மஞ்சள் காமாலைக்கு அஞ்சத் தேவையில்லை!




மஞ்சள் காமாலைக்கு அஞ்சத் தேவையில்லை!

(குறிப்பு: Regha Health Care என்று எந்த அலுவலகமோ மருத்துவமனையோ கிடையாது. ஆரோக்கியமாக வாழ வழிகாட்டி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே இந்த முகநூல் பக்கம் மற்றும் குழுவின் நோக்கம்.)



மஞ்சள் காமாலைக்கான அறிகுறிகள்:

# சோர்வு, 

# பலவீனம், 

# உடல் அரிப்பு, 

# வாந்தி, 

# குமட்டல், 

# பசியின்மை, 

# மலக்கட்டு, 

# கழிச்சல், 

# சுரம், 

# மஞ்சள் நிறத்தில் சிறுநீர் 

போன்ற அறிகுறிகள் காணப்படும்.


மஞ்சள் காமாலை வருவதற்கான காரணங்களாவன:

# பொதுவாக மஞ்சள் காமாலை நோய், பித்தம் அதிகரிப்பதால் வருகிறது. கல்லீரல் செல்கள் பித்தநீரை வெளிப்படுத்தாதபோதும், பித்தப்பையில் இருந்து பித்தநீர் குடலுக்கு வருகின்ற பாதையில் ஏற்படும் அடைப்பினாலும் காமாலை ஏற்படுகிறது. 

# சில வகை ஆங்கில மருந்துகளினாலும், மது அருந்துவதாலும் ஏற்படுகிறது. 

# இரவு தாமதமாக தூங்குவதாலும் ஏற்படுகிறது. 

# உடலுக்கு போதிய ஓய்வின்றி உழைப்பதாலும், ஓய்வு கொடுக்காமல் இருப்பதாலும் ஏற்படுகிறது. 

# பால் கலந்த காப்பி, பால் கலந்த தேனீர்(டீ), செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை அடிக்கடி பருகுவதாலும் ஏற்படுகிறது. 


மஞ்சள் காமாலைக்கு நிரந்தர தீர்வுகள்:

# பால் கலந்த டீ, காப்பி மற்றும் செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக கருப்பட்டி காப்பி, சுக்கு காப்பி, பால் கலக்காத இஞ்சு டீ மற்றும் எலுமிச்சை டீ, இயற்கையான பழச்சாறுகள், கரும்புச்சாறு, பதநீர், மோர் போன்றவற்றை பருகலாம். அதன் சுவை நம் நாவால் உறிந்த பிறகு தான் விழுங்க வேண்டும்.

# பசியை நன்கு உணர்ந்தபின்னரே நமக்கு பிடித்த உணவை மட்டும் போதும் என்கிற உணர்வு வரும்வரை உட்கொள்ள வேண்டும். உணவை நிதானமாக மென்று அதன் சுவை நம் நாவால் உறிந்த பிறகு விழுங்க வேண்டும். சிறிது நேரம் களித்து தண்ணீரை வாய் வைத்து அருந்தலாம்.

# நமக்கு அசதியாக இருக்கும்போது ஓய்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தூக்கம் வந்தால் தூங்க செல்வது அல்லது ஓய்வு எடுப்பது நல்லது.

# முடிந்தவரை தொட்டதிற்கெல்லாம் ஆங்கில மருந்துக்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அவை தற்காலிக நிவாரணத்தையும் நிரந்தர துன்பத்தையும் தரக்கூடியவை.

# இரவ முடிந்தவரை விரைவாக தூங்க செல்லவேண்டும். 9 மணி அளவில் தூங்கச் சென்றால் சிறப்பாக இருக்கும். 

# தூங்கும் இடம் இயற்கை காற்றோட்டம் உள்ள இடமாக இருக்க வேண்டும். ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு தூங்க வேண்டும். கொசு தொந்தரவிருந்தால் காற்று வரக்கூடிய கொசுவலையை ஜன்னலில் மாட்டிக்கொள்ளலாம். குறிப்பாக கொசுவிரட்டிகள் உபயோகப்படுத்தக் கூடாது. 
.

இவற்றை பின்பற்றுவதால் பித்தம் நல்ல முறையில் சுரந்து நம் ரத்த குழாயில் படிந்துள்ள LDL (Low-density lipoprotein) கெட்ட கொழுப்புக்களையும் இலவசமாகவே கரைத்துவிடும். இதனால் மாரடைப்பும் பக்கவாதமும் தடுக்கப்படும். பித்த நரையும் மன அழுத்தமும் வராது.


சித்த மருத்துவத்தில் மஞ்சள் காமாலைக்கான எளிய தற்காலிக தீர்வுகள்:

# கீழாநெல்லி இலை, வேர் இரண்டையும் அரைத்து நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம்.

# அரை ஸ்பூன் கடுக்காய்ப்பொடியை நீரில் கலந்து குடிக்கலாம்.

# அருநெல்லி இலையை அரைத்து சிறு நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து அருந்தலாம்.

# கொன்றைப் பூவையும், கொழுந்தையும் அரைத்த சுண்டைக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம்.

# சுரை இலை கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்து அரை டம்ளராக வற்றவைத்து சர்க்கரை கலந்து அருந்தலாம்.

# வில்வ இலைச் சாறு 30 மிலி எடுத்து அதில் மிளகுத் தூள், சர்க்கரை கலந்து பருகலாம்.

# வேம்பின் துளிர், முதிர்ந்த இலை இரண்டையும் பொடித்து இதற்கு அரைபங்கு ஒமம், உப்பு சேர்த்து அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.

# நெல்லி வற்றல், மஞ்சள், புதினா சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து அருந்தலாம்.

# 15 மி.லி. கரிசலாங்கண்ணிச் சாறுடன், சர்க்கரை கலந்து பருகலாம்.

# ஒரு ஸ்பூன் வெட்டி வேர்ப்பொடியில் அரை டம்ளர் நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து வடித்துப் பருகலாம்.

# சிற்றாமணக்கு இலையையும், கீழாநெல்லியையும் சமஅளவு எடுத்து அரைத்து மூன்று நாட்கள் காலையில், சிறு எலுமிச்சை அளவு உண்டு, பிறகு சிவதைப் பொடி அரைஸ்பூன் உண்ணலாம்.

# செங்கரும்பின் சாற்றை ஒரு டம்ளர் காலை மாலை அருந்தலாம்.

# சீரகத்தைக் கரிசாலைச் சாற்றில் ஊறவிட்டு பொடித்தப் பொடி நான்கு கிராம், சர்க்கரை இரண்டு கிராம், சுக்குப் பொடி இரண்டு கிராம் கலந்து அதில் ஒரு ஸ்பூன் உண்ணலாம்.

# மிளகின் பழச்சாறு 15 மிலி எடுத்து மஞ்சள் பொடி கால் ஸ்பூன் சேர்த்து அருந்தலாம்.

# அன்னாசிப் பழத்தை நன்கு பிழிந்து சாறு எடுத்து 30 மிலி அருந்தலாம்.

# நெருஞ்சில் இலைச்சாறு 30 மி.லி.யுடன் நாட்டு சர்க்கரை கலந்து பருகலாம்.

# பத்து கிராம் வேப்பம் பட்டை நசுக்கி, அதில் இரண்டு டம்ளர் நீர் விட்டு அரை டம்ளராக காய்ச்சி அருந்தலாம்.


நம் உணவில் சேர்க்க வேண்டியவை:

# சின்ன வெங்காயம், 

# மோர், 

# இளநீர், 

# பேயன் வாழைப்பழம் (அ) நாட்டு வாழைப்பழம், 

# மொந்தன் வாழைப்பழம், 

# வெண் பூசணி, 

# தர்பூசணி, 

# மாதுளம்பழம், 

# வெள்ளரிக்காய்.


நம் உணவில் தவிர்க்க வேண்டியவை:

# அசைவ உணவுகள், 

# எண்ணெய், 

# நெய், 

# காரம்.

.

நன்றி - மருத்துவர் எஸ். சுஜாதா ஜோசப் (சித்த மருத்துவ குறிப்புகள்)
.

மஞ்சள் காமாலை குறித்து சட்டம் என்ன சொல்கிறது:
.

நம் உடலில் ஏற்படும் தொந்தரவுகளின் அடிப்படை காரணம் (தவறான வாழ்க்கைமுறை) தெரியாமல் அவற்றை குணப்படுத்த முடியாது என நமது அரசாங்கம் சட்டம் கூட இயற்றியுள்ளது. மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940 (Drugs and Cosmetics Act, 1940) 


Schedule J

33. Jaundice/Hepatitis/Liver disorders (Yellow fever, hepatitis and all diseases related to liver)

மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய் (ஹெபடைட்டிஸ்), மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட எந்த நோய்களும்

50. Stones in gall-bladder, kidney, bladder (Kidneys, Gall bladder and Urinary bladder stones)

சிறுநீரகக் கற்கள், பித்தப்பை கற்கள், சிறுநீர்ப்பை கற்கள்

அந்த பட்டியலில் கல்லீரல் தொடர்பான நோய்களும் பித்தப்பை கற்களும் அடக்கம். எனவே ஆங்கில மருந்துகளை கொண்டு இந்த பிரச்சினைகளை நிரந்தரமாக குணப்படுத்த முடியாது என்கிற உண்மையை அறிந்துகொள்ளுங்கள். 

எனவே ஆங்கில மருந்துக்களை கொண்டு கல்லீரல் தொடர்பான நோய்களுக்கும் பித்தப்பை கற்களுக்கும் சிகிச்சை கொடுப்பதால் தற்காலிக நிவாரணம் மட்டுமே கிடைக்கும். இனியாவது சிந்தித்து செயல்படுங்கள் மக்களே.


குறிப்பு:

நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தராமான தீர்வை தர இயலாது. சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

உதாரணமாக நம் தவறான வாழ்க்கைமுறையினால் ஏற்படும் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற தொந்தரவுகளுக்கு மருத்துவ சிகிச்சையால் எவ்வாறு நிரந்தர தீர்வு அளிக்க முடியும். 

ஒரு மாதத்திற்கான உணவை ஒரேநாளில் உண்பது எவ்வாறு சாதியப்ப்படும்?

இதை மக்களுக்கு புரியவைத்து மருந்துக்களின்றி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.

மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் இலவசமாக ஆலோசனைகள் பெற கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ / முகநூல் பக்கத்திலோ / வலைத்தளத்திலோ தொடர்பு கொள்ளலாம்.

(குறிப்பு : தயவுசெய்து பொறுமையாக இருப்பவர்கள், நேர்மையாக வாழ்பவர்கள் மற்றும் அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாதவர்கள் மற்றும் ஆங்கில மருந்துக்கள், டீ, காப்பி, கஞ்சா உட்கொள்ளுதல், புகை பிடித்தல், மது அருந்துதல், புகையிலை, பாக்கு, மூக்குப்பொடி போன்ற போதை பழக்கத்தை விடுவதற்கு தயாராக உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்.

நான் முழுமையான விபரங்கள் இல்லாமல் வரும் இமெயில்கள் / Commentகள் மற்றும் போதிய விபரங்கள் இல்லாமல் ஒரே வரியில் கேள்வி கேட்கும் நபர்களுக்கு பதில் கூற விரும்புவதில்லை.)

மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:

.


Thanks & Regards,      Vineeth.S
  +91 98409 80224
  +91 97509 56398

      Regha Health Care
(A Non-Profit Organization) 

Whatsapp No. 9840980224
Telegram No.   9840980224

ஸ்டீராய்டு (Steroid) பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்!



உடனடியாக குணமடைவது உடலுக்குக் கேடா?

ஸ்டீராய்டு (Steroid) பற்றி ரிந்துக்கொள்ளுங்கள்!


டாக்டர்களின் கையெழுத்து மருந்துக் கடைக்காரருக்கு மட்டுமே புரிவது ஏன்?


“என் வசூல் முடிஞ்சிருச்சு. இப்ப உன் நேரம்'' என்று டாக்டர், மருந்துக் கடைக்காரருக்கு உணர்த்துகிறாராம்.

வாட்ஸப்பில் வந்த இது, நகைச்சுவையாக இருந்தாலும், இன்றைய நிஜமும் இதுதான்.

சேவையாக நினைத்துச் செய்யப்பட வேண்டிய மருத்துவம், இன்று பணம் கொழிக்கிற பிசினஸ்.மக்களிடமிருந்து பணத்தைச் சுரண்ட, மருத்துவர்கள் கையாள்கிற டெக்னிக்குகள் சொல்லி மாளாதவை.

மக்களுக்கு வேண்டியதெல்லாம் நோய் உடனடியாக குணமாக வேண்டும். அப்படிக் குணப்படுத்துகிற டாக்டர் அவர்களைப் பொறுத்த வரை கைராசிக்காரர்.

ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வரும் போதே நோய் குணமான உணர்வை உண்டாக்கும் மருத்துவர்கள் இன்று எக்கச்சக்கம். அதற்கு அவர்களது திறமையோ, அனுபவமோ காரணமில்லை. 

பின்னே..?

அவர்கள் தரும் ஸ்டீராய்டு கலந்த மருந்துகள்!

அதென்ன ஸ்டீராய்டு?


ஸ்டீராய்டு என்பது நோயைக் குணமாக்கும் மருந்தல்ல. மறைக்கும் மருந்து. ஆஸ்துமா அதிகமாகி, திணறத் திணற ஆஸ்பத்திரிக்கு போகும் ஒரு நபர், ஸ்டீராய்டு கலந்த மருந்துகள் கொடுக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே சராசரி நிலைக்குத் திரும்புவார். அந்த நேரத்துக்கு அவரது ஆஸ்துமா தீவிரம் மறைக்கப்பட்டதே தவிர, குணமானதாக அர்த்தமில்லை. ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டால் உண்டாகும் பயங்கரங்கள் ஏராளம்.

# அனாபாலிக் ஸ்டீராய்டு, 

# கார்டிகோ ஸ்டீராய்டு 

என ஸ்டீராய்டில் இரண்டு வகைகள் உள்ளன. முதல் வகை பெரும்பாலும் விளையாட்டு வீரர்களால் உபயோகப்படுத்தப்படுவது. இது அவர்களுக்கு உடனடியாக ஒரு தெம்பை, உற்சாகத்தை, தசைகளுக்கு வலுவைத் தரக் கூடியது.விளையாட்டு வீரர் பென் ஜான்சன், போட்டியின் போது போதை மருந்து உட்கொண்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டு, சர்ச்சைக்குள்ளானது கூட இந்த வகை ஸ்டீராய்டு காரணமாகத்தான். இரண்டாவது வகை ஸ்டீராய்டு, மருத்துவத் துறையில் உபயோகிக்கப்படுவது. இதுவும் ஆபத்தே.

இந்தி நடிகர் அம்ஜத் கானை ஞாபகம் வைத்திருப்பவர்களுக்கு அவரது மாமிச மலை போன்ற உடல் கட்டாயம் நினைவை முட்டும். உடல் நலக் கோளாறு ஒன்றுக்கு அவர் நீண்ட நாட்களாக உட்கொண்ட ஸ்டீராய்டு கலந்த மருந்துகள்தான் அதற்குக் காரணம் என்பது பிறகு கண்டறியப்பட்டது. நம்மூரில் நடிகர் அஜீத், முதுகுவலிக்காக உட்கொண்ட மருந்துகள் கூட ஸ்டீராய்டு கலந்தவையாம். அதனால் தான் இடையில் சில நாட்களுக்கு அவரது உடல் எக்குத்தப்பாக பெருத்துப் போனதாக சினிமா வட்டாரத்தில் ஒரு பேச்சு உண்டு. 

இப்படி நிறைய உதாரணங்களைப் பட்டியலிடலாம் ஸ்டீராய்டு பாதிப்புகளுக்கு.‘‘ஸ்டீராய்டு மருந்துகள் நல்லதா, கெட்டதா என்பதைத் தெரிந்துகொள்ளும் முன் ஸ்டீராய்டு என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம்’’ என்கிறார் இன்டர்னல் மெடிசின் சிறப்பு மருத்துவர் சுப்ரமணியன் சுவாமிநாதன். 

‘‘தைராய்டு, இன்சுலின் போல நம் உடலில் சுரக்கும் ஒருவகை ஹார்மோன்தான் ஸ்டீராய்டு (Steroid). 
.

உடல் நலக் குறைவான அந்த நேரங்களில் ஸ்டீராய்டு ஹார்மோனின் அமைப்பில் உருவான மாத்திரைகளையோ, ஊசிகளையோ எடுத்துக் கொள்கிறோம் இவைதான் ஸ்டீராய்டு மருந்துகள். 

இந்த ஸ்டீராய்டு ஹார்மோன் நம் உடலில் வயிற்றுப் பகுதியில் சிறுநீரகங்களுக்கு மேல் அமைந்துள்ள அட்ரீனல் சுரப்பியிலும், இனப்பெருக்க மண்டலத்தில் இருக்கும் விதைப்பை மற்றும் கருப்பைகளிலும் தயாராகிறது. அட்ரினல் சுரப்பியில் சுரக்கும் ஹார்மோனை கார்டிகோ ஸ்டீராய்டு (Cortico steroid) என்கிறோம். பொதுவாக நாம் ஸ்டீராய்டு என்று சொல்வது இந்த கார்டிகோஸ்டீராய்டு ஹார்மோனைதான். உடலில் சோடியம் அளவைப் பராமரிப்பதில் கார்டிகோ ஹார்மோன் முக்கியப் பங்கு வகிக்கிறது. 

இதில் உற்பத்தியாகும் இன்னொரு முக்கிய ஹார்மோனான கார்டிசோல் ஹார்மோன் மன அழுத்தத்தைத் தீர்மானிப்பதில் முக்கிய இடம் பெறுகிறது. பிட்யூட்டரியில் சுரக்கும் ஹார்மோனை Androgenic என்கிறோம். செக்ஸ் ஹார்மோன் என்று சொல்லப்படும் இந்த ஆண்ட்ரோஜெனிக் ஹார்மோன் தான் பாலியல் சார்ந்த செயல்பாடுகளைத் தீர்மானிக்கிறது’’ என்கிறார் சுப்ரமணியன் சுவாமிநாதன். 
.

ஸ்டீராய்டு மருந்துகள் பற்றித் பேசத் தொடங்குகிறார் ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை சிறப்பு மருத்துவரான ஸ்ரீதரன். 

‘‘நாள்பட்ட ஆஸ்துமாவுக்கு ஸ்டீராய்டு மருந்தை இன்ஹேலராக, நெபுலைஸராக கொடுக்கும்போது ஆஸ்துமாவிற்கு தற்காலிக நிவாரணம் கிடைக்கிறது. சோரியாசிஸ், ருமட்டாய்ட் ஆர்த்ரைட்டிஸ் மற்றும் வலி, வேதனை, வீக்கம் போன்றவற்றை தற்காலிகமாக குறைக்க ஸ்டீராய்டு மருந்துகள் பரிந்துரைக்கப் படுகிறது.

உறுப்பு மாற்று சிகிச்சைக்குப் பிறகு இது நம் உறுப்பு இல்லை என்பதை உணர்ந்து கொண்டு புதிய உறுப்புக்கு எதிராக நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி தீவிரமாக செயல்படும். அந்த நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியின் வேகத்தைத் தணித்து ஒவ்வாமையைப் போக்கவும் ஸ்டீராய்டு மருந்துகள் நிச்சயம் தேவை. 

(உறுப்பு மாற்று சிகிச்சைக்குப்பின் புதிய உறுப்புக்கு எதிராக நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி தீவிரமாக செயல்படும் என்பதை ஆங்கில மருத்துவர்களே ஒப்புக்கொள்கின்றனர். நமது உடலானது ஒருபோதும் அந்நிய பொருட்களையோ, உறுப்புக்களையோ ஏற்றுக்கொள்ளாது.)

சருமம் தொடர்பான பிரச்னைகளுக்கும், வலி, வீக்கத்தைக் குறைக்கவும் ஸ்டீராய்டு ஆயின்ட்மென்ட்டாக கொடுக்கப்படுகிறது. ரத்தப்புற்று நோய்கள், ரத்த தட்டணு குறைபாடு நோய்கள், குழந்தைகளுக்கு வரும் புற்றுநோய்கள், சிறுநீரகப் பாதிப்புகள், குடல் அழற்சி நோய்கள், மூளையில் ஏற்படும் கட்டி ஆகியவற்றுக்கும் அறுவைசிகிச்சைக்கு முன் மூளையில் ஏற்படும் வீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் மூளையில் ஏற்படும் காசநோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கும் ஸ்டீராய்டு கொடுக்கப்படுகிறது’’ என்பவர், ஸ்டீராய்டு மருந்துகள் எப்போது பிரச்னையாகிறது என்பதைத் தொடர்ந்து விளக்குகிறார். 
.

‘‘ஸ்டீராய்டு மருந்துகள் தொடர்ந்து பயன்படுத்துவதால் ஆபத்தான பக்கவிளைவுகள் ஏற்படலாம். ஸ்டீராய்டை தொடர்ந்து பயன்படுத்துகிறவர்களுக்கு 

# உடலில் சோடியம் அளவு அதிகமாகி உடலில் நீர் தங்கிவிடும். 

# பொட்டாசியம் அளவு குறைந்தால் இதயத்தின் செயல்பாடுகள் பாதிக்கும். 

# எடை கூடும், 

# நோய் எதிர்ப்பு சக்தியின் வேகத்தைத் தணிப்பதால் நோய்த்தொற்று எளிதில் வரும், 

# முகம் வீங்கும், 

# சர்க்கரை அளவு ரத்தத்தில் அதிகமாகும், 

# கண்புரை வரும் வாய்ப்பு அதிகம், 

# எலும்புகள் பலவீனமடைந்து முறியும். 

அடிக்கடி ஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்துகிற மருத்துவர்களைக்கூட நோயாளிகள் அறிந்து தவிர்க்க வேண்டும். 
.

விளையாட்டுத்துறையில் ஸ்டீராய்டு மருந்தை உடல் கட்டமைப்புக்காகவும், ஊக்க மருந்தாகவும் சிலர் தவறாகப் பயன்படுத்தி விடுகிறார்கள். ஆனால், இது சட்ட விரோதமானது மட்டுமல்ல... உயிருக்கு ஆபத்தானதும் கூட. இதனால், 

# உயர் ரத்த அழுத்தம், 

# கெட்ட கொலஸ்ட்ரால், 

# கல்லீரல் சேதம், 

# இதயம் செயலிழப்பு, 

# ஹார்மோன் குளறுபடிகள், 

# மன அழுத்தம், 

# மூர்க்கத்தனம் உண்டாவது என்று பல பிரச்னைகள் உண்டாகும். 

# விந்தணுக்கள் உற்பத்தி குறைவு, 

# மலட்டுத்தன்மை 

போன்ற குறைபாடுகளையும் நாமே விலை கொடுத்து வாங்கியதுபோல் ஆகிவிடும்’’ என்கிறார் ஸ்ரீதரன்.
.

‘‘ஸ்டீராய்டு மாத்திரைகள் என்றால் நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டியது கட்டாயம். ஒரு மாத்திரையைப் பார்த்த உடனே இது ஸ்டீராய்டு என்றெல்லாம் தெரிந்துகொள்ள முடியாது. தொடர்ச்சியாக மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறவர்கள் அது ஸ்டீராய்டா என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

தேவைப்பட்டால் இன்னொரு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதிலும் தவறில்லை. முக்கியமாக மருந்துச்சீட்டு இல்லாமல் மருந்துகள், மாத்திரைகள் வாங்கும் பழக்கம் நம்மிடம் நிறைய உண்டு. இதுபோல ஓவர் தி கவுன்டராக மாத்திரை வாங்கும்போதும் ஸ்டீராய்டு மருந்துகளை மருந்துக்கடைக்காரர்கள் கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். 

அதனால், மருந்துச்சீட்டு இல்லாமல் மாத்திரை வாங்குவதை முழுவதும் தவிர்க்க வேண்டும். மருத்துவர் ஸ்டீராய்டை ஒருமுறை பரிந்துரைத்தால், அடுத்த முறை மருத்துவரைப் பார்க்காமலே தொடர்ந்து வாங்கிப் பயன்படுத்திக் கொண்டிருப்பதும் சிக்கலை உண்டாக்கும். தொடர்ச்சியான ஃபாலோ அப் அவசியம்’’ என்று சொல்லும் சுப்ரமணியன், இன்னொரு முக்கியமான பிரச்னை பற்றியும் குறிப்பிட விரும்புகிறார்.
.

‘‘மருத்துவத்தைப் பொறுத்த வரை வெளிநாடுகளுக்கும் இந்தியாவுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. வெளிநாடுகளில் நோயாளியையும் ஒரு பார்ட்னராக சேர்த்துக் கொண்டு மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள், கற்றுக் கொடுப்பார்கள், விவாதிப்பார்கள். நோயாளிக்கு இத்தனை விளக்கம் ஏன் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்காது. இதனால் நோயாளிகளுக்கும் என்ன நோய், எந்த நிலையில் இருக்கிறது, என்ன மருந்துகள் சாப்பிடுகிறோம், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு இருக்கும். 

இந்தியாவில் இதுபோல் நோயாளிக்குக் கற்றுக் கொடுக்கிற மருத்துவர்கள் மிகவும் குறைவு என்பது வருத்தத்துக்குரிய ஒரு விஷயம். ஸ்டீராய்டு மருந்துகள் மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டிய மருந்து என்பதால் நோயாளிக்கும் கற்றுக் கொடுத்தல் மிகவும் அவசியம். அப்போதுதான் ஸ்டீராய்டை ஒரு தற்காலிக மருந்தாகத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படும். இல்லாவிட்டால், ஸ்டீராய்டு உடனடியாக நல்ல பலனைக் கொடுக்கிறது என்று பழக்கமாகிக் கொண்டுவிடுவார்கள். ஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்தும் மருத்துவர்களிடமும் தெளிவான திட்டம் இருக்க வேண்டும். முடிந்தவரை ஸ்டீராய்டு மருந்துகளின் வீரியத்தைக் குறைத்துக் கொண்டே வர வேண்டும்.

மாற்று மருந்துகளைப் பயன்படுத்தி ஸ்டீராய்டு பயன்படுத்த வேண்டிய அவசியத்தைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். நோயாளிகளும் டாக்டரே மறந்துவிட்டால் கூட ‘பவரை குறைக்கிறேன்னு சொன்னீங்க டாக்டர்’ என்று மருத்துவருக்கு நினைவுபடுத்த வேண்டும்’’ என்று எச்சரிக்கிறார் சுப்ரமணியன் சுவாமிநாதன்.
.

மருந்துச்சீட்டு இல்லாமல் வாங்கும்போதும் ஸ்டீராய்டு மருந்துகளை மருந்துக்கடைக்காரர்கள் கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால், மருந்துச்சீட்டு இல்லாமல் மாத்திரை வாங்குவதை முழுவதும் தவிர்க்க வேண்டும்.
.

குழந்தைகளுக்கு கூடவே கூடாது!


# ஆஸ்துமா, 

# வீசிங், 

# அலர்ஜி, 

# சருமப் பிரச்னைகள் 

போன்றவற்றிற்கு பல மருத்துவர்களும், இந்தப் 
பிரச்னைகளின் ஆரம்பக் கட்டத்திலேயே உடனடி நிவாரணம் தேவை என்பதற்காக ஸ்டீராய்டு கொடுத்து விடுகிறார்கள். சில நிமிடங்களிலேயே நோயாளிக்கு குணம் தெரியும். 

குழந்தைகளுக்கு ஸ்டீராய்டு தரவே கூடாது. ஒரு முறை மருத்துவரிடம் போய் மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டுக் குணம் தெரிந்ததும், அடுத்தடுத்த முறைகள் அதே பிரச்னை வரும் போது தாமாகவே மருந்துக் கடைகளில் ஸ்டீராய்டு கலந்த மருந்துகளை வாங்கிச் சாப்பிடும் நபர்கள் நிறைய பேர். இப்படி நீண்ட நாட்களுக்கு ஸ்டீராய்டு எடுத்துக் கொள்கிற போது, அது 

# ஹைப்பர் டென்ஷன், 

# இதயக் கோளாறு, 

# உடல் பெருத்துப் போதல், 

# குறிப்பாக முகம் ஊதிப் போவது, 

# கல்லீரல் பழுது, அதன் விளைவாக மஞ்சள் காமாலை, 

# பெண்களுக்கு உடலெங்கும் ரோம வளர்ச்சி, 

# மார்பகங்கள் சிறுத்துப் போதல், 

# கிளிட்டோரிஸ் எனப்படுகிற அந்தரங்க உறுப்பின் ஒரு பகுதி விரிவடைதல், 

# குரலில் மாற்றம், 

# மாதவிலக்குக் கோளாறு, 

# அதிக கோபம், 

# படபடப்பு, 

# தற்கொலை எண்ணம், 

# புற்றுநோய், 

# நீரிழிவு நோய், 

# சிறுநீரகக் கோளாறு, 

# பக்கவாதம், 

# ஆண்மைக் குறைபாடு, 

# முகம், கழுத்துப் பகுதிகளில் பருக்கள், 

# வழுக்கை, 

# ஆண்களுக்கு மார்பகங்கள் பெருத்துப் போவது... 

இப்படிப் பல பயங்கர பின் விளைவுகளை உண்டாக்கும். இவற்றில் சில ஸ்டீராய்டை நிறுத்தியதும் குணமாகலாம். பல உபாதைகள் அதற்குப் பிறகும் நிற்காமல் தொடர்வதும் உண்டு. 

*மருத்துவர்களிடம் செல்லும் போதே ஸ்டீராய்டு கலந்த மருந்துகளைத் தவிர்க்குமாறு சொல்லலாம். எந்தப் பிரச்னைக்கும் சரியான மருத்துவரிடம் சிகிச்சை 
பெறுவது பாதுகாப்பானது. 
.

சித்த மருத்துவத்திலும் ஸ்டீராய்டா?

அலோபதி மருந்துகளைப் பொடி செய்து சித்த மருந்து என்கிற பெயரில் கொடுக்கும் சில போலி சித்த மருத்துவர்களும் இருக்கிறார்கள். அது போன்ற போலி மருத்துவர்கள் சிலர் இப்படி ஸ்டீராய்டு கலந்த அலோபதி மருந்துகளை சித்தா உடன் சேர்த்துக் கொடுப்பதுண்டு. 

நம்பிக்கையான சித்த மருத்துவர்கள் தவறு செய்வதில்லை. சித்த முறையில் தயாரிக்கப்படுகிற சில மருந்துகள், உதாரணத்துக்கு தங்க பஸ்பம், வெள்ளி பஸ்பம் மாதிரியான உலோகத் தயாரிப்புகளில் மூலிகைகள் கலந்து செய்யப்படுகிற போது இயற்கையாவே சில ஸ்டீராய்டுகள் உருவாகும். அது தவிர்க்க முடியாதது. ஆனால், இப்படிப்பட்ட மருந்துகளைப் பரிந்துரைக்கிற சித்த மருத்துவர், பக்க விளைவுகள் வராமல் இருக்க பத்தியம், உணவுக் கட்டுப்பாடு என சில விஷயங்களையும் சொல்லித் தருவார். 

பத்தியம்இல்லாத, பக்க விளைவில்லாத சித்த மருத்துவம் என வரக்கூடிய விளம்பரங்கள் போலியானவையாகவே இருக்கும். உணவுக் கட்டுப்பாடு, எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்கிற மாதிரி சில விஷயங்களை சரியாக செய்தால், பக்க விளைவுகளைத் தவிர்க்கலாம். 

எல்லாத் துறைகளிலும் புல்லுருவிகள் இருக்கிற மாதிரி, சித்த மருத்துவம் என்ற பெயரில் போலித்தனம் செய்கிற ஆட்களும் இருக்கிறார்கள். மக்கள்தான் எச்சரிக்கையாகி, சரியான, நம்பிக்கையான டாக்டரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
.

நன்றி

# இன்டர்னல் மெடிசின் சிறப்பு மருத்துவர் சுப்ரமணியன் சுவாமிநாதன்

# ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை சிறப்பு மருத்துவரான ஸ்ரீதரன்

# டாக்டர் குங்குமம் இதழ்
.

(பொதுநலன் கருதி சில அத்தியாவசிய மாற்றங்களுடன் இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது)

.

குறிப்பு:
.

நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தராமான தீர்வை தர இயலாது.

சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

உதாரணமாக நம் தவறான வாழ்க்கைமுறையினால் ஏற்படும் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற தொந்தரவுகளுக்கு மருத்துவ சிகிச்சையால் எவ்வாறு நிரந்தர தீர்வு அளிக்க முடியும். 
.

ஒரு மாதத்திற்கான உணவை ஒரேநாளில் உண்பது எவ்வாறு சாதியப்ப்படும்?

இதை மக்களுக்கு புரியவைத்து மருந்துக்களின்றி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.
.

மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் இலவசமாக ஆலோசனைகள் பெற கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ / முகநூல் பக்கத்திலோ /வலைத்தளத்திலோ தொடர்பு கொள்ளலாம்.

(குறிப்பு : தயவுசெய்து பொறுமையாக இருப்பவர்கள், நேர்மையாக வாழ்பவர்கள் மற்றும் அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாதவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்)
.

மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:
.

.

Thanks & Regards,
Vineeth.S
+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com

கர்ப்பப்பையில் கட்டி, பித்தப்பையில் கல் & அப்பென்டிசைடிஸ் (குடல் வால் நோய்)

பித்தப்பையில் கல்

சர்க்கரை நோயாளிகளே! சிறிது காலத்திற்குப் பிறகு, உங்களுக்குப் பித்தப்பையில் கல் வந்து விட்டது; எனவே, அறுவை சிகிச்சை செய்து எடுக்க வேண்டும் என்று கூறுவார்கள். நீங்களும் உடனே பித்தப்பையை எடுத்து விடுவீர்கள்.

பித்தப்பை (Gall Bladder) என்ன வேலை செய்கிறது என்று தெரியுமா? நாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆவதற்குப் பித்த நீர் சுரக்க வேண்டும். அதை அனுப்புவது அதுதான். கல்லீரல் இரத்தத்திலுள்ள 80% கொழுப்பை எடுத்துப் பித்த நீராக (BILE) மாற்றிப் பித்தப்பையில் சேமிக்கிறது. இப்படி அதை அறுவை சிகிச்சை செய்து எடுத்து விட்டால் பித்தப்பை இருப்பவர்களுக்கே ஒழுங்காக ஜீரணமாகாத இந்தக் காலக் கட்டத்தில் அது இல்லாத ஒருவருக்கு எப்படி ஜீரணம் ஒழுங்காக நடக்கும்? எனவே, பித்தப்பையின் வேலையைக் கல்லீரல் செய்ய வேண்டியது இருக்கும். எனவே, கல்லீரலுக்கு அதிக வேலை.

கர்ப்பப்பையில் கட்டி

அதேபோல், கர்ப்பப்பையில் கட்டியென்று வெட்டி எடுக்கச் சொல்வார்கள். கர்ப்பப்பை என்ன வேலை செய்கிறது? உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. இப்படிக் கர்ப்பப்பையை வெட்டியெடுத்து விட்டால் உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றுவது யார்? அந்தக் கழிவுகளை வியர்வை, சிறுநீர்ப் பை போன்றவை வெளியேற்றும். அப்பொழுது அந்த உறுப்புகளுக்கு அதிகமான வேலை.

நமது வீட்டுப் பெண்கள் இரண்டு பேர் ஒன்று சேர்ந்தால் பெருமையாகப் பேசிக் கொள்வார்கள்.

"நீ உன்னோடத வெட்டி எடுத்திட்டியா? நான் என்னோடத வெட்டுவதற்கு அடுத்த மாசம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருக்கிறேன்” என்று. நீங்கள் என்ன பிக்னிக்கா போகிறீர்கள்? ஒரு உறுப்பை வெட்டி எடுப்பதற்கு எதற்கு மருத்துவர்?

அப்பென்டிசைடிஸ் (குடல் வால் நோய்)

குடல் வால் (APPENDIX) வலிக்கிறது என்று கூறினால் அதை வெட்டி வெளியே எடுத்து விடுவார்கள். அது என்ன வேலை செய்கிறது என்று தெரியுமா? உடலிலுள்ள கழிவுகளை அகற்றுகின்றது. உடலில் வலப் பக்கம், இடப் பக்கம் இரண்டையும் அளவாக வைத்துக் கொள்கிறது. குடல்வால் எடுத்தவர்கள் மலை மேல் ஏறும்போது அவர்களால் பாலன்ஸ் செய்ய முடியாது. இடது, வலது பக்கங்களை அவர்களுக்கு பேலன்ஸ் செய்துகொள்ளத் தெரியாது. ஆனால், மருத்துவ உலகம் கூறுகிறது, குடல்வால் என்ற உறுப்பு தேவையேயில்லை என்று. நமது உடலில் ஒரு உறுப்பு தேவையில்லையென்று எப்பொழுது கூறுகிறார்களோ, அப்பொழுதே என்ன அர்த்தம்? கடவுள் முட்டாள் என்று அர்த்தம். கடவுளுக்கு ஒரு உறுப்பு தேவையா இல்லையா என்று தெரியாதா? குடல்வால் எந்தவொரு வேலையும் செய்யவில்லை என்று ஒரு மருத்துவர் கூறுகிறார் என்றால் அந்த உறுப்பு என்ன செய்கிறது என்பது அவருக்குத் தெரியவில்லை என்று அர்த்தமே தவிர, அந்த உறுப்பு எந்த வேலையும் செய்யவில்லை என்பதில்லை.

இப்படி நோய்களுக்குக் கத்தி வைத்து வெட்டுவது மருத்துவம் கிடையாது. அந்த உறுப்பைக் குணப்படுத்துவதுதான் மருத்துவம். நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாகப் பித்தப்பையில் கல், கர்ப்பப்பையில் கட்டி, குடல்வால் அழற்சி என எந்த உறுப்பில் எந்தப் பிரச்சினை வந்தாலும் உறுப்பை அறுக்காமலேயே, உடலின் உள்ளேயே உறுப்பைப் புதுப்பிப்பதற்குச் சில சுலபமான வழிமுறைகள் உள்ளன.

நன்றி - ஹீலர் பாஸ்கர் (அனாடமிக் தெரபி)

குறிப்பு: சரியான வாழ்க்கை முறையால் மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.


For more info visit:

நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

கழிவின் தேக்கம் வியாதி Accumulation of waste / toxins in our body is disease
கழிவின் வெளியேற்றம் குணம் Elimination of waste / toxins is cure

இதை மக்களுக்கு புரியவைப்பதே எனது நோக்கம்.
இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ தொடர்புகொள்ளலாம்.

Thanks & Regards,
    Vineeth.S
+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com

குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத சில செயல்கள் !


குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத சில செயல்கள் !

1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, “உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே’ என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும்போது, “அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்’ என்று சொல்ல நேரிடலாம்.

3. தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4. சிறு குழந்தைகளை மிரட்டாதீர்கள். வேறு வழியில்லாமல் மிரட்டும் நேரிட்டால், “கொன்னுடுவேன், தலையை திருகிடு வேன், கையை உடைப்பேன்’ போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

5. சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், “அப்பாகிட்டே சொல்லிடாதே’ என்று கூறு வர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையி லேயே “அப்பாக்கிட்ட சொல்லிடு வேன்’ என்று மிரட்டும்.

6. குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. “உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே" போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக்கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதி க்க வழிவகுக்கும்.

7. குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. ”கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்’ என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

8. குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

9. உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

10. படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, “பாசிடிவ் அப்ரோச்’ இருக்க வேண்டும். “நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்’ என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். “நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடுதான் மேய்க்கலாம்’ என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடா து.

11. குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.


For more info visit:


நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்

Accumulation of waste / toxins in our body is disease
Elimination of waste / toxins is cure

இதை மக்களுக்கு புரியவைத்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதே எனது நோக்கம். 

திருக்குறள் (அறிவுடைமை #0423)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

தெளிவுரை: 

எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும்அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ தொடர்புகொள்ளலாம்.


Thanks & Regards,
    Vineeth.S
+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com