மனம் எனும் மாய தேவதை! - அறிமுகம்



        னம் எனும் மாய தேவதை குறித்து உலகளவில் நம் நாட்டினர் போல ஆழமாக அலசிய அறிஞர்கள் உலகின் வேறு எந்த மூலையிலும் இல்லை.

மு.வரதராசனார் எழுதிய "நலவாழ்வு" என்ற புத்தகம் தொடங்கி சுகி சிவம் அவர்களின் மனசே நீ ஒரு மந்திர சாவி வரை, எம். எஸ். உதயமூர்த்தி அவர்கள் எழுதிய தன்னம்பிக்கை நூல்கள் முதல் விவேக்கானதர் புத்தகங்கள் வரை, கீதையில் கண்ணன் முதல் ஓஷோவின் புத்தகங்கள் வரை இந்த மனம் எனும் மாய தேவதை பற்றி நிறைய சொல்லி இருக்கிறார்கள்.

அப்படி படித்த பல புத்தகங்களில் இருந்த நல்ல கருத்துகளைத்தான் நான் இந்த தொடரில் எனது பாணியில் பகிர்ந்து உள்ளேன். மனம் எனும் மாய தேவதையை காதலிக்க வேண்டும் என்றால் அப்புத்தகங்களை தேடி படித்து பாருங்கள் நிறைய தெளிவுகள் கிடைக்கும்.

உங்கள் அனைவருக்கும் மனம் எனும் மாய தேவதை வசமாகி வளமான மனமும் வாழ்க்கையும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

🙏

ரா.பிரபு


நண்பர்களுக்கு வணக்கம்!

   
    ந்த "மனம் எனும் மாய தேவதை" கட்டுரை தொடர் எனது வழக்கமான 'பக்கா அறிவியல்' கட்டுரைகளில் இருந்து சற்றே மாறுபட்டு சைகாலஜிக்கலான ஒரு கட்டுரை தொடர். ஆனால் மனோதத்துவம் என்பதும் அறிவியலின் பிரிவு தான் என்பதால் இதையும் அறிவியல் கட்டுரை என்றே தாராளமாக சொல்லலாம்.

எனது "மனம் எனும் மாய பிசாசு" தொடரில் மனதை சரியாக பயன்படுத்தாமல் அதை பிசாசாக மாற்றி அதன் பிடியில் சிக்கி சின்னா பின்னம் ஆனவர்கள் பற்றி நிறைய சொல்லி இருந்தேன்.

உண்மையில் மனம் பிசாசா அல்லது தேவதையா என்பது அதை நாம் பழகும் விதத்தில் தான் இருக்கிறது. அதை தவறாக கையாண்டால் நம்மையே அழிக்கும் பிசாசு. அதே சமயம் அதை சரியாக கையாண்டால் அது வரங்களை அள்ளி கொடுக்கும் தேவதை.

வாருங்கள், இந்த முறை அந்த தேவதையை கொஞ்சம் சந்தித்து நலம் விசாரித்து விட்டு வருவோம்.





No comments:

Post a Comment