உணவின் வழியாகவும், மூக்கு மற்றும் தோல் சுவாசங்களின் மூலமாகவும் பெறப்படும் சக்தியை மூன்று விதங்களில் உடல் பயன்படுத்திக் கொள்கிறது.
1. இயக்க சக்தி
2. செரிமான சக்தி
3. எதிர்ப்பு சக்தி (சீரமைப்பு / பராமரிப்பு)
இவை மூன்றும் நமது உடலின் சமமான ஆற்றல் பகிர்வு.
1. இயக்க சக்தி :
நம் இயக்கத்திற்கு தேவையான சக்தி உள் உறுப்புக்களின் தன்னிச்சையான இயக்கத்திற்கும், நம் தேவைக்கேற்ப நாம் இயக்கும் கைகள், கால்கள், கண்கள், வாய் போன்றவற்றின் புற இயக்கத்திற்கும் இயக்க சக்தி செலவாகிறது.
கண்களால் பார்ப்பது, காதால் கேட்பது, மூக்கால் நுகர்வது, கைகளால் செய்வது, கால்களால் நடப்பது. என நம் ஒவ்வொரு செயலுக்கும் இயக்க சக்தியே அடிப்படையாக அமைகிறது.
2. செரிமான சக்தி :
நாம் உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று இவற்றை செரித்து சக்தியைப் பிரித்தெடுக்க செரிமான சக்தி அவசியமானது. இச்செரிமானம் ஒழுங்காக நடைபெறவில்லை என்றால் மொத்த உடலுக்குத் தேவையான சக்தி கிடைப்பதில் தடை ஏற்படும். சக்தியின் பிற பணிகளான இயக்க எதிர்ப்பு சக்திகளும் செரிமான சக்தியையே நம்பியுள்ளன.
3. நோய் எதிர்ப்பு சக்தி : (சீரமைப்பு / பராமரிப்பு)
இது உடலைப் பராமரிக்கும் சக்தி.
- இயக்க சக்தியும், செரிமான சக்தியும் உடலில் அன்றாட கழிவுகளைத் தோற்றுவிக்கின்றன. இவற்றை உடலிற்கு துன்பம் தராத வகையில் வெளியேற்றுவதற்கு நோய் எதிர்ப்பு சக்தி உதவுகிறது.
- தினசரி இயக்கத்தால் சோர்வடையும் வெளிஉள் உறுப்புக்களை புத்துணர்வு பெற வைத்து அவற்றை பராமரிக்கும் பணியை நோய் எதிர்ப்பு சக்தி மேற்கொள்கிறது.
- உடலிற்கு ஏற்படும் பாதிப்புக்களை நீக்குவதற்கும், கழிவுகள் உடலில் தேங்கிவிட்டால்அவற்றை வெளியேற்றி, தேக்கத் தால் ஏற்படும் பாதிப்புக்களை சீர் செய்வதற்கும் நோய் எதிர்ப்பு சக்தி பயன்படுகிறது.
இது தான் ஆரோக்கியமான உடலின் ஆற்றல் பங்கீடாகும். இவை சமமான அளவில் நடைபெறுவதே உடல் நலம்!
இந்த இயல்பான இயக்கம் நடைபெறுவதற்கு உடல் யாருடைய உதவியையும் நாடுவது இல்லை.
இது போன்ற பல தகவல்களை இந்த ஆடியோ பதிவில் தெளிவாக விளக்கியுள்ளேன்.
இது போன்ற பல தகவல்களை இந்த ஆடியோ பதிவில் தெளிவாக விளக்கியுள்ளேன்.
மருத்துவம் என்றால் என்ன?
நமது உடலில் ஏற்படும் தொந்தரவுகளுக்கான உண்மையான காரணத்தை ஆராயாமல் உடலில் ஏற்படும் அறிகுறிகளை வைத்து தாங்கள் கற்றுக்கொண்ட மருத்துவமுறை மூலம் சிகிச்சையளித்து தற்காலிக நிவாரணத்தை கொடுப்பது மருத்துவம்.
ஆரோக்கியம் என்றால் என்ன?
நமது உடலின் தேவைகளை உணர்வுகள் மூலம் வெளிப்படுத்தும். அதனை சரியாக புரிந்துகொண்டு நிறைவேற்றுவதே ஆரோக்கியம். நமது உடலில் ஏற்படும் பிரச்சினைக்கான உண்மையான காரணத்தை ஆராய்ந்து அதனை சரிசெய்து நிரந்தரமான தீர்வை பெறுவது ஆரோக்கியம்.
நாம் அன்பாக இருந்தால் செல்லப்பிராணிகளிடம் இருந்தும் சகமனிதர்களிடம் இருந்தும் ஆற்றலை பெறமுடியும்.
# நீங்கள் ஆரோக்கியமாக வாழ விரும்பினால் இன்று முதல் உங்களுக்கு பிடித்தமான உணவுகளை மட்டும் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
# நாம் வசிக்கும் இடங்களில் சுத்தமான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கொசு தொந்தரவு இருக்கும் பட்சத்தில் ரசாயன கொசுவிரட்டிகள் பயன்படுத்தாமல் காற்று வந்துபோகக்கூடிய கொசு வலைகளை பயன்படுத்தி ஜன்னல்களை திறந்து வைத்து தூங்க வேண்டும். ஏனென்றால் நம் உடலில் ஏற்படும் பல இன்னல்களுக்கு அடிப்படை காரணமே அசுத்த காற்று நிறைந்த இடத்தில் வசிப்பது தான்.
# பசியை உணர்ந்து, பசி ஏற்படும் போதுதான் சாப்பிடவேண்டும். பசி இல்லாத போது நேரத்தைப் பார்த்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
# பசிக்கிற அளவிற்குத் தகுந்தவாறு உண்ணுகிற உணவின் அளவை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரே மாதிரியான பசி எப்போதும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
# மனதிற்கு பிடித்த உணவுகளை மட்டும் ரசித்து ருசித்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
# டீ மற்றும் காப்பி போன்றவை உணவல்ல போதைப்பொருள் என்பதை நினைவில் கொண்டு அதனை தவிர்த்திடுங்கள். (இதுபற்றி இந்த https://youtu.be/TkvkJozBpQc முகவரியில் “டீ காப்பி நமக்கு தேவைதானா?” என்னும் தலைப்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.)
# உடல் கேட்கும் ஓய்விற்கும் தூக்கத்திற்க்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம். இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரைக்கும் தூங்க வேண்டிய அவசியமான நேரமாகும். இந்த நேரத்தில் தான் உடலில் எதிர்ப்பு சக்தி நோயெதிர்ப்பு வேலையை முழு வீச்சில் மேற்கொள்கிறது.
# இரவில் தூங்குவதற்கு பதிலாக பகலில் தூங்கி கணக்கை சரிசெய்து கொள்ள முடியாது. ஏனென்றால் உடலின் நச்சுத்தன்மையை அகற்றும் வேலையும், ஒவ்வொரு உள்ளுறுப்பையும் சீரமைக்கும் வேலையும், ஒவ்வொரு உயிரணுவும் வளர்ச்சியடையும் வேலையும் இரவுகளில்தான் முழுமையாக நடைபெறுகின்றன. எனவே இரவு நேரத்தில் தூங்குவது ஆரோக்கியத்தின் அடிப்படைத் தேவை.
No comments:
Post a Comment