ஸ்டீராய்டு (Steroid) பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்!



உடனடியாக குணமடைவது உடலுக்குக் கேடா?

ஸ்டீராய்டு (Steroid) பற்றி ரிந்துக்கொள்ளுங்கள்!


டாக்டர்களின் கையெழுத்து மருந்துக் கடைக்காரருக்கு மட்டுமே புரிவது ஏன்?


“என் வசூல் முடிஞ்சிருச்சு. இப்ப உன் நேரம்'' என்று டாக்டர், மருந்துக் கடைக்காரருக்கு உணர்த்துகிறாராம்.

வாட்ஸப்பில் வந்த இது, நகைச்சுவையாக இருந்தாலும், இன்றைய நிஜமும் இதுதான்.

சேவையாக நினைத்துச் செய்யப்பட வேண்டிய மருத்துவம், இன்று பணம் கொழிக்கிற பிசினஸ்.மக்களிடமிருந்து பணத்தைச் சுரண்ட, மருத்துவர்கள் கையாள்கிற டெக்னிக்குகள் சொல்லி மாளாதவை.

மக்களுக்கு வேண்டியதெல்லாம் நோய் உடனடியாக குணமாக வேண்டும். அப்படிக் குணப்படுத்துகிற டாக்டர் அவர்களைப் பொறுத்த வரை கைராசிக்காரர்.

ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வரும் போதே நோய் குணமான உணர்வை உண்டாக்கும் மருத்துவர்கள் இன்று எக்கச்சக்கம். அதற்கு அவர்களது திறமையோ, அனுபவமோ காரணமில்லை. 

பின்னே..?

அவர்கள் தரும் ஸ்டீராய்டு கலந்த மருந்துகள்!

அதென்ன ஸ்டீராய்டு?


ஸ்டீராய்டு என்பது நோயைக் குணமாக்கும் மருந்தல்ல. மறைக்கும் மருந்து. ஆஸ்துமா அதிகமாகி, திணறத் திணற ஆஸ்பத்திரிக்கு போகும் ஒரு நபர், ஸ்டீராய்டு கலந்த மருந்துகள் கொடுக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே சராசரி நிலைக்குத் திரும்புவார். அந்த நேரத்துக்கு அவரது ஆஸ்துமா தீவிரம் மறைக்கப்பட்டதே தவிர, குணமானதாக அர்த்தமில்லை. ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டால் உண்டாகும் பயங்கரங்கள் ஏராளம்.

# அனாபாலிக் ஸ்டீராய்டு, 

# கார்டிகோ ஸ்டீராய்டு 

என ஸ்டீராய்டில் இரண்டு வகைகள் உள்ளன. முதல் வகை பெரும்பாலும் விளையாட்டு வீரர்களால் உபயோகப்படுத்தப்படுவது. இது அவர்களுக்கு உடனடியாக ஒரு தெம்பை, உற்சாகத்தை, தசைகளுக்கு வலுவைத் தரக் கூடியது.விளையாட்டு வீரர் பென் ஜான்சன், போட்டியின் போது போதை மருந்து உட்கொண்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டு, சர்ச்சைக்குள்ளானது கூட இந்த வகை ஸ்டீராய்டு காரணமாகத்தான். இரண்டாவது வகை ஸ்டீராய்டு, மருத்துவத் துறையில் உபயோகிக்கப்படுவது. இதுவும் ஆபத்தே.

இந்தி நடிகர் அம்ஜத் கானை ஞாபகம் வைத்திருப்பவர்களுக்கு அவரது மாமிச மலை போன்ற உடல் கட்டாயம் நினைவை முட்டும். உடல் நலக் கோளாறு ஒன்றுக்கு அவர் நீண்ட நாட்களாக உட்கொண்ட ஸ்டீராய்டு கலந்த மருந்துகள்தான் அதற்குக் காரணம் என்பது பிறகு கண்டறியப்பட்டது. நம்மூரில் நடிகர் அஜீத், முதுகுவலிக்காக உட்கொண்ட மருந்துகள் கூட ஸ்டீராய்டு கலந்தவையாம். அதனால் தான் இடையில் சில நாட்களுக்கு அவரது உடல் எக்குத்தப்பாக பெருத்துப் போனதாக சினிமா வட்டாரத்தில் ஒரு பேச்சு உண்டு. 

இப்படி நிறைய உதாரணங்களைப் பட்டியலிடலாம் ஸ்டீராய்டு பாதிப்புகளுக்கு.‘‘ஸ்டீராய்டு மருந்துகள் நல்லதா, கெட்டதா என்பதைத் தெரிந்துகொள்ளும் முன் ஸ்டீராய்டு என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம்’’ என்கிறார் இன்டர்னல் மெடிசின் சிறப்பு மருத்துவர் சுப்ரமணியன் சுவாமிநாதன். 

‘‘தைராய்டு, இன்சுலின் போல நம் உடலில் சுரக்கும் ஒருவகை ஹார்மோன்தான் ஸ்டீராய்டு (Steroid). 
.

உடல் நலக் குறைவான அந்த நேரங்களில் ஸ்டீராய்டு ஹார்மோனின் அமைப்பில் உருவான மாத்திரைகளையோ, ஊசிகளையோ எடுத்துக் கொள்கிறோம் இவைதான் ஸ்டீராய்டு மருந்துகள். 

இந்த ஸ்டீராய்டு ஹார்மோன் நம் உடலில் வயிற்றுப் பகுதியில் சிறுநீரகங்களுக்கு மேல் அமைந்துள்ள அட்ரீனல் சுரப்பியிலும், இனப்பெருக்க மண்டலத்தில் இருக்கும் விதைப்பை மற்றும் கருப்பைகளிலும் தயாராகிறது. அட்ரினல் சுரப்பியில் சுரக்கும் ஹார்மோனை கார்டிகோ ஸ்டீராய்டு (Cortico steroid) என்கிறோம். பொதுவாக நாம் ஸ்டீராய்டு என்று சொல்வது இந்த கார்டிகோஸ்டீராய்டு ஹார்மோனைதான். உடலில் சோடியம் அளவைப் பராமரிப்பதில் கார்டிகோ ஹார்மோன் முக்கியப் பங்கு வகிக்கிறது. 

இதில் உற்பத்தியாகும் இன்னொரு முக்கிய ஹார்மோனான கார்டிசோல் ஹார்மோன் மன அழுத்தத்தைத் தீர்மானிப்பதில் முக்கிய இடம் பெறுகிறது. பிட்யூட்டரியில் சுரக்கும் ஹார்மோனை Androgenic என்கிறோம். செக்ஸ் ஹார்மோன் என்று சொல்லப்படும் இந்த ஆண்ட்ரோஜெனிக் ஹார்மோன் தான் பாலியல் சார்ந்த செயல்பாடுகளைத் தீர்மானிக்கிறது’’ என்கிறார் சுப்ரமணியன் சுவாமிநாதன். 
.

ஸ்டீராய்டு மருந்துகள் பற்றித் பேசத் தொடங்குகிறார் ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை சிறப்பு மருத்துவரான ஸ்ரீதரன். 

‘‘நாள்பட்ட ஆஸ்துமாவுக்கு ஸ்டீராய்டு மருந்தை இன்ஹேலராக, நெபுலைஸராக கொடுக்கும்போது ஆஸ்துமாவிற்கு தற்காலிக நிவாரணம் கிடைக்கிறது. சோரியாசிஸ், ருமட்டாய்ட் ஆர்த்ரைட்டிஸ் மற்றும் வலி, வேதனை, வீக்கம் போன்றவற்றை தற்காலிகமாக குறைக்க ஸ்டீராய்டு மருந்துகள் பரிந்துரைக்கப் படுகிறது.

உறுப்பு மாற்று சிகிச்சைக்குப் பிறகு இது நம் உறுப்பு இல்லை என்பதை உணர்ந்து கொண்டு புதிய உறுப்புக்கு எதிராக நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி தீவிரமாக செயல்படும். அந்த நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியின் வேகத்தைத் தணித்து ஒவ்வாமையைப் போக்கவும் ஸ்டீராய்டு மருந்துகள் நிச்சயம் தேவை. 

(உறுப்பு மாற்று சிகிச்சைக்குப்பின் புதிய உறுப்புக்கு எதிராக நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி தீவிரமாக செயல்படும் என்பதை ஆங்கில மருத்துவர்களே ஒப்புக்கொள்கின்றனர். நமது உடலானது ஒருபோதும் அந்நிய பொருட்களையோ, உறுப்புக்களையோ ஏற்றுக்கொள்ளாது.)

சருமம் தொடர்பான பிரச்னைகளுக்கும், வலி, வீக்கத்தைக் குறைக்கவும் ஸ்டீராய்டு ஆயின்ட்மென்ட்டாக கொடுக்கப்படுகிறது. ரத்தப்புற்று நோய்கள், ரத்த தட்டணு குறைபாடு நோய்கள், குழந்தைகளுக்கு வரும் புற்றுநோய்கள், சிறுநீரகப் பாதிப்புகள், குடல் அழற்சி நோய்கள், மூளையில் ஏற்படும் கட்டி ஆகியவற்றுக்கும் அறுவைசிகிச்சைக்கு முன் மூளையில் ஏற்படும் வீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் மூளையில் ஏற்படும் காசநோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கும் ஸ்டீராய்டு கொடுக்கப்படுகிறது’’ என்பவர், ஸ்டீராய்டு மருந்துகள் எப்போது பிரச்னையாகிறது என்பதைத் தொடர்ந்து விளக்குகிறார். 
.

‘‘ஸ்டீராய்டு மருந்துகள் தொடர்ந்து பயன்படுத்துவதால் ஆபத்தான பக்கவிளைவுகள் ஏற்படலாம். ஸ்டீராய்டை தொடர்ந்து பயன்படுத்துகிறவர்களுக்கு 

# உடலில் சோடியம் அளவு அதிகமாகி உடலில் நீர் தங்கிவிடும். 

# பொட்டாசியம் அளவு குறைந்தால் இதயத்தின் செயல்பாடுகள் பாதிக்கும். 

# எடை கூடும், 

# நோய் எதிர்ப்பு சக்தியின் வேகத்தைத் தணிப்பதால் நோய்த்தொற்று எளிதில் வரும், 

# முகம் வீங்கும், 

# சர்க்கரை அளவு ரத்தத்தில் அதிகமாகும், 

# கண்புரை வரும் வாய்ப்பு அதிகம், 

# எலும்புகள் பலவீனமடைந்து முறியும். 

அடிக்கடி ஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்துகிற மருத்துவர்களைக்கூட நோயாளிகள் அறிந்து தவிர்க்க வேண்டும். 
.

விளையாட்டுத்துறையில் ஸ்டீராய்டு மருந்தை உடல் கட்டமைப்புக்காகவும், ஊக்க மருந்தாகவும் சிலர் தவறாகப் பயன்படுத்தி விடுகிறார்கள். ஆனால், இது சட்ட விரோதமானது மட்டுமல்ல... உயிருக்கு ஆபத்தானதும் கூட. இதனால், 

# உயர் ரத்த அழுத்தம், 

# கெட்ட கொலஸ்ட்ரால், 

# கல்லீரல் சேதம், 

# இதயம் செயலிழப்பு, 

# ஹார்மோன் குளறுபடிகள், 

# மன அழுத்தம், 

# மூர்க்கத்தனம் உண்டாவது என்று பல பிரச்னைகள் உண்டாகும். 

# விந்தணுக்கள் உற்பத்தி குறைவு, 

# மலட்டுத்தன்மை 

போன்ற குறைபாடுகளையும் நாமே விலை கொடுத்து வாங்கியதுபோல் ஆகிவிடும்’’ என்கிறார் ஸ்ரீதரன்.
.

‘‘ஸ்டீராய்டு மாத்திரைகள் என்றால் நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டியது கட்டாயம். ஒரு மாத்திரையைப் பார்த்த உடனே இது ஸ்டீராய்டு என்றெல்லாம் தெரிந்துகொள்ள முடியாது. தொடர்ச்சியாக மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறவர்கள் அது ஸ்டீராய்டா என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

தேவைப்பட்டால் இன்னொரு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதிலும் தவறில்லை. முக்கியமாக மருந்துச்சீட்டு இல்லாமல் மருந்துகள், மாத்திரைகள் வாங்கும் பழக்கம் நம்மிடம் நிறைய உண்டு. இதுபோல ஓவர் தி கவுன்டராக மாத்திரை வாங்கும்போதும் ஸ்டீராய்டு மருந்துகளை மருந்துக்கடைக்காரர்கள் கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். 

அதனால், மருந்துச்சீட்டு இல்லாமல் மாத்திரை வாங்குவதை முழுவதும் தவிர்க்க வேண்டும். மருத்துவர் ஸ்டீராய்டை ஒருமுறை பரிந்துரைத்தால், அடுத்த முறை மருத்துவரைப் பார்க்காமலே தொடர்ந்து வாங்கிப் பயன்படுத்திக் கொண்டிருப்பதும் சிக்கலை உண்டாக்கும். தொடர்ச்சியான ஃபாலோ அப் அவசியம்’’ என்று சொல்லும் சுப்ரமணியன், இன்னொரு முக்கியமான பிரச்னை பற்றியும் குறிப்பிட விரும்புகிறார்.
.

‘‘மருத்துவத்தைப் பொறுத்த வரை வெளிநாடுகளுக்கும் இந்தியாவுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. வெளிநாடுகளில் நோயாளியையும் ஒரு பார்ட்னராக சேர்த்துக் கொண்டு மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள், கற்றுக் கொடுப்பார்கள், விவாதிப்பார்கள். நோயாளிக்கு இத்தனை விளக்கம் ஏன் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்காது. இதனால் நோயாளிகளுக்கும் என்ன நோய், எந்த நிலையில் இருக்கிறது, என்ன மருந்துகள் சாப்பிடுகிறோம், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு இருக்கும். 

இந்தியாவில் இதுபோல் நோயாளிக்குக் கற்றுக் கொடுக்கிற மருத்துவர்கள் மிகவும் குறைவு என்பது வருத்தத்துக்குரிய ஒரு விஷயம். ஸ்டீராய்டு மருந்துகள் மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டிய மருந்து என்பதால் நோயாளிக்கும் கற்றுக் கொடுத்தல் மிகவும் அவசியம். அப்போதுதான் ஸ்டீராய்டை ஒரு தற்காலிக மருந்தாகத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படும். இல்லாவிட்டால், ஸ்டீராய்டு உடனடியாக நல்ல பலனைக் கொடுக்கிறது என்று பழக்கமாகிக் கொண்டுவிடுவார்கள். ஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்தும் மருத்துவர்களிடமும் தெளிவான திட்டம் இருக்க வேண்டும். முடிந்தவரை ஸ்டீராய்டு மருந்துகளின் வீரியத்தைக் குறைத்துக் கொண்டே வர வேண்டும்.

மாற்று மருந்துகளைப் பயன்படுத்தி ஸ்டீராய்டு பயன்படுத்த வேண்டிய அவசியத்தைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். நோயாளிகளும் டாக்டரே மறந்துவிட்டால் கூட ‘பவரை குறைக்கிறேன்னு சொன்னீங்க டாக்டர்’ என்று மருத்துவருக்கு நினைவுபடுத்த வேண்டும்’’ என்று எச்சரிக்கிறார் சுப்ரமணியன் சுவாமிநாதன்.
.

மருந்துச்சீட்டு இல்லாமல் வாங்கும்போதும் ஸ்டீராய்டு மருந்துகளை மருந்துக்கடைக்காரர்கள் கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால், மருந்துச்சீட்டு இல்லாமல் மாத்திரை வாங்குவதை முழுவதும் தவிர்க்க வேண்டும்.
.

குழந்தைகளுக்கு கூடவே கூடாது!


# ஆஸ்துமா, 

# வீசிங், 

# அலர்ஜி, 

# சருமப் பிரச்னைகள் 

போன்றவற்றிற்கு பல மருத்துவர்களும், இந்தப் 
பிரச்னைகளின் ஆரம்பக் கட்டத்திலேயே உடனடி நிவாரணம் தேவை என்பதற்காக ஸ்டீராய்டு கொடுத்து விடுகிறார்கள். சில நிமிடங்களிலேயே நோயாளிக்கு குணம் தெரியும். 

குழந்தைகளுக்கு ஸ்டீராய்டு தரவே கூடாது. ஒரு முறை மருத்துவரிடம் போய் மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டுக் குணம் தெரிந்ததும், அடுத்தடுத்த முறைகள் அதே பிரச்னை வரும் போது தாமாகவே மருந்துக் கடைகளில் ஸ்டீராய்டு கலந்த மருந்துகளை வாங்கிச் சாப்பிடும் நபர்கள் நிறைய பேர். இப்படி நீண்ட நாட்களுக்கு ஸ்டீராய்டு எடுத்துக் கொள்கிற போது, அது 

# ஹைப்பர் டென்ஷன், 

# இதயக் கோளாறு, 

# உடல் பெருத்துப் போதல், 

# குறிப்பாக முகம் ஊதிப் போவது, 

# கல்லீரல் பழுது, அதன் விளைவாக மஞ்சள் காமாலை, 

# பெண்களுக்கு உடலெங்கும் ரோம வளர்ச்சி, 

# மார்பகங்கள் சிறுத்துப் போதல், 

# கிளிட்டோரிஸ் எனப்படுகிற அந்தரங்க உறுப்பின் ஒரு பகுதி விரிவடைதல், 

# குரலில் மாற்றம், 

# மாதவிலக்குக் கோளாறு, 

# அதிக கோபம், 

# படபடப்பு, 

# தற்கொலை எண்ணம், 

# புற்றுநோய், 

# நீரிழிவு நோய், 

# சிறுநீரகக் கோளாறு, 

# பக்கவாதம், 

# ஆண்மைக் குறைபாடு, 

# முகம், கழுத்துப் பகுதிகளில் பருக்கள், 

# வழுக்கை, 

# ஆண்களுக்கு மார்பகங்கள் பெருத்துப் போவது... 

இப்படிப் பல பயங்கர பின் விளைவுகளை உண்டாக்கும். இவற்றில் சில ஸ்டீராய்டை நிறுத்தியதும் குணமாகலாம். பல உபாதைகள் அதற்குப் பிறகும் நிற்காமல் தொடர்வதும் உண்டு. 

*மருத்துவர்களிடம் செல்லும் போதே ஸ்டீராய்டு கலந்த மருந்துகளைத் தவிர்க்குமாறு சொல்லலாம். எந்தப் பிரச்னைக்கும் சரியான மருத்துவரிடம் சிகிச்சை 
பெறுவது பாதுகாப்பானது. 
.

சித்த மருத்துவத்திலும் ஸ்டீராய்டா?

அலோபதி மருந்துகளைப் பொடி செய்து சித்த மருந்து என்கிற பெயரில் கொடுக்கும் சில போலி சித்த மருத்துவர்களும் இருக்கிறார்கள். அது போன்ற போலி மருத்துவர்கள் சிலர் இப்படி ஸ்டீராய்டு கலந்த அலோபதி மருந்துகளை சித்தா உடன் சேர்த்துக் கொடுப்பதுண்டு. 

நம்பிக்கையான சித்த மருத்துவர்கள் தவறு செய்வதில்லை. சித்த முறையில் தயாரிக்கப்படுகிற சில மருந்துகள், உதாரணத்துக்கு தங்க பஸ்பம், வெள்ளி பஸ்பம் மாதிரியான உலோகத் தயாரிப்புகளில் மூலிகைகள் கலந்து செய்யப்படுகிற போது இயற்கையாவே சில ஸ்டீராய்டுகள் உருவாகும். அது தவிர்க்க முடியாதது. ஆனால், இப்படிப்பட்ட மருந்துகளைப் பரிந்துரைக்கிற சித்த மருத்துவர், பக்க விளைவுகள் வராமல் இருக்க பத்தியம், உணவுக் கட்டுப்பாடு என சில விஷயங்களையும் சொல்லித் தருவார். 

பத்தியம்இல்லாத, பக்க விளைவில்லாத சித்த மருத்துவம் என வரக்கூடிய விளம்பரங்கள் போலியானவையாகவே இருக்கும். உணவுக் கட்டுப்பாடு, எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்கிற மாதிரி சில விஷயங்களை சரியாக செய்தால், பக்க விளைவுகளைத் தவிர்க்கலாம். 

எல்லாத் துறைகளிலும் புல்லுருவிகள் இருக்கிற மாதிரி, சித்த மருத்துவம் என்ற பெயரில் போலித்தனம் செய்கிற ஆட்களும் இருக்கிறார்கள். மக்கள்தான் எச்சரிக்கையாகி, சரியான, நம்பிக்கையான டாக்டரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
.

நன்றி

# இன்டர்னல் மெடிசின் சிறப்பு மருத்துவர் சுப்ரமணியன் சுவாமிநாதன்

# ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை சிறப்பு மருத்துவரான ஸ்ரீதரன்

# டாக்டர் குங்குமம் இதழ்
.

(பொதுநலன் கருதி சில அத்தியாவசிய மாற்றங்களுடன் இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது)

.

குறிப்பு:
.

நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தராமான தீர்வை தர இயலாது.

சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

உதாரணமாக நம் தவறான வாழ்க்கைமுறையினால் ஏற்படும் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற தொந்தரவுகளுக்கு மருத்துவ சிகிச்சையால் எவ்வாறு நிரந்தர தீர்வு அளிக்க முடியும். 
.

ஒரு மாதத்திற்கான உணவை ஒரேநாளில் உண்பது எவ்வாறு சாதியப்ப்படும்?

இதை மக்களுக்கு புரியவைத்து மருந்துக்களின்றி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.
.

மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் இலவசமாக ஆலோசனைகள் பெற கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ / முகநூல் பக்கத்திலோ /வலைத்தளத்திலோ தொடர்பு கொள்ளலாம்.

(குறிப்பு : தயவுசெய்து பொறுமையாக இருப்பவர்கள், நேர்மையாக வாழ்பவர்கள் மற்றும் அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாதவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்)
.

மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:
.

.

Thanks & Regards,
Vineeth.S
+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com

கர்ப்பப்பையில் கட்டி, பித்தப்பையில் கல் & அப்பென்டிசைடிஸ் (குடல் வால் நோய்)

பித்தப்பையில் கல்

சர்க்கரை நோயாளிகளே! சிறிது காலத்திற்குப் பிறகு, உங்களுக்குப் பித்தப்பையில் கல் வந்து விட்டது; எனவே, அறுவை சிகிச்சை செய்து எடுக்க வேண்டும் என்று கூறுவார்கள். நீங்களும் உடனே பித்தப்பையை எடுத்து விடுவீர்கள்.

பித்தப்பை (Gall Bladder) என்ன வேலை செய்கிறது என்று தெரியுமா? நாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆவதற்குப் பித்த நீர் சுரக்க வேண்டும். அதை அனுப்புவது அதுதான். கல்லீரல் இரத்தத்திலுள்ள 80% கொழுப்பை எடுத்துப் பித்த நீராக (BILE) மாற்றிப் பித்தப்பையில் சேமிக்கிறது. இப்படி அதை அறுவை சிகிச்சை செய்து எடுத்து விட்டால் பித்தப்பை இருப்பவர்களுக்கே ஒழுங்காக ஜீரணமாகாத இந்தக் காலக் கட்டத்தில் அது இல்லாத ஒருவருக்கு எப்படி ஜீரணம் ஒழுங்காக நடக்கும்? எனவே, பித்தப்பையின் வேலையைக் கல்லீரல் செய்ய வேண்டியது இருக்கும். எனவே, கல்லீரலுக்கு அதிக வேலை.

கர்ப்பப்பையில் கட்டி

அதேபோல், கர்ப்பப்பையில் கட்டியென்று வெட்டி எடுக்கச் சொல்வார்கள். கர்ப்பப்பை என்ன வேலை செய்கிறது? உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. இப்படிக் கர்ப்பப்பையை வெட்டியெடுத்து விட்டால் உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றுவது யார்? அந்தக் கழிவுகளை வியர்வை, சிறுநீர்ப் பை போன்றவை வெளியேற்றும். அப்பொழுது அந்த உறுப்புகளுக்கு அதிகமான வேலை.

நமது வீட்டுப் பெண்கள் இரண்டு பேர் ஒன்று சேர்ந்தால் பெருமையாகப் பேசிக் கொள்வார்கள்.

"நீ உன்னோடத வெட்டி எடுத்திட்டியா? நான் என்னோடத வெட்டுவதற்கு அடுத்த மாசம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருக்கிறேன்” என்று. நீங்கள் என்ன பிக்னிக்கா போகிறீர்கள்? ஒரு உறுப்பை வெட்டி எடுப்பதற்கு எதற்கு மருத்துவர்?

அப்பென்டிசைடிஸ் (குடல் வால் நோய்)

குடல் வால் (APPENDIX) வலிக்கிறது என்று கூறினால் அதை வெட்டி வெளியே எடுத்து விடுவார்கள். அது என்ன வேலை செய்கிறது என்று தெரியுமா? உடலிலுள்ள கழிவுகளை அகற்றுகின்றது. உடலில் வலப் பக்கம், இடப் பக்கம் இரண்டையும் அளவாக வைத்துக் கொள்கிறது. குடல்வால் எடுத்தவர்கள் மலை மேல் ஏறும்போது அவர்களால் பாலன்ஸ் செய்ய முடியாது. இடது, வலது பக்கங்களை அவர்களுக்கு பேலன்ஸ் செய்துகொள்ளத் தெரியாது. ஆனால், மருத்துவ உலகம் கூறுகிறது, குடல்வால் என்ற உறுப்பு தேவையேயில்லை என்று. நமது உடலில் ஒரு உறுப்பு தேவையில்லையென்று எப்பொழுது கூறுகிறார்களோ, அப்பொழுதே என்ன அர்த்தம்? கடவுள் முட்டாள் என்று அர்த்தம். கடவுளுக்கு ஒரு உறுப்பு தேவையா இல்லையா என்று தெரியாதா? குடல்வால் எந்தவொரு வேலையும் செய்யவில்லை என்று ஒரு மருத்துவர் கூறுகிறார் என்றால் அந்த உறுப்பு என்ன செய்கிறது என்பது அவருக்குத் தெரியவில்லை என்று அர்த்தமே தவிர, அந்த உறுப்பு எந்த வேலையும் செய்யவில்லை என்பதில்லை.

இப்படி நோய்களுக்குக் கத்தி வைத்து வெட்டுவது மருத்துவம் கிடையாது. அந்த உறுப்பைக் குணப்படுத்துவதுதான் மருத்துவம். நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாகப் பித்தப்பையில் கல், கர்ப்பப்பையில் கட்டி, குடல்வால் அழற்சி என எந்த உறுப்பில் எந்தப் பிரச்சினை வந்தாலும் உறுப்பை அறுக்காமலேயே, உடலின் உள்ளேயே உறுப்பைப் புதுப்பிப்பதற்குச் சில சுலபமான வழிமுறைகள் உள்ளன.

நன்றி - ஹீலர் பாஸ்கர் (அனாடமிக் தெரபி)

குறிப்பு: சரியான வாழ்க்கை முறையால் மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.


For more info visit:

நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

கழிவின் தேக்கம் வியாதி Accumulation of waste / toxins in our body is disease
கழிவின் வெளியேற்றம் குணம் Elimination of waste / toxins is cure

இதை மக்களுக்கு புரியவைப்பதே எனது நோக்கம்.
இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ தொடர்புகொள்ளலாம்.

Thanks & Regards,
    Vineeth.S
+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com

குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத சில செயல்கள் !


குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத சில செயல்கள் !

1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, “உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே’ என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும்போது, “அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்’ என்று சொல்ல நேரிடலாம்.

3. தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4. சிறு குழந்தைகளை மிரட்டாதீர்கள். வேறு வழியில்லாமல் மிரட்டும் நேரிட்டால், “கொன்னுடுவேன், தலையை திருகிடு வேன், கையை உடைப்பேன்’ போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

5. சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், “அப்பாகிட்டே சொல்லிடாதே’ என்று கூறு வர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையி லேயே “அப்பாக்கிட்ட சொல்லிடு வேன்’ என்று மிரட்டும்.

6. குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. “உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே" போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக்கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதி க்க வழிவகுக்கும்.

7. குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. ”கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்’ என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

8. குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

9. உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

10. படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, “பாசிடிவ் அப்ரோச்’ இருக்க வேண்டும். “நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்’ என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். “நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடுதான் மேய்க்கலாம்’ என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடா து.

11. குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.


For more info visit:


நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்

Accumulation of waste / toxins in our body is disease
Elimination of waste / toxins is cure

இதை மக்களுக்கு புரியவைத்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதே எனது நோக்கம். 

திருக்குறள் (அறிவுடைமை #0423)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

தெளிவுரை: 

எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும்அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ தொடர்புகொள்ளலாம்.


Thanks & Regards,
    Vineeth.S
+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com

பெண் குழந்தையின் அம்மாக்களுக்கு டிப்ஸ்.....

பெண் குழந்தையின் அம்மாக்களுக்கு டிப்ஸ்.....
- Dr.ஷர்மிளா


1. குழந்தைக்கு ஓரளவு விவரம் தெரிய ஆரம்பிக்கிற போதே, அதன் உடல் பாகங்களைப் பற்றியும், அவற்றின் வேலைகளைப் பற்றியும் அந்த வயதுக்குத் தேவையான அளவுக்குக் கற்றுக் கொடுங்கள்.

2. ஸ்பரிசத்தில் உள்ள வித்தியாசத்தைப் பெண் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். நல்ல எண்ணத்துடன் தொடுவதற்கும், கெட்ட எண்ணத்துடன் தொடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை அது உணர வேண்டும். கெட்ட ஸ்பரிசத்தை உடனடியாக எதிர்க்கவும் கற்றுக் கொடுங்கள்.

3. யாரும் அவளது அந்தரங்க உறுப்புகளைத் தீண்ட அனுமதிக்கக் கூடாது என்பதைக் கண்டிப்புடன் சொல்லிக் கொடுங்கள்.

4. குளிக்கும் போது அந்தரங்க உறுப்புகளை சுத்தப் படுத்தக் கற்றுக் கொடுங்கள். அந்த இடங்களைத் தொடுவதோ, பார்ப்பதோ அசிங்கம் என்ற மனப்பான்மையை விதைக்காதீர்கள்.

5. எந்த ஆணாவது அவளைத் தீண்டும் முறையோ, பேசும் முறையோ தவறாகத் தெரிந்தால் உடனடியாக உங்களிடம் தெரியப்படுத்தச் சொல்லுங்கள். அந்த மாதிரி நேரங்களில் அவளைக் குற்றம் சொல்லாமல், அவளுக்கு நீங்கள் துணை இருப்பீர்கள் என்ற தைரியத்தை உண்டாக்குங்கள்.

6. ஆண் வேலைக்காரர், டிரைவர், நெருங்கிய நண்பர், உறவினர் என எந்த ஆணுடனும் மகளைத் தனிமையில் விட்டுச் செல்லாதீர்கள்.

7. எங்கேயாவது வழி தவறிக் காணாமல் போனாலும், கண்களில் தென்படுகிறவர்களிடம் உதவி கேட்காமல், போலீஸ்காரரிடமோ, பெண்களிடமோ விசாரிக்கச் சொல்லுங்கள்.

8. படுக்கையில் சிறுநீர் கழித்தல், அளவுக்கதிமாக உடல் வியர்த்தல், மனச்சோர்வு, பசியின்மை, பயம், தூக்கமின்மை, படிப்பில் கவனமின்மை போன்ற அறிகுறிகள் உங்கள் மகளிடம் தென்பட்டால் அலட்சியம் செய்யாதீர்கள். அவள் பாலியல் ரிதியான தாக்குதலுக்கு உட்பட்டிருந் தாலும்கூட இந்த அறிகுறிகள் இருக்கக் கூடும்.

9. குழந்தைக்கு எடுத்த எடுப்பிலேயே கருத்தரித்தல், பிள்ளை பிறப்பு போன்றவற்றைக் கற்றுக் கொடுக்க முடியாது. கதைப் புத்தகங்கள், பூக்கள், விலங்குகள் படங்கள் போட்ட கலர் புத்தகங்களை வைத்துக் கொண்டு, விதையிலிருந்து பூ எப்படி உருவாகிறது என்றும், இது அம்மா கரடி, இது அப்பா கரடி, இது அவங்களோட குட்டி என்றும், குழந்தைக்குப் பாலூட்டும் அம்மாவைக் காட்டியும் மேற்சொன்ன விஷயங்களைப் புரிய வைக்கலாம்.

10. இந்தக் காலத்துப் பெண் குழந்தைகள் எட்டு, ஒன்பது வயதிலேயே பூப்பெய்துகிறார்கள். எனவே அவர்களுக்கு முன்கூட்டியே மாதவிலக்கு என்றால் என்ன, அது வந்ததும் என்ன செய்ய வேண்டும், அது பயப்படுகிற விஷயமல்ல என்பதையெல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

11. சின்னத்திரையின் ஆக்கிரமிப்பு இன்று ரொம்பவே அதிகம். சானிட்டரி நாப்கின், ஆணுறை, கருத்தடை மாத்திரைகள் என எல்லாவற்றுக்கும் விளம்பரங்கள் வருகிற போது அது என்ன என்று தெரிந்து கொள்கிற ஆர்வம் குழந்தைக்கு வரலாம். உங்கள் குழந்தையின் வயதைப் பொறுத்து, அந்தப் பொருட்கள் பற்றிய அடிப்படை விவரங்களை நாசுக்காக நீங்கள் விளக்கலாம்.

12. பருவ வயதை எட்டும் போது ஏற்படுகிற இனக் கவர்ச்சி பற்றியும், அது இயல்பான ஒன்றே என்றும் சொல்லிக் கொடுங்கள். அதை ஒரு சீரியஸான விஷயமாக நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை என்பதை விளக்குங்கள்.

13. பருவ வயதை எட்டியதும் உங்கள் மகளுக்கு ஆண்-பெண் உறவு பற்றி விளக்கலாம். அதில் அசிங்கப்படவோ, தயங்கவோ வேண்டியதில்லை. ஆபத்தான சூழ்நிலைகளிலிருந்து அவள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அந்த அறிவுரை அவளுக்கு முக்கியம்.

14. தவிர்க்க முடியாமல் உங்கள் மகள் அப்படி ஏதேனும் பாலியல் பலாத்காரத்துக்கு பலியாகி இருந்தாலும், அவளைத் திட்டாதீர்கள். என்ன நடந்தது, எப்படி நடந்தது எனப் பொறுமையாக விசாரியுங்கள். அடுத்து அவளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். எதிர்காலத்தில் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்துங்கள்.

15. திருமணத்துக்கு முன்பான செக்ஸ் ஏன் தவறானது என்றும், அது எந்தளவுக்குப் பெண்களை பாதிக்கும் என்றும், அதன் பின் விளைவுகள் என்னவென்றும் உங்கள் மகளுக்கு எச்சரிக்க வேண்டும். அதைத் தவிர்த்து ஏன் கூடாது என்பதற்கான விளக்கம் சொல்லி விட்டால் அதுவே அவர்களுக்கு விழிப் புணர்வைத் தரும்.

மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:

For more info visit:


நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்

Accumulation of waste / toxins in our body is disease
Elimination of waste / toxins is cure

இதை மக்களுக்கு புரியவைத்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதே எனது நோக்கம். 

திருக்குறள் (அறிவுடைமை #0423)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

தெளிவுரை: 

எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும்அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ தொடர்புகொள்ளலாம்.


Thanks & Regards,
    Vineeth.S
+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com

முளையிலேயே கிள்ளவேண்டிய பிடிவாதம்!

முளையிலேயே கிள்ளவேண்டிய பிடிவாதம்!


‘பிடிவாதம், குழந்தைகளின் இயல்பான குணம்தான்!’ என்று நினைக்கிற எவரையுமே உலுக்கிப் போட்டுவிடக் கூடியது, நம் வாசகி ஒருவர் எழுதியிருந்த இந்த சம்பவம்..

‘எங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கு ஒரே பையன் என்பதால், அவன் என்ன கேட்டாலும் உடனடியாக வாங்கிக் கொடுத்து விடுவார்கள். அவன் பிடிவாதமும் வீம்பும் தெரு முழுக்க பிரசித்தம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருநாள்.. அப்போது அவன் ஏழாவது படித்துக் கொண்டிருந்தான். பள்ளியிலிருந்து வந்தவன், அவன் அப்பாவிடம் நண்பர்களுடன் சினிமாவுக்குப் போக காசு கேட்டான். ‘இது என்ன புதுப் பழக்கம்?’ என்று முதன்முறையாகக் கண்டித்தவர், பணம் தர மறுத்து விட்டு வெளியில் சென்றுவிட, ஒரு கெரசின் டின்னுடன் அழுது கொண்டே தடதடவென மொட்டை மாடிக்குப் போன அந்தப் பாவிப் பையன்.. தனக்குத் தானே தீ வைத்து.. ப்ச்.. பரிதாபம்!

தங்கள் அருமை புத்திரன், ‘ஐயோ.. எரியுதே..’ என்று அலறி அலறி, செத்துப்போன துக்கத்தைத் தாள முடியாமல், இன்றளவும் நடை பிணமாகவே வாழ்கிறார்கள் அந்தப் பெற்றவர்கள்..’

- என்று அந்தக் கடிதம் சொன்ன விஷயத்தின் உக்கிரத்தை நம்மால் தாளவே முடியவில்லை.

‘இந்தக் காலத்து குழந்தைகள் ‘சென்ஸிடிவ்’ ஆக இருக்கிறார்களா? அல்லது பெற்றவர்களுக்கு பிள்ளைகளை வளர்க்கத் தெரியவில்லையா?’ என்கிற அந்த வாசகியின் கேள்வியுடன், சென்னையைச் சேர்ந்த பிரபல குழந் தைகள் மனநல நிபுணர் ஜெயந்தினியை சந்தித்தோம்.

‘‘குழந்தைகள் பிடிவாதம் பிடிக்கிற விஷயத்தில், பெற்றவர்கள்தான் முதல் குற்றவாளிகள்!’’ என்றவர், பெற்றோர் செய்கிற தவறுகளை சுட்டிக் காட்டினார்.

‘‘நான் சில அம்மாக்களை சந்தித்திருக்கிறேன். ‘இவன் ஒரு விஷயத்தை நினைச் சுட்டான்னா, அழுது, அடம் பிடிச்சாவது சாதிச்சிடுவான்.. அப்பிடியே எங்கப்பா மாதிரி..’ என்றும், ‘நான் பசங்களுக்கு எதையுமே இல்லைனு சொல்றதில்லை. அந்தக் காலத்துல நாமதான் கஷ்டப்பட்டு வளர்ந்தோம். பசங்களுக்குக் கஷ்டம் தெரியக் கூடாது..’ என்றும் பெருமையுடன் சொல்வார்கள். இப்படி.. வெற்றுத் தாள் போல எதையும் ஏற்கத் தயாராக இருக்கிற குழந்தையின் மனதில், தான் நினைத்தது எல்லாம் நடக்கும் என்கிற எண்ணத்தை விதைத்து, அவர்கள் மனம் முழுக்க பிடிவாதத்தை இறைக்கிற தவறைச் செய்கிறவர்கள் பெற்றவர்கள் தான்! பெற்றோர் தங்கள் குழந்தையின் மீது உள்ள பாசத்தை வெளிப்படுத்தத்தான், இப்படி அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள். உண்மையில், குழந்தையின் மீது பாசமும் அக்கறையும் இருக்கிறவர்கள், இப்படி நடந்து கொள்ளக் கூடாது..’’ என்றவர், அது ஏன் என்பதையும் விவரித்தார்.

‘‘குழந்தைக்கு ‘நோ’ என்கிற வார்த்தையை அழுத்தம் திருத்தமாகச் சொல்லாத வரையில், பெற்றோரின் எந்தக் கஷ்டமுமே குழந்தைக்குத் தெரியாது. அதோடு, ‘நமக்குச் செய்யவேண்டியது பெற்றவர்களான இவர்களின் கடமை.. செய்கிறார்கள்’ என்று ‘டேக்கன் ஃபார் கிரான்டட்’ ஆக.. அதாவது.. தனக்கு சாதகமாகத்தான் குழந்தை எடுத்துக் கொள்ளுமே தவிர, ‘நம் மேல் எத்தனை பிரியம் இவர்களுக்கு’ என்றெல்லாம் நினைக்கவே நினைக்காது.

மாறாக, ‘இந்தப் பொருளோட விலை ரொம்ப ஜாஸ்தி. அம்மா கிட்ட அவ்வளவு பணம் இல்ல..’ என்பது போன்ற உண்மையான காரணங்களை எடுத்துச் சொல்லவேண்டும். அப்போதுதான், குழந்தைக்கு பணத்தின் அருமையும், பெற்றோரின் அருமையும் தெரியும்.

எந்தக் குழந்தைக்கு கேட்டதெல்லாம் மிக எளிதாகக் கிடைத்து விடுகிறதோ.. அந்தக் குழந்தை, மனதைரியம் குறைந்ததாகவும், தோல்வியை தாங்கிக் கொள்கிற சக்தி இல்லாததாகவும்தான் வளருகிறது. இப்படிப்பட்ட குழந்தைகள்தான், தான் நினைத்த ஏதோ சிறு ஒரு விஷயத்தை அடைய முடியாவிட்டால்கூட மனம் உடைந்துபோய் வாழ்வில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் இழக்கத் தொடங்கி விடுகிறார்கள்’’ என்றவர், குழந்தைகளின் பிடிவாதம் எந்தக் கட்டத்தில் ஆபத்தானது என்பது பற்றியும் தெளிவுபடுத்தினார்.

‘‘பொதுவாக, பிடிவாதம் பிடிப்பது குழந்தை யின் இயல்புதான். ஏதோ ஒரு பொருளுக் காகவோ, என்றைக்கோ ஒருநாளோ பிடிவாதம் பிடிக்கிற குழந்தையை நினைத்து, பெற்றோர் பயப்படத் தேவையில்லை. அந்தப் பழக்கம் குழந்தை வளர வளர சரியாகிவிடும். ஆனால், குழந்தை எதற்கெடுத்தாலும் பிடிவாதம் பிடிக்கும்போதுதான் அது திருத்தப்பட வேண்டிய பிரச்னையாகிறது.

சின்ன விஷயத்துக்கெல்லாம் அழுது அடம்பிடிப்பது, கீழே விழுந்து புரள்வது, கையில் கிடைப்பதை எடுத்து வீசுவது.. என்று அதகளம் செய்து வளரும் குழந்தைகள், விளையாட்டில் சிறு தோல்வி யைக் கூடத் தாங்க முடியாமல், உடன் விளையாடும் குழந்தைகளை அடிப்பது, கிள்ளுவது, கடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடு வார்கள். காலப்போக்கில் தனக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால் பெற்றோரைக்கூட மதிக்க மாட்டார்கள்!’’ என்றவர், முடிவாக சொன்னது ஒவ்வொரு பெற்றோருக்குமான எச்சரிக்கை..

‘‘பொதுவாகவே, வாழ்வில் தவறான முடிவு எடுக்கும் பெரும் பான்மையானவர்கள், அதிக பிடிவாத குணமுடையவர்கள்தான். அனுசரித்துப் போகாமல், தான் நினைத்ததுதான் நடக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறவர்கள், தொழிலில் மட்டுமல்ல.. திருமண வாழ்க்கையிலும் தோல்வியையே அடைகிறார்கள். தானும் வாழாமல், தன்னைச் சார்ந்தவர்களையும் வாழவிடாமல், பிரச்னைக் குரிய நபர்களாகவே மாறிப் போகிறார்கள்’’.

உஷார் மம்மீஸ் உஷார்!

குழந்தையை பிடிவாத குணமில்லாமல் வளர்ப்பதற்கு டாக்டர் ஜெயந்தினி கொடுத்த ‘பிராக்டிகல் டிப்ஸ்’..

குழந்தைக்கு சாப்பிட, நடக்க கற்றுத் தருவதைப் போலவே, தோல்விகளை சந்திக்கவும் கற்றுக் கொடுங்கள். உதாரணமாக, குழந்தை சாக்லெட் கேட்டால், அன்பாக, ‘நாளைக்கு வாங்கித் தர்றேன்..’ என்று சொல்லுங்கள். குழந்தை ‘இப்பவே வேணும்..’ என்று அழுதாலும், ‘நாளைதான்’ என்று தெளிவாகச் சொல்லுங்கள். உங்களிடம் உறுதியில்லாவிட்டால், அதன் பிடிவாதம் அதிகரிக்கவே செய்யும்.

குழந்தை கேட்பதற்கு, வீட்டில் உள்ள அனைவருமே ஒரே பதிலை சொல்ல வேண்டும். ‘அப்பா தர மாட்டேங்கறாரா? நான் வாங்கித் தர்றேன் டீ என் செல்லம்’ என்று சொன்னால், குழந்தைக்குக் குளிர் விட்டு விடும்.

குழந்தை அழுது, புரண்டு, ஆர்ப் பாட்டம் செய்தால், எரிச்சலோ கோபமோ கொள்ளக் கூடாது. பரிதாபப்படவும் கூடாது. அதை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும். தன்னை யாரும் கவனிக்க வில்லை என்பது தெரிந்ததும், குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு, இயல்பாகி விடும்.

குழந்தை உங்களிடம் கேட்கிற பொருள் அதற்குத் தேவையா.. இல்லையா.. என்பதை முடிவு செய்யவேண்டியது குழந்தை அல்ல.. நீங்கள்தான்!

சேட்டை செய்கிற உங்கள் குழந்தையை, இதே விஷமத்தை பக்கத்து வீட்டுக் குழந்தை செய்தால், எப்படி உணர்வீர்களோ, அதே கண்ணோட்டத்தோடு பாருங்கள். அப்போதுதான் உங்களால் சரியான முடிவை எடுக்க முடியும்.

நன்றி - விகடன் பொக்கிஷம் மம்மீஸ் கிளப்

மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:


நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்

Accumulation of waste / toxins in our body is disease
Elimination of waste / toxins is cure

இதை மக்களுக்கு புரியவைத்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதே எனது நோக்கம். 

திருக்குறள் (அறிவுடைமை #0423)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

தெளிவுரை: 

எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும்அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ தொடர்புகொள்ளலாம்.

Thanks & Regards,
    Vineeth.S
+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com