Showing posts with label முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி?. Show all posts
Showing posts with label முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி?. Show all posts

முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி?

 
பருவ வயதில் “ஆன்ட்ரோஜன்” என்ற இயக்குநீர் (Androgen Harmone) ஆண், பெண் இருபாலருக்கும் சுரக்க தொடங்கும். சில சமயங்களில் ஆன்ட்ரோஜன் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது முகப்பரு உண்டாகிறது.
எப்படி என்பதை இப்போது பார்ப்போம்:
சருமத்தில் கொழுப்புச் சுரப்பிகள் (Sebaceous Glands) உள்ளது, அவை “சீபம்” (Sebum) என்ற எண்ணைப்பசை போன்ற ஒரு பொருளை வெளியேற்றுகிறது. இவை மயிர்க்கால்களில் தங்கி சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கப் பயன்படுகின்றன. பருவ வயதில் சுரக்கும் அதீத ஆன்ட்ரோஜன் இந்த எண்ணைப்பசையை மிக அதிகமாக சுரக்க வைக்கின்றன. அப்போது அவை மயிர்க்கால்களில் வழக்கத்தைவிட அதிக அலவில் படிந்து, திரண்டு, ரவை போன்ற முகப்பருக்கலை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில் பாக்டீரியா கிருமிகள் பருக்களில் தொற்றிக்கொள்ள, பருக்கள் பெரிதாக வீங்கிக் கொள்கின்றன.
முகப்பருவைப் போக்கவும்,ன் தடுக்கவும் கீழ்க்காணும் வழிமுறைகள் நிச்சயம் உதவும்.
1. முகத்தை சோப்புப் போட்டு வெதுவெதுப்பான தண்ணீரால் அடிக்கடி கழுவுங்கள்.
2. முகத்தில் பவுடர் பூசுவதையும், அழகு சாதன களிம்புகள் உபயோகப்படுத்துவதையும் தவிருங்கள்.
3. சுத்தமான காற்றும், சூரிய ஒளியும் முகத்திற்கு தேவை.
4. கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளையும், நெய், வெண்ணெய் கேக், ஐஸ் கிரீம், சாக்லெட், பாலாடை போன்றவற்றையும் ஒதுக்குங்கள்.
5. கீரை மற்றும் பச்சை காய்கறிகளை நிறைய சாப்பிடுங்கள்.
6. தினமும் இரண்டு லிட்டருக்கு குறையாமல் தண்ணீர் குடியுங்கள்.
7. மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
8. பருக்களை கிள்ளுவதோ, அதலுள் இருக்கும் ரவை போன்ற பொருளை வெளியேற்ற அழுத்துவதோ கூடாது.
9. பருக்களில் சீழ் வைத்தால் “டெட்ராசைக்ளின்” (Tetracycline) மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைக்கும் கால அளவுக்கு தொடர்ந்து சாப்பிடுங்கள்.
10. பருக்களின் மேல் பூசுவதற்கு பலவித களிம்புகள் கிடைக்கின்றன. அவற்றை தேர்வு செய்வதற்கு மருத்துவரின் உதவியை நாடுங்கள்.