Showing posts with label மருந்து மாத்திரைகளின் பரிசோதனை முன்னோட்டம் – ஒரு அதிர்ச்சி தகவல் (Clinical trail). Show all posts
Showing posts with label மருந்து மாத்திரைகளின் பரிசோதனை முன்னோட்டம் – ஒரு அதிர்ச்சி தகவல் (Clinical trail). Show all posts

மருந்து மாத்திரைகளின் பரிசோதனை முன்னோட்டம் – ஒரு அதிர்ச்சி தகவல் (Clinical trail)


Clinical Trial – ஒரு இளம் கிரிக்கெட் வீரர் விளம்பரத்தில் தோன்றி சூப்பர் பைக் என்று ஒரு புது வகை இருசக்கர வாகனத்தை கடைதெருவில் விற்க போகும் முன்னால் அது பல்வேறு ஆய்வுகளை கடந்து அதாவது தேர்ந்த பொறியாளர்கள் பரிசோதனை செய்து விற்கலாம் என்று சொன்ன பிறகே நம் கைகளில் வந்து தார்ச்சாலையில் உருளும். ஒரு பைக்கே இதனை தாண்டி வரும் போது நம் நோய்வாய்ப்படும் போது உட்கொள்ளும் மருந்து மாத்திரைகள் எப்படி.. சில தெரிந்த தெரியாத உண்மைகள் நம்மை சுற்றி மறுக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் விடுகின்றன. மக்கள் தொகை வளர வளர இன்று நோய்களும் அதன் எண்ணிக்கையும், தாக்கமும் அதிகரித்து விட்டன. செயல் வீரியம் மிக்க மருந்துகளை மார்க்கெட்டில் மருந்து கடைகளில் யார் அதிகம் விற்கிறார்களோ அவர்களுக்கு பணம் வரவும் அதிகம்.

சாமுராய், போன்ற சில படங்களை நாம் கடந்து வந்து விட்டோம். சில படங்களை நாம் நிழல் படமாகவோ அல்லது பொழுது போக்கு சித்திரமாக கண்டு கழித்து விட்டு அடுத்த படத்திற்க்கு தயாராகி விடுகிறோம். அல்லது இது எங்கோ நடந்து கொண்டு இருக்கலாம் இயக்குனர் அழகா சொல்லிருக்கிறார் என்று ஒரு கைதட்டலை பரிசளித்து மகிழ்வதில் நம் உட்சபட்ச உதாசீனம் வெளிப்படுகிறது. அந்த படங்களை பார்த்து நம் சமூகம் விழிப்படைந்து இருந்தால் சமீபத்திய ஒரு அறிவிக்கை நம் நாட்டுக்கு எல்லையில் விரிந்த மாறுப்பட்ட நிலையை இன்று நம் நாடு அறிந்து இருக்காது. உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு சீனா, இந்தியாவில் உள்ளதாக சமீபத்திய தகவல் கூறுகிறது. அதாவது ஆட்டு சந்தையை போன்று மனித சந்தையாய் உள்ளது நம் இந்திய. மருந்துகளை விற்பதற்கும் அதை வணிகம் செய்வதற்கும் மட்டும் அல்லாமல் அதை நம் மீதே சோதித்து பார்க்கும் சந்தையாகவே நம் மக்களை பாவித்து கொள்ளும் ஒரு அடிமாட்டு சந்தையர்களாக மாற்றி போட்டு விட்டது இந்த மருத்துவ பரிசோதனைகள்.

ஒரு புதிய மூலக்கூறுகளை கொண்ட மருந்தை சந்தைக்கு கொண்டு வந்து விற்பதற்கு முன்னால் எலிகள்guniea pig, பறவைகள், குரங்குகள்(தசாவதாரம்) போன்ற விலங்குகளுக்கு வலுக்கட்டயமாக கொடுக்கப்பட்டு அதன் சாதகம் பாதங்களை கண்டறிந்த பின்பே மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டு பின் அதனை விற்பதற்கு தகுந்த அனுமதி பெற்று மருந்தை மருந்து கடைகளில் விற்கவோ அல்லது மருத்துவர்களால் பிறருக்கு பரிந்துரை செய்வோ முடியும். இவ்வளவு தேர்வுகளை கடந்தே நம் வாய்க்குல்லோ அல்லது ஊசி மருந்தாகவோ உட்புக முடியும். இந்த புதிய மருந்து கண்டுபிடிப்பின் ஆய்வுகளுக்கு உள்ளாகும் விலங்குகள் மருந்துகளின் அளவு, வேதியல் இயக்க மாறுபாடுகள், வீரியம் இது போன்ற பல மாறுபாடுகளால் அது இறந்தோ அல்லது உறுப்புக்கள் வேலை செய்யாமலோ மூளை, கல்லீரல், சிறுநீரகம் இயக்கம் நின்றோ அல்லது குழம்பியோ போவதால் மரண நிலையை எட்டலாம்.

மனிதர்கள் மீது நேரடியாக பரிசோதனை செய்யும் பொழுது மனிதனுக்கும் இதே போன்ற நிலைமை ஏற்படுத்தலாம். அதாவது மனிதர்களை நேரிடியாக மேல் சொன்ன எதுவும் செய்யாமல் விலங்குகளாக உட்படுத்தி (நோவேல் ஸ்டடி) மருந்தை நமக்கு தெரியாமல் நம் மீதே திணித்து ஆய்வுகளின் கால அளவை குறைத்து மருந்துகளை துரிதாமாக சந்தையில் கொண்டு வந்து வணிகமாக்கி விற்பதே இவரகளின் மிக முக்கிய நோக்கம். இவர்களை லாப கணக்கை அடைய நாம் பலிக்கடா என்பது சரியே. அதாவது நம்மையே விலங்காக பாவிப்பதே நடந்தது கொண்டு இருந்தது.


ஆனால் சில மருந்து நிறுவனங்கள் ஒரு புதிய மூலக்கூறு நிரம்பிய மருந்தை முதல் கட்டமாக விலங்குகளின் மீது ஆய்வுகளை செய்யாமல் மனிதர்களை நேரடியாக பரிசோதித்து சில பல மனித உயிர்களை காவல் வாங்கிய கதைகள் பல. இவ்வளவு மனிதர்கள் இறந்து இருக்காலாம் என்று ஒரு எண்ணிக்கை இங்கே தட்டச்சு செய்ய விரும்பவில்லை. “பல உயிர்கள்என்பதின் இருட்டு வாரத்தையில் நிறைய வெளிச்ச எண்ணிக்கை அடங்கியுள்ளது. மருந்துகளை நேரடியாக மனிதர்கள் மீது பரிசோதிக்க உண்பவரிடம் கூட அனுமதி பெறாமல் அவர்களை கொன்று குவித்து இருக்கிறார்கள். இப்படி அனுமதி பெறாமல் நடந்து கொண்டிருந்த பல்வேறு மருந்து முன்னோட்ட ஆய்வுகளையும், எதிர்காலத்தில் நடக்க போக விருந்த ஆய்வுகளையும் தடுத்த நிறுத்தியும், இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நேராமல் இருக்க தண்டனைகளும், அதற்கான சட்டமும் கடுமையாக்கபட்டுள்ளன என்பது ஒரு மகிழ்வான செய்தி. நம் மருந்து நிறுவனங்களை நம் நாட்டில் கட்டுபடுத்தா விட்டால் இது போன்ற இன்னும் நிறைய ஆய்வுகளை தொடர்ச்சியாய் செய்து கொண்டே பல மனிதர்களை கொன்று குவித்து கொண்டே இருக்கும். இந்த மருந்து ஆய்வுகளின் விளைவால் இறந்த, சுகாதார வாழ்வு பறிபோன பலரை கண்டு விளித்து கொண்டுள்ளது நம் நாட்டின் சட்ட திட்டங்கள். அமெரிக்க ஐரோப்பிய மருந்து நிறுவனங்கள் நம் நாட்டில் இதற்காக விரித்திரிந்த கூடாரங்கள் இன்று பெரும்பாலும் மூடப்பட்டு இருக்காலம் நீங்கள் இதை படிக்கும் நேரம்.

உங்கள் மருத்துவர்கள் உங்களுக்கு தரும் மருந்துகளில் (Sample not for sale) முத்திரை இருந்தால் உசார் உசார். இதுவும் ஒரு பரிசோதனையே. உங்களின் நோய்க்கு அதை உபயோகித்து பார்த்து சந்தை படுத்த எவனோ லாபம் அடைய நம் கோவணம் உருவப்படுகிறது என்ற அர்த்தத்தை உணரலாம். உலகமயமாக்கல், வணிகம், வளர்ச்சி, மக்கள் தொகை போன்ற பல்வேறு வார்த்தை ஜாலங்கள் இது போன்று நடைபெற நம் நாட்டு மக்கள் பலியிடப்படுவது ஏமாற்றமே. மூலிகைகளை தொலைத்து, சத்தான உணவு முறைகளை தொலைத்து, உடற்பயற்சியின் மகத்துவம், உழைப்பின் தேவையை மறந்த நமக்கு இது தேவையே என்று சொன்னால் அது பொய்யாகாது. உணருவோம் நம் மகத்துவத்தை நம் உதிரம் நாம் சிறப்பதற்கே.

நன்றி - கீற்று.காம்