Showing posts with label ஆடியோ தொடர். Show all posts
Showing posts with label ஆடியோ தொடர். Show all posts

நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? ஆடியோ தொடர்




மருத்துவம் என்றால் என்ன?

 நமது உடலில் ஏற்படும் தொந்தரவுகளுக்கான உண்மையான காரணத்தை ஆராயாமல் உடலில் ஏற்படும் அறிகுறிகளை வைத்து தாங்கள் கற்றுக்கொண்ட மருத்துவமுறை மூலம் சிகிச்சையளித்து  தற்காலிக நிவாரணத்தை கொடுப்பது மருத்துவம்.

ஆரோக்கியம் என்றால் என்ன?

    நமது உடலின் தேவைகளை உணர்வுகள் மூலம் வெளிப்படுத்தும். அதனை சரியாக புரிந்துகொண்டு நிறைவேற்றுவதே ஆரோக்கியம். நமது உடலில் ஏற்படும் பிரச்சினைக்கான உண்மையான காரணத்தை ஆராய்ந்து அதனை சரிசெய்து நிரந்தரமான தீர்வை பெறுவது ஆரோக்கியம்.
    
    "நாமே மருத்துவர்" என்கிற உண்மையை நாம் புரிந்துகொண்டால் ஆரோக்கியமாக வாழ நமக்கு எந்தவொரு மருந்தோ? மருத்துவமோ? நுட்பமோ? தேவைப்படாது. நமது உடலின் இயக்கத்தை புரியவைப்பதே இந்த தொடரின் நோக்கம். ஆரோக்கியம் தொடர்பான தேடல் இருப்பவர்களுக்கு இந்த தொடர் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.  

நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர் - அறிமுகம்

.
  • மருத்துவர்கள் என்ன காரணத்தால் கடவுளுக்கு நிகராக கருதப்பட்டார்கள்?
  • இன்றைய மருத்துவத்தின் நிலை?
  • நமது அறியாமையை வியாபாரிகள் எவ்வாறு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர்? 
    இது போன்ற விபரங்களை இந்த அறிமுகப்பகுதியில் பகிர்ந்திருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் இந்த ஆடியோவை கேட்டு பயன்பெறுங்கள்.



பாகம் - ௦1
வரும்முன் காப்பதே சிறந்தது!

    நம் உடலில் ஒரு பிரச்சினை ஏற்படும் முன்னே தடுப்பது தானே சிறந்தது. அதனை பற்றி தான் இந்த ஆடியோ பதிவு அலசுகிறது.



பாகம் - ௦2
உடலும் மனதும் சேர்ந்ததுதான் ஆரோக்கியம்!

Both Body and Mind Decides our Health!    

  • உடலும் மனதும் சேர்ந்ததுதான் ஆரோக்கியம் என்பது கூட தெரியாமல் தான் இன்றைய மருத்துவ உலகம் இயங்கிக்கொண்டு இருக்கிறது. இதனை புரிய வைக்க உருவாக்கியது தான் இந்த வீடியோ பதிவு.
  • முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு நலமாக இருக்கிறார் என்று மருத்துவ அறிக்கை பெற்ற நபர் நான்கு நாட்களில் இறந்துவிட்டார். இத்தனைக்கும் உணவுக்கட்டுப்பாட்டை சரியாக பின்பற்றி வந்துள்ளார் அந்த நபர். அவரது மரணத்திற்கான காரணதை தெளிவாக விளக்கியுள்ளேன்.
  • சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு உள்ளது என்று நான்கு வருடத்திற்கு முன்பே மருத்துவர்களால் பயமுறுதப்பட்ட நபர் இன்றும் "டயாலிசிஸ்" மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்ளாமல் வாழ்வதற்கான காரணதை தெளிவாக விளக்கியுள்ளேன்.
  • தினமும் ஐந்து முறை காப்பி குடித்த நபர் அதனை ஒரு முறையாக குறைத்த பின்னர் தொப்பை கரைந்த காரணதை தெளிவாக விளக்கியுள்ளேன்.
  • மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும் வழிமுறையையும் ஏற்பட்டுவிட்டால் அதிலிருந்து தற்காலிகமாக விடுபட உதவும் முத்திரையையும் பகிர்ந்துள்ளேன்.



பாகம் 03 நம் உடலின் வலிமையை தெரிந்து கொள்வோம்!

    நாம் நமது உடலின் வலிமையை தெரிந்துகொள்ள தவறினால் நாமும் யானைகள் போல் அடிமை வாழ்கையை வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும். நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உணவும் மருந்தும் மட்டும் போதாது என்கிற கருத்தை இந்த ஆடியோ பதிவில் சில உதாரணங்களுடன் விளக்கியுள்ளேன்.


பாகம் 4
சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளாதீர்கள்!

    
    இன்று பெரும்பான்மையான மக்கள் சொந்த செலவில் சூனியம் வைக்கும் வேலையை தான் செய்துகொண்டு இருக்கிறோம். சில தேவையற்ற பொருட்களை நம் வீட்டினுள் அனுமதிப்பதே காலத்திற்கும் நமது நிம்மதி மற்றும் மகிழ்ச்சியை பறித்துவிடுகிறது. இதனைப்பற்றி தான் இந்த ஆடியோ பதிவில் தெளிவாக பகிர்ந்துள்ளேன்.




பாகம் 05
தடுப்பூசி அவசியம்தானா?


  • தடுப்பூசியின் மறுபக்கம், 
  • Anti Vaccination Leage (தடுப்பூசியால் பாதிக்கப்பட்டவர்கள் தொடங்கிய அமைப்பு), 
  • கிருமிகளிடமிருந்து நம்மை எவ்வாறு தற்காத்துக்கொள்வது, 
  • காய்ச்சல் நமக்கு நன்மைதான் செய்கிறது   
போன்றவற்றை இந்த ஆடியோ பதிவில் தெளிவாக விளக்கியுள்ளேன்.