நோயின்றி ஆரோக்கியமாக வாழ புரிந்துகொண்டு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!



"கழிவின் தேக்கம் வியாதி; கழிவின் வெளியேற்றம் குணம்"


திருக்குறள் (அறிவுடைமை#0423)

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு"

தெளிவுரை:

    எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.


    மது வாழ்க்கை முறையை சரிசெய்வது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.   நம்மிடம் உள்ள ஆரோக்கியத்தை மருத்துவமனையில் தேடினால் கிடைக்காதல்லவா? இதை மக்களுக்கு புரியவைத்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம். 


    நம் உடலானது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்களால் தான் இயங்குகின்றது. அவற்றிலுள்ள பிரச்சினைகளை களைந்தாலே நாம் வாழ்நாள் முழுவதும் நோயின்றி ஆரோக்யமாக வாழலாம்.

பஞ்ச பூதங்களில் பாதிப்பு ஏற்பட்டால் நம் உடலில் தோன்றும் அறிகுறிகளை இந்த படத்தில் பார்க்கலாம். 




உணவு [நிலம்] [இரைப்பை, மண்ணீரல், கணையம் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்]


1. பசி:
    • பசிக்கும்போது நமக்கு பிடித்த உணவை நிதானமாக உண்ணும்போது நம் உடல் அவற்றை சத்துக்களாக மாற்றிவிடும். உதட்டை பிரிக்காமல் உணவை நன்கு மென்று கூழ் போல் அரைத்துப் பின் விழுங்க வேண்டும். ஏனென்றால் காற்றும் நம் ஜீரணத்திற்கு எதிரி. அப்படி உண்டால் நம் உடலின் அனைத்து உறுப்புக்களும் நன்றாக இயங்கும் அதனால் ஆரோக்கியம் பேணப்படும்.
    • பசி இல்லாதபோதோ நமக்கு பிடிக்காத உணவை உண்ணும்போதோ மற்றும் உணவு உண்டவுடன் அதிக நீரை குடிக்கும்போதோ அவை கழிவுகளாக மாறி நமக்கு தொப்பை, வாயு தொந்தரவு, அல்சர், அஜீரணம், வயிற்று வலி மற்றும் உடலெங்கும் வலி, சுகர் / நீரிழிவு, இரத்த அழுத்தம், எலும்புத் தேய்மானம், புற்றுநோய், இரத்தப் புற்றுநோய், மூலம், மாரடைப்பு,... போன்ற பல தொந்தரவுகள் ஏற்படுத்தும். அப்படி பசி இல்லாதபோது சாப்பிட நேர்ந்தால் சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் ஏதாவது இனிப்பு சாப்பிட வேண்டும்.
    • நாம் பால், டீ, காப்பி, செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்த்தாலே பசி ஒழுங்காக எடுக்கும். பல் முளைத்த குழந்தைகளுக்கு மாட்டுப்பால் கொடுப்பதை நிறுத்தினாலே நன்கு பசி எடுத்து சாப்பிட ஆரம்பித்துவிடும்.

2. உணவின் அளவு:
    • நாம் எவ்வளவு உணவு உண்ண வேண்டும் என்கிற சந்தேகம் பலருக்கு உள்ளது. சாப்பிடும்போது நாம் உண்ணும் உணவின் சுவை குறைந்து விட்டாலோ அல்லது போதும் என்ற உணர்வு (திகட்டுதல்) வந்துவிட்டாலோ சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும். அது தான் நாம் சாப்பிட வேண்டிய அளவு.
    • விரைவாகச் சாப்பிடும்போது வயிறு நிறைந்த உணர்வு ஏற்படாது. எனவே அதிகமாக உணவை உட்கொண்டுவிடுவார்கள். மாறாக மெதுவாக மென்று சாப்பிடும்போது கொஞ்சம் கொஞ்சமாகவே உணவு உட்கொள்ளப்படுவதால் உண்ணும்போதே 10 நிமிடங்கள் கடந்துவிடும். அப்பொழுது வயிறு முட்டிப்போச்சு என்பது தெரியவரும். மேலதிகமாக உட்கொள்ள நேராது, நாம் உண்ணும் அளவு குறையும். அதனால் எடை அதிகரிப்பு தடுக்கப்படும். 
    • இவற்றை முயற்சி செய்து பார்த்ததில் எனக்கு (விழிப்புணர்வு வினீத்) சில மாதங்களில் 20 கிலோ (From 93 to 73) வரை எடை குறைந்து விட்டது.

3. உணவை உண்ணும்போது கவனத்தில் கொள்ளவேண்டியவை:
    • சாப்பிடும் முன் கை, கால், முகம் கழுவ வேண்டும். அப்படி கழுவும்போது நமது உள்ளுறுப்புக்கள் தூண்டப்பட்டு அவை உணவை கிரகித்துக்கொள்ள தயாராகிவிடும்.
    • உணவில் ஆறு சுவைகள் [இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, காரம்] இருக்குபடி பார்த்துகொள்ளுங்கள். யாருக்காகவும் எந்த சுவையையும் தவிர்க்க வேண்டும் என்கிற அவசியமில்லை.
    • திட ஆகாரமாக (Solid food) இருந்தாலும் சரி நீர் ஆகாரமாக (Liquid food) இருந்தாலும் சரி நாக்கால் சுவையை நன்கு ருசித்த பின்னரே விழுங்க வேண்டும். சுவை நாக்கால் உறிஞ்சப்பட வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள சத்துக்களை நம் உடம்பால் முழுமையாக ஜீரணிக்க முடியும். சுவையாகவே இரைப்பைக்கு செல்லும் உணவு தான் நமது உடலுக்கு தொந்தரவை ஏற்படுத்தும்.
    • திட ஆகாரமாக (Solid food) இருந்தாலும் சரி நீர் ஆகாரமாக (Liquid food) இருந்தாலும் சரி அதன் வெப்ப தன்மை அல்லது குளிர்ச்சி தன்மை (Hot or Cold) நம் நாவிலே சமப்படுத்தப்பட வேண்டும். நம் தொண்டைக்கு செல்லும்போது வெப்பமாகவோ குளிர்ச்சியாகவோ இருக்கக் கூடாது. (வெப்பமாக சென்றால் இரைப்பையை பாதிக்கும் குளிர்ச்சியாக சென்றால் மாரடைப்பை ஏற்படுத்தும்)
    • சாப்பிடும்பொழுது நமது கவனம் சிதறாமல் இருப்பதற்கு நமது கண்களை மூடி, உதட்டை மூடி உண்ணலாம். பேசிக் கொண்டோ, புத்தகம் படித்துக் கொண்டோ, டிவி பார்த்துக்கொண்டோ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
    • முடிந்தவரை சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட முயற்சிக்க வேண்டும். கால்களைத் தொங்க வைத்துக் கொண்டோ, நின்றுக் கொண்டோ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
    • முடிந்தவரை சாப்பிடுவதற்கு அரை மணிநேரம் (10 நிமிடமாவது) முன்பும் பின்பும் நீர் அருந்துவதை தவிருங்கள். தேவை ஏற்பட்டால் (உணவில் காரமோ உப்போ அதிகமானால்) சிறிதளவு குடித்துக் கொள்ளலாம். ஏனென்றால் நீர் நம் ஜீரணத்திற்கு எதிரி.
    • குளித்த பின் 45 நிமிடத்திற்குப் பிறகோ அல்லது நன்கு பசித்த பிறகோ சாப்பிடலாம். சாப்பிட்ட பிறகு 2 ½ மணி நேரத்திற்குக் குளிக்க கூடாது. அப்படி குளித்தால் நம் உடம்பானது உணவை ஜீரணிபதர்க்கு பதிலாக உடலை வெப்பத்தை சமநிலை படுத்துவதற்கே முன்னுரிமை கொடுக்கும்.
    • மொத்தத்தில் நமக்கு பிடித்த உணவை பசிக்கும்போது ரசித்து ருசித்து உண்டால் நம்மால் ஆரோக்கியமாக வாழ முடியும்.


நீர் [நீர்] [சிறுநீரகம், சிறுநீர்ப்பை, விதைப்பை (ஆண்களுக்கு), கர்பப்பை (பெண்களுக்கு) ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்] 


    • நீரை வடிகட்டி குடிப்பதால் அதில் உள்ள தாது உப்புக்களை இழக்க நேரிடும். அந்த தாது உப்புக்களுக்காக தான் நாம் நீரையே அருந்துகிறோம். அதற்கு பதிலாக நீரை மண்பானையில் 2 மணிநேரம் வைத்தபின் பயன்படுத்தலாம். பின்னர் நீரை செம்பு குடத்தில் வைத்து அருந்தலாம்.
    • மண்பானையில் ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி அது காலிட்டராக ஆகும் வரைக் கொதிக்க வைத்து ஆறவைத்துக் குடிக்கும் பொழுது அந்த நீர் உடலில் பலவித நோய்களைக் குணப்படுத்தும் ஒரு மருந்தாக மாறுகிறது. 
    • தண்ணீரை எவர்சில்வர், அலுமினியம் போன்ற பாத்திரங்களில் ஊற்றி கொதிக்க வைத்து குடிக்கக் கூடாது. அப்படிக் குடிக்கும்பொழுது அதில் உள்ள உயிர்ச்சத்துக்கள் ஆவியாகிவிடுகிறது. இந்த நீரால் உடலுக்குத் தீங்கு தான் விளையும்.
    • தண்ணீரில் உள்ள நீர்ச்சத்து தாகத்தைப் போக்குவதோடு ஆரோக்கியத்தையும் நம் உடலில் ஏற்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்துவோம்.
    • மினரல் வாட்டர் / Package Drinking Water / Cane Water பயன்படுத்தினால் அதிலுள்ள நீர்ச்சத்துக்களை இழக்க நேரிடும். அப்படி குடிக்க நேர்ந்தால் நீர் சத்து உள்ள உணவுகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் அல்லது மோர், இளநீர், பதநீர், எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு, பழச்சாறு [பிரெஷ் ஜூஸ்] போன்றவற்றை பருக வேண்டும். 
    • தாகம் இல்லாமல் தண்ணீர் குடிக்கக் கூடாது. அதேபோல் தாகம் எடுக்கும்போது உடனே தேவையான அளவு தண்ணீரை நிதானமாக வாய்வைத்துக் குடிக்க வேண்டும். நீரை அன்னாந்து குடிக்கக்கூடாது (அப்படி குடிக்கும்போது தேவையை விட பலமடங்கு நீரை குடிக்க நேரிடுவதால் நமது சிறுநீரகம் பாதிக்கப்படும்).
    • சிறுநீர் கழித்தால் உடனே தேவையான அளவு நீர் அருந்த வேண்டும்.
    • நாம் குடிக்கும் எந்த ஒரு நீரையும் / பானத்தையும் [ பிரெஷ் ஜூஸ், மோர், இளநீர், பதநீர், எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு,... ] அதில் உள்ள சுவையை நாக்கு உறிந்த பின் சுவை இல்லாத நீரை தான் விழுங்க வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள சத்துக்களை நம் உடம்பால் முழுமையாக ஜீரணிக்க முடியும். 
    • பால் அருந்துவதை தவிர்த்தாலே நம் உணவு எளிதில் ஜீரணமாகும். நன்றாக பசி எடுக்கும். அப்படி பால் அருந்த நேர்ந்தால் பசி எடுக்கும் வரை பொறுமையாக இருந்து உணவை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். 
    • நாம் டீ, காப்பி, செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் நம் எலும்புகள் எளிதில் வலுவிழந்துவிடும் (Osteoporosis, Low Bone Mineral Density), எலும்புத் தேய்மானம், சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக கற்கள், தலை முடி உதிர்தல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.
    • இயற்கை காற்றோட்டம் இல்லாத இடத்தில் தூங்கும்போதும், இரசாயண கொசுவிரட்டிகள் இருக்கும் இடத்தில் தூங்கும்போதும், நாம் சுவாசிக்கும் காற்றையே மறுபடியும் மறுபடியும் சுவாசிக்கும் சுழலில் (பூட்டிய அறையில், தலையை போர்த்திக்கொண்டு தூங்குவது) தூங்கும்போது விஷக்காற்று நமது உடலில் பரவி சிறுநீரகக் கற்கள், சிறுநீரக செயலிழப்பு, கர்ப்பையில் தொந்தரவுகள், விதைப்பையில் தொந்தரவுகள், ஆண்மை மற்றும் பெண்மை இழப்பு, மலட்டுத்தன்மை, மூட்டு வலிகள், உடல் சோர்வு,... போன்ற பல இன்னல்களை உருவாக்கும்.

ஓய்வு [தூக்கம்] [ஆகாயம்] [கல்லீரல், பித்தப்பை ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்] 

    • அலாரம் வைத்து எழுந்திருப்பதை தவிர்க்க வேண்டும். அப்படி எழுந்தால் நாம் எப்போதுமே களைப்பாகவும், எரிச்சலுடனும், உடல் வலியுடனும் வாழவேண்டியிருக்கும்.
    • இரவு சீக்கிரமாக படுத்தால் மட்டுமே காலையில் சீக்கிரமாக எழுந்திருப்பது சாத்தியப்படும். நாம் இரவு கண்விழித்து தொலைக்காட்சி, கணினி, செல்போன் மற்றும் சினிமா பார்ப்பது, அரட்டை அடிப்பது போன்ற தேவையில்லாத காரியங்களை இரவு 1 மணி வரை பார்த்துவிட்டு காலதாமதமாகப் படுப்பது நமது தவறு தானே.
    • எனவே நாம் எந்த நேரங்களில் எழுந்திருக்கவேண்டுமோ அதற்குத் தகுந்தாற்போல் நாம் ஒரு 8 மணி நேரத்திற்கு முன்பாக நாம் படுக்கைக்கு செல்லவேண்டும்.
    • முடிந்தவரை இரவு 10 மணிக்குள் தூங்க முயற்ச்சிக்கவும். இரவு 11 மணி - 3 மணி வரை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் அந்த நேரத்தில் தான் நம் கல்லீரலும் பிதப்பையும் உடம்பிலுள்ள இரசாயண கழிவுகளை முழுவீச்சில் வெளியேற்றும்.
    • இரவு 10 மணி நேரத்திற்குள் படுத்துவிட்டு விடியற்காலை எழுந்து குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். காலை நேரத்தில்தான் பித்தம் உடலில் பரவும், அப்போது குளிப்பது உடம்பிற்கு நல்லது.
    • படுத்தவுடன் தூக்கம் வராதவர்கள் அமர்ந்துகொண்டு தூங்கினால் அல்லது தூங்க முயற்சி செய்தால் மனதும், புத்தியும் மிகவிரைவாக அடுக்கி வைத்துவிட்டு உடனே உங்களுக்கு தூக்கம் வந்துவிடும்.
    • தெற்க்கு அல்லது கிழக்கில் [South or East] தலை வைத்துப்படுப்பது மிகவும் நல்லது. அப்படி படுத்தால் நிம்மதியான தூக்கம் வரும். வடக்கே [North] தலை வைத்து படுப்பது நல்லதல்ல. அப்படி படுத்தால் இரத்த ஓட்டம் சீராக இருக்காது. எனவே உடலில் கழிவுகள் தேங்கிவிடும் அதனால் உடலில் ஆங்காங்கே வலிகள் ஏற்படும்.
    • தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல அமைதியான சூழ்நிலையில் இருந்து படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும்.
    • புகைபழக்கம் மற்றும் டீ, காபி, செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இவை அனைத்துமே நம் தூக்கத்திற்கும் உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்கும். 
    • படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது தூரத்தில் வைத்துவிட வேண்டும்.
    • குளிர் காலங்களில் வெறும் தரையில் படுக்கக் கூடாது. உடல் அதிகம் குளிர்ச்சியடைந்தாலும் தூக்கம் கெட்டுவிடும். 
    • இரவில் பல் விலக்கிப் படுத்தால் நன்றாகத் தூக்கம் வரும். முடிந்தவரை வெறும் கையால் உப்பு கலந்த நீரில் விளக்கவும். ஈறுகளுக்கு மசாஜ் செய்தல் பற்களுக்கு வலிமை தரும். 
    • தலையில் உச்சிக்கும் சுழிக்கும் நடுவில் மசாஜ் செய்தால் நன்றாகத் தூக்கம் வரும்.
    • நாம் தூங்கும் இடங்களில் இயற்கையான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துகொள்ளுங்கள். இல்லையென்றால் இரவு முழுக்க கனவுகளால் அவதிப்படும் சுழல் உருவாகும் மற்றும் இருதயம் தொடர்பான தொந்தரவுகள் மற்றும் மாரடைப்பிற்கு வழிவகுக்கும்.
    • இரவில் எளிதில் ஜீரணமாககூடிய உணவை உண்டால் தூக்கமின்மை தொந்தரவு ஏற்படாது. 
    • தலைவலி, உடல்வலி என்று எதெற்கெடுத்தாலும் ஒரு மாத்திரையை போட்டுக்கொள்வது நல்லதல்ல. எண்ணைக் குளியல், கஷாயம் போன்ற இயற்கை மருத்துவ முறையைப் பின்பற்றுவது நல்லது.
    • டுவா தூக்கம் எனும் ஆழ்ந்த தூக்கத்தின் மூலமாக நமது உடலில் அனைத்து நோய்களையும் குணப்படுத்தி ஆரோக்கியமாக வாழலாம்.
    • நமக்கு தூக்கம் வரவில்லை என்றால், குப்புறப்படுத்து கண்களை மூடி நமது இரு மணிக்கட்டுகளையும் தாடைக்கு சப்போர்ட் கொடுத்து சினிமா படங்களில் நடிகைகள் படுத்திருப்பதுபோல காலை ஆட்டிக்கொண்டு படுத்துக் கொண்டிருந்தால் சீக்கிரமாக தூங்கிவிடுவோம்.
    • இரவு தூக்கம் சரியாக வரவில்லை என்று கவலைப்படுபவர்கள் உங்களது ஆள்காட்டி விரலின் மேல்பகுதியை உச்சந்தலையில் தடவிக்கொடுப்பதன் மூலமாக நன்றாக தூங்கமுடியும். இந்த இடத்திற்கு அக்குபஞ்சர் மருத்துவத்தில் DU 20 என்று கூறுவார்கள்.
    • இரவு தூக்கம் வரவில்லையென்றால் அல்லது தூக்கம் கலைந்துவிட்டாலும் இரண்டு கைகளிலும் கையின் கட்டை விரல் (Thumb Finger) நுனியையும் நடு விரல் (Middle Finger) நுனியையும் தொடுமாறு வைத்துக்கொண்டு மற்ற அனைத்து விரல்களையும் நேராக வைத்துக்கொண்டு இருந்தால் (படத்தில் இருப்பதை போல) எளிதில் தூக்கம் வரும். இதற்காக மருத்துவரை தேடி ஓட வேண்டாம்.



காற்று [வாயு] [ நுரையீரல், பெருங்குடல் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்]


    • புகைபழக்கம், கொசுவை விரட்டிகள் நம் சுவாசபாதை மற்றும் நுரையீரலை பலகீனப்படுத்தும். இவையே நமக்கு துக்க உணர்வையும் விரக்தியான மனநியையும் கொடுக்கும். மலச்சிக்கலுக்கும் வழிவகுக்கும். 
    • கொசுவர்த்தி சுருள் மற்றும் கொசுவை விரட்டுவதற்காக நாம் உபயோகபடுத்தும் அனைத்து இரசாயணங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தக் கூடாது [நச்சு கலந்த காற்றை சுவாசிக்காமல் இருக்க] 
    • வீடு, அலுவலகம், தொழிற்சாலை, படுக்கை அறை எங்கும் எப்பொழுதும் காற்றோட்டம் நன்றாக இருக்க வேண்டும். 
    • தூங்கும் பொழுது A/C ஐ பயன்படுத்தினாலும் ஜன்னல்களை அடைத்து வைக்கக் கூடாது [நாம் சுவாசித்த காற்றயே (கரியமில வாயு - Carbon-dioxide) மறுபடியும் மறுபடியும் சுவாசிக்காமல் இருக்க] 
    • தலையை போர்வையால் முழுமையாக போர்த்தி கொண்டு தூங்க கூடாது [நாம் சுவாசித்த காற்றயே (கரியமில வாயு - Carbon-dioxide) மறுபடியும் மறுபடியும் சுவாசிக்காமல் இருக்க] 
    • மரங்கள் தான் காற்றை உருவாக்குகிறது மின்விசிறியோ / குளிர்சாதனமோ அல்ல என்பதை புரிந்துகொண்டு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு தூங்குங்கள். அப்படி கொசுத்தொல்லை இருக்கிறதென்றால் ஜன்னலில் தரமான கொசுவலையை வாங்கி மாட்டிக்கொள்ளுங்கள். 
    • சளி என்பது வியாதி கிடையாது. நம் நுரையீரலில் உள்ள கழிவுகளை நம் உடலானது தும்மல், மூக்கின் மூலம் நீராக, சளி முதலியவற்றின் மூலம் தான் வெளியற்றும். அதனால் இவற்றை அடக்க ஆங்கில மருந்தேதும் உண்ண கூடாது. அப்படி மருந்து உண்டால் முச்சுத்திணறல், மூச்சிறைப்பு, ஆஸ்துமா, வறட்டு இருமல், சைனஸ், மலச்சிக்கல், நிமோனியா... போன்ற பல வியாதிகள் உண்டாகும். 
    • சளியை வெளியேற்ற வேறு எந்த மருத்துவத்தை வேண்டுமானால் பயன்படுத்தலாம். எந்த உணவையும் உண்டால் சளி வரும் என்று ஒதுக்காதீர்கள். முடிந்தவரை எந்த பழங்கள் உண்டால் சளி வருகிறதோ அதை உண்ணவும். ஏனென்றால் சளிப்படலம் தான் நமக்கு குடற்புண் (Ulcer) வராமல் நம்மை பாதுகாக்கிறது. மற்றும் மலச்சிக்கல் இல்லாமல் மலம் எளிதில் வெளியேற உதவுகிறது. மலச்சிக்கல் இல்லாமல் இருந்தால் நமக்கு குடலிறக்கம், குடலில் புற்றுநோய் போன்ற தொந்தரவுகள் ஏற்படாது.


உழைப்பு [நெருப்பு] [இருதயம், சிறுகுடல், இதயமேலுரை, மூவெப்பமண்டலம் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்] 


    • பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். 
    • உழைப்புக்கேற்ற உணவு அல்லது உணவுக்கேற்ப உழைப்பு வேண்டும். 
    • தினமும் உடலில் உள்ள அனைத்து இணைப்புகளுக்கும் வேலை கொடுக்க வேண்டும். 
    • இரத்தம் ஓட இருதயம் உதவும். ஆனால் நிண நீர் ஓட உடல் உழைப்பு மட்டுமே உதவும். 
    • உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு நிணநீர் ஓட்டம் நன்றாக இருக்காது. இவை தான் நம் உடம்பில் தோன்றும் பல நோய்களுக்கு காரணம். 
    • தினமும் ஏதாவது உடற்பயிற்சி, நடைபயிற்சி, ஜாக்கிங் அல்லது ஏதாவது விளையாட்டில் ஈடுபடுவது நல்லது. 
    • காய்ச்சல் என்பது நோய் அல்ல. நம் உடலில் தேங்கும் கழிவுகள் மலம், சிறுநீர், வியர்வை, சளி, வாந்தி போன்றவற்றின் மூலம் வெளியேற்ற இயலவில்லையெனில் நம் உடலே உடலின் வெப்பத்தை அதிகப்படுத்தி அழித்துவிடும். மேலும் நம் உடலில் கிருமிகளும் காய்ச்சலின்போது அளிக்கப்படும். 
    • காய்ச்சலை தடுக்க மருந்து உண்ணாமல் இருந்தால் ஒருமுறை நம் உடலில் வந்த கிருமிகள் நம் வாழ்வில் எப்போது வந்தாலும் நம் உடலே அதை அழிக்கும் எதிர்ப்பு சக்தியை பெற்றுவிடும். 
    • எனவே காய்ச்சல் வந்தால் ஓய்வு எடுத்து பசித்தால் மட்டுமே உணவு உண்டு தாகம் எடுத்தால் மட்டுமே நீர் அருந்தி நம் உடம்பின் ஒட்டுமொத்த சக்தியையும் கழிவுகளை வெளியேற்றவும் கிருமிகளை அளிக்கவும் உபயோகப்படுத்த நாம் ஒத்துழைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நாம் தொலைகாட்சியில் செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தப்படும் எந்த வியாதிக்கும் பயப்பட அவசியம் இல்லை. 


மருத்துவம் என்றால் என்ன?

 நமது உடலில் ஏற்படும் தொந்தரவுகளுக்கான உண்மையான காரணத்தை ஆராயாமல் உடலில் ஏற்படும் அறிகுறிகளை வைத்து தாங்கள் கற்றுக்கொண்ட மருத்துவமுறை மூலம் சிகிச்சையளித்து  தற்காலிக நிவாரணத்தை கொடுப்பது மருத்துவம்.


ஆரோக்கியம் என்றால் என்ன?

 நமது உடலின் தேவைகளை உணர்வுகள் மூலம் வெளிப்படுத்தும். அதனை சரியாக புரிந்துகொண்டு நிறைவேற்றுவதே ஆரோக்கியம். நமது உடலில் ஏற்படும் பிரச்சினைக்கான உண்மையான காரணத்தை ஆராய்ந்து அதனை சரிசெய்து நிரந்தரமான தீர்வை பெறுவது ஆரோக்கியம்.


எல்லா வகை வியாதிகளிருந்தும் நம்மைக் காப்பாற்றும் எதிர்ப்பு சக்தியை சரியாக வைத்துக் கொள்வது எப்படி?

  • நாம் வசிக்கும் இடங்களில் சுத்தமான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கொசு தொந்தரவு இருக்கும் பட்சத்தில் ரசாயன கொசுவிரட்டிகள் பயன்படுத்தாமல் காற்று வந்துபோகக்கூடிய கொசு வலைகளை பயன்படுத்தி ஜன்னல்களை திறந்து வைத்து தூங்க வேண்டும். ஏனென்றால் நம் உடலில் ஏற்படும் பல இன்னல்களுக்கு அடிப்படை காரணமே அசுத்த காற்று நிறைந்த இடத்தில் வசிப்பது தான்.  
  • பசியை உணர்ந்து, பசி ஏற்படும் போதுதான் சாப்பிடவேண்டும். பசி இல்லாத போது நேரத்தைப் பார்த்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • பசிக்கிற அளவிற்குத் தகுந்தவாறு உண்ணுகிற உணவின் அளவை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரே மாதிரியான பசி எப்போதும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
  • மனதிற்கு பிடித்த உணவுகளை மட்டும் ரசித்து ருசித்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். 
  • உடல் கேட்கும் ஓய்விற்கும் தூக்கத்திற்க்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம். இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரைக்கும் தூங்க வேண்டிய அவசியமான நேரமாகும். இந்த நேரத்தில் தான் உடலில் எதிர்ப்பு சக்தி நோயெதிர்ப்பு வேலையை முழு வீச்சில் மேற்கொள்கிறது.
  • இரவில் தூங்குவதற்கு பதிலாக பகலில் தூங்கி கணக்கை சரிசெய்து கொள்ள முடியாது. ஏனென்றால் உடலின் நச்சுத்தன்மையை அகற்றும் வேலையும், ஒவ்வொரு உள்ளுறுப்பையும் சீரமைக்கும் வேலையும், ஒவ்வொரு உயிரணுவும் வளர்ச்சியடையும் வேலையும் இரவுகளில்தான் முழுமையாக நடைபெறுகின்றன. எனவே இரவு நேரத்தில் தூங்குவது ஆரோக்கியத்தின் அடிப்படைத் தேவை. 
    • டீ மற்றும் காப்பி போன்றவை உணவல்ல போதைப்பொருள் என்பதை நினைவில் கொண்டு அதனை தவிர்த்திடுங்கள். (இதுபற்றி “டீ காப்பி நமக்கு தேவைதானா?” என்னும் தலைப்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.) 


மனதுக்கும் உடலுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது!

நாம் எப்பொழுது நிம்மதியாக வாழ்கிறோமோ அப்பொழுது நமது உடல் தன்னைத்தானே பராமரித்துக் கொள்வதில் எந்தவித தடையும் ஏற்படுவதில்லை. நாம் எப்பொழுது நிம்மதி இல்லாமல் வாழ்கிறோமோ அப்போது உடல் தன்னைத்தானே வருத்திக்கொள்கிறது. கவலை, மனவருத்தம், பயம், கோபம், விரக்தி போன்ற எண்ணங்கள் நமது உடலின் பராமரிப்பு சக்தியை தீர்த்துவிடுகிறது. 

எனவே நிம்மதியாக வாழ்வதற்காக நேரங்களை ஒதுக்குவோம். பலர் பணத்திற்காக புகழுக்காக, பதவிக்காக, கெளரவத்திற்க்காக தங்கள் நிம்மதியை இழக்கிறார்கள். ஆனால் நிம்மதிக்காக பணம், புகழ், அந்தஸ்து என்று எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஏனென்றால் நம்முடைய ஆரோக்கியம், நிம்மதி இதைவிடப் பெரிதல்லவா? 
  • அன்பான பேச்சுக்களை கேட்கும்போதும், 
  • பிடித்தமான உணவுகளை உண்ணும்போதும், 
  • பிடித்தமான இசை மற்றும் பாடல்களை கேட்கும்போதும்,  
  • பிடித்தமான நகைச்சுவை மற்றும் திரைப்படங்களை பார்க்கும்போதும்,
  • பிடித்தமான இடங்களுக்கு சுற்றுலா செல்லும்போதும், 
  • பிடித்தமானவர்களிடம் நேரத்தை செலவிடும்போதும்,
  • பிடித்தமான பொழுதுபோக்கில் ஈடுபடும்போதும், 
  • நல்லதை பார்க்கும்போது, கேட்கும்போதும், சிந்திக்கும்போதும்,
  • அடுத்தவர்களுக்கு உதவும்போதும், 
  • நேர்மையாக வாழும்போதும்,
  • சுயநலமில்லாத வாழ்க்கை வாழும்போதும்,
... நமது மனது சந்தோஷப்படுகிறது. அவ்வாறு மகிழ்ச்சியாக இருந்தால் நமது உடலின் பராமரிப்பு வேலையும் தடையில்லாமல் நடைபெறும் மேலும் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

ஆரோக்கியமாக வாழ விரும்பினால் மருத்துவத்தை தேடுவதை விட்டுவிட்டு ஆரோக்கியத்தை தேடுங்கள். இன்று முதல் உங்களுக்கு பிடித்தமான உணவுகளை மட்டும் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். 

நம் தவறான வாழ்க்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தரமான தீர்வை தர இயலாது. மருந்துக்களையோ மருத்துவரையோ தேடுவதற்கு பதில் வியாதிக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்வதே சிறப்பானதாகும்.

நல்லதை சொல்ல வேண்டியது எனது கடமை. அதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் உரிமை. என்னிடம் மருந்துக்களை எதிர்பார்க்காதீர்கள் ஆரோக்கியத்தை மட்டும் எதிர்பாருங்கள். ஆரோக்கியமாக வாழ வழிகாட்டி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காகவே இந்த முகநூல் பக்கம் மற்றும் குழுவினை உருவாக்கியுள்ளேன்.


முக்கிய குறிப்பு:

    இரவு 9 மணி முதல் காலை வரை தூக்கம் தடைபடாமல் இருக்க எனது தொடர்பு எண்களை Silent Mode இற்கு மாற்றிவிடுவேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அந்த நேரத்தில் நீங்களும் தூங்கச் சென்று உங்களது ஆரோக்கியத்தையும் உறுதிசெய்து கொள்ளுங்கள்.

    ஆங்கில மருந்துக்கள், டீ, காப்பி, கஞ்சா உட்கொள்ளுதல், புகை பிடித்தல், மது அருந்துதல், புகையிலை, பாக்கு, மூக்குப்பொடி போன்ற போதை பழக்கத்தை விடுவதற்கு தயாராக உள்ளவர்கள் என்னை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம். 

மேலும் பொறுமையாக இருப்பவர்கள், நேர்மையாக வாழ்பவர்கள், அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாதவர்கள் மற்றும் மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் மட்டும் இந்த எண்கள் +91 98 40 98 02 24, +91 97 50 95 63 98 மற்றும் vineeth3d@gmail.com க்கு தொடர்பு கொள்ளவும்.

சுயநலமாக சிந்திப்போர் மற்றும் மருந்துக்களால் மட்டுமே வியாதிகளை குணப்படுத்த முடியும் என எண்ணுபவர்கள் என்னை தொடர்புகொண்டு உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பணமே பிரதானம் என எண்ணுபவர்கள் தங்கள் தினசரி வாழ்க்கை முறையில் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ள முயற்சிப்பதில்லை. அவர்கள் ஆரோக்கியத்தை விலை கொடுத்து வாங்க முடியும் எனக் கருதுகின்றனர். உண்மையில் நோய் பற்றிய பயத்தையும், கிருமிகளைப் பற்றிய பயத்தையும், செயற்கையாக உருவாக்கிய நோய்களான நீரிழிவு (சர்க்கரை), ரத்த அழுத்தம், தைராய்டு... போன்றவற்றை மட்டுமே பெற முடியும். பணத்தால் ஆரோக்கியத்தை வாங்க முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நடக்கும் என்கிற உண்மையை உணர்ந்த காரணத்தால் தான் நல்ல விஷயங்களை அதிகம் பகிர்கிறேன். எனவே நல்லதே கேளுங்கள் நல்லதே நினையுங்கள் நல்லதே பேசுங்கள் நல்லதே செய்யுங்கள் நல்லதே நடக்கும். அதற்கு எனது வாழ்கையே சாட்சி. 

இதுவரை நான் எழுதிய / வெளியிட்ட அனைத்து கட்டுரைகளையும், ஆடியோ பதிவுகளையும் படியுங்கள் / கேளுங்கள். நிச்சயம் அவை உங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன். அவற்றை காண / பதிவிறக்கம் செய்துகொள்ள இந்த Google Drive லிங்கிற்கு செல்லவும் https://goo.gl/GBKHAb

இப்படிக்கு,
விழிப்புணர்வு வினீத்


மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு







    5 comments:

    1. Thanks a lot and keep up the great work. I have a query; I am not at all feeling hungry; sometimes upto 4pm in the evening; I will try to eat only at that time. But my family members are scolding me to eat the food on time; What should I do; Please help.

      ReplyDelete
      Replies
      1. நல்வரவு. நீங்கள் கடைபிடிக்கும் பழக்கம் நல்லதுதான். பசியை உணர்ந்த பிறகு தான் உணவை உட்கொள்ள வேண்டும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தான் அறியாமையில் உள்ளார்கள். உங்களுக்கு டீ காப்பி போன்றவற்றை அருந்தும் பழக்கம் உள்ளதா? இரவு தாமதமாக தூங்கச் செல்வீர்களா?

        Delete
    2. yes, I do. I drink tea(once a day) and go to bed late around 11.30 :(
      Thanks for your reply.

      ReplyDelete
      Replies
      1. டீ காப்பி தேவைதானா என்னும் பதிவைப் பார்த்தால் உங்களுக்கே புரியும்.

        https://youtu.be/TkvkJozBpQc

        Delete
      2. இரவு தாமதமாக தூங்கச் செல்வதால் ஏற்படும் விளைவுகளை தொடர்ந்து கொள்ள இந்தப் பதிவுகள் உதவியாக இருக்கும்.

        https://youtu.be/BXHW_IqIVY4

        https://youtu.be/7qMO-QqgkDM

        Delete