் உடல் பலவீனம், உடல் சோர்வு, உடல் உபாதைகளெல்லாம் உங்களுக்கு ஏற்படும். உங்களுக்கு நீரிழிவு வந்துவிட்டது என்பதற்கான அறிகுறிகள் அவை. இப்போது உங்களுக்குத் தேவை இன்சுலின் இன்ஜெக்ஷன் அல்ல; அட்ரீலனின் சுரப்பு. புரிகிறதா? இதற்காக நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை என்பதும் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

அட்ரீனலின் சுரப்பதால் என்னென்னெ சாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அடுத்து அதைத்தான் பார்க்க இருக்கிறோம்.

    ட்ரீனலின் சுரக்கும்போது இன்சுலின் சுரப்பு குறைந்துவிடும் அல்லது தாற்காலிகமாக நின்றுவிடும் என்றும், அட்ரீனலின் சுரப்பதால் கல்லீரலில் உள்ள க்ளைக்கோஜன் உடலுக்குள் பயணிக்கும் என்றும் பார்த்தோம். இன்சுலின் சுரப்பு குறைவது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதையும் புரிந்துகொண்டோம். அட்ரீனலின் மேலும் என்னென்ன நன்மைகளை நமக்குச் செய்கிறது என்று இப்போது பார்க்க இருக்கிறோம்.

ரத்த அழுத்தம்


உயர் ரத்த அழுத்தம் அல்லது ரத்தக் கொதிப்பு என்பது ஒரு நோயாகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால், உண்மையில் அது ஒரு நோயோ, அஞ்சுவதற்கு உரிய விஷயமோ அல்ல. எந்த ஒரு நோயையும் கட்டுப்படுத்தவோ அல்லது குணப்படுத்தவோ வேண்டுமென்றால் நம் ரத்த அழுத்தம் அதிகமாக வேண்டும்! என்ன ஆச்சரியமாக உள்ளதா? இப்படி அநேக ஆச்சரியங்களை நம் உடல் நமக்காக வைத்துள்ளது!

ரத்த அழுத்தம் எப்படி நோயை குணப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ செய்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும்முன் உயர் ரத்த அழுத்தம் எப்படி உண்டாகிறது என்று பார்க்க வேண்டும். ரத்த அழுத்தம் உயர வேண்டுமானால் நமது ரத்த நாளங்கள் கொஞ்சம் சுருங்க வேண்டும். அந்தச் சூழ்நிலையில் கொஞ்சம் அதிகமான அழுத்தம் கொடுக்கப்பட்டால்தான் ரத்த நாளங்கள் வழியாக ரத்தம் முன்னேறிச் செல்ல முடியும்.

ரத்த நாளங்கள் சுருங்குவதற்குக் காரணம் அட்ரீனலின் சுரப்புதான்! அட்ரீனலின் சுரக்கும்போது ரத்த நாளங்கள் சுருங்குகின்றன. அவற்றினூடாக ரத்தம் செல்லும்போது அழுத்தம் அதிகமாகிறது. இதயத்தின் இயக்கத்தையும் அட்ரீனலின் துரிதப்படுத்துகிறது என்பதையும் ஏற்கெனவே பார்த்தோம். ஒன்றை வைத்து இன்னொன்றைப் புரிந்துகொள்ள முடியும். பி.பி. அதிகமாகிவிட்டது என்றால் அட்ரீனலின் சுரந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அட்ரீனல் சுரக்காமல் எந்த ஒரு நோயும் குணமாகாது, கட்டுப்பாட்டிலும் இருக்காது என்கிறார் டாக்டர் ஃபசுலுர் ரஹ்மான். அதனால்தான் உயர் ரத்த அழுத்தம் மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்றும் அவர் சொல்கிறார்.

ஏதாவது ஒரு பிரச்னைக்காக நாம் டாக்டரிடம் போகும்போது என்ன செய்வார்? ஒரு பிபி செக்-அப் செய்வார். நம் கையில் ஒரு துண்டைச் சுற்றி, ஒரு சின்ன பலூனை வைத்து புஸ்க் புஸ்க் என்று அழுத்தி எண்கள் போடப்பட்டுள்ள செங்குத்தான கண்ணாடிக்குள்ளே வெள்ளி நிறத்தில் ஏதோ ஏறுவதையும் இறங்குவதையும் பார்த்துவிட்டு ரத்த அழுத்தம் நமக்கு மிகவும் அதிகமாகிவிட்டது, உடனே மாத்திரைகள் சாப்பிட்டு அதைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று கூறுவார், அல்லவா? அதோடு சுகர் இருக்கிறதா என்று பார்க்க GTT (Glucose Tolerance Test) ஒன்றும் எடுக்கச் சொல்வார். நிச்சயமாக சுகர் இருக்கும். அத்துடன் நாம் பி.பி. மற்றும் சுகர் நோயாளியாக வெளியில் வருவோம்!

உயர் ரத்த அழுத்தமும் நீரிழிவு நோயும் இரட்டையர்கள் மாதிரி. சேர்ந்தே இருப்பார்கள். அல்லது உருவாக்கப்படுவார்கள். அவர்கள் இருவருக்கும் பின்னால் அட்ரீனலின் சுரப்பு நிகழ்ந்து கொண்டிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். உயர் ரத்த அழுத்தத்துக்காக எப்பொழுது மாத்திரைகளைச் சாப்பிட ஆரம்பிக்கிறீர்களோ, அப்பொழுதே உங்கள் உடல்நிலை மொத்தமும் குட்டிச்சுவராகிவிடும் என்று மிகச்சரியாக எச்சரிக்கின்றனர் மனசாட்சி உள்ள சில அலோபதி டாக்டர்கள்.

உண்மையில், உயர் ரத்த அழுத்தம் இருக்கும்போது என்ன நடக்கிறது? ரத்தத்தில் கலந்துள்ள ஊட்டச் சத்துகளும் மற்ற சக்திகளும் உடல் உறுப்புகளுக்குள்ளும், உயிரணுக்களுக்குள்ளும் அதிகமாக ஊடுறுவுகின்றன. அதன் காரணமாக, உடலுறுப்புகள் தத்தம் பலவீனங்கள் நீங்கி ‘புத்துணர்வும், புத்துயிரும்’ பெறுகின்றன. அட்ரீனலின் சுரந்ததால், கல்லீரலில் இருந்து வெளியேறி உடலின் பகுதிகளுக்குள் பரவிய செறிவூட்டப்பட்ட தரம் வாய்ந்த க்ளைக்கோஜன்தான் இதற்கான முக்கியக் காரணமாகும். ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்போது ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் க்ளைக்கோஜனின் அளவும் அதிகமாகவே இருக்கும். அதைப் பரிசோதித்துவிட்டுத்தான் நீரிழிவு நோய்க்கான சிறப்பு மருத்துவர்கள், ‘உங்களுக்கு டயாபடீஸ் வந்துவிட்டது’ என்று கண்டுபிடிக்கிறார்கள்! புரிகிறதா?

ஆனால் அந்தச் சிறப்பு மருத்துவர்களுக்குப் புரியாத ஒரு விஷயம் ஒன்று உண்டு. பரிசோதிக்கப்படும் பல (வருங்கால) நோயாளிகளுக்கு ரத்தத்தில் மட்டும்தான் க்ளுக்கோஸ் அதிகமாக இருக்கும். ஆனால், சிறுநீரில் சர்க்கரையே இருக்காது! அது ஏன் என்று அம்மருத்துவர்களுக்குப் புரியாது!

ரத்தத்தில் தரம் குறைந்த க்ளுக்கோஸ் சுற்றுக் கொண்டிருந்தால்தான் சிறுநீரகங்கள் அதை வெளியேற்றும். ஏனெனில், அது ஒன்றுக்கும் உதவாத கழிவாகும். ஆனால், இப்போது அட்ரீனலின் சுரப்பால் கல்லீரலை விட்டு வெளியில் வந்த க்ளைக்கோஜன், செறிவூட்டப்பட்ட, மிகுந்த தரம் வாய்ந்த க்ளுக்கோஸாகும். அது நோய்த்தீர்க்கவல்ல சக்தியுமாகும். எனவே, அதை எந்தக் காரணம் கொண்டும் சிறுநீரகங்கள் வெளியேற்றாது. அதனால் சிறுநீரில் சர்க்கரை இருக்காது. ரத்தத்தில்தான் இருக்கும். ஆனால், அந்த க்ளைக்கோஜனைப் பற்றி எதுவுமே புரிந்துகொள்ளாமல், அதனையும் ஒருவித சர்க்கரை நோய் என்று அலோபதி கூறுகிறது!

அந்த நிலையில், ஒருவருக்கு டயாபடீஸுக்கான அலோபதி வைத்தியம் செய்தால் என்ன ஆகும் தெரியுமா? கணையத்திலிருந்து இன்சுலின் சுரக்கவைக்கப்படும்! அதாவது, எப்போது இன்சுலின் சுரக்கக்கூடாதோ அப்போது அது வலுக்கட்டாயமாக டயானில் (Dianil) போன்ற மாத்திரைகள் கொடுக்கப்படுவதன் மூலம் சுரக்கவைக்கப்படுகிறது! நம் உடல் மீது ஆங்கில மருத்துவம் நிகழ்த்தும் வன்முறை என்றுகூட இதைச் சொல்லலாம். அப்படிச் செய்யும்போது, அட்ரீனலின் சுரப்பது தடுக்கப்பட்டுவிடும். அட்ரீனலின் சுரக்கவில்லை என்ற சூழ்நிலையில் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் க்ளைக்கோஜன் மீண்டும் கல்லீரலுக்குள் செலுத்தப்படும்! இப்போது சர்க்கரையை அளந்து பார்த்தால் குறைந்திருக்கும்! அதுதான் கல்லீரலுக்குள் மீண்டும் போய்விட்டதே! ஆஹா, சர்க்கரையை கட்டுப்படுத்திவிட்டோம் என்று அலோபதி மருத்துவர்கள் மார்தட்டிக் கொள்வார்கள்! 

இதனால் என்ன விளைவுகள் ஏற்படும்?

வயிறு, குடல்களிலெல்லாம் ஏற்பட்டிருந்த பிரச்னையை, அஜீரணத்தை, பலவீனத்தையெல்லாம் சரிசெய்து கொண்டிருந்த க்ளைகோஜனை டயானில் மற்றும் அதையொத்த மாத்திரைகள் என்ற வன்முறையின் மூலம் மீண்டும் கல்லீரலுக்குள் அனுப்பிவிட்டதால், வயிறு  முதல் குடல்கள் வரை நோய்கள் அதிகரிக்கும். டயானில் சாப்பிட்ட சில நாட்களுக்குள்ளாக வயிற்றுத் தொந்தரவுகளும், குடல் தொந்தரவுகளும் அதிகமாகும். அஜீரணமும் வாயுத்தொல்லையும் மிகவும் கஷ்டத்தைக் கொடுக்கும். இதில் எவ்வளவு உண்மை உள்ளது என்பதை அனுபவித்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.


டயானில் போன்ற மாத்திரைகள் க்ளைக்கோஜனை மீண்டும் கல்லீரலுக்குள் அனுப்பிவிடுவதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்துபோய் மயக்கம் வரும். கைகால்கள் வெடவெடத்துப் போகும். கண்கள் இருளும். திடீர் மரணம்கூட ஏற்பட வாய்ப்பு உண்டு. மருந்து கொடுக்கப்பட்டதால், மயக்கம் அல்லது மரணம்  உண்டானதைத் தெரிந்துகொள்ளாமல், நீரிழிவு நோயினால்தான் அப்படி ஆனது என்று கூறி முடித்துவிடுவார்கள்!

பாக்கெட்டில் எப்போதும் சீனியை அல்லது தக்காளியை வைத்துக் கொள்ளுங்கள்; மயக்கம் வருகிற மாதிரி இருந்தால் உடனே சர்க்கரையைச் சாப்பிடுங்கள், அல்லது இரண்டு தக்காளிகளைச் சாப்பிடுங்கள். அப்போதுதான் ரத்தத்தில் சர்க்கரை கூடும், மயக்கமும் போய்விடும் என்றெல்லாம் சொல்வார்கள்.

ஆங்கில மருத்துவம் சொல்வதுபோல, அவசர காலத்தில் மயங்கி விழுவதிலிருந்தும் மரணம் ஏற்படுவதிலிருந்தும் கொஞ்சம் சர்க்கரையோ அல்லது தக்காளியோ நம்மைக் காப்பாற்றும் என்றால், அப்படிப்பட்ட ஆபத்பாந்தவர்களாக அவை இருக்கும்பட்சம், அவை ஒவ்வொன்றும் உயிர் காக்கும் பொருள் என்பதுதானே நிரூபணமாகிறது?! அவசர காலத்தில் நம்மைக் காப்பாற்றும் ஒரு பொருள் எப்படி ஆபத்தானதாக இருக்க முடியும்? ஆங்கில மருத்துவத்தின் முரண்பாடு புரிகிறதா?

மயக்கம் வருவதுபோல் இருக்கும்போது, நாம் சர்க்கரையை சாப்பிட்டால் என்ன நடக்கிறது தெரியுமா? வாயிலிருந்து வயிற்றிலிருந்தும், உமிழ்நீரின் உதவியுடனும், வயிற்றின் இயக்கத்தின் காரணமாகவும், இன்ஸ்டன்ட் காஃபி மாதிரி உடனடி க்ளுக்கோஸ் பிரிக்கப்பட்டு ரத்தத்துடன் கலக்கிறது. அப்போது வயிற்றில் அதிகமான வெப்பம் உண்டாகிறது. ஏன்? ஏனெனில், க்ளுக்கோஸ் என்பது ஒரு எரிசக்தி. ஆனால், அந்த வெப்பம் வயிற்றை சுட்டெரித்துவிடாமல் இருக்க, உடனே அட்ரீனலின் அதிகமாகச் சுரக்க ஆரம்பிக்கிறது. அட்ரீனலின் சுரந்தால் கல்லீரலில் இருந்து க்ளைக்கோஜன் வெளியேற்றப்படும் என்பதை ஏற்கெனவே பார்த்தோம். க்ளைக்கோஜன் என்ற அந்தச் சக்தி மிகுந்த க்ளுக்கோஸின் அளவு ரத்த ஓட்டத்தில் அதிகமாகி உடல் உறுப்புகளுக்கு, முக்கியமாக வயிற்றுக்கு, தேவையான ஊட்டச்சக்தியை அளிக்கிறது. டயாபடீஸுக்கான அலோபதி மருந்துகளால் ஏற்படும் சர்க்கரைக் குறைவையும், அது ஏற்படுத்திய மயக்கம், கை கால் நடுக்கம் இத்யாதிகளையும் க்ளைக்கோஜன் சீர்படுத்துகிறது!

ஆனால், இதற்கெல்லாம் காரணம், அவசரகாலத்தில் நாம் உட்கொண்ட சர்க்கரை அல்ல! அது உள்ளே வந்ததால் ஏற்பட்ட வெப்பத்திலிருந்து வயிற்றையும் மற்ற உறுப்புகளையும் காப்பாற்ற க்ளைக்கோஜனை ‘ரிலீஸ்’ செய்ய அட்ரீனலின் சுரந்ததால் ஏற்பட்ட விளைவாகும்! 

ஆக, அவசர கால மயக்கத்துக்காக நாம் உட்கொண்ட சர்க்கரையால் நமக்கு நன்மையா தீமையா என்றால், பெரும் தீமைதான். அதில் பெருமளவு கழிவாக ரத்தத்தில் சுற்றிக்கொண்டிருக்கும். கல்லீரல் அதை ஜீரணிக்கவும் செய்யாது; அதில் உள்ள நச்சுத்தன்மையையும் நீக்காது. எனவே, அது வெறும் கழிவாக சிறுநீரகங்களை அடைகிறது. அதன் காரணமாக, சிறுநீரகங்கள் முதன்முறையாக நச்சுத்தன்மையால் பாதிப்புக்கு உள்ளாகின்றன! ஓர் ஐந்தாண்டுகளுக்குள் இயங்க முடியாத சூழ்நிலைக்கும் அவை தள்ளப்படும்!

பின்னர் சிறுநீரகங்களை சரிசெய்ய டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள்! டயாலிசிஸ் செய்வதால் யாருக்கும் பிரச்னை தீர்வதில்லை. மாறாக, சில காலம் கழித்து ‘கிட்னி ட்ரான்ஸ்ப்ளான்ட்’ அறுவை சிகிச்சை மூலம் மாற்று சிறுநீரகங்களைப் பொருத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆனால், இன்னொருவருடைய உடல் உறுப்பை நம் உடல் என்றுமே ஏற்றுக்கொள்ளாது. ரத்தம் உட்பட. மனித உடல் கால்பந்து விளையாட்டு மைதானமல்ல, ஒருவருக்கு அடிபட்டால் அவருக்குப் பதிலான இன்னொருவரை அனுப்ப. இன்னொருவரின் உறுப்பு நம் உடலுக்குப் பாதகமான உறுப்பாகவே என்றும் இருக்கும். அதை எதிர்த்து நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்! அந்த எதிர்ப்பு சக்தியைப் பாழாக்கும் மருந்துகளை உட்கொண்டால், அது எய்ட்ஸில் போய் முடியும் என்று எச்சரிக்கிறார் டாக்டர் ஃபசுலுர் ரஹ்மான்!

சராசரிக் கணக்கு

அளவோடு இருந்தால் அது அமிர்தம். அளவு கூடினால் அல்லது குறைந்தால் அது  ஆபத்து என்று ஆங்கில மருத்துவம் சொல்லுகிறதா? அப்படியானால், எல்லா மனிதர்களுக்கும் ஒரே அளவில்தான் சர்க்கரை இருக்க வேண்டுமா? இந்தக் கருத்து சரியா? ஆங்கில மருத்துவ உலகம் பிழைத்துக் கொழுத்துக் கொண்டிருப்பதன் முக்கியக் காரணங்களில் ஒன்று, இந்த சராசரி அளவுக் கணக்கு.

சராசரியாக ஒரு மனிதர் இந்த அளவு சாப்பிட வேண்டும், அவருடைய வயது இப்படி இருக்குமானால், அவருடைய எடை அப்படி இருக்க வேண்டும் (BMI), மனிதர்களுடைய சராசரி உயரம் இவ்வளவு, சராசரி ரத்த அழுத்தம் இவ்வளவு, சராசரி கொழுப்பு இவ்வளவு, இத்யாதி இத்யாதி என சராசரியான ஒரு மனிதனை நிம்மதியாக இருக்கவிடாமல் இந்த சராசரிகள் கொல்லுகின்றன. சராசரிக்கும் அதிகமாக இருந்தால் குறைக்க வேண்டுமாம், குறைவாக இருந்தால் அதிகமாக்க வேண்டுமாம்! இப்படிப்போகிறது கணக்கு.

ஆங்கில மருத்துவத்தின் சராசரிக் கணக்கை வைத்து டாக்டர் ஹெக்டே ஒரு கேள்வி கேட்கிறார். மனிதர்களின் சராசரி உயரம் 5 அடி 5 அங்குலம் என்று வைத்துக்கொண்டால் அமிதாப் பச்சனையும் ஜெயா பச்சனையும் என்ன செய்வது? அமிதாப்பின் காலைக் கொஞ்சம் வெட்டி ஜெயாவுக்குப் பொருத்த வேண்டுமா என்று கேட்கிறார்! டயாபடீஸ் தொடர்பான சராசரிக் கணக்கும் இப்படிப்பட்டதுதான்.

அலோபதியின் சராசரிக் கணக்கு அடிப்படையிலேயே தவறானது. மனித உடலின் உறுப்புகளின் அளவை இறந்த உடல்களை அறுத்துப் பார்த்துதான் அலோபதி புரிந்துகொள்கிறது. உதாரணமாக, ஒரு குழந்தைப் பிணத்தின் வயிற்றை எடுத்துப் பார்த்து, உலகில் உள்ள குழந்தைகளின் வயிறின் அளவு சராசரியாக இவ்வளவுதான், எனவே இந்த அளவுதான் உணவு கொடுக்கப்பட வேண்டும், இதற்குமேல் கொடுத்தால் நோய்கள் ஏற்படும் அபாயம் உண்டு என்றெல்லாம் கூறுகிறது. ஆனால் எல்லாக் குழந்தைகளின் வயிறையும் இப்படிப் பார்த்து அளவிட முடியுமா என்ன? ஜான்சன் பேபி குழந்தைகளின் வயிறும் எதியோப்பியக் குழந்தைகளின் வயிறும் ஒரே மாதிரியாகவா இருக்கும்? வயிறு நிறைய உண்ட பிறகும், அம்மா ஆசையாக ஒரு இட்லி கொண்டுவந்து ‘சாப்டுடா கண்ணு’ என்று கொஞ்சி அன்பாக வைத்தால், உடனே வயிறு கொஞ்சம் ‘அட்ஜஸ்ட்’ பண்ணி தளர்ச்சியடைந்து இடம் கொடுக்கிறது என்கிறது விஞ்ஞானம்! எனவே, சராசரியாக ஒருவருக்கு ‘சுகர் லெவல்’ இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்ற ஆங்கில மருத்துவத்தின் நிர்ணயம் கேலிக்கூத்தானது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எந்த நேரத்தில் எவ்வளவு சுகர் இருக்க வேண்டும் என்பதை உடல் முடிவு செய்துகொள்ளட்டும். அதன் உரிமையிலும் கடமையிலும் நாம் தலையிடுவதனால்தான் எல்லாப் பிரச்னைகளும் வருகின்றன!

டயாபடீஸ் என்ற நீரிழிவு நோய்க்காக ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொண்டதுதான் எல்லாக் குழப்பங்களுக்கும் காரணம். முடிவாக டயாபடீஸ் பற்றி சில முக்கியமான விஷயங்களை நினைவுபடுத்திக் கொள்வோம்.

  • டயாபடீஸ் என்று ஒரு நோயே கிடையாது.
  • அது ஆங்கில மருத்துவத்தின் கண்டுபிடிப்பு.
  • அதற்கு எந்த மருந்தும் கிடையாது.
  • ஆங்கில மருந்துகளை நீரிழிவுக்காக உட்கொள்வதால், உடல் முழுக்க ஒவ்வொரு முக்கிய உறுப்பாக சீரழிந்து கடைசியில் மரணம் ஏற்படும்.
  • இன்சுலின் கிடைக்காத க்ளுக்கோஸ் என்ற கழிவை சிறுநீரகம் வெளியேற்றும். உடலின் இந்த கழிவு வெளியேற்றம் நோயாகப் பார்க்கப்படுகிறது.
  • இன்சுலின் சரியாகக் கிடைக்க முறையான உணவுப்பழக்கம் வேண்டும்.
  • மதுரமான இனிப்புச் சுவை கொண்ட பழங்கள் டயாபடீஸ் பிரச்னையை குணமாக்கக்கூடியவை.
  • புளிப்புச் சுவை கொண்ட பழங்கள் பாதகமானவை. அவற்றை சாப்பிடக்கூடாது.
  • பழங்கள் சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பும், சாப்பிட்ட பின்பு அரை மணி நேரத்துக்கும் தண்ணீர் குடிக்கக்கூடாது.
  • கடைகளில் பழச்சாறு வாங்கிக் குடிப்பதைத் தவிர்க்கலாம். ஏனெனில், அதில் தண்ணீர், பால் போன்ற சமாச்சாரங்கள் கலக்கப்படுகின்றன.
  • சமையலில், புளிப்பாக உள்ள எதையும் சேர்க்காமல் இருப்பது டயாபடீஸ் தானாகவே மறைய உதவும். காரணம், உணவில் புளிப்புச் சுவை அதிகமாகும்போது கணையம் சோர்வடைந்துவிடுகிறது. அதன் காரணமாக இன்சுலின் சுரப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. 
  • வெள்ளைச் சீனி, டயாபடீஸ் நோயாளிகளுக்கு(ம்) பாதகமானது.
  • பசிக்கும்போது மட்டும் சாப்பிட வேண்டும்.
  • சாப்பிடும்போது, கவனம் சாப்பாட்டிலும் சாப்பிடுவதிலும் இருக்க வேண்டும்.
  • தாகம் எடுக்கும்போது மட்டும் தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • முறையான தூக்கமும் சரியான உழைப்பும் ஓய்வும் வேண்டும்.
  • பசியும் தாகமும் சீரடையுமானால், டயாபடீஸ் குணமடைந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

இப்படியெல்லாம் கவனமாக இருந்தால், நிச்சயமாக நீரிழிவிலிருந்து குணம் ஏற்படும். உடலே உடலைச் சரிசெய்துகொள்ளும். இப்படி சரியாகவும் முறையாகவும் வாழ ஆரம்பித்தால், இனிப்பைக் கண்டு நீரிழிவு நோயாளிகள் அச்சப்பட வேண்டியதில்லை. திருட்டுத்தனமாக லட்டையோ மைசூர்பாக்கையோ விழுங்க வேண்டியதில்லை. எல்லோரும் பார்க்கும்போதே, உரிமையாகவும் சந்தோஷமாகவும் எடுத்து, ரசித்து, ருசித்து சாப்பிடலாம். உச்சி மீது வானிடிந்து வீழ்ந்துவிட்ட போதிலும் அச்சமென்பதில்லையே என்று பாடலாம். ஸ்வீட் எடுத்து உண்மையிலேயே கொண்டாடலாம்!

தொடரும்...