ஆரோக்கியமாக வாழ்வதற்கு மருந்துகள் தேவையில்லை! - அறிமுகம்


அறிமுகம்


    னது பெயர் வினீத். முகநூலில் என்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக விழிப்புணர்வு வினீத் என மாற்றிக்கொண்டேன். பிறந்தது நாகர்கோவிலில், குடிபெயர்ந்தது தேனியில். படித்தது பொறியியல் தகவல் தொழில்நுட்பம் (I.T) பிரிவில். ஐந்து வருடங்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் பல நிறுவனங்களில் பணியாற்றினேன். வாழ்க்கைக்கு தேவையான பலவித அனுபவங்கள் கிடைத்தது ஆனாலும் திருப்தி ஏற்படவில்லை. பின்னர் தேனியில் 2010 முதல் “ரேகா நெட் கார்னர்” என்னும் பெயரில் இணையத்தள மையத்தை ஆரம்பித்து (இன்றுவரை) வெற்றிகரமாக நடத்தி வருகிறேன்.

2010 இல் மாற்று உணவுகள் மற்றும் ஆயுர்வேத மருந்துக்களை வியாபாரம் பண்ணும் ஒரு தனியார் நிறுவனம் மூலம் எனக்கு ஆரோக்கியம் அறிமுகமானது. அதுநாள்வரை நான் அறிந்தது ஆங்கில மருத்துவத்தை மட்டும்தான். இந்த நிறுவனம் நடத்திய பல பயிற்சி வகுப்புக்களில் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டேன். நோய்களைப்பற்றியும் அதற்கு தங்களிடம் உள்ள மாற்று உணவுகள் மற்றும் ஆயுர்வேத மருந்துக்களை வைத்து தற்காலிகமாக குணப்படுத்துவது பற்றியும் கற்பித்தார்கள். அறுவைசிகிச்சை இல்லாமல் அழுகிய கால்களை கூட காப்பாற்ற முடியும் என்கிற விஷயம் என்னை மிகவும் ஈர்த்தது. மரணப்படுக்கையில் இருந்த சிலரையும் காப்பாற்றும் அளவிற்கு அந்த துறையில் கற்றுத் தேர்ந்தேன்.

குறுகிய காலத்திலேயே அந்த நிறுவனத்தில் மேனேஜர் நிலையை அடைந்தேன். ஆனாலும் பத்து நபர்களை பார்த்தால் ஐந்து நபர்களுக்கு மட்டுமே குணம் கிடைக்கும் என்கிற நிலை தான் இருந்தது. இந்த நிலை தான் என்னை “கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு” என்று அவ்வையார் கூறிய வாக்கியத்தை நினைவுகூறச் செய்தது. அதன்பின் ஆரோக்கியம் தொடர்பான தேடல் அதிகரித்தது.

2011 இல் எனது இடது காலில் இருந்த சேற்றுப்புண் விரிவடைந்து யானைக்கால் வியாதி வந்தது போல ஆகிவிட்டது. அப்போது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை வீட்டிலேயே பரிசோதித்து பார்த்தபோது வெறும் வயிற்றில் 450 என்று காட்டியது. ஒரு வாரம் கழித்து பார்த்தபோதும் வெறும் வயிற்றில் 400 மேல் தான் காட்டியது. ஆங்கில மருத்தவரிடம் சென்றால் அறுவை சிகிச்சை செய்து காலை வெட்டிவிடுவர் என்பதை நன்கு அறிந்திருந்தேன்.

நான் பொதுவாக நேர்மறையாக சிந்திக்கும் குணமுடையவன். எனவே இந்த தொந்தரவிற்கான மூல காரணத்தை அறிய முற்பட்டேன். பொதுவாக நாம் எதை சிந்திக்கிறோமோ அதுவே நடக்கும். சாப்பிடும்போது நிறைய நீர் அருந்தும் பழக்கம்தான் எனது உடலில் ஏற்பட்ட தொந்தரவிற்கான மூலகாரணம் என்பதை அறிந்துகொண்டேன். பசிக்கும்போது மட்டும் நிதானமாக உண்ணும் பழக்கத்தை கடைபிடித்தேன். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. கிட்டத்தட்ட எனக்கு அன்றுவரை இருந்த பல உடல் உபாதைகள் மறைந்துவிட்டன. அன்றுவரை எனக்கு இருந்த உடல் உபாதைகள்

# அடிக்கடி பசியும் தாகமும் எடுத்துக்கொண்டே இருக்கும்.

# உணவு உண்டபின் தொடர்ச்சியாக ஏப்பம் வந்துகொண்டே இருக்கும்.

# உடல் எப்போதும் சோர்வாகவே காணப்படும்.

# உணவு உண்டவுடன் அதை ஜீரணிக்க சக்தியில்லாமல் தூக்கம் வந்துவிடும். அவ்வாறு தூங்கும்போது உணவு முழுமையாக செரிமானமாகி உடலில் சேர்ந்து எடை அதிகரிக்கும்.

# இரவு தூங்கி எழுவதற்குள் பத்து முறையாவது சிறுநீர் கழிக்க நேரிடும்.


இத்தகைய தொந்தரவுகளில் இருந்தும் சில நாட்களிலேயே விடுபட்டுவிட்டேன். அப்போதுதான் உணவு சரியாக ஜீரணம் ஆகாததுதான் இத்தனை உபத்திரவங்களுக்கும் அடிப்படை காரணம் என்பதை உணர்ந்தேன். இவற்றில் இருந்து விடுபட எனக்கு எந்த வித மருந்தும் உணவுக் கட்டுப்பாடும் தேவைபடவில்லை. இதனை புரிந்துகொள்ளாமல் தான் ஆங்கில மருத்துவம் நீரிழிவு நோய் (சர்க்கரை வியாதி) என்று பெயர் வைத்து காலத்திற்கும் மருந்து மற்றும் உணவுக்கட்டுப்பாடுகளை பின்பற்ற சொல்கிறார்கள் என்று தெரிந்து அதிர்ச்சியடைந்தேன்.

அதன்பின் எனது தேடல் விரிவடைந்தது. இன்றுவரை ஆங்கில மருத்துவத்தில் இத்தகைய தொந்தரவிற்க்கான காரணத்தை அறியவில்லை என்றும் அவர்கள் மருத்துவத்தின் மூலம் இவற்றை தடுக்கவோ குணப்படுத்தவோ முடியாது என்று தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என இந்திய அரசாங்கம் ஆங்கில மருத்துவர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறது. இதுமட்டுமல்ல வாழ்நாள் முழுக்க எவற்றிற்கெல்லாம் மருந்து உண்ணக்கொடுக்கிறார்களோ அவற்றிற்கெல்லாம் இன்றுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என  “மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940 (Drugs and Cosmetics Act, 1940) Schedule J என்னும் பிரிவில் ஆங்கிலேயர் காலத்திலேயே சட்டம் இயற்றியுள்ளனர்.

இந்த சட்டத்தின் முக்கியத்துவம் கருதி இதன் நகலை யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து படிக்கும் வகையில் நம் இந்திய அரசாங்கம் வழிவகுத்துள்ளது. இந்த சட்ட நகலை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுத்துள்ள லிங்க்கிற்கு செல்லவும்.


அல்லது https://www.google.com இல் "Drugs and Cosmetics Act, 1940" என்று தேடவும். தேடலின் முதல் முடிவே அதன் நகலாகத்தான் இருக்கும். அதை பதிவிறக்கம் செய்து "Schedule J" என்று தேடினால் கிடைக்கும். அல்லது பக்கம் 129 மற்றும் 377 ஐ பார்க்கவும்.

"Search Drugs & Cosmetic Act 1940 in google.com First result will this pdf file)

அனைவரின் நலன் கருதி நோய்களின் பெயர் தமிழாக்கம் செய்து எனது வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளேன். அந்த பதிவை காண இங்கு செல்லவும் http://goo.gl/RG6zwU

வியாபார நோக்கில் இந்த சட்டத்தை மக்களுக்கு தெரியப்படுத்தாமல் இருக்கின்றார்கள் என்கிற உண்மையை உணர்ந்துகொண்டேன். மருத்துவம் வியாபாரமாகாமல் இருந்தால் இவ்வாறு நிகழாது எனத் தோன்றியது. ஒரு மாற்றத்தை கொண்டுவர விரும்பினேன். அதை என்னிடமிருந்தே ஆரம்பித்தேன். முதலில் மாற்று உணவு மற்றும் ஆயுர்வேத மருந்துக்களை கொடுப்பதற்கு பதில் எனது வாடிக்கையாளர்களிடம் தினசரி வாழ்வில் செய்யும் சில தவறுகளை திருத்த அறிவுறுத்தினேன். அவர்களது உடல்நிலையில் நல்ல மாற்றங்களை உணரமுடிந்தது. பின்னர் மருத்தவம் தொடர்பாக யாரிடமும் எந்தவித பண பரிமாற்றத்தையும் வைத்துக்கொள்வதில்லை என முடிவெடுத்தேன். மக்களுக்கு உடலின் இயக்கத்தை புரியவைத்தாலே மருத்துவ வியாபாரிகளிடமிருந்தும் செயற்கையாக உருவாக்கப்பட்ட வியாதிகளிலிருந்தும் தப்பித்துக் கொள்வார்கள் என தோன்றியது. அன்று முதல் இன்றுவரை உடலியல் தொடர்பான தெளிவையும் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறேன்.

நமது உடலில் ஏற்படும் அனைத்து தொந்தரவுகளுக்கும் நம் தினசரி வாழ்க்கைமுறையில் செய்யும் சிறு தவறுகள் தான் காரணமென்றும் அதை திருத்திக்கொண்டாலே இவற்றில் இருந்து எளிதில் விடுபடலாம் எனவும்  தெரிந்துகொண்டேன்.

இதை அனைத்து மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என எண்ணினேன். இதற்கு முகநூல் பக்கம் (Regha Health Care), Whatsapp, Telegram மற்றும் வலைத்தளம் உதவியாக இருந்து வருகிறது.   

இதுவரை நான் பார்த்த, படித்த, சிந்தித்த, உணர்ந்த அனுபவங்களை இந்த தொடரின் மூலம் அனைவரிடமும் பகிர்கிறேன்.

நீங்கள் மருந்துக்களையோ மருத்துவரையோ தேடுவதற்கு பதில் வியாதிக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்வதே சிறப்பானதாகும். நம் தவறான வாழ்க்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தரமான தீர்வை தர இயலாது. உங்கள் வாழ்க்கைமுறையை சரிசெய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும். அதற்கான வழிமுறைகளை காண http://goo.gl/lC56N5 செல்லுங்கள்.

இதில் கொடுக்கபட்டுள்ளவற்றை படித்து புரிந்துகொண்டு பின்பற்றுங்கள் நல்ல பலன் கிடைக்கும். படித்தபின் ஏதேனும் சந்தேகம் எற்பட்டால் என்னிடம் தொடர்புகொண்டு அவற்றை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள்.


நான் பொறியியல் படித்ததால் ஆரோக்கியம் தொடர்பாக எந்தவித அடிப்படை ஞானமும் இல்லாமல் இருந்தேன். எனது உறவினர் மூலம் தான் மாற்று உணவுகள் மற்றும் ஆயுர்வேத மருந்துக்களை வியாபாரம் செய்யும் அந்த தனியார் நிறுவனம் அறிமுகமானது. அங்கு ஆரோக்கியம் தொடர்பாக நான் கற்றுக்கொண்ட அடிப்படை விஷயங்களாவன

# நமது உடலின் ஏற்படும் அனைத்து தொந்தரவுகளின் அடிப்படை காரணமாக விளங்குவது நமது குடலில் தேங்கும் கழிவுகளே. எனவே தான்  நம் முன்னோர்கள் விளக்கெண்ணை குடித்து குடலை சுத்தம் செய்யும் வழக்கத்தை வைத்திருந்தார்கள்.

# நம் குடலில் தேங்கும் கழிவுகளே உடலின் மற்ற பகுதிகளில் தேங்கி வலியை ஏற்படுத்துகின்றது. நம் உணவில் நார்சத்து அதிகம் உள்ள உணவுகளை (பழங்கள், காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை) உட்கொள்ளும் பட்சத்தில் நமது குடலை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதால் உடலில் உள்ள வலிகள் குறைகின்றது.

பசித்து உட்கொள்ளும் உணவுகள் எளிதில் செரிமானமாகிவிடுகிறது. பசிக்கும்போது நமக்கு பிடித்தமான உணவுகளை உண்ணுவதன் மூலம் உடலிற்கு தேவையான சத்துக்கள் கிடைத்து அனைத்து உறுப்புக்களும் நன்கு இயங்குகிறது.


இதன் அடிப்படையில் தான் அந்த நிறுவனத்தில் மாற்று உணவுகள் மற்றும் ஆயுர்வேத மருந்துக்கள் பரிந்துரைக்கப்பட்டன. இதன்மூலம் உடலில் கழிவுகள் தேங்கியதால் ஏற்பட்ட உபத்திரவங்கள் குறைந்தது. மேலும் சத்துக்குறைபாடுகள் நீங்கியது.

அதேநேரத்தில் உடலுக்கு போதிய ஓய்வு கொடுக்காததால் ஏற்பட்ட தொந்தரவுகள் (கல்லீரல் மற்றும் இருதயம் போன்ற பகுதிகளில் ஏற்படுபவை), சுத்தமான காற்றினை சுவாசிக்காததினால் ஏற்பட்ட தொந்தரவுகள் (நுரையீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற பகுதிகளில் ஏற்படுபவை) போன்றவற்றிற்கு தற்காலிக தீர்வு மட்டுமே கிடைத்தது.

இந்த மாற்று உணவுகளின் விலை சற்று அதிகமாகவே இருக்கும். எனவே ஆங்கில மருத்துவத்துக்கு மாற்றாக இதனை வாங்கும் ஏழைகள் மற்றும் நடுத்தரவர்கத்தைச் சார்ந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இவர்கள் யாரும் என்ன காரணத்தால் தங்களுக்கு உபத்திரவங்கள் ஏற்படுகின்றது என்பது தெரியாது. எனவே அதனை திருத்திக்கொள்ளும் வாய்ப்பும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. அதனால் காலத்திற்கும் ஆங்கில மருந்துக்களை உட்கொள்ளுவதைப் போல இதையும் உட்கொள்ள வேண்டி இருந்தது.

நம் உடலில் ஏற்படும் தொந்தரவிற்கான காரணத்தை அறிந்துகொண்டபின் எனது வாடிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. வியாபார நோக்கத்தில் தான் நான் கூறுவதாக எண்ணினர். அனைவரின் தேடலும் உடனடியாக கிடைக்கும் தற்காலிக தீர்வை நோக்கியே இருந்தது. இது எனக்கு மிகுந்த மனவருத்தத்தை தந்தது. ஏனென்றால் நான் பணத்திற்காக வேலைபார்ப்பவன் அல்ல, திருப்திக்காக வேலைபார்ப்பவன். என்னை வியாபார கண்ணோட்டத்தில் பார்த்ததால்தான் நான் கூறிய விஷயங்கள் மக்களுக்கு சென்றடையவில்லை என்பதனை புரிந்துக்கொண்டேன். இந்த  நிகழ்வும் நான் வியாபாரத்தில் இருந்து சேவைக்கு மாற காரணமாக இருந்தது.

ஆரம்பத்தில் Regha Health Care என்னும் முகநூல் குழு தொடங்கப்பட்டது வணிக நோக்கத்தில் தான். பொதுவாகவே முகநூலில் ஆரோக்கியம் தொடர்பான பதிவுகள் தவிர்த்து எனது சுய புகைப்படம் முதற்கொண்டு வேறெதுவும் பகிரும் பழக்கம் எனக்கில்லை. 2015 ஆம் ஆண்டு எனது பிறந்தநாளில் நான் ஏன் இந்த குழுமத்தை ஆரம்பித்தேன் என்று ஒரு சுயநிலை விளக்க பதிவை http://goo.gl/10cR5i பகிர்ந்தேன். அதனை 39 பேர் பகிர்ந்திருந்தனர், 1,200 பேர் Like செய்திருந்தனர் மற்றும் 470 பேர் தங்களது வாழ்த்துக்களை Comment இல் பதிவு செய்திருந்தனர். இன்னும் பலர் இன்பாக்ஸ் மற்றும் ஈமெயில் மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இதில் 95 சதவிகிதம் மக்களுக்கு என்னை யார் என்றே தெரியாது. அப்போது தான் நல்ல விஷயங்களை செய்பவர்களுக்கு மக்களின் ஆதரவு உண்டு என்பதை புரிந்துக்கொண்டேன். இதன் பின் எனக்கு பல பொறுப்புக்கள் இருப்பதை உணர்ந்துகொண்டேன்.

அன்று முதல் நான் பகிரும் பதிவுகளின் தரம் மற்றும் உண்மைத்தன்மையில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். ஒவ்வொரு பதிவின் முடிவிலும் என்ன காரணத்திற்காக இவற்றை பகிர்ந்தேன் என்கிற விளக்கத்தையும் கொடுக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் தற்செயலாக ஏதேனும் பதிவுகளை காண்போருக்கும் ஆரோக்கியம் தொடர்பான அறிமுகம் கிடைக்க வாய்ப்பாக அமையும் என்று எண்ணினேன்.

உண்மையில் அனைவரும் நினைப்பதுபோல ஆரோக்கியம் என்பது மருத்துவமனையிலோ மருந்துக்களிலோ கிடைப்பதில்லை. நம்மிடம் இருக்கும் ஒரு பொருளை வேறு எங்கு தேடினாலும் கிடைக்காது. ஆரோக்கியம் நம்மோடே தான் இருக்கிறது. நம் உடலின் உணர்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்தாலே போதும் ஆரோக்கியம் நம்மோடே இருக்கும். ஆரோக்கியத்தை புரிந்துகொள்வதிலும் ஒரு சூட்சமம் இருக்கிறது என்பதை என்னால் உணரமுடிந்தது.

ஆரோக்கியமாக வாழ்வதென்பது ஒரு வரம். இந்த வரம் அனைவருக்கும் கிடைத்துவிடுவதில்லை. யாரெல்லாம் நேர்மையாக வாழ்கிறார்களோ, பொதுநலமாக சிந்திக்கிறார்களோ, உதவும் மனப்பான்மையுடன் இருக்கிறார்களோ, அடுத்தவர்களது பொருளுக்கு ஆசைபடாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே ஆரோக்கியம் என்றால் என்ன என்பது புரிகிறது

இத்தகையவர்களால் மட்டுமே தங்களது வாழ்க்கை முறையில் செய்யும் தினசரி தவறுகளை திருத்திக்கொள்ள முடிகிறது. மற்றவர்களால் இவற்றை புரிந்துக்கொள்ள முடிவதில்லை; அப்படி புரிந்துக்கொள்ள முடிந்தாலும் தங்களது வாழ்க்கை முறையில் செய்யும் தினசரி தவறுகளை திருத்திக்கொள்ள முடிவதில்லை.

பணமே பிரதானம் என எண்ணுபவர்கள் தங்கள் வாழ்வியல் முறையில் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ள முயற்சிப்பதில்லை. அவர்கள் ஆரோக்கியத்தை விலை கொடுத்து வாங்க முடியும் எனக் கருதுகின்றனர். உண்மையில் நோய் பற்றிய பயத்தையும், கிருமிகளைப் பற்றிய பயத்தையும், செயற்கையாக உருவாக்கிய நோய்களான சர்க்கரை, ரத்த அழுத்தம், தைராய்டு... போன்றவற்றை மட்டுமே பெற முடியும். பணத்தால் ஆரோக்கியத்தை வாங்க முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.  

நம் உடலின் அடிப்படையை புரிந்து கொண்டவர்களால் மட்டுமே மக்களை வியாதிகளின் பயத்தில் இருந்து தெளிவுபடுத்த முடியும். ஏற்கனவே இத்தகைய விஷயங்களை சிலர் தங்கள் பாணியில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர்.

# உடலின் அடிப்படையை உமர் பாருக் எழுதிய உடலின் மொழி போன்ற பல நூல்களின் மூலம் தெளிவாக விளக்கியுள்ளார்.      

# நோய் பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசிகள் பற்றிய உண்மைகளை “மருத்துவ ஆய்வு கூடங்களில் நடப்பது என்ன?” மற்றும் “தடுப்பூசிகள் வெளிப்படுத்தும் உண்மைகள்” என்னும் நூல்கள் மூலம் உமர் பாருக் வெளிப்படுத்தியுள்ளார்.


குறிப்பு:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நூல்களை படிக்க மட்டும் அறிவுறுத்துகிறேனே தவிர சிகிச்சை எடுத்துக்கொள்ள அல்ல, என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த மின் புத்தகங்கள் தேவைப்பட்டால் உங்கள் ஈமெயில் விலாசத்தை எனது எண்ணுக்கோ, ஈமெயிலுக்கோ அனுப்புங்கள் புத்தகங்களை அனுப்பி வைக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை ஆரோக்கியமாக வாழவிரும்புபவர்கள் அத்தனைபேரும் இந்த நூல்களை அவசியம் படிக்க வேண்டும்.

வியாதிகள், கிருமிகள், சத்துக்கள் பெயரை சொல்லி பலவித வியாபாரங்கள் நம்மைச்சுற்றி நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. நமது உடலின் அடிப்படையை புரிந்துகொண்டாலே எதைக்கண்டும் அஞ்சாமல் வாழமுடியும்.

 

காரணம் ஏதுமின்றி நமது உடலில் எந்தவொரு உபத்திரவங்களும் ஏற்படுவதில்லை. ஆனால் நாம் நம் உடலில் ஏற்படும் உபத்திரவத்திற்கான உண்மையான காரணத்தை அறிந்து அவற்றை திருத்திக்கொள்ளாமல் வெறுமனே மருந்துக்களை மட்டும் உட்கொண்டுவிட்டு தற்காலிக நிவாரணம் கிடைத்த திருப்தியில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். எனவே தான் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வது என்பது இன்றுவரை நமக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.


நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் ஏன்? எதற்கு? எப்படி? ஏற்படுகிறது என்பதை புரிந்துக்கொள்ள உதவுவது தான் அறிவியல். இந்த அறிவியலின் வளர்ச்சி காரணமாகத்தான் இன்று நாம் பல துறைகளில் முன்னோடியாக திகழ்கிறோம். உதாரணமாக தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக நாம் நினைத்த மாத்திரத்தில் இந்த உலகத்தின் எந்த பகுதியில் இருக்கும் நபரையும் நொடிப்பொழுதில் தொடர்புகொள்ள முடிகிறது. போக்குவரத்து துறையின் வளர்ச்சி காரணமாக சில மணிநேரத்தில் பூமியின் அடுத்த பகுதிக்கே செல்ல முடிகிறது.

ஆனால் இதே அறிவியலின் சரியான புரிதலின்மை காரணமாக மருத்துவத்துறையில் மட்டும் பின்தங்கியே இருக்கிறது. இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள பலர் சிரமப்படுவார்கள். சற்று சிந்தித்து பாருங்கள் முப்பது வருடங்களுக்கு முன்னர் வீட்டில் யாருக்கேனும் வியாதி இருந்தால் அது ஆச்சரியமான விஷயமாகத்தான் கருதப்பட்டது. ஆனால் இன்றோ வீட்டில் உள்ள யாருக்கேனும் வியாதி இல்லையென்றால் அது ஆச்சரியமான விசயமாகத்தான் கருதப்படுகிறது.

ஏன் மருத்துவ அறிவியல் மட்டும் நமக்கு உதவுவதில்லை?

உலகத்தில் உயிரினங்கள் தோன்றிய காலம் முதல் இன்றுவரை தங்கள் உடலில் ஏற்படும் அனைத்து உபத்திரவங்களை சரிசெய்து கொள்ளும் ஆற்றல் பெற்றது தான் உயிரினம். இதன் அடிப்படையில் தான் மிருகங்கள் இன்றளவும் ஜீவித்துக்கொண்டு இருக்கிறது. இந்த கோட்பாட்டை நம் மனித இனம் தான் ஏற்க மறுக்கிறது.

உதாரணமாக சுதந்திரமாக உலாவும் ஆடுகளுக்கு உடலில் ஏதேனும் உபத்திரவம் ஏற்படுமாயின் தன் உணர்விற்கு மதிப்பளித்து தனக்கு தேவையான புல்லை மட்டும் உண்டு தன்னை தற்காத்துக்கொள்கிறது. அதேநேரத்தில் பண்ணைகளில் அடைத்துவைத்து வளர்க்கப்படும் ஆடுகள் தனக்கு தேவையான புல்லை தேவைப்படும்போது உண்ண இயலாமல் நோய்வாய்ப்படுகின்றது.

இதனை அறியாத மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் உடலின் அடிப்படையை புரிந்துக்கொள்ளாமல் உடலே உடலில் ஏற்படும் உபத்திரவங்களை சரிசெய்யும் செயல்முறையை வியாதி என தவறாகப்புரிந்து கொண்டார்கள். எனவே ஒவ்வொரு செயல்முறைக்கும் ஒவ்வோர் பெயர்வைத்து அதனை தடுக்கும் முயற்சியில் ஈடுபட தொடங்கினார்கள். இதன் பலனையே இன்று நாம் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். இத்தகைய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வெளியிடும் ஆய்வின் முடிவுகளை ஏன்? எதற்கு? என்று மறுகேள்வியின்றி ஏற்றுக் கொண்டமையால் தான் இன்றையதினத்தில் நாம் வியாதிகள் பெருகிவிட்டது என்று கூறி வருகிறோம்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்      மெய்ப்பொருள் காண்ப தறிவு.

-   திருக்குறள் (அறிவுடைமை #0423)

எந்தவொரு பொருள் குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும் என்று திருவள்ளுவர் தெளிவாக கூறியுள்ளார். ஆனால் நாமோ இரண்டு மதிப்பெண்களுக்காக இந்த குறளை மனப்பாடம் செய்துவிட்டு சுயமாக சிந்திக்கும் ஆற்றலின்றி தவிக்கிறோம்.

நம் அறிவை வளர்த்துக் கொள்ளத்தான் கல்வியே தவிர மதிப்பெண்களை வளர்த்துக் கொள்ள அல்ல. இதை புரிந்துகொள்ளாமல் நமக்கு விருப்பமில்லாததை கற்றுக்கொண்டு விரும்பாத வேலையை செய்துகொண்டு காலத்திற்கும் மன அழுத்தத்துடன் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம். இதனால்தான் இன்றையதினத்தில் பெரும்பாலானவர்கள் இந்த மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.

பணம்தான் பிரதானம் என நம்மை தவறாக வழிநடத்தி பணம் சம்பாதிக்க வைத்து பின் சம்பாதித்த பணத்தை வியாதி என்னும் பெயரில் நம்மிடம் இருந்து பிடுங்கிக்கொள்கிறது இந்த சமூகம். இந்த நிலை காரணமாகவே பலர் இந்த சமூகத்தில் நிம்மதியும் ஆரோக்கியமும் இன்றி வாழ்கிறார்கள்.

இன்றைய நவீன மருத்துவம் நமது உடலில் ஏற்படும் அனைத்து உபத்திரவங்களையும் கற்பனையாக உருவாக்கிய மூன்று பெயர்களில் அடக்கிவிட்டது. அவை நீரிழிவு (சர்க்கரை), ரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு.

நமது உடலில் ஏதேனும் உபத்திரவம் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்களிடம் சென்றால் இந்த மூன்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் சராசரி அளவில் மாறுபாடு உள்ளது என்றும் அதனை சரிசெய்ய இந்த மருந்துக்களை உட்கொள்ளவேண்டும் என்று மருந்துக்களை விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

உதாரணமாக மூட்டுவலியை எடுத்துக்கொள்வோம். இரவு இயற்கை காற்றோட்டம் இல்லாமல் தூங்கும் நபர்களுக்கு மூட்டுவலி ஏற்படுகின்றது. அதாவது ரசாயன கொசுவிரட்டிகள் உபயோகப் படுத்துபவர்கள், குளிர்சாதன அரையில் தூங்குபவர்கள், ஜன்னலை அடைத்துக்கொண்டு தூங்குபவர்கள், தலையை போர்த்திக்கொண்டு தூங்குபவர்கள் போன்றோர் அசுத்த காற்றை சுவாசித்துக் கொண்டு தூங்கும் சூழல் ஏற்படும். இதனால் அவர்களது சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே அவர்களது சிறுநீரகங்கள் ரத்தத்தில் உள்ள கழிவுகளை அகற்ற சிரமப்படும். அதனால் கழிவுகள் மூட்டுக்களில் தேங்கி வலி ஏற்படும்.

இத்தகையதொரு சூழலில் வாழும் ஒருவர் மூட்டில் வலி ஏற்பட்டுள்ளது என மருத்துவரைக் காணச் சென்றால் அரைகுறை மருத்துவ ஞானத்தைக் கொண்டு உருவாக்கிய கருவிகளை வைத்து இவரை பரிசோதனை செய்துவிட்டு இவருக்கு ரத்த அழுத்தம் கூடிவிட்டது தைராய்டு அளவு கூடிவிட்டது எனக் கூறி காலத்திற்கும் மருந்து கொடுக்க ஆரம்பித்து விடுவார் மருத்துவர். அத்தகைய மருந்துக்கள் நமது உடலில் ஏற்படும் வலியை தற்காலிகமாக மூளைக்கு உணர்த்தாமல் தடுத்துவிடும். நாமும் நமது மருத்துவர் கொடுத்த மருந்து நன்றாக வேலை செய்கிறது என்று எண்ணிக்கொண்டு இருப்போம். மருந்துக்களை நிறுத்தியபின் அதே வலி தொடரும். பின்னர் மருத்துவரது ஆலோசனையின் பெயரில் காலத்துக்கும் அந்த மருந்துக்களை உட்கொண்டு அந்த பிரச்சினையை வளர்த்துக் கொண்டே இருப்போம்.

இங்கு நாம் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவெனில் என்ன காரணத்தால் இந்த உபத்திரவம் ஏற்பட்டது என்று யாரும் சிந்திப்பதில்லை. அதற்கு பதிலாகத்தான் ரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு என்று பெயர் வைத்து காலத்திற்கும் மருந்துக்களை உட்கொள்கிறோம். இப்போது நம் உடலில் பலமடங்கு கழிவுகள் தேங்கி உடல் முழுவதிலும் உள்ள மூட்டுகளில் வலி ஏற்பட ஆரம்பிக்கும். அதற்கு புதிதாக முடக்குவாதம் என்று பெயர் வைத்து அதற்கும் மருந்துக்களை உட்கொள்ள ஆரம்பித்து விடுவோம். இது ஒரு தொடர்கதை போல தொடர்ந்துகொண்டே தான் இருக்கும்.

நமது அறியாமை மற்றும் நாம் நம்பும் மருத்துவரது அறியாமை என இந்த இரண்டும் சேர்ந்து தான் நம்மை ஒரு வியாதியஸ்தராக உருவாக்குகிறது. இதைப் போன்று தான் நம் உடலில் ஏற்படும் அனைத்து உபத்திரவங்களுக்கும் ஓரு காரணம் இருக்கும், அதனை கண்டுபிடித்து சரி செய்தால் மட்டுமே நிரந்தர தீர்வை பெற முடியும் என்பதனை புரிந்துக்கொள்ளுங்கள். எனவே என்னென்ன காரணங்களால் நம் உடலில் உபத்திரவங்கள் ஏற்படுகின்றதோ அவற்றை கண்டுகொண்டு நம் தினசரி வாழ்க்கை முறையில் திருத்திக்கொள்வதன் மூலம் உடலில் ஏற்படும் உபத்திரவங்களை தவிர்த்துவிடலாம்.

நம் உடலில் கழிவுகள் தேங்குவதற்க்கும் தேங்கிய கழிவுகளை வெளியேற்றவும் நாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ தடையாக இருப்பதே நீண்டகால உபத்திரவமாக மாறுகின்றது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்துகொண்டால் தான் நம்மால் நம் தினசரி வாழ்வில் செய்யும் தவறுகளை திருத்திக்கொண்டு ஆரோக்கியமாக வாழமுடியும்.

நான் வெளியிடும் அத்தனை பதிவுகளிலும் எனது வலைத்தளம், முகநூல், ஈமெயில் முகவரி மற்றும் தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டு இருக்கும். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இன்றுவரை பிரபலமான பல முகநூல் குழுக்களில் என்னை தடைசெய்துள்ளனர். காரணம் நம் உடலில் ஏற்படும் பெரும்பாலான உபத்திரவங்களுக்கு வியாதிகளோ, கிருமிகளோ காரணமல்ல நாம் நம் தினசரி வாழ்கையில் தெரிந்தும் தெரியாமலும் செய்யும் தவறுகள் தான் என்கிற கருத்தை புரியவைக்க முயற்சித்ததே. இத்தகைய செய்திகள் மருத்துவ வியாபாரத்தில் ஈடுபடும் பலருக்கு நெருக்கடியை கொடுக்க ஆரம்பித்தது. எனவே எனது முகநூல் பதிவுகள் அவர்களது குழுக்களில் பகிர்வதற்கு நிரந்திரமாக தடை செய்துவிட்டனர்.

தற்செயலாக ஏதேனும் பதிவுகளை படிக்கும் நபர்கள் அதனை பற்றி மேலும் தெரிந்துகொள்ள உதவும் நோக்கத்தில்தான் அனைத்து முகவரி மற்றும் தொடர்பு எண்களை பகிர்கிறேன். எனக்கு பிரபலமாக விருப்பமில்லை. எனக்கு எந்தவித விளம்பரமும் தேவையில்லை. நல்லதை தேடும் நேர்மையான நல்ல உள்ளங்களுக்கு உதவ வேண்டும் என்பதே எனது எண்ணம்.

என்னை இதுவரை தொடர்பு கொள்ளாதவர்களுக்கு இது ஒரு வியாபார யுக்தி என்று கூட நினைக்கத் தோன்றும். பலர் என்னை பார்க்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால் இதுவரை யாரையும் நான் என்னை நேரில் பார்க்க அனுமதித்தது கிடையாது. நம் உடலிற்கே உடலில் ஏற்படும் அனைத்து உபத்திரவங்களை சரிசெய்யும் ஆற்றல் உள்ளது என்பதை உணர்த்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த யுக்தியை கையாளுகிறேன். ஏதேனும் கட்டணம் செலுத்த வேண்டுமா என்று கேட்போரிடம் நீங்கள் உங்கள் உபத்திரவத்தில் இருந்து விடுபட்டபின் உங்களைப் போன்று உபத்திரவங்களை அனுபவிப்பவர்களிடம் நீங்கள் குணமான அனுபவத்தை பகிர்ந்துகொள்ளுங்கள் என்று தான் அறிவுறுத்துவேன். இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள காரணம் இந்த பதிவின் தலைப்பு தான். நல்ல எண்ணத்தில் தான் இந்த பதிவை பகிர்கிறேனே தவிர வேறு எந்த வியாபார நோக்கத்திலும் அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக எந்த மருந்துக்களின் உதவியுமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறோம். இந்த ஆண்டு தொடக்கத்தில் எங்களுக்கு (நானும் எனது மனைவியும்) ஒரு வாகன விபத்து ஏற்பட்டது. அந்த விபத்திற்கு முதலுதவிக்காக அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். முதலுதவிக்குப் பின் நாங்கள் எங்கள் வீட்டிற்கே சென்றுவிட்டோம். அந்த விபத்தில் தலையில் இரண்டு தையல்கள் போட்ட பின்பு தான் ரத்தம் வருவது நின்றது. கை மற்றும் கால் மூட்டுக்களில் கொஞ்சம் சதைகளை இழந்தேன். வலது பக்கம் முழுவதும் பலத்த அடி. இருப்பினும் சிறுவயது முதல் பால் கலந்த டீ மற்றும் காப்பியை அருந்தும் பழக்கம் எனக்கு இல்லை என்பதால் எனக்கு எந்த வித எலும்பு முறிவும் ஏற்படவில்லை இதுவரை ஏற்பட்டதுமில்லை. இதனை சரிசெய்ய எந்த மருந்துக்களையும் நாங்கள் வாங்கி உட்கொள்ளவில்லை. பிடித்த உணவை மட்டுமே உள்மருந்தாக உண்டு வேப்ப எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய்யை மட்டும் வெளிப்பூச்சு External மருந்தாக உபயோகித்து மூன்றே வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பினோம். ஒரு மாதத்தில் நாங்கள் தேக்கடிக்கு சுற்றுலாவே சென்றுவிட்டோம்.

இதில் வேடிக்கை என்னவென்றால் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தற்செயலாக வெறும் வயிற்றில் ரத்தத்தின் சர்க்கரை அளவை பரிசோதித்து பார்த்தபோது 400க்கு மேல் இருந்தது. இன்றுவரை இதற்கு என நான் எந்தவித மருந்துக்களையும் உட்கொண்டதில்லை. அதேபோல் எந்தவித உணவுக் கட்டுப்பாடுகளையும் மேற்கொண்டதில்லை. ஒருநாளுக்கு ஒருமுறையேனும் நாங்கள் ஹோட்டல் உணவை தான் உண்ணும் சூழலில் உள்ளோம். பலர் கருதுவதைப்போல ஹோட்டல் உணவு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று நாங்கள் கருதியதில்லை. உடலைப் பற்றிய அடிப்படையை கற்றுக்கொண்டதால் உணவு, வியாதி மற்றும் கிருமி போன்றவற்றைப் பற்றிய பயமின்றி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம். பொதுவாக நாங்கள் பயப்படுவது மருந்துக்கள், மருத்துவ பரிசோதனைகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைக்குத்தான்.

பொதுவாக நமக்கு ஒரு இன்பம் கிடைத்தால், அது நமக்கு மட்டும் வேண்டும் என்று நினைப்போம். ஆனால், நல்ல எண்ணம் உள்ளவர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள். அவர்கள் பெற்ற இன்பத்தை இந்த உலகமும் பெற்று இன்புற வேண்டும் என்று நினைப்பார்கள். “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்...” என்கிற திருமூலர் பாடலுக்கு ஏற்றார்போல் தான் நாங்களும் இதனை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டு வருகிறோம்.

இப்போது நம்மை வாட்டி வதைக்கும் நோய்களாக வர்ணிக்கும் நீரிழிவு (சர்க்கரை) நோய் பற்றி பார்ப்போம்.

நீரிழிவு (சர்க்கரை) நோய் என்றால் என்ன?

நாம் உண்ணும் உணவில் இருந்து பெறப்படும் சர்க்கரை Glucose தான் நம் உடலுக்கு மின்சாரம் போன்று வேலைசெய்யும். அப்படிப் பெற்றால்தான் அனைத்து உறுப்புக்களும் முழு சக்தியுடன் இயங்கும். அந்த சர்க்கரை தரமானதா இல்லையா என்பதை கணையம் என்னும் உறுப்பு பரிசோதிக்கும். பரிசோதித்துவிட்டு தரமானது எனில் இன்சுலின் என்னும் ஹார்மோனை சுரக்கும். இந்த இன்சுலினுடன் வரும் சர்க்கரையை நமது செல்கள் ஏற்றுக்கொள்ளும். அப்படி இல்லாத பட்சத்தில் அவற்றை கெட்ட சர்க்கரை எனக் கருதி ஏற்றுக்கொள்ளாது. அப்படி ஏற்றுக்கொள்ளாத கெட்ட சர்க்கரையை நமது சிறுநீரகம் சிறுநீர் மூலமாக வெளியேற்றும். இந்த கெட்ட சர்க்கரையை ரத்தத்திலும் சிறுநீரிலும் பரிசோதனை செய்துவிட்டு வாழ்நாள் முழுக்க மருத்துக்கள் மற்றும் இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கின்றனர். இதை கூட புரிந்துகொள்ளாமல் தான் இதனை ஒரு கொடிய நோயாக சித்தரிக்கின்றனர் மருத்துவ வியாபாரிகள்.

இதை பற்றி “உண்மையில் சர்க்கரை வியாதி என ஒன்று உள்ளதா?” https://goo.gl/tXLu1q மற்றும் “சர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை” https://goo.gl/ALDygR என்னும் தலைப்புகளில் ஏற்கனவே தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த பதிவுகளை புத்தக வடிவில் காண மற்றும் நகல் Printout எடுக்க https://goo.gl/z1T0QS எனும் லிங்கிற்கு சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்த நீரிழிவு என்னும் செயற்கையாக உருவாக்கிய நோய்க்கு சர்க்கரை என்று பெயர் வைத்ததன் நோக்கம் நம் அனைவரையும் எளிதில் சென்றடையவும் குழப்பமடையச் செய்யவும்தான். சர்க்கரை என்று பெயர் சூட்டுவதன் மூலம் இனிப்பு சுவையையும் நீரிழிவையும் இணைத்து நாம் கற்பனை செய்ய ஆரம்பித்துவிடுவோம். இனிப்பு என்னும் சுவைதான் நம் ஜீரணத்திற்கு உதவும். அதன் காரணமாகவே திருமணம் முதற்கொண்டு அனைத்து சுபகாரியங்களிலும் உணவு பரிமாறப்படும்போது இனிப்பை வைப்பார்கள். பசிக்காமல் சாப்பிட நேர்ந்தாலும் இனிப்புடன் சாப்பிட்டால் அவை எளிதில் ஜீரணமாகும்.

இனிப்பை பற்றிய பயத்தை மக்களிடம் பரப்புவதற்காக மருத்துவ வியாபாரிகள் பல யுக்திகளை கையாண்டு வருகிறார்கள். அவற்றில் சில

# தினசரி நாளிதழ்களில், மாத இதழ்களில், தொலைக்காட்சிகளில்...  சர்க்கரை நோயை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம் என்கிற பெயரில் பயமுறுத்துவது.

# திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி நாடகங்களில் வரும் முக்கிய கதாபாத்திரங்களுக்கு சர்க்கரை வியாதி இருப்பதாக காட்டுவது போன்றவற்றின் மூலம் சாமானிய மக்களிடம் இதை பற்றிய பயத்தை சென்றடைய வைப்பது.

# சர்க்கரை நோய் தினம் என்று பெயர் சூட்டி வருடத்தில் ஒரு நாள் முழுக்க பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து சர்க்கரை நோயை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம் என்கிற பெயரில் பயமுறுத்துவது.

# இலவச சர்க்கரை பரிசோதனை எனும் பெயரில் மக்களை பரிசோதனை செய்ய வைத்து சர்க்கரை நோயாளி என முத்திரை குத்துவது.

# இது பத்தாது என்று நாமும் இவர்களது சூழ்ச்சியை அறிந்துகொள்ளாமல் தினம் தினம் சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததை போல அனைவரிடமும் இல்லாத சர்க்கரை நோயை பற்றி மிகைப்படுத்தி பேசிப்பேசி நோய் வளர்த்து வந்துள்ளோம்.


மொத்தத்தில் மருத்துவ வியாபாரிகளின் திட்டம் நல்ல முறையில் நிறைவேறிக்கொண்டு தான் இருக்கின்றது. இவர்கள் இத்தோடு நிறுத்திவிடவில்லை, இவர்களது அடுத்த இலக்கு நமது குழந்தைகள் தான். ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தைகளுக்கு சர்க்கரை இருக்கிறதா என்று பரிசோதனை செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளன. ஒருவேளை இந்த வதந்திகள் உண்மையானால் பசிக்காமல் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் அனைத்திற்கும் சர்க்கரை வியாதி வந்து விட்டதாக முத்திரை குத்தப்படுவார்கள். எனவே கவனமாக இருங்கள்.  

உலகில் உள்ள அனைத்து மருத்துவத்திற்கும் பெயர் உண்டு என்பதை நாம் அறிவோம். உதாரணமாக இந்தியாவை சேர்ந்த சித்தா மற்றும் ஆயுர்வேதா, ஜெர்மனியை சேர்ந்த ஹோமியோபதி, தொடுசிகிச்சைகளான அக்குபஞ்சர், அக்குபிரஷர் மற்றும் வர்மம், கிரேக்க-அரேபிய வைத்திய முறையான யுனானி, ஜப்பானை சேர்ந்த பிரானிக் ஹீலிங் போன்ற பல மருத்துவங்களைக் கூறலாம். ஆனால் பெயரே இல்லாத மருத்துவம் ஒன்று இருக்கிறது. அதனாலோ என்னவோ தினம் தினம் பல புதிய  வியாதிகளை உருவாக்கி அதற்கு பெயர் சூட்டி மகிழ்கிறது அந்த மருத்துவம். அந்த மருத்துவத்தை ஆங்கிலேயர்கள் நமக்கு அறிமுகப் படுத்தியதால் ஆங்கில மருத்துவம் என்று நாம் அழைக்க ஆரம்பித்துவிட்டோம்.

இந்த மருத்துவத்திற்கு அலோபதி என்று இன்னும் ஒரு பெயரும் வைத்து இருக்கிறார்கள். வைத்தவர் வேறு யாருமல்ல புகழ் வாய்ந்த ஜெர்மன் நாட்டின் மருத்துவரும் வேதியியல் நிபுணருமான டாக்டர் சாமுவேல் ஹானிமென் (1755-1843) என்பவர் தான். இவர்தான் ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை. பெயரே இல்லாமல் வெறும் நோயின் அறிகுறிகளுக்கு மட்டும் வைத்தியம் பார்க்கும் மருத்துவமாக திகழ்ந்ததால் இதற்கு அலோப்பதி என்று பெயர் சூட்டினார்.

உலகில் உள்ள அனைத்து மருத்துவமும் உடலில் என்ன காரணத்தால் நோய் ஏற்பட்டது என்பதை அறிந்து அதை மருந்துக்கள் மூலமாகவோ வேறு ஏதேனும் வழிமுறைகள் மூலமாகவோ சரிசெய்வார்கள். உதாரணமாக ஒருவருக்கு மூட்டு வலி ஏற்பட்டுள்ளது என வைத்துக்கொள்வோம் அவர் வைத்தியரிடம் சென்றால் நாடிப் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு உடலில் வாதம் அதிகரித்துள்ளது என்பதை அறிந்துகொண்டு அதனை தணிப்பதற்காக மருந்துக்கள் மற்றும் உணவுமுறைகளை பரிந்துரைப்பார். அவற்றை பின்பற்றியதும் வாதம் தணிந்து மூட்டுவலி குணமாகிவிடும். அதேநேரத்தில் ஆங்கில மருத்துவமோ வலி உள்ள இடத்தை மட்டும் பரிசோதித்துவிட்டு ஆரம்பத்தில் வலிநிவாரணிகளை கொடுத்து சமாளிப்பர். பின்னர் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து தான் ஆகவேண்டும்  உலகத்தில் இதற்கு வேறு எந்த தீர்வும் இல்லை என நம்பவைத்து கால் மூட்டுக்களை மாற்றிவிடுவர்.

மற்றுமொரு உதாரணத்தை பார்ப்போம். ஒருவருக்கு தலைவலி ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம் உலகத்தில் உள்ள அனைத்து மருத்துவமும் இதனை ஒரு அறிகுறியாக மட்டுமே பார்க்கும். உடலில் எந்த பகுதியிலாவது கழிவுகள் தேங்கியிருந்தால் தலைவலி ஏற்படும். ஒவ்வொரு மருத்துவமுறைக்கும் நோயறிதல் முறைகள் உண்டு. அதன் மூலம் எந்த பகுதியில் கழிவுகள் தேங்கி இருக்கின்றது என்பதை அறிந்துகொண்டு அவற்றை வெளியேற்ற சிகிச்சை அளிப்பார்கள். அதன் கழிவுகள் வெளியேறியதும் தலைவலி தானாகவே நீங்கிவிடும். அதேநேரத்தில் ஆங்கில மருத்துவமோ தலையை CT ஸ்கேன், MRI ஸ்கேன் அது இது என்று பல பரிசோதனைகள் செய்து புதுப்புது நோய்கள் பெயரை சூட்டி காலத்திற்கும் மருந்து கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். இதன் காரணமாகவே ஒரேநாளில் குணமாகவேண்டிய தலைவலி கூட ஆங்கில மருத்துவத்தை பின்பற்றுகிறவர்களுக்கு பல ஆண்டுகளாக தொடர்ந்துகொண்டே இருக்கிறது. பின்னர் கழிவுகளின் தேக்கம் அதிகமாகி திடவடிவம் பெற்றுவிடும். அதற்கும் புற்றுநோய் கட்டிகள் ஏற்பட்டுவிட்டது என்று கூறி வைத்தியம் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.

எனவேதான் அரசாங்கம் ஆங்கில மருத்துவத்திற்கு பல கட்டுப்பாடுகளை வைத்துள்ளது. ஆனால் அத்தகைய கட்டுப்பாடுகளை எந்த மருத்துவரும் பின்பற்றுவதில்லை. தங்களிடம் வரும் நோயாளிகளிடம் இந்த வியாதிக்கு தங்கள் மருத்துவமுறையில் மருத்துக்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை கூறாமல் மறைத்துவிடுகின்றனர். அப்படி கூறினாலும் இதற்கு உலகத்திலேயே வேறு எங்கும் தீர்வே கிடையாது என்று கூறி நோயாளிகளை குழப்பிவிடும் வேலையில் இறங்கிவிடுகின்றனர். இவ்வாறு கூறுவதை நம்பியதால் தான் இன்று பல பெண்கள் தங்கள் கர்பப்பையை இழந்துள்ளனர். எந்தவொரு மருத்துவரும் ஆராய்ச்சி நிலையில் இருக்கும் மருந்துக்களைத் தான் உங்களிடம் கொடுத்து பரிசோதனை செய்கிறோம் என்கிற உண்மையை கூறுவதில்லை.        

உண்மையில் சர்க்கரை, தைராய்டு போன்ற வியாதியே இல்லாதபோது எவ்வாறு மக்கள் மத்தியில் இவ்வளவு பிரபலம் ஆகியது?

சர்க்கரை மற்றும் தைராய்டு நோய்களை ஆங்கில மருத்துவத்தை தவிர வேறு எந்த மருத்துவமுறையாலும் பரிசோதனை செய்து பார்க்க இயலாது. 

கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள் ஒவ்வொரு மருத்துவமுறையும் வெவ்வேறு தேசத்தை சார்ந்தவையாக இருக்கும்போது, வெவ்வேறு காலகட்டத்தில் தோன்றியதாக இருக்கும்போது நோயறிதல் முறை மட்டும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்? 

பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருக்கும் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் போன்ற பாரம்பரிய மருத்துவங்கள் கூட இத்தகைய வியாதிகளுக்கு நாடிப்பரிசோதனை மற்றும் பாரம்பரிய முறைகளை ஏன் பின்பற்றுவதில்லை?  

ஒரு நோயை கண்டுபிடிக்கும் முன்னரே அதற்கான மருந்துக்களை மட்டும் எவ்வாறு கண்டுபிடிக்க முடியும். இப்படி ஒரு வியாதியை உருவாக்கியதே ஆங்கில மருத்துவம்தான். ஆங்கில மருத்துவத்திற்கு எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை காட்டிக் கொள்ளவும் தங்களின் இருப்பை நிலைநாட்டிக் கொள்ளவும்தான் எங்களிடமும் சர்க்கரை மற்றும் தைராய்டு போன்ற வியாதிகளுக்கு மருந்துக்கள் உள்ளதாக பரப்புரை செய்ய ஆரம்பித்தார்கள். இல்லாத வியாதிக்கு அங்கீகாரம் கிடைத்தது இவ்வாறுதான். அனைத்து மருத்துவமுறையும் இந்த வியாதிகளின் பெயரை உச்சரிக்கவும் உண்மையில் இப்படி வியாதி இருப்பதாக மக்களும் நம்ப ஆரம்பித்துவிட்டனர். இவர்களுக்கு இடையில் நடைபெறும் அரசியலில் பலியானது என்னவோ பொதுமக்கள்தான்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இன்னும் ஆங்கில மருத்துவத்திலேயே இந்த சர்க்கரை மற்றும் தைராய்டு நோய்களுக்கான ஆராய்ச்சி முடிவு பெறவில்லை. ஒவ்வொரு ஆங்கில மருத்துவரும் தங்களிடம் வரும் நோயாளிகளிடம் சர்க்கரை மற்றும் தைராய்டு போன்றவற்றிற்கு மருந்துகளை பரிந்துரைக்கும் முன் தங்கள் மருத்துவமுறையால் இத்தகைய வியாதிகளை தடுக்கவோ கட்டுப்படுத்தவோ குணப்படுத்தவோ முடியாது என்கிற உண்மையை கூற வேண்டும் என்று அரசாங்க விதியே உள்ளது.

‘மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம்’ 1940 ஷெட்யூல் - ‘J’ என்ற பிரிவின் கீழ் 51 வகை ஆங்கில மருத்துவத்தின் வியாதிகள் எழுதப்பட்டுள்ளன. இந்த வியாதிகள் ஆங்கில மருத்துவத்தின் மருந்துகளைக் கொண்டு குணப்படுத்த முடியும்!’ என்றோ, ‘மருந்துகளைக் கொண்டு குணப்படுத்திக் காட்டுகிறேன்!’ என்றோ கூறுதல் கூடாது என்று எச்சரிக்கிறது.

ஒரு மருந்தை மருத்துவர் வாழ்நாள் முழுக்க எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறார் என்றால் இன்னும் அந்த மருந்து ஆராய்ச்சி நிலையில்தான் உள்ளது என்று அர்த்தம். அப்படிப்பட்ட ஆராய்ச்சிக்கு நீங்கள் மருத்துவ ஆய்வு கூடத்தில் (Lab) உள்ள  எலியைப் போல் இருக்க விரும்பினால் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்காமல் மருந்துக்களை வாங்கி காலத்திற்கும் உட்கொண்டுகொண்டே இருங்கள். அப்படி இல்லை நாங்கள் சிந்திக்க தெரிந்த மனிதர்கள் என்று எண்ணினால் உடலில் என்ன காரணத்தால் உபத்திரவம் ஏற்பட்டிருக்கும் என்கிற கேள்விக்கான விடைகளைத் தேடுங்கள். நிச்சயம் உங்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். நாம் எதை தேடுகிறோமோ அது நிச்சயம் கிடைத்தே தீரும் என்பது தான் இயற்கையின் நியதி.

# நீங்கள் பசியை உணராமல் சாப்பிடும் பழக்கம், டீ மற்றும் காப்பியை அருந்தும் பழக்கத்தினால் உடலில் ஏற்படும் பாதிப்பிற்கு கூட சர்க்கரை நோய் என்று பெயர் வைத்து காலத்திற்கும் உங்களை மருந்து வியாபாரத்தில் ஈடுபடுத்தி இருக்கலாம்.

# இரவு தாமதமாக தூங்கும் பழக்கத்தினால் உடலில் ஏற்படும் பாதிப்பிற்கு கூட ரத்தத்தில் கொழுப்பின் அளவு கூடிவிட்டது, மாரடைப்பு ஏற்பட்டுவிட்டது, பக்கவாதம் ஏற்பட்டுவிட்டது என்று கூறி காலத்திற்கும் உங்களை மருந்து வியாபாரத்தில் ஈடுபடுத்தி இருக்கலாம்.

# இயற்கை காற்றோட்டம் இல்லாத இடத்தில் தூங்குவதால் ஏற்படும் பாதிப்பிற்கு கூட ஆஸ்துமா, மூட்டு வலி, குழந்தையின்மை ஏற்பட்டுவிட்டது என்று கூறி காலத்திற்கும் உங்களை மருந்து வியாபாரத்தில் ஈடுபடுத்தி இருக்கலாம்.


எனவே கவனமாக இருங்கள்.

மனித மனம் எவ்வாறு சிந்திக்கும் என்பதை மருத்துவ வியாபாரிகள் நன்கு அறிந்துவைத்துள்ளனர். ஒருமுறை ஒரு செய்தியை கேட்டால் அது நம் மூளையில் ஒரு செய்தியாகவே பதிவாகும். அதே செய்தியை பலர் வாயிலாக கேட்கும்போதும், பல ரூபங்களில் மறுபடியும் மறுபடியம் அதே செய்தி கேட்கப்படும்போது அச்செய்தி உண்மை என நம் ஆழ்மனதில் பதிவாகிவிடும். ஒருமுறை நம் ஆழ்மனதில் பதிவாகிவிட்டால் அதை நீக்குவது கடினம். அதனால் தான் தவறான பல செய்திகள் நம்மில் திணிக்கப்படுகிறது.

இதில் கொடுமை என்னவென்றால் மருத்துவர் கூட ஒரு வியாதியை பற்றி நம்மிடம் சிறிது நேரம் தான் உரையாடுவார். ஆனால் நாமோ அந்த வியாதியை பற்றிய உண்மையை அறிந்துகொள்ளாமல் உற்றார், உறவினர், மற்றும் நண்பர்களிடமும் அதை  மிகைப்படுத்தி கூறுவதையே வாடிக்கையாக வைத்துள்ளோம்.

மருத்தவர் ஒருமுறை கூறும்போது கூட நமக்கு பெரிய பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால் நமது கற்பனையையும் கலந்து அனைவரிடமும் திருப்பி திருப்பி ஒரு வியாதியின் விளைவுகளைப் பற்றி மிகைப்படுத்தி பகிர்ந்துகொள்வதே நமக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்கிற உண்மையை யாரும் உணர்வதில்லை. 

நல்ல விஷயத்தைச் சற்று மிகைப்படுத்திச் சொல்வதால் பெரிய பாதகம் ஏற்படுவதில்லை. எனவே நல்ல விஷயங்களை மட்டும் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

"கண்ணால் காண்பதும் பொய்,
 காதால் கேட்பதும் பொய்,
 தீர விசாரித்து அறிவதே மெய்"


என்ற உண்மையை உணர்ந்து மக்கள் அனைவரும் பொறுப்புடன் நடந்துக் கொள்ளவேண்டும்.

சில வருடங்களுக்கு முன்பு வரை பாகற்காய் உடலுக்கு நல்லது என்று தான் கூறி வந்தோம் அப்போது நம்மிடம் ஆரோக்கியம் இருந்தது. ஆனால் இன்றோ பாகற்காய் சர்க்கரை நோய்க்கு நல்லது, கேரட் புற்றுநோய்க்கு நல்லது என்று கூற ஆரம்பித்துவிட்டோம். இவ்வாறு ஒவ்வொரு பழங்களையும் காய்கறிகளையும் பற்றி செய்தி வெளியிடும்போது கூட உடலுக்கு நல்லது என்று சொல்வதற்கு பதில் வியாதிக்கு நல்லது என்று கூறி இல்லாத வியாதியின் பெயரை கூட நம் ஆழ்மனதில் விதைக்கிறோம். நாம் எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்யமுடியும் என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே எப்போதும் நோய்களின் பெயரை பயன்படுத்தாமல் இருப்பதே அனைவருக்கும் நன்மை அளிக்கும்.

பல்பொருள் அங்காடிக்கு (Super Market) சென்றால் கூட சாதாரணமாக கிடைக்கக்கூடிய உணவுகளைக் கூட சர்க்கரைக்கு நல்லது ரத்த அழுத்தத்திற்கு நல்லது என்கிற வாசகத்துடன் பலமடங்கு விலையில் விற்பதை பார்க்க முடிகிறது. பழம் விற்கும் வியாபாரிகள் கூட இந்த பழம் உடலுக்கு நல்லது என்று கூறுவதற்கு பதில் இந்த வியாதிக்கு நல்லது என்று கூறி விற்கும் நிலை வந்து விட்டது. நடைபாதை வியாபாரிகள் கூட ஏதேனும் வியாதி பெயரை கூறி ஒரு பொருளை விற்றால் எளிதில் விற்க முடிகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்கள் யாருக்கும் அந்த வியாதியைப் பற்றிய அடிப்படை ஞானம் கூட இருப்பதில்லை. நமது பயத்தையும் அறியாமையையும் வியாபாரிகள் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என்கிற உண்மையை நாம் உணரவேண்டும்.

 


மனிதர்கள் தோன்றிய நாள் முதல் சமீப காலம் வரை தங்களுக்கு கிடைத்த உணவுகளை உண்டு வியாதிகள் குறித்த அச்சமின்றி வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் யாருக்கும்

# ஒரு நாளுக்கு எவ்வளவு நீர் குடிக்க வேண்டும் என்கிற அளவு தெரிந்திருக்கவில்லை.

# உடலில் சர்க்கரை அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்றும் தெரிந்திருக்கவில்லை.

# ரத்த அழுத்தம் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்றும் தெரிந்திருக்கவில்லை.

# தைராய்டு சுரப்பி எவ்வளவு அளவு சுரந்திருக்க வேண்டும் என்று தெரிந்திருக்கவில்லை.

# ரத்தத்தில் கொழுப்பு அளவு பற்றி கவலை கொண்டதில்லை,

# இவ்வளவு உயரத்திற்கு இவ்வளவு எடை இருக்க வேண்டும் என்று தெரிந்திருக்கவில்லை.

# சமச்சீர் உணவு என்றால் என்ன என்று கூட தெரியாமல் தான் வாழ்ந்து வந்தார்கள்.

# உண்ண உணவு கிடைக்காமல் பசி பட்டினியில் வாடி இறந்தவர்கள் தான் அதிகமே தவிர கிடைத்த உணவுகளை கண்டு பயந்து இறந்ததில்லை.

# வயிற்றில் இருக்கும் குழந்தை தங்க வேண்டும் என்று எந்தவித மருந்துக்களையும் உண்டதில்லை. ஆனாலும் பல குழந்தைகளை பெற்றெடுத்தார்கள்.

# BMI (Body Mass Index) என்றால் என்ன என்று கூட தெரிந்திருக்கவில்லை.


மருத்துவ அறிவியல் வளர்ச்சி அடையாதவரை நாம் ஆரோக்கியமாக தான் வாழ்ந்து வந்துள்ளோம். காரணம் அதுநாள் வரை நாம் உடலின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து வந்ததே.

இவ்வுலகில் ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தனியே ஒரு மருத்துவ ஆலோசகர் உண்டு. அவர் நம்மிடம் எந்தவித கட்டணத்தையும் கேட்பதில்லை. அவர் இலவசமாக கூறும் அறிவுரையை பின்பற்றும்வரை நம் உடலிற்கு எந்த தீங்கும் ஏற்படுவதில்லை. அவர் பரிந்துரைக்கும் உணவுகளை உட்கொள்ளுபவர்கள் ஆரோக்கியமாக வாழ்கின்றனர். அந்த மருத்துவ ஆலோசகர் நமக்கு தேவையானதை உணர்வுகள் மூலம் வெளிப்படுத்துவார். அந்த மருத்துவ ஆலோசகர் வேறு யாருமல்ல நம் உடலின் அறிவுதான்.

அறிவியல் என்றால் என்ன?

இந்த உலகில் நம்மை சுற்றி நடைபெறும் நிகழ்வுகள் ஏன்? எதற்கு? எவ்வாறு? ஏற்படுகின்றது என்கிற அடிப்படை காரணத்தை விளக்குவதே அறிவியல். 

இந்த அறிவியலின் உதவி கொண்டு தான் மின்விசிறி முதற்கொண்டு விமானம் வரை இயங்குகிறது. இந்தியாவில் இருந்து கொண்டே அமெரிக்காவில் இருக்கும் ஒருவரிடம் எளிதாக உரையாடும் அளவிற்கு அறிவியல் இன்று வளர்ந்துவிட்டது. பல துறைகளில் இந்த அறிவியல் வளர்ச்சி பல நன்மைகளை செய்து வருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மைதான்.

ஆனால் மருத்துவ துறையில் அவ்வாறு நிகழவில்லை, காரணம் நம் உடலின் அடிப்படை இயக்கத்தை புரிந்துகொள்ளாமல் இருப்பதே. இந்த புரிதலின்மையே இன்று செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள பல வியாதிகளுக்கு அடிப்படை காரணமாக அமைந்துவிட்டது. நாம் பார்க்கும் பார்வைக்கு ஏற்றார்போல் தான் நடப்பவை தெரியும் என்பார்கள்.

சிறு வயதில் படித்த கதை இன்றைய மருத்துவ அறிவியல் எவ்வாறு இயங்குகிறது என்பதை புரிந்துகொள்ள உதவும் என நம்புகிறேன். ஒரு ஆராய்ச்சியாளர் ஒரு தவளையை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.

தவளையை மேசை மீது வைத்து ஜம்ப் என்று கத்தினார், தவளை பாய்ந்தது, அளந்து பார்த்தார், 4அடி.

குறிப்பு எழுதினார்: நாலு கால் உள்ள தவளை ஜம்ப என்று சொன்னால் 4அடி பாயும். பின், தவளையின் ஒரு காலை வெட்டிவிட்டு, ஜம்ப் என்று கத்தினார், தவளை பாய்ந்தது, அளந்து பார்த்தார், 3அடி.

குறிப்பு எழுதினார்: மூன்று கால் உள்ள தவளை ஜம்ப என்று சொன்னால் 3அடி பாயும். பின், தவளையின் மற்ற ஒரு காலை வெட்டிவிட்டு, ஜம்ப் என்று கத்தினார், தவளை பாய்ந்தது, அளந்து பார்த்தார், 2அடி.

குறிப்பு எழுதினார்: இரண்டு கால் உள்ள தவளை ஜம்ப என்று சொன்னால் 2அடி பாயும்.பின், தவளையின் நான்காவது காலையும் வெட்டிவிட்டு, ஜம்ப் என்று கத்தினார், தவளை பாயவில்லை, திரும்பவும் கத்தினார், தவளை பாயவே இல்லை.

குறிப்பு எழுதினார்: தவளையின் கால்களை வெட்ட வெட்ட தவளை தன் கேட்கும் தன்மையை இழந்து செவிடாகி விட்டது. எனவே நான்கு காலையும் வெட்டினால் தவளைக்கு காது கேட்காது.

இந்த ஆராய்ச்சியாளரின் பார்வையில்தான் இன்றைய மருத்துவ உலகம் இயங்கிக்கொண்டு இருக்கிறது. சுயமாக சிந்திக்க தெரிந்தவர்கள் தவளையின் அனைத்து கால்களையும் வெட்டி விட்டால் அந்த தவளையால் எப்படி குதிக்க இயலும் என்கிற கேள்வியை கேட்பர். ஏன் எதற்கு என்று மறுகேள்வி கேட்காதவர்கள் மற்றும் கேட்கத்தெரியாதவர்கள் அவற்றை அப்படியே உள்வாங்கிக்கொள்வர். இத்தகையவர்களுக்குத் தான் பாதிப்பு ஏற்படுகிறது.

உதாரணமாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சராசரியாக ஒரு நாளிற்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்துகின்றனர். இதை மறுகேள்வியின்றி பலர் பின்பற்றி வருகின்றோம். இந்த சராசரி கணக்கு என்ன அடிப்படையில் நமக்கு உதவும் என்று அலசிப் பார்த்தாலே புரிந்துவிடும். இந்த சராசரி அளவு குளிர்பிரதேசத்தில் வாழ்பவர்கள், வெயில் பிரதேசத்தில் வாழ்பவர்கள், நெற்றி வியர்வை சிந்தி உழைப்பவர்கள், குளிர்சாதன அறையில் வாழ்பவர்கள் என்கிற பாகுபாடின்றி குளிர் காலம், வெயில் காலம் என அனைத்து காலத்திற்கும் பொருந்தும் என்கின்றனர்.

கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள் குளிர்காலங்களில் நமக்கு நீர் தேவை அதிகமாக இருக்காது அதே நேரத்தில்  வெயில் காலங்களில் வியர்வை மூலம் உடலின் நீர் வெளியேறுவதால் அதிக அளவில் நீர் தேவைப்படும். அதே போல் உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் அதிக நேரம் வெயிலில் அலைபவர்களுக்கு நீர் அதிகமாக தேவைப்படும். குளிர் பிரதேசங்களில் வாழ்பவர்களுக்கு அதிக அளவில் நீர் தேவைப்படாது. ஆனால் விஞ்ஞானிகளின் பார்வையில் அனைவரும் சமம்.

நீரின் தேவை குறைவாக இருப்பவர்கள் அதிக அளவில் நீரை அருந்துவதால் அவர்களின் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். மருத்துவமனைகளில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது எனக் கூறி ஒரு நாளைக்கு ¼ லிட்டர் தண்ணீர் தான் அருந்தவேண்டும் என்று அறிவுருத்தப்படும்போது நீரின் தேவை அதிகமாக இருப்பவர்கள் குறைந்த அளவில் நீரை அருந்துவதால் அவர்களின் சிறுநீரகங்களும் பாதிக்கப்படுகிறது.

தவளையை வைத்து ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளால் உடலின் அடிப்படை இயக்கத்தை புரிந்துக்கொள்ள முடிவதில்லை. அதனாலேயே சராசரியாக இவ்வளவு சத்துக்கள் தான் உடலிற்கு தேவைப்படும் என்றும் பட்டியல்களையும் அவ்வப்போது வெளியிடுகின்றனர். இவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டு பின்பற்றும் பாமர மக்கள் உடலில் உள்ள உறுப்புக்கள் ஒவ்வொன்றாக செயலிழந்துவிட்டது என்று வைத்தியம் பார்த்து வருகின்றனர்.

BMI (Body Mass Index) அதாவது உயரத்திற்கு ஏற்ற எடை தான் ஒருவரது உடல் எடை இருக்கவேண்டும் என்கிற கருத்தினை மக்களிடம் திணிக்கப்பட்டு வருகிறது. 99 சதவிகிதம் மக்கள் இந்த BMI படி இருக்க மாட்டார்கள் கொஞ்சம் அதிகமாகவோ குறைவாகவோ தான் இருப்பார்கள். இதனை அறிந்துகொண்ட நாள் முதல் நிம்மதியை தொலைத்தவர்கள் பலர். உடலும் மனமும் சேர்ந்துதான் ஆரோக்கியம் என்பதை தெரிந்து கொண்டதாலோ என்னவோ நமது மன அமைதியை குலைப்பதற்காக பல வித முயற்சிகளில் இறங்கியுள்ளது இன்றைய வியாபாரமயமான மருத்துவ உலகம். 

விபத்து போன்ற அசாதாரணமான நேரங்களில் உதவும் CT Scan மற்றும் MRI Scan போன்றவை கூட நமது தினசரி வாழ்க்கைமுறை தவறுகளால் ஏற்படும் உபத்திரவங்களுக்கு எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்துகிறது.

எனது உறவினர் குடும்பத்தில் நடந்த சம்பவம் இதை புரியவைக்க உதவும் என நம்புகிறேன். எனது உறவினர் குடும்பம் துபாயில் வசித்து வந்தது. அவரது மகளுக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது எனவும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் அங்குள்ள மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  பின்னர் வேலூரில் உள்ள பிரபல புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்திற்கு வந்து தங்கி அறுவைசிகிச்சை மேற்கொண்டுள்ளனர். பிறகு புற்றுநோய் உடல் முழுவதும் பரவிவிட்டது என்று கூறிய மருத்துவர் ஒரு கணிசமான தொகையை கட்டணமாக கட்டி சிகிச்சையை தொடருமாறு வலியுறுத்தியுள்ளனர். அவ்வாறு சிகிச்சையை தொடராத பட்சத்தில் 6 மாதத்தில் இறந்து விடுவாள் என்று எச்சரித்தும் / பயமுறுத்தியும் உள்ளனர் அந்த சூழ்நிலையில் அவர்களால் அவ்வளவு பெரிய தொகையை ஏற்பாடு செய்ய இயலவில்லை.

பணம் இல்லாவிட்டால் தான் நாம் சிந்திக்க ஆரம்பித்து விடுவோமே. அவ்வாறு சிந்திக்கையில் அவர்களுக்கு தோன்றியது “நமது பிறப்பையும் இறப்பையும் தீர்மானிப்பது இறைவன் தானே! ஒரு மருத்துவரால் எப்படி நமது இறப்பை துல்லியமாக கணிக்க முடியும்?”. இறைவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டு தங்கள் மகளை தங்கள் சொந்த ஊரான நாகர்கோவிலுக்கே அழைத்து வந்து விட்டனர். இது நடந்து 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்றுவரை அவரது மகள் எந்தவித பரிசோதனையும் மேற்கொள்ளாமல் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறாள். மருத்துவ செலவிற்காக ஒதுக்கிய பணத்தில் ஒரு பெரிய வீட்டையே கட்டி அதில் தான் அந்த குடும்பமே வசித்து வருகிறார்கள்.

எனவே தேவையற்ற பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் அறிவுரைகளை பின்பற்றுவதற்கு பதில் நமது பிரதான மருத்துவரான உடலின் உணர்வுகளை பின்பற்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.

 

சமீபகாலமாக பலர் பின்தொடர்தல் என்கிற வார்த்தையை பரவலாக உபயோகப்படுத்துவதை காணமுடிகிறது. பலர் என்னை தொடர்பு கொள்ளும்போது முதலில் “I am your follower” “நான் உங்களை பின்தொடர்கிறேன்” என்று பெருமையாக கூறுவார்கள். ஆரம்பத்தில் நானும் முகநூலில் உடலின் இயக்கத்தை பற்றி தெளிவாக விளக்கியுள்ளோமே அதனை புரிந்துகொண்டு தங்கள் வாழ்வில் நடைமுறைபடுத்தி ஆரோக்கியமாக வாழ்ந்து வருகின்றனர் என்று எண்ணிக்கொண்டு இருந்தேன். பின்னர் அவரவர் உடலின் நீண்டகாலமாக தொடர்ந்துகொண்டு இருக்கும் பிரச்சினைகளை கூற ஆரம்பிப்பார்கள்.

உடலின் இயக்கத்தை புரிந்துகொண்டு வாழும் நபர்களுக்கு எவ்வாறு உடலின் உபத்திரவங்கள் தொடர்ந்துகொண்டு இருக்க முடியும் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கும். பின்னர்தான் புரிந்துகொண்டேன் இத்தகையவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப தங்கள் வாழ்வியல் முறையில் சிலவற்றை மட்டும் திருத்திக் கொண்டு பலவற்றை திருத்திக்கொள்ளாமல் வெறுமனே நான் உங்களை பின்தொடர்கிறேன் என்று கூறுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார்கள் என்று... இதனை நான் காரணமின்றி கூறவில்லை.

சில உதாரணங்களை காண்போம்...

சிலர் எனது உடல் எப்போதும் அதிக வெப்பத்துடன் இருக்கிறது என்று கேள்வி கேட்டு இருப்பார்கள். அவர் அந்த கேள்வியை கேட்ட நேரத்தை பார்த்தால் இரவு 11.30 என இருக்கும். இவரது பிரச்சினைக்கு காரணம் இரவு தாமதமாக தூங்குவது தான். இவர் தன் வாழ்வியல் முறையில் பின்பற்றி வந்த பல தவறுகளை திருத்தி இருப்பார் ஆனால் இரவு தாமதமாக தூங்க செல்லும் பழக்கத்தை மட்டும் மாற்றாமல் இருந்து கொண்டு எனது பிரச்சனை தொடர்ந்துகொண்டே இருக்கிறது என்று கூறுவார்.

சிலர் டீ மற்றும் காப்பி குடிக்கும் பழக்கத்தை மட்டும் திருத்திக்கொள்ளாமல் தன் வாழ்வியல் முறையில் பின்பற்றி வந்த மற்ற அனைத்து தவறுகளையும் திருத்திக் கொண்டு இருப்பார்கள். ஆனாலும் அவர்களது உடலில் ஏற்படும் உபத்திரவங்கள் மட்டும் தொடர்ந்துகொண்டே இருக்கும். காரணம் இந்த டீ மற்றும் காப்பி அருந்தும் பழக்கம் தான் அவர்கள் உடலில் ஏற்படும் உபத்திரவத்திற்கு அடிப்படை காரணமாக இருந்திருக்கும். அதனை மட்டும் விட மனமில்லாமல் தொடர்ந்து கொண்டே இருப்பர்.

சிலர் நான் ஆங்கில மருத்துவத்தை நிறுத்திவிட்டேன் ஆனாலும் என் உடலில் ஏற்பட்ட உபத்திரவங்கள் விடுபடவில்லை எனக் கூறுவார்கள். இத்தகையவர்கள் வெறுமனே ஆங்கில மருந்துக்களை உட்கொள்ளுவதை நிறுத்திவிட்டேன் என்று கூறுவார்களே தவிர தங்கள் உடலில் என்ன காரணத்திற்காக உபத்திரவம் ஏற்பட்டது என்கிற காரணத்தை ஆராய்ந்து அதனை தங்கள் வாழ்வியல் முறையில் திருத்தி இருக்க மாட்டார்கள்.

சிலர் தினமும் அலாரம் வைத்துக்கொண்டு பாதியில் தங்கள் தூக்கத்தை கலைத்துக்கொண்டு எழுவதையே வாடிக்கையாக வைத்து இருப்பர். இத்தகையவர்கள் கூறுவார்கள் நான் தினமும் அதிகாலையிலே எழுந்து நடைபயிற்சி, யோகா போன்றவற்றை மேற்கொள்கிறேன். டீ காப்பி போன்று எந்த பழக்கமும் எனக்கு கிடையாது. ஆனாலும் எனது உடலில் உபத்திரவங்கள் தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது என்பர். அதிகாலை எழுந்து நடைபயிற்சி, யோகா போன்றவற்றை மேற்கொள்வது நல்லதுதான் என்றாலும் அலாரம் வைத்து எழுந்திருக்காமல் இரவு சீக்கிரம் தூங்கச் சென்று அதிகாலை எழவேண்டும் என்பதை மனதில் பதிய வைக்க வேண்டும். அப்போதுதான் உடலின் பராமரிப்பு வேலைகள் அனைத்தும் முற்றுபெற்று தானாகவே அந்த நேரத்தில் தூக்கம் கலைந்து உற்சாகமாக அந்த நாள் தொடங்கும்.

சிலர் நான் சித்த வைத்தியத்தை தான் பார்க்கிறேன், ஆயுர்வேத மருந்துக்களை தான் உட்கொள்கிறேன் என்று பெருமையாகக் கூறுவார்கள். ஆனாலும் தங்கள் உடல் உபாதைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது என்று வருத்தப்படுவர். நம் உடலில் ஏற்படும் அனைத்து உபத்திரவங்களுக்கும் ஒரு காரணம் இருக்கும் அதனை அறிந்துகொண்டு சரிசெய்யாமல் வெறுமனே வைத்தியத்தை மட்டும் மேற்கொள்வதால் முழுமையான பலன் கிடைப்பதில்லை. இத்தகைய மருத்துவத்தை மேற்கொள்ளும்போது

# டீ காப்பி போன்ற போதை பொருட்களை உபயோகப்படுத்தக் கூடாது,

# இயற்கையான காற்றோட்டம் உள்ள இடத்தில் தூங்க வேண்டும்,

# இரவு சீக்கிரம் தூங்க வேண்டும்,


இதுபோன்ற அடிப்படை விதிகளை நாம் பின்பற்ற வேண்டும். அப்படி இல்லையென்றால் எந்த மருத்துவமும் நமக்கு போதிய பலனை தராது.

எனவே மற்றவர்கள் கூறுவதை பின்தொடராமல் உங்கள் உணர்வுகளை மட்டும் பின்தொடரும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.


நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?

நமது உடல் தான் நமது மருத்துவர் என்று பலருக்கு தெரிவதில்லை. சிலர் நீங்கள் கூறுவதை எல்லாம் நான் பின்பற்றுகிறேன் ஆனாலும்

# எனக்கு சர்க்கரை அளவு இவ்வளவு இருக்கிறது,

# ரத்த அழுத்தம் இவ்வளவு இருக்கிறது,

# ரத்தத்தில் கொழுப்பின் அளவு இவ்வளவு இருக்கிறது,

# உடல் எடை இவ்வளவு இருக்கிறது,

# தைராய்டு அளவு இவ்வளவு இருக்கிறது


என்று கூறுவர். ஆரோக்கியமாக வாழ்வதற்கும் இத்தகைய பரிசோதனைகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தான் காலம் காலமாக கூறி வந்திருக்கிறேன். உடலும் மனதும் சேர்ந்ததுதான் ஆரோக்கியம். மனதளவில் இத்தகைய பரிசோதனைகளை உண்மை என்று நம்புவது தான் பிரச்சனையே.

நமது உடல் தான் மருத்துவர் என்கிற உண்மையை நாம் நம்புகிறோமோ இல்லையோ இன்றைய வியாபார மருத்துவ உலகம் இதனை நம்புகிறது. அதனால் தான் நமக்கு பிடித்தமான உணவுகளை பிடித்தமான சுவைகளை உண்ணக்கூடாது என்கிற பிரச்சாரத்தை மேற்கொள்கிறது. எனவே அத்தகைய வியாபார நோக்கத்துடன் பரப்பப்படும் பிரசாரங்களை நம்பி ஏமாறாதீர்கள். நமது உடல் தான் மருத்துவர் என்கிற உண்மையை புரிந்துகொண்டு உங்கள் உடலின் உணர்வுகளுக்கு மட்டும் மதிப்புகொடுத்து உங்கள் ஆரோக்கியத்தை நிலைநாட்டுங்கள்.



நாம் ஆரோக்கியமாக வாழ விரும்பினால் நம் உடலின் இயக்கத்திற்கு போதிய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ பல நேரங்களில் நமது அறியாமை காரணமாக நாமே நமது உடலின் இயக்கத்திற்கு தடையாக இருந்துவிடுகிறோம். குறிப்பாக நம் உடலின் பராமரிப்பு மற்றும் கழிவு வெளியேற்றத்திற்கு தடையாக இருந்துவிட்டு வியாதிகள் பெருகிவிட்டதே என்று புலம்பிக்கொண்டே இருக்கிறோம்.

கழிவின் தேக்கமே வியாதி
கழிவின் வெளியேற்றமே குணம்


அதைப்போல உடல் கேட்கும் சுவையை கேட்கும் நேரத்தில் கொடுக்காமல் இருப்பதே பலகீனத்திற்கு காரணம்.

உணவில் ஆறு சுவைகள் [இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு (காரம்), உவர்ப்பு (உப்பு), கசப்பு] உள்ளது. ஒவ்வொரு சுவையும் ஒவ்வொரு உறுப்பிற்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.

இனிப்பு – இரைப்பை (Stomach)

புளிப்பு – கல்லீரல் (Liver)

துவர்ப்பு – மண்ணீரல் (Spleen)

கார்ப்பு – நுரையீரல் (Lungs)

உவர்ப்பு – சிறுநீரகம் (Kidney)

கசப்பு – இதயம் (Heart)


எப்போது இத்தகைய உறுப்பிற்கு ஆற்றல் குறைகிறதோ அப்போதுதான் அந்தந்த சுவையுடைய உணவுகளின் மீது நமக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. எனவே உங்களுக்கு எந்த நேரத்தில் எந்த சுவையுடைய உணவை உண்ண வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதே அதனை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். யாருக்காகவும் எந்த சுவையையும் தவிர்க்க வேண்டும் என்கிற அவசியமில்லை என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.

நமது வாகனத்தின் டயர் பஞ்சர் ஆகிவிட்டது என்று வைத்துக்கொள்வோம். எப்போது டயரில் ஏற்பட்ட ஓட்டை தான் காரணம் என்று கண்டுபிடித்து அதனை அடைக்கிறோமோ அப்போது தான் அதற்கு ஒரு நிலையான தீர்வு கிடைக்கும்.

அதைப்போல தான் நமது உடலில் ஏற்படும் ஒவ்வோர் உபத்திரவத்திற்கும் ஒவ்வோர் காரணம் இருக்கும். நாம் அந்த காரணத்தை கண்டுபிடித்து அதனை சரிசெய்ய முயற்சிக்காமல் மருத்துவமனை சென்று மருந்துக்களை மட்டும் மறுபடியும் மறுபடியும் காலத்திற்கும் ஏன் என்கிற மறுகேள்வியின்றி எடுத்துக்கொண்டே இருக்கிறோம். இந்த லட்சணத்தில் இவ்வுலகில் வியாதிகள் பெருகிவிட்டது என்று வேறு இறைவனிடம் மன்றாடிக்கொண்டிருக்கிறோம். இனிமேலாவது நமது உடலில் ஏற்படும் உபத்திரவத்திற்கு உண்மையான காரணம் என்ன என்று தேடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். நாம் எதை தேடுகிறோமோ அது கிடைத்தே தீரும் என்பதுதான் இயற்கையின் நியதி.

பெரும்பாலானோர் நம்பும் மருத்துவ பரிசோதனைகள் கூட நமது உடலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிப்பதில்லை என்கிற உண்மையை கூட பலர் தெரிந்துவைத்திருக்கவில்லை என்பது ஒரு வருத்தமான செய்தி தான். இத்தகைய பரிசோதனைகள் மருந்து வியாபாரத்தை தான் ஊக்குவிக்கிறதே தவிர ஆரோக்கியத்தை அல்ல.


விபத்து போன்ற புறக்காரணங்களால் ஏற்படும் பாதிப்புக்கள் தவிர்த்து நம் உடலில் தோன்றும் அனைத்து உபத்திரவங்களுக்கும் நமது அறியாமையே காரணம். இறைவன் படைப்பில் ஒவ்வோர் உயிரினதிற்க்கும் தன்னுள் ஏற்படும் பாதிப்புக்களை சரிசெய்யும் ஆற்றல் உள்ளது. அதற்கு நமது உடலின் இயக்கத்திற்கு போதிய ஒத்துழைப்பு கொடுத்தாலே போதுமானது.

உதாரணமாக

# ஆடு தன் உடலில் ஏற்படும் பிணிக்கு தேவைப்படும் புல்லை சாப்பிடுவதன் மூலமும் ஓய்வு எடுப்பதன் மூலமும் குணப்படுத்திக்கொள்கிறது.

# காலில் அடிபட்ட நாய் கூட அடிபட்ட காலிற்கு சிறிது காலம் எந்தவித வேலையும் கொடுக்காமல் போதிய ஓய்வு கொடுப்பதன் மூலமாக குணப்படுத்திக்கொள்கிறது.

# பூனை தன் உடலில் ஏற்படும் காயத்தை தன் நாவால் நக்கியே குணப்படுத்திக்கொள்கிறது.


ஆறறிவு படைத்த நாம் தான் இதனை புரிந்துகொள்ளாமல் உடலின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் உடலே தன்னைத்தானே குணப்படுதிக்கொள்ளும் செயல்முறைகளை வியாதிகள் என பெயர் வைத்து தடுத்துவிடுகிறோம்.

நமது உடலின் இயக்கத்தை பஞ்சபூத தத்துவத்தின் அடிப்படையில் எளிதில் புரிந்து கொள்ளலாம். பஞ்சபூதங்கள் என்பது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்றவற்றை உள்ளடக்கியது. ஒவ்வொரு பஞ்சபூதமும் நமது உடலின் ஒரு வெளியுறுப்பையும் இரண்டு உள்ளுறுப்பையும் குறிக்கின்றது. ஒவ்வொரு பஞ்சபூதமும் என்னென்ன உள்ளுறுப்பு மற்றும் வெளியுறுப்பை உணர்த்துகிறது என்பதை பார்ப்போம்.


நெருப்பு பஞ்சபூதம்

வெளியுறுப்பு - நாக்கு

உள்ளுறுப்பு - இருதயம், சிறுகுடல்


நிலம் பஞ்சபூதம்

வெளியுறுப்பு - உதடு

உள்ளுறுப்பு - மண்ணீரல், இறைப்பை


காற்று பஞ்சபூதம்

வெளியுறுப்பு - மூக்கு

உள்ளுறுப்பு - நுரையீரல், பெருங்குடல்


நீர் பஞ்சபூதம்

வெளியுறுப்பு - காது

உள்ளுறுப்பு - சிறுநீரகம், சிறுநீர்ப்பை


ஆகாயம் பஞ்சபூதம்

வெளியுறுப்பு - கண்

உள்ளுறுப்பு - கல்லீரல், பித்தப்பை


இவற்றை நான் ஏற்கனவே சில விடியோ பதிவுகள் மூலம் தெளிவாக விளக்கியுள்ளேன். அவற்றை கீழ்க்கண்ட YouTube முகவரிக்கு சென்று தெரிந்துக்கொள்ளலாம்


நோயறிதல் முறையை பற்றி தெரிந்துகொள்ள

https://youtu.be/1UTirXCPoAc



நெருப்பு என்னும் பஞ்சபூதம் மூலம் நோயறிதல்

https://youtu.be/_7DQrzTjVXY



நிலம் என்னும் பஞ்சபூதம் மூலம் நோயறிதல்

https://youtu.be/h-T9gBx_pbg



காற்று என்னும் பஞ்சபூதம் மூலம் நோயறிதல்

https://youtu.be/hR9sTc7X9oY

https://youtu.be/IaYfKcABQJo



நீர் என்னும் பஞ்சபூதம் மூலம் நோயறிதல்

https://youtu.be/DlXHuMkyvgc

https://youtu.be/A2O-cwffgqI



ஆகாயம் / மரம் என்னும் பஞ்சபூதம் மூலம் நோயறிதல்

https://youtu.be/7qMO-QqgkDM



ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் “எப்போதும் நம்மிடம் இருக்கும் ஒரு பொருளை வேறு எந்த இடத்தில் தேடினாலும் கிடைக்காது”. நமது உடலும் மனதும் சேர்ந்ததுதான் ஆரோக்கியம். அப்படிப்பட்ட ஆரோக்கியத்தை நம்மிடமே வைத்துக்கொண்டு அதை வெளியில் தேடினால் எப்படி கிடைக்கும்?


இந்த பதிவை நண்பர்களிடம் Pdf file அதாவது Printable Format ஆக பகிர்ந்துகொள்ள https://goo.gl/EnTJTL

டீ காப்பி என்பது பலரால் விரும்பி குடிக்கப்படும் ஒரு உற்சாக பானமாக திகழ்ந்து வருகிறது. அனைவரும் இதனை வீட்டிலேயே தயாரித்து குடும்பமாக பருகி வருகிறோம். அதில் இருக்கும் சாதகங்களை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அதிலிருக்கும் பாதகங்களை நாம் அறிந்திருக்கவில்லை. அதனை பற்றி அலசுவதே இந்த ஆடியோ பதிவின் நோக்கம்.

மருத்துவம் என்றால் என்ன?

 நமது உடலில் ஏற்படும் தொந்தரவுகளுக்கான உண்மையான காரணத்தை ஆராயாமல் உடலில் ஏற்படும் அறிகுறிகளை வைத்து தாங்கள் கற்றுக்கொண்ட மருத்துவமுறை மூலம் சிகிச்சையளித்து  தற்காலிக நிவாரணத்தை கொடுப்பது மருத்துவம்.


ஆரோக்கியம் என்றால் என்ன?

 நமது உடலின் தேவைகளை உணர்வுகள் மூலம் வெளிப்படுத்தும். அதனை சரியாக புரிந்துகொண்டு நிறைவேற்றுவதே ஆரோக்கியம். நமது உடலில் ஏற்படும் பிரச்சினைக்கான உண்மையான காரணத்தை ஆராய்ந்து அதனை சரிசெய்து நிரந்தரமான தீர்வை பெறுவது ஆரோக்கியம்.

நாம் அன்பாக இருந்தால் செல்லப்பிராணிகளிடம் இருந்தும் சகமனிதர்களிடம் இருந்தும் ஆற்றலை பெறமுடியும்.

 # நீங்கள் ஆரோக்கியமாக வாழ விரும்பினால் இன்று முதல் உங்களுக்கு பிடித்தமான உணவுகளை மட்டும் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.



# நாம் வசிக்கும் இடங்களில் சுத்தமான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கொசு தொந்தரவு இருக்கும் பட்சத்தில் ரசாயன கொசுவிரட்டிகள் பயன்படுத்தாமல் காற்று வந்துபோகக்கூடிய கொசு வலைகளை பயன்படுத்தி ஜன்னல்களை திறந்து வைத்து தூங்க வேண்டும். ஏனென்றால் நம் உடலில் ஏற்படும் பல இன்னல்களுக்கு அடிப்படை காரணமே அசுத்த காற்று நிறைந்த இடத்தில் வசிப்பது தான்.  

# பசியை உணர்ந்து, பசி ஏற்படும் போதுதான் சாப்பிடவேண்டும். பசி இல்லாத போது நேரத்தைப் பார்த்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

# பசிக்கிற அளவிற்குத் தகுந்தவாறு உண்ணுகிற உணவின் அளவை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரே மாதிரியான பசி எப்போதும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

# மனதிற்கு பிடித்த உணவுகளை மட்டும் ரசித்து ருசித்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். 

# டீ மற்றும் காப்பி போன்றவை உணவல்ல போதைப்பொருள் என்பதை நினைவில் கொண்டு அதனை தவிர்த்திடுங்கள். (இதுபற்றி இந்த https://youtu.be/TkvkJozBpQc முகவரியில்  “டீ காப்பி நமக்கு தேவைதானா?” என்னும் தலைப்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.)

# உடல் கேட்கும் ஓய்விற்கும் தூக்கத்திற்க்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம். இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரைக்கும் தூங்க வேண்டிய அவசியமான நேரமாகும். இந்த நேரத்தில் தான் உடலில் எதிர்ப்பு சக்தி நோயெதிர்ப்பு வேலையை முழு வீச்சில் மேற்கொள்கிறது.

# இரவில் தூங்குவதற்கு பதிலாக பகலில் தூங்கி கணக்கை சரிசெய்து கொள்ள முடியாது. ஏனென்றால் உடலின் நச்சுத்தன்மையை அகற்றும் வேலையும், ஒவ்வொரு உள்ளுறுப்பையும் சீரமைக்கும் வேலையும், ஒவ்வொரு உயிரணுவும் வளர்ச்சியடையும் வேலையும் இரவுகளில்தான் முழுமையாக நடைபெறுகின்றன. எனவே இரவு நேரத்தில் தூங்குவது ஆரோக்கியத்தின் அடிப்படைத் தேவை.



நாம் எப்பொழுது நிம்மதியாக வாழ்கிறோமோ அப்பொழுது நமது உடல் தன்னைத்தானே பராமரித்துக் கொள்வதில் எந்தவித தடையும் ஏற்படுவதில்லை. நாம் எப்பொழுது நிம்மதி இல்லாமல் வாழ்கிறோமோ அப்போது உடல் தன்னைத்தானே வருத்திக்கொள்கிறது. கவலை, மனவருத்தம், பயம், கோபம், விரக்தி போன்ற எண்ணங்கள் நமது உடலின் பராமரிப்பு சக்தியை தீர்த்துவிடுகிறது. 

எனவே நிம்மதியாக வாழ்வதற்காக நேரங்களை ஒதுக்குவோம். பலர் பணத்திற்காக புகழுக்காக, பதவிக்காக, கெளரவத்திற்க்காக தங்கள் நிம்மதியை இழக்கிறார்கள். ஆனால் நிம்மதிக்காக பணம், புகழ், அந்தஸ்து என்று எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஏனென்றால் நம்முடைய ஆரோக்கியம், நிம்மதி இதைவிடப் பெரிதல்லவா? 

# அன்பான பேச்சுக்களை கேட்கும்போதும், 

# பிடித்தமான உணவுகளை உண்ணும்போதும், 

# பிடித்தமான இசை மற்றும் பாடல்களை கேட்கும்போதும்,  

# பிடித்தமான நகைச்சுவை மற்றும் திரைப்படங்களை பார்க்கும்போதும்,

# பிடித்தமான இடங்களுக்கு சுற்றுலா செல்லும்போதும், 

# பிடித்தமானவர்களிடம் நேரத்தை செலவிடும்போதும்,

# பிடித்தமான பொழுதுபோக்கில் ஈடுபடும்போதும், 

# நல்லதை பார்க்கும்போது, கேட்கும்போதும், சிந்திக்கும்போதும்,

# அடுத்தவர்களுக்கு உதவும்போதும், 

# நேர்மையாக வாழும்போதும்,

# சுயநலமில்லாத வாழ்க்கை வாழும்போதும்,

... நமது மனது சந்தோஷப்படுகிறது. அவ்வாறு மகிழ்ச்சியாக இருந்தால் நமது உடலின் பராமரிப்பு வேலையும் தடையில்லாமல் நடைபெறும் மேலும் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!


ஆரோக்கியமாக வாழ விரும்பினால் மருத்துவத்தை தேடுவதை விட்டுவிட்டு ஆரோக்கியத்தை தேடுங்கள். இன்று முதல் உங்களுக்கு பிடித்தமான உணவுகளை மட்டும் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். 

நம் தவறான வாழ்க்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தரமான தீர்வை தர இயலாது. மருந்துக்களையோ மருத்துவரையோ தேடுவதற்கு பதில் வியாதிக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்வதே சிறப்பானதாகும்.

நல்லதை சொல்ல வேண்டியது எனது கடமை. அதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் உரிமை. என்னிடம் மருந்துக்களை எதிர்பார்க்காதீர்கள் ஆரோக்கியத்தை மட்டும் எதிர்பாருங்கள். ஆரோக்கியமாக வாழ வழிகாட்டி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காகவே இந்த முகநூல் பக்கம் மற்றும் குழுவினை உருவாக்கியுள்ளேன்.


மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:

http://reghahealthcare.blogspot.in

https://www.facebook.com/ReghaHealthCare

https://www.facebook.com/groups/reghahealthcare

https://www.facebook.com/groups/811220052306876


முக்கிய குறிப்பு:

இரவு 9 மணி முதல் காலை வரை தூக்கம் தடைபடாமல் இருக்க எனது தொடர்பு எண்களை Silent Mode இற்கு மாற்றிவிடுவேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அந்த நேரத்தில் நீங்களும் தூங்கச் சென்று உங்களது ஆரோக்கியத்தையும் உறுதிசெய்து கொள்ளுங்கள்.

ஆங்கில மருந்துக்கள், டீ, காப்பி, கஞ்சா உட்கொள்ளுதல், புகை பிடித்தல், மது அருந்துதல், புகையிலை, பாக்கு, மூக்குப்பொடி போன்ற போதை பழக்கத்தை விடுவதற்கு தயாராக உள்ளவர்கள் என்னை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம். 

மேலும் பொறுமையாக இருப்பவர்கள், நேர்மையாக வாழ்பவர்கள், அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாதவர்கள் மற்றும் மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் மட்டும் இந்த எண்கள் +919840980224, +919750956398 மற்றும் vineeth3d@gmail.com க்கு தொடர்பு கொள்ளவும்.

சுயநலமாக சிந்திப்போர் மற்றும் மருந்துக்களால் மட்டுமே வியாதிகளை குணப்படுத்த முடியும் என எண்ணுபவர்கள் என்னை தொடர்புகொண்டு உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நடக்கும் என்கிற உண்மையை உணர்ந்த காரணத்தால் தான் நல்ல விஷயங்களை அதிகம் பகிர்கிறேன். எனவே நல்லதே கேளுங்கள் நல்லதே நினையுங்கள் நல்லதே பேசுங்கள் நல்லதே செய்யுங்கள் நல்லதே நடக்கும். அதற்கு எனது வாழ்கையே சாட்சி. 

"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?"  Youtube Channel முகவரி
"நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!"  Youtube Channel முகவரி

"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" Telegram குழுவின் முகவரி
"நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்" Telegram குழுவின் முகவரி