Real Indian Body

Real Indian Body 

Obesity X-Ray Photo
The length of digestive system is six times of your height





தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா?

ஆண்களாயினும், பெண்களாயினும் அழகிற்கு அழகு சேர்ப்பது அவர்களுடைய தலைக்கேசம். 
இன்றைய நவீன யுகத்தில் இளம் வயதிலேயே தலைமுடி கொட்டி உதிர்வதையும், இளநரை 
விழுவதையும் இப் பிரச்சினையின் காரணமாக பலவித விளம்பரங்களை கண்டு மயங்கி 
பலவித செயற்கை ரசாயன எண்ணெய்களையும். ஷாம்பு, ஹேர்டை போன்றவற்றை 
உபயோகப்படுத்தி மேலும் தங்கள் தலைமுடியை பாழ்படுத்திக் கொள்வதை காண்கிறோம். 
நாம் உண்ணும் உணவின் மூலமாகவும், உணவுப்பழக்க முறையினாலும், இயற்கையில் 
கிடைக்கும் சில பொருட்களை பயன்படுத்துவதாலும் இப்பிரச்சினையை அறவே தடுக்க முடியும். 

தலைமுடி உதிர்வதற்கான காரணங்கள் 

தலைமுடி கொட்டுவதற்கு தலை பராமரிப்பு மட்டும் காரணமில்லை, வயிற்றில் அமிலத்தன்மை 
அதிகரிப்பதாலும், மலக்கட்டு பிரச்சினை இருந்தாலும், எதற்கு எடுத்தாலும் கோபப்பட்டு டென்சன் 
ஆவதாலும் கூட தலைமுடி கொட்டும். உணவில் கால்சியம் சத்து குறைந்தாலும் இக்குறை 
உண்டாகும். இக்குறையை தீர்க்க நாம் டென்சனை தவிர்க்கவேண்டும். அமிலத்தன்மை 
வயிற்றில் ஏற்படாத வண்ணம் காலம் தவறாமல் உண்ணவேண்டும். இளநீர் அதிகம் குடிப்பதால் 
கால்சியம் சத்து கிடைக்கும், உடலில் அமிலத்தன்மையை தவிர்க்க ரசாயன பொருட்கள் கலந்து 
செய்யப்பட்ட உணவு வகைகள், குளிர்பானங்கள், சாஸ் வகைகள், செயற்கை நிறங்கள் 
சேர்க்கப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். 

சிலர் தலைக்கு தினமும் அதிகமாக எண்ணெய் தடவிக்கொண்டால் முடி அடர்த்தியாக வளரும் 
என்ற எண்ணத்தில் பலவிதமான செயற்கை எண்ணெயை பயன்படுத்துகிறார்கள். ஆனால் 
உண்மையில் தலைக்கு எண்ணெயை அதிகம் தடவக்கூடாது. நம் உடலில் தோலில் உள்ள 
துவாரங்களில் எண்ணெய் சுரப்புவதுண்டு அதுபோல் தலையில் உள்ள மயிர்க்கால்களிலும் 
எண்ணெய் சுரப்புவதுண்டு. அதுவே தலைமுடிக்கு போதுமானது என்று மருத்துவர்கள் 
கூறுகிறார்கள். இவ்வாறு அதிகம் எண்ணெய் அப்பிக் கொண்டால் அழுக்கும், பிசுக்கும் சேர்ந்து 
பொடுகு உண்டாகும். பொடுகு அதிகம் ஆகும் போது, சீக்கிரம் நரையும் உண்டாகும். 

வறண்ட சருமம் உள்ளவர்கள் மட்டும் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் இரண்டையும் 
சமஅளவு சேர்த்து லேசாக சுடவைத்து அதை மயிர்கால்களில் படும்படி மசாஜ் செய்தபின் இரண்டு 
மணி நேரம் ஊறவைத்து இயற்கையான சீகைக்காய் பொடி கொண்டு தண்ணீரில் அலசினால் 
பொடுகு அறவே அகன்று இள நரையும் விழாது. 

தலைமுடிக்கு ஊட்டம் அளிக்க... 

தலை முடிக்கு ஊட்டம் அளிப்பதற்கு முன்பாக அது செழுமையாக இருக்க உள்ளுக்கு ஆகாரம் 
சாப்பிட வேண்டும். கேசத்திற்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். எனவே முருங்கைக்கீரை, 
முளைக்கீரை, பேரீச்சம்பழம் போன்றவற்றை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். சில சமயங்களில்
நம் தலைமுடியை சரிவர வாருவது கூட கிடையாது. இதனால் கூடு கூடாக தலைமுடி கொட்ட 
ஆரம்பிக்கும். உடல் சூடு, வேண்டாத சிந்தனை, அநாவசிய டென்சன் இவற்றை நீக்க வேண்டும். 
இதை போக்க வெந்தயத்தை ஊறவைத்து அறைத்து வடிகட்டி அதன் சாறை எடுத்து தலையில் 
தடவி ஒரு மணி நேரம் ஊறவைத்து பின் தலை குளிக்க வேண்டும். இதே முறையில் செம்பருத்தி 
இலையை பயன்படுத்தியும் செய்யலாம். 

வியர்வை தங்கக்கூடாது 

வியர்வை அதிகம் தலையில் தங்கவிடுவதால், அதன் புழுக்கத்தில் பேன் உண்டாகும். இதைப்
போக்க வேப்ப எண்ணெய் சுடவைத்து மயிர்கால்களில் தடவி ஒரு மணி நேரம் ஊறவைத்து 
தலையை நல்ல சீகக்காய் கொண்டு அலச வேண்டும். இவ்வாறு தொடர்ந்து மூன்று மாதங்கள் 
செய்து வந்தால் பேன் தொல்லை அணுகாது. 

தலைமுடி கொட்டுவதற்கு நாம் உபயோகிக்கும் துண்டும் காரணமாகும். துண்டில் அழுக்கு 
சேரவிடாமல் நல்ல சோப்பினால் அலசப்பட்டு பராமரிக்க வேண்டும். 

மண் பானைக்கு இயற்கையிலேயே குளிரவைக்கும் சக்தி உண்டு. வேர்களுக்கு அழியாத இயற்கைச்
சத்து உண்டு. எனவே வெட்டி வேர், விளாமிச்சை வேர், நன்னாரி வேர் இவற்றை நன்கு அலசி, 
வெள்ளைத் துணியில் கட்டியில் மண்பானை தண்ணீரில் போட்டு தண்ணீரில் போட்டு அந்நீரை 
குடித்துவந்தால் பலவீனப்பட்ட தலைமுடியின் வேர்கால்களுக்கு நல்ல பலம் கிடைக்கும். நேந்திரம் 
பழத்தில் வைட்டமின் ஈ சக்தியும், பி12-ம் இருப்பதால் அதை உட்கொண்டால் மயிர்கால்கள் உறுதி 
அடைவதுடன் தலைமுடியின் மினு மினுப்பும் கூடுகிறது. பாதாம்பருப்பு, அக்ரூட், அத்திப்பழம் 
இதில் கிடைக்கும் ஏதாவது ஒன்றை ஐந்து எண்ணிக்கைகள் சாப்பிட்டு, ஒரு டம்பளர் காரட் சாறும் 
குடித்தால் தலைமுடி நன்கு வளர்வதோடு, பொலிவோடும் மின்னும். 

மேற்கூறிய இயற்கை முறையிலேயே நாம் உண்ணும் உணவில் சிலவற்றை சேர்த்துக் கொண்டால், 
பணம் விரயம்படுத்தும் கண்டவிதமான செயற்கை எண்ணெய்களையும், ஹேர் டைகளையும், 
ஷாம்புகளையும் தேடிப்போக வேண்டிய அவசியம் இல்லாமல்; நம்முடைய தலைமுடியை நன்கு 
பராமரித்து இயற்கையான கறுப்பு நிறத்தோடு பொலிவோடு வைத்து கொள்ளலாம்.

நமது அன்றாட உணவும் காய்கறிகளின் தன்மையும்

நாம் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரோட்டீன், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் ஆகியவைகள் உள்ளன. கார்போஹைட்ரேட் இயங்கும் சக்தியை தருகிறது. புரோட்டீன் உடலை வளர்க்கிறது. கொழுப்பு உடல் மாற்றத்தை தருகிறது. ஒரு மனிதன் தன் எடையை தக்க வைத்துக்கொள்ள குறைந்தது 30-35 கலோரி உணவை எடுத்துக் கொள்ளவேண்டும். எடை கூட இன்னும் நிறைய உணவு உட்கொள்ளவேண்டும். ஒரு மனிதன் தினமும் அவனுடைய உடல் எடையில் கிலோவிற்கு 30 மி.லி. தண்ணீர் பருகவேண்டும். அதே அளவு சிறுநீர் வெளியேர வேண்டும். இனிப்பு,உப்பு, துவர்ப்பு உள்ள பொருட்கள் மனிதனின் எடையை கூட்டும். கசப்பு, காரம், புளிப்பு ஆகிய பொருட்கள் மனிதனின் எடையை குறைக்கும்.
வாதம் உள்ளவர்கள் இனிப்பு, உப்பு, புளிப்பு ஆகிய பொருட்களை உண்ணலாம். பித்தம் உள்ளவர்கள் இனிப்பு, கசப்பு,துவர்ப்பு ஆகிய உணவுகளை உண்ணலாம். கபம் உள்ளவர்கள் கசப்பு, துவர்ப்பு, காரம் ஆகிய உணவுகளை உண்ணலாம். கசப்பு, புளிப்பு, காரம்; உடைய பொருள்கள் வாயுவை உண்டாக்கும். பயிறு வகைகளை 2 ஆக உடைத்தாலோ அல்லது பிரித்தாலோ இரைப்பையில் வாயு உண்டாகும். ஆகவே பயிறு வகைகளை தண்ணீரில் சில மணி நேரம் ஊர வைத்து சமைத்தல் வாயு உண்டாகாது.
 காரமுடைய பொருட்கள் உடலில் அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.
 ஒரு மாதத்திற்கு 500 மிலிக்கு எண்ணையை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
 ஒரு வாரத்திற்கு 2 முட்டைகளுக்கு மேல் உண்ணக்கூடாது. முட்டையில் உள்ள மஞ்சள் கருவில் அதிக கொழுப்புச் சத்து உள்ளது. இந்த கொழுப்பு 8 தேக்கரண்டி வெண்ணைக்குச் சமமானது.
உப்பு :
ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 2.5 கிராம் அளவு உப்பு சேர்த்துக் கொள்வது நல்லது. இதற்கு மேல் சேர்த்துக் கொண்டால் அதிக இரத்த அழுத்தத்தை உண்டாக்கும். ஊறுகாய், அப்பளம், சட்னி ஆகியவைகளில் உப்பு அதிகமாக உள்ளது. இதனால் இரத்த அழுத்தம் அதிகமாகும்.
ஜீரணம் :
மாவுப் பொருட்களின் ஜீரணம் வாயிலிருந்து ஆரம்பிக்கிறது. மாவுச்சத்து ஜீரணமடைய சுண்ணாம்புச் சத்து ஊடகமாக உள்ளது. மாவுப்பொருட்களை நன்கு மென்று சாப்பிடவேண்டும். இல்லையென்றால் சரியாக ஜீரணம் ஆகாது. புரதம் இரைப்பையில் ஜீரணம் அடைய ஆரம்பிக்கிறது. புரதசத்து ஜீரணமடைய அமிலம் ஊடகமாக உள்ளது.
பூண்டு :
1. பூண்டில் ஆஸ்பிரின் குணம் உள்ளது. இதனால் இதயக்கோளாறு ஏற்படுவதை தவிர்க்கலாம்.
2. பூண்டை உண்டால் உடம்பில் கொழுப்பு கரையும்.
3. பூண்டு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
4. இதய தசை மற்றும் இரத்தக்குழாய் தசைகளையும் வலுப்படுத்தும்.
5. பூண்டு நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும்.
6. குழந்தை பெற்ற பெண்கள் தினமும் இரவில் பாலில் சேர்த்து காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் பெருகும், வயிற்று உப்புசமும் வராது.
7. தசை வலியிருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்து கட்டினால் வலி குறையும்.
8. பூண்டின் தோலை சேகரித்து சாம்பிராணிக்கு பதிலாக பயன்படுத்தலாம். அதன் புகைக்கு   கொசு, , மற்றும் கரப்பான் அண்டாமல் இருக்கும்.
இஞ்சி :
இஞ்சியில் கால்ஷியம், வைட்டமின் ஏ, பாஸ்பரஸ் கார்போ ஹைட்ரேட், நிகோடினிக் ஆசிட் ஆகிய சத்துக்கள் உள்ளன. இஞ்சி ஜீரணத்திற்கு மிகவும் நல்லது. வயிற்றுப்புண் உள்ளவர்கள் இஞ்சியைத் தவிர்க்கவேண்டும். பித்தத்தை குணமாக்கும்.
புதினா :
புதினா கீரை இரத்த சுத்திகரிப்புக்குச் சிறந்த மருந்தாகும். தினமும் உணவில் தொடர்ந்து சேர்த்து வந்தால் முகத்தில் பொலிவு உண்டாக்கி, கரும்புள்ளி மறைகிறது. பருக்கள் வருவது குறைகிறது. முகத்திலுள்ள எண்ணை பசை மறைகிறது. வயிற்று உப்புசம், வயிற்றுப் பிரச்சனைகள் குறையும்.
வெங்காயம் :
வெங்காயம் ஜீரணத்திற்கு நல்லது. வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். அப்ப்ஹ்ற்ங் டழ்ர்ல்ஹ்ற்ங் ஈண்ள்ன்ப்ல்ட்ண்க்ங் என்ற எண்ணை இருப்பதால் வெங்காயம் காரத்தன்மையோடு உள்ளது. இதயத்திற்கு சக்தியை தருகிறது. நரை முடியைத் தடுக்கும், தலையில் வழுக்கை விழாமல் காக்கும். எலும்புக்கு வலிமை அளிக்கும். பித்தநோய், கண் நோய், வாத நோய்கள் குணமாகும்.
 கத்தரிக்காய், பீட்ரூட், ஊதா முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொண்டால் லங் கேன்சர் வராது. பீன்ஸ், பாகற்காய், கீரை வகைகளில் உணவில் சேர்த்துக் கொண்டால் எல்லாவகையான கேன்ஸர் நோய்களும் அண்டாது.
 ஆரஞ்சு நிற காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்து வந்தால் கேன்சர் வராமல்  தடுக்கலாம்.
 நார் சத்து நிறைந்த தானியங்கள், பருப்பு வகைகள் போன்றவைகளை உண்டு வந்தால், நம்  உடலிலுள்ள கழிவுப் பொருட்கள் முறையாக வெளியேரும்.
 தக்காளி, சிவப்பு நிறமுள்ள ஸ்ட்ராபெர்ரி போன்றவைகளை உண்டால் கண்பார்வை நன்கு தெரியும்.
கத்தரிக்காய் :
கத்தரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. நரம்புகளுக்கு நல்லது. சளி இருமலுக்கு நல்லது. ஆஸ்த்துமா நோயாளிகளுக்கு நல்லது. தோல் வியாதி உள்ளவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்தவர்கள் கத்தரிக்காயை தவிர்ப்பது நல்லது.
முருங்கைக்காய் :
முருங்கைக்காயில் இரும்புச்சத்து, கொழுப்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி உள்ளது. நரம்புகளுக்கு நல்லது. முருங்கைக்காயை குழந்தைகள் உண்டால் வயிற்றில் கிருமிகள் அண்டாது. பெரியவர்களுக்கு வாயுக்கோளாரை ஏற்படுத்தும்.
வெண்டைக்காய் :
Acetylated, Galeturomic என்ற அமிலங்கள் வெண்டைக்காய்க்கு வழுவழுப்பை ஏற்படுத்துகிறது. பாதி கரையும் நார்ச்சத்து,பாதி கரையாத நார்ச்சத்து வெண்டைக்காயில் உள்ளது. கரையும் நார்ச்சத்து கொலெஸ்டெராலை குறைக்கும். கரையாத நார்ச்சத்து குடலை பாதுகாத்து, குடல் புற்றுநோய் வராமல் காக்கும்.
மாங்காய் :
மாங்காயில் வைட்டமின் ஏ, நார்ச்சத்துக்கள் நிறைய உள்ளன. தோல் நோய் உள்ளவர்கள் மாங்காயை தவிர்ப்பது நல்லது. மாங்காயை நிறைய உண்டால் உடலில் சூட்டை உண்டாக்கும். மாங்காய்க்கு பசியைத் தூண்டும் தன்மை உள்ளது.
அவரக்காய் :
அவரக்காயில் நிறைய புரதம் உள்ளது. இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் உள்ளது. நார்ச்சத்து அதிகம் உள்ளது. மலச்சிக்கலை நீக்கும்.
அத்திக்காய் :
அத்திக்காயில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, சுண்ணாம்புச் சத்து ஆகியவைகள் உள்ளன. அத்திக்காயை உணவில் சேர்த்து வந்தால் மூல நோய் குணமாகும்.
பீர்க்கங்காய் :
பீர்க்கங்காயில் நீர்ச்சத்து நிறைய உள்ளது. தாது உப்புக்களும் உள்ளன. உடல் உஷ்ணத்தை தணிக்கும். இரவு உணவில் பீர்க்கங்காயை தவிர்ப்பது நல்லது.
கோவக்காய் :
கோவக்காயில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. வாய் மற்றும் நாக்கிலுள்ள புண்களை குணப்படுத்தும்.
புடலங்காய் :
புடலங்காயில் வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, கந்தகச்சத்து மற்றும் நிறைய புரதம் உள்ளது. தலை வலி, சளி மற்றும் ஆஸ்த்துமா நோய் உள்ளவர்கள் புடலங்காயை தவிர்ப்பது நல்லது.
பாகற்காய் :
பாகற்காயில் பாலிபெப்டைட் என்ற இன்சுலின் உள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. பாகற்காயை நிறைய உண்டால் ஆண்மைக்குறைவு ஏற்படும். பாகற்காய் வயிற்றிலுள்ள கிருமிகளை அழிக்கும். மஞ்சள் காமாலை நோய்க்கு பாகற்காய் ஜøஸ் சாப்பிடலாம்.
சுரைக்காய் :
சுரைக்காயில் நீர்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து, புரதம் ஆகியவைகள் உள்ளன. உடல் உஷ்ணத்தை தணிக்கும். ஆண்மை சக்தி கூடும். இதயத்திற்க நல்லது.
பூசனிக்காய் :
பூசனிக்காயில் கொழுப்பு மற்றும் புரதச் சத்து உள்ளது. நரம்பு மற்றும் வயிற்றுப்புண்களுக்கு நல்லது.
கொத்தவரைக்காய் :
கொத்தவரைக்காயில் நார்ச்சத்து உள்ளது. வாயுத்தொல்லையை உண்டாக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.

வாழைக்காய் :

வாழைக்காயில் வைட்டமின் இ மற்றும் கொழுப்புச் சத்து உள்ளது. மலச்சிக்கல் மற்றும் வாயுத் தொல்லையை உண்டாக்கும்.
வெள்ளரிக்காய் :
வெள்ளரிக்காயில் பொட்டாஷியம் மற்றும் வைட்டமின் ஏ உள்ளது. நன்கு சிறுநீர் கழியும், உடலுக்கு குளிச்சியைத் தரும்.
சுண்டைக்காய் :
சுண்டைக்காயில் வைட்டமின் சி உள்ளது. உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றில் கிருமிகள் வராது.
பலாக்காய் :
பலாக்காயில் சுண்ணாம்புச் சத்து உள்ளது. அஜீரண கோளாறு உள்ளவர்கள் பலாக்காயை தவிர்க்கலாம். செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும்.
களாக்காய் :
களாக்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி உள்ளது. நல்ல பசி உண்டாகும். கண் பார்வை கூடும்.
நெல்லிக்காய் :
நெல்லிக்காயில் கால்சியம், செல்லுலோஸ், வைட்டமின் சி, கார்போஹைட்ரேட், இரும்புச் சத்து, பாஸ்பரஸ்,நிகோடினிக் ஆசிட் ஆகிய சத்துக்கள் உள்ளன. சர்க்கரை நோயாளிகள் மற்றும் பிளட் பிரஷர் உள்ளவர்கள் நெல்லிக்காயை உண்ணலாம். நெல்லிக்காயை உண்டால் இளமை கூடும். தலைமுடி நன்கு வளரும்.
காரட் :
காரட்டில் வைட்டமின் ஏ, தாது உப்புக்கள், கார்போஹைட்ரேட், மற்றும் மெலோனிசைட்ஸ் என்ற நிறமி அணுக்கள் உள்ளன. காரட் கண் பார்வைக்கு நல்லது.
பீன்ஸ் :
பீன்ஸில் வைட்டமின் ஏ, கார்போ ஹைட்ரேட், புரதம் மற்றும் தாது உப்புக்கள் உள்ளன. கண் பார்வை தெளிவு பெறும். வாயு, பித்தம் நீங்கும். சருமம் பழபழப்பாகும்.
பீட்ரூட் :
பீட்ரூட்டில் குளூகோஸ் உள்ளது. பீட்ரூட் உண்டால் இரத்தசோகை நீங்கும்.
வெள்ளை முள்ளங்கி :
வெள்ளை முள்ளங்கியில் நார்ச்சத்து, பொட்டாஷியம், கால்ஷியம், இரும்புச்சத்து மற்றும் சத்து உள்ளது. சிறுநீரக கல் அடைப்பு குணமாகும். உடலுக்கு குளுர்ச்சியைத் தரும்.
சிவப்பு முள்ளங்கி :
சிவப்பு முள்ளங்கியில் வைட்டமின் சி, கால்ஷியம், கந்தக சத்துக்கள் உள்ளன. சிறுநீரை வெளியேற்றும். அசிடிட்டி உள்ளவர்கள் சிவப்பு முள்ளங்கியை உண்டால் குணமாகும்.
காலி ஃபிளவர் :
காலிஃபிளவரில் இரும்புச்சத்து, சோடியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம், வைட்டமின் ஏ, வைட்டமின் இ, மெக்னீஷியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. மலச்சிக்கல் வராமல் இருக்கும். உடல் மெலியும்.
முட்டைக்கோஸ் :
முட்டைக்கோசில் வைட்டமின் ஏ, வைட்டமின் இ, சோடியம், இரும்பு, கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன. தாது பலம் கூடும், சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.
நார்த்தங்காய் :
நார்த்தங்காயில் சிட்ரஸ் ஆசிட் உள்ளது. வயிற்றுப்புண், அல்சர் உள்ளவர்கள் நார்த்தங்காயை தவிர்க்க வேண்டும். வாயுத் தொல்லையை நீக்கும்.

முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி?

 
பருவ வயதில் “ஆன்ட்ரோஜன்” என்ற இயக்குநீர் (Androgen Harmone) ஆண், பெண் இருபாலருக்கும் சுரக்க தொடங்கும். சில சமயங்களில் ஆன்ட்ரோஜன் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது முகப்பரு உண்டாகிறது.
எப்படி என்பதை இப்போது பார்ப்போம்:
சருமத்தில் கொழுப்புச் சுரப்பிகள் (Sebaceous Glands) உள்ளது, அவை “சீபம்” (Sebum) என்ற எண்ணைப்பசை போன்ற ஒரு பொருளை வெளியேற்றுகிறது. இவை மயிர்க்கால்களில் தங்கி சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கப் பயன்படுகின்றன. பருவ வயதில் சுரக்கும் அதீத ஆன்ட்ரோஜன் இந்த எண்ணைப்பசையை மிக அதிகமாக சுரக்க வைக்கின்றன. அப்போது அவை மயிர்க்கால்களில் வழக்கத்தைவிட அதிக அலவில் படிந்து, திரண்டு, ரவை போன்ற முகப்பருக்கலை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில் பாக்டீரியா கிருமிகள் பருக்களில் தொற்றிக்கொள்ள, பருக்கள் பெரிதாக வீங்கிக் கொள்கின்றன.
முகப்பருவைப் போக்கவும்,ன் தடுக்கவும் கீழ்க்காணும் வழிமுறைகள் நிச்சயம் உதவும்.
1. முகத்தை சோப்புப் போட்டு வெதுவெதுப்பான தண்ணீரால் அடிக்கடி கழுவுங்கள்.
2. முகத்தில் பவுடர் பூசுவதையும், அழகு சாதன களிம்புகள் உபயோகப்படுத்துவதையும் தவிருங்கள்.
3. சுத்தமான காற்றும், சூரிய ஒளியும் முகத்திற்கு தேவை.
4. கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளையும், நெய், வெண்ணெய் கேக், ஐஸ் கிரீம், சாக்லெட், பாலாடை போன்றவற்றையும் ஒதுக்குங்கள்.
5. கீரை மற்றும் பச்சை காய்கறிகளை நிறைய சாப்பிடுங்கள்.
6. தினமும் இரண்டு லிட்டருக்கு குறையாமல் தண்ணீர் குடியுங்கள்.
7. மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
8. பருக்களை கிள்ளுவதோ, அதலுள் இருக்கும் ரவை போன்ற பொருளை வெளியேற்ற அழுத்துவதோ கூடாது.
9. பருக்களில் சீழ் வைத்தால் “டெட்ராசைக்ளின்” (Tetracycline) மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைக்கும் கால அளவுக்கு தொடர்ந்து சாப்பிடுங்கள்.
10. பருக்களின் மேல் பூசுவதற்கு பலவித களிம்புகள் கிடைக்கின்றன. அவற்றை தேர்வு செய்வதற்கு மருத்துவரின் உதவியை நாடுங்கள்.

அகத்தின் அழகு நகத்தில் தெரியும்

நகத்தினுடைய நிறம், வடிவம், நயம் இவற்றை வைத்து நம் ஆரோக்கியத்தையே கணிக்க முடியும் என்கிறார்கள். அனுபவம் உள்ள மருத்துவர்கள் நகத்தைப் பார்த்தே ‘இன்ன நோய்’ என்று சொல்லிவிடுவார்கள்.
நுண்மையான, நரம்பு கூட்டமைப்பிலான நமது விரல் நுனிகளை ஊறுபடாத வண்ணம் காப்பது நகங்களே. நாம் நுட்பமான பொருட்களை கையாளவும், நமது தொடு உணர்வுக்கும் நகம் பெரிதும் உதவுகிறது. நம் உடம்பிலுள்ள ரோமத்தில் போலவே நகத்திலும், ‘புரோட்டீன் _ கெராட்டீன்’ என்ற ரசாயனப் பொருள் காணப்படுகிறது.நகங்கள் முளைக்கும்போது மிருதுவான செல் (cell) களால் உருவாகிறது. பிற்பாடு வளரும்போது கடினத்தன்மை அடைகிறது. நகத்தின் அடிப்புறம் உள்ள சருமத்தின் புற அடுக்கு க்யுடிகிள் (cuticle)எனப்படும். இது அழுக்கு, நுண்ணியக் கிருமிகள் போன்றவை உள்ளே ஊடுருவாமல் தடுத்துவைக்கிறது. நகத்தின் அடியில் உள்ள சருமத்தில் ரத்தம் அதிகமாய் ‘சப்ளை’ ஆவதாலும், தந்துகிகளாலும் இது இளஞ்சிவப்பு நிறத்தைக் கொண்டிருக்கும்.
நகத்தின் நீரகத்தன்மை 10% என்பதால் எலும்புகளை, பற்களைப் போலவே இதுவும் ஒரு கடினத் திசு ஆகும்.இதன் வளர்ச்சி வாரத்திற்கு 0.5_1.2 மி.மீயாக இருக்கும். நகம் கோடையில் விரைவாக வளரும். பகலைவிட இரவில் கூடுதல் வளர்ச்சி கொண்டிருக்கிறது. நீங்கள் வலது கைப்பழக்கம் உடையவராயின் இடது கை நகத்தைவிட வலதுகை நகம் துரிதமாய் வளரும். நகத்தின் இயல்பான வளர்ச்சிக்கு சத்துள்ள உணவு தேவை. போஷாக்கின்மை அதன் வளர்ச்சியை தாமதப்படுத்தும். ‘ப்யூலைன்’ (Beauline) என்று சொல்லக்கூடிய பள்ளங்கள் நகத்தின் குறுக்கு வசத்தில் விழும் சத்தின்மை காரணமாக அது முறிவுத்தன்மை அடையவும், சீவலாய் உதிரவும் வாய்ப்பு உண்டு.பெண்கள் உபயோகிக்கிற நகப்பூச்சு நகங்களை மேலும் கடினப்படுத்திவிடும். ஆனால் ‘பாலிஷ் ரிமூவர்’ உபயோகிப்பதால் நகங்கள் முறிந்து போகவும் கூடும்.
சத்துக் குறைவான நகங்கள் மஞ்சள் நிறம் அடையும். நீரிழிவு, இருதய நோய் உள்ளவர்களின் நகங்கள் மஞ்சலாக இருக்கும். முற்றிய ‘கேஸ்’களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நகப் படுகை (Nail Bed) நீலமாக மாறும்.சிலருடைய நகங்கள் இயல்புக்கு மாறான தோற்றம் கொண்டிருக்கும். அவை நோய்களின் அறிகுறியை மருத்துவருக்கு புலப்படுத்தும்.
1. க்ளப்பிங் (Clubbing): நகங்கள் மேற்புறத்தில் அதீத வளைவுடன், விரல் நுனியில் சுருண்டும் காணப்பட்டால் அவை அல்ஸர், டி.பி.எம் பிஸிமா போன்ற நோய்களின் வரவைக் குறிப்பதாகும்.
2. ப்ளு_மூன்ஸ் (Blue Moones): நகத்தின் அடிப்புறம் நீலமாக காணப்பட்டால் அது கால், விரல், பாத இசிவு மற்றும் இருதய நோய் குறித்தும் எச்சரிப்பதாகும். சில நேரங்களில் கீல் வாதங்களுக்கும் இந்த அறிகுறி பொருந்தும். 3. ‘ஸ்பூன் நெய்ல்ஸ்’ (Spoon Nails): தட்டையாக அல்லது கரண்டி போல் தோற்றமளிக்கும் நகங்கள். இரும்புச் சத்து குறைவில் வரும். அனீமியா, தைராய்டு கோளாறு மற்றும் சிபிலிஸ் நோய் தொடர்புகளைச் சுட்டும்.4. ‘ப்யூ’ஸ் லைன்கள் (Beau’s Lines): கடுமையான நோய் அல்லது சத்துப் பற்றாக்குறை காரணமாக நகத்தின் படுக்கை வாட்டில் பள்ளக்கோடுகள் விழும். தட்டம்மை (விமீணீsறீமீs), புட்டாலம்மை (விuனீஜீs) போன்றவற்றால் நகத்தின் வளர்ச்சி தற்காலிகமாக பாதிக்கப்படும்.
5. ‘டெர்ரி’ஸ் (Terry’s): நகத்தின் அடிப்புற சருமம் ஒரேயடியாக வெளுத்துப் போகலாம். அது ஈரலில் வரும் ‘சிவீக்ஷீக்ஷீலீஷீsவீs’ஐ குறிக்கும்.
6. ‘லிண்ட்ஸே’ (Lindsay): நகத்தின் முனைப் பக்க பாதி இளஞ்சிவப்பு அல்லது பழுப்பாக இருக்கும். க்யூடிகிள் சார்ந்த பாதியும் வெண்மையாய் காணப்படும். இது நாள்பட்ட சிறுநீரகக் கோளாறின் அறிகுறியாகும்.7. ‘எல்லோ_நெய்ல் ஸிண்ட்ரம்’ (Yellow Nail Syndrome): நக வளர்ச்சி குன்றி கடினமாகும். மஞ்சள் அல்லது பசுமஞ்சள் நிறம் காணும். இது சுவாசக் கோளாறு பற்றிய அறிகுறி.8. ‘ஸ்ப்ளிண்டர் ஹெமரேஜஸ்’ (Splinter Haemorrhages): ரேகை மாதிரி ஓடும் செந்நிறக் கீற்றுகள் தந்துகிகளில் ஏற்படும் இரத்தக் கசிவையும் ப்ளட்_ப்ரஷ்ஷரையும் ‘Psoriasis’ என்கிற சரும நோயையும் பற்றி நமக்கு எச்சரிப்பதாகும்.
9. ‘பிட்டிங்_இன்_ரோஸ்’ (PitinginRows): நகம் முழுக்க விழும் குழிகள் சீக்கிரமே முடி உதிருவதற்கான ‘சிக்னல்’. ஸோ… உங்கள் நகங்களை ஊன்றி கவனியுங்கள். அவை அதையே சொல்ல முயல்கின்றன.
நகப் பராமரிப்பு: நலம் தரும் சுத்திகரிப்பு! ‘வீக்’கான நகங்கள் என்றாலே சுலபத்தில் முறிந்து போகிற (Brittle) நகங்கள் என்றுதான் நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உரிதல், கிழிதல், பிளவுபடுதல் என்பன நகத்தின் தன்மைகள். சுற்றுப்புறச் சூழலில் காணப்படும் வறட்சி, குளுமை காரணமாக நகம் தன்னுடைய ஈரத்தன்மை இழக்கும். இதனாலும் முறிவுத்தன்மை மோசமாகும். இந்த இழப்பை ஈடுகட்ட, படுக்கப்போகும் போது சற்று வெதுவெதுப்பான நீரில் நகத்தை, ஒரு 15 நிமிடங்கள் முழுவதுமாய் நனைத்துக் கொள்ளலாம். பிறகு ‘மாய்சரைஸர்’ பயன்படுத்தலாம். நமது கேசத்தைப் போலவே நகங்களும் பரம்பரையை ஒட்டியே அமைகின்றன. ஸ்ட்ராங்கான சோப், டிடர்ஜன்ட் வகைகளைத் தவிர்க்க வேண்டும். அடிக்கடி கைகழுவிக் கொண்டிருக்கக் கூடாது. அதனால், ‘நெய்ல்_ப்ளேட்’டுகள் சுருங்கிப் போகும் அல்லது விரிந்துவிடும்.
நாம் முதுமை அடையும்போது நகங்கள் மெலிந்து, உடையக் கூடியதாகிவிடும். நடுத்தர வயதினரின் நகங்கள் வளர்ச்சி குன்றும், ஆனைவிட பெண்Êணுக்கு …. வருஷங்கள் முன்னதாகவே நகமாற்றம் ஏற்பட்டு விடுகிறது. நகத்தினால் எதையும் சுரண்டவோ, கீறவோ கூடாது.சில பெண்கள் போலி நகங்கள் (காஸ்மெடிக் ஸ்டோரில் விற்கப்படும் Acrylic Nails) பொருத்திக் கொள்வார்கள். நீண்ட உபயோகத்தில் அவை ஒரிஜினல் நகங்கள் பாழடிந்துவிடும்.நக வளர்ச்சிக்கு என்று தனியாக சிகிச்சை எதுவும் இல்லை. ஆனால் தினமும் ‘மைனாக்ஸிடில்’ (Minoxidill) – கேச வளர்ச்சிக்கு உபயோகிப்பது_பூசினால் ஆரோக்கியமான நகத்தைப் பெறமுடியும் என்கிறது அமெரிக்க கொலம்பியா மருத்துவமனையின் ஆராய்ச்சி மையம்.

கடு‌கி‌ன் மரு‌த்துவ‌த் த‌ன்மை

கடுகு ‌சிறு‌த்தாலு‌ம் கார‌ம் குறையாது எ‌ன்பது பழமொ‌ழி. இ‌த்தகைய ‌சிற‌ப்பு ‌மி‌க்க கடு‌கி‌‌ற்கு ஏராளமான மரு‌த்துவ குண‌ங்க‌ள் உ‌ள்ளன.



பொதுவாக நா‌ம் கடுகை சமைய‌லி‌ல் தா‌ளி‌ப்பத‌ற்கு பய‌ன்படு‌த்து‌கிறோ‌ம். அதாவது, நா‌ம் சமை‌க்கு‌ம் சமைய‌‌ல் ‌ஜீரணமாக அடி‌ப்படையான கடுகை முத‌லி‌ல் போடு‌கிறோ‌ம். ஏ‌ன் எ‌ன்றா‌ல் கடுகு ‌ஜீரண‌த்‌‌தி‌ற்கு உதவு‌கிறது.



தினமு‌ம் காலை‌யி‌ல் வெறு‌ம் வ‌யி‌ற்‌றி‌ல் கடுகு, ‌மிளகு, உ‌ப்பு மூ‌ன்றையு‌ம் ஒரே அளவு சே‌ர்‌த்து சா‌ப்‌பி‌ட்டு‌வி‌ட்டு அத‌ன்‌பிறகு வெ‌ந்‌நீ‌ர் குடி‌க்க வே‌ண்டு‌ம். இ‌ப்படி செ‌ய்வதா‌ல் ‌பி‌த்த‌ம், கப‌ம் போ‌ன்ற‌ற்றா‌ல் ஏ‌ற்படு‌ம் உட‌ல் உபாதைக‌ள் ‌நீ‌ங்கு‌ம்.



விஷ‌ம், பூ‌ச்‌சி மரு‌ந்து, தூ‌க்க மா‌த்‌திரை போ‌ன்றவ‌ற்றை சா‌ப்‌பி‌ட்டவ‌ர்களு‌க்கு‌ம், 2 ‌கிரா‌ம் கடுகை ‌நீ‌ர்‌வி‌ட்டு அரை‌த்து ‌நீ‌ரி‌ல் கல‌க்‌கி உ‌ட்கொ‌ள்ள‌க் கொடு‌த்தா‌ல் உடனடியாக வா‌ந்‌தி எடு‌த்து ‌விஷ‌ம் வெ‌ளியேறு‌ம்.



தே‌னி‌ல் கடுகை அரை‌த்து‌ உ‌ட்கொ‌ள்ள‌க் கொடு‌க்க இரும‌ல், கப‌ம், ஆ‌ஸ்துமா குணமாகு‌ம்.


நலம் தரும்... கடுகு


             ம் முன்னோர்கள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளையே சாப்பிட்டு வந்தார்கள். அந்த உணவோடு மருந்துகளையும் உண்டு நோயின்றி நூறாண்டு வாழ்ந்தனர். ஒவ்வொருவீட்டிலும் சமையல் அறையிலுள்ள அஞ்சறைப் பெட்டியில் அற்புத மருந்துகள் இடம்பெற்றிருக்கும்.


உணவோடு சேர்ந்து நம் உடலைக் காக்கும் அற்புத கூட்டணிதான் இந்த அஞ்சறைப் பெட்டி பொக்கிஷங்கள். 


கடந்த இதழ்களில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள சீரகம், சோம்பு, வெந்தயம் பற்றி அறிந்தோம். இந்த இதழில் கடுகின் மகிமையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.


கடுகில் இரண்டு வகை உண்டு. 1) கருங்கடுகு, 


2) வெண்கடுகு,


இதில் நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு என மூன்று வகைகள் உண்டு.


கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது பழமொழி. இதிலிருந்து இதன் காரத்தன்மையை அறிந்து கொள்ளலாம்.


இது சிறு செடி வகையைச் சார்ந்தது. இந்தியாவில் பல இடங்களில் பயிராகிறது. வெண்கடுகை விட கருங்கடுகில் காரம் மிகுந்து காணப்படும். இதன் மேல்தோல் கறுப்பாக இருக்கும்.

செரிமானத்தைத் தூண்ட


செரிமானத்தைத் தூண்டும் சக்தி கடுகுக்கு உண்டு. தினமும் உணவில் கடுகை சேர்த்துக் கொள்வது நல்லது. கடுகை நன்கு அரைத்து பொடியாக்கி அதனுடன் மிளகு பொடி, உப்பு சேர்த்து காலையில் ஒரு ஸ்பூன், அளவு எடுத்து வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி அஜீரணக் கோளாறைப் போக்கும்.


இருமல் நீங்க


ஒரு சிலருக்கு இருமும் போது தலைப்பகுதி முழுவதும் வலி உண்டாகும். இந்த இருமல் நாளுக்கு நாள் அதிகரித்து தலைச்சுற்றலை உண்டாக்கும். கடுகுப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இந்த இருமல் நீங்குவதுடன் தலைவலியுடன் உண்டாகும் இருமல், மூக்கில் நீர் வடிதல், அதிக உமிழ்நீர் சுரத்தல் போன்றவை குறையும்.


வயிற்றுவலி குணமாக


அஜீரணக் கோளாறால் வாய்வுக்கள் சீற்றமடைந்து வயிற்றில் வலியை உண்டாக்கும். இந்த வயிற்று வலி நீங்க கடுகை பொடி செய்து வெந்நீரில் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும்.


நஞ்சு உண்டவர்களுக்கு


சிலர் தெரிந்தோ தெரியாமலோ நஞ்சை உண்டிருந்தால் அவர்களுக்கு முதலில் கடுகை அரைத்து நீரில் கலந்து கொடுத்தால் வாந்தி உண்டாகும் இந்த வாந்தியுடன் உள்ளிருக்கும் நஞ்சானது வெளியேறும். சில வகையான காணாக்கடிகளுக்கு கடிபட்ட இடத்தில் கடுகு அரைத்து தடவினால் விஷம் நீங்கும்.


கடுகுத்தூள், அரிசிமாவு இவைகளை சரிபாதியாக எடுத்து வெந்நீர் கலந்து களிபோல் கிளறி அதை இருமல், இரைப்பு இருப்பவர்கள் மார்பு, தொண்டைப் பகுதிகளில் தடவி வந்தால் இருமல் இளைப்பு நீங்கும். தலைவலி உள்ளவர்கள் நெற்றியில் பற்றுப் போடலாம்.


சிறுநீர் பெருக்கி


கடுகை அரைத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு பிரியும்.


கடுகு எண்ணெய்


கடுகிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை வட இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். கொழுப்பு சத்து அதிகமில்லாத இந்த எண்ணெய் இதய நோயை தடுக்கும்.


விக்கல் நீங்க


வெந்நீர் - 130 மி.லி. எடுத்து அதில் கடுகுத்தூள் - 8 கிராம் ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் விக்கல் நீங்கும்.


இப்போது புரிகிறதா..! கடுகின் மகத்துவம் !!

கண் (Eye)

விண்ணுக்கும் மண்ணுக்கும் பாலம் அமைத்து .002 நொடியில் படம் பிடித்து காட்டிடும் ஓர் அற்புத உறுப்பு தான் கண். இனிமையான காட்சிகளை நமக்களித்து நம்மை இளமையாக வைத்திருக்கும் இனிய உறுப்பு தான் கண்.

சுமார் 14 கோடி அனுக்கள் விழித் திரையில் வேலை செய்கின்றன. 137 மில்லியன் ஒளி உணர் கம்பு செல்கள் (ROD CELLS) கருப்பு வெள்ளை பார்வையை ஈர்க்கின்றது. 7 மில்லியன் கோன் செல்கள் (CONE CELLS) பல நிரங்களின் பார்வையை ஈர்க்கின்றது. கண்களின் அமைப்பைப் பற்றியும் இயக்கத்தைப் பற்றியும் பல பக்கங்கள எழுதலாம். அதுவல்ல இத் தொடரின் நோக்கம். கண்களில் ஏற்படும் நோய்களுக்கு காரணம் கண்கள் அல்ல என்பதே.

கண்களுக்கு வெளியிலிருந்து விபத்துக்களால் ஏற்படும் பிரச்சினையை தவிர மற்றபடி கண்களில் உண்டாகும் அணைத்து நோய்களுக்கும் காரனம் கண்கள் அல்ல. கண் நோய்கள் அனைத்தும் நோயின் பிரதிபலிப்பே. நோயின் மூலம் கண்கள் கிடையாது.

கண்ணின் ஓரமும் மூக்கின் ஆரம்பமும் சேரும் இடத்தில் சிறுநீர் பையின் (URINARY BLADER) சக்தி ஓட்ட பாதை ஆரம்பமாகின்றது.

கண்ணின் கரு விழிக்கும் நேர் கீழ் பகுதியில் எலும்பின் சிறு பள்ளம் போன்ற பகுதியில் வயிறு (STOMACH) சக்தி ஓட்ட பாதை ஆரம்பமாகின்றது.

கண்ணின் மறு பக்க (காது பக்கம்) ஓரத்தில் பித்த பையின் (GALL BLADER) சக்தி ஓட்ட பாதை ஆரம்பமாகின்றது.

கண்ணின் புருவத்தின் வெளி பக்க ஓரத்தில் மூவெப்ப மண்டல (TRIPLE WARMER) சக்தி பாதை கடந்து செல்கின்றது.

கண்ணின் செயல் திறனில் இவ்வுறுப்புகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது. இவ்வுறப்புகளில் பிரச்சினை ஏற்படும் போது அவை கண்களில் நோயாக பிரதிபலிக்கின்றது.

கண் நோய்களுக்கு நாம் சிகிச்சை அளிக்கும் போது சிறுநீர் பை (URINARY BLADER), பித்தப்பை (GALL BLADER), வயிறு (STOMACH) மற்றும் மூவெப்ப மண்டலம் (TRIPLE WARMER) இவைகளின் இயக்க நிலை மாறுபாட்டை சமநிலைப் படுத்த வேண்டும்.அப்படி செய்வதன் மூலமே கண் நோய்களை நாம் நிரந்தரமாக முறையாக தீர்க்க முடியும்.

இவைகளை எதையும் கருத்தில் கொள்ளாமல் கண்ணுக்கு நாம் சிகிச்சையளிப்போமானால் அது தற்காலிக சுகத்தை தந்து நோயை உள் பக்கமாக வளரவே செய்யும். நவீன கால மருந்துகளும் மாத்திரைகளும் தற்காலிக தீர்வையே தருகின்றன. அதனால் தான் சாதாரன பவர் கண்ணாடி போட்டவர்கள் கூட போகப் போக பவரை அதிகமாக்கிக் கொண்டே போகின்றார்கள். நல்ல மருத்துவம் பவரை குறைத்துக் கொண்டு அல்லவா வந்திருக்க வேண்டும்? அல்லது உள்ளதையாவது நிலையாக வைத்திருக்க வேண்டும்! ஏன் இல்லை.

உதாரனமாக வயிறுக்கும் கண்ணுக்கும் உள்ள தொடர்பை பார்ப்போம். வயிற்றில் ஏற்படும் பாதிப்புகளால் கண்ணழற்சி நோய், விழி வெண்படலத்தில் சிவப்பேறிய இரத்த நாளங்கள் தெரிதல், கண்ணிலிருந்து வெண்ணிற கழிவுகள் அதிகம் வெளியேறுதல், கண்ணில் நீர் வடிதல், கிட்டப் பார்வை நரம்பு இளைத்து சுருங்குதல், கீழ் இமை துடித்தல் போன்ற நோய்கள் உருவாகின்றன. இவைகளை சரியாக நிரந்தரமாக சரி செய்ய வேண்டுமானால் வயிற்றின் சக்தி ஓட்ட பாதையில் சிகிச்சை அளிக்க வேண்டும். அதை விட்டு விட்டு காரணம் தெரியாமல் கண்ணை தோண்டிக் கொண்டிருப்பதும் அதில் மருந்துகளை அள்ளிக் கொட்டுவதும் எந்த அளவிற்கு அறிவுக்கு அப்பாற்பட்டது என்பதை நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்.

உங்களுடைய இரண்டு கண்களையும் மூடி லேசாக சிறிது நேரம் கசக்குங்கள், பிறகு கண்களை திறந்து பாருங்கள். உங்களுக்கு இப்போது நட்சத்திரங்கள் பறப்பது போன்றும் மின் மினி பச்சிகள் பறப்பது போன்றும் தெரிந்தால் உங்கள் கண்கள் பெருங்குடலால் பாதிக்கப்பட்டிருக்கின்றது என்று அர்த்தம். இதற்கு பெருங்குடலை சரி செய்ய வேண்டுமே ஒழிய கண்களை அல்ல. கண் சிகிச்சைக்கு பரணமாக பெருங்குடலின் (LARGE INTESTINE) இயக்கமும் சரி செய்யப்பட வேண்டும்.

சிறிது வெளிச்சத்தைப் பார்த்தாலும் கண் கூசுகின்றதா?வெயிலில் வெளியில் பார்க்க மிகவும் சிரமப்படுகின்றீர்களா? கண்ணில் எரிச்சலுடன் நீர் வடிகின்றதா?அப்படியானால் சரி செய்யப்பட வேண்டியது பித்தப்பையை (GALL BLADER) கண்களை அல்ல.

கிட்டப் பார்வை, தூரப் பார்வை, கண்ணில் அரிப்பு, நீர் வடிதல், சிவந்து போதல் இவைகளை சரி செய்ய நாம் சரி செய்ய வேண்டியது சிறுநீர் பையின் (URINARY BLADER) பாதையை கண்களை அல்ல.

இவ்வாறு உறுப்புக்கள் ஒவ்வொன்றும் கண்ணோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன. இந்த உறுப்புக்களில் ஏற்படும் இயக்க நிலை மாறுபாடுகள் தான் கண்களில் நோயாக பிரதிபலிக்கின்றது.

கண்களில் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் நோயல்ல.உறுப்புகளில் ஏற்படும் நோயின் பிரதிபலிப்புகள். நோயின் மூல காரணம் கண்கள் அல்ல. நோயின் மூலம் உடல் உறுப்புகளில் (வயிறு, பித்தப்பை, சிறுநீர் பை, பெருங்குடல்) தான் பதுங்கியும் தேங்கியும் கிடக்கின்றன. எனவே கண் நோய்களுக்கு மூல காரணம் கண்கள் கிடையாது.

கண்களை ஒளி படைத்த கண்ணாக மாற்றி அமைக்க நாம் கருத்தில் கொண்டு இயக்க குறைவை சரி செய்ய வேண்டிய உறுப்புகள் வயிறு(STOMACH) பித்தப்பை(GALL BLADER) சிறுநீர்பை (URINARY BLADER) பெருங்குடல்(LARGE INTESTINE). இவ்வாறு சிகிச்சையளிப்போமேயானால் நாம் பகலில் நட்சத்திரத்தைப் பார்க்கும் கண்களைக் கொண்டவர்களாக உருவாக முடியும் இன்ஷா அல்லாஹ். இன்று சீனாவில் கண்ணாடி அனிந்தவர்கள் மிக மிக சொற்பமே. அதற்கு காரணம் அவர்கள் பெறும் தெளிவான சிகிச்சையே. தெளிவான முiறான சிகிச்சையின் மூலமே நாம் அழகான கண்களை பாதுகாக்க முடியும். இல்லை என்றால் ஊமை விழிகளாக உருமாறிவிடும்.

நல்ல உடல்நலம்

நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!
இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும் கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தினமும் பாதாம்பருப்பு 25 கிராம் சாப்பிட வேண்டும். நீண்ட நேரம் உழைக்க வேண்டியவர்களுக்கு நல்ல கொலஸ்டிரால் தேவை. வேலையும் கவலையும் அதிகம் எனில், அப்போது பாதாம் பருப்புகளையே கொஞ்ச நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். இதனால் வைட்டமினும் தாராளமாகக் கிடைக்கும்.
சோம்பலை உதற முடியும்!
காலையில் எழுந்தது முதல் சுறுசுறுப்பாக விழிப்புடன் ஒருவர் பணி புரியவேண்டும் என்றால், அவர் உடலில் இரும்புச்சத்து போதுமான அளவில் இருக்க வேண்டும். இரும்புச் சத்து குறையும்போது உடல் பலவீனம் அடையும். இரும்புச் சத்துதான் ஆக்ஸிஜனை சுமந்து சென்று எல்லா உறுப்புகளுக்கும் விநியோகித்து உடலுக்குச் சக்தியைத் தருகிறது. முக்கியமாக மூளையில் டோப்பாமைன் என்ற இரசாயனப் பொருள் சுரந்தால், மனதும் உடலும் விழிப்புணர்வுடன் செயல்படுகின்றன. இதற்கும் இரும்புச் சத்துதான் தேவை. மாதவிலக்கின் போது பெண்கள் உடலில் இரும்புச்சத்து குறைவதால் மிகவும் களைப்புடன் இருப்பார்கள். உடற்பயிற்சியின் போதும் இந்தச் சத்து உடலில் குறைகிறது. ஐந்து உலர்ந்த திராட்சைப் பழம், ஆரஞ்சுச் சாறு, ஒரு வாழைப்பழம் முதலியவற்றை தினமும் சாப்பிட்டால் போதும். இதன் மூலம் உடலில் இரும்புச் சத்து எளிதாகக் கிகிக்கப்படும். உடலும் மனமும் படு சுறுசுறுப்பாக நாள் முழுவதும் இருக்கும்.
சக்தி வாய்ந்த உணவு மருந்துகள்
சோர்வை அகற்றும் பழம்!
நான்கு பேரீச்சம் பழங்களை எடுத்து நன்கு கழுவி அரை டம்ளர் தண்ணீரில் போட்டுவிட்டு இரவில் படுக்கைக்குச் செல்லுங்கள். காலையில் கொட்டைகளை நீக்கிவிட்டு ஊறிய பேரீச்சம் பழங்களையும் அந்தத் தண்ணீரையும் அருந்துங்கள். வாரம் இரு தினங்களில் இது போல் சாப்பிட்டு வந்தால், சோம்பல் எட்டியே பார்க்காது. மாணவ மாணவிகளுக்கு இது ஒரு சுறுசுறுப்பு டானிக்!
தலைவலியை முன்கூட்டியே தடுக்க முடியும்!
நமது உடலின் லைசின் என்ற அமினோ அமிலம் குறைந்தால், தலைவலிக்கு வரவேற்புக் கொடுத்த மாதிரிதான். லைசின் குறையாமல் பாதுகாத்து வருகிறது வைட்டமின் சி. இதைத் தடுக்க தினமும் இந்த வைட்டமின் மாத்திரையை டாக்டர் யோசனைப்படி சாப்பிடலாம். இதைவிடச் சிறப்பு சி வைட்டமின் அதிகமுள்ள உணவு வகைகளைச் சாப்பிட்டு வந்தால் தலைவலி வராது. அந்த உணவுகள், பட்டாணி, சோளம், உளுத்தம் பருப்பு, முருங்கைக்கீரை மற்றும் காய், முட்டைக் கோஸ், பாகற்காய், நாட்டு நெல்லிக்காய், கொய்யாப்பழம், ஆரஞ்சுச்சாறு, தேங்காய், தேங்காய்ப்பால், ஆட்டு ஈரல், பால்கோவா, நல்ல பசும்பால் ஆகியவற்றில் போதுமான அளவு வைட்டமின் ‘சி’ உள்ளது.
கருத்தரிக்க வழி!
மூலிகைக் கடைகளில் அமுக்கிரா பவுடர் (இதுதான் உண்மையில் வாயாக்ராவாக உருவெடுத்துள்ளது) கிடைக்கிறது. மாதவிலக்கு முடிந்த மறுநாளிலிருந்து தினமும் இரவில் பாலுடன் இந்தப் பவுடரில் ஆறு கிராம் பவுடரைச் சேர்த்து அருந்த வேண்டும். இதன் மூலம் கருத்தரிக்க வாய்ப்பு ஏற்படலாம்.
மேலும், சில பெண்களுக்கு அபார்ஷனைக் கூடத் தடுத்துவிடலாம். இதற்கு ஃபோலிக் அமிலம் தேவை. அதற்காகக் கீரை வகைகளில் ஒன்றை பச்சைப் பருப்புடன் சேர்த்துக் சமைத்து பிரசவம் முடியும் வரை, தினமும் ஒரு வேளை சாப்பிட்டு வரவும். இதனால் பிரசவத்தில் தொந்தரவு இராது. ஆரோக்கியமான குழந்தையாகவும் பிறக்கும். கருத்தரிப்புத் தாமதமானால் மேற்கண்ட முறைகளுடன் தினமும் கணவனும் மனைவியும் 200 சர்வதேச அலகு வைட்டமின் ஈ மாத்திரையை சாப்பிட வேண்டும்.
ஜலதோஷம் தொடரக்கூடாது!
தொடர்ந்து ஜலதோஷம், மூக்கில் சளி என்றால் தொற்று நோய்க்கிருமிகள் உங்கள் மூக்கு வழியாக உடலுக்குள் பயணித்துக் கொண்டிருக்கின்றன என்று பொருள். எனவே, இதைத் தடுக்க வைட்டமின் சி மட்டுமல்ல, வைட்டமின் உள்ள உணவுப் பொருள்களும் உடனடியாகத் தேவை. வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்றவற்றை மாத்திரைகளாகப் பயன்படுத்துவது நல்லது. இல்லை எனில், ஜலதோஷம் குணமாகும்வரை இந்த இரு வைட்டமின்களும் தாராளமாக உள்ள தட்டைப் பயறு, சோயா மொச்சை, வெண்ணெய், முட்டைக்கோஸ், முருங்கைக் கீரை, ஆரஞ்சு, மாம்பழம், கேரட் முதலியவற்றை உணவில் நன்கு சேர்த்து வந்தால், ஜலதோஷம் குணமாகி நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
அழகைத் தரும் கீரைகள்!
கேரட், கீரை, முள்ளங்கிக்கீரை, டர்னிப் கீரை, உலர்ந்த திராட்சைப்பழம், பப்பாளி, சீத்தாப்பழம் முதலியன உடலுக்கும் கண்களுக்கும் அழகைத் தருகின்றன. பாதாம் பருப்பும் இந்த வகையில் உயர்வானது. தோல் சுருங்காமல், கண்கள் எரிச்சல் அடையாமல் எப்போதும் புதியனவாகக் காட்சியளிக்க இவற்றில் உள்ள ரிபோஃபிளவின் என்ற வைட்டமினே இந்தப் பணியைச் செய்கிறது.
மலச்சிக்கல் தீர!
பேதி மருந்து சாப்பிடுவதற்குப் பதிலாக 1/4 கிலோ திராட்சையை (அனைத்து இரகங்களும் உகந்தவை) இரவு சாப்பிடலாம். காலைவரை வேறு உணவு வேண்டாம். மலச்சிக்கல் உள்ளவர்கள், ஜீரணக் கோளாறு உள்ளவர்கள் இதே அளவு திராட்சையை வாரம் இருமுறை சாப்பிடவும். இதனால் குடல் முழுவதும் சுத்தமாகும். போனஸாக இதயமும் பலப்படும்!

மருத்துவமனையால்... ஒழிந்தோம்




ஒரு காலத்தில் மழைக்காலங்களில் வரும் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளால் தாக்கப்பட்டு வரும் காய்ச்சல், சளித்தொல்லைகளால் வருடத்தில் ஒரு முறையோ அல்லது இரு முறையோ மருத்துவமனை சென்று வந்தோம். ஆனால் இன்றோ நாளுக்கொரு புதிய வைரஸ் கிருமியால் தாக்கப்பட்ட நோயும், வாரத்திற்கொரு புதிய மருந்து கண்டுபிடிப்பும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

பெரும்பாலும் மருத்துவமனைகளெல்லாம் நிறுவப்படும் தொடக்க காலத்தில் ஒரு உயரிய நோக்கத்திற்காகவே அதாவது அப்பகுதி மக்களின் உடல் ஆரோக்கியத்திற்காகவும், உடல் நலக்குறைவால் சிகிச்சைக்காக வெகுதூரம் மக்கள் செல்வதை தடுப்பதற்காகவும் போன்ற‌ பொது நலநோக்கில் தான் ஆரம்பிக்கப்படுகின்றன. நாளாக, நாளாக அதன் நோக்கம் படிப்படியாக திசை மாற்றப்பட்டு பணம் சம்பாதிக்கும் நோக்கமே தலையாய கடமை என்ற வியாபார நோக்கிற்கு தள்ளப்படுகின்றன.

இதில் போலி மருத்துவர்களின் பிரவேசம் வேறு. மக்களின் அறியாமையையே தன் வியாபார முதலாய் எண்ணி களத்தில் குதித்து கோடிகள் பார்க்கின்றனர். கடைசியில் சிலர் கம்பியும் எண்ணுகின்றனர்.

சென்னைபோன்ற பெருநகரங்களில் செல்வ,செழிப்புள்ள அரக்கட்டளைகளால் நிறுவப்படும் மருத்துவமனைகள் கூட தன்னிடம் சிகிச்சைக்காக வரும் பொது மக்களிடம் பணம் பறிப்பதில் கொஞ்சமும் கருணையும், இரக்கமும் காட்டுவதில்லை. என்ன தான் குடும்ப கஷ்டத்தில் தன் உறவினர்களுக்கு சிகிச்சை அளிக்க அங்கு ஒரு நம்பிக்கையுடன் வரும் நடுத்தர மற்று ஏழை மக்களுக்கும், பணக்காரர்களுக்கும் ஒரேக்கட்டணம் தான்.

பல மருத்துவமனைகளில் உயிருக்காக போராடும் நோயாளியின் சிகிச்சைக்காக மருத்துவர்களால் நோயாளியின் குடும்பத்துடன் இரக்கமின்றி பணப்பேரம் பேசப்படுவதாக நாம் கேள்விப்படுகிறோம். அப்படியே சிகிச்சைக்கு முன் நோயாளியின் உயிர் பிரிந்து விடுமாயின் அவர் சிகிச்சைக்காக அதுவரை ஆன செலவுகள் முற்றிலும் செலுத்தப்படாதவரை அவரின் பிரேதம் என்ன தான் குடும்பத்தினர் கதறினாலும், கூக்குரலிட்டாலும் மருத்துவமனையிலிருந்து வெளியே எடுத்துச்செல்ல அனுமதிப்பதில்லை மருத்துவமனை நிர்வாகம்.

கலைஞர் காப்பீட்டுத்திட்ட அட்டையை அடைவதற்கு நாம் பல உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, நாட்கள் பல காத்திருந்து தான் நாம் அதை பெற முடியும். முறையான ஆவணங்கள் இல்லாமல் அல்லோலப்படும் எத்தனையோ ஏழை, பாமர மக்களுக்கு மருத்துவமனைகளில் ஏற்படும் இக்கட்டான சூழ்நிலையில் இது போன்ற நல்ல திட்டங்களை செயல்படுத்துபவர்கள் அதற்கென அரசால் அமைக்கப்பட்ட அமைப்புகள் தொலைபேசி அழைப்பு மூலமாகவோ அல்லது தானே முன் வந்து அல்லல்படும் மக்களுக்கு உதவிடுமாயின் அது மக்களால் மட்டுமல்ல அரசின் சரித்திரம் போற்றும் ஒரு திட்டமாகத்தான் பேசப்படும். அதனால் அரசிற்கும் நல்ல பெயர் கிடைப்பதுடன் மக்களின் ஆதரவும் (ஓட்டும்) நிச்சயம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

ஒரு காலத்தில் நம் வீட்டுப்பெரியவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஏற்படும் சுகக்குறைவிற்கு அவர்கள் கைப்பக்குவத்தில் நாட்டு மருந்து கொண்டு (அரிசி துப்பிலி, அக்கரகரம், கண்டதுப்பிலி, புள்ளெபெத்த மருந்து, செந்தூரம்) அம்மியில் நன்கு பொடி செய்து அரைத்து பிறகு சூடாக்கி தரும் குடிநி (குடி நீ) தந்த உடனடி நிவாரணத்தை லட்சங்கள் பல செலவாகும் இக்கால அப்பல்லோ மருத்துவமனை சிகிச்சை கூட தருவதில்லை.

இன்றைய உலகில் பிரபலமான ஆன்மீகவாதி என்று சொல்லிக் கொள்பவர்களும், முற்றும் துறந்த முனிவர்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொள்பவர்களும் தனக்கென பக்தகோடி வட்டங்களை உள்ளூரில் மட்டுமல்லாது உலகளாவிய அளவில் உண்டாக்கி கொண்டு அவர்கள் மூலம் கணிசமான காணிக்கை தொகையை வசூல் செய்த பின் அவர்கள் அற‌க்கட்டளை என்ற பெயரில் உலக மக்களுக்கு அர்ப்பணிப்பதாக கூறி முதலில் நிறுவுவது இன்று பணம் காய்க்கும் மரங்களாய்த்திகழும் பெரும் மருத்துவமனைகளையும், மருத்துவக் கல்லூரிகளையுமே. அவர்கள் நடத்தும் மருத்துவமனைகளிலும்,மருத்துவக் கல்லூரிகளிலும் அவர்களின் பக்தகோடிகள் வந்து படிப்பதற்கோ அல்லது சிகிச்சை எடுத்துக் கொண்டாலே போதும் கணிசமான காசு பார்த்து விடலாம் என்ற நோக்கில் தான் பெரும்பான்மையான அறக்கட்டளைச்சார்ந்த மருத்துவமனைகளும், மருத்துவக்கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.

நாளுக்கு நாள் பெருகி பரவிவரும் புதிய புதிய நோய்களால் மக்கள் தான் கவலையுற்றிருக்க வேண்டுமே ஒழிய மருத்துவ மனைகளல்ல.வியாபார நோக்கில் இயங்கும் பெரும்பான்மை மருத்துவமனைகளை பொருத்தவரை மக்கள் நோய்வாய்ப்பட்டு உடனே மரணிக்கவும் கூடாது.அதே சமயம் ஆரோக்கியமாக இருந்து கொண்டு வெளியில் சுற்றித்திரியவும் கூடாது.நீண்ட ஆயுளுடன் நிரப்பமான நோய்,நொடிகளைப்பெற்று அடிக்கடி தன்னிடம் வந்து சிகிச்சைகள் மூலம் பணங்காசுகளைத்தாரை வார்த்துச்செல்ல வேண்டும் (உங்கள் வரவு நல்வரவாகட்டும்..நன்றி மீண்டும் வருக..) என்பதைத்தான் விரும்புகிறது.

ஒரு காலத்தில் வரும் கடும் காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி, வாந்தி பேதி, மூக்கடைப்பு, இருமல் மற்றும் சளித்தொல்லைகளெல்லாம் ஒரு முறை மருத்துவரிடம் சென்று ஒரு ஊசிப்போட்டுக்கொண்டால் சரியாகி விடும். ஆனால் இன்று ஊசிப்போட்ட தழும்பை போக்க இன்னொரு ஊசி போட வேண்டியுள்ளது.

பெரிய மருத்துவமனைக்கு கொசுக்கடிகளால் மேனியில் தடிப்புகள் உண்டாகி குழந்தைகளை சிகிச்சைக்காக எடுத்துச்சென்றால் கூட முதலில் அங்கு குழந்தையின் பெயரில் என்னமோ பெரும் சொத்து,பத்து வாங்க வந்தது போல் ஒரு ஃபைல் ஓப்பன் செய்து அக்குழந்தையை காலமெல்லாம் நீங்கள் சிகிச்சைக்காக இங்கு அழைத்து வாருங்கள் என்று சொல்லாமல் சொல்லி வருகின்றனர். இதில் வேடிக்கை என்னவெனில் அக்குழந்தையின் தகப்பனாரின் மாத வருமானம் எவ்வளவு? என்ற கச்சிதமான கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

அண்மைக்காலங்களில் தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் காலாவதியான மருந்துகளைக்கொள்முதல் செய்து அதை மறுவிற்பனை செய்வதற்கென்றே தனிப்பட்ட முகவர்களுடன் கைகோர்த்து நாட்டின் முதுகெலும்பாகத்திகழும் பெரும் வணிக நிறுவனங்களும் பொதுஜனங்கள்மேல் எவ்வித ஈவு,இரக்கமின்றி தன் பணப்பரிவர்த்தனைக்காக மக்கள் மற்றும் அரசு விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததை நாடறியும்.

ஒரு காலத்தில் மருத்துவமனைகளெல்லாம் எப்பொழுதாவது வரும் உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மட்டுமே என்றிருந்தது. ஆனால் இன்றோ மளிகைக்கடை வியாபாரம் போல் அன்றாடம் மக்கள் கூட்டம் மருத்துவமனை தோறும் அலை மோதுகின்றன.மருந்துக்கடைக்காரர்களின் வாயெல்லாம் பல்லாகத்தான் தெரிகிறது. காலப்போக்கில் திரையரங்குகளில் வைக்கப்படுவது போல் இன்று ஹவுஸ் ஃபுல் என்று போர்ட் எழுதி மருத்துவமனைகளிலும், மருந்துக்கடைகளிலும் மாட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நாம் நம் ஆரோக்கியம் பேணுவதில் மிகுந்த கவனம் வேண்டும். ஆரோக்கியம் சம்மந்தமாக ஆலோசனை பெற மருத்துவரிடம் சென்றால் அதற்கும் ஒரு தொகை ஆலோசனைக் கட்டணம் என்ற பெயரில் அங்கு கொடுத்தாக வேண்டும். அதற்கும் அங்கு ஒரு ஃபைல் ஒப்பன் செய்யப்படும்.

ஏன் ஆட்டு மூளையை சாப்பிடனும்,ஆஸ்பத்திரி டோக்கன் எடுக்கனும்? ஏதோ பழைய பழமொழியை (ஏன் நாயெ அடிப்பெனெ,......சுமப்பெனெ?). எனவே நாம் மற்றும் நம் குடும்பத்தினர்கள் அன்றாடம் ஆரோக்கியம் பேணி வருவோமேயானால் அனாவசியமாக ஆஸ்பத்திரி செல்வதை தடுத்து விட முடியும். அதற்காக என்ன மருத்துவ உலகம் போர்க்கொடியா தூக்கப்போகிறது?

தினம், தினம் நமக்கு அன்றாடம் கிடைக்கும் காய்கறி, கீரை, பழ உணவுகளை உண்டும், தேவையற்ற கொழுப்பு, இனிப்பு, டின் மற்றும் ரீஃபில் பேக்கில் அடைக்கப்பட்ட‌ எண்ணெய்ப் பதார்த்தங்களை உண்பதை விட்டு தவிர்த்தும், குறைந்தது தினந்தோறும் அரைமணி நேரமாவது நம் உடலுக்குத்தகுந்த உடற்பயிற்சியை செய்து வருவோமேயானால் குறைவற்ற செல்வம் இருப்பினும் ஆரோக்கியமாக வாழலாம் நம் கடைசி மூச்சு வரை இன்ஷா அல்லாஹ் என்று கூறி என் கட்டுரையை இங்கு நிறைவு செய்கின்றேன்.

கொசு விரட்டிகளால் கெடுதல்


கொசுத்தொல்லையிலிருந்து தப்பிக்கவும் இரவு நன்கு தூங்கவும் கொசுவர்த்தி சுருள், மேட், கிரீம் முதலியவற்றை உபயோகப் படுத்துகிறோம் அல்லவா? இவற்றால் நம் ஆரோக்கியத்திற்கும், பணத்திற்கும் கேடு என்கின்றனர் விஞ்ஞானிகள்

எங்கே சென்றாலும், பகலிலும் இரவிலும் கொசுகள் ரீங்காரமிட்டு, மலர்களில் தேனருந்தும் வண்டாய் நம்முடைய ரத்தத்தை அருந்த ஆரம்பித்து விடும். கொசு ஒன்றைக் கொடுக்காமல் எவரிடமும் இருந்து எதையும் பெற்றுக்கொள்ளாது. இது கொசுக்களின் நீதி. கொசு தவறாமல் கடைபிடிக்கும் கொள்கை என்றும் சொல்லலாம்.. 

தேன் உண்ணும் வண்டு மகரந்தத் தூளை தன் கால்களிலும் உடலிலும் எடுத்துச் சென்று மலரினத்தைப் பரப்பித் தன் நன்றியுணர்வைக் காட்டுவது போல கொசுவும் நம்மிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் இரத்தத்திற்கு ஈடாக சில நோய்களைப் பரப்பித் தன் நன்றியுணர்வைக் காட்டி விட்டுத்தான் போகும்

அதில் இருந்து தப்பிக்க கொசுவர்த்திச்சுருள் பயன் படுத்திக் கொள்ளலாம், என்றால் அதிலும் நமக்கு கிளம்புகிறது தொல்லைகளின் சாம்ராச்சியம். இந்த மழைக் காலத்திலன் முக்கியமான பிரச்சனை என்னவென்றால் ஒரு மின்னல் வந்துவிடக் கூடாது ஊரே இருண்டு விடும். வானத்தில் மினுக்கென்றால் கரண்ட் கட் ஆகிவிடும்

கொசுவர்த்திச் சுருள்களிலும் மேட்களிலும் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட அலெத்ரின், டாலத்ரின் டி டிரான்ஸாலத்ரின் போன்ற இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இரசாயனங்களின் அடர்த்தி, நாம் இக்காற்றை சுவாசிக்கும் காலம், அறையினுள் வரும் புதிய காற்றின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து நமக்கு விளைவிக்கப்படும் தீங்குகள் அளவு நிர்ணயிக்கப்படுகிறது
 
முக்கியமாக கரண்ட் இல்லாவிட்டால் லிக்விடேட்டர் வைக்க வசதி இருக்காது. வேற வழியின்றி கொசு வர்த்திச்சுருளைப் பயன் படுத்தத் தொடங்கி விடுகிறோம். சுருள் சுருளாக வரும் புகையில் நாமும் நம் திரைப்படக் கதாநாயகர்களைப் போல கனவுடன் உறக்கம் கொள்கிறோம்.. மூடிய அறையில் ஏற்றப்படும் இந்த சுருளுக்கு இரண்டு தனித்துவம் உண்டு. ஒன்று கொசுவை விரைவில் கொல்லும். இரண்டு அதைப் பயன் படுத்தும் நம்மை மெல்ல மெல்லக் கொல்லும்

இந்த இரு பணிகளையும் செய்ய உதவியாக இதில் ஒளிந்திருக்கும் பயங்கரமான வேதிப்பொருள்கள் 
  1. சிந்தெடிக் D அலித்ரின் 
  2. ஆக்டோ குளோரோ -டை- ப்ரொஃபைல் ஈதைர் அல்லது s- 2 
இவை எரியும் போது கிளம்பும் புகையில் கிளம்புவது வேதிப்பொருள் பை குளோரோ மெதல் ஈதைர். இது நம் உடல் நலத்திற்கு பகையாகும் வேதிப்பொருள்

மக்கள் கொசுக்களுக்குப் பயந்து மாலை ஆறு மணிக்கே ஜன்னல் கதவுகளை எல்லாம் அடைத்துவிட்டு புதிய காற்று வீட்டுக்குள் வருவதை தடை செய்து விடுகின்றனர். இவ்வாறு அடைபட்டக் காற்றுக்குள்ளேயே விளக்கு எரிப்பது, சமைப்பது, குடும்பத்தார் அனைவரும் சுவாசிப்பது போன்ற செயல்களாலேயே பிராண வாயு மிகவும் குறைந்துவிடுகிறது. இதோடு புகையும், கேடு விளைவிக்கும் வாயுக்களும் வீட்டினுள் நிறைந்து விடுகின்றன. போதாக்குறைக்கு இருட்டியதுமே கொசு விரட்டிகளையும் பயன்படுத்த ஆரம்பித்து விடுகிறார்கள்

இதனால் வீட்டில் இருந்த சிறிதான பிராணவாயுவும் கெட்டு விடுகிறது. ஆக, இரவு முழுவதையும் மாசுக்காற்று உள்ள சூழ்நிலையிலேயே கழிக்கிறார்கள். கொசு விரட்டிகளில் உடலில் சேர்ந்த விஷத்தை வெளியேற்ற சளிபிடித்தல், காய்ச்சல் ஆகியவை ஏற்படுகின்றன. சுத்திகரிப்பு நடக்காததால் மருந்து சாப்பிட்டும் குணம் பெற முடிவதில்லை

மூன்று நாட்களில் இவை குறையாததால் அலர்ஜி என்று பெயர் சூட்டி, அந்தச் செயலை முடக்க ஒவ்வாமையைக் குணப்படுத்தும் மருந்துகளையும் ஆரோக்கியமாக உடல் தாக்குப் பிடிக்காமல் திணறுகிறது. அதே நேரத்தில் உடலுக்கு ஒவ்வாத பொருட்களை வெளியேற்றும் செயல்முறை படிப்படியாக இழந்து விடுகிறது. இதன் மூலம் படை வீரர்களை இழந்த கோட்டையைப் போல நோய், எதிர்ப்பு சக்தியை இழந்த உடலைப் பெற்று விடுகிறது. பிறகு நோய்களின் வருகைக்குக் கேட்க வேண்டுமா

தொடர்ந்து மூடிய அரையில் இவ்வேதிப்பொருளை சுவாசிக்கும் நம் மூக்குக்குத்தெரிவதில்லை. இது நம் உட்லில் கேன்சர் ஏற்பட மூலமாக அமையும் என்பது. நம் மூளையோ இதை தெரிந்து கொள்ள விரும்புவது இல்லைதொடர்ந்து அடர்த்தி அதிகமான இப்புகையைச் சுவாசிக்கும் ஒருவருக்கு நுரையீரல் முழுமையாகச் சுருங்கி விரிவடைய முடியாமல் போகிறது. அதனால் சுவாசத்திற்குத் தேவையான காற்று போதிய அளவு கிடைக்காமல் போகிறது

இந்த வேதிப்பொருள் விளைக்கும் இத்தீங்கு ஒருபுறம் என்றால் மறுபுறம் இவ்வேதி பொருளின் கரியால் ஏற்படும் தீங்கு. கொசுவர்த்தி எரியும் போது அது வெளியிடும் நுண்ணிய சாம்பல் அளவு 75 முதல் 137 சிகரெட் எரிப்பதனால் வரும் சாம்பலுக்கு சமம் . இந்த சாம்பல் சாதாரனமாகக் கீழே கொட்டும் பிற சாம்பல் போன்றது அல்ல. காற்றில் மிதக்கும் கண்களுக்குத்தெரியாத நுண்ணிய சாம்பல்(size 2.5 micron). அதனை சுவாசிப்பதனாலும் நுரையீரல் காச நோய், புற்று (cancer) நோய் வருவதற்கு வாய்ப்புகள் ஏராளம். நோய்கள் வரலாம்

நாம் என்ன செய்கிறோம். முக்கியமாக நாம் உறங்காவிட்டாலும் குழந்தைகள் நன்கு உறங்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் ஏன் தாய்மைப் பாசத்தில் கொசுக்கொல்லிகளைப் பயன் படுத்துகிறோம். கொசுச் சுருளில் அல்லது கொசுப் பாயில் (மேட்டில்) இருந்து வெளிவரும் புகையைப் பிஞ்சுக் குழந்தைகள் சுவாசித்தால், அவர்களுக்கு வலிப்பு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறி எச்சரிக்கிறது லக்னோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு

குழந்தைகளுக்கு இத்தகு துன்பத்தைக் கொடுக்கும் இக் கொசுக் கொல்லிகள் குழந்தைகளே பிறக்காமல் இருக்கவும் வழி செய்கிறது. மும்பையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கொசு விரட்டிகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் சிலருக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக் கூடியது என்பதும் உறுதி செய்யப் பட்டுள்ளதுஇதில் உள்ள சிந்தெடிக் D அலெத்ரின் மனிதர்களின் உடல் எடையை மெல்ல மெல்ல இழக்கச் செய்யும் தன்மை கொண்டது

தொடர்ந்து கொசு விரட்டி உபயோகித்து வருகிறவர்களுக்கு நுரையீரல் ஒருவித ஒவ்வாமை ஏற்பட்டு முழுமையாக விரிவடையாமலும் அதன் கொள்ளளவுக்குண்டான காற்றை செயல்பாட்டிற்கு எடுத்துக்கொள்ள இயலாமலும் போய் விடுவதாக பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன

மும்பையின் நுகர்வோர் வழிகாட்டும் கழகத்தின் முடிவுப்படி கொசு விரட்டிகளில் பயன்படுத்தப்படும் இரசாயனம் சிலருக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்த வல்லது என்கிறார்கள்

கொசு விரட்டியில் உள்ள டயோக்சின் புற்றுநோயை உருவாக்க வல்லது. ‘அலெத்ரின் மனிதர்களின் உடல் எடையை மெல்ல இழக்கச் செய்யவல்லது’. மேட்புகையை பிஞ்சுக் குழந்தைகள் இரவு முழுவதும் சுவாசித்தால் வலிப்பு நோய் ஏற்படலாம் என்கிறது லக்னோ கிஸ் ஜோர்ஜின் மருத்துவப் பல்கலைக்கழகம். இங்கே உள்ள டாக்டர் தேவிகாநாக் என்பவரின் கண்டுபிடிப்பு இது

இத்தனையையும் படித்த பின்புமா நீங்கள் கொசு வர்த்தியைப் பயன் படுத்துகிறீர்கள்? போங்க... போயி ஒரு கொசு வலையை வாங்கி அழகா கட்டி அதற்குள் கூட்டாக நாயகன் கமல் குடும்பம் போலநீ ஒரு காதல் சங்கீதம்என்று மனைவியின் காதில் பாட்டு பாடிக்கொண்டு இன்பமாக உறங்குங்கள்.. கொசுவைப் பாட அனுமதிக்காதீர்கள்.
கொசுக்களைத் தடுக்க ஒரே எளிய வழி, பாதுகாப்பானது, சிக்கனமானது கொசுவலை மட்டுமே!