கொசு விரட்டிகளால் கெடுதல்


கொசுத்தொல்லையிலிருந்து தப்பிக்கவும் இரவு நன்கு தூங்கவும் கொசுவர்த்தி சுருள், மேட், கிரீம் முதலியவற்றை உபயோகப் படுத்துகிறோம் அல்லவா? இவற்றால் நம் ஆரோக்கியத்திற்கும், பணத்திற்கும் கேடு என்கின்றனர் விஞ்ஞானிகள்

எங்கே சென்றாலும், பகலிலும் இரவிலும் கொசுகள் ரீங்காரமிட்டு, மலர்களில் தேனருந்தும் வண்டாய் நம்முடைய ரத்தத்தை அருந்த ஆரம்பித்து விடும். கொசு ஒன்றைக் கொடுக்காமல் எவரிடமும் இருந்து எதையும் பெற்றுக்கொள்ளாது. இது கொசுக்களின் நீதி. கொசு தவறாமல் கடைபிடிக்கும் கொள்கை என்றும் சொல்லலாம்.. 

தேன் உண்ணும் வண்டு மகரந்தத் தூளை தன் கால்களிலும் உடலிலும் எடுத்துச் சென்று மலரினத்தைப் பரப்பித் தன் நன்றியுணர்வைக் காட்டுவது போல கொசுவும் நம்மிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் இரத்தத்திற்கு ஈடாக சில நோய்களைப் பரப்பித் தன் நன்றியுணர்வைக் காட்டி விட்டுத்தான் போகும்

அதில் இருந்து தப்பிக்க கொசுவர்த்திச்சுருள் பயன் படுத்திக் கொள்ளலாம், என்றால் அதிலும் நமக்கு கிளம்புகிறது தொல்லைகளின் சாம்ராச்சியம். இந்த மழைக் காலத்திலன் முக்கியமான பிரச்சனை என்னவென்றால் ஒரு மின்னல் வந்துவிடக் கூடாது ஊரே இருண்டு விடும். வானத்தில் மினுக்கென்றால் கரண்ட் கட் ஆகிவிடும்

கொசுவர்த்திச் சுருள்களிலும் மேட்களிலும் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட அலெத்ரின், டாலத்ரின் டி டிரான்ஸாலத்ரின் போன்ற இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இரசாயனங்களின் அடர்த்தி, நாம் இக்காற்றை சுவாசிக்கும் காலம், அறையினுள் வரும் புதிய காற்றின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து நமக்கு விளைவிக்கப்படும் தீங்குகள் அளவு நிர்ணயிக்கப்படுகிறது
 
முக்கியமாக கரண்ட் இல்லாவிட்டால் லிக்விடேட்டர் வைக்க வசதி இருக்காது. வேற வழியின்றி கொசு வர்த்திச்சுருளைப் பயன் படுத்தத் தொடங்கி விடுகிறோம். சுருள் சுருளாக வரும் புகையில் நாமும் நம் திரைப்படக் கதாநாயகர்களைப் போல கனவுடன் உறக்கம் கொள்கிறோம்.. மூடிய அறையில் ஏற்றப்படும் இந்த சுருளுக்கு இரண்டு தனித்துவம் உண்டு. ஒன்று கொசுவை விரைவில் கொல்லும். இரண்டு அதைப் பயன் படுத்தும் நம்மை மெல்ல மெல்லக் கொல்லும்

இந்த இரு பணிகளையும் செய்ய உதவியாக இதில் ஒளிந்திருக்கும் பயங்கரமான வேதிப்பொருள்கள் 
  1. சிந்தெடிக் D அலித்ரின் 
  2. ஆக்டோ குளோரோ -டை- ப்ரொஃபைல் ஈதைர் அல்லது s- 2 
இவை எரியும் போது கிளம்பும் புகையில் கிளம்புவது வேதிப்பொருள் பை குளோரோ மெதல் ஈதைர். இது நம் உடல் நலத்திற்கு பகையாகும் வேதிப்பொருள்

மக்கள் கொசுக்களுக்குப் பயந்து மாலை ஆறு மணிக்கே ஜன்னல் கதவுகளை எல்லாம் அடைத்துவிட்டு புதிய காற்று வீட்டுக்குள் வருவதை தடை செய்து விடுகின்றனர். இவ்வாறு அடைபட்டக் காற்றுக்குள்ளேயே விளக்கு எரிப்பது, சமைப்பது, குடும்பத்தார் அனைவரும் சுவாசிப்பது போன்ற செயல்களாலேயே பிராண வாயு மிகவும் குறைந்துவிடுகிறது. இதோடு புகையும், கேடு விளைவிக்கும் வாயுக்களும் வீட்டினுள் நிறைந்து விடுகின்றன. போதாக்குறைக்கு இருட்டியதுமே கொசு விரட்டிகளையும் பயன்படுத்த ஆரம்பித்து விடுகிறார்கள்

இதனால் வீட்டில் இருந்த சிறிதான பிராணவாயுவும் கெட்டு விடுகிறது. ஆக, இரவு முழுவதையும் மாசுக்காற்று உள்ள சூழ்நிலையிலேயே கழிக்கிறார்கள். கொசு விரட்டிகளில் உடலில் சேர்ந்த விஷத்தை வெளியேற்ற சளிபிடித்தல், காய்ச்சல் ஆகியவை ஏற்படுகின்றன. சுத்திகரிப்பு நடக்காததால் மருந்து சாப்பிட்டும் குணம் பெற முடிவதில்லை

மூன்று நாட்களில் இவை குறையாததால் அலர்ஜி என்று பெயர் சூட்டி, அந்தச் செயலை முடக்க ஒவ்வாமையைக் குணப்படுத்தும் மருந்துகளையும் ஆரோக்கியமாக உடல் தாக்குப் பிடிக்காமல் திணறுகிறது. அதே நேரத்தில் உடலுக்கு ஒவ்வாத பொருட்களை வெளியேற்றும் செயல்முறை படிப்படியாக இழந்து விடுகிறது. இதன் மூலம் படை வீரர்களை இழந்த கோட்டையைப் போல நோய், எதிர்ப்பு சக்தியை இழந்த உடலைப் பெற்று விடுகிறது. பிறகு நோய்களின் வருகைக்குக் கேட்க வேண்டுமா

தொடர்ந்து மூடிய அரையில் இவ்வேதிப்பொருளை சுவாசிக்கும் நம் மூக்குக்குத்தெரிவதில்லை. இது நம் உட்லில் கேன்சர் ஏற்பட மூலமாக அமையும் என்பது. நம் மூளையோ இதை தெரிந்து கொள்ள விரும்புவது இல்லைதொடர்ந்து அடர்த்தி அதிகமான இப்புகையைச் சுவாசிக்கும் ஒருவருக்கு நுரையீரல் முழுமையாகச் சுருங்கி விரிவடைய முடியாமல் போகிறது. அதனால் சுவாசத்திற்குத் தேவையான காற்று போதிய அளவு கிடைக்காமல் போகிறது

இந்த வேதிப்பொருள் விளைக்கும் இத்தீங்கு ஒருபுறம் என்றால் மறுபுறம் இவ்வேதி பொருளின் கரியால் ஏற்படும் தீங்கு. கொசுவர்த்தி எரியும் போது அது வெளியிடும் நுண்ணிய சாம்பல் அளவு 75 முதல் 137 சிகரெட் எரிப்பதனால் வரும் சாம்பலுக்கு சமம் . இந்த சாம்பல் சாதாரனமாகக் கீழே கொட்டும் பிற சாம்பல் போன்றது அல்ல. காற்றில் மிதக்கும் கண்களுக்குத்தெரியாத நுண்ணிய சாம்பல்(size 2.5 micron). அதனை சுவாசிப்பதனாலும் நுரையீரல் காச நோய், புற்று (cancer) நோய் வருவதற்கு வாய்ப்புகள் ஏராளம். நோய்கள் வரலாம்

நாம் என்ன செய்கிறோம். முக்கியமாக நாம் உறங்காவிட்டாலும் குழந்தைகள் நன்கு உறங்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் ஏன் தாய்மைப் பாசத்தில் கொசுக்கொல்லிகளைப் பயன் படுத்துகிறோம். கொசுச் சுருளில் அல்லது கொசுப் பாயில் (மேட்டில்) இருந்து வெளிவரும் புகையைப் பிஞ்சுக் குழந்தைகள் சுவாசித்தால், அவர்களுக்கு வலிப்பு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறி எச்சரிக்கிறது லக்னோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு

குழந்தைகளுக்கு இத்தகு துன்பத்தைக் கொடுக்கும் இக் கொசுக் கொல்லிகள் குழந்தைகளே பிறக்காமல் இருக்கவும் வழி செய்கிறது. மும்பையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கொசு விரட்டிகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் சிலருக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக் கூடியது என்பதும் உறுதி செய்யப் பட்டுள்ளதுஇதில் உள்ள சிந்தெடிக் D அலெத்ரின் மனிதர்களின் உடல் எடையை மெல்ல மெல்ல இழக்கச் செய்யும் தன்மை கொண்டது

தொடர்ந்து கொசு விரட்டி உபயோகித்து வருகிறவர்களுக்கு நுரையீரல் ஒருவித ஒவ்வாமை ஏற்பட்டு முழுமையாக விரிவடையாமலும் அதன் கொள்ளளவுக்குண்டான காற்றை செயல்பாட்டிற்கு எடுத்துக்கொள்ள இயலாமலும் போய் விடுவதாக பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன

மும்பையின் நுகர்வோர் வழிகாட்டும் கழகத்தின் முடிவுப்படி கொசு விரட்டிகளில் பயன்படுத்தப்படும் இரசாயனம் சிலருக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்த வல்லது என்கிறார்கள்

கொசு விரட்டியில் உள்ள டயோக்சின் புற்றுநோயை உருவாக்க வல்லது. ‘அலெத்ரின் மனிதர்களின் உடல் எடையை மெல்ல இழக்கச் செய்யவல்லது’. மேட்புகையை பிஞ்சுக் குழந்தைகள் இரவு முழுவதும் சுவாசித்தால் வலிப்பு நோய் ஏற்படலாம் என்கிறது லக்னோ கிஸ் ஜோர்ஜின் மருத்துவப் பல்கலைக்கழகம். இங்கே உள்ள டாக்டர் தேவிகாநாக் என்பவரின் கண்டுபிடிப்பு இது

இத்தனையையும் படித்த பின்புமா நீங்கள் கொசு வர்த்தியைப் பயன் படுத்துகிறீர்கள்? போங்க... போயி ஒரு கொசு வலையை வாங்கி அழகா கட்டி அதற்குள் கூட்டாக நாயகன் கமல் குடும்பம் போலநீ ஒரு காதல் சங்கீதம்என்று மனைவியின் காதில் பாட்டு பாடிக்கொண்டு இன்பமாக உறங்குங்கள்.. கொசுவைப் பாட அனுமதிக்காதீர்கள்.
கொசுக்களைத் தடுக்க ஒரே எளிய வழி, பாதுகாப்பானது, சிக்கனமானது கொசுவலை மட்டுமே!


No comments:

Post a Comment