உடலில் எங்காவது காயம் ஏற்படும் போது சரியாக கவனிக்கவில்லை என்றால் சில நாட்களிலேயே சீழ் பிடிக்க ஆரம்பித்து விடும்.
சரி இந்த சீழ் என்பது என்ன… தெரியுமா?
அநேகமாக உங்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் தசை நார்கள் கிழிந்து வடிந்தோடிய ரத்தம் கெட்டுப்போய் இருக்கும் என நினைப்பீர்கள். ஒரளவுக்கு நீங்கள் நினைப்பது சரி… அதாவது கெட்டுபோன ரத்தம் தான் அது, ஆனால் முழுமையான காரணம் வேறு.
உடலில் காயம் ஏற்படும் போது அதன் வழியாக கிருமிகள் உள் நுழைகிறது, கிருமிகளை எதிர்க்கவே நம் உடலில் காவலர்கள் இருக்கிறார்கள், அவர்கள் தான் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள், இந்த வெள்ளை அணுக்களின் கடமையே நோய் பரப்பும் கிருமிகளுடன் சண்டை இடுவது தான். காயத்தின் காரணமாக உட்புகும் கிருமிகளை, வெள்ளை அணுக்கள் எதிர்த்து சண்டையிடுகின்றன, சண்டையில் உயிர் நீத்த போராளி வெள்ளை அணுக்கள் தான் இந்த சீழ். உடலுக்கு தேவை இல்லாத கழிவு என்பதால் உடலை விட்டு அது தானாக வெளியேறுகிறது.
மேற்கொண்டு ரத்தம் பற்றிய சில தகவல்கள்:
இப்படி ஒரு வெப்சைட் எ என் லைப் லையே பாத்தது கூட கிடையாது.உங்கள் சேவை எங்களுக்கு தேவை.நீங்கள் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்.மிகவும் பயனுள்ள தளம்.நன்றி
ReplyDeleteThank You very much for your encouragement.
Delete