கொசு விரட்டிகளால் கெடுதல்


கொசுத்தொல்லையிலிருந்து தப்பிக்கவும் இரவு நன்கு தூங்கவும் கொசுவர்த்தி சுருள், மேட், கிரீம் முதலியவற்றை உபயோகப் படுத்துகிறோம் அல்லவா? இவற்றால் நம் ஆரோக்கியத்திற்கும், பணத்திற்கும் கேடு என்கின்றனர் விஞ்ஞானிகள்

எங்கே சென்றாலும், பகலிலும் இரவிலும் கொசுகள் ரீங்காரமிட்டு, மலர்களில் தேனருந்தும் வண்டாய் நம்முடைய ரத்தத்தை அருந்த ஆரம்பித்து விடும். கொசு ஒன்றைக் கொடுக்காமல் எவரிடமும் இருந்து எதையும் பெற்றுக்கொள்ளாது. இது கொசுக்களின் நீதி. கொசு தவறாமல் கடைபிடிக்கும் கொள்கை என்றும் சொல்லலாம்.. 

தேன் உண்ணும் வண்டு மகரந்தத் தூளை தன் கால்களிலும் உடலிலும் எடுத்துச் சென்று மலரினத்தைப் பரப்பித் தன் நன்றியுணர்வைக் காட்டுவது போல கொசுவும் நம்மிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் இரத்தத்திற்கு ஈடாக சில நோய்களைப் பரப்பித் தன் நன்றியுணர்வைக் காட்டி விட்டுத்தான் போகும்

அதில் இருந்து தப்பிக்க கொசுவர்த்திச்சுருள் பயன் படுத்திக் கொள்ளலாம், என்றால் அதிலும் நமக்கு கிளம்புகிறது தொல்லைகளின் சாம்ராச்சியம். இந்த மழைக் காலத்திலன் முக்கியமான பிரச்சனை என்னவென்றால் ஒரு மின்னல் வந்துவிடக் கூடாது ஊரே இருண்டு விடும். வானத்தில் மினுக்கென்றால் கரண்ட் கட் ஆகிவிடும்

கொசுவர்த்திச் சுருள்களிலும் மேட்களிலும் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட அலெத்ரின், டாலத்ரின் டி டிரான்ஸாலத்ரின் போன்ற இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இரசாயனங்களின் அடர்த்தி, நாம் இக்காற்றை சுவாசிக்கும் காலம், அறையினுள் வரும் புதிய காற்றின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து நமக்கு விளைவிக்கப்படும் தீங்குகள் அளவு நிர்ணயிக்கப்படுகிறது
 
முக்கியமாக கரண்ட் இல்லாவிட்டால் லிக்விடேட்டர் வைக்க வசதி இருக்காது. வேற வழியின்றி கொசு வர்த்திச்சுருளைப் பயன் படுத்தத் தொடங்கி விடுகிறோம். சுருள் சுருளாக வரும் புகையில் நாமும் நம் திரைப்படக் கதாநாயகர்களைப் போல கனவுடன் உறக்கம் கொள்கிறோம்.. மூடிய அறையில் ஏற்றப்படும் இந்த சுருளுக்கு இரண்டு தனித்துவம் உண்டு. ஒன்று கொசுவை விரைவில் கொல்லும். இரண்டு அதைப் பயன் படுத்தும் நம்மை மெல்ல மெல்லக் கொல்லும்

இந்த இரு பணிகளையும் செய்ய உதவியாக இதில் ஒளிந்திருக்கும் பயங்கரமான வேதிப்பொருள்கள் 
  1. சிந்தெடிக் D அலித்ரின் 
  2. ஆக்டோ குளோரோ -டை- ப்ரொஃபைல் ஈதைர் அல்லது s- 2 
இவை எரியும் போது கிளம்பும் புகையில் கிளம்புவது வேதிப்பொருள் பை குளோரோ மெதல் ஈதைர். இது நம் உடல் நலத்திற்கு பகையாகும் வேதிப்பொருள்

மக்கள் கொசுக்களுக்குப் பயந்து மாலை ஆறு மணிக்கே ஜன்னல் கதவுகளை எல்லாம் அடைத்துவிட்டு புதிய காற்று வீட்டுக்குள் வருவதை தடை செய்து விடுகின்றனர். இவ்வாறு அடைபட்டக் காற்றுக்குள்ளேயே விளக்கு எரிப்பது, சமைப்பது, குடும்பத்தார் அனைவரும் சுவாசிப்பது போன்ற செயல்களாலேயே பிராண வாயு மிகவும் குறைந்துவிடுகிறது. இதோடு புகையும், கேடு விளைவிக்கும் வாயுக்களும் வீட்டினுள் நிறைந்து விடுகின்றன. போதாக்குறைக்கு இருட்டியதுமே கொசு விரட்டிகளையும் பயன்படுத்த ஆரம்பித்து விடுகிறார்கள்

இதனால் வீட்டில் இருந்த சிறிதான பிராணவாயுவும் கெட்டு விடுகிறது. ஆக, இரவு முழுவதையும் மாசுக்காற்று உள்ள சூழ்நிலையிலேயே கழிக்கிறார்கள். கொசு விரட்டிகளில் உடலில் சேர்ந்த விஷத்தை வெளியேற்ற சளிபிடித்தல், காய்ச்சல் ஆகியவை ஏற்படுகின்றன. சுத்திகரிப்பு நடக்காததால் மருந்து சாப்பிட்டும் குணம் பெற முடிவதில்லை

மூன்று நாட்களில் இவை குறையாததால் அலர்ஜி என்று பெயர் சூட்டி, அந்தச் செயலை முடக்க ஒவ்வாமையைக் குணப்படுத்தும் மருந்துகளையும் ஆரோக்கியமாக உடல் தாக்குப் பிடிக்காமல் திணறுகிறது. அதே நேரத்தில் உடலுக்கு ஒவ்வாத பொருட்களை வெளியேற்றும் செயல்முறை படிப்படியாக இழந்து விடுகிறது. இதன் மூலம் படை வீரர்களை இழந்த கோட்டையைப் போல நோய், எதிர்ப்பு சக்தியை இழந்த உடலைப் பெற்று விடுகிறது. பிறகு நோய்களின் வருகைக்குக் கேட்க வேண்டுமா

தொடர்ந்து மூடிய அரையில் இவ்வேதிப்பொருளை சுவாசிக்கும் நம் மூக்குக்குத்தெரிவதில்லை. இது நம் உட்லில் கேன்சர் ஏற்பட மூலமாக அமையும் என்பது. நம் மூளையோ இதை தெரிந்து கொள்ள விரும்புவது இல்லைதொடர்ந்து அடர்த்தி அதிகமான இப்புகையைச் சுவாசிக்கும் ஒருவருக்கு நுரையீரல் முழுமையாகச் சுருங்கி விரிவடைய முடியாமல் போகிறது. அதனால் சுவாசத்திற்குத் தேவையான காற்று போதிய அளவு கிடைக்காமல் போகிறது

இந்த வேதிப்பொருள் விளைக்கும் இத்தீங்கு ஒருபுறம் என்றால் மறுபுறம் இவ்வேதி பொருளின் கரியால் ஏற்படும் தீங்கு. கொசுவர்த்தி எரியும் போது அது வெளியிடும் நுண்ணிய சாம்பல் அளவு 75 முதல் 137 சிகரெட் எரிப்பதனால் வரும் சாம்பலுக்கு சமம் . இந்த சாம்பல் சாதாரனமாகக் கீழே கொட்டும் பிற சாம்பல் போன்றது அல்ல. காற்றில் மிதக்கும் கண்களுக்குத்தெரியாத நுண்ணிய சாம்பல்(size 2.5 micron). அதனை சுவாசிப்பதனாலும் நுரையீரல் காச நோய், புற்று (cancer) நோய் வருவதற்கு வாய்ப்புகள் ஏராளம். நோய்கள் வரலாம்

நாம் என்ன செய்கிறோம். முக்கியமாக நாம் உறங்காவிட்டாலும் குழந்தைகள் நன்கு உறங்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் ஏன் தாய்மைப் பாசத்தில் கொசுக்கொல்லிகளைப் பயன் படுத்துகிறோம். கொசுச் சுருளில் அல்லது கொசுப் பாயில் (மேட்டில்) இருந்து வெளிவரும் புகையைப் பிஞ்சுக் குழந்தைகள் சுவாசித்தால், அவர்களுக்கு வலிப்பு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறி எச்சரிக்கிறது லக்னோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு

குழந்தைகளுக்கு இத்தகு துன்பத்தைக் கொடுக்கும் இக் கொசுக் கொல்லிகள் குழந்தைகளே பிறக்காமல் இருக்கவும் வழி செய்கிறது. மும்பையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கொசு விரட்டிகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் சிலருக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக் கூடியது என்பதும் உறுதி செய்யப் பட்டுள்ளதுஇதில் உள்ள சிந்தெடிக் D அலெத்ரின் மனிதர்களின் உடல் எடையை மெல்ல மெல்ல இழக்கச் செய்யும் தன்மை கொண்டது

தொடர்ந்து கொசு விரட்டி உபயோகித்து வருகிறவர்களுக்கு நுரையீரல் ஒருவித ஒவ்வாமை ஏற்பட்டு முழுமையாக விரிவடையாமலும் அதன் கொள்ளளவுக்குண்டான காற்றை செயல்பாட்டிற்கு எடுத்துக்கொள்ள இயலாமலும் போய் விடுவதாக பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன

மும்பையின் நுகர்வோர் வழிகாட்டும் கழகத்தின் முடிவுப்படி கொசு விரட்டிகளில் பயன்படுத்தப்படும் இரசாயனம் சிலருக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்த வல்லது என்கிறார்கள்

கொசு விரட்டியில் உள்ள டயோக்சின் புற்றுநோயை உருவாக்க வல்லது. ‘அலெத்ரின் மனிதர்களின் உடல் எடையை மெல்ல இழக்கச் செய்யவல்லது’. மேட்புகையை பிஞ்சுக் குழந்தைகள் இரவு முழுவதும் சுவாசித்தால் வலிப்பு நோய் ஏற்படலாம் என்கிறது லக்னோ கிஸ் ஜோர்ஜின் மருத்துவப் பல்கலைக்கழகம். இங்கே உள்ள டாக்டர் தேவிகாநாக் என்பவரின் கண்டுபிடிப்பு இது

இத்தனையையும் படித்த பின்புமா நீங்கள் கொசு வர்த்தியைப் பயன் படுத்துகிறீர்கள்? போங்க... போயி ஒரு கொசு வலையை வாங்கி அழகா கட்டி அதற்குள் கூட்டாக நாயகன் கமல் குடும்பம் போலநீ ஒரு காதல் சங்கீதம்என்று மனைவியின் காதில் பாட்டு பாடிக்கொண்டு இன்பமாக உறங்குங்கள்.. கொசுவைப் பாட அனுமதிக்காதீர்கள்.
கொசுக்களைத் தடுக்க ஒரே எளிய வழி, பாதுகாப்பானது, சிக்கனமானது கொசுவலை மட்டுமே!


சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

உலகின் மிகச் சிறந்த உணவாக சீன உணவே போற்றப்படுகிறது. இந்த உணவு முறையைப் பின்பற்றினால் நீண்ட நாள் வாழலாம். குறிப்பாக 1. கொழுத்த சரீரம் உருவாகாது. 2. இதய நோய்களுக்கான அறிகுறியே காணப்படாது.
இந்த இரண்டு தன்மைகளும் ஒருவரிடம் தொடர்ந்து இருந்தால் அவர் ஆரோக்கியமாக வாழலாம். ஆரோக்கியம் தொடர்வதால் வாழ்நாளும் நீடிக்கிறது. பிறநோய்கள் இருந்தாலும் எளிதில் அவற்றைக் குணப்படுத்தலாம்.
ஹாங்காங்கின் சீனப்பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் ஊகாம்ஸாங் (Woo-Kam-Sang) என்பவர் தனது ஆய்வின் மூலம் இந்த உண்மையைக் கண்டுபிடித்துள்ளார்.
சரி. சீனர்கள் அப்படி என்னதான் சாப்பிடுகிறார்கள்?
பால் சேர்க்காத கிரீன் டீ யை நாலைந்து தடவை தினமும் அருந்துகின்றனர். நீராவியில் வேகவைத்த காய்கறிகள் மற்றும் சில நேரங்களில் காய்கறிகளை சிறிய அளவில் எண்ணெயில் வறுத்தும் சாப்பிடுகின்றனர்.
சோயா பீன்ஸ், தயிரையும் நிறையச் சேர்த்துக் கொள்கின்றனர்.
மேற்கத்திய பாணி உணவு முறையில் அவ்வப்போது கோழி வறுவல் அல்லது மீன் வறுவல் ஒன்றிரண்டு துண்டுகள் மட்டும் சாப்பிடுகின்றனர்.
காலையில் முட்டை ஆம்லட் அல்லது கொத்துக்கறி சேர்த்துக் கொள்கின்றனர். இதில், இஞ்சி, வெள்ளைப் பூண்டு உட்பட மசாலா வகைகள் சேர்த்துவிடுகின்றனர். இதுவே காலை நேரத்திற்கும் பகல் உணவிற்கும் எற்ற ஒரே உணவாகும்.
மற்ற நேரமெல்லாம் நீராவியில் வேகவைத்த காய்கறிகளுடன் சோயா மற்றும தயிர் சேர்த்த சாதம் ஒரு முறையும், பச்சையான காய்கறிகளை ஒரு முறையும் சாப்பிடுகின்றனர்.
இவர்கள் அடிக்கடி விரும்பியும் போற்றியும் குடிப்பது கிரீன் டீதான். இது முதுமை அடைவதை தடுக்கும் தேநீர். மேலும் இந்தத் தேநீரில் இளமையை நீடிப்பதுடன் இதயத்துக்குப் பாதுகாப்பையும் வழங்கும் பாலிபெனால் என்ற சத்துப் பொருள் இருக்கிறது.
மேற்கண்ட அனைத்து உண்மைகளும் உலகிலேயே இதய நோயாளிகள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் உள்ள பான்யு என்ற சீனக்கிராம மக்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களாகும். சீனாவின் குவாங்டங் மாகாணத்தில் இந்தக் கிராமம் இருக்கிறது.
சீனர்கள் ஹாங்காங், சிட்னி, சான்பிரான்ஸிஸ்கோ ஆகிய நகர்களில் பெருமளவில் வாழ்கின்றனர். பத்து ஆண்டுகள் மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றிய சீனர்களை அல்ட்ரா சவுண்டு மூலம் பரிசோதித்ததில் இவர்களின் இரத்தக்குழாய்களில் 5 இல் ஒரு பங்கு என்ற விதத்தில் தடிப்பாகிவிட்டது தெரிந்தது. எனவே, இவர்கள் இதயநோய் அபாயத்தில் உள்ளனர்.
வெளிநாடு சென்று கடந்த பத்தாண்டுகளுக்குப்பிறகு சீனா திரும்பிய 417 பேர் இதய நோய் அபாயத்தில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதே டாக்டர் ஊ சீனர்களின் மெயின்லாண்ட் பகுதி மக்கள் தாங்கள் சாப்பிடும் உணவில் பாதி இறைச்சியாகவும், மிகச்சிறிய அளவிலேயே பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் சாப்பிடுவதையும் கண்டு பிடித்துள்ளார்.
“சீனர்கள் தங்களின் மரபு வழி உணவுத் திட்டத்தையே பின்பற்ற வேண்டும். சோயா தயிரில் உள்ள லெசித்தின் என்னும் நார்ப்பொருள் உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்கிறது. இதனால் இதய நோய் அபாயம் இல்லை. உடலும் கொழுத்த சரீரமாக உருவாகாது” என்கிறார்.
ஹாங்காங்கில் வறுத்த கோழிக்கறி என்ற மேற்கத்திய உணவால் இங்குள்ள சீனர்கள் குண்டாக உள்ளனர். செல்வச் செழிப்பான சிங்கப்பூரில் வாழும் சீன இளைஞர்கள் 25 வயதுக்குள்ளேயே இரத்தக் கொதிப்பு, நீரிழிவு, இதய நோய்கள் அபாயத்தில் உள்ளனர் என்கிறார் டாக்டர் ஊ.
கிரீன் டீக்கும் நீராவியில் வேகவைத்த காய்கறிகளுக்கும் நீங்களும் முக்கியத்துவம் கொடுங்கள். உலகின் மிகச்சிறந்த இந்த உணவால் ஆரோக்கியம் தொடர்வது உறுதி. உலக சுகாதார நிறுவனம் சிபாரிசு செய்துள்ள உணவுமுறை இது என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் 2000ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள்.
குளிர்ந்த நீரில் குளியுங்கள்!
இந்தக் கோளில் 70% தண்ணீர் தான் மூன்று பக்கமும் சுற்றிப் பரவியுள்ளது. அதே போல் மனித உடலும் 75% தண்ணீரால்தான் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, தண்ணீர் வைத்தியம் என்பது சக்தி வாய்ந்த ஒன்றாகத் திகழ்கிறது. எனவே, உடலுக்கும் உள்ளத்திற்கும் சக்தி தேவை என்றால் குளிர்ந்த தண்ணீரில் குளியுங்கள்.
இதற்காகப் பத்து அங்குல ஆழமுள்ள தொட்டியில், 16 செல்சியஸ் மட்டுமே வெப்பம் உள்ள அதாவது ‘ஜில்’ தண்ணீர் நிரப்பிக் கொண்ட தொட்டிக்குள் உட்காருங்கள். ஒரு நிமிடம் தண்ணீருக்குள் முழு உடலும் இருக்கும் விதத்தில் மூழ்கிக் கொண்டு உடலை அங்கங்கே தேய்த்து விடவும். ஒரு நிமிடம் முதல் மூன்று நிமிடங்கள் வரை இப்படி குளிர்ந்த தண்ணீரில் சோப் இன்றித் தேய்த்துக் குளிக்கும்போது நிணநீர் மண்டலம் சுறுசுறுப்பாக இயங்கி உள்ளே உள்ள உறுப்புகளை சுத்தம் செய்துவிடுகிறது. இதனால் இதயமும் சுறுசுறுப்படைகிறது. குளித்ததும் உடலை நன்கு துடைத்துவிடுங்கள். இதனால் அடுத்த பல மணிநேரம் சுறுசுறுப்பாகப் பணிபுரியலாம். வெளியூர் சென்று திரும்பியதும் உடன் அலுவலகம் செல்ல வேண்டும் எனில் பிரிட்ஜில் உள்ள ஐஸ்கட்டிகளை தொட்டியில் போட்டு உடன் குளிர்ந்த நீராக மாற்றி இந்த சக்திக் குளியலை எடுக்கலாம்.
வாய் நாற்றமா?
தோலில் வறட்சி மற்றும் வாய் நாற்றம் உள்ளவர்கள் வாரத்திற்கு இரண்டு நாளாவது வெண்டைக்காய்ப் பச்சடியை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன்கள் கிட்டும். அமெரிக்கர்கள் தென்னாப்பிரிக்காவிலிருந்து வெண்டைக்காய்களை அதிகம் வரவழைத்துச் சாப்பிடுகின்றனர்.

கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

கண் நோய்களுக்கான இயற்கை வைத்திய சிகிச்சை முறைகளைப் பார்ப்போம்.
சத்துக் குறைவால் ஏற்படும் கண் நோய்கள் நீங்க:
சுத்தமான கேரட் கால் கிலோ எடுத்துச் சாறு பிழியவும். கொத்தமல்லி இலைச்சாறு 10 மில்லி, தேங்காய் அரை மூடி, ஏலக்காய் 2, தேவையான அளவு சுத்தமான பனங்கற்கண்டு எடுத்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலைச்சாறு, கேரட்சாறு, தேங்காய் துருவியது, பனங்கற்கண்டு இவற்றுடன் இரண்டு டம்ளர் (400 மில்லி சுத்தமான தண்ணீர்) கலந்து ஏலக்காயை பொடி செய்து சேர்த்து காலை - மாலை இருவேளையும் காப்பி, தேநீருக்கு பதிலாக அன்றாடம் குடித்து வரலாம். இதை தினமும் புதிதாக தயாரித்துக் கொள்ள வேண்டும்.
பப்பாளி பழம் 4 துண்டு, தேங்காய் பால் அல்லது சோயா பால் ஒரு டம்ளர் (200 மில்லி) தேவையான அளவு கற்கண்டு, ஏலக்காய் 2 பொடி செய்து போட்டுக் கலக்கி தினமும் காலை, மாலை இரு வேளை சாப்பிடலாம்.
புதிய பேரிச்சம் பழம் கொட்டை நீக்கியது 5, இரண்டு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, ஒரு ஸ்பூன் சுத்தமான தேன் இவற்றை ஒரு டம்ளர் சுத்தமான தண்ணீரில் கலந்து காலை, மாலை இருவேளை சாப்பிடலாம். இவை கண்களில் ஏற்படும் பார்வை குறைபாட்டை தவிர்க்கவும், கண்களுக்கு ரத்த ஓட்டத்தை சீராக வைத்து, பார்வைக்கு பாதுகாப்பிற்கு வழிவகுக்கும். மற்றும் வாரம் ஒரு முறை கருவேப்பிலை துவையல், பொன்னாங்கன்னிக் கீரை ஆகியவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ள நல்ல பயனளிக்கும்.
கண் வலிக்கு:
புளியம்பூவை அல்லது மல்லிகைப் பூவை அரைத்து கண்களைச்சுற்றி கனமாகப் பற்றுப் போட்டு வர வேண்டும். அல்லது கண்களில் ரோஸ் வாட்டர், பன்னீர் தினமும் காலை, மாலை இருவேளையும் சொட்டு மருந்தாக பாவித்தல் சிறந்தது. தொடர்ந்து தினமும் புதியதாக பற்றுப் போட்டுக் கொண்டாலோ அல்லது சொட்டு மருந்தாக உபயோகிக்க கண்வலி நீங்கும்.
தாமரைப் பூவை கண்களில் வைத்துக் கட்டி வர, கண் வலி நீங்கும்.
சோற்றுக் கற்றாழை மடலை மட்டும் தனியாக எடுத்து, அதை நெருப்பில் வாட்டி, சுத்தமான துணியில் வைத்து கண்களில் மூன்று துளி அன்றாடம் காலை, மாலை விட்டு வர கண் வலி குணமாகும்.
நாமக் கட்டியை சுத்தமான தண்ணீரில் உரைத்து இரவில் படுக்கப்போகும் முன்பு கண்களைச் சுற்றிலும் வளையம் போல் போட இரண்டு அல்லது மூன்று நாட்களில் கண்வலி நீங்கும்.
சம்பங்கி பூவை எடுத்து அதன் இலைகளை மட்டும் நன்றாக அரைத்து இரவு படுக்கப் போகும் முன்பு கண்ணைச் சுற்றி கனமாகப் பற்றுப் போட்டு சுத்தமான துணியைக் கொண்டு கட்டிவிட வேண்டும். மூன்று நாட்கள் தொடர்ந்து கட்டி வர கண் வலி நீங்கும்.
கோவை இலையைக் கொண்டுவந்து வாறு எடுத்து, காலை, மாலை கண் வலி உள்ள கண்களில் 2 துளி மட்டும் விட்டு வந்தால் மூன்று நாட்களில் குணம் தெரியும்.
நாள்பட்ட கண் வலிக்கு கண்களில் சதை வளர்ச்சிக்கு:
முருங்கைக் கீரையை மட்டும் வதக்கி கண்ணுக்கு இரவில் கட்டி வர, சதை வளர்தல் குறையும்.
அருகம்புல்லை ஒரு கைப்பிடியளவு எடுத்து சுத்தம் செய்து சிறிது சோயாபால் விட்டு அல்லது தாய்ப்பால் விட்டு நசுக்கி, சுத்தமான துணியில் வைத்து கண்களில் விட்டு வர, கண்களில் சதை வளர்தல் குறையும். தினமும் புதிதாய் தயாரித்து உபயோகிக்க வேண்டும்.
நேத்திரப் பூண்டு இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நல்லெண்ணெய் 50 மில்லியில் போட்டு கடும் வெய்யிலில் 10 நாட்கள் வைத்து எடுத்து பின்னர் எண்ணெய் மட்டும் மூன்று துளிகள் சொட்டு சொட்டாகப் பிழிய கண்களில் ஏற்படும் சதை வளர்ச்சி குறையும்.
கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி, வல்லாரை, துளசி, வேப்பிலை, வில்வம் ஆகியவற்றை சம அளவு எடுத்து நக்கு பொடி செய்து காலை, மாலை,இரளவு என மூன்று வேளை தொடர்ந்து சாப்பிடலாம்.
கண்ணில் பூ விழுந்தவர்களுக்கு:
நந்தியாவட்டைப் பூவைத் தனியாக எடுத்து சாறு பிழிந்து, சுத்தமான துணியில் வைத்து கண்களில் பிழிய வேண்டும். தொடர்ந்து செய்து வர குணமாகும்.
கண்பார்வை தெளிவடைய:
பப்பாளிப் பழம் இரண்டு துண்டுகள், பேரிச்சம் பழம் நான்கு, செர்ரி பழம் பத்து, அன்னாசி பழம் இரண்டு துண்டுகள், ஆப்பிள், திராட்சை 50 கிராம், வாழைப்பழம், மாம்பழம், இரண்டு ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு டம்ளர் தேங்காய் பால் அல்லது சோயா பாலில் கலந்து சேர்த்து கலக்கி தேவையான அளவு தேன் அல்லது கற்கண்டு சேர்த்து அன்றாடம் இரவு படுக்கப் போகும் முன் சாப்பிட்டு நல்ல பலன் அளிக்கும்.
அருகம்புல் சாறு 50 மில்லி எடுத்து அத்துடன் ஒரு இளநீரை கலந்து தேவையான அளவு தேன் சேர்த்து காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல குணம் தெரியும்.
பொதுவாக கல்லீரலுக்கும் கண்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆகையினால் கல்லீரல் நோய் வராமல் பாதுகாக்க வேண்டும். அதற்கு கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி கீரையைத் தினமும் சாப்பிட வேண்டும். தினமும் 200 கிராம் திராட்சை சாப்பிட்டு வரலாம். கொழுப்பு உணவுகள், மசாலா உணவுகள், மாமிச உணவு வகைகள் ஆகியவற்றை கூடிய வரையில் தவிர்ப்பதோ அல்லது குறைத்துக் கொள்வதோ சிறந்ததாகும். பொதுவாக இரவு படுக்கப் போகும் முன்பு, இரு கண்களையும் குளிர் நீரால் கழுவி, சுத்தப்படுத்திக் கொள்வதன் மூலம் கண்களுக்குக் குளிர்ச்சியும், ஒருவித புத்துணர்ச்சியும் கிடைத்து, கண்களின் உட்புறத்திலுள்ள நரம்புகளுக்குச் சக்தி கிடைத்து தூய்மைப்படுத்தி கண்களைப் பாதுகாக்கிறது.

இயற்கை உணவும் ஆரோக்கியமும்

நாம் அன்றாடம் உண்ணும் அளவில் உள்ள எண்ணற்ற சத்துக்களைப் பற்றிய ஆரோக்கியத்திற்கு தேவையானவற்றைப் பார்ப்போமா!
பல்வேறு மூலிகைகள், காய்கனிகள், கீரை வகைகள், அவற்றின் தன்மைகள், பயன்கள் ஆகியவற்றை அனைவரும் புரிந்து அதற்கேற்றாற் போல் அன்றாட உணவை உட்கொண்டால் நோய் என்பதற்கே இடமில்லை. ‘உணவே பிரமன், உணவிலிருந்தே எல்லா உயிரினங்களும் தோன்றுகின்றன. உணவாலேயே வாழ்கின்றன. இறந்த பிறகு மற்ற உயிரினங்களுக்கும் உணவாக மாறுவதே இயற்கையின் இயல்பு’ என உபநிஷத்துக்கள் கூறுவதை
‘தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
வானம் வழங்காது எனில்’
என்று திருவள்ளுவரும், ஏழைகளிடத்தில் இறைவன் உணவின் ரூபமாகத் தோன்றுகிறார் என காந்தியடிகள் போன்றோர் கூறியது உணவில்லையேல் வாழ்க்கையே அழியும் என்பதைத்தான் காட்டியுள்ளது. இன்றைய அறிவியல் முன்னேற்றம் நோய்களைப் பற்றி ஆழ்ந்து ஆராய்ந்து அதற்குரிய எதிர்ப்பு மருந்துகளைத் தருவதில் அதிக முன்னேற்றம் அடைந்து சிறப்பாக மருத்துவப் புரட்சி ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் புதுப்புது நோய்களும் தோன்றி மனித குலத்திற்கு அச்சுறுத்தலை அளித்து வருவதும் நமக்கு தெரிந்ததுதான். அதனை கட்டுப்படுத்த மருத்துவ ஆராய்ச்சி மூலம் புதுப்புது மருந்து வகைகளும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு தான் இருக்கின்றன. இதற்கு காரணம் நம் முன்னோர்கள் நோய் வராமலிருக்கும் வழிமுறைகளை சிந்தித்து நம் அன்றாட உணவு பழக்க வழக்கங்களிலேயே நோய் வருமுன் காப்பதற்கும், வந்ததற்குப் பின் கடைபிடிக்க வேண்டிய மருத்துவ வழி வகைகளை எண்ணற்ற வகையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே பதிய வைத்துள்ளனர். ஆனால் அதை நாம் முறையாக கடைப்பிடிக்கவும், புரிந்து கொண்டு செயல்படுத்தவும் தவறியுள்ளோம் என்பதில்தான் - நாம் நம் நாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் என்பதினால்தான் - நாம் நம் நாட்டிற்கும் கலாச்சாரத்திற்கம் ஒவ்வாத பிற நாட்டு உணவு, நடை, உடை, பாவனைகளை மாற்றிக் கொண்டிருப்பததோடு, உடலை பாதிக்கும் தீய பழக்க வழக்கங்களான புகைத்தல் மது மற்றும் கஞ்சா, அபின், பிரெளன் சுகர் போன்ற போதைப் பொருட்களை பாவித்து நமது உடல் நலத்தை கெடுத்துக் கொண்டு அதனால் நரை, திரை, மூப்பு சாக்காடுகள் ஆகியவை குறைந்த வயதிலேயே ஏற்படுவதற்கு வாய்ப்பளிக்கின்றோம். உணவு உடலைப் புஷ்டியாக்குவதை விட அதை ஆரோக்கியமாக வைத்திருப்பதே முக்கியம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். நமது உணவிற்கு ஏற்றபடித் தான் உடலும், நமது புத்தி, சக்திகளும் அமையும்.
நாம அனைவரும் பெரும்பாலான உணவு வகைகளை சமைத்தே சாப்பிடுகிறோம். எனினும் பலவித காய்கனி வகைகளை அப்படியே சுத்தம் செய்து பச்சையாகவே சாப்பிடுவதும் உடல் நலத்திற்கு மிகவும் பயனுள்ளதாகும். நாம் சமையல் செய்யும்போது பலவித ஊட்டச்சத்துகள் அழிந்து போகிறது. எப்படி அழிகிறது, எதனால் அழிகிறது என்பதை பார்க்கலாமா?
முதலாவதாக அரிசியை எடுத்துக் கொள்வோம். முன்காலம் போல் கைக்குத்தல் அரிசி கிடையாது. நாம் இயந்திரத்தில் கொடுத்து நன்றாக தீட்டி அரைத்து விடுவதால் அரிசியில் இருக்கும் தயாமின் பீ வைட்டமின் வீணாக்கப்படுகிறது. இந்த வைட்டமின் தானியத்தின் அடிப்பகுதியில்தான் இருக்கும். இவ்வாறு தீட்டப்பட்ட அரிசியை உண்ணும்போது நமக்கு மாவுச் சத்துதான் கிடைக்கும். உயிர்ச்சத்தும் வைட்டமின்களும் காய்கறி பழங்களிலிருந்து கிடைக்கின்றது. இந்த சத்து நீரினாலும் வெப்பத்தாலும் சுலபமாக அழியக்கூடியவை. சத்துகள் அழியாமலிருக்க சரியான முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
உணவுப் பொருட்களை சமையல் செய்யும் பொழுது, பாதுகாத்து வைக்கும்பொழுது, காற்றில் வைக்கும்பொழுது, சூடாக்கும்பொழுது, கழுவும் பொழுது என பல சமயங்களில் அதன் சத்துகள் வீணாக்கப்படுகிறது. சமைக்கும் விதமும் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. குறைந்த அளவு தண்ணீரில் ஒரு தடவை கழுவி அடுத்து முறை கழுவுகின்ற தண்ணீரைச் சமையலில் வேறு பொருட்கள் தயாரிக்க உபயோகிக்கலாம். அதிகமான தண்ணீரில் வேக வைத்துக் கஞ்சியை வடித்துவிடும்போது இருக்கும் சத்தும் போய் விடுகின்றது. அதனால் குக்கரில் சமைக்கும்போது சத்துகள் வீணாவதில்லை. எண்ணெய் வகைகளைத் திரும்பத் திரும்ப சூடு செய்வதால் சில ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு உடலுக்கு கெடுதல் ஏற்படுகிறது. அடிக்கடி சூடு பண்ணுகிற எண்ணெய் ரத்தத்தில் கொழுப்புச் சக்தியையும் அதிகரிக்கும். அதுபோன்றே பாலை அதிக அளவு சூடுபடுத்துவதால், பாலில் இருக்கும் லாக்டோஸ் எனப்படும் சர்க்கரை மற்றும் புரதச் சத்தும் குறையும். நீரில் கரையும் வைட்டமின்கள் சமைக்கும்போது அதிக அளவில் அழிக்கபடுகின்றன. பொதுவாகவே எந்தவித காய்கறிகளாக இருந்தாலும் கழுவிய பிறகு தான் நறுக்க வேண்டும். அதிலும் சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கும்போது காயின் அத்தனை பரப்புகளும் காற்றில் பட்டு அதில் உள்ள சத்துகளை இழக்கின்றன.
காய்கறிகளை எப்போதுமே தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் தான் போட வேண்டும். உருளைக் கிழங்கு போன்றவற்றை தோலுரிக்காமல் வேக வைத்ததிற்குப் பின் தான் தோல் நீக்க வேண்டும். இலைக் காய்கறிகளில் நிறையை கரோட்டின் போன்ற வைட்டமின் சத்துகள் அதிகம் உள்ளன என்பதால் தண்ணீரில் வேக வைத்து சமைப்பது சிறந்த பலன்களைத் தரும். காய்கனி வகைகளை பொதுவாகவே குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதால் சத்துகள் பாதுகாக்கப் படுகின்றன. முட்டையை வேகவைக்காமல் சாப்பிடுவதால் அதில் இருக்கும் அவிட்டின் என்ற புரதம் பயோடின் என்கிற உயிர்ச்சத்தை இழக்கிறது. எனவே வாழ்க்கை வாழ்வதற்கே என்ற நல்ல நோக்குடன் நமது அன்றாட உணவு வகைகளை சரியான முறையில் சமைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் ருசியும் மணமும் குணமும் நிறைந்ததாக சாப்பிடும்போது, கண்களுக்கு தெரியாத நுண்கிருமிகள் அழிந்துவிடுவதோடு, எளிதாக ஜீரணம் ஆகும் தன்மையுடன் நல்ல ஆரோக்கியம் அளிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
நம்மில் சிலர் செய்வதைப் போல் அதிக நாட்கள் குளிர்சாதனப் பெட்டியில் கிழங்குகளையும், காய்கறிகளையும், கீரை வகைகளையும் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
சாதாரணமாகவே எந்தவித காய்கறிகளாய் இருந்தாலும், முதலில் அவற்றை நல்ல நீரில் அலசி சுத்தப்படுத்தித் தான் சமையலுக்கு உபயோகிக்க வேண்டும். பிரசர் குக்கர் சமையல் நேரத்தை குறைப்பதோடு சமைக்கும் காய்கறிகள் அனைத்தின் சத்துகள் அழிவதை தடுக்கிறது. பழங்களை நறுக்கி வைத்தால் சில நிமிடங்களில் நிறம் மாறி விடுகின்றன. இதைத் தடுக்க சிறிதளவு சர்க்கரை போட்டால் போதும். சில அரிசியைத் தண்ணீரில் கழுவும்போது 40 சதவீதம் தயாமின் சத்து தண்ணீரில் கரைந்து போய் விடுகிறது. குறைந்த அளவு தண்ணீரில் ஒரு தடவை கழுவி அடுத்தமுறை கழுவுகின்ற தண்ணீரை சமையலில் வேறு பொருட்களுடன் உபயோகிக்கலாம். அதிகமான தண்ணீரில் வேகவைத்துக் கஞ்சியை வடிப்பதால் இருக்கும் சத்தும் போய்விடுகிறது. பருப்புகளை வேக வைக்கும்போது சமையல் சோடாவை சேர்ப்பதால் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும். அதுபோன்றே பாலை அதிக அளவு சூடுபடுத்தும் போது அதிலுள்ள சுண்ணாம்பு சத்து பாத்திரங்களின் ஓரங்களில் படிந்துவிடுகிறது. அதனால் பாலில் இருக்கும் லாக்டோஸ் எனப்படும் சர்க்கரை மற்றும் புரதத்தின் தரமும் குறைகிறது. காய்கறிகளை கழுவிய பிறகுதான் பெரிய துண்டுகளாக நறுக்க வேண்டும். சிறிதாக நறுக்கப்பட்டு நீரில் கழுவும்போது அதன் சக்திகள் கரைந்துவிடும். இலைக்காய்கறிகள் நிறைய காரோட்டின் கொண்டவையாக இருக்கின்றன. அது வைட்டமின் ஏ ஆக உடலில் மாறுகிறது. ஆதலால் காய்கறிகளை வறுப்பதை காட்டிலும் தண்ணீரில் வேக வைத்து சமைப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகும்.
சில காய்கறிகளில் புளி சேர்க்கப்படும் போது, அதன் அமிலத் தன்மை வைட்டமின் அழிவை தடுக்கிறது. முட்டையை வேக வைக்காமல் சாப்பிடுதல் கூடாது. தானியங்கள் என்று எடுத்துக் கொண்டால் எல்லா தானியங்களும் ஒவ்வொரு ஊட்டச்சத்தும் மிகுந்தும் குறைந்தும் உள்ளவையாகும். முக்கியமாக பால், தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றையும், அன்றாடம் ஏதாவது ஒரு பழத்தை சாப்பிடுவதையும் பழக்கமாகக் கொள்ள வேண்டும். முக்கியமாக சிறார்களுக்கு பிடித்த மாதிரி விதவிதமான உணவு வகைகளை, முக்கியமாக கீரை, பருப்பு கலந்த சாதம், பழம் ஜூஸ், பால் போன்றவற்றை அவர்களின் பசிக்கேற்ப உட்கொள்ள வைத்து, விளையாட வைத்து அவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க முயல வேண்டும். குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் சளி, ஜலதோசம், ஜுரம் போன்றவற்றிற்கு மருத்துவர் ஆலோசனை பெற்று மருந்து மற்றும் உணவு வகைகளை தர வேண்டும்.
இப்படியாக நமது உணவு வகைகள் என்பது நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளான வைட்டமின்கள், புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, கனிமச்சத்து, இரும்புச்சத்து, இராசயனச் சத்து மற்றும் அமிலச்சத்து போன்றவற்றை இயற்கையே அமையப் பெற்ற அனைத்து காய், கனிகள், தானியங்கள் ஆகியவற்றை அளவோடு சேர்த்துக் சுவைபட சமைத்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். தவறான பழக்கவழக்கங்களான போதை மருந்து உட்கொள்ளுதல், மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவற்றை மேற்கொண்டால் அதன் விளைவு என்ன என்பதைப் பற்றி கூறத் தேவையில்லை.
அதுபோன்றே பாலியல் சம்பந்தமான ஒழுக்கங்களும் நேர்மையாக கடைப்பிடிக்க வேண்டும். எனவே இவற்றையெல்லாமம் எளிதில் பெற்று வாழ்க்கை வாழ்வதற்கே என்று உணருகின்ற பக்குவத்தோடு, நமது அன்றாட உணவு என்பது நம் அனைவரின் உடல் ஆரோக்கியம் மேம்படவும், பாதுகாக்கவும் என இயற்கை உணவை பழக்கப்படுத்திக் கொண்டால் நீண்ட ஆயுளையும் வளமான வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள முடியும்.
நாம் அன்றாடம் உண்ணும் உணவின்போது கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய வழிமுறைகளைப் பற்றிப் பார்ப்போம். இந்த உடல் அழிவதற்கு காரணமாய் விளங்குவது ஐந்தில் நான்கு பங்கு ஆகாரமே என்றும், ஒரு பங்கு அளவுக்கு மீறிய தூக்கமும் பயமும் போன்ற தீய உணர்வுகளும் என்கிறார் வள்ளலார்.
இவ்வுண்மையை காட்டும் வகையில், ஒருவன் உண்ணும் உணவில் மூன்றில் ஒரு பாகம் அவனது உடம்பிலும், மற்ற இரண்டு பாகங்களினால் வியாதி ஏற்பட்டு மருத்துவ செலவிற்குத்தான் உட்படுத்துகின்றன. ‘இறப்பதற்கென்றே உண்ணுகிறார்கள்’ என்ற ஆங்கிலேயப் பழமொழிக்கேற்ப ஒரு மனிதன் பட்டினியால் இறப்பதற்கு முன்பாக நூறு பேர் விருப்பம் போல் உண்டு இறந்துவிடுகிறார்கள். கொழுத்த உணவு, போர்வாளைக் காட்டிலும் அதிகம் பேர்களை கொல்கிறது என்றார் ஒரு மருத்துவ ஆராய்ச்சியாளர். ஒரு வியாதிக்கு எது மூல காரணமாயினும் முறை கேடான உணவுப் பழக்கமே அனைத்து வியாதிகளுக்கும் அடிப்படையாகும்.
உடல் ஆரோக்கியமாக வளர, உணவில் முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டியது ஒருவன் மூன்று வேளைக்குமேல் சாப்பிடக்கூடாது. “ஒரு வேளை உண்பவன் யோகி; இரு வேளை உண்பவன் போகி (இல்லறத்தில் உள்ளவன்); மூன்று வேளை உண்பவன் நோயாளி; நான்கு வேளை உண்பவனின் உயிர் உடலை விட்டு விரைவில் போய்விடும்” என சித்தர் பாடல் கூறுகிறது. ஆனால் இக்காலத்தில் பெரும்பான்மையோர் நான்கு முறை என்ன, ஆறுமுறைகள் கூட உண்கிறார்கள். காலை பெட் காபியோ தேனீரோ, பின காலை டிபன், மதிய சாப்பாட்டிற்கு முன்பு ஏதாவது நொறுக்குத் தீனி, மாலை சிற்றுண்டி, இரவு உணவிற்கு முன்பு மது அருந்துதல், இரவு டின்னர் என இப்படி பல தடவை உண்பவர்களை நாம் இங்கு காணாததா? வசதி படைத்தவர்கள் சத்து மிகுதியான கனி வகைகளான ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, பழரசங்கள், விலை உயர்ந்த பலவிதமான உணவு வகைகள், டானிக்குகள் முதலியவற்றை அருந்தியும் கூட சாதாரண ஏழை மக்களை விட இருதய நோய், இரத்த அழுத்தம், சுகர் கம்பெளையின்ட், கொலஸ்டரால், கொழுபுச் சத்து கூடுதல், புற்று நோய் மற்றும் சிறுநீரகப் பிரச்னை, கூடுதல் எடை என்று எண்ணற்ற வியாதிகளால் அவதிப்படுவதைத் தான் நாம் கண்கூடாகப் பார்க்கிறோமே. இது தவிர போதை வஸ்துக்கள் பாவித்தல், முக்கியமாக புகைப்பிடித்தல் போன்றவையும் காரணமாகும். சத்துகள் நிறைந்த உணவுகளை உண்ணும் போது ஏன் அகால மரணம் அடைகிறார்கள்? இந்தக் கேள்விக்கு விடை அளிக்கின்றன நம் முன்னோர்கள் வகுத்த எளியமுறை உணவுப் பழக்க வழக்கங்கள்.
அதாவது ருசிக்காகச் சாப்பிடக் கூடாத பொருள்களைச் சாப்பிடுவதும், பசிக்காக அளவுக்கு மீறிச் சாப்பிடுவதும் தான் பிணிகளுக்கு காரணம். சாதாரணமாக உண்ட உணவு செரிமானமாவதற்கு 4 மணி நேரம் ஆகிறது. இந்தக் காலத்திற்கு இடையிடையே ஏதாவது பழமோ, சிற்றுண்டியோ அருந்தினால் ஜீரணம் ஆவதற்கு 8 மணி நேரம் 9 மணி நேரம் கூட ஆகிறது என்று வாஷிங்டன் சானிடோரியத்தில் நடத்தப்பட்ட பரிசோதனைகளிலிருந்து அறிந்து இதனால் கல்லீரல், பித்தப்பை போன்ற ஜீரண உறுப்புகள் பாதிக்கப்பட்டு அஜீரணம், வயிற்று வலி, வயிற்றுப்புண் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. இதைத்தான் திருவள்ளுவரும் தனது திருக்குறளில்
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்”
என்று காட்டியுள்ளார் போலும்.
பொதுவாகவே உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும். இதனால் மாவுப் பொருள் செரிமானமாவதற்கு உமிழ் நீர் சுரந்து உணவுடன் உட்செல்லும். சாப்பிடும்போது அவரச அவசரமாக உட்கொள்ளாது, நிதானமும், மனதில் எந்த வித சஞ்சலங்களுக்கும் இடம் கொடுக்காது மகிழ்ச்சியுடன் உணவு அருந்துதல் வேண்டும். இரவு சாப்பாடு என்பதில் மிகவும்.
அக்கறையும் கவனமும் தேவை. மதிய உணவை விட ஒரு பிடி குறைத்தே சாப்பிடுதல் நல்லது. ஆவியில் வேக வைத்த உணவு, சப்பாத்தி போன்றவையும், ஏதாவது ஒரு பழம், ஒரு டம்ளர் பால் போன்றவற்றை அருந்தி விட்டு சுமார் 15 நிமிடங்களாவது உலாவுதல் வேண்டும். அவ்வாறு நடப்பதால் அருந்திய உணவு நன்றாய் ஜீரணம் ஆவதோடு, இரவு நித்திரையும் நன்றாக அமையும்.

உடலையும் மனதையும்..ரெப்ரெஷ் REFRESH செய்யுங்கள்..

கம்ப்யூட்டர் மற்றும் இணையப் பயன்பாட்டில் அவ்வப்போது ரெப்ரெஷ் செய்து டேட்டாவை அப்டேட் செய்கிறோம்.

அதே போல உங்கள் உடலையும் மனதையும் ரெப்ரெஷ் செய்தீர்களா?

இதென்ன புதுசா இருக்கு? இங்கு ரெப்ரெஷ் செய்திட எந்த மெனுவிற்குச் செல்ல வேண்டும் என நினைக்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்.

கம்ப்யூட்டருடன் முறையாகச் செயல்படுகிறீர்களா? என்ன கேள்வி இது என்று எண்ணுகிறீர்களா?

ஆம் நாள் ஒன்றின் பல மணி நேரத்தை கம்ப்யூட்டருடன் தானே கழிக்கின்றீர்கள். வீட்டில் அலுவலகத்தில், கல்வி நிலையங்களில் என எங்கு சென்றாலும் கம்ப்யூட்டரை நம்பித்தான் பல வேலைகளை மேற்கொள்ள வேண்டியதுள்ளது.

காரில், ஸ்கூட்டரில் தினந்தோறும் செல்கையில் அதில் எப்படி அமர வேண்டும் என ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து பலரின் அறிவுரை கேட்டு நடக்கிறோம். ஆனால் கம்ப்யூட்டரின் முன் அமர்ந்து வேலை செய்கையில் நம் உடல்நிலையைக் கவனிப்பதே இல்லை.

இது தொடரும் நாட்களில் நிச்சயம் நமக்கு தீராத உடல் பிரச்னையைக் கொண்டு வந்து சேர்க்கும். எனவே அடிப்படையில் என்னவெல்லாம் நாம் கவனமாகக் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.

நிச்சயம் இதனை உணர்ந்திருப்பீர்கள். கம்ப்யூட்டரில் தொடர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கையில் உடலின் பின் பகுதியில் வலி இருக்கும். இது பஸ்ஸில் வந்ததனால், ஸ்கூட்டரில் சரியாக அமர்ந்து வராததால் என்று ஏதேனும் ஒரு காரணத்தை நமக்கு நாமே சொல்லி சமாதானப்படுத்திக் கொள்வோம். கண்கள் கொள்ளும் பார்வை சற்று வெளிறத் தொடங்கும்.

வயதாயிற்று அதனால் என்று எண்ணுவோமோ ஒழிய கம்ப்யூட்டர் ஸ்கிரீனைப் பார்ப்பதால் என்று எண்ண மாட்டோம்.

சரி, கம்ப்யூட்டரில் பணியாற்றுவதால் தான் இந்த வலிகள், பார்வைக் கோளாறு வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்கு என்ன செய்யலாம் என்று கேட்கிறீர்களா?

இதோ மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் காணலாம்.

1.முதலில் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது உங்கள் கம்ப்யூட்டர் அதன் டேபிளில் எப்படி வைக்கப்பட்டிருக்கிறது என்பது தான்.

முதலில் உங்கள் நாற்காலி. உங்கள் பாதம் இரண்டும் தரையில் தட்டையாகப் பட்டு அமர வேண்டும். உங்கள் முழங்கால்கள் இரண்டும் 90 டிகிரி கோணத்தில் இருக்குமாறு நாற்காலியை அட்ஜஸ்ட் செய்து அமர வேன்டும்.

இந்த நிலையில் உங்கள் தொடைகள் இரண்டும் தரைக்கு இணையாக இருக்க வேண்டும். இல்லையேல் மாற்றி இணையாக இருக்கும்படி நாற்காலையைச் சரி செய்து அமர வேண்டும். உங்களுடைய இடுப்பும் 90 டிகிரி கோணத்தில் மடங்கி நீங்கள் அமர்ந்திருக்க வேண்டும்.

2. அடுத்ததாக உங்கள் மவுஸும் கீ போர்டும் எப்படி செட் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று பார்ப்போம். இவை இரண்டும் உங்கள் முழங்கைகள் இருக்கும் நிலைக்கு நேராக அமைந்திருக்க வேண்டும். சிறிது கீழாகக் கூட இருக்கலாம்.

இதனால் உங்கள் தோள்கள் சற்று தளர்வாக இருக்க முடியும். அடுத்ததாக மானிட்டர். மானிட்டரில் உள்ள வரிகள் உங்கள் கண்களின் நேர் பார்வைக்குச் சற்றுக் கீழாக அமையும்படி வைக்க வேண்டும். எப்போதும் மானிட்டரை நேர் கோணத்தில் பார்க்கும் நிலையில் இருக்க வேண்டும்.

மானிட்டரில் இருந்து குறைந்தது 16 அங்குல தூரத்தில் நீங்கள் இருக்க வேண்டும். உங்கள் தலை நேராக இருக்க வேண்டும். சற்று குனிந்தவாறாகவோ அல்லது நிமிர்ந்த வாறாகவோ இருந்தால் கண் மற்றும் கழுத்துப் பகுதியில் வலி தொடங்கும்.

3. மேலே சொன்னபடி அனைத்தையும் செட் செய்துவிட்டீர்கள். இனி எப்படி பணியாற்றலாம் என்று பார்ப்போம். முதலில் மேலே குறிப்பிட்டுள்ளபடி அமர்ந்திடுங்கள். அந்த நிலையிலேயே உங்களுக்கு வசதியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

மாறாக ஒரு நிலையை எடுத்தால் நிச்சயம் அது எதிர்காலத்தில் பிரச்சினையைத் தரும். கம்ப்யூட்டரில் டைப் செய்கையில் மிக மிகக் குறைந்த சக்தியைப் பயன்படுத்துவதை உறுதி செய்திடுங்கள்.

கீ போர்டினை பெரிய அளவில் முயற்சி எடுத்து இயக்குவதாக இருக்கக் கூடாது. மிகவும் எளிதாகவும் மெலியதாகவும் கீ களை இயக்கப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் கரங்களில் ஏற்படும் வலிகள் முழுமையும் போக்கலாம்.

4. கம்ப்யூட்டரில் தொடந்து செயல்படுவதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறீர்களா? கீ போர்டிலிருந்து எழாமல் வேலை பார்த்தேன் என்று மார் தட்டிக் கொள்கிறீர்களா?

இங்கு தான் தவறு செய்கிறீர்கள். கம்ப்யூட்டரில் செயல்பட்டுக் கொண்டிருக்கையில் அதனை நிறுத்திவைத்து சற்று பிரேக் கொடுக்க வேண்டும்.

எழுந்து வெளியே வந்து நடக்கலாம்; கரங்களை எளிதாகச் சுழற்றிப் பார்க்கலாம். முக்கியமாக உங்கள் விரல்கள் அமைந்திருக்கும் பகுதியில் சிறிய அளவில் மசாஜ் கொடுத்துப் பார்க்கலாம். 30 நிமிடத்திற்கு மேல் தொடர்ந்து வேலை செய்யக் கூடாது என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எனவே எழுந்து வந்து கைகள் மற்றும் கால்களை மடக்கி நீட்டிப் பார்க்கவும். கரங்களை நீட்டுகையில் மூச்சுக் காற்றினை ஆழமாக உள்ளிழுத்து விடவும். அலுவலகத்தில் கிடைக்கும் இடத்தில் ஒரு சுற்று நடந்து வந்து பின் பணியைத் தொடரலாம்.

இது நம் உடம்பிற்கும் சற்று உற்சாகத்தைத் தரும்.

அடுத்ததாகக் கவனம் செலுத்த வேண்டியது கம்ப்யூட்டரைச் சுற்றி அமைந்திருக்கும் வெளிச்சம். மிகவும் பிரகாசமான வெளிச்சம் உங்களைச் சுற்றி இருப்பதனைத் தவிர்க்கவும்.

ஏனென்றால் அது கண்களுக்குக் கெடுதல் விளைவிக்கும்.

ஆனால் நீங்கள் படிப்பதற்குத் தேவையான வெளிச்சம் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

படிப்பதற்குச் சிரமப்படும் வகையில் வெளிச்சம் இருந்தால் அது கண்களுக்குப் பிரச்சினை அளிப்பதுடன் கம்ப்யூட்டர் பணியையும் பாதிக்கும்.

கம்ப்யூட்டரில் மட்டும் தானே வேலை பார்க்கிறோம். எந்த குறிப்பையும் படித்து அதனைப் பயன்படுத்தவில்லையே என்று எண்ணும் சிலர் மானிட்டர் வெளிச்சம் போதும் என்று முடிவு செய்து இருட்டில் அமர்ந்து கம்ப்யூட்டரில் வேலை செய்வார்கள்.

இது முழுக்க முழுக்க தவறு. இருட்டில் நிச்சயம் மானிட்டரின் ஒளி பிரகாசமாக இருக்கும். அதை மட்டுமே கண்கள் பார்த்து பணி செய்வது கூடாது.

தொடர்ந்து கம்ப்யூட்டர் கீ போர்டில் மட்டுமே பணியாற்றும் வகையில் உங்கள் வேலை இருக்கிறதா?

அப்படியானால் உங்கள் விரல்களுக்கு நீங்கள் தனிக் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பணி புரிபவர்களுக்கு விரல்கள் அவ்வப்போது உணர்வற்று போவதை உணர்ந்திருப்பார்கள்.

இதற்கு அடிக்கடி சிறிய உடல் பயிற்சியில் ஈடுபடுவது அவசியம்.

விரல்களை எவ்வளவு நீளம் நீட்ட முடியுமோ அந்த அளவிற்கு நீட்டி அப்படியே பத்து விநாடிகள் வைத்திருக்க வேண்டும்.

பின் விரல்களை மூடி மீண்டும் முன்பு போல நீட்ட வேண்டும். இதே போல உங்கள் தலையை இரண்டு பக்கமும் எவ்வளவு கோணத்தில் திருப்ப முடியுமோ அந்த அளவிற்கு திருப்பி 10 விநாடிகள் வைத்திருந்து பின் மீண்டும் நேராகக் கொண்டு வரும் பயிற்சியை அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும்.

தோள்களில் வலி தொடங்குவதாகத் தெரிந்தால் அதனை ஒரு சுழற்சிக்குக் கொண்டுவரும் வகையில் எதிர் எதிர் திசைகளில் கொண்டு வரும் பயிற்சியை அவ்வப்போது செய்திட வேண்டும்.

இறுதியாக பின் இடுப்பு. தொடர்ந்து அமர்ந்து வேலை செய்பவர்கள் அவ்வப்போது எழுந்து கைகளை இடுப்பின் இருபுறமும் வைத்து இடுப்பை முன்புறமாகவும் தோள்களை பின்புறமாகவும் கொண்டு செல்வது போல பயிற்சி செய்திட வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு முறை நீட்டுகையில் அதே நிலையில் பத்து விநாடிகள் வைத்திருந்து பின் பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும். இதனால் இடுப்பு மட்டுமின்றி முழு உடம்பிற்கும் உற்சாகம் கிடைக்கும்.

வழக்கமான கம்ப்யூட்டர் டிப்ஸ்களுக்கு இடையில் இது என்ன உடற்பயிற்சி டிப்ஸ் என்று யோசிக்கிறீர்களா? உடல் வலி வருகையில் அது கம்ப்யூட்டர் பணியினால் அல்ல என்று எண்ணுபவர்களே ஏராளம்.

ஆனால் அது தான் அடிப்படைக் காரணம் என்று வலி அதிகமான பின்னர் தான் நாம் உணர்கிறோம். எனவே தான் பன்னாட்டு அலுவலகங்களில் கம்ப்யூட்டர்களில் பணி புரிபவர்களுக்கு இது போல உடலையும் மனதையும் அவ்வப்போது உற்சாகப்படுத்த இடமும் வசதிகளும் நேரமும் தருகின்றனர்.

ஏனென்றால் சுவரை வைத்துத்தானே சித்திரம் வரைய முடியும்.

உண்மையில் விட்டமின் மாத்திரைகளால் உடலிற்கு எந்தப் பலனும் இல்லை!


ஒவ்வொரு நாணயத்திற்கும் இரு பக்கங்கள் இருக்கின்றன. அதைப் போல விட்டமின் மாத்திரைகள் என்றவுடன், நம் மக்கள் சத்து மாத்திரை  என்று எண்ணி அதனை நேரந்தவறாமல் உண்டு வருவதை நாம் பார்த்திருக்கின்றோம். அம்மாக்கள் பிள்ளை நோஞ்சானாக இருந்தால் மருத்துவரிடம் சென்று, அய்யா எனது பிள்ளைக்கு ஏதாவது சத்து மாத்திரை அல்லது டானிக் எழுதித் தாருங்கள் என்பார். இவ்வாறாக, இன்று படித்தவர்களிலிருந்து பாமரன் வரை மயங்கிக் கிடக்கும் பொருட்களில் விட்டமின் மாத்திரையும் ஒன்று. உடல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் கூட தன்னை மேலும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால் இதை சாப்பிடத் தயங்குவதில்லை. 

இந்த சத்து மாத்திரைகளை உடல் ஏற்றுக் கொள்கிறதா? 

நமது நாக்கை இறைவன் வெறும் சுவை உணரும் சதையாக மட்டும் படைக்கவில்லை. நாக்கில் படாமல், அதன் உமிழ் நீரில் கலக்காமல் உண்ணக் கூடிய எந்தப் பொருளும் முறையாக ஜீரணிக்கப்படுவதில்லை. இவ்வாறு முறையாக ஜீரணிக்கப்படாத உணவுப் பொருள் எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும் அவற்றை நம் உடல் நிராகரித்து விடுகின்றது. நாக்கில் 9000 க்கு மேற்பட்ட சுவை உணர்வு மொட்டுக்கள் இருக்கின்றன. இவைகள் நாம் உண்ணும் உணவுகளிலிருந்து பெறப்பட்ட சத்துக்களை சுவையின் அடிப்படையில் பிரித்து சம்பந்தப்பட்ட உறுப்புக்கு அனுப்புகிறது. அதன் மூலம் அந்தந்த உறுப்புக்கள் பலமடைகின்றன. உடலும் ஆரோக்கியமாக இருக்கின்றது. இவையெல்லாம் நாம் உணவை மிகவும் நன்றாக மென்று சுவைத்து (உமிழ்நீர் கலந்து) நிதானமாகச் சாப்பிடும் போது தான் நடைபெறும்.
  
உதாரணமாக பாகற்காயை சாப்பிடுகிறோம். அதன் கசப்பு சுவை நாக்கால் அறியப்பட்டு உடன் மூளைக்கு தெரியப்படுத்தப்படுகின்றது. இந்த தகவல் மூளைக்குக் கிடைத்தவுடன் கசப்புச் சுவையுடன் கூடிய சத்து எந்த உறுப்புக்குத் தேவையோ அவைகளுக்குத் தகவல் அனுப்புகிறது. கசப்பு சுவை தேவைப்படும் உடல் உறுப்புக்கள் இதயம், இதய மேல் உறை, சிறுகுடல் ஆகியவைகளாகும். எனவே இந்த தகவல் வந்ததும் இந்த உறுப்புக்கள் தயார் நிலையில் இருக்கின்றன. பாகற்காயை நாம் மென்று சுவைத்து சாப்பிட்ட அதன் சத்தை உடனடியாக அவை கிரகித்துக் கொள்கின்றன.

இது போன்றே இனிப்பு சுவையானது வயிறு மற்றும் மண்ணீரலுக்கும் – உவர்ப்பு சுவை சிறுநீரகம், சிறுநீர்ப்பைக்கும் – புளிப்பு சுவை பித்தப்பை, கல்லீரலுக்கும் – கார சுவை நுரையீரல், பெருங்குடலுக்கும் பயன்படுகிறது. மேற்குறிப்பிட்ட உறுப்புகளின் கீழ் செயல்படுபவையே மற்ற உறுப்புக்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சாதாரணமாக நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுப் பொருளிலும் பல வகை சுவைகளும் கலந்து தான் இருக்கின்றன. ஒரு பிடி வெறும் சோற்றை வாயில் இட்டு நன்றாக மென்று பாருங்கள். முதலில் லேசான இனிப்பு சுவை தெரியும். பிறகு சிறிது உவர்ப்பு சுவை தெரியும். நன்றாக மென்று முடித்த பிறகு சப்பென்று ஒரு சுவையும் தெரியாது இருக்கும். இது போன்றே ஒவ்வொரு உணவுப் பொருளிலும் பல வகை சுவைகள் கலந்து இருக்கிறது. சில உணவு பொருட்களில் சில சுவை அதிகமாக இருக்கும். உதாரணமாக பாகற்காயில் கசப்பு சுவையும், பழம், தேன் ஆகியவற்றில் இனிப்பு சுவையும் அதிகமாக இருக்கும்.

நாம் உணவை நன்றாக நிதானமாக சுவைத்துச் சாப்பிடும்போது தான் நாக்கால் சுவை உணரப்பட்டு மூளைக்கு தகவல் அனுப்பப்பட்டு அந்த சுவை சம்பந்தப்பட்ட உறுப்புகளுக்கு சிக்னல் அனுப்பப்பட்டு அவைகள் அந்த சத்தைப் பெறுகின்றன. அப்படியில்லாமல் விரைவாக சாப்பிடும் போது நாக்கின் உணர்வு மொட்டுக்களில் முழுமையாக அந்த உணவு படுவதில்லை. உமிழ்நீரிலும் கலப்பதில்லை. இதனால் நாக்கால் சுவைகளை தெளிவாகப் பிரித்து மூளைக்கு தகவல் தெரிவிக்க முடிவதில்லை. சரியான சிக்னல் கிடைக்காத காரணத்தினால் அந்த உணவின் சத்துக்கள் அனைத்து உறுப்புகளினாலும் நிராகரிக்கப்பட்டு, இறுதியில் வேறு வழியில்லாமல், கிட்னியைச் சென்று அடைகின்றன. இதன் விளைவு தான் உடல் பெருத்துப் போவது. மேலும் உடலின் பல உறுப்புகள் பலம் இழந்து பல வியாதிகள் உருவாகின்றது. அதிகமாக சாப்பிட்டும் அவைகளை முறையாக சாப்பிடாத காரணத்தால் உடல் பெருக்கின்றது. பல நோய்கள் உருவாகின்றது.

விட்டமின் மாத்திரைகளை நாம் எப்படி சாப்பிடுகின்றோம். இப்போது யோசனை செய்து பாருங்கள்?

வாயில் போட்டு நாக்கில் கூடப் படாமல் விழுங்கி விடுகின்றோம். இந்த மாத்திரைகளை நம் உடல் உறுப்புக்கள் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. 

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். விழுங்காமல் மென்று தின்றால் அந்த சத்துக்களை உடல் கிரகித்துக் கொள்ளுமாவென்று? 

நம் உடல் அமைப்பு இரசாயன கலவைகளையும், அதனால் உண்டான செயற்கைச் சுவைகளையும் ஏற்றுக் கொள்வதில்லை. இறைவன் மனிதனுக்கு தேவையானதை அழகாக படைத்திருக்கின்றான். உதாரணமாக ஆரஞ்சுப் பழம். சிறு விதையிலிருந்து வளர்ந்து குறிப்பிட்ட காலத்தில் சுவையில்லா மண்ணிலிருந்து சுவையுள்ள ஆரஞ்சுப் பழத்தைத் தருகின்றது. அதன் தோலை உரித்து, அதன் சுளைகளை வாயில் இட்டு சுவைத்துச் சாப்பிடும் போது தான் அதன் உண்மையான சத்துக்கள் கிடைக்கின்றன. விட்டமின் சி மாத்திரைகளாக சாப்பிடும் போது அவைகள் மண்ணுக்குக் கூடப் பயன்படாமல் போகின்றன.

ஆரோக்கியமான இரண்டு நபர்களில் ஒருவரிடம் ஆரஞ்சுப் பழங்களை மட்டும் கொடுத்து ஒரு 3 நாள்கள் ஒரு தனியறையில் வைப்போம். மற்றவரிடம் விட்டமின் சி மாத்திரையைக் கொடுத்து அவரையும் தனியறையில் வைப்போம். இதே போல் ஒருவரிடம் சாதாரண ரொட்டிகளை மட்டும் கொடுப்போம். மற்றவரிடம் ரொட்டியை விட பல மடங்கு சத்துள்ளதாக கருதப்படும் மல்டிவிட்டமின் மாத்திரைகளைக் கொடுப்போம். நான்காவது நாள் யார் ஆரோக்கியமாக வெளியே வருவார் என்றால், ஆரஞ்சு சாப்பிட்டவரும், சாதாரண ரொட்டி சாப்பிட்டவரும் ஆரோக்கியமாகவும், விட்டமின் சி யையும், மல்ட்டி விட்டமின் சாப்பிட்டவர்கள் ஆரோக்கியத்தை இழந்த நிலையிலும் வெளியே வருவார்கள். 

விட்டமின் மாத்திரைகள் தேவையான பலத்தைக் கொடுக்கும் என்றால், இராணுவ வீரர்கள் தங்களது முதுகில் ஏன் சோத்து மூட்டைகளைக் கட்டிக் கொண்டு செல்ல வேண்டும்? இந்த சோத்து மூட்டைகளுக்குப் பதிலாக எடை குறைந்த எளிதில் கொண்டு செல்லக் கூடிய இந்த சத்து மாத்திரைகளைச் சிரமமின்றி கொண்டு செல்ல முடியுமே என ஏன் சிந்திப்பதில்லை?

தினமும் ஒவ்வொரு வேளைச் சாப்பாட்டிற்குப் பதிலாக நம்மால் இந்த மாத்திரைகளை உட்கொள்ள முடியுமா? 

இது சாத்தியமென்றால் விவசாயி வானத்தையும், பூமியையும் மாறி மாறிப் பார்த்து, நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தப் பாடுபட்டு, உணவுப் பொருட்களை விளைவிக்க வேண்டிய தேவையில்லையே! பஞ்சத்தால் வாடும் மக்களுக்கு விட்டமின் சத்து மாத்திரைகளை வழங்கி விட்டுப் போகலாமே!

இதற்கெல்லாம் பதில்கள் எங்கும் கிடையாது. விட்டமின்களையும் தாதுப் பொருட்களையும் நாம் உண்ணும் இயற்கையான உணவுகளிலிருந்து பெற்றுக் கொள்ளும் தன்மையுடனேயே நம் உடல் உறுப்புக்கள் அமையப் பெற்றிருக்கின்றன. செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட விட்டமின்களை உடல் ஏற்றுக் கொள்வதில்லை. அவைகளை புறக்கணித்து வெளியேதள்ளி விடுகின்றன. இப்படி ஒரு வலுவான ஆற்றல் நம் உடலுக்கு இருக்கின்றது. செயற்கை சத்துக்களை அந்நியப் பொருட்களாகக் கருதி கழிவுகளாக நினைத்து, நமது உடல் நிராகரித்து விடுகின்றது.

நிர்ப்பந்தமாக இவைகளை உடலில் செலுத்தும் போது உடல் உறுப்புக்கள் பழுதடைய ஆரம்பிக்கின்றன. விட்டமின் மாத்திரைகளை மட்டுமல்ல, இதே போன்ற அணுகு முறையில் தயாரிக்கப்படும் சத்து மிக்க பானங்களுக்கான கலவைப் பொடிகள், மற்றும் குழந்தை உணவுகள் என்று பெயரிட்டு விற்கப்படும் அனைத்து உணவுப் பொருட்களும் இந்த வகையைச் சார்ந்தவையே.




இரசாயன மருந்துகளும் அவற்றை இயற்கையாக பெரும் முறைகளும்


விட்டமின் ஏ (ரெட்டினால்) - மீன் எண்ணெய், (காட்லீவர் ஆயில் மற்றும் சார்க் லிவர் ஆயில்) கொழுப்புள்ள கடல் மீன்கள், ஈரல், வெண்ணெய், முட்டை, பால், பச்சை நிற கீரைகள், கேரட், மாம்பழம்


விட்டமின் டீ (கால்சிடெரால்) - கொழுப்புள்ள மீன்கள், மீன் எண்ணெய், ஈரல், முட்டை, பால், பால் பெருட்கள், வெண்ணெய், மாலை சூரிய ஒளி


விட்டமின் ஈ (டோகோபெரால்) - தாவர எண்ணெய், கோதுமை எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, பச்சைநிறக்கீரைகள், காய்கறிகள், ஆட்டு ஆண் விதைகள், கிட்னி


விட்டமின் கே (ஆன்டி ஹெமரேஜ்) - புதிய பச்சை நிறக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், தக்காளி, சோயா எண்ணெய்


விட்டமின் பி 1 (தயாமின்) - கைகுத்தல் அரிசி, தவிடு, பருப்புவகைகள், கோதுமை, எள், நல்லெண்ணெய், வேர்கடலை, இறைச்சி, பால், முட்டை, ஈரல், ஈஸ்ட்டு


விட்டமின் பி 2 (ரிபோபிளேவின்) - ஈரல், இறைச்சி, முட்டை, பால், கீரைகள், பருப்பு வகைகள், தானியங்கள்


விட்டமின் பி 3 (நியாசின்) - ஈரல், இறைச்சி, முட்டை, பால், மீன், இரால், பருப்பு வகைகள், வேர்கடலை, சோளம், கோதுமை


விட்டமின் பி 6 (பைரிடாக்ஸின்) - ஈரல், இறைச்சி, மீன், தானியங்கள் (பட்டாணி கடலை)


விட்டமின் பி 9 (போலிக் ஆசிட்) - ஈரல், முட்டை, கீரைகள்


விட்டமின் பி 12 (சயனகாபாலமைன்) - ஈரல், இறைச்சி, முட்டை, பால் (அசைவ உணவுப் பொருட்களில் மட்டுமே பி 12 கிடைக்கின்றன), தாவரங்களில் இவை இல்லை


விட்டமின் சி (அஸ்கார்பிக் ஆசிட்) - நெல்லிக்காய், கொய்யாப்பழம், எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி, பருப்புவகைகள், முட்டைகோஸ், முருங்கைக்கீரை, கத்திரிக்காய், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, காலிபிளவர், அமர்நாத்காய், பச்சைநிற கீரைவகைகள், காய்கறிகள், முளை வந்த பட்டாணி


கால்சியம் - பால், மோர், பால்கட்டி, முட்டை மஞ்சள் கரு, முளைக்கீரை, வெந்தயக் கீரை, பருப்பு வகைள், கிழங்குகள், எள், கேழ்வரகு, மக்காச்சோளம், கோதுமை, கைகுத்தல் அரிசி, இறைச்சி


இரும்புச் சத்து - பேரீச்சம்பழம், அரைக்கீரை, தண்டுக்கீரை, இறைச்சி, கல்லீரல், முட்டை மஞ்சள் கரு, வெல்லம், பச்சை காய்கறிகள், சுண்டைக்காய், உருளைக்கிழங்கு, கருவேப்பிலை


அயோடின் - மீன் எண்ணெய், கடல் மீன்கள், கீரைகள், பழங்கள்


குளோரின் - உப்பு, பச்சை கீரைகள், தக்காளி, அன்னாசி பழம், வாழைப்பழம், பேரிச்சம்பழம்.


பாஸ்பரஸ் - பால், மோர், முட்டை, வெள்ளரிக்காய், பசலைக்கீரை, கேரட், முள்ளங்கி, இறைச்சி, மீன், கைகுத்தல் அரிசி, எண்ணெய்வித்துக்கள்


மக்னீசியம் - பீன்ஸ், பட்டாணி, பருப்புகள். சிறுதானியங்கள்


பொட்டாசியம் - வாழைப்பழம், உருளைக்கிழங்கு, கீரைகள்


சோடியம் - இது பழங்களைத் தவிர மற்ற எல்லா உணவுகளிலும் கிடைக்கின்றன


குரோமியம், செலினியம், மாங்கனீஸ் - எல்லா வகை உணவுகளிலும் குறைவாக இருக்கிறது.


சத்து மாத்திரைகளை எழுதி கொடுப்பவர்கள், இயற்கையான முறையில் இந்த சத்துக்களை பெற பல வழிகள் இருப்பதை சொல்லுவதில்லை. எனவே, சாதாரணமாக இயற்கையான உணவுகளை உண்டு இன்பமாக வாழக் கற்றுக் கொள்வோம். கற்றுக் கொடுப்போம்.


இந்த பதிவை Printable Format இல் நகல் எடுக்க விரும்பினாலோ நண்பர்களிடம் Pdf file ஆக பகிர்ந்துகொள்ள விரும்பினாலோ இந்த https://goo.gl/72B6u7 முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பணமே பிரதானம் என எண்ணுபவர்கள் தங்கள் தினசரி வாழ்க்கை முறையில் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ள முயற்சிப்பதில்லை. அவர்கள் ஆரோக்கியத்தை விலை கொடுத்து வாங்க முடியும் எனக் கருதுகின்றனர். உண்மையில் நோய் பற்றிய பயத்தையும், கிருமிகளைப் பற்றிய பயத்தையும், செயற்கையாக உருவாக்கிய நோய்களான நீரிழிவு (சர்க்கரை), ரத்த அழுத்தம், தைராய்டு... போன்றவற்றை மட்டுமே பெற முடியும். பணத்தால் ஆரோக்கியத்தை வாங்க முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

நீங்கள் ஆரோக்கியமாக வாழ விரும்பினால் இன்று முதல் உங்களுக்கு பிடித்தமான உணவுகளை மட்டும் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நடக்கும் என்கிற உண்மையை உணர்ந்த காரணத்தால் தான் நல்ல விஷயங்களை அதிகம் பகிர்கிறேன். எனவே நல்லதே கேளுங்கள் நல்லதே நினையுங்கள் நல்லதே பேசுங்கள் நல்லதே செய்யுங்கள் நல்லதே நடக்கும். அதற்கு எனது வாழ்கையே சாட்சி. 

இதுவரை நான் எழுதிய / வெளியிட்ட அனைத்து கட்டுரைகளையும், ஆடியோ பதிவுகளையும் படியுங்கள் / கேளுங்கள். நிச்சயம் அவை உங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன். அவற்றை காண / பதிவிறக்கம் செய்துகொள்ள இந்த Google Drive லிங்கிற்கு செல்லவும் https://goo.gl/GBKHAb


மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு






இப்படிக்கு,
விழிப்புணர்வு வினீத்