நாக்குதான் மருத்துவர்! சுவைதான் மருந்து!

நாக்குதான் மருத்துவர்! 
சுவைதான் மருந்து!


நோய்கள் ஏற்படும்பொழுது நாக்கு என்ற மருத்துவர் மூலமாகச் சுவை என்ற மருந்தை உடல் எப்பொழுதும் கேட்டுக் கொண்டேயிருக்கும்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் ஏன் வித விதமான சுவைகளில் உணவைத் தேடுகிறார்கள்? கர்ப்பமான பெண்கள் சும்மா இருக்கவே முடியாது. அவர்கள் ஏதாவது ஒரு பொருளைச் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். அதிலும், பொருளை மாற்றி மாற்றிச் சாப்பிடுவார்கள். "கர்ப்பிணிகளிடம் அவர்கள் மனதுக்குப் பிடித்த மாதிரி நடந்து கொள்ளுங்கள். அவர்கள் மனதுக்குப் பிடித்த உணவை வாங்கித் தாருங்கள்" என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். இதில் மிகப் பெரிய அர்த்தம் உள்ளது!

கர்ப்பப்பையில் குழந்தை உருவாகும்பொழுது எந்தெந்த உறுப்புகள் சேர்ந்து அந்த வேலையைச் செய்கின்றனவோ, அந்தந்த உறுப்புகளுக்கு சம்பந்தப்பட்ட சக்தி உடலில் குறையும். எந்த சக்தி குறைந்து விட்டதோ அது சம்பந்தப்பட்ட சுவையை நாக்குக் கேட்கும். இதனால்தான் அந்தப் பெண்கள் திடீரென்று இனிப்புச் சாப்பிட வேண்டும் போல் இருப்பதாகக் கூறுவார்கள்; சாம்பலை அள்ளிச் சாப்பிடுவார்கள்; திடீரெனக் கீரை சாப்பிடுவார்கள். அவர்கள் நாக்கு எதையாவது சாப்பிட வேண்டும் போலவே இருக்கும். இரவு 2 மணிக்கு எழுந்து திடீரென எதையாவது எடுத்துச் சாப்பிடுவார்கள். ஏனென்றால், குழந்தை உருவாகும்பொழுது நம் உடம்பு சத்துப் பொருட்களையோ மருந்து மாத்திரைகளையோ கேட்பதில்லை; சுவைகளைத்தான் கேட்கிறது.

சுவைகள் நம் ஆரோக்கியத்திற்கு மிக மிக முக்கியமான மருந்துகள். எனவேதான் நம் முன்னோர்கள் கர்ப்ப காலத்துப் பெண்களுக்கு, 'சோறு கட்டிப் போடுதல்' என்கிற ஒரு வைபவம் வைத்திருந்தார்கள். 'சீமந்தம்' என்று கூறுவார்கள்.

அந்த நேரத்தில் ஆறு வகைச் சுவையான உணவுகளைத் தயாரித்து அனைவருக்கும் பந்தியிட்டு மகிழ்ந்தார்கள். நாம் அனைவரும் அந்த விழாவிற்குச் சென்று நன்றாகச் சாப்பிட்டு விட்டு வருகிறோம். ஆனால், அது ஏன் கொண்டாடப்படுகிறது என்பதை இது வரை யாரும் யோசித்ததில்லை. நாம் சாப்பிடுவதற்காக அந்தத் திருவிழா அல்ல; அந்தப் பெண் எந்தெந்தச் சுவையைக் கேட்கிறாளோ அவற்றையெல்லாம் கொடுக்க வேண்டும் என்பதை அந்தக் குடும்பத்தினருக்குப் புரிய வைப்பதற்காகவே.

இப்படி கர்ப்ப காலத்துப் பெண்களுக்கு அவர்கள் நாக்குக் கேட்கும் சுவையைச் சரியாகக் கொடுப்பது மூலமாக சுகப்பிரசவத்தையும், அழகான, ஆரோக்கியமான குழந்தையையும் பெற்று வந்தார்கள். ஆனால் இப்பொழுது, ஸ்கேனிங் வைபவம், ஆன்டி பயாடிக் வைபவம், மருந்து மாத்திரை வைபவம் என்று நடத்திக் கொண்டிருப்பதால் ஊனமான குழந்தைப் பிறப்பும், சிசேரியனும் நடந்து வருகிறது.

எனவே, யார் யாருக்கெல்லாம் நோய் வருகிறதோ அவர்களெல்லாரும் தங்களைக் கர்ப்பமான பெண்ணாக நினைத்துக் கொண்டு மனதிற்குப் பிடித்த மாதிரி, உங்கள் நாக்குக்குப் பிடித்த உணவுகளைத் தாராளமாகச் சாப்பிடுங்கள்! அப்பொழுதுதான் நோய்கள் குணமாகும்.

கசப்பு, துவர்ப்பு என்ற இரு சுவைகளை நாம் பொதுவாகச் சாப்பிடுவதில்லை. இனிப்புச் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமென்று கூறுகிறார்கள். உப்புச் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் எகிறிவிடும் என்கிறார்கள். காரம் சாப்பிட்டால் தோல் நோய் வருமென்று கூறுகிறார்கள். புளி சேர்த்தால் மூட்டு, முழங்கால் வலி வருமென்று கூறுகிறார்கள். இப்படி, இருக்கும் ஆறு சுவைகளையும் ஒவ்வொரு காரணம் காட்டி மருத்துவர்கள் சாப்பிட வேண்டாம் எனக் கூறுகிறார்களே, நாம் எதைத்தான் சாப்பிடுவது? எந்த உணவு எடுத்துக் கொண்டாலும் அதில் ஆறு சுவைகளில் ஏதோ ஒரு சுவை மிகுதியாகவோ, குறையாகவோ இருக்கும். இப்படி ஒவ்வொரு சுவையும் வேண்டாமென்று கூறினால் நாம் பட்டினிதான் கிடக்க வேண்டும். எனவே, தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். எந்தச் சுவைக்கும், எந்த நோய்க்கும் சம்பந்தமே கிடையாது! உங்கள் நாக்குதான் மருத்துவர்! சுவைதான் மருந்து! எனவே, நீங்கள் எந்தச் சுவையைச் சாப்பிட வேண்டும், எந்தச் சுவையைச் சாப்பிடக் கூடாதென்று எனக்கும் தெரியாது; உங்களுக்கும் தெரியாது. அவரவர் நாக்குக்கு மட்டுமே தெரியும். இனிப்பான பொருளை வாயில் வையுங்கள். பிடித்திருந்தால் சாப்பிடுங்கள். 

பிடிக்கவில்லையென்றால் சாப்பிட வேண்டாம். மறுபடியும் பிடித்தால் இன்னொரு இனிப்பைச் சாப்பிடுங்கள். மூன்றாவது இனிப்பைச் சாப்பிடும்பொழுது நாக்குத் திகட்டும். அப்பொழுது நிறுத்திக் கொள்ளுங்கள். நாக்குத் திகட்டிய பிறகு இனிப்புச் சாப்பிட்டால் உங்களுக்கு இனிப்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வரும்.

அதே போல், உப்பு உணவில் அதிகமாக இருந்தால் சாப்பிட முடியுமா? முடியாது. ஆனால், குறைவாக இருந்தால் சாப்பிடுகிறோமே!

அந்தக் காலத்தில், சாப்பிடும்பொழுது இலையில் உப்பு வைப்பார்களே, அது எதற்கு? நீங்கள் உணவைச் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும்; உப்புக் குறைவாக இருந்தால் உங்கள் நாக்குக்கு எவ்வளவு உப்புச் சாப்பிட்டால் நன்றாக இருக்குமோ அதை நீங்கள் உங்கள் சாப்பாட்டில் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் நம்மில் பலர், சாப்பிடும்பொழுது உப்புக் குறைவாக உள்ளதென்று மொத்தத்திலும் உப்பைக் கொட்டுகிறார்கள். 

ஒவ்வொருவருடைய நாக்கின் சுவையும் வேறு வேறாக இருக்கும். நம் நாக்குக்கு ஒரு சுவை அதிகமாக, குறைவாக இருக்கிறதென்றால், அடுத்தவர்களுக்கு அதே போல் இருக்க வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. எனவே, சமைக்கும்பொழுது உப்பு, புளி, காரம் அனைத்தையும் அளவாகச் செய்யுங்கள். அவரவர்களுக்கு உப்புத் தேவையென்றால் அவரவர் உணவில் மட்டுமே அவரவர் உப்புச் சேர்த்துக் கொள்ளலாம். காரம் தேவையென்றால் ஊறுகாயைச் சேர்த்துக் கொள்ளலாம். இப்படி அவரவர் தட்டில் மட்டுமே சுவைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்காகத்தான் பலவிதமான பொரியல், அவியல், ஊறுகாய், அப்பளம் போன்றவற்றை நமது முன்னோர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள்.

எனவே தயவு செய்து, இனிமேல் யாரும் எந்தச் சுவையைப் பார்த்தும் பயப்படாதீர்கள்! சுவைகளனைத்தும் நமக்கு நல்லது செய்வதற்கு மட்டுமே உள்ளன.

ஆனால், உங்கள் நாக்குத் திகட்டிய பிறகு அல்லது உங்கள் நாக்குக்குப் பிடிக்காத எந்தச் சுவையையும் சாப்பிடாதீர்கள்! நாக்குதான் மருத்துவர். சுவைதான் மருந்து என்பதைப் புரிந்து கொண்டு இனி நாக்குக்குப் பிடித்த உணவுகளைச் சாப்பிடுங்கள்! நோயின்றி வாழலாம்.

சர்க்கரை நோயாளிகள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள் தாராளமாக  இனிப்பை சாப்பிடுங்கள்; ஒன்றும் ஆகாது. இரத்த அழுத்த நோயாளிகள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள் தாராளமாக  உங்கள் நாக்குக்குத் தேவைப்படும் அளவுக்கு உப்புச் சாப்பிடுங்கள்; உங்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும். இப்படி எந்தச் சுவையையும் ஒதுக்காமல் உங்கள் நாக்கு எதைக் கேட்கிறதோ, அதைச் சாப்பிடுவது மூலமாக நாம் ஆரோக்கியமாக இருக்கலாம்.

நன்றி - பாஸ்கர் மனதுக்கும் உடலுக்கும் நெருங்கிய
தொடர்பு உள்ளது

நாம் எப்பொழுது நிம்மதியாக வாழ்கிறோமோ அப்பொழுது நமது உடல் தன்னைத்தானே பராமரித்துக் கொள்வதில் எந்தவித தடையும் ஏற்படுவதில்லை. நாம் எப்பொழுது நிம்மதி இல்லாமல் வாழ்கிறோமோ அப்போது உடல் தன்னைத்தானே வருத்திக்கொள்கிறது. கவலை, மனவருத்தம், பயம், கோபம், விரக்தி போன்ற எண்ணங்கள் நமது உடலின் பராமரிப்பு சக்தியை தீர்த்துவிடுகிறது. எனவே நிம்மதியாக வாழ்வதற்காக நேரங்களை ஒதுக்குவோம். பலர் பணத்திற்காக புகழுக்காகபதவிக்காககெளரவத்திற்க்காக தங்கள் நிம்மதியை இழக்கிறார்கள். ஆனால் நிம்மதிக்காக பணம்புகழ்அந்தஸ்து என்று எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஏனென்றால் நம்முடைய ஆரோக்கியம்நிம்மதி இதைவிடப் பெரிதல்லவா?

·        அன்பான பேச்சுக்களை கேட்கும்போதும்,

·        பிடித்தமான உணவுகளை உண்ணும்போதும்,

·        பிடித்தமான இசை மற்றும் பாடல்களை கேட்கும்போதும்,  

·        பிடித்தமான நகைச்சுவை மற்றும் திரைப்படங்களை பார்க்கும்போதும்,

·        பிடித்தமான இடங்களுக்கு சுற்றுலா செல்லும்போதும்,

·        பிடித்தமானவர்களிடம் நேரத்தை செலவிடும்போதும்,

·        பிடித்தமான பொழுதுபோக்கில் ஈடுபடும்போதும்,

·        நல்லதை பார்க்கும்போது, கேட்கும்போதும், சிந்திக்கும்போதும்,

·        அடுத்தவர்களுக்கு உதவும்போதும்,

·        நேர்மையாக வாழும்போதும்,

·        சுயநலமில்லாத வாழ்க்கை வாழும்போதும்,

... நமது மனது சந்தோஷப்படுகிறது. அவ்வாறு மகிழ்ச்சியாக இருந்தால் நமது உடலின் பராமரிப்பு வேலையும் தடையில்லாமல் நடைபெறும் மேலும் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

பணமே பிரதானம் என எண்ணுபவர்கள் தங்கள் தினசரி வாழ்க்கை முறையில் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ள முயற்சிப்பதில்லை. அவர்கள் ஆரோக்கியத்தை விலை கொடுத்து வாங்க முடியும் எனக் கருதுகின்றனர். உண்மையில் நோய் பற்றிய பயத்தையும்கிருமிகளைப் பற்றிய பயத்தையும்செயற்கையாக உருவாக்கிய நோய்களான நீரிழிவு (சர்க்கரை)ரத்த அழுத்தம்தைராய்டு... போன்றவற்றை மட்டுமே பெற முடியும். பணத்தால் ஆரோக்கியத்தை வாங்க முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.


எல்லா வகை வியாதிகளில் இருந்தும் நம்மைக் காப்பாற்றும் எதிர்ப்பு சக்தியை சரியாக வைத்துக் கொள்வது எப்படி?

· நாம் வசிக்கும் இடங்களில் சுத்தமான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கொசு தொந்தரவு இருக்கும் பட்சத்தில் ரசாயன கொசுவிரட்டிகள் பயன்படுத்தாமல் காற்று வந்துபோகக்கூடிய கொசு வலைகளை பயன்படுத்தி ஜன்னல்களை திறந்து வைத்து தூங்க வேண்டும். ஏனென்றால் நம் உடலில் ஏற்படும் பல இன்னல்களுக்கு அடிப்படை காரணமே அசுத்த காற்று நிறைந்த இடத்தில் வசிப்பது தான்.

·  பசியை உணர்ந்துபசி ஏற்படும் போதுதான் சாப்பிடவேண்டும். பசி இல்லாத போது நேரத்தைப் பார்த்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

·    பசிக்கிற அளவிற்குத் தகுந்தவாறு உண்ணுகிற உணவின் அளவை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரே மாதிரியான பசி எப்போதும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

· மனதிற்கு பிடித்த உணவுகளை மட்டும் ரசித்து ருசித்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

·   டீ மற்றும் காப்பி போன்றவை உணவல்ல போதைப்பொருள் என்பதை நினைவில் கொண்டு அதனை தவிர்த்திடுங்கள். (இதுபற்றி இந்த https://youtu.be/TkvkJozBpQc முகவரியில்  “டீ காப்பி நமக்கு தேவைதானா?” என்னும் தலைப்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.)

· உடல் கேட்கும் ஓய்விற்கும் தூக்கத்திற்க்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம். இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரைக்கும் தூங்க வேண்டிய அவசியமான நேரமாகும். இந்த நேரத்தில் தான் உடலில் எதிர்ப்பு சக்தி நோயெதிர்ப்பு வேலையை முழு வீச்சில் மேற்கொள்கிறது.

·  இரவில் தூங்குவதற்கு பதிலாக பகலில் தூங்கி கணக்கை சரிசெய்து கொள்ள முடியாது. ஏனென்றால் உடலின் நச்சுத்தன்மையை அகற்றும் வேலையும்ஒவ்வொரு உள்ளுறுப்பையும் சீரமைக்கும் வேலையும்ஒவ்வொரு உயிரணுவும் வளர்ச்சியடையும் வேலையும் இரவுகளில்தான் முழுமையாக நடைபெறுகின்றன. எனவே இரவு நேரத்தில் தூங்குவது ஆரோக்கியத்தின் அடிப்படைத் தேவை.


உணவே மருந்துவாழ்க்கைமுறையே தீர்வு!

ஆரோக்கியமாக வாழ விரும்பினால் மருத்துவத்தை தேடுவதை விட்டுவிட்டு ஆரோக்கியத்தை தேடுங்கள். நம் தவறான வாழ்க்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தரமான தீர்வை தர இயலாது.

நீங்கள் எதை தேடுகிறீர்களோ அதுவே கிடைக்கும். ஆரோக்கியத்தை தேடினால் நிச்சயம் ஆரோக்கியம் கிடைக்கும். மருந்துக்களையோ மருத்துவரையோ தேடுவதற்கு பதில் வியாதிக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்வதே சிறப்பானதாகும். 

நல்லதை சொல்ல வேண்டியது எனது கடமை. அதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் உரிமை. என்னிடம் மருந்துக்களை எதிர்பார்க்காதீர்கள் ஆரோக்கியத்தை மட்டும் எதிர்பாருங்கள். ஆரோக்கியமாக வாழ வழிகாட்டி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது எண்ணம்.

ஆங்கில மருந்துக்கள்டீகாப்பிகஞ்சா உட்கொள்ளுதல்புகை பிடித்தல்மது அருந்துதல்புகையிலைபாக்குமூக்குப்பொடி போன்ற போதை பழக்கத்தை விடுவதற்கு தயாராக உள்ளவர்கள் என்னை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம். மேலும் பொறுமையாக இருப்பவர்கள்நேர்மையாக வாழ்பவர்கள்அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாதவர்கள் மற்றும் மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் மட்டும் இந்த எண்கள் +919840980224, +919750956398 மற்றும் vineeth3d@gmail.com க்கு தொடர்பு கொள்ளவும்.

சுயநலமாக சிந்திப்போர் மற்றும் மருந்துக்களால் மட்டுமே வியாதிகளை குணப்படுத்த முடியும் என எண்ணுபவர்கள் என்னை தொடர்புகொண்டு உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இதுவரை நான் எழுதிய / வெளியிட்ட அனைத்து கட்டுரைகளின் தொகுப்பைக் காண மற்றும் பதிவிறக்கம் செய்துகொள்ள இந்த Google Drive லிங்கிற்கு செல்லவும் https://goo.gl/GBKHAb

மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:


"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" 
Youtube Channel முகவரி https://goo.gl/xsH2SJ

"நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!" 
Youtube Channel முகவரி https://goo.gl/Rvr1vT

"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" 
Telegram குழுவின் முகவரி https://telegram.me/OurBodyItselfaDoctor

"நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்" 
Telegram குழுவின் முகவரி https://telegram.me/LetUsThinkPositive

முக்கிய குறிப்பு:

இரவு 9 மணி முதல் காலை வரை தூக்கம் தடைபடாமல் இருக்க எனது தொடர்பு எண்களை Silent Mode இற்கு மாற்றிவிடுவேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அந்த நேரத்தில் நீங்களும் தூங்கச் சென்று உங்களது ஆரோக்கியத்தையும் உறுதிசெய்து கொள்ளுங்கள்.

மேலும் நோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இந்த பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றை புரிந்துகொண்டு பின்பற்றுங்கள். https://goo.gl/lC56N5

நமது உடலின் அடிப்படையை கற்றுக்கொண்டு மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.

ஆரோக்கியமாக வாழ நம் உடலின் அடிப்படையை புரிந்து கொண்டு அதற்கு போதிய ஒத்துழைப்பு கொடுத்தாலே போதும். இதனை புரிந்து கொள்ளாமல் இருப்பதால் தான் நாம் தேவையில்லாமல் வியாதிகள் மற்றும் கிருமிகள் பற்றி பயந்து கொண்டு இருக்கிறோம்.


ஆரோக்கியம் என்பது உடல்மனம் மற்றும் தினசரி பழக்கவழக்கங்களில் தான் அடங்கி உள்ளது. இதனை புரிந்துக்கொள்ளாததால் தான் நாம் பல மருத்துவ வியாபாரிகளிடம் சிக்கித் தவிக்கிறோம்.

இப்படிக்கு,

விழிப்புணர்வு வினீத்

No comments:

Post a Comment