சிறு தலைவலிக்கு கூட மாத்திரை சாப்பிடுபவரா....?


நமக்கு அடிக்கடி தலைவலி சளி காய்ச்சல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நம் உடலில் எதிர்ப்பு சக்தி இல்லாததே. அதனால் தான் இது ஒரு சிலருக்கு அடிக்கடி ஏற்படுகிறது.

கொஞ்சம் தண்ணீர் மாறினாலோ, வெப்ப நிலை மாறினாலோ இதன் தாக்கம் அதிகமாக இருக்கும், இதற்க்கு முக்கிய காரணம் நம் உடல் அந்த மாற்றத்தை ஏற்று கொள்ளக்கூடிய அளவிற்கு நோய் எதிர்ப்புசக்தி இல்லாததே காரணம். காய்ச்சல் தலைவலி சளி கொண்டவர்களை கவனித்தீர்கள் என்றால் அவர்கள் அதிகம் மருந்து மாத்திரைகள் உட்கொள்பவர்களா இருப்பார்கள்.

ஒரு சிலருக்கு இவைகள் அவர்கள் பக்கமே வராது அப்படியே வந்தாலும் விரைவில் சரியாகி விடும், காரணம் இதை போல நேர்ந்தால் உடனடியாக மருந்து உட்கொள்ள மாட்டார்கள். ஏதாவது சூடா காபி, தூக்கம் அல்லது ரசம் சோறுடன் முடித்து கொள்வார்கள்.

நம் உடலுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளையே ஏதாவது நம் உடலுக்கு நேர்ந்தால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனபது தான். நமக்கு ஏற்படும் பிரச்னையை தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் நம் உடல் இருக்கும். எனவே அது செய்து முடிக்கும் முன்பே நாம் மருந்து எடுத்துகொண்டால் நம் உடல் அதற்க்கு பழகி விடும். எனவே வரும் தலைவலி காய்ச்சல் போன்றவற்றை தடுக்க முயற்சிகள் எடுக்காது, அப்படி வந்தவற்றையும் எளிதில் குணப்படுத்தாது, எனவே நீங்கள் மருந்து சாப்பிட்டால் மட்டுமே சரியாகும் என்ற நிலைக்கு உங்கள் உடல்நிலை வந்து விடும்.

முதலில் தலைவலிக்கு ஒரு மாத்திரை சாப்பிட்டவர்கள், போக போக இரண்டு மூன்று சாப்பிட்டால் தான் சரி ஆகும் என்ற நிலைமை வந்து விடும் அல்லது ஸ்ட்ராங்கானா மருந்து உட்கொண்டால் மட்டுமே கேட்கும் படி நம் உடல் பழகி விடும், அதோடில்லாமல் நமது உடலின் எதிர்ப்பு சக்தியும் குறைந்து அடிக்கடி தலைவலி சளி காய்ச்சல் போன்றவைகள் ஆக்கிரமித்து கொள்ளும், உடனே குணமும் ஆகாது ஒரு வாரத்திற்கு மூக்கை உறிஞ்சுகிட்டு இருக்க வேண்டியது தான்.

இதை போன்ற நிலையை தவிர்க்க மருத்துவரிடம் செல்லாமல் நீங்களே தலைவலிக்கும் சளிக்கும் காய்ச்சலுக்கும் அந்த சமயங்களில் அதற்க்கு பதிலாக ஒரு தூக்கமோ, சூடாக ஒரு காஃபியோ அல்லது ரசம் சாதம் மட்டுமோ சாப்பிட்டு நன்கு ஓய்வு எடுத்தாலே போதுமானது. இரவில் படுக்கும் போது வயிற்று வலி வந்தால் உடலின் உஷ்ணமாக கூட இருக்கலாம், இதற்க்கு சிறிது வெந்தயத்தை மோரில் கலந்து சாப்பிட்ட பிறகு தூங்கினால் சரி ஆகி விடும்.

இதை போல செய்ய முடியாத நிலைமையில் இருந்தால் மட்டுமே மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். மருந்து மாத்திரைகளை தவிர்த்தால் மட்டுமே (அவசியமான நேரங்களில் அல்ல) நமது உடல் நலம் சிறப்பாக இருக்கும், இதை போல தொந்தரவுகள் நம்மை நெருங்காது.

No comments:

Post a Comment