காய்ச்சல், பேதி, வாந்தி, சளி மற்றும் மூச்சுத் திணறலைப் புரிந்துகொள்ளுங்கள்!


இந்த பதிவை நண்பர்களிடம் Pdf file ஆக பகிர்ந்துகொள்ள Printable Format https://goo.gl/2EcdEF

காய்ச்சல், பேதி, வாந்தி, சளி, மூச்சுத் திணறல் ஆகிய தொல்லைகளைப் பற்றிய அடிப்படைகளை உங்களோடு பகிர்ந்துகொள்வது இப்போதைய தேவையாகியுள்ளது. குறிப்பாக, இப்போது நிகழ்ந்துகொண்டுள்ள புயல், மழை, வெள்ளம் எனும் மும்முனைத் தாக்குதலைச் சற்று ஆழமாக உள்வாங்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. விரைவாக, ஒரு காலப் பயணத்திற்குச் செல்வோம்.

பூமியில் முதன் முதலில் ஒருசெல் உயிரிகள் தோன்றத் துவங்கின. அப்போது புவியில் உயிர்வளி (ஆக்சிஜன்) எனும் காற்று இல்லை. கரிவாயு (கார்பன் டை ஆக்சைடு) எனும் வெப்பக் காற்றும் வேறு சிலவகை வெப்ப மற்றும் அமில வகை வாயுக்களும்தான் புவியில் வீசின. இந்த வாயுக்களிலிருந்துதான் முதல் உயிர்கள் தோன்றின. அப்போதிருந்த நீர் நன்னீர் அல்ல, நச்சு நீர். அந்த நச்சு நீரிலிருந்துதான் ஆதி உயிர்கள் வெளிப்பட்டன.

இப்போதுவரையில் இந்தப் புவியில் பிறப்பெடுத்த எல்லா உயிர்களின் துவக்கமும் நச்சு நீர், அமிலக் காற்று, கரிக் காற்றுதான். இந்தச் சூழலில் பிறப்பெடுத்த ஒருசெல் உயிரிகள், கூட்டு செல் உயிரிகள் ஆகியவற்றின் சுவாசக் காற்றுதான் உயிர்வளியாக உருவானது. அதாவது, உயிர்வளி (ஆக்சிஜன்) உயிர்களை உருவாக்கவில்லை, உயிர்கள்தான் உயிர்வளியை உருவாக்கின.

அதன் பின்னர்தான் நீரில் வாழும் உயிரினங்கள், நிலத்திலும் நீரிலும் வாழும் உயிரினங்கள் வெளிப்பட்டன. இந்த நீர் மற்றும் நிலவாழ் உயிரினங்களை ‘இருநிலத்து வாழிகள்’ எனலாம். பூமியில் இவ்வாறு ஏற்பட்ட மாற்றத்தைப் பரிபாடல், ‘இருநிலத்து ஊழி’ என்று குறிப்பிட்டுள்ளது. இருநிலத்து வாழிகளுக்கு எளிய உதாரணம், தவளை.

இவ்வகை உயிரினங்களுக்கான அடிப்படை உணவு நீர்த்தன்மை மிக்க சில்லுயிரிகள்தான். மனிதக் கண்களுக்குப் புலப்படாத கோடிக் கணக்கான உயிர் வகைகள் இந்தச் சில்லுயிரிகளில் உள்ளன. தவளை போன்ற உயிரினங்கள் ஒரு நிலத்தில் பெருகி வளர்கின்றன என்றால், அந்த நிலத்தில் சில்லுயிரிகள் ஏராளமாக உருவாகிவிட்டன என்று பொருள்.

சென்னையில் தவளைகளின் எண்ணிக்கை கற்பனைக்கெட்டாத வகையில் பெருகியுள்ளது.

தவளைகள் மட்டுமல்ல நத்தைகளும் பெருகிக் கொண்டுள்ளன. பொதுவாக மழைக் காலங்களில் இவை பெருகும். ஆனால், இப்போது நான் உங்களுக்குத் தெரிவிக்க விரும்பும் சேதி, அசாதாரணமான முறையில் பெருகும் இருநிலத்து வாழிகளைப் பற்றியது.

சில்லுயிரிகளின் தோற்றம் எந்தச் சூழலில் அதிகரிக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எங்கு கரிவாயு அதிகமாக உள்ளதோ, எங்கே அமிலக் காற்று அதிகரித்துள்ளதோ அங்கு சில்லுயிரிகள் பெருகிவளரும். சென்னை, கடலூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் காற்றில் கலந்துள்ள கரி மற்றும் அமிலத்தின் அளவு சில்லுயிரிகளின் தாயகமாக இந்நகரங்களை மாற்றிவிட்டன. ஆகவேதான் இங்கே சில்லுயிரிகளின் படையெடுப்பு குறையாதிருக்கிறது. இந்த உயிர்களைத்தான் நவீன அறிவியல் கிருமிகள் என்றழைக்கிறது.

இந்தச் சில்லுயிரிகளின் வளர்ச்சி நிலையில் உள்ள சிறு புழுக்கள், பூச்சிகள்தான் இருநிலத்து வாழிகளுக்கு உணவு. தவளை, நத்தை போன்ற உயிரினங்கள் பெருகினால் மட்டுமே கிருமிகள் அல்லது சில்லுயிரிகளின் பெருக்கத்திலிருந்து மனிதர்கள் தப்பிக்க முடியும். உண்மையில் கொசுக்களும் சில்லுயிரிகளை உணவாக உட்கொண்டு மனிதர்களுக்கு நன்மை செய்யும் உயிரினம்தான்.

வீட்டுக்கு உள்ளே பல்லிகள், கரப்பான்கள், தோட்டத்தில் அட்டைப் பூச்சிகள், நத்தைகள், பிள்ளைப் பூச்சிகள், தவளைகள், நீர்நிலைகளில் மீன் உள்ளிட்ட பலவகை உயிரினங்கள் என்ற மரபுவழிப்பட்ட குடியிருப்புகள் மிகவும் பாதுகாப்பானவை. இவ்வகைக் குடியிருப்புகளில் சில்லுயிரிகள் அளவுக்கு அதிகமாகப் பெருகும் வாய்ப்பே இல்லை.

இப்போது இருக்கும் நவீன குடியிருப்புகளில் பல்லிகளுக்குக் கூட அனுமதி இல்லை. வீட்டில் உள்ள பூச்சிகளைக் கொலை செய்வதற்கே மாபெரும் நிறுவன்ங்கள் இயங்கிக் கொண்டுள்ளன. விளைவை, இப்போது இந்தச் சமூகம் அனுபவிக்கிறது.

ஒருபுறம் தொழிற்சாலை நடவடிக்கைகளால் கரிக் காற்று, அமில நீர் உருவாக்கப்படுகிறது. மறுபுறம் உயிரினங்களின் வகைகள் குரூரமாக அழிக்கப்படுகின்றன. இந்த இரு முரண்களுக்கும் இடையில் சில்லுயிரிகளின் எண்ணிக்கைக் கட்டுக்கடங்காமல் பெருகிக் கொண்டுள்ளது.

நவீனம் தனக்கே உரித்தான பேராசையுடன் இந்தச் சூழலையும் வணிகமாக மாற்றிவிட்டது. சில்லுயிரிகளைக் கிருமிகள் என அழைத்து, அவற்றால் உருவாகும் நோய்களுக்கு மருந்து விற்கும் தொழிலை நவீன அறிவியல் வளர்த்தெடுத்துக்கொண்டுள்ளது. இதைக் காட்டிலும் கொடுமை, கொசுக்களுக்கு எதிராக இப்போது கட்டவிழ்த்துவிடப்படும் பரப்புரைதான்.

கொசுக்கள் கிருமிகளை உற்பத்தி செய்வதில்லை. ஏற்கெனவே உற்பத்தியான சில்லுயிரிகளைக் கொசுக்கள் தாங்கிக்கொண்டுள்ளன. ஆகவே, கொசுக்களைக் கொலை செய்வதால் கிருமிகள் ஒழிந்துவிடப் போவதில்லை. படைப்பு விதிகளுக்கு எதிர்மாறாக, கொசுக்களின் எண்ணிக்கையைக் குறைத்தால் விளைவுகள் அபாயகரமானவையாக இருக்கும்.

கொசுக்கள் குறைந்தால் தவளைகளும் வேறு சில இருநிலத்து வாழிகளும் அழியத் துவங்கும். ஏனெனில், இவையெல்லாம் உயிர்ச் சங்கிலியால் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே பிணைக்கப்பட்டவை. சக உயிர்களை அழித்தால்தான் நாம் வாழ முடியும் என்பது மனிதர்களின் அறிவு. தவளைகளுக்கும் கொசுக்களுக்கும் இந்த அறிவு கிடையாது.

அவை, படைப்பின் விதிகளைப் பின்பற்றி நடப்பவை. உண்மையில், இவை எல்லாம் படைப்பின் படைக் கலன்கள். இந்தப் படைக்கலன்களை அழிக்க நினைத்து மனிதர்கள் அழிவைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது சென்னையில் பெருகும் தவளைகளும் மற்ற உயிரினங்களும் என்ன சொல்கின்றன?

இந்த நகரமே நீர் நிலைகளால் நிரம்பிக் கிடந்த காடுகளுக்கும், வயல்களுக்கும்தான் சொந்தம் என்கின்றன. இந்த நகரத்தில் அசாதாரணமான எண்ணிக்கையில் சில்லுயிரிகள் பெருகிக் கொண்டுள்ளன, அவை மனிதர்களின் உடல்நிலையில் மோசமான மாற்றங்களை உருவாக்கும் என்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, ‘இப்போதாவது எங்களை அழிக்காதிருங்கள். சில்லுயிரிகளை உணவாக்கி உங்களைக் காக்கிறோம்’ என்கின்றன.

ஆனால், இந்தச் சமூகத்தின் செவிகளுக்குத் தவளையின் ஓசை பிடிக்காது. கொசு ஒழிப்பு விளம்பரங்களையும் அவற்றில் காட்டப்படும் ஏமாற்று வித்தைகளையும் கண்டுகளிக்கும் புதிய வகை உயிரினம் அல்லவா நகரங்களில் வாழ்கின்றது!

காய்ச்சல், வாந்தி, பேதி, சளி ஆகிய உடல் தொல்லைகள் அதிகரிக்கும் சூழல் உருவாகிவிட்டது. இந்தத் தொல்லைகளைப் புரிந்துகொள்ளுங்கள். இவை எவர் உயிரையும் பறிக்கும் நோக்கில் வந்தவை அல்ல. உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உடலின் இயற்கை ஆற்றல் உருவாக்கும் போர்க் கருவிகள்தான் காய்ச்சலும் பேதியும் சளியும்.

உடலில் ஏன் கழிவுகள் உருவாகின என்றால், நீங்கள் வாழும் ஊர் நச்சுக் காற்றாலும், அமிலக் காற்றாலும் சீரழிக்கப்பட்டுவிட்டது.

ஆகவே, கொசுக்களின் மீது கோபம் கொள்ளாதீர்கள், பல்லிகளை ஒதுக்காதீர்கள். அவற்றையும் அழித்துவிட்டால் காப்பதற்கு எவருமில்லாத அவலம் நேரும். கொசுக்கள் உங்களைக் கடிக்கக் கூடாது. கொசுக்களை நீங்களும் அழிக்கக் கூடாது. இதுதான் படைப்பின் இயற்கைச் சூழல்.

கொசுவலை போன்ற இயற்கைத் தீர்வுகளை நாடுங்கள். கொசுக்களைக் கொலை செய்யாத ஊர்களில் கொசுக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கிறது. தொழில் நடவடிக்கைகளால் சில்லுயிரிகளைப் பெருக்கிக் கொண்டு, அவற்றைச் சார்ந்து வாழும் கொசுக்களை மட்டும் அழிக்க நினைத்தால் அதற்குப் பெயர்தான், மூடநம்பிக்கை. ஆனால், மரபு வாழ்க்கையை மூடநம்பிக்கை என்று இகழும் பொய் இங்கே நிலைபெற்றுவிட்டது.

கொசுக் கொல்லி மருந்துகளால் இப்போது உருவாகிக் கொண்டுள்ள மூச்சுத் திணறலை நீங்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில், மோசேயின் மக்களுக்கு ஆதரவாகக் கடவுள் நிகழ்த்திய அழிப்பு வேலையின் சுருக்கம் இது:

திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு எகிப்து நாட்டில் குழந்தைகள் இறந்துபோயினர். நைல் நதியில் தவளைகளின் எண்ணிக்கை பெருகியது, தாக்குதலும் அதிகரித்தது. எகிப்தில் பூச்சிகளின் எண்ணிக்கை அசாதாரணமாக உயர்ந்தது, கொள்ளை நோய்கள் உருவாகின. மக்கள் கூட்டம் கூட்டமாக மரணமடைந்தார்கள். மன்னன் ராம்சேசின் மகனும் பலியானான்.
உங்களை அழிக்க கர்த்தர் தவளைகளை அனுப்புவார்’ என மோசே எகிப்தியர்களிடம் கூறினார். (Exodus 8:1-4 GW)

காற்றில் உயிர்வளி குறைந்ததால்தான் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது என்று இச்செய்தியைப் புரிந்துகொள்ளலாம். இப்போதும் ஆண்டிஸ் மலை உச்சியில் குழந்தை மரணம் மிக அதிகம். காரணம், அங்கே உயிர்க் காற்று குறைவு.

இந்தச் செய்திகள் எல்லாம் அச்சப்படுவதற்காக அல்ல, புரிந்துகொள்வதற்காக.

நோய்களைப் பற்றிய எச்சரிக்கைகள் உங்களை அச்சப்படுத்தி வரும் இவ்வேளையில், இந்த அடிப்படைகளைப் புரிந்துகொள்ளுங்கள். அதுதான் இந்தச் சூழலில் இருந்து தப்பி வாழும் வழி. மாறாக, காய்ச்சல்களுக்குப் பெயர் வைத்து அழைப்பதும் கடைசியில் அவற்றுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை எனக் கை விரிப்பதும் வாழ்க்கையை நிலையற்றதாக்கும் செயல்கள்.

காய்ச்சல், வாந்தி, பேதி, சளி ஆகியவற்றைக் கண்டு அஞ்சாதீர்கள். அவை எல்லாம் கழிவு வெளியேற்ற நடவடிக்கைகள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். மரபுவழிப்பட்ட மருத்துவமுறைகளை மட்டுமே நாடுங்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தச் சமூகத்தை மீண்டும் இயற்கை வழியில் வாழ வைக்க வேண்டும் என விரும்புங்கள்.

வளர்ச்சி, முன்னேற்றம்’ ஆகிய சொற்கள் எல்லாம் பெருநிறுவனங்களுக்கும் கிருமிகளுக்கும்தானே தவிர, நமக்கல்ல என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

நன்றி - ம.செந்தமிழன்


எல்லா வகை வியாதிகளில் இருந்தும் நம்மைக் காப்பாற்றும் எதிர்ப்பு சக்தியை சரியாக வைத்துக் கொள்வது எப்படி?

 • நாம் வசிக்கும் இடங்களில் சுத்தமான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கொசு தொந்தரவு இருக்கும் பட்சத்தில் ரசாயன கொசுவிரட்டிகள் பயன்படுத்தாமல் காற்று வந்துபோகக்கூடிய கொசு வலைகளை பயன்படுத்தி ஜன்னல்களை திறந்து வைத்து தூங்க வேண்டும். ஏனென்றால் நம் உடலில் ஏற்படும் பல இன்னல்களுக்கு அடிப்படை காரணமே அசுத்த காற்று நிறைந்த இடத்தில் வசிப்பது தான்.
 • பசியை உணர்ந்து, பசி ஏற்படும் போதுதான் சாப்பிடவேண்டும். பசி இல்லாத போது நேரத்தைப் பார்த்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
 • பசிக்கிற அளவிற்குத் தகுந்தவாறு உண்ணுகிற உணவின் அளவை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரே மாதிரியான பசி எப்போதும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
 • மனதிற்கு பிடித்த உணவுகளை மட்டும் ரசித்து ருசித்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
 • டீ மற்றும் காப்பி போன்றவை உணவல்ல போதைப்பொருள் என்பதை நினைவில் கொண்டு அதனை தவிர்த்திடுங்கள். (இதுபற்றி இந்த https://youtu.be/TkvkJozBpQc முகவரியில் “டீ காப்பி நமக்கு தேவைதானா?” என்னும் தலைப்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.)
 • உடல் கேட்கும் ஓய்விற்கும் தூக்கத்திற்க்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம். இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரைக்கும் தூங்க வேண்டிய அவசியமான நேரமாகும். இந்த நேரத்தில் தான் உடலில் எதிர்ப்பு சக்தி நோயெதிர்ப்பு வேலையை முழு வீச்சில் மேற்கொள்கிறது.
 • இரவில் தூங்குவதற்கு பதிலாக பகலில் தூங்கி கணக்கை சரிசெய்து கொள்ள முடியாது. ஏனென்றால் உடலின் நச்சுத்தன்மையை அகற்றும் வேலையும், ஒவ்வொரு உள்ளுறுப்பையும் சீரமைக்கும் வேலையும், ஒவ்வொரு உயிரணுவும் வளர்ச்சியடையும் வேலையும் இரவுகளில்தான் முழுமையாக நடைபெறுகின்றன. எனவே இரவு நேரத்தில் தூங்குவது ஆரோக்கியத்தின் அடிப்படைத் தேவை.மனதுக்கும் உடலுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது

நாம் எப்பொழுது நிம்மதியாக வாழ்கிறோமோ அப்பொழுது நமது உடல் தன்னைத்தானே பராமரித்துக் கொள்வதில் எந்தவித தடையும் ஏற்படுவதில்லை. நாம் எப்பொழுது நிம்மதி இல்லாமல் வாழ்கிறோமோ அப்போது உடல் தன்னைத்தானே வருத்திக்கொள்கிறது. கவலை, மனவருத்தம், பயம், கோபம், விரக்தி போன்ற எண்ணங்கள் நமது உடலின் பராமரிப்பு சக்தியை தீர்த்துவிடுகிறது. எனவே நிம்மதியாக வாழ்வதற்காக நேரங்களை ஒதுக்குவோம். பலர் பணத்திற்காக புகழுக்காக, பதவிக்காக, கெளரவத்திற்க்காக தங்கள் நிம்மதியை இழக்கிறார்கள். ஆனால் நிம்மதிக்காக பணம், புகழ், அந்தஸ்து என்று எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஏனென்றால் நம்முடைய ஆரோக்கியம், நிம்மதி இதைவிடப் பெரிதல்லவா?

 • அன்பான பேச்சுக்களை கேட்கும்போதும்,
 • பிடித்தமான உணவுகளை உண்ணும்போதும்,
 • பிடித்தமான இசை மற்றும் பாடல்களை கேட்கும்போதும்,
 • பிடித்தமான நகைச்சுவை மற்றும் திரைப்படங்களை பார்க்கும்போதும்,
 • பிடித்தமான இடங்களுக்கு சுற்றுலா செல்லும்போதும்,
 • பிடித்தமானவர்களிடம் நேரத்தை செலவிடும்போதும்,
 • பிடித்தமான பொழுதுபோக்கில் ஈடுபடும்போதும்,
 • நல்லதை பார்க்கும்போது, கேட்கும்போதும், சிந்திக்கும்போதும்,
 • அடுத்தவர்களுக்கு உதவும்போதும்,
 • நேர்மையாக வாழும்போதும்,
 • சுயநலமில்லாத வாழ்க்கை வாழும்போதும்,

... நமது மனது சந்தோஷப்படுகிறது. அவ்வாறு மகிழ்ச்சியாக இருந்தால் நமது உடலின் பராமரிப்பு வேலையும் தடையில்லாமல் நடைபெறும் மேலும் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

பணமே பிரதானம் என எண்ணுபவர்கள் தங்கள் தினசரி வாழ்க்கை முறையில் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ள முயற்சிப்பதில்லை. அவர்கள் ஆரோக்கியத்தை விலை கொடுத்து வாங்க முடியும் எனக் கருதுகின்றனர். உண்மையில் நோய் பற்றிய பயத்தையும், கிருமிகளைப் பற்றிய பயத்தையும், செயற்கையாக உருவாக்கிய நோய்களான நீரிழிவு (சர்க்கரை), ரத்த அழுத்தம், தைராய்டு... போன்றவற்றை மட்டுமே பெற முடியும். பணத்தால் ஆரோக்கியத்தை வாங்க முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!


நீங்கள் ஆரோக்கியமாக வாழ விரும்பினால் இன்று முதல் உங்களுக்கு பிடித்தமான உணவுகளை மட்டும் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நடக்கும் என்கிற உண்மையை உணர்ந்த காரணத்தால் தான் நல்ல விஷயங்களை அதிகம் பகிர்கிறேன். எனவே நல்லதே கேளுங்கள் நல்லதே நினையுங்கள் நல்லதே பேசுங்கள் நல்லதே செய்யுங்கள் நல்லதே நடக்கும். அதற்கு எனது வாழ்கையே சாட்சி. 

இதுவரை நான் எழுதிய / வெளியிட்ட அனைத்து கட்டுரைகளையும், ஆடியோ பதிவுகளையும் படியுங்கள் / கேளுங்கள். நிச்சயம் அவை உங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன். அவற்றை காண / பதிவிறக்கம் செய்துகொள்ள இந்த Google Drive லிங்கிற்கு செல்லவும் https://goo.gl/GBKHAb


மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:


"நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!" 
Youtube Channel முகவரி https://goo.gl/Rvr1vT

"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" 
Youtube Channel முகவரி https://goo.gl/xsH2SJ


"நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்" 
Telegram குழுவின் முகவரி https://telegram.me/LetUsThinkPositive

"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" 
Telegram குழுவின் முகவரி https://telegram.me/OurBodyItselfaDoctor


இப்படிக்கு,
விழிப்புணர்வு வினீத்

No comments:

Post a Comment