நீங்கள் சாப்பிடுவது சமச்சீர் உணவா? தனிச்சீர் உணவா?


நவீன அறிவியலின் அடிப்படையில் உண்ணப்படும் உணவு முறையின் பெயர் - சமச்சீர் உணவுமுறை. ஒரு மனிதனுக்கு எந்தெந்த அளவில், என்னென்ன சத்துகள் வேண்டுமோ அவை சமமாகக் கலந்திருக்கும் உணவை தேர்வு செய்து சாப்பிடுவதுதான் சமச்சீர் உணவுமுறை. 
ஒரு நபருக்கு கால்சியம் ஒரு அளவிலும், புரோட்டீன் ஒரு அளவிலும், வைட்டமின்கள் ஒவ்வோர் அளவிலும் தேவையிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இவை அனைத்தையும் கொண்டுள்ள உணவுகளைச் சாப்பிடுவதுதான் நவீன காலத்தின் சமச்சீர் உணவு முறை.

தனிச்சீர் உணவுமுறை இதற்கு நேரெதிரானது. ஒரு குறிப்பிட்ட உணவில் இந்த வகையான சத்துகள் இருக்கின்றன என்று நம்மால் பிரித்து அறிய முடியும். 

ஆனால், நாம் வெறுமனே அதைச் சாப்பிட்டாலே போதுமானதா? 

நம்முடைய உடல் அந்த உணவிலிருந்து குறிப்பிட்ட அந்த சத்துக்களை எடுத்துக்கொண்டு விட்டதா என்பதை எப்படி அறிய முடியும்? 

உதாரணமாக, இரும்புச்சத்துக் குறைபாடு ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்படுகிறது. இரும்புச் சத்து கொண்ட ஒரு சிறப்பு உணவு அவருக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. அந்த உணவில் சத்து இருப்பதும், அவர் உடலுக்கு அது தேவையாக இருப்பதும் உண்மைதான். ஆனால், ‘அந்த நோயாளியின் உடல் இரும்புச்சத்துள்ள அந்த உணவிலிருந்து தனக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டதா?’ என்று பரிசோதித்துப் பார்த்தால் மிகப்பெரிய வேறுபாடு அதில் இருக்கும்.

கண்களுக்குத் தேவையான ஒரு வைட்டமின் கேரட்டில் இருப்பதாக நம் பாடங்கள் சொல்கின்றன. ஒரு நோயாளிக்கு கண்களில் அக்குறிப்பிட்ட வைட்டமின் குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. அவருக்கு கேரட் பரிந்துரைக்கப்படுகிறது. கேரட்டில் அந்நோயாளிக்குத் தேவையான அந்த வைட்டமின் இருப்பது உண்மைதான். ஆனால், தொடர்ந்து கேரட் சாப்பிட்டும் அவருடைய வைட்டமின் தேவை முழுமை பெறவில்லை என்றால், இதனை எப்படிப் புரிந்து கொள்வது?

இங்குதான் சமச்சீர் முறை உணவுக் கோட்பாடு பயனற்றுப் போகிறது. ஒவ்வொரு மனிதனும் தனித்தனியானவன். ஒவ்வொருவரின் தேவையும் தனித்தன்மையானது. பலருடைய தேவைகளைக் கூட்டி, வகுத்து உருவாக்கப்படும் பொதுவான சராசரிகளுக்கு மனித உடல் முரணானது. வெறும் கணக்குகளுக்குள் உடலின் இயக்கத்தை அடக்கிவிட முடியாது என்பது தான் தனிச்சீர் உணவுமுறையின் அடிப்படை.

ஒவ்வொரு மனிதனின் உடலும் தனக்குத் தேவையான ஆற்றலை உணவின் மூலம் கோரிப் பெறுகிறது. இப்படி ஒவ்வொரு தனிநபரும் தனக்குத் தேவையான உணவை சரியாகத் தேர்வு செய்யும் முறைதான், தனிச்சீர் உணவுமுறை. இந்த உணவு முறை சுவைகளை அடிப்படையாகக் கொண்டது. தமிழில் ‘உணவு’ என்ற சொல்லை தனியாக எங்கும் காண முடியாது. ‘அறுசுவை உணவு’ என்றே சொல்வார்கள். அந்த அளவிற்கு சுவையும், உணவும் பிரிக்க முடியாதது.

அறுசுவை என்ற சொல்லே ஆறு சுவைகள் இருக்கின்றன என்ற செய்தியைச் சொல்லி விடுகிறது. இந்த ஆறு சுவைகளும் தனித்தனியாக ஒவ்வொரு உடல் உறுப்போடு தொடர்பு கொண்டவை. ‘சுவைத் தேவையை நம் உடல் எவ்வாறு அறிவிக்கும்’ என்பதையும், ‘சுவைகளுக்கும் உள்ளுறுப்புகளுக்கும் தொடர்பு இருக்கிறது’ என்பதையும் புரிந்துகொள்ள ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். 

ஒரு கர்ப்பிணி பெண்ணைக் கவனித்திருக்கிறீர்களா? 

அவர் அடிக்கடியும், அதிகமாகவும் சாப்பிடும் சுவைகள் என்னென்ன என்று தெரியுமா? 

புளிப்பு, துவர்ப்பு, உப்பு - இந்த மூன்று சுவைகளும் கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி தேவைப்படும் சுவைகளாகும். 

ஏன் இந்த மூன்று சுவைகள் மட்டும் தேவைப்படுகின்றன? 

நம் உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையோடு தொடர்பு கொண்டிருக்கின்றன. அந்த உறுப்புகளுக்கு ஆற்றல் தேவைப்படும்போதெல்லாம் குறிப்பிட்ட சுவையை அதிகம் கேட்கின்றன.

ஆறு சுவைகள் என்பவை எவை?

இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு (காரம்), உவர்ப்பு (உப்பு), கசப்பு

இந்த ஆறு சுவைகளும் எந்தெந்த உறுப்புகளோடு தொடர்பு கொண்டிருக்கின்றன தெரியுமா?

1. இனிப்பு - இரைப்பை

2. புளிப்பு - கல்லீரல்

3. துவர்ப்பு - மண்ணீரல்

4. கார்ப்பு - நுரையீரல்

5. உவர்ப்பு - சிறுநீரகம்

6. கசப்பு – இதயம்

இந்த சுவைகளின் பட்டியலை வைத்துக்கொண்டு, மறுபடியும் கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பிடித்த சுவைகளைப் பார்ப்போம். கர்ப்பப்பையில் சிசு வளர்கிறபோது நம்முடைய மரபுவழி அறிவியலின்படி மூன்று உறுப்புகள் சிசு பராமரிப்பில் பங்கேற்கின்றன. அவை சிறுநீரகம், கல்லீரல், மண்ணீரல்.

சிறுநீரகத்தின் சுவை, உப்பு. 

கல்லீரலின் சுவை, புளிப்பு. 

மண்ணீரலின் சுவை, துவர்ப்பு. 

இம்மூன்று உறுப்புகளும் தங்களுக்கு சக்தித் தேவை ஏற்படுகிறபோது இச்சுவைகளைக் கேட்டுப் பெறுகின்றன. அதனால்தான் கர்ப்பிணிகளுக்கு மிகப் பிடித்த சுவைகளாக இவை இருக்கின்றன. 

இதேபோல நம் ஒவ்வொருவரின் அன்றாட வாழ்விலும் பல சுவைகள் தேவைப்படுகின்றன. நம்முடைய ருசித் தேவையை நாம் கவனிக்கத் தவறுகிறபோது, குறிப்பிட்ட சுவை தேவைப்படுகிற உறுப்பு பலவீனம் அடைகிறது. இன்னொருபுறம், கிடைக்கிற சுவையை அதிகமாகச் சாப்பிடுகிறபோது, தேவைக்கு மீறி கிடைக்கிற சுவையால் குறிப்பிட்ட உள்ளுறுப்பு பாதிப்படைகிறது. 

‘மிகினும் குறையினும் நோய்’ அல்லவா?

நம்முடைய பாரம்பரிய சுவை மருத்துவம் இவற்றை அடிப்படையாகக் கொண்டது தான். நம்முடைய உணவுப் பழக்கத்தில் இருக்கும் ரகசிய ஃபார்முலாவின் அடிப்படையும் இதுதான். 

சரி, அடுத்ததாக ‘இந்த சுவைகளை வைத்துக்கொண்டு முழு உடலையும் சமப்படுத்துவது எப்படி?’ என்ற தனிச்சீர் உணவு முறையின் இரண்டாவது கட்டத்திற்குச் செல்லலாம்.

நம்முடைய பாரம்பரிய மருத்துவங்கள் இந்த ஐந்து உறுப்புகளுக்கும் மிக முக்கிய இடத்தைக் கொடுக்கின்றன. சித்த மருத்துவம், ஆயுர்வேதம் போன்ற இந்திய மருத்துவங்கள் இவற்றை ‘ராஜ உறுப்புகள்’ என்கின்றன. அக்குபங்சர் என்ற சீன மருத்துவம் ‘இன் உறுப்புகள்’ என இவற்றை அழைக்கிறது.

நம் உடலின் ராஜாக்கள் யார் தெரியுமா? 

இதயம், 

மண்ணீரல், 

நுரையீரல், 

சிறுநீரகம், 

கல்லீரல். 

மரபுவழி மருத்துவ அறிவியலின் படி, இந்த ராஜ உறுப்புகள் சரியாக இருந்தால் நம் உடலின் பிற உறுப்புகள் சரியாக இருக்கும். அதாவது, இந்த ஐவர்தான் நம் முழு உடலையும் பாதுகாப்பவர்கள். நம் உடலில் எந்த நோய் ஏற்பட்டாலும் இவர்களுக்குத் தெரியாமல் ஏற்படாது. சொல்லப் போனால், எந்த நோய் ஏற்பட்டாலும் அதற்குக் காரணமாக இருப்பது இவர்களாகத்தான் இருக்கும். 

‘‘அதெல்லாம் சரி... முக்கியமான உறுப்புகள் என்று சொல்லி ஒரு பட்டியலை நீட்டுகிறீர்கள். அதில் ‘தலைமைச் செயலகம்’ என்று அழைக்கப்படும் மூளையின் பெயரைக் காணோமே’’ என்று கேள்வி எழ வேண்டுமே! 

ஆமாம். நம் மரபுவழி மருத்துவங்கள் மூளையைப் புறக்கணிக்கின்றன. ‘அது ஒன்றும் அவ்வளவு முக்கியமான உறுப்பு இல்லை’ என்றே கூறுகின்றன. 

இதென்ன பெரிய சிக்கலாக இருக்கிறதே? 

நம் பள்ளிப் பாடங்களிலிருந்து இப்போது வரை ‘நம் உடலை இயக்கிக் கொண்டிருப்பது மூளை’ என்றுதானே நம்பிக் கொண்டிருக்கிறோம். திடீரென்று நம் மருத்துவங்கள் மூளையை மதிப்பதில்லை என்று சொன்னால் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். 

நவீன மருத்துவத்தில்கூட இது முடிவற்ற சர்ச்சையாகத் தொடர்கிறது. ‘இதயம் முக்கியமா... மூளை முக்கியமா...’ என்ற கேள்வியோடு ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள் நடத்தும் விவாதங்களுக்கு நம் ஊர் பட்டிமன்றங்கள் போல தீர்ப்புகள் அவ்வப்போது கிடைக்கின்றன. 

நம் உடலின் எல்லா உறுப்புகளோடும் தொடர்பில் இருப்பதும், அவற்றை இணைத்துப் பணியாற்றுவதும் மூளைதான். நமது உடலை ஒரு போர்ப் படையாகக் கருதிக்கொண்டால், வியூகங்கள் அமைத்து இந்தப் படையை இயக்கும் தளபதி மூளைதான். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் நாம் நினைப்பது மாதிரி மூளை முதலாளி இல்லை. 

ஒரு படைத்தளபதி என்றால், அவருக்குக் கட்டளையிடும் மன்னரோ, அமைச்சரோ இருப்பார்கள் இல்லையா? 

அப்படித்தான் மூளைக்கும் மேலே சில முதலாளிகள் இருக்கிறார்கள். 

யார் அவர்கள்? 

நமக்கு ஏற்கனவே அறிமுகமான ராஜாக்கள்தான். மேலே சொன்ன ஐந்து ராஜ உறுப்புகளும்தான் மூளையை இயக்குகின்றன. மூளை இயங்குவதற்கான அடிப்படைக் காரணமாக இருக்கின்றன.

இதனைப் புரிந்து கொள்வதற்கு சில உதாரணங்களைப் பார்க்கலாம்... ஒரு மனிதர் நாடு முழுவதும் நடைபெறும் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களைக் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல், தன் அன்றாடக் கடமைகளில் ஒன்றான மது அருந்துவதைத் தொடர்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த மனிதர் மது அருந்தியவுடன் அவர் உடலின் சமநிலை தவறுகிறது - தள்ளாடுகிறார். பேச்சு குழறுகிறது. 

இதற்கெல்லாம் காரணம் என்ன?

நாம் சொல்கிறோம், ‘அவருடைய சிறுமூளை மது போதையால் பாதிக்கப்பட்டு, இந்த நிலை ஏற்படுகிறது’ என்று. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவர் குடித்த மது நேரடியாக சிறுமூளைக்கா சென்றது? இல்லை. அது இரைப்பையை அடைந்து, அங்கிருந்து மதுவின் பாதிப்புகள் கல்லீரலைச் சென்றடைகின்றன. 

ஏன் கல்லீரலுக்குச் செல்கிறது தெரியுமா? 

நம் உடலில் எந்த ரசாயனம் சென்றாலும் அது நேராக கல்லீரலுக்குத்தான் செல்லும். உடலுக்குள் நுழையும் ரசாயனம் எதுவானாலும், அதை அலசிப் பார்த்து, அதன் குணங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியை எடுப்பது கல்லீரல்தான். விஷமே வந்தாலும், அதன் நச்சுக்களை அகற்ற கல்லீரல்தான் போராடுகிறது. முடியாதபட்சத்தில் முதலில் பாதிக்கப்படுவதும் கல்லீரல்தான். ஆங்கில மருத்துவத்தின் ரசாயன மருந்துகளால் ஏற்படும் பின் விளைவுகளாகக் குறிப்பிடப்படும் முக்கியமான விஷயங்களில் ஒன்று, கல்லீரல் பாதிப்பு. நம் உணவுகளில் கலக்கப்படுகிற ரசாயனங்கள் முதல், நாம் விரும்பிச் சாப்பிடுகிற மாத்திரைகள் வரை கல்லீரலைத்தான் பதம் பார்க்கின்றன.

அதே போல, ஒரு மனிதர் அருந்துகிற மதுவும் கல்லீரலைப் பாதிக்கிறது. அந்த பாதிப்பின் எதிரொலிதான் சிறுமூளை போதையால் பாதிக்கப்பட்டு தள்ளாட்டம், பேச்சு குழறுவது எல்லாமே. கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டால் அது மூளையில் எதிரொலிக்கிறது.

இன்னொரு உதாரணம்... நம்முடைய எல்லா உறுப்புகளுமே மூளையின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன என்று சொல்கிறோம். ஒருவேளை மூளை பாதிக்கப்பட்டால் எல்லா உறுப்புகளும் என்ன ஆகும்? 

‘மூளைதான் தலைமைச் செயலகம். அது இயங்கினால்தான் எல்லா உறுப்புகளும் இயங்கும்’ என்று சொல்கிற நாம், மூளைச் சாவு என்ற கோமாவில் இருக்கும் நபரைப் பார்த்தால் உண்மை விளங்கும். மூளையின் உத்தரவின்றி இதயம் துடிக்காது, ரத்த ஓட்டம் நடக்காது, சிறுநீரகங்கள் வேலை செய்யாது... இப்படியெல்லாம் நம்பிக் கொண்டிருப்போம்.
ஆனால் உண்மையில் நடப்பது என்ன?

கோமாவில் இருக்கும் நபரின் எல்லா உள்ளுறுப்புகளும் தன்னிச்சையாக இயங்கிக் கொண்டிருக்கும். மூளை செத்து விட்டதே என்று எந்த உறுப்பும் கட்டளைக்காகக் காத்திருக்கவில்லை. மாறாக, எல்லா உறுப்புகளும் தங்கள் இயல்பான வேலையைச் செய்து கொண்டிருக்கின்றன. இன்னும் சரியாகச் சொன்னால், மூளை வேலை செய்யாத நேரத்தில் எல்லா உறுப்புகளும் கூடுதலாக வேலை செய்கின்றன. 

இப்போது சொல்லுங்கள்... 

நம் உடலின் உண்மையான ராஜா யார்? மூளையா? 

நம் உடலில் உள்ள ராஜ உறுப்புகள் ஐந்திற்கும் தனித்தனி சுவைகள் இருக்கின்றன என்பதைப் பார்த்தோம். இந்த ஐந்து ராஜ உறுப்புகளோடு இரைப்பையையும் சேர்த்து ஆறு உறுப்புகளை உணவில் இருக்கும் அறுசுவைகள் தூண்டுகின்றன. இந்த ஆறு உறுப்புகளும் இயல்பாக இயங்கினால் பிற உறுப்புகளில் எவ்வித நோய்களும் ஏற்படாது என்பது மரபுவழி மருத்துவங்களின் கோட்பாடு.

ஆறு உறுப்புகள் மற்றும் அறுசுவைகள் - இவற்றின் சமன்பாடுதான் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். 

நம்முடைய பாரம்பரிய சமையல் முறைகளும், உணவு சார்ந்த மருத்துவமும் இதை உணர்ந்ததாக இருந்தன. இந்த சமன்பாடு புரியாமல் சமச்சீர் முறை என்ற அடிப்படையில் சத்துகளுக்காக நாம் சாப்பிட்டுக் கொண்டிருப்பது உடல்நலத்தைத் தராது.


இந்த பதிவை (கிட்சன் டு கிளினிக்) எழுதிய அக்குபஞ்சர் மருத்துவர் அ. உமர் பாரூக் அவர்களுக்கும் அதை வெளியிட்ட ”குங்குமம்” வார இதழிலுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.


நாம் அன்பாக இருந்தால் செல்லப்பிராணிகளிடம் இருந்தும் சகமனிதர்களிடம் இருந்தும் ஆற்றலை பெறமுடியும்.

 # நீங்கள் ஆரோக்கியமாக வாழ விரும்பினால் இன்று முதல் உங்களுக்கு பிடித்தமான உணவுகளை மட்டும் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.



# நாம் வசிக்கும் இடங்களில் சுத்தமான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கொசு தொந்தரவு இருக்கும் பட்சத்தில் ரசாயன கொசுவிரட்டிகள் பயன்படுத்தாமல் காற்று வந்துபோகக்கூடிய கொசு வலைகளை பயன்படுத்தி ஜன்னல்களை திறந்து வைத்து தூங்க வேண்டும். ஏனென்றால் நம் உடலில் ஏற்படும் பல இன்னல்களுக்கு அடிப்படை காரணமே அசுத்த காற்று நிறைந்த இடத்தில் வசிப்பது தான்.  

# பசியை உணர்ந்து, பசி ஏற்படும் போதுதான் சாப்பிடவேண்டும். பசி இல்லாத போது நேரத்தைப் பார்த்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

# பசிக்கிற அளவிற்குத் தகுந்தவாறு உண்ணுகிற உணவின் அளவை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரே மாதிரியான பசி எப்போதும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

# மனதிற்கு பிடித்த உணவுகளை மட்டும் ரசித்து ருசித்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். 

# டீ மற்றும் காப்பி போன்றவை உணவல்ல போதைப்பொருள் என்பதை நினைவில் கொண்டு அதனை தவிர்த்திடுங்கள். (இதுபற்றி இந்த https://youtu.be/TkvkJozBpQc முகவரியில்  “டீ காப்பி நமக்கு தேவைதானா?” என்னும் தலைப்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.)

# உடல் கேட்கும் ஓய்விற்கும் தூக்கத்திற்க்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம். இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரைக்கும் தூங்க வேண்டிய அவசியமான நேரமாகும். இந்த நேரத்தில் தான் உடலில் எதிர்ப்பு சக்தி நோயெதிர்ப்பு வேலையை முழு வீச்சில் மேற்கொள்கிறது.

# இரவில் தூங்குவதற்கு பதிலாக பகலில் தூங்கி கணக்கை சரிசெய்து கொள்ள முடியாது. ஏனென்றால் உடலின் நச்சுத்தன்மையை அகற்றும் வேலையும், ஒவ்வொரு உள்ளுறுப்பையும் சீரமைக்கும் வேலையும், ஒவ்வொரு உயிரணுவும் வளர்ச்சியடையும் வேலையும் இரவுகளில்தான் முழுமையாக நடைபெறுகின்றன. எனவே இரவு நேரத்தில் தூங்குவது ஆரோக்கியத்தின் அடிப்படைத் தேவை.



நாம் எப்பொழுது நிம்மதியாக வாழ்கிறோமோ அப்பொழுது நமது உடல் தன்னைத்தானே பராமரித்துக் கொள்வதில் எந்தவித தடையும் ஏற்படுவதில்லை. நாம் எப்பொழுது நிம்மதி இல்லாமல் வாழ்கிறோமோ அப்போது உடல் தன்னைத்தானே வருத்திக்கொள்கிறது. கவலை, மனவருத்தம், பயம், கோபம், விரக்தி போன்ற எண்ணங்கள் நமது உடலின் பராமரிப்பு சக்தியை தீர்த்துவிடுகிறது. 

எனவே நிம்மதியாக வாழ்வதற்காக நேரங்களை ஒதுக்குவோம். பலர் பணத்திற்காக புகழுக்காக, பதவிக்காக, கெளரவத்திற்க்காக தங்கள் நிம்மதியை இழக்கிறார்கள். ஆனால் நிம்மதிக்காக பணம், புகழ், அந்தஸ்து என்று எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஏனென்றால் நம்முடைய ஆரோக்கியம், நிம்மதி இதைவிடப் பெரிதல்லவா? 

# அன்பான பேச்சுக்களை கேட்கும்போதும், 

# பிடித்தமான உணவுகளை உண்ணும்போதும், 

# பிடித்தமான இசை மற்றும் பாடல்களை கேட்கும்போதும்,  

# பிடித்தமான நகைச்சுவை மற்றும் திரைப்படங்களை பார்க்கும்போதும்,

# பிடித்தமான இடங்களுக்கு சுற்றுலா செல்லும்போதும், 

# பிடித்தமானவர்களிடம் நேரத்தை செலவிடும்போதும்,

# பிடித்தமான பொழுதுபோக்கில் ஈடுபடும்போதும், 

# நல்லதை பார்க்கும்போது, கேட்கும்போதும், சிந்திக்கும்போதும்,

# அடுத்தவர்களுக்கு உதவும்போதும், 

# நேர்மையாக வாழும்போதும்,

# சுயநலமில்லாத வாழ்க்கை வாழும்போதும்,

... நமது மனது சந்தோஷப்படுகிறது. அவ்வாறு மகிழ்ச்சியாக இருந்தால் நமது உடலின் பராமரிப்பு வேலையும் தடையில்லாமல் நடைபெறும் மேலும் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

 நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!


ஆரோக்கியமாக வாழ விரும்பினால் மருத்துவத்தை தேடுவதை விட்டுவிட்டு ஆரோக்கியத்தை தேடுங்கள். இன்று முதல் உங்களுக்கு பிடித்தமான உணவுகளை மட்டும் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். 

நம் தவறான வாழ்க்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தரமான தீர்வை தர இயலாது. மருந்துக்களையோ மருத்துவரையோ தேடுவதற்கு பதில் வியாதிக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்வதே சிறப்பானதாகும்.

நல்லதை சொல்ல வேண்டியது எனது கடமை. அதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் உரிமை. என்னிடம் மருந்துக்களை எதிர்பார்க்காதீர்கள் ஆரோக்கியத்தை மட்டும் எதிர்பாருங்கள். ஆரோக்கியமாக வாழ வழிகாட்டி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காகவே இந்த முகநூல் பக்கம் மற்றும் குழுவினை உருவாக்கியுள்ளேன்.


மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:

http://reghahealthcare.blogspot.in

https://www.facebook.com/ReghaHealthCare

https://www.facebook.com/groups/reghahealthcare

https://www.facebook.com/groups/811220052306876


முக்கிய குறிப்பு:

இரவு 9 மணி முதல் காலை வரை தூக்கம் தடைபடாமல் இருக்க எனது தொடர்பு எண்களை Silent Mode இற்கு மாற்றிவிடுவேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அந்த நேரத்தில் நீங்களும் தூங்கச் சென்று உங்களது ஆரோக்கியத்தையும் உறுதிசெய்து கொள்ளுங்கள்.

ஆங்கில மருந்துக்கள், டீ, காப்பி, கஞ்சா உட்கொள்ளுதல், புகை பிடித்தல், மது அருந்துதல், புகையிலை, பாக்கு, மூக்குப்பொடி போன்ற போதை பழக்கத்தை விடுவதற்கு தயாராக உள்ளவர்கள் என்னை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம். 

மேலும் பொறுமையாக இருப்பவர்கள், நேர்மையாக வாழ்பவர்கள், அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாதவர்கள் மற்றும் மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் மட்டும் இந்த எண்கள் +919840980224, +919750956398 மற்றும் vineeth3d@gmail.com க்கு தொடர்பு கொள்ளவும்.

சுயநலமாக சிந்திப்போர் மற்றும் மருந்துக்களால் மட்டுமே வியாதிகளை குணப்படுத்த முடியும் என எண்ணுபவர்கள் என்னை தொடர்புகொண்டு உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நடக்கும் என்கிற உண்மையை உணர்ந்த காரணத்தால் தான் நல்ல விஷயங்களை அதிகம் பகிர்கிறேன். எனவே நல்லதே கேளுங்கள் நல்லதே நினையுங்கள் நல்லதே பேசுங்கள் நல்லதே செய்யுங்கள் நல்லதே நடக்கும். அதற்கு எனது வாழ்கையே சாட்சி. 

 "நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?"  Youtube Channel முகவரி
 "நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!"  Youtube Channel முகவரி

 "நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" Telegram குழுவின் முகவரி
 "நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்" Telegram குழுவின் முகவரி

5 comments: